Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருப்பு நிலா Episode-19

அத்தியாயம் 19

ருச்சி, நீ தான எல்லாரையும் ஸ்கூல் விட்டு கூட்டிட்டு வருவ? அகரன் கேட்க, ஆதியும் எழுந்தான்.

ஆமா அகரா, நான் சுரேவிடம் கேட்ட போது, அவள் முன்னதாகவே கிளம்பியதாக சொன்னாள். சரி வீட்டுக்கு வந்துட்டா போல என்று தான் நினைத்தேன்.

ஏம்மா, வீட்டிற்கு வந்தும் நீ அவளை பார்க்கவில்லையா? தமிழரசன் கேட்டார்.



Advertisement

அப்பா, அவள் அறைக்கதவு திறந்து இருந்தது. உள்ள இருக்கான்னு நினைத்தேன் என்று மெல்லினாவின் அறையை பார்த்தாள். அறைக்கதவு அப்பொழுதும் திறந்து இருந்தது.

அய்யா, பொண்ணு வந்தவுடன் ஆடையை மாற்றி விட்டு ப்ரெண்ட்ஸ்ஸை பார்க்க போவதாக சொல்லி தான் போனாங்க என்று சீதா கூறினார்.

ப்ரெண்ட்ஸ்ஸா? அகரன் கேட்க, ஆதி போனை எடுக்க மித்திரன் அவனை அழைத்தான்.

Advertisement

மித்திரா, நீ மெல்லியை பார்க்க வரச் சொன்னீயா? ஆதிரேயன் கேட்க, இல்லையே? என்னாச்சு? அவன் கேட்க, விசாகா அழைத்தாலா? ஆதி கேட்க, இருவரும் என் பக்கத்தில் தான் இருக்காங்க.

Advertisement

அவளுக்கு ஒன்றுமில்லையே? என மித்திரன் கேட்க, ஆதி விசயத்தை சொல்ல, வாய்ப்பேயில்லை. எங்கள விட வேற ப்ரெண்ட்ஸ் யாருமே அவளுக்கு கிடையாதே என்றான் அவன்.

நான் ஒரு விசயம் சொல்றேன். நீங்க பார்த்த துரை அந்த கிளப்பிற்கு சென்று கருணாகரனையும், மற்றவனையும் பார்த்திருக்கான். அந்த துரை நம் பக்கமா? அவர்கள் பக்கமா? என பார்த்து எதுவும் செய்யுங்க என்ற மித்திரன் ஒரு வேலை எங்க ஸ்கூல் பசங்களே யாராவது ஃபன்னுக்காக வர வச்சிருக்கலாமே?

ஃபன்னா?

Advertisement

ஆமா, “பசங்களுக்கு எல்லாமே விளையாட்டு தான்” என்றான் மித்திரன். “எதுக்கும் பார்த்துக்கோங்க” என்று அவன் போனை வைத்தான்.

ஆதி விபுதனை பார்த்து, பசங்க யாராவது மெல்லியை டீஸ் பண்ணாங்களா? எனக் கேட்டான்.

நானும் உங்களிடம் ஒன்று கேட்கணும் மாமா? அவளோட ப்ரெண்ட்ஸூக்கு என்னாச்சு? இவ தனியா தான் இருக்கா. ப்ரெண்ட்ஸோட சேர்ந்திருக்கும் போது தான் திமிறா இருந்தான்னு. ஏதேதோ பேசினாங்க என்றான்.

யோகியும் முன்னாடி வந்து என்னோட வகுப்பிலும், மெல்லியோட சிஸ்டரா நீ? நீயும் குடிப்பியான்னு கேட்டாங்க என்றாள். எல்லாரும் அதிர்ந்து அவளை பார்த்தனர்.

ஆதி யோகியிடம் வந்து அவளை தூக்கிக் கொண்டு, வேற என்ன பேசுனாங்க? எனக் கேட்டான்.

நாங்க எல்லாருமே பணம் வச்சிருக்கோம். ஆனால் அப்படி தப்பா செய்ய மாட்டோம். நீயும் அவளோட போயிருக்கியா? உனக்கு குடிக்கும் போது தொண்டை எறியுமா? வேற என்ன செய்யும்? என்று குணா கேட்டான்.

ஆதி, என்ன இதெல்லாம்? சவிதா கேட்க, ஆதி தலைகவிழ்ந்து அமர்ந்தான்.

ரசிகா யோசனையுடன் ஆதி அருகே வந்து அமர்ந்து அவன் தோளில் கை வைத்தான்.

ருச்சி, சுரே நம்பர் இருக்கா? அகரன் கேட்க, ம்ம்..என்று கால் பண்ணி அவனிடம் கொடுத்தாள் ரசிகா.

அகரன் பேசி விட்டு அனைவரையும் பார்த்தான்.

பாஸ், நீங்க துரைய மீட் பண்ணிட்டு வந்த பின் தான் நம்ம மெல்லியும் அவளோட ப்ரெண்ட்ஸூம் டிரக்ஸ் யூஸ் பண்ணுவாங்கன்னு யாரோ நியூஸ் பரப்பி விட்டுருக்காங்க. அதிகமா அவளை பற்றி தவறா பரவி இருக்கு. அதுக்கு முன் குடிப்பாங்க, கிளப்ல டான்ஸ் பண்ணுவாங்கன்னு தான் இருந்திருக்கு என்றான் அகரன்.

டிரக்ஸ்ஸா? அவள் முன் போல டிரிங்க்ஸ் பண்றத விட்டுருந்தா. அதை விட அவள் ஆடை அணியும் விதத்தையும் மாற்றி இருந்தாள் என்று ரசிகா அகரனை பார்த்துக் கொண்டே சொன்னாள்.

ஆமாப்பா, அவள் முன் போல் வெஸ்டர்ன் அணியலை. கவனிச்சீங்கல்ல. நாம கூட பேசினோம்ல்ல.

சும்மா பேசாதடா ரசி. அவளுக்கு வெஸ்டர்ன் டிரஸ் தான் உயிர். அவ்வளவு பிடிக்கும் என்று தமிழரசன் கூறினார்.

