Skip to content
Post Views: 6,308
அத்தியாயம் – 16
“நம்பக் கூடாது!!!
அந்த போலீஸ்காரனை!!
Advertisement
ஆசை காட்டி!! திட்டம் போட்டு!!
நம்மை ஏமாத்த போறான்!!”
Advertisement
என பேசக்கூடாது பாடலை தன் இஷ்டத்திற்கு மலர் மாற்றிப் பாடிக் கொண்டிருக்க,
Advertisement
பல நாட்கள் கழித்து வந்தனாவின் முகத்தில் லேசாய் புன்னகை ஒன்று அரும்பியது.
Advertisement
“ஆரம்பிச்சுட்டியா??” என்று வேறு மலரிடம் கேட்டு வைக்க, அவளுக்கு மயக்கம் வராத குறை தான்.
“இந்தா புள்ளை!! ஒரே நேரத்துல எம்புட்டு சாக்கு(ஷாக்) கொடுப்ப.. பிஞ்சு இதயம் எனக்கு.. இப்படியெல்லாம் பண்ணாத!!” என மலர் கூறவும்,
அதற்கும் புன்னகை எட்டிப்பார்த்தது வந்தனாவிடம்.
“சரிதான்!! அந்த லூசோட காத்து உன் பக்கம் ஒட்டிக்கிச்சு போல” என ரஞ்சித்தை எண்ணி மலர் கூற,
“உனக்கு ரொம்பத் தான் தைரியம் மலரு!! அவர் டி.எஸ்.பின்னு தெரிஞ்சும் அவரை இப்படி வச்சு செஞ்சிட்டு வந்திருக்க!!! பாவம் அவர் ஏதோ நல்லவரா இருக்கப்போய் உன்னை சும்மா விட்டாரு.. இல்லைனா லாடம் தான் நம்மளுக்கு” என வந்தனா கூறவும்,
“அட போ புள்ளை!! எங்க நீயே சொல்லு!! உனக்கு அந்த லூசைப் பார்க்க போலீஸ் மாதிரியா இருந்தது.. அவனும் அவன் பேச்சும்!!” என மலர் முகத்தை சுழித்தபடி கூற,
வந்தனாவிற்குமே அவனை எண்ணி சிரிப்பு தான் வந்தது.
“ஆனாலும் நீ அவரை ரொம்ப டேமேஜ் பண்ற மலர்!!”
“ம்கும்!! நம்ம பண்றதுக்கு முன்னாடி அதுவே செல்ஃப் டேமேஜ் பண்ணிக்கிது.. இதுல நாம எங்க பண்ண??” என மலர் அலுத்துக் கொள்ளவும்,
‘அதுவும் உண்மை தானே!!’ என எண்ணிய வந்தனா,
“என்ன மலர்?? அவரைப்பத்தி பேசுனாலே இவளோ டென்ஷன் ஆகுற?? அப்போ மோதல்ல ஆரம்பிச்சது காதல்ல போய் முடிய வாய்ப்பு ஜாஸ்தியோ???” என சில்மிஷமாக கேட்கவும்,
“மோதல்ல ஆரம்பிச்சு மர்டர்ல முடியாம இருந்தா சரித்தேன்!!” என நொடித்துக் கொண்டாள் மலர்.
அதைக் கேட்டு வந்தனா சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டே சிரித்து விட,
மலர் தோழியின் முகத்தையே வாஞ்சையாக பார்த்திருந்தாள்.
‘எத்தனை நாட்கள் ஆகிவிட்டது இவள் இப்படி சிரித்து!!’ என மலர் தோழியை நினைத்து ஆனந்தப்பட, இரஞ்சித்திற்கு மனதில் நன்றி கூறிக் கொண்டாள்.
அவன் மேல் இன்னும் சந்தேகம் இருந்தாலும், தன் தோழியின் சிரிப்புக்கு காரணமான அவன் மீது சிறிதாய் நல்ல அபிப்ராயம் ஒன்று மலருக்கு மலர்ந்தது.
“இப்படியே சிரிச்சிட்டே இரு புள்ளை!!! அப்போதான் மனசே நெறைஞ்சு கிடக்கு” என தன்னை மீறி மலர் சொல்லிவிட,
அடுத்த நொடி வந்தனாவின் சிரிப்பு அப்படியே வாடிவிட்டது.
