Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

வரம் 💘 13

அத்தியாயம் – 13

 

 

அந்த பிரம்மாண்டமான வரவேற்பறையை சூழ்ந்திருந்தது அசாத்திய மௌனம் ஒன்று.



Advertisement

 

அங்கே அமர்ந்திருந்த மூவரின் அகமும் முகமும் வெவ்வேறு உணர்ச்சிகளை தாங்கி நிற்க, அவர்களைக் கலைத்தது வினய்யின் கைபேசி.

 

Advertisement

ஸ்டெல்லா தான் அழைப்பு விடுத்திருந்தாள்.

Advertisement

 

அழைப்பை ஏற்று செவிக்கு கொடுத்த வினய், மறுபுறம் சொல்லப்பட்ட செய்திகளுக்கு வெறும் “ம்ம்ம்!!” மட்டுமே கொட்ட, கணேசனும், அகிலாவும் அவன் பேசி முடிப்பதற்காக காத்திருந்தனர்.

 

Advertisement

“யாருப்பா போன்ல??” என அவன் அழைப்பைத் துண்டித்ததும் கணேசன் கேட்க, 

 

“ஸ்டெல்லா தான் டாட்.. அங்க ஃபங்ஷன் முடிஞ்சிருச்சு.. கிளம்புறேன்னு இன்பார்ம் பண்ணக் கூப்டா” என அவன் கூறவும், 

 

“அங்க அடுத்து எந்த பிரச்சனையும் இல்லை தான?? இஸ் எவிரிதிங் ஆல்ரைட்??” என்றார் அறிந்து கொள்ளும் நோக்குடன்.

 

“நத்திங் மச் டாட்!! பட் அவர் கிரியேட் பண்ண சீன்ல எல்லாருமே கொஞ்சம் அப்சட் போல.. பாவம் சதீஷ் , சங்கீதா.. ரெண்டு பேரும் லவ் மேரேஜ்.. இந்த டே அவங்களுக்கு எவ்ளோ ஸ்பெஷல் இல்லையா?? அதை இப்படி பண்ணிட்டாரு” என ஆதங்கத்துடன் அவன் கூறவும், 

 

“அவங்க சொந்தக்காரங்க பத்தி அந்தாளுக்கே கவலை இல்லை.. உனக்கு என்ன டா?? எவ்ளோ தைரியம் இருந்தா உன் மேல கைவச்சு அப்படி பேசுவாரு?? இன்னொரு முறை அந்தாளை பார்த்தேன் நிச்சயம் சும்மா விட மாட்டேன் நான்” என அகிலா அடக்கப்பட்ட கோபத்துடன் பொரிந்து தள்ள, 

 

“அகி!!! மரியாதையா பேசு!! அவர் தான் நம்ம வருங்கால சம்மந்தி” என கணேசன் என்ன நடந்தாலும் இதில் மாற்றம் இல்லை என்பது போல் அழுத்தம் திருத்தமாகக் கூற, 

 

அகிலாவிற்கு வந்ததே ஆத்திரம்.

 

“உங்களுக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா?? இப்படி பேசுற மனுஷன் கூட என்னன்னு தான் நம்ம காலம் தள்ளுறது?? முதல்ல அவர் ஒத்துப்பாருன்னு நினைக்கிறீங்களா?? வாய்ப்பே இல்லை!!! என்னால எல்லாம் அந்த ஆளுகிட்ட போய் கெஞ்சிட்டு இருக்க முடியாது.. என் பையனுக்கு என்ன குறைச்சல்?? அவனுக்கு பொண்ணுங்க வரிசை கட்டி நிக்குறாங்க.. இதெல்லாம் ஒத்தே வராதுங்க.. போதும் இத்தோட எல்லாத்தையும் மறந்துட்டு வேற வேலையைப் பாருங்க.. கொஞ்ச காலம் ஆனதும் எல்லாம் மறந்துடும்.. அப்பறம் வினய்க்கு வேற யாரையும் பிடிச்சு அவனே கூட்டிட்டு வந்தாலும் சரி!! இல்லை நானே அவனுக்கு ஏத்த மாதிரி பொண்ணைத் தேடி கண்டுபிடிக்கிறேன்..” என அவர் இதுதான் தன் முடிவு என்பது போல் உறுதியாக இருக்க, 