அப்பா, நான் ஒன்றும் சும்மா சொல்லலை. அவள் அறையில் ஒரு வெஸ்டர் ஆடை கூட இல்லை என்றாள் ரசிகா. வெளியே சென்ற அகரன் அவள் அணிந்திருந்த ஆடையில் மேற்கோர்ட்டை எடுத்து தூக்கி போட்டான்.

இது எப்படி இன்னும் இருக்கு? என்று ரசிகா சிந்தனையுடன், இது அவள் கடைசியாக அணிந்தது. நாம உல்லாச உலகம் போன அன்று உடுத்தியது. பின் அவள் இது போன்ற ஆடைகளை அணியவில்லை என்று ரசிகா சொல்ல, அகரன் அவளை முறைத்தான்.

உனக்கு நம்பிக்கை இல்லையா? இங்க வா என்று மெல்லினா அறைக்கு இழுத்து சென்று அவள் சுடிதார், பாவடை சட்டைகளை காட்டினாள்.

ரசிம்மா, என்ன பண்ற? சவிதா கீழிருந்து சத்தம் கொடுக்க, ஷ்..வெளிய வா என்று அகரனை ரசிகா வெளியே இழுத்தாள். அவனும் புரிந்து கொண்டான்.

ருச்சி, நில்லு என்று கீழே கிடந்த அவளது போனையும் அவளது புத்தகப்பையையும் கையோடு எடுத்து கீழே வந்தான் அகரன்.

மாம்ஸ், எதுக்கு அவளோட புத்தகப்பையை எடுத்து வர்ற? விபுதன் கேட்க, அகரன் அவனை முறைத்துக் கொண்டே ஆதியிடம் வந்து அமர்ந்தான்.

அய்யோ, இவன் ஓவரா போறானே? என்று தமிழரசன் அகரனை பார்த்துக் கொண்டே மெல்லினாவை விழிக்க வைக்கும் முயற்சியில் இருந்தார்.

பிரபா, டிரிங்க்ஸ் செய்திருந்தால் இப்ப பொண்ணு என் சிகிச்சையில் விழித்திருக்கணுமே? என்று ஆதியையும் அகரனையும் பார்த்தார்.

ஆதியிடம் போனை கொடுத்துக் கொண்டே அகரன் மெல்லினாவை பார்த்தான்.

மாமா, மெல்லிக்கு ஒன்றுமாகாதுல்ல? ஆதி பதட்டமாக, அண்ணா, என் பிள்ளைக்கு ஒன்றுமில்லைல்ல? சவிதா கேட்க, அப்பா, ஆல்கஹால் வாடை தானே வருது? ரசிகா கேட்க, ஆமாம்மா, ஆனால் இதில் ஏதாவது கலந்து இருக்கலாம். இல்லை ஏதாவது சாப்பிட கொடுத்திருக்கலாம் என்றார் தமிழரசன்.

அகரன் கண்கலங்கியவாறு மெல்லினாவின் பையை கொட்டினான். நிறைய காகிதங்கள் இருந்தது. ஒன்று அகரனும் மற்றொன்றை ஆதியும் எடுத்து பார்த்தனர். ரசிகாவும் அவர்களிடம் வந்து பார்த்தாள். மூவரும் அதை பார்த்து விட்டு விபுதனை பார்த்தனர். அவனுக்கும் கஷ்டமாக இருந்தது.

ஆதியிடம் வந்து, சாரி மாமா, அவள் என்னை காதலிக்கிறான்னு எனக்கு நிஜமாகவே தெரியாது. நான் அவளை காதல் என்ற எண்ணத்தில் பார்க்கவேயில்லை. அன்று பேசியது கூட சாதாரணமாக தான். என் மீது தவறு தான். சாரி மாமா என்று சவிதாவை பார்த்தான் விபுதன்.

இருக்கட்டும்ப்பா. எத்தனை முறை மன்னிப்பு கேட்பாய்? எங்க எல்லார் மீதும் தவறு என்றார் பிரபாகரன்.

மெல்லினா ப்ளட்டை எடுத்து டெஸ்ட்டிற்கு கொடுத்து விட்ட தமிழரசன், யாருக்கும் விசயம் வெளியே போகக்கூடாது என்று அவருடைய செவிலியரிடம் சொல்லி அனுப்பினார்.

ஆதி மெல்லினா போனை பார்த்தான். அதில் ஆடியோ ஒன்று இருந்தது. அதை ஆதி ப்ளே செய்ய அனைவரும் கேட்டனர்.

மெல்லி, லவ்லி கிளப்புக்கு வா. உன் அண்ணாவுக்கு தேவையான ஆதாரம் இருக்கு என்று அதை வாங்கி அவரிடம் கொடுத்து விட்டால் உன் அண்ணாவை கொல்ல நினைப்பவன் சிக்கிடுவான். அப்புறம் உன்னோட குடும்பம் பாதுகாப்பாக இருக்கும் என்று மித்திரன் பேசுவது போல் இருந்தது.

தம்பி, பாப்பா ப்ரெண்ட்டு அந்த பையன் போல குரல் கேட்குது பிரபாகரன் சொல்ல, எப்படி மித்திரன் குரல் வந்தது? ஆதி சிந்திக்க, எவனோ உங்களுக்கு வேண்டியவன் தான் வர வைச்சிருக்கான். ஆனால் போனை எப்படி பள்ளிக்கு மெல்லி எடுத்து சென்றாள்? அகரன் கேட்டான்.

மாம்ஸ், நீ தான் வாய்ஸை வைத்து ஆளை கண்டுபிடிப்பாயே? விபுதன் அகரனிடம் கேட்டான்.

என்னது? ஆதி கேட்க, ஆமா மாமா, மாம்ஸ் கண்டுபிடிச்சிருவார். அவருக்கு தான் உங்களோட பகையாளிகள் தெரியுமே? என்று அகரனை பார்த்தான். அவன் தான் விபுதன் மீது கோபத்தில் இருக்கானே? அவன் பதில் கூறாமல் ட்ரை பண்றேன் என்று அகரன் மெல்லினாவை பார்த்தான்.