இத்தனை நாளும் வினய் ஒருவனை மட்டும் நினைத்து, இத்தனை பேரை வருத்திவிட்டேனே என அவளுக்கு குற்றவுணர்வு தோன்ற,
“ஆத்தா மகமாயி!! தெரியாம சொல்லிட்டேன்.. உடனே நீ கண்டதையும் யோசிக்காத!! தயவு செஞ்சு உன் மூளையை மூலையில கெடக்கச் சொல்லு!!!” என எங்கே மறுபடியும் தன் கூட்டிற்குள் சுருண்டு கொள்வாளோ என பயந்து, கையெடுத்தே கும்பிட்டு விட,
வந்தனாவிடம் அப்படி ஒரு வெடிச்சிரிப்பு ஒன்று கிளம்பியது.
பேருந்தில் இருக்கும் சில பேர் கூட இவர்களை வித்தியாசமாகப் பார்த்திருக்க, அதுவெல்லாம் அவர்கள் கவனத்தில் பதியவில்லை.
அதன் பின் ஏதேதோ பேசி வீடு வரும் வரைக்கும் வந்தனாவின் புன்னகையை வாடாமல் பார்த்துக் கொண்டது அந்த மலர்!!!!
இந்த சில நாட்களாக தனக்குள் இறுகிப் போய் இருந்த வந்தனாவையே கண்டுவிட்ட இளவரசிக்கு இன்றைய வந்தனாவின் புன்னகை எவ்வளவு சந்தோஷத்தை அளித்தது என வார்த்தைகளில் வடித்து விட முடியாது.
“தனுக்குட்டி!!!” என ஆசையாய் அவளை நெட்டி முறித்த இளவரசி,
“இப்படியே சந்தோஷமா இருக்கணும் டா நீ” என மனதார வாழ்த்தினார்.
அது வந்தனாவிற்கு மேலும் குற்றவுணர்வைத் தர, இனியாவது தன் கவலைகளை தனக்குள் மட்டுமே புதைத்துக் கொண்டு இவர்களுக்காகவாவது சந்தோஷமாக இருப்பது போல் காட்டிக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டாள்.
அதன் பின் சற்று நேரம் சமையர்கட்டில் அமர்ந்து இளவரசியுடன் அவள் பேசிக் கொண்டிருக்க, அவரும் அவளுக்காக சூடாக உளுந்த வடைகளை போட்டுக் கொண்டே அவளிடம் கதையளந்து கொண்டிருந்தார்.
‘இப்படி அமர்ந்து பேசி எத்தனை நாட்கள் ஆகி விட்டது!!’ என இருவருக்கும் தோன்றினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அந்த நொடியை ரசித்து மகிழ்ந்திருந்தனர்.
அப்போது உள்ளே வந்த நாட்டரசன், இருவர் இருந்த கோலம் கண்டு,
“வாசக்கதவை இப்படி தொறந்து போட்டுட்டு ஆத்தாளும் மவளும் உள்ள உட்கார்ந்து கெக்க பெக்கன்னு சிரிச்சிட்டு இருங்க.. திருடன் வந்து எல்லாத்தையும் அள்ளிட்டு போகட்டும்” என அவர்கள் நிம்மதியாக இருப்பது பொறுக்காமல் கடுப்புடன் கத்தி விட,
“முதல்ல இந்தாளை எவனாச்சும் அள்ளிட்டு போனா தேவலை!! நம்ம சிரிச்சா பொறுக்காதே!! மூக்கு வேர்த்திடும்!!” என இளவரசி மெதுவாய் முணுமுணுக்க, வந்தனாவிற்கு சிரிப்பைக் கட்டுப்படுத்த பெரும்பாடாகிப் போனது.
“ஃபுல் ஃபார்ம்ல இருக்க ம்மா நீ!! நடத்து நடத்து!!” என அவள் வடைகள் நிரம்பிய தட்டை எடுத்துக் கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்று விட,
மெதுவாய் உள்ளே எட்டிப்பார்த்த நாட்டரசன், “ஏன் உளுந்து மட்டுந்தேன் வீட்டுல இருந்துச்சாக்கும்??” எனக் கேட்க,
அவருக்கு சர்க்கரை வியாதி இருப்பதால், கேப்பை வடை தான் இளவரசி எப்போதும் போட்டுத் தருவார். இன்று அதைக் காணோமே என ஏமாற்றத்துடன் பார்த்துவிட்டு தன் கெத்தை விட்டுக்கொடுக்காமல் அவர் இவ்வாறு கேட்பதை உணர்ந்து கொண்ட இளவரசிக்கு அவரை எண்ணி சிரிப்பு தான் வந்தது.