 

கணேசன் ஏதோ பேசும் முன்பே, “அவ்ளோ ஈசியா போச்சுல்ல மாம் என்னோட லவ்??” என வலியை தாங்கிய விழியுடன் வினய் கேட்டிருக்க, 

 

அவன் கண்களில் தெரிந்த வேதனையைக் கண்டு அகிலாவின் உள்ளமும் வலித்தது.

 

“வினய்!! அப்படி இல்லைடா!!” என அவர் பரிதவிப்புடன் ஏதோ சொல்ல வர,

 

கைநீட்டி அவரைத் தடுத்த வினய், “நோ மாம்!! நான் பேசிக்கிறேன்” என்று தொடர்ந்தான்.

 

“லவ் அப்படிங்கிற ஃபீலிங்கை உணராத வரைக்கும் நானும் அதை ஜஸ்ட் லைக் தட் கடந்து போய்டக் கூடிய ஒன்னுன்னு தான் மாம் நினைச்சிருந்தேன்!! பட் இப்போ!!” என்றவன் இல்லை என்பதைப் போல் உதடு பிதுக்கி தலையசைத்து இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான்.

 

“நீங்களும் டாடும் லவ் மேரேஜ் தானே மாம்??? உங்க ரெண்டு பேர் வீட்டுலயும் சம்மதிக்கலை தானே?? அதுக்காக ரெண்டு பேரும் லவ்வை தூக்கி எறிஞ்சிட்டா போனீங்க?? இல்லையே?? கடைசி வரை போராடி அவங்க ஓத்துக்கவே இல்லைன்னு அவங்களை விட்டுட்டு டாட் தான் வேணும்னு நீங்க கிளம்பி வந்தீங்க தான?? அப்போ உங்க சைட் ரிலேட்டிவ்ஸ் எல்லாம் டாடை எவ்ளோ திட்டுனாங்க ஈவன் அடிக்கக் கூட வந்தாங்களே மாம்!! அதுக்காக டாட் என்ன உங்களை வேண்டாம்னா சொல்லிட்டு போனாரு?? நீங்க ரெண்டு பேரும் என்ன பிராப்ளம் வந்த போதும் உங்க லவ்ல ஸ்டாராங்கா நின்னிங்க தான?? அப்போ உங்களோட பையன் நான் வேற எப்படி மாம் இருக்க முடியும்?? எவ்ளோ ஹர்டில்ஸ் வந்தாலும் ஐ வில் ஃபேஸ் மாம்.. என்னால வதனாவைத் தவிர வேற ஒரு பொண்ணை நினைச்சுக் கூட பார்க்க முடியாது.. இனி அவளை மறந்திடுன்னு பேச்சுக்கு கூட சொல்லாதீங்க” என அமைதியாய் அதே சமயம் உறுதியாய் அவன் கூறி முடிக்க, 

 

அகிலாவிற்கு அவனின் கூற்று சுத்தமாய் ரசிக்கவில்லை என்பது அவரின் முகத்திலேயே தெரிந்தது.

 

“வினய்!! இதெல்லாம் பேச நல்லா இருக்கும்.. பட் நாங்க எங்க பேரன்ட்சை தூக்கி போட்டுட்டு வந்து தனியா எவ்ளோ கஷ்டப்பட்டோம் அப்படின்னு உங்க அப்பாகிட்ட கேட்டுப் பாரு!!” என அகிலா அப்போதும் மல்லுக்கு நிற்க, 

 

“எஸ் மாம்!! நீங்க இன்னைக்கு வரைக்கும் உங்க அம்மா அப்பா கூட பேசாம எவ்ளோ கஷ்டப் படுறீங்கன்னு ஐ க்நோ!! அதான் அந்த கஷ்டத்தை என் வதனாக்குத் தர மாட்டேன்.. கண்டிப்பா நீங்க எல்லாரும் சம்மதிச்சு உங்க முழு ஆசிர்வாதத்தோட தான் அவளை என் வாழ்க்கைக்குள்ள கொண்டு வருவேன்.. அதுதான் அவளுக்கும் மரியாதை!!” என வினய் அதற்கும் பதில் தர, 

 

“டேய் அவங்க அப்பாவைப் பார்த்த தான?? இன்னுமா உனக்கு அவர் சம்மதிச்சி அந்தப்பொண்ணை உனக்குத் தூக்கித் தருவாருன்னு நம்பிட்டு இருக்க??” என அகிலா இப்படி புரிந்து கொள்ளாமல் பேசுகிறானே என சற்று காட்டமாகவே கேட்க,

 

“என் லவ் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு மாம்!!! நிச்சயம் நான் சொன்ன எல்லாமே நடக்கும்.. என்ன அதுக்கு கொஞ்சம் டைம் ஆகும்!!! ஐ வில் வெய்ட் மாம்!!” என்றான் நம்பிக்கையுடன்.

 

அதற்கும் ஏதோ சொல்லப்போனா அகிலாவை தடுத்துவிட்ட கணேசன், “இந்த மாதிரி தான் முப்பது வருஷத்துக்கு முன்னாடி நான் தவிச்சிட்டு இருந்தேன்.. அப்போ என் அப்பா எனக்குத் துணையா இல்லை.. அது எவ்ளோ வலின்னு உணர்ந்த நான், அதே வலியை என்னைக்கும் என் பையனுக்கு கொடுக்க மாட்டேன்.. நீ என்ன பண்ணாலும் அப்பா நான் இருக்கேன் வினய்!! எதுனாலும் பார்த்துக்கலாம்!! சியர் அப் மேன்!! டோண்ட் வொர்ரி!!” என ஆதரவாய் அவன் தோளைத் தட்டிக் கொடுக்க, 

 

உண்மையில் அந்த நொடி வினய்க்கு அது அவ்வளவு தேவையாக இருந்தது. கணேசனின் வார்த்தை அவனுள் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்க, “தேங்க் யூ டாட்!!” என அவரைக் கட்டிக் கொள்ள, 

 

அகிலாவிற்கு முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப் போல், இதை அவ்வளவு எளிதில் கடந்து விட முடியும் என்று தோன்றாததால் இவர்களை கடுப்புடன் பார்த்து விட்டு எழுந்து உள்ளே சென்று விட்டார்.

 

வினய்யின் முகம் அதைக் கண்டு சோர்ந்து போனது.

 

“விடு வினய்!! அவ உன் மேல அவர் கை வச்சிட்டாரேன்னு கடுப்புல இருக்கா.. நேர்ல வேற பார்த்துட்டாளா.. அதான் அவளால அதை ஈசியா கடந்து வர முடியலை.. நான் பார்த்துக்கிறேன்.. நீ அம்மாவை நினைச்சு கவலைப் பட வேண்டாம்.. எங்களுக்கு எப்போவும் உன் சந்தோஷம் தான் முக்கியம்!! அதை மைன்ட்ல வச்சுக்கோ” என கணேசன் ஆதரவாகப் பேசி அவனை சமாதானம் செய்யவும், 

 

“ஓகே டாட்!!” என பெயருக்கு புன்னகைத்து வைத்தான். 

 

“என் மாமனாரை விட உன் மாமனார் பயங்கரமான கோவக்காரரா இருக்காரே!! அப்போ அகிலாவை விட அந்தப்பொண்ணும் கோவக்காரியா இருக்கப் போகுது வினய்!! பார்த்துக்கோ!! அப்பறம் அப்பா மாதிரி கஸ்டப்படப் போற!!” என சூழ்நிலையை இலகுவாக்க அவர் கேலி பேச,

 

அதை உணர்ந்த வினய்யும், “நெவர் டாட்!! என் வதனா பூவை விட மென்மையானவ!! அவளால என்னைக்கும் என்னை கஷ்டப்படுத்த முடியாது” என தன்னவளைப் பற்றி எண்ணியதும் அவன் முகத்தில் இருந்த இறுக்கங்கள் குறைந்து மென்மையாக மாற, அதை கண்டுகொண்ட பெற்றவருக்கு மனது நிறைந்து போனது.

 

பிள்ளைகளின் சந்தோஷத்தை தவிர வேறன்ன இன்பம் இருக்கின்றது பெற்றவர்களுக்கு?? வினய்யின் மகிழ்ச்சியில் அவரும் மகிழ்ந்து அடுத்து இதற்கு விரைவில் ஒரு தீர்வு கட்ட வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டார்.

 

 

***

 

இங்கே அந்தக் கலவரம் முடிந்த பிறகு, அங்கிருந்தவர்களுக்கு தங்களின் கோபத்தையோ, வருத்தத்தையோ நாட்டரசனிடம் காட்டுவதற்கு கூட அவகாசம் அளிக்காமல் மாப்பிள்ளை வீட்டு உறவுகள் வந்து விட, இவர்களும் கனத்த மனதுடன் திருமண வேலைகளை கவனிக்கத் துவங்கினர்.

 

அதிலும் சங்கீதாவின் முகத்தைப் பார்க்கப் பார்க்க இளவரசிக்கு நாட்டரசனை அடித்துத் துவைத்து விடும் அளவிற்கு வெறி வந்தது.

 

‘எம்புட்டு ஆசையா கல்யாணத்துக்கு ரெடி ஆன புள்ளையை இப்படி உட்கார வச்சிட்டாரே!! இந்த பாவத்தையெல்லாம் எங்குட்டு போய் கரைக்கன்னு தெரியலை’ என எண்ணி எண்ணி குமைந்தவர், எப்போதாடா திருமணம் முடியும் என்று கிளம்புவதற்கு காத்துக் கொண்டிருந்தார்.

 

ஆனால் நாட்டரசனோ தான் செய்து விட்ட செயலுக்கு சின்னதொரு உறுத்தலும் இல்லாமல், அனைத்து வேலைகளும் சரியாக நடக்கிறதா என வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மேற்பார்வை பார்க்கக் கிளம்பி விட, 

 

‘ச்சை!! என்ன மனிதர் இவர்??’ என வெறுத்துப் போனது அவருக்கு.

 

சங்கீதா மற்றும் சங்கீதாவின் பெற்றோருக்கு நாட்டரசன் மீது கோபம் இருந்தாலும், இளவரசி மற்றும் வந்தனாவை கருத்தில் கொண்டு எதுவும் பேசாமல் அவர்களும் மௌனம் காக்க, நாட்டரசனுக்கு அவரின் செயலின் வீரியம் புரியாமலே போனது.

 

இங்கு வினய் கிளம்பிய பின், பிரச்சனையின் சாரம்சத்தை கேட்டு அறிந்து கொண்ட வந்தனாவின் நிலை தான் மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருந்தது.

 

முன்பே இது ஒத்துவராது என்று தெரிந்து தான் வலிக்க வலிக்க அவனை நிராகரித்திருந்தாள். இப்போது, இன்று நடந்த சம்பவத்தின் பின் ஜென்மத்திற்கும் இது கனவில் கூட நடக்க வாய்ப்பே இல்லை என அறிந்த பின் இதயத்தில் சுறுக்கென ஒரு வலி ஊடுறுவதை அவளால் உணர முடிந்தது.

 

அதுவும் தன் முன்னாலே வினய்யை தன் தந்தை ‘பொறுக்கி’ எனத் திட்டியதும் அதற்கு அவன் பார்த்துச் சென்ற பார்வையும் அவளால் சாகும் வரையிலும் மறக்கவே முடியாது.

 

எப்பொழுதும் அவளைக் காண்கையில் கண்களில் வழியும் காதலையே கண்டு பழகி விட்டவளுக்கு, இன்று அவன் கண்களில் தெரிந்த அவமானம் கலந்த கோபத்தின் சாயல் நெஞ்சைக் கசக்கிப் பிழிவதைப் போல இருக்க, இதுக்கெல்லாம் காரணமான தந்தையை எண்ணி ஆற்றாமையாக இருந்தது.

 

“ஏன்ப்பா இப்படி இருக்கீங்க?? வினய் ரொம்ப நல்லவரு.. அவரை இப்படி ஹர்ட் பண்ணீட்டிங்களே??” என மனதோடு அவரிடம் கேட்டுக்கொண்டு மௌனமாய் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்.

 

கிட்டத்தட்ட மலரும் நடந்ததை அறிந்து அதிர்ந்து போய் தான் இருந்தாள்.

 

“நாசமாப் போச்சு!!! நாம இதுங்களை சேர்க்க கஷடப்பட்டு பிளான் போட்டா இந்த விதி ஈசியா ஒரு செய்கையை செஞ்சு விட்டுட்டு போய்டுச்சே!! இனி இவங்க சேர்ந்த மாதிரி தான்..” என நொந்து கொண்டவளுக்கு,

 

நாட்டரசனைக் காணும் போது, “யோவ் நாட்டு மாமா!! நீ தூங்கும் போது பேசாம அம்மிக்கல்லை போட்டு சோலியை முடிக்கிறேன் இருய்யா!! ரொம்ப அநியாயம் பண்ற நீ!!” என கோபத்தில் முறைத்துக் கொண்டே இருந்தாள் அவரை.

 

சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து விட்டாலும், சதீஷ் – சங்கீதாவின் திருமணம் நல்லபடியாகவே நடந்து முடிய, திருமணம் முடிந்த கையோடு அறிவழகன் – வைஜெயந்தியிடம் சொல்லிக்கொண்டு கிளம்புவதாக இளவரசி நிற்க, 

 

“அட என்னம்மா அவசரம்?? இன்னும் ரிசப்ஷன் எல்லாம் இருக்கே!! உங்க பொண்ணு கல்யாணத்துல நீங்க இல்லாம எப்படி?? ஒழுங்கா இருங்க” என அறிவழகன் அறிவுறுத்த,

 

“அட போங்க மாமா!! எனக்கு இவரை வச்சிகிட்டு எப்போ என்ன ஏழரையை கூட்டிவாருன்னு எந்நேரமும் திக்கு திக்குன்னு இருக்கு.. நீங்களே பார்த்தீங்க தான?? இன்னைக்கு நடந்த கூத்துல சங்கீதா குட்டி முகமே எப்படி வாடிப் போச்சுன்னு.. எவ்வளவு ஆசையா கல்யாணத்துக்கு தயாரான புள்ளை!! இப்போ அது முகமே களையில்லாம போச்சு.. எல்லாம் இந்த கூறுகெட்ட மனுசனால தான்.. இதுக்கு மேலயும் அவரை இங்க விட்டுவச்சு அந்தப்புள்ளைக சந்தோஷத்தை நான் கெடுக்க விரும்பலை.. நீங்க நல்லபடியா அடுத்த வேலையைப் பாருங்க… நாங்க கிளம்புறோம்” என இளவரசி தன் பிடியில் உறுதியாக இருக்க, அவர்களும் மனதே இல்லாமல் வழியனுப்பி வைத்தனர்.

 

மலர் வந்து இவர்கள் கிலம்புவதாகச் சொல்லவும், என்னவோ ஏதோவொன்று நாட்டரசனும் கிளம்பி காருக்குப் போக, அவருக்கு பேசவே வாய்ப்பளிக்காமல் அவரை உள்ளே தள்ளி, வண்டியைக் கிளப்பிக் கொண்டு வயலூருக்குக் கிளம்பினார் இளவரசி.

 

மனதெல்லாம் வினய்யின் நினைவுகளை சுமந்து கொண்டு, அவனை விட்டு வெகுதூரம் சென்று விட்டாள் அவனின் வந்தனா அவளுக்காக அங்கே காத்திருக்கும் அதிர்ச்சியை அறியாமல்???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!