மெல்லினா மெதுவாக விழித்தாள். முழுவதுமாக போதை தெளியவில்லை. அவள் அம்மாவை பார்த்து, அம்மா..என்று எழுந்தாள். நிற்க முடியாமல் விழ இருந்த தன் மகளை பிடித்தார் பிரபாகரன்.

அப்பா, எனக்கு என்னமோ செய்யுது என்று அவளுக்கு கொஞ்ச கொஞ்சமாக நினைவு வர, ஆட்டோவில் அவள் கிளப்பிற்கு செல்லும் வழியில் அவளை யாரோ கடத்த முயன்றதும்; மூக்கில் கைக்குட்டை வைத்து அழுத்த மெல்லினா மயங்கியதும்;  மயங்கும் முன் யாரோ அவளுக்கு உதவியதும்; அவனிடம் உதவி கேட்டுக் கொண்டே மயங்கியதும் நினைவுக்கு வந்தது.

மெல்லினா தலையை பிடித்துக் கொண்டு சிந்திக்க, மீண்டும் நினைவுக்கு வந்தது. மயங்கியவள் கிளப்பில் விழிக்க, அவளுக்கு அவள் மீது மது வாடை வந்தது. ஆனால் அவளருகே சிலர் பேச்சுக் கொடுக்க அவள் அவர்களிடம் விபுதனை பற்றியும் அகரனை பற்றியும் பேசியதை நினைத்து கண்ணை தேய்த்து தேய்த்து விழித்தாள். அவளுக்கு படுக்கையில் அவர்களுடன் இருந்ததும் நினைவுக்கு வந்தது. காப்பாற்ற வந்த அகரனும் நினைவுக்கு வந்தான்.

விழித்து எழுந்து அமர்ந்து முதலில் அவள் ஆடையை பார்த்தாள். பின் அழுது கொண்டே அவள் அப்பாவை அணைத்தாள்.

அழாதம்மா என்று பிரபாகரன் சொல்ல, நிமிர்ந்து அவரை பார்த்து விட்டு சுற்றி இருந்தவர்களை பார்த்தாள். விபுதனை பார்த்து கோபமாக முறைத்தவள், ஆதியையும் அகரனையும் ஒன்றாக பார்த்தாள். இருவரும் அவளை முறைத்துக் கொண்டிருந்தனர்.

அகரனை பார்த்து, எழுந்து அவனிடம் வந்து அமர்ந்து, அகரா..நான் அங்க அவள் பேச, அவன் கண்டுகொள்ளவேயில்லை.

அகரா, நான் அங்க பேசியதை கேட்டாயா? அவள் கேட்க, அகரன் அவளை தள்ளி விட்டான்.

டேய், ஆதி சத்தம் போட..சவிதா எழ, ஆன்ட்டி இருங்க என்று ரசிகா மெல்லினாவிடம் வந்து, அகரனை திட்டினாள்.

என்னை திட்றதை அப்புறம் பார்த்துக்கலாம். ஸ்கூலுக்கு எதுக்கு போன் எடுத்துட்டு போனான்னு கேளு? யாரிடமும் வந்த ஆடியோவை காட்டலை. ஏன்னு கேளு? இப்பொழுதிருக்கும் நிலையில் கிளப்பிற்கு எதுக்காக தனியா போனான்னு கேளு? ப்ரெண்டை பார்க்க போறேன்னு எதுக்கு பொய் சொன்னான்னு கேளு? என்று அகரன் அடுக்கினான்.

எல்லாரும் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, கிளப்பிற்கு அவளாக போயிருக்க வாய்ப்பில்லை. இதை பாருங்கள் ரிப்போர்ட் ஆல்கஹால் கன்டென்ட்டோட டிரக்ஸ்ஸையும் அவளுக்கு சேர்த்து கொடுத்திருக்காங்க என்றார் தமிழரசன்.

அப்பா, அவளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க? அவள் எதுக்கு சொல்லாமல் போனாள்? பாஸிடமாவது சொல்லி இருக்கலாம் என்று அகரன் கோபமாக சொன்னான்.

இவனே மெல்லினா மேலுள்ள காதலை சொல்லிடுவானோ? என்று ரசிகா அவனை பார்த்தாள்.

டிரக்ஸ் கொடுத்திருக்காங்கல்லா? அப்படின்னா ஆதி நீ எடுத்த விசயத்தில் உள்ளவனாக இருப்பானோ? பிரபாகரன் கேட்டார்.

சார், முதல்ல உங்க பொண்ணுகிட்ட பேசுங்க. என்ன நடந்ததுன்னு சொல்லுவாங்க..நான் வாரேன் என்று அகரன்எழுந்தான்.

“ரொம்ப தேங்க்ஸ் அகரா” என்றாள் மெல்லினா.

“தேங்க்ஸ்” ஈசியா சொல்லிடலாம். உனக்கு எல்லாமே நினைவு வந்திருச்சா? பாஸ் போன் என்னிடம் இருந்ததால் நான் வந்தேன். நீ “தேங்க்ஸ்” எனக்கு சொல்லக் கூடாது. பாஸ் நம்பருக்கு கால் பண்ணானே அவனுக்கு சொல்லு என்றான்.

அகரா, அவனை நீ பார்த்தாயா? ஆதி கேட்க, ஆமா பாஸ் என சிந்தித்த அகரன், பாஸ் அவன் சக்தியோட எடுபுடி. நான் டென்சன்ல்ல மறந்துட்டேன். அவனோட ஆள் எப்படி கிளப்பில் நம்மை அழைத்திருக்கான்?

ஓ..எல்லாம் அவன் வேலையா? ஆதி கோபமாக கையை முறுக்கினான்.

அண்ணா, முதல்ல என்னை கடத்த வந்தவங்களிடமிருந்து உதவியது சக்தி தான் என ஆட்டோவிலிருந்து நடந்த அனைத்தையும் சொல்லி அகரன் வந்தது..அவன் உதவியது என அனைத்தையும் சொன்னாள்.

அப்பா, எனக்கு ஒரு சந்தேகம்? என்று அகரன் கேட்டான்.

என்னடா? தமிழரசன் கேட்க, இல்லை. ஆல்கஹால் டிரக்ஸ் கொடுத்ததாக சொன்னீங்க. இப்படி தெளிவா நடந்ததை சொல்றாங்க? என்று அகரன் கேட்க, மாம்ஸ் நீ அவள அப்பப்ப அவங்கன்னு பேசுற..இடையிடையே அவ இவன்னு பேசுற? விபுதன் கேட்டான்.

அகரன் அவனை முறைக்க, தம்பி முதல்ல அவருக்கு பதில் சொல்லுங்க என்றார் தமிழரசன்.

ரொம்ப முக்கியம் பாருங்க. அப்பா, சொல்லுங்க? என்றான் அகரன்.

விபுதனை பார்த்தவர், போதையில் இருந்தாலும் அவங்களால சுற்றி நடப்பது நன்றாக தெரியும். அதான் தெளிவா மெல்லிம்மா சொல்றார் என்றார்.

மாம்ஸ், கோபமா இருக்கிறாயா? விபுதன் அகரனை அணைக்க வந்தான்.

அகரன் அவனை முறைத்து விட்டு, போடா..எனக்கு வேலை இருக்கு. பாஸ் நான் வீட்ல வைச்சி தான் பார்க்க முடியும். நான் பார்த்துட்டு கால் பண்றேன்.

மாம்ஸ், என்னையும் உன் வீட்டுக்கு கூட்டிட்டு போறீயா? விபுதன் கேட்க, மெல்லினா இருவரையும் முறைத்துக் கொண்டு நின்றாள்.

மெல்லி, நாம ரெஸ்ட் எடுக்கலாம். இவனுக என்னமும் செய்யட்டும் என்று மெல்லினாவை ரசிகா அழைத்தாள். மெல்லினா அவள் அம்மாவை பார்க்க, ரசிகா புன்னகையுடன் வாங்க ஆன்ட்டி, மெல்லி உங்களுடன் இருக்கட்டும் என்றாள். மூவரும் சவிதா அறைக்கு சென்றனர். அவர்கள் பின்னே குட்டீஸ் எல்லாரும் ஓடினர்.

மெல்லினா அறைக்குள் செல்லும் வரை அகரன் அவளை பார்த்துக் கொண்டே நின்றான். பிரபாகரனும் அகரனிடம் வித்தியாசத்தை கண்டு கொண்டார். அகரன் மெல்லினாவை காதலிப்பது ஆதிரேயனுக்கு முன் தான் தெரியுமே?அவனும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். மூவர் பார்வையையும் கவனித்த தமிழரசன், அகரா வா நாம கிளம்பலாம் என்றார்.

அப்பா, ஒரு நிமிடம் என்று அகரன், பிரபாகரனை பார்த்து, நான் இருந்த அறைக்கு நான் போகலாமா? எனக் கேட்டான்.

என்ன வச்சிருக்க? ஆதி கேட்க, பாஸ் என்னோட ஒரு பொருளை வச்சிட்டு போயிட்டேன்.

பொருள் மட்டும் தானா? ஆதிரேயன் கேட்க, பிரபாகரன் தன் மகனையும் அகரனையும் பார்த்தார். அகரன் ஏதும் சொல்லாமல் அறைக்கு சென்று அவனது பிளாக் பிரேஸ்லெட்டை தேடினான்.

இங்க வச்ச நினைவுல தான் இருக்கு. எங்க போயிருக்கும்? என அகரன் அறைக்குள் இருக்க, விபுதனும் ஆதியும் உள்ளே வந்தனர்.

என்னடா தேடுற? ஆதி கேட்க, பாஸ் இங்க தான் வச்சிட்டு போன நினைவு நல்லா இருக்கு. காணோமே? என்று ஆதிரேயனை பார்த்தான்.

என்னன்னு சொல்லு? இருந்தா தேடி எடுத்து வைக்கிறேன். அவ்வளவு முக்கியமானதா? ஆதிரேயன் கேட்க, ஆமா பாஸ், ருச்சி வாங்கி தந்த “பிளாக் பிரேஸ்லெட்” என்றான் அகரன்.

என்னது? மாம்ஸ் தொலைச்சிட்டியா? ஆர்.கே வருத்தப்படப் போறா?

அப்படி என்ன? ஆதிரேயன் ஒரு மாதிரி கேட்க, பாஸ் நீங்க பொறாமைப்படும் அளவிற்கு ஒன்றுமில்லை. அவள் முதல் சம்பளத்தில் எல்லாருக்குமே கிப்ட் வாங்கித் தந்தா. எனக்கு அவள் கொடுத்தது என்றான் அகரன்.

அதே நேரம் மெல்லினாவிற்கு ஆடை மாற்ற உதவிய ரசிகா கண்ணில் மெல்லினா கையில் அகரன் பிரேஸ்லெட் இருப்பதை பார்த்தாள். ஆனால், ரசிகா மெல்லினாவிடம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

மனம் கேட்காமல் வெளியே வந்தாள் ரசிகா. அகரனை கிண்டல் செய்து கொண்டு வந்த விபுதன் ரசிகாவிடம் கூற, அவள் மெல்லினா அறையை பார்த்தாள்.

என்னாச்சு அத்தை? உனக்கு கோபம் வரலையா? விபுதன் கேட்டான்.

இல்ல விபு. எப்பவும் எல்லாரும் எதையும் தன்னுடனே வைத்துக் கொண்டிருக்க முடியாதுன்னு சிலர் இதிலிருந்து புரிஞ்சுக்கிட்டா சரி என்று ரசிகா ஆதிரேயனை பார்த்தாள்.

ரசி, ஏற்கனவே டென்சன் கோபத்தில் இருக்கேன் என்றான் ஆதி.

என்ன ஆதி? உங்களுக்கு உண்மையை சொன்னால் கோபம் வருது. முதல்ல குடும்பத்தை பாருங்க. மெல்லிய எந்த அளவுக்கு தனியா விட்டுருக்கீங்க? இப்ப புரிஞ்சதா? ரசிகா கேட்டாள்.

ருச்சி, பாஸை எதுக்கு சொல்ற? இப்ப நடக்குற பிரச்சனை அவளுக்கு தெரியும் தான? அவ வேணுமென்றே போயிருக்கா என்று அகரன் பல்லை கடித்தான்.

என்னடா பேசுற? ரசிகா கேட்க, அப்புறம் எதுக்கு ஸ்கூல் விட்டு வெளிய வந்தா? போன் வச்சிருந்தான்னா பாஸுக்கு கால் பண்ணி இருக்கலாம்ல்ல. ஏதாவது நடந்திருந்தால்..எந்த நிலையில் அவளை பார்த்தேன் தெரியுமா? என்று சினமுடன், நான் வாரேன் என்று அகரன் வெளியேற, டேய் நில்லுடா ரசிகா அழைக்க, அத்தை இரு. நாங்க பார்த்துக்கிறோம் என்று விபுதன் சொல்ல, தேவையில்லை அவனிடம் நான் பேசிக்கிறேன் என்றான் ஆதிரேயன்.

ஆதி, அவன்..ரசிகா சொல்ல, “எனக்கு எல்லாம் தெரியும்” என்று ஆதி அகரன் பின் வந்தான்.

இவன் இப்படி கோபப்படுவானா? பிரபாகரன் கேட்க, தமிழரசனுக்கு என்ன சொல்வதென்று புரியாமல் நின்றார்.

அத்தை, மாம்ஸூக்கு அவளை பிடிச்சிருக்கோ? விபுதன் கேட்க, ரசிகா பிரபாகரனை பார்த்தாள். அவர் விபுதனை முறைத்தார்.

“சும்மா இருடா” ரசிகா சொல்ல, அத்தை நடப்பதை வைத்து தான கேட்டேன். மாம்ஸ் இப்படி கோபப்பட்டு நான் பார்த்ததேயில்லை. எப்பவும் புன்னகையுடன் இருப்பார். இவர் சரியில்லை என்று விபுதன் சொல்ல, ஒழுங்கா வா என்று அவன் காதை திருகி அவனறைக்கு ரசிகா இழுத்து சென்றாள்.

அகரா நில்லு, ஒரு நிமிடம் நானும் வாரேன் என்று ஆதிரேயன் மீண்டும் உள்ளே வந்து அவனறைக்கு சென்று கனமாக கோர்ட் ஒன்றை எடுத்து வந்தான்.

பிரபாகரன் விபுதன் சென்றவுடன் தன் நண்பனை பார்த்தார். பிரபா, நான் கிளம்புகிறேன் என்றார் தமிழரசன்.

இருடா, உட்காரு என்றார் பிரபாகரன்.

பிரபா, நான் அவனை பார்க்கணும் என்றார் தமிழரசன். அதான் ஆதி போயிருக்கான்ல்ல என்றார் பிரபாகரன்.

உனக்கு தெரியுமா? பிரபாகரன் கேட்க, தெரியும்டா. அதான் அவன் வீட்டிற்கு வரவேயில்லை. பிரச்சனை என்றதால் தான்..என்று தமிழரசன் பிரபாகரனை பார்த்தார்.

சரி, உங்க விசயம் என்னாச்சு? அது..அவங்க வீட்ல பேசப் போகணும். எல்லாம் தயாரா இருக்கு. அவங்க பிரச்சனை பண்ணலைன்னா. அகரன் எனக்கு முழுதாக மகனாகி விடுவான் என்றார்.

அப்புறம்..பிரபாகரன் கேட்க, பிரபா..நான் அவனிடம் சொல்லி தான் வச்சிருந்தேன். டென்சன்ல தான் பேசிட்டான். சாரிடா என்றார் தமிழரசன்.

சாரியா? எனக்கே சாரியா? அப்ப நம்ம ப்ரெண்ட்ஷிப்? பிரபாகரன் கேட்டார்.

பிரபா, இதுல என்ன இருக்கு? நம்ம ப்ரெண்ட்ஷிப் மாறாதுடா என்றவர் மெல்லினா அறையை பார்த்து விட்டு, கொஞ்சம் கவனமா இரு. பொண்ணு எதையும் சொல்ல மாட்டேங்கிறா. இன்று ஏதோ புண்ணியத்துல நல்லபடியா வீடு வந்து சேர்ந்திருக்கா. பக்கத்திலே இருந்து பார்த்துக்கோ. ரசிய பார்த்துக்க சொல்லு என்று தமிழரசன் எழுந்தார்.

மூணாவது மனுசன் மாதிரி பேசுறீயேடா? பிரபாகரன் கேட்க, அப்படியில்லைடா. நான் சொல்லி ஏதாவது தவறாகி விட்டால்..

என்ன தவறாகப் போகுது?

நீ அகரனை நினைச்சு ஏதும் டென்சன் ஆகாத. அவனுக்கு பொண்ணு பார்க்கலாம்ன்னு இருக்கேன் என்று தமிழரசன் சொல்ல, பிரபாகரன் ஏதும் சொல்லவில்லை.

சரிடா பிரபா, நாளைக்கு காலையில பாப்பாவை பார்க்க வாரேன். நல்லா தூங்க சொல்லு. பிள்ளையை தனியா விட வேண்டாம். எல்லாரும் இருக்கோம்ன்னு பேசு என்று அவர் கிளம்பினார். பிரபாகரன் சிந்தனையுடன் சவிதா அறையை பார்த்தார்.

ஆதியும் அகரனுடன் அவன் வீட்டிற்கு சென்றான். தமிழரசனும் அங்கே இருக்க,  யார் குரல்? என அகரனை இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். அவனது ஹெட் போனை எடுத்து லேப்பில் போட்டு அந்த ஆடியோவை திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தான்.

நடுஇரவானது. இவ்வளவு நேரமா? ஆதி கேட்க, பாஸ் அவன் தெளிவா பிளான் செய்து ரெக்கார் பண்ணி அனுப்பி இருக்கான். யாருன்னு கண்டுபிடிக்கவே முடியலை. ஆனால் அவன் என்னிடம் இனி பேசினால் கண்டுபிடித்து விடுவேன் என்றான் அகரன்.

மாப்பிள்ள, நீங்க இங்கேயே ஓய்வெடுங்க. சாப்பிட எடுத்து வாரேன் என்று தமிழரசன் செல்ல, ஆதி அகரனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

என்னாச்சு பாஸ்? அகரன் கேட்க, ஒன்றுமில்லை. உனக்கு இவ்வளவு கோபம் வருமா? நாங்க கூட கோபத்தை காட்டாமல் இருக்கோம். நீ..ஆதி கேட்க, பாஸ் எனக்கு டயர்டா இருக்கு. நீங்க போய் சாப்பிட்டு தூங்குங்க என்று அப்படியே படுக்கையில் சாய்ந்தான் அகரன்.

நீயும் வா ஆதி அழைக்க, பசிக்கலை பாஸ் என்று கண்ணை மூடினான் அகரன். ஆனால் அவனுக்கு நடந்த விசயமே அவன் முன் வர அவனது படுக்கையை குத்திக் கொண்டே அழுதான். மெல்லினா அயர்வில் தூங்கி விட்டாள். ஆதி, பிரபாகரன், சவிதா, ரசிகாவும் தூங்க முடியாமல் தவித்தனர்.

தமிழரசனும் தூங்காமல், அகரன் மனதை மாற்ற முடியுமா? கஷ்டமாச்சே என்று சிந்தனையுடன் இருந்தவர் களைப்பில் தூங்கி விட்டார். அகரனால் மெல்லினாவை அந்நிலையில் பார்த்ததிலிருந்து வெளியே வர முடியவில்லை. மனதில் வலியுடன் அறையினுள் கவலையுடன் தூங்க முடியாது அவஷ்தையில் இருந்தான்.

மூன்று நாட்களுக்கு பின் ஆதிரேயனின் சாக்லெட் பேக்டரியில் அகரன் ஆதி அறைக்கு ஓடி வந்தான்.

பாஸ், அமைதியா இருங்க. ஏதும் பேசிடாதீங்க என்று அகரன் ஆதிரேயனின் நாற்காலிக்கு பின் மறைந்து கொண்டான்.

எக்ஸ்யூஸ் மீ சார்? என ஒரு பொண்ணுடைய குரல் கேட்டு ஆதி அகரனை பார்த்துக் கொண்டே, “எஸ் கம் இன்” என்றான்.

உள்ளே வந்த பொண்ணு, எங்க சார் அவனை? எனக் கேட்டாள். ஆதி அகரனை பார்க்க, டேய் இங்க வந்து ஒளிஞ்சா விட்டுருவேனா? என்று அகரனிடம் வந்தாள்.

பாஸ், என்ன பண்ணீட்டீங்க? அகரன் கேட்க, உங்களை எங்கோ பார்த்தது போல் இருக்கே? ஆதிரேயன் அந்த பொண்ணிடம் கேட்டான்.

பாஸ், “இவங்க கதிரேசன் சார் பொண்ணு” என்றான் அகரன்.

ஆதி எழுந்து, அந்த பொண்ணிடம் “உட்காருங்க” என்றான்.

உங்க உபச்சாரத்திற்காக நான் வரலை. உங்க அசிஸ்டென்ட் என்னை ஏமாத்திட்டான் அந்த பொண்ணு சொல்ல, ஆதிரேயனுக்கு எதிரே அமர்ந்திருந்த மெல்லினா அந்த பொண்ணை எட்டி பார்த்தாள்.

அகரன் அவளை பார்த்து விட்டு, நீ இங்க என்ன பண்ற? எனறு கேட்டான். அவள் ஏதும் பேசவில்லை.

மெல்லினாவை அந்த பொண்ணு பார்த்து, சார் இவங்க?

என்னோட தங்கை மெல்லினா. மெல்லி இவங்க நம்ம கிளைன்ட்டோட பொண்ணு என்றான் ஆதிரேயன்.

அகரா, என்ன பிரச்சனை? ஆதி அகரனிடம் கேட்டான்.

நானே சொல்றேன். உங்களோட டீல் பண்ணா என்னுடன் டின்னருக்கு வாரேன்னு சொன்னான். என் அப்பா கூட ஒத்துகிட்டார். இப்ப சைன் ஆகவும் ஏமாத்திட்டு ஓட பார்க்கிறான்.

ஹலோ, ஓவரா பேசாதீங்க. பாஸ், டின்னருக்கு மட்டும் தான் நான் ஒத்துக்கிட்டேன். டேட்டிங் பண்ணணும்ன்னு சொல்றாங்க பாஸ் என்றான் அகரன்.

டின்னர் மட்டும் போனால் ப்ரெண்ட்ஷிப் வளராதுல்ல. அதான் டேட்டிங்கிற்கு அழைத்தேன் என்றாள் அவள்.

அமைதியாக இருந்த மெல்லினா அந்த பொண்ணை பார்த்து, ப்ரெண்ட்ஸ் எங்காவது டேட்டிங் பண்ணுவாங்களா? எனக் கேட்டாள்.

“நான் பண்ணுவேன்” என்றாள் அந்த பொண்ணு.

மெல்லினா நக்கலாக சிரித்தாள். அந்த பொண்ணுக்கு கோபம் வந்தது. திரிவேஷ் உள்ளே வந்தான்.

சார், உங்க தங்கை என்னை இன்செல்ட் பண்றா? அந்த பொண்ணு சொல்ல. நான் எதுவுமே பேசலையே அண்ணா? என்றாள் மெல்லினா.

உள்ளே வந்த திரிவேஷ் மெல்லினாவை பார்த்து, பாப்ஸ் இங்க என்ன பண்றீங்க? எனக் கேட்டான்.

ஏய், உள்ள வரும் போது கதவை தட்டிட்டு வர முடியாதா? உனக்கு கொஞ்சமும் மேனர்ச்சே இல்லை அந்த பொண்ணு சொல்ல, திரிவேஷ் அப்படியே நின்றான்.

மெல்லினா அவனிடம் வந்து, எங்களுக்குள் மேனர்ச்சே கிடையாது. மேனர்ஸ் அடுத்தவங்களுக்கு தான் பார்க்கணும். சரி தான அண்ணா என்று மெல்லினா திரிவேஷ் கையை பிடித்தாள்.

அண்ணாவா? என்று பசங்க மெல்லினாவை விழிவிரித்து பார்த்தனர்.

பாப்ஸ், என்ன சொன்ன? என்னையா அண்ணன்னு சொன்ன? திரிவேஷ் கேட்க ஆமாடா அண்ணா உன்னை தான் அழைத்தேன் என்றாள் அவள்.

சார்..திரிவேஷ் அழைக்க, கடுப்பானாள் அந்த பொண்ணு.

டேய், நீ வாடா. உன்னிடம் பேசணும் என்று அகரன் கையை அந்த பொண்ணு பிடிக்க, மேம் அவன் கையை விடுங்க. நீங்க பேசியது போல் அவன் இன்று டின்னர் உங்களுடன் வருவான். அவனுக்கு விருப்பமிருந்தால் தான் உங்களுடன் டேட்டிங் வருவான். அவனை கட்டாயப்படுத்தாதீங்க என்றான் ஆதி.

சார், நீங்க இப்படி பேசினா உங்களுடனான டீலை கேன்சல் செய்ய வேண்டி இருக்கும்? என்று அந்த பொண்ணு மிரட்ட, திரிவேஷ் அகரனை பார்த்தான்.

ஓ.கே பண்ணிடலாம். ஆனால் அவனுடன் டின்னர் கூட போக முடியாது பரவாயில்லையா? ஆதிரேயன் அந்த பொண்ணிடம் கேட்டான்.

வாட்? உங்களுக்கு உங்க கிளைன்ட்டை விட இவன் முக்கியமா போயிட்டானா? அந்த பொண்ணு சத்தமிட்டாள்.

ஆமா, எனக்கு அவன் செக்கரட்டரி மட்டுமல்ல நண்பனும் கூட. நீங்க கிளம்புங்க. நான் உங்க அப்பாவிடம் சொல்லிக்கிறேன்.

“உங்களது சரிவை பார்க்க தயாராக இருங்கள்” என்றாள் அந்த பொண்ணு.

மேடம், இங்க கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. நீங்க பேசியது பதிவாகி இருக்கும். இதை வெளிய கொடுத்தால் உங்கள் நிலையை சிந்தித்து பாருங்கள் என்றான் ஆதி.

பாஸ், வேண்டாம் என்றான் அகரன். அகரனை முறைத்த ஆதிரேயன் வெளிய போறீங்களா மேம்? என்றவுடன் அந்த பொண்ணு அவமானத்துடன் சென்றாள்.

பாஸ்..அகரன் அழைக்க, எழுந்து வந்த ஆதி அகரனை அறைந்தான்.

பர்சனல் விசயத்தையும் வேலையையும் ஒன்னா பார்க்கக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல்ல? என்று சத்தமிட்டான்.

அண்ணா, அதுக்காக எதுக்கு அகரனை அடிக்கிற? மெல்லினா அகரனிடம் வந்தாள்.

அந்த பொண்ணு தான ஓவரா போனா?

மெல்லி, இவன் அந்த டீல் பண்ணலைன்னா அவ எதுக்கு இவனை தேடி வரப் போறா? ஆதிரேயன் கேட்க, மெல்லினா அகரனை பார்த்தாள்.

பாஸ், அவர் ஒத்துக்கலை. அந்த பொண்ணு அவளா டின்னருக்கு கூப்பிட்டா. நான் ஒத்துக்கிட்டேன். அவளோட அப்பாவை அவ தான் சமாதானப்படுத்தி சைன் பண்ண வச்சிருக்கா என்றான் அகரன்.

யாருன்னு தெரியாத பொண்ணோட எப்படிடா நீ ஒத்துக்கலாம் திரிவேஷ் கேட்க, அகரன் பதில் சொல்லாமல் நின்றான்.

அண்ணா, என்னை எதுக்கு அழைத்த? மெல்லினா கேட்டாள்.

ஸ்கூலில் உனக்கு தெரிந்த பசங்க குரல் இருக்கான்னு கண்டுபிடிக்கணும் என்று அகரா, அதை எங்கே? ஆதிரேயன் கேட்க, வீட்ல இருக்கு பாஸ்.

ஈவ்னிங் நான் தாரேன் சார் என்றான் அகரன்.

அண்ணா, எடுத்து வச்சிட்டு கூப்பிட்டிருக்கலாம்ல்ல? மெல்லினா கேட்க, அப்படி என்ன பாப்ஸ் வேலை உங்களுக்கு? திரிவேஷ் கேட்டான்.

வேலையா? எனக்கா? அண்ணா, இந்த ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்க சொன்னான். ஆனால் ரசி என்னை படுத்தி எடுக்குறா? அதர் லாங்வேஜ் கிளாஸ், மியூஸிக், டான்ஸ், இதில் கிச்சன் வொர்க் வேற..என்று மெல்லினா புலம்பினாள்.

இந்த ஒரு வாரத்திற்காகவா? திரிவேஷ் கேட்க, ஆமா சும்மா இருக்கிறதுக்கு கத்துக்கலாம்ல்ல..ஆதிரேயன் கேட்டான்.

அண்ணா..இதெல்லாம் ஓவர். இப்ப கூட பரவாயில்லை. ஸ்கூல் போகும் போதும் வீக் டேஸ்ல்ல போகணுமாம். முடியல அண்ணா..ரொம்ப மதரா இருக்கா? என்றாள் மெல்லினா.