“இல்லையே!! அரிசி, துவரை, கடலை எல்லாம் தான் இருக்கு.. மளிகை சாமான் போன வாரம் தான் வாங்கி வச்சேன்” என வேண்டுமென்றே இடக்காக பதிலளித்து அவரை கடுப்பேற்ற,
மனைவியை முறைத்த நாட்டரசன், துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வரவேற்பறைக்கு சென்று விட,
சிரிப்புடன், வெங்காயம் பச்சை மிளகாய் எல்லாம் நறுக்கிப் போட்டு சூடாக அவருக்குப் பிடித்த கேப்பை வடையை சுட்டு எடுத்துக் கொண்டு சற்று நேரத்தில் அவரும் வெளியே சென்று, அவரின் முன்னால் இருந்த டீப்பாயில் வைத்து விட,
நாட்டரசனுக்கு உள்ளே குளிர்ந்து விட்டது.
‘அதான!! அரசி என்னைக்கும் மாற மாட்டா!! அன்னைக்கு ஏதோ கோபத்துல கத்திட்டா!! மத்தபடி நம்ம மேல இருக்க பாசமெல்லாம் கொறையலை’ என நினைத்து பூரித்துப் போன நாட்டரசன் வடைகளை வேகமாக காலி செய்தார்.
“ஒத்த வார்த்தை நீ சாப்பிட்டியான்னு கேக்குறாரான்னு பாரு!! ஏதோ காணாததைக் கண்ட மாதிரி லபக் லபக்குன்னு தின்னுகிட்டு இருக்காரு” என அவரை எண்ணி பொருமியபடி இளவரசி பார்த்திருக்க,
சரியாய் விநாயகத்திடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது.
வாயெல்லாம் பல்லாக அவர் அழைப்பை ஏற்க, மறுபுறம் ரஞ்சித் சொல்லியதன் பேரில் ஜாதகத்தில் நல்ல நேரம் இன்னும் கூடி வராததால் ஒரு ஆறு மாதம் கழித்து நிச்சயத்தை வைத்துக் கொள்வோம் என அவர் கூறிவிட, அடுத்த நொடியே அவரின் முகம் ஃப்யூஸ் போன பல்பாய் இருளடைந்துவிட்டது.
அவர் அதற்கு ஏதோ மறுத்துக் கூறவும், ரஞ்சித் அலைபேசியை வாங்கி தன் வார்த்தை ஜாலத்தை உபயோகித்து அவரை ஒருவழியாக சம்மதிக்க வைத்திருந்தவன், இறுதியாக இளவரசியிடம் ஒரு வார்த்தை சொல்லி விடுகிறேன் என்று கேட்க,
அவரும் மறுக்க முடியாமல் இளவரசியிடம் கைபேசியைக் கொடுத்தார்.
“ஹலோ அத்தை!!! இப்போ நான் சொல்றதைக் கேட்டு முகத்துல எந்த ஒரு ரியாக்ஷனையும் காட்டாதீங்க.. அப்பறம் எதிர்ல உட்கார்ந்து உங்களையே உத்து உத்து பார்த்திட்டு இருக்க நாட்டு மாமாக்கு சந்தேகம் வந்துடும்” என அவன் ஏதோ நேரில் இருந்து பார்ப்பது போல் கூற,
இளவரசிக்கு வந்த சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு, “சொல்லுங்க தம்பி!” என்றார்.
“இன்னைக்கு ஈவ்னிங் காலேஜ்ல உங்க பொண்ணை மீட் பண்ணி பேசினேன்.. அவங்களுக்கு இப்போ கல்யாணம் பண்ண விருப்பம் இல்லை போல.. அதான் ஜாதகம் சரியில்லைன்னு சொல்லி ஆறு மாசம் கழிச்சு வச்சுக்கலாம்ன்னு மாமாவை கரெக்ட் பண்ணி வச்சிருக்கேன்.. பட் வீட்டுல ஒரு ஆள் கிட்டயாச்சும் உண்மையை சொல்லணுமே.. அதான் உங்ககிட்ட சொல்லிட்டேன்..” என நல்லபிள்ளையாய் அவன் கூறவும், இளவரசிக்கு மனதே குளிர்ந்து விட்டது.
அதுவும் இன்றைய வந்தனாவின் மகிழ்ச்சிக்கும் மாற்றத்திற்கும் இவன் தான் காரணம் என சரியாய் நினைத்தவர், மகளுக்கு இவரைப் பிடித்திருக்கிறது என தவறாய் கணித்துவிட்டார்.
எனவே, வந்தனாவின் சம்மதத்தை கேட்கக் கூடத் தோன்றாமல், “சரி மாப்பிள்ளை!! நீங்க எப்போ சொல்றீங்களோ அப்போவே வச்சிடலாம்” எனத் தன் சம்மதத்தை தெரிவித்திருக்க,
நாட்டரசனுக்கு மனைவியின் சம்மதமே மீண்டும் பழைய நிமிர்வை கொண்டு வந்திருக்க, இடையில் நடந்த சம்பவங்களை மறந்து மீண்டும் பழைய நாட்டரசனாