Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வண்ணம் தேடும் வானம்

வண்ணம் 19

அருண், புவன், சிரஞ்சீவி மூன்று பேரும் வெகு நாட்கள் கழித்து ஒன்றாக சேர்ந்து கல்லூரிக்கு வந்திருந்தனர். 

சிரஞ்சீவி வழக்கம் போல வம்பு பேச்சு  பேசிக்கொண்டே “வாயேன்  பாஸ்கெட் பால் மேட்ச் விளையாடி பார்க்கலாம்” என்று தமயந்தியை கேட்டான்.

சும்மா சும்மா  சீண்டிப் பார்க்கிறானே இந்த சிரஞ்சீவி என்று  தமயந்தி அவனை தலையில் கொட்டவே விளையாட  ஒத்துக்கொண்டாள். 

அருணும் தமையந்தியும் ஒரு டீம், புவனும் சிரஞ்சீவையும் ஒரு டீம் என்று பிரிந்தார்கள். சிரஞ்சீவி கைகளுக்கு பந்து போகவே விடாமல் தமயந்தி விளையாடும் விதம், தமயந்தி பந்தை  கூடைக்கு எரியும் முறை, பந்தை கூடையில் எறிவதற்கு அவள் திட்டமிடும் முறை எல்லாம் பார்த்து புவனுக்கு ஆச்சரியமானது. தமயந்தியை போலவே அவனும் விளையாடியும் கூட அவனால் தமயந்தியை விட அதிகமாக ‘ஸ்கோர்’ செய்ய முடியவில்லை.



Advertisement

அயராது அவள் கையிலுருந்து பந்தை பிடுங்க பார்த்துக்கொண்டே இருந்தவன் புவன் ” ஹப்பா தமையந்தி பேஸ்கட் பால் கிரவுண்ட்ல நீ ஆளே வேற மாதிரி இருக்க… இதே ஸ்ட்ராட்டஜிய  நீ எல்லாத்துலயும் அப்ளை பண்ணு  ஈஸியா ஜெயிச்சுட்டு வந்துடலாம்” என்றான். 

தமயந்தி  விளையாடி ஜெயித்து அருண்  கையை ‘ஹைஃபை’ தட்டினாள்.  அவள் கையை சட்டென பற்றியவன் “உன்ன மாதிரி பேஸ்கெட் பால் ஆர்வமாக விளையாடுற ஆள நான் பார்த்ததே இல்ல. அந்த பந்த கூடைக்குள்ள போடுறத மட்டுமே இலக்கா வச்சிட்டு ஆடுற தானே அதையே லைஃப்லயும் அப்ளை பண்ணு. ஏன் யாரோ ஒருத்தன் சொன்னதுக்கு உன்னை நீ குறைச்சி எடை போடுற” கேட்டான்.

தமயந்தி சுவாசிக்க மறந்து அவன் கண்ணையே பார்க்க அவளை இன்னமும் பக்கம் இழுத்தவன் “உன் திறமை மேல நம்பிக்கை வை தமயந்தி, கண்டவன் கண்டதை பேசிட்டு  போகட்டும் அதை எல்லாம் தட்டிவிட்டு போ” என்றான் மிருதுவாக.

Advertisement

அருண் கையை விட்டு அவள் கன்னத்தில் தட்டி “பெரிய அளவுல பிஸ்னஸ் பண்ண ஏமாத்தும் சாதுரியம் வேணும். நீயோ உண்மையா இருக்கிற ஆள், அதுதான் அந்த குணத்தை தான் நீ மாத்திக்கணும். புவன் கிட்ட கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் கத்துக்கோ ஈஸியா சமாளிக்கலாம்” என்றான்

Advertisement

தமயந்தி புருவம் சுருக்கியவள் “அதென்ன அக்கறை இருக்கிற மாதிரியே பேசுற, என்னை என்ன நெனச்சிட்டே நீ ” கோபப்பட்டாள் 

அருண் “ஹ்ஹ கஷ்ட்டபடற, உதவி செய்றேன்”

தமயந்தி “உன் இந்த கண்ணாமூச்சி கேம் என்ன கடுப்பேத்துது”

Advertisement

அருண் “உனக்கு பெர்சனாலிட்டி டெவெலப்மென்ட் முக்கியமா இல்ல நான் உன்ன பத்தி என்ன நினைக்கிறேன்ங்குறது முக்கியமா” 

தமயந்திக்கு கோபம் இன்னமும் தலைக்கு ஏறியது. இப்படி கேட்கும் கேள்வியே புரியாதது போல ஒருவரால் பேசமுடியுமா?? 

வெடுக்கென்ன நடந்து சென்று உடைகளை மாற்றிக்கொண்டு வண்டி எடுத்துக்கொண்டு ஹாஸ்டல் சென்றுவிட்டாள். 

அருணுக்கு அவன் கைபேசியில்  கடந்த இரண்டு மணிநேரத்தில் நூறு மிஸ்ட் கால் இருந்தது. எடுத்து பார்த்தவனுக்கு அதன்பின் எதை பற்றியும் சிந்திக்க நேரமின்றி வேலைகள் குவிந்தன.

அடுத்தநாள் முதல் புவன் தமயந்தியிடம் சகஜமாக அவளிடம் இருக்கும் சில குணங்களை சுட்டிகாட்டி திருத்த உதவினான்.

புவன் “நீ மனசுல நினைக்கிறது உன்  முகத்துல பளீச்சுன்னு தெரியுது தம்ஸ் அதை மாத்தணும்”

 தமயந்திக்கோ புவன் சொல்வது உண்மையென்றால் ஏன் அருணுக்கு நம் குழப்பமோ கேள்வியோ புரியாமல் போனது என்றே எண்ணம் எழுந்தது.

தமயந்தி “அப்படி முகத்துல தெரியாம இருக்க என்ன செய்யணும்”

புவன் “ சிரிச்ச முகமாகவே இரு. கஷ்டமா இருந்தாலும் சிரிச்ச முகத்தைதான் வச்சிருக்கணும்”

தமயந்தி “முயற்சி செய்றேன்”

புவன் “குட் சிரிச்ச முகம் நீ பேச தகுந்த ஆளுன்னு உன்னை ஈஸியா அணுகக்கூடிய ஆளாக காட்டும். சோ சிரிச்ச முகத்துக்கு கூடவே யாரையுமே நேரா கண்ணை மட்டும் பாரு. எதிர்ல வர ஆளோட கண்ண பார்க்க தயங்கவே தயங்காத. நீ பார்க்கிறதுக்கு முன்னயே அவங்க உன்ன பார்த்துட்டு இருந்தாலும் அவங்க கண்ணை பார்த்துட்டு திரும்பு”

தமயந்தி “ஐயோ என்னை பார்க்கிறவங்கள நான் பார்த்தா எனக்கு வெட்கம் வந்துரும்”

புவன் “இல்ல உன் உயரத்துக்கு நீ யாரை கண்ணோட கண் பார்த்தாலும் அவங்க உன்ன நிமிர்ந்துதான் பார்க்கணும். அப்பவும் அவங்க கண்ண பாரு.இனி தினமும் ட்ரை பண்ணு”

தமயந்தி “ப்ச் உனக்கு புரியல என்ன என் உயரத்தை பார்க்கறவங்க யப்பா எவ்ளோ உசரமா இருக்கான்னு பார்ப்பாங்க. எனக்கு அப்படி ஆச்சரியமா பார்க்கிறவங்கள பார்க்க ஒரு மாதிரி இருக்கும். ட்ரெஸ் பத்தி மூளை யோசிக்க ஆரம்பிச்சிரும்”

புவன் “அச்சோ தமயந்தி.உன் உயரம் அவங்களுக்கு கிடைக்கலையேன்னு பார்க்கிறாங்க. எல்லாருக்கும் இருக்கிற உடல் பாகம் தான் நமக்கும் இருக்கு. ட்ரெஸ் விலகியோ கிழிஞ்சோ அது தெரிஞ்சா தெரிஞ்சிட்டு போகுது. மனுஷன் என்ன பொறக்கும் போது ட்ரெஸ் போட்டுட்டா பொறக்குறான். விலகிய டிரஸ் சரி செய்துக்கலாம். கிழிஞ்ச ட்ரெஸ் திரும்ப தெச்சுக்கலாம்.  வெட்கம், மானம் ட்ரெஸ்ஸ காட்டிலும் நடத்துகிற விதத்துலதான் அதிகம் இருக்கு”

தமயந்தி முகம் இன்னமும் குழப்பமாகவே இருக்க  புவன் “ உண்மை என்ன தெரியுமா நீ உன் உயரத்தை ஒரு குறையா பார்க்குற”

தமயந்தி “ஆமா இதுனால நான் நிறைய அனுபவிச்சிருக்கேன்” புவன் தமயந்தி பேச்சை  மேலும் தொடர  அவள் முகத்தையே பார்க்க தமயந்தியும் அவனை போலவே முகத்தை வைத்துக்கொண்டு அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றாள். இனி இவள் பேசமாட்டாள் என்று உணர்ந்த புவன் “குட் இந்த குவாலிட்டி ரொம்ப ரொம்ப தேவையான குணம். நம்மகிட்ட பேச விஷயம் இல்ல, பேச பிடிக்கலைன்னா இப்படி ஆர்வமா மூஞ்சை வச்சுக்கிட்டா எதிர்க்க இருக்கவங்களே பேசிட்டு இருப்பாங்க”

தமயந்தி “ஒரு வேளை ரெண்டு பேரும் பேச யோசிக்கிற ஆளாக இருந்தா”

புவன் “இவ்வளவு நாளாக நீயும் நானும் எப்படி இருந்தோம், இன்னிக்கு தேவைன்னு வரப்ப பேசுறோம் தானே”

தமயந்தி யோசித்தவள் ‘ஆமா தானே புவன் அதிகமா பேசாம வெறுமனே சிரிக்க மட்டும் தானே செய்வான்’ என்று தொடங்கிய எண்ண அலைகள்  சிரஞ்சீவி பக்கம் தாவி அருணில் முடிய கேள்வியை கேட்டாள் “அப்போ உனக்கு என்னமோ என்கிட்ட இருந்து ஹெல்ப் தேவைபடுது அப்படித்தானே” கேட்டாள்.

புவன் சிரித்துவிட்டு “நாளைக்கு க்ளாஸ் குள்ள நுழையும் போது எல்லார் கண்ணையும் பார்த்துட்டே வர சரியா”

தமயந்தி “ட்ரை பண்றேன்”

புவன் “நான் கவனிப்பேன்” 

புவன் வழிகாட்டுதலில் தமயந்தி கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறி வந்தாள்.தமயந்தியின் பேச்சில் நடையில்  மாற்றம் கண்ட பூமிக்கு மிகவும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் உண்டானது. இப்போது தோழியின் மாற்றமே முக்கியமென  ஆனதும் புவனை பொறுத்துக் கொள்வதுதான் ஒரேவழி.

கமலநாதன் விபத்துக்குள்ளான கேஸ் கோர்ட் ஹியரிங் வந்தது.பத்திரிக்கையாளர்கள் யாருமே கண்ணுக்கு தென்படவில்லை. அம்பிகா சந்தேகமாக கூட பாதுகாப்பிற்கு வந்திருந்த கபிலனை பார்க்க கபிலன் “பயப்படாதம்மா தைரியமா போ” என்றார்.

போலீஸ் தரப்பு கொடுத்த விளக்கங்களும் தகவல்களும் ஆச்சரியம் அளித்தது.கமலநாதன் எனும் ஆடிட்டர் வைரங்கள் விற்கும் நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் நடக்கும் வியாபார கணக்கை பராமரித்து வந்திருக்கிறார். வைர கடத்தல் என தெரிந்துகொண்டபின் விலகி செல்ல அவர் எத்தனித்த போது அவரை மிரட்டி வேலை வாங்கிக்கொண்டு அவர் மூலமே அவர்கள் வியாபாரத்தை நடத்தி இருக்கிறார்கள். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிருந்திருக்கார் கமலநாதன். அது அவர் குடும்ப வாழ்விலும் எதிரொலித்திருக்கிறது.

ஆடிட்டர் கமலநாதனின் நம்பிக்கைக்குரிய ஆட்களும் அவரை வெகு நாட்களாக தெரிந்தவர்களும் கொடுத்த வாக்குமூலங்களில் கமலநாதன் இந்த வைர வியாபாரம் மற்றும் இன்ன பிற தொழில்களின் கணக்கு வழக்குகளை சரிபார்க்க தொடங்கியபின் அவரிடம் நிறைய வித்தியாசங்கள் தென்பட்டன என்று தெரிவித்திருக்கிறாரகள்.ஒரு சில நல்ல பழக்கம் இருந்த பிசினஸ்மேன்களையும் அவரே என்னிடம் இனி பிசினஸ் செய்யாதீர்கள் என்று கழட்டி விட்டுருக்கிறார்.அவர் செய்வது அவருக்கே பிடிக்காமல் அவருடைய பேச்சுப் போக்கு நடந்துக் கொள்ளும் விதம் எல்லாம் மாறி இருக்கிறது. மிகவும் நெருங்கிய நண்பரிடம் நான் இப்படி இருக்கிறது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று சொல்லிருக்கிறார். கடைசியாக அவரிடம் இருந்த பணம்  எடுத்துக்கொண்டு எங்கேயோ கொடுக்க போகும்போதுதான் விபத்துக்கு உள்ளாகி இறந்திருக்கிறார். 

அம்பிகா அவராக  தனிப்பட்ட முறையில் கண்டெடுத்த விஷயங்களை தான் இப்போது கோர்ட்டிலும் தெரிவிக்கிறார்கள். போலீஸ் தரப்பினர் சொல்லும் கமலநாதன் ‘பிடிக்காமல் செய்தார்’ என்பது மட்டுமே அம்பிகாவுக்கு சந்தேகம். ஏனென்றால் கமலநாதனுக்கு பணத்தின் மீது அவ்வளவு மோகம்  இருந்தது. அவரா இத்தனையும் பிடிக்காமல் செய்திருக்க போகிறார்?!ஆனால் என்னமோ கேஸ் ஒரு முடிவுக்கு வருவது போல் தெரிந்தது அம்பிகாவுக்கு.

இரண்டாம் ஆண்டு படிப்பில் இத்தனை சுலபமாக தமயந்தி அடி எடுத்து வைப்பாள் என்று நினைக்க கூட இல்லை. அவள் பயந்தது எதுவுமே நடக்காமல்  எளிமையாக ஃபீஸ் கட்ட முடிந்தது, பேச்சுத் தொடர்பு திறனை வளர்த்துக் கொண்டாள், மார்கெட்டிங் மற்றும் நிதி மேலாண்மையை தீவிரமாக கற்றுக் கொண்டாள். நண்பர்கள் பல பேரை சம்பாதித்தாள்.  

பூர்ணிமாவுக்கு அவள் வீட்டில் நேபால அரச குடும்பத்தில் பிறந்த  “ராஜ் மஹான் ஷா” என்பவரை  மணமகனாக முடிவு செய்திருந்தார்கள். திருமணம் இன்னமும் ஆறு மாதத்தில் நடக்கப்போகிறது என்றாள்.

திரும்பவும் தமயந்தி பூமிகா பூர்ணிமாவின் ஜோரான ஷாப்பிங் தொடங்கியது. இம்முறை பூர்ணிமாவின் ஆசைக்கு இணங்க மூவரும் தமிழ்நாட்டு ஸ்பெசல் என்று பலதை அலைந்து திரிந்து வாங்க தொடங்கினார்கள். பூர்ணிமா அவளுக்கு பிடித்தது போல சுதந்திரமாக ஆசைப்பட்டதை சாப்பிட்டு, ஊரை சுற்றிப்பார்த்து மகிழ்ச்சியாக திரிந்தாள். 

பூமிகாவின் இசை, தமயந்தி திறன் மேம்பாடு, பூர்ணிமாவின் ஊர் சுற்றலில்  காலம் அதன் போக்கில் வேகமாக சென்றது. அருண் ப்ரொடக்ஷனும் விநியோகமும்  அதன் போக்கில் சீராக சென்றது.

 அருந்ததீ ஃபிலிம்  கார்ப்பரேஷன் நிறைய கடன்களின் சிக்கி தொழில் தொடர முடியாமல் வங்கி சீல் வைக்க முடங்கிப் போனது.

அருந்ததியை அவள் அண்ணன்கள் தூபம் போட அருந்ததீ  மகனிடம் புலம்பினார் “எங்க அப்பா சீரும் சிறப்புமாக கொண்டு வந்த தொழில் இப்படி முடங்கி போச்சே கண்ணா” 

அருண் “இத்தனை நாள் தெரியாம அது முடங்கின பின்னாடிதான் தெரியுதா” என்று கேட்டான்

 அருந்ததீ “ பேசாம நான் நம்ம தியேட்டர்ஸ் எல்லாம் அடமானம் வச்சு அதை மீட்கலாமா யோசிக்கிறேன்” உணர்ச்சிவசமாக கேட்டார்

அருண் “முயற்சி செய்து பாருங்க” என்று சொல்லி விலகிக்கொண்டான்

அருந்ததீ மகனை  விசித்திரமாக பார்த்தார். அருணுக்கு தெரியும் அவன்  மாமன்களின் வெகு நாள் ஆசை; கடன் இல்லாமல் லாபத்தில் ஓடும் ஏ.என்.ஆர் தியேட்டர்களை இப்போது சூரையாடினால் தான் அவர்களுக்கு நிம்மதி வரும். 

சொந்த அண்ணன்களின் பேராசை எண்ணங்கள் கூட புரியாமல்  பேசுகிறாரே அம்மா என்று எரிச்சல் எப்போதும் போல உருவானது. 

விசித்திரமாக பார்க்கும் பார்வையை எதிர்கொள்ள  அருண் “உங்க இஷ்டப்படி செய்யுங்கம்மா” என்றான் திரும்பவும்

அருந்ததீ “என்ன அருண்! நம்ம குடும்பத்தில இவ்வளவு பெரிய க்ரைசிஸ் உருவாகியிருக்கு எவ்வளவு கூலாக பேசுற, நீயும் இப்ப தொழில இறங்கிட்ட எல்லோரும் சேர்ந்து தான குடும்ப கடனை தீர்க்கணும்”

அருண் “எப்படிம்மா நீங்க தியேட்டர்ல சம்பாதிப்பீங்க, நான் டிஸ்ட்ரிபியூஷன்ல சம்பாதிப்பேன், முதல் மாமா பார்ல போய் சம்பாதிப்பாரா, இரண்டாவது மாமா பிராத்தல்ல போய்  சம்பாதிப்பாரா” கேட்டான்

அருந்ததீ  மகனை சட்டென பளார் என்று அறைந்தவர் “யார் கிட்ட பேசுறேன்னு பார்த்து பேசு அம்மாகிட்ட வந்து என்ன வார்த்தை எல்லாம் பேசுற நீ” என்று சீறினார் 

தொடர்ந்து “போய் என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு வந்து நாளைக்கு எனக்கு சொல்லு” கோபத்தின் உச்சத்தில் பேசினார் 

அருண் “சாரிமா. ஆனா யோசிக்க ஒன்னும்  இல்லை”

அருந்ததீ “அருண் இது நம்ம குடும்பம் அருண்”

அருண் “நீங்க மட்டும்தான்மா என்னோட ஃபேமிலி”

அருந்ததீ “நான் உன்  குடும்பம்னா என் அண்ணன்களும் என் அம்மாவும், அப்பாவும் கூட உன் குடும்பம்தான்”

அருண் “நீங்க வேணா உங்க நன்றி உணர்வை காட்ட என்னமோ செஞ்சிட்டு போங்க என்ன எதுவும் செய்ய சொல்லாதீங்க.  என் பிசினஸ் அதோட லாபமும் நஷ்டமோ எனக்கு மட்டும்தான்”சொல்லிவிட்டு கோபமாக வீட்டை விட்டு வெளியே வந்து கபிலன் வீட்டை அடைந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!