திரிவேஷ் புன்னகையுடன், அவளெல்லாம் நம்மளோட சேர்க்க முடியாது பாப்ஸ். அவங்களெல்லாம் சார் மாதிரி தனி ரகம் என்று சிரித்தான்.

இப்ப என்ன கிளாஸ் இருக்கு? ஆதி கேட்க, லாங்வேஜ் தான் அண்ணா..நான் வந்துட்டேன்ல்ல. கொஞ்ச நேரம் தான ஆகும். அகரன் வீடு இங்க தான இருக்கு? நான் முடிச்சிட்டு போயிடவா? என ஆதியையும் அகரனையும் பார்த்தாள்.

சார், கிளாஸ்ஸை கட்டடிக்க பார்க்கிறாள். விடாதீங்க என்றான் திரிவேஷ். அகரன் பேசாமல் இருப்பதை பார்த்த ஆதி அவனை பார்த்தான்.

வேணுமா பாஸ்? எடுத்து வரணுமா? என அகரன் கேட்டான்.

இல்ல. நாளை காலை பார்த்துக்கலாம். மெல்லி, நீ வீட்டுக்கு கிளம்பு என்றான் ஆதி.

அண்ணா, இவ்வளவு தூரம் வந்துட்டேன் என மெல்லினா தயங்க, என்ன வேணும்? ஆதி கேட்டான். அவள் அகரனை பார்த்து விட்டு திரிவேஷை பார்த்தாள்.

என்னாச்சு பாப்ஸ்? திரிவேஷ் கேட்க, திரீ கூட பைக் ரைடு போகலாமா? உனக்கு வேலை இருக்கா? என்று மெல்லினா கேட்டுக் கொண்டே மற்ற இருவரையும் பார்த்தாள்.

இப்ப மீட்டிங் இருக்கு. எங்கள் மூவருக்குமே வேலை இருக்கு. நீ வந்த காரிலே கிளம்பு என்றான் திரிவேஷ்.

ஆதி சிந்தனையுடன், திரிவேஷ் எல்லாவற்றையும் தயார் செய். அகரா அவங்க வர எப்படியும் ஒருமணி நேரமாவது ஆகும். நீ மெல்லியை உன்னோட வீட்டுக்கு அழைச்சிட்டு போய் அவளிடம் அதை கொடு. அவள் அங்கே வைத்து..அதை பார்க்கட்டும். நீ அவளை விட்டு வந்திரு என்றான்.

பாஸ், தனியா அங்க இருப்பது பாதுகாப்பா இருக்கும்ன்னு தோணலை என்று மெதுவாக அவளை பார்த்துக் கொண்டே கூறினான்.

சரி, அப்படின்னா அவளை கூட்டிட்டி போய் எடுத்துட்டு வா. என்னோட அறையில வச்சி அவள் பார்க்கட்டும் என்றான் ஆதி.

அண்ணா, நான் பைக்கில போகணும். த்ரீ பைக்கை எடுத்து வரச் சொல்லு என்றாள் மெல்லினா.

ஹேய், அகரன் பைக் வாங்கி இருக்கான். உனக்கு தெரியாதா? என ஆதி மெல்லினாவிடம் கேட்டான். அவள் அகரனை பார்த்தாள்.

பாஸ், இந்த மூன்று நாளாக நான் மெல்லியை பார்க்கலை. அதான் அவளுக்கு தெரியாது என சமாளித்தான் அகரன்.

அகரா, பைக்கா வாங்கி இருக்க? மெல்லினா கேட்க, பைக் தான வாங்கி இருக்கான்? ருச்சி திரீயும் இப்படி தான் ஆச்சர்யமா கேட்டாங்க? நீயும் கேக்குற? ஆதிரேயன் கேட்டான்.

அண்ணா, இவனுக்கு கார் வாங்கணும்ன்னு தான் ஆசை. எதுக்கு பைக் வாங்கினான்? என்று மெல்லினா அகரனை பார்த்தாள். தமிழரசன் “அகரனை பிடிக்குமா?” எனக் கேட்டது அவள் நினைவுக்கு வந்தது.

தன் தங்கைக்காக தான் வாங்கி இருக்கான் என ஆதிக்கும் புரிந்தது. அகரா, கார் என ஆதி கேட்க, எனக்கு இப்ப பிடிக்கலை பாஸ். “வரணும்ன்னா வரச் சொல்லுங்க. நேரமாகுது” என்று அவன் கடிக்காரத்தை பார்த்தான்.

தமிழரசன் அகரனின் மாமா பொண்ணுடன் கல்யாணம் என பேசியது நினைவு வந்த, கேட்க துடித்த மனதை கட்டுப்படுத்திக் கொண்டு, நான் போயிட்டு வந்துடுறேன் என்று ஆதியிடம் மெல்லினா சொல்ல, சீக்கிரம் வந்துரு அகரா என்று ஆதி சொல்ல, இருவரும் வெளியே வந்தனர்.

தனக்கு பிடித்த பொண்ணு அகரனுடன் முதலாக பைக்கில் அவனுடன் வர, மகிழ்ச்சியாக இருந்தாலும் மெல்லினாவை தவிர அகரனுக்கு மெல்லினா மீதான காதல் அன்றே அனைவருக்கும் தெரிய வந்திருக்கும். ஆனால் யாருமே அவனிடம் காட்டிக் கொள்ளவும் இல்லை. மெல்லினாவிடம் தெரியப்படுத்தவும் இல்லை. அதனால் அவனுக்கு அவளை பார்க்கும் எண்ணமே இல்லாமல் இருந்திருக்கும்.

அகரனை பொருத்தவரை, அவன் பாஸோட தங்கை மெல்லினா. அதற்கு மேல் போனால் சரியாக இருக்காது. அதற்காக பேசாமல் இருக்க முடியவில்லை. எல்லாரிடமும் சாதாரணமாக பேசினாலும் மனதில் உள்ள காதல் மாறாதில்லையா? மெல்லினாவை பார்க்கும் போது அவன் தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டு பேச்சை குறைத்துக் கொள்கிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!