Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ரீங்காரமாய் என்னுள்ளே

ரீங்காரமாய் என்னுள்ளே – 17

ரீங்காரமாய் என்னுள்ளே – 17

“ம்… வலது காலை தானே எடுத்து வச்சி உள்ள வந்த?…” என விஷ்ணு உள்ளே வந்தவுடன் சிந்துவிடம் கேக்க,

“ஹான்…” என்று அவனை பீதியாக பார்க்க,

“வொய் பீதியாய் பாக்குறீங்க பீக்கங்கா… சிரிச்ச மாறி இருக்க வேணாமா நீ?…” என கேட்டவாறே அவன் சோபாவில் அமர்ந்து,



Advertisement

“வா சிட்…” என அழைத்தான்.

“இவரை என்னனு தான் சொல்லுறதோ…” என அவனை நினைத்தவள், அந்த வீட்டை கண்களால் துளாவ,

அவளின் பதட்டத்தை பார்த்தவன், ” ரிலாக்ஸ் பண்ணிக்கோ… அப்போ தானே இண்டெர்வியூ நல்லா குடுக்க முடியும்…” என அவளிடம் எடுத்து சொன்னவன்,

Advertisement

“செல்வா ண்ணா… ரெண்டு காபி…” என அங்கிருந்து குரல் கொடுத்தான் விஷ்ணு.

Advertisement

இன்னும் யாரும் வராமல் இருக்க, “வீட்டுல யாருமில்லையா?…” என கொஞ்சம் தயங்கி சிந்து கேட்க,

விஷ்ணு, “நான் தான் இருக்கேனே… நீ இருக்க … அப்பறம் என்ன வீட்டுல யாருமில்லையான்னு கேக்குற…”

“யப்பா சாமி, இவரோட…” என முணுமுணுத்தவள், “உங்க அம்மா, அப்பா…” என அவள் கேக்க,

Advertisement

“பாருடா… அவ்வளோ அவசரமா அவங்களை பாக்க?…” என அவன் கேட்க,

பூஜையறையிலிருந்து வெளியே தரிசனம் தந்தார் விசாலாட்சி.

 அவரை பார்த்த சிந்துவின் கண்களில் அப்பட்டமான அதிர்ச்சி… “இவங்களா  இவரோட அம்மாவா…” என மனதில் சொல்வதாக சொல்லி, சத்தமாக வெளியில் சொல்லிவிட,

“எங்க அம்மா அவ்வளோ ஃபேமஸ் பெர்சோனாலிட்டியா என்ன?…” என விஷ்ணு அவளிடம் சாவகாசமாக கேக்க,

ஹாலில் அமர்ந்திருந்த மகனையும், பதட்டத்துடன் நின்றிருந்த சிந்துவையும் பார்த்த விசாலாட்சி முதலில் ஜெர்கானாலும், பின்பு தன்னை சமாளித்துக்கொண்டவராக, “வா மா சிந்து…” என வரவேற்ட்டபடி அவர்களிடம் வந்தவர் மகனை பார்த்தார்.

அவருக்கு பதிலாக தலையை அசைத்தவள், “ஆஹ் மேம்…” என சொல்லி  பிரமிப்புடன் அவரையே பார்க்க,

“உக்காரும்மா…” என விசாலாட்சி சொல்ல,

அவரின் பேச்சிற்கு மறுப்பு சொல்ல முடியாமல் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள் சிந்து.

அமைதியாக அமர்ந்திருந்த மகனை, அன்னை கேள்வியாய் பார்க்க, “அவளுக்கு கல்யாணம்ன்னு ஒன்னு நடந்தா உங்க மகனோட தானாம்… அதான் உங்ககிட்ட கல்யாணம் பண்ணி குடுங்கன்னு கேக்க வந்திருக்கா…” என அவள் வந்ததன் காரணத்தை காவல்காரன் கன கச்சிதமாக உரைத்தான் அன்னையிடம்.

அவனின் பேச்சை கேட்ட சிந்துவோ, “என்னா…” என அதிர்ந்து வாயில் கை வைத்து, பயந்துகொண்டே அவனின் அன்னையை பார்த்தாள்.

சிந்துவின் பயந்த பார்வையை பார்த்த விசாலாட்சியோ, மகனை மெலிதாக முறைத்தவாறே, “உனக்கு பிடிக்காமையா நீ அழைச்சிட்டு வந்திருக்க…” என கேட்டார் அன்னையாக,

“ஆஹ்…” என வாயை மூடாமல், சிந்து இப்போது அவனின் அன்னையை பார்த்தாள்.

“மம்மி… உங்களுக்கு நான் ஸ்ட்ராபெர்ரி பிளேவர் ஐஸ்கிரீம் இந்த தடவை வாங்கிட்டு வந்தேன்…” என்றவன்,

“ஆனா இந்த வைஷு உங்களோடதை வரும் போதே பாதி சாப்பிடுடா…” என சத்தமாக சொல்லிக்கொண்டே உள்ளே வந்தான் சூரி.

“சும்மா நல்லா இருக்கானு, டேஸ்ட் தான் பண்ணுனேன் ம்மா… இந்த சூரி ண்ணா பொய் சொல்லுறான்…” என அவனின் பின்னோடு பேசிக்கொண்டே உள்ளே வந்தாள் வைஷு.

உள்ளே வந்த சூரி, சிந்துவை பார்த்து அப்படியே அதிர்ச்சியில் நிற்க,

“டேய் ண்ணா… ஏன் இப்படி நிக்குற… தள்ளு…” என அவனை தள்ளினாள் வைஷு.

அதில் தெளிந்தவன், “ஹாய் தங்கச்சி…” என சூரி சொல்ல,

சூரியின் பின்னே நின்ற வைஷு, முன்னே எட்டி பார்க்க, அங்கு அமர்ந்திருந்த சிந்துவை ஆச்சரியமாக பார்த்தவள், “ஹாய் அண்ணி…” என சொல்லிக்கொண்டே முன்னே வந்தாள்.

வைஷுவின் விளிப்பில், அதிர்ந்து கண்கள் விரித்த சிந்து, விஷ்ணுவை திரும்பி பார்க்க,

விஷ்ணு, “நீ இண்டெர்வியூ அட்டென்ட் பண்ணாமயே பாஸ் ஆகிட்ட போல…” என அவளிடம் சொன்னவன்,

“வா அப்போ கிளம்பலாம்…” என அசால்ட்டாக சொல்லி எழுந்தான் விஷ்ணு.

ஏகத்திற்கும் அதிர்ந்து போன சிந்து, என்ன பேசுவது என தெரியாமல் அங்கிருந்த அனைவரையும் ஒரு முறை பார்த்தவள், எழுந்து நின்றாள்.

முதலில் சுதாரித்த விசாலாட்சியோ, “டேய் சூரி… உன் பிரெண்டை அப்படியே ஒரு ரூம்ல வச்சி பூட்டிட்டு வா டா…” என சொன்னார்.

அன்னையை முறைத்தவன், “எதுக்கு… என்னைய போக சொல்லிட்டு, என் பொண்டாட்டி கிட்ட அப்படி என்ன ரகசியம் பேச போறீங்க…” என சட்டமாக அமர்ந்து கொண்டு கேட்டான் விஷ்ணு பிரசாத், காவல் அதிகாரி.

“அப்படி போடு…” என விசில் அடித்தாள் வைஷு.

அவனின் பேச்சை கேட்ட சிந்துவின் முகத்தில் அதிர்ச்சியுடன் கலந்த மகிழ்ச்சி சரி விகிதத்தில் மின்னி தலை குனிந்து நின்றாள்.

“உன் அண்ணன் கவுத்துட்டான்… என் தங்கச்சியை…” என்று வைஷுவிடம் சொன்ன சூரி, “அப்பறம் என்ற தங்கச்சி ஊட்டுக்காரரே… சௌக்கியங்களா…” என விஷ்ணுவை கை பிடித்து எழுப்பினான்.

நண்பனின் கையை தட்டி விட்ட விஷ்ணுவோ, அவனை தீயாய் முறைக்க,

“அட வாங்க மாப்பிளை… ரொம்ப தான் முறுக்குறீங்க…” என்ற சூரி அவனின் கையை பிடித்து எழுப்ப,

அவனின் இழுப்பியிக்கு எழுந்த விஷ்ணுவோ, அவனின் காரிகையின் முகத்தை பார்க்க,

“அட வாடா… தங்கச்சியை யாரும் தூக்கிட்டு போயிட மாட்டாங்க…” என அவனை சூரி இழுக்க,

சூரியை முறைத்தவன், ” ரொம்ப பேசி அவகூட பிரென்ட் ஆகிடாதீங்க…” என அன்னையிடம் சொன்னவன், சூரியுடன் சென்றான்.

“ஹா ஹா…” என வைஷு சிரித்து,

தலை குனிந்து அமர்ந்திருந்த சிந்துவிடம்,

“அப்பறம் சொல்லுங்க அண்ணி… உங்க லவ் ஸ்டோரி கேப்போம்…” என வைஷு சிந்துவின் அருகில் அமர்ந்து கேட்க,

கேட்டவளிடம் என சொல்வதென தெரியாமல், தயக்கத்துடன் விசாலாட்சியை பார்த்தாள் சிந்து.

அவளின் தயக்கத்தை புரிந்த விசாலாட்சியோ, “உன்னைய எனக்கு பிடிச்சிருக்குனு ஒரு வார்த்தை, உன்னைய கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னவன் சொன்னானா?…” என மகனை அறிந்தவராய் அன்னை சிந்துவிடம் இயல்பாக கேக்க,

அவரின் பேச்சில் இருந்த உண்மையை கண்டுகொண்டவள், மனதில் அவரை, “நல்லா தெரிஞ்சி வச்சிருக்காங்க அவங்க பையனை பத்தி…” என புகழ்ந்து, அவரை பார்த்தபடி இல்லையென தலையசைத்தாள் மருமகள்.

“எத சொல்லணுமோ அதை சொல்லாம தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தானா அப்போ…” என அவளை பேச வைப்பதற்காக விசாலாட்சி.

“இல்ல… இல்ல… அப்படியில்ல…” என வேகத்தில் பதில் சொன்னவள், விசாலாட்சியின் பார்வையில், “ஆமா…” என உண்மையை சொன்னாள்.

“இப்போவே நீ அவனுக்கு இப்படி சப்போர்ட் பண்ணுனேன்ன்னு வைச்சிக்கோ… அப்பறம் அவன் ஒண்ணுத்துக்கும் சரி வர மாட்டான்… சொல்லிட்டேன்…” என்றவர்,

“அப்பறம் என்ன பிள்ளை வளத்து வச்சிருக்கீங்க அத்தைன்னு என்கிட்ட கேட்டு வர கூடாது…” என அவளிடம் இயல்பாக தன்னுடைய பிடித்ததை சொன்னார் வருங்கால மாமியார்.

அவரின் பேச்சை கேட்ட பாவையோ, அசந்து போயி அவரை ஆச்சரியமாக பார்க்க,

“என்ன அண்ணி… என்ன மாமியார்டா இவங்கன்னு, பாக்குற போல இருக்கே… நீங்க பாக்குறது…” என வைஷு கேக்க,

“ஆஹ்… இல்ல இல்ல…” என்றாள் சிந்து.

“நீங்க என்ன அண்ணி இப்படி வாயில்லா பூச்சியா இருக்கீங்களே… எங்க அண்ணன் வேற உங்களை பிரென்ட் ஆகா கூடாதுன்னு சொல்லிட்டு போயிருக்காங்க… எதுக்காக அப்படி?…” என வைஷு சிரித்தபடி கேக்க,

சிந்து, “அவங்க என்னைக்கு புரியுற போல பேசிருக்காங்க…” என எதார்த்தமாக சொன்னவள், அடுத்து தான் என்ன சொன்னோமேன்று புரிந்து அவசரமாக வைஷுவையும், விசாலாட்சியையும் பார்த்தாள்.

“அட என்ன அண்ணி, இப்படி பேசிட்டு பொசுக்குன்னு பாத்தா என்ன அர்த்தம்…” என வைஷு விளையாட்டாக கேட்க,

“வைஷு… அமைதியா இரு…” என்ற அன்னை, “நீ பேசு சிந்து…” என சொல்ல,

சிந்து, “ஆஹ்… இல்ல அது வந்து…” என இழுத்தவள், “என்ன சொல்லுவது…” என தெரியாமல் முழித்து பார்க்க,

“இப்போ எதுக்கு தயங்கி பேசுற… உனக்கு என்ன தோணுதோ பேசு, எங்க கிட்ட என்ன கேக்கணும்னு தோணுச்சினாலும் கேக்கலாம்…” என சொன்னவர்,

“நீ இப்படி தயங்கி பேசாம இருந்தா, அடுத்து நீ பேச ஆரம்பிக்கும் போது, வெளில போனவன் வந்துருவான்…பாத்துக்கோ…” என சொல்லி முடித்தார்  விசாலாட்சி.

“ரொம்ப சரி ஆஹ் பையன பத்தி சொல்லுறாங்க…” என அவளின் மனது மீண்டும் அவளிடம் சொல்ல, அதனை விரட்டியவள், மெதுவாக “உங்களுக்கு… என்னை… பிடிச்சிருக்கா…” என விசாலாட்சியிடம் கேக்க,

வைஷு வாயில் கை பொத்தி சிரிக்க,

அவளின் கேள்வியின் சிரிப்பு வர பார்க்க, முயன்று கட்டுப்படுத்தியவர், “இந்த கேள்விக்கு பதில் நான் சொல்ல கூடாது…” என அவளிடம் சொன்னவர்,

“என் பையன வாய் வார்த்தையா, உன்னைய பிடிச்சிருக்குன்னு நீ சொல்ல வச்சிடு… அது தான் உனக்கு நான் மாமியாரா முதல் வேண்டுகோள் வைக்கிறேன்…” என சொன்னார் விசாலாட்சி.

அவரின் பதிலில் மெலிதாக சிரித்தாள் சிந்து.

“இன்னும் நல்லா சிரிக்கலாம் அண்ணி…” என வைஷு இடையீட,

அதற்குள் விஷ்ணு உள்ளே வருவதை பார்த்த அன்னை, “வந்துட்டான் பாரு அதுக்குள்ள…” என சொன்னவர்,

“என்னோட ஹஸ்பேண்ட்டும், அண்ணாவும் இன்னைக்கு வீட்டுல இல்ல… அவங்க வந்ததும் நாம இன்னொரு நாள் மீட் பண்ணி, இவன் இல்லாம நல்லா பேசுவோம்… இப்போ இவன் மட்டும் தான் பேசுவான்… நான் என்ன கேட்டாலும்…” என விஷ்ணுவை பார்த்தவாறே சொல்லி முடித்தார் அன்னை.

விஷ்ணு, “இவ்வளோ நேரம் பேசுனது நான் இல்லாம பேசுவதும் இல்லாம, இதுக்கு மேலயும் அப்படி என்ன பேசணும்…”

“டேய்…அடங்குடா… நீ எங்காவது அவங்க பேசுறதுக்கு டைம் குடுத்தியா… பெருசா கேக்குறான்…” என சூரி நண்பனை திட்ட,

“இதுவரைக்கும் அவங்க பேசாதது அவங்க தப்பு…” என விஷ்ணு தோலை குலுக்க,

“பாத்துக்கோ தங்கச்சி… இவனை எப்படி நீ மேய்ப்பன்னு எனக்கு தெரியல…” என சூரி சிந்துவிடம் பாவமாக சொல்ல,

சிந்து, “இவங்க எப்போவுமே இப்படி தான் போல…” என நினைத்தவள், சூரியை பார்த்து சிரித்து வைத்தாள்.

சூரியின் பேச்சை கருத்தில் கொள்ளாதவன், “போலாம்…” என சிந்துவிடம் சொல்ல,

“டேய் இருடா… சாப்டுட்டு போலாம்…” என அன்னை இடையீட,

“நான் போயி ரெடி ஆஹ்ன்னு பாத்துட்டு வரேன்…” என வைஷு எழுந்து போனாள்.

“எங்களுக்கு டின்னெர் டேட்…” என சொன்னான் விஷ்ணு.

“எதே…” என சூரி வாயை பிளக்க,

சிந்துவும் அதிர்ச்சியாக விஷ்ணுவை பார்த்தவள், மனதினுள், “ஆண்டவா… இவங்ககிட்ட அப்போவாது ஒழுங்கா எல்லாத்தையும் கேட்டு பேசிடனும்…” என அவசர வேண்டுதலை வைத்தாள் கூடவே,

“அப்பறம் நாங்க பேசி பழக வேணாமா… அதுக்குதான்…” என சிந்துவை பார்த்து கண்சிமிட்டினான் காவல் காரன்.

சிந்து விழித்து சுற்றி இருந்தவர்களை அவசரமாக பார்க்க,

“டேய் சூரி… அவன் பிளானோட தான் கூட்டிட்டு வந்திருக்கான்… நீ விடு, நாம பாத்துக்கலாம்…” என அன்னை தெளிவோடு சொன்னார்.

“பாருங்க மம்மி… பால் குடிக்குற மூஞ்சியை வச்சிக்கிட்டு, பீர் குடிக்குற வேலையெல்லாம் பண்ணுறான்…” என்றான் சூரி.

சூரியின் பேச்சில், சிந்துவின் முகம் சிரிப்பில் மிளிர,

“உன்னோட டேட்டிங் அப்போ, அடுத்தவங்களை பத்தி பேசுறவன் எல்லாம் இப்படி தான் புலம்புவான்…” என அசால்ட்டாக சொன்ன விஷ்ணு, பாவையுடன் விடைபெற்றான்.

குறிப்பு:

முதல்ல எல்லாத்துக்கும் சாரி சொல்லிடுறேன்… ரொம்ப லேட்டா தான் எபி கொடுக்குறேன்… கண்ணுல கொஞ்சம் பிரச்சனை பிரெண்ட்ஸ்… ஸ்ட்ரெஸ் ரொம்ப பண்ண வேணாம்னு சொல்லிருக்காங்க… அதுக்காக தான்… எனக்கும் கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு ரெகுலரா தர முடியலைன்னு… வேற வழி எனக்கும் தெரியல… அதுனால் மன்னிச்சிக்கோங்க… சீக்கரம் கதையை முடிக்க பாக்குறேன்…

எவ்வளோ லேட்டா போட்டாலும் படித்து கமெண்ட் செய்யும் அணைத்து நல்லுங்களுக்கும் ரொம்ப நன்றி… நீங்க இல்லனா கண்டிப்பா என்னால இதுகூட எழுத முடிஞ்சிருக்காது… நன்றி நன்றி பிரெண்ட்ஸ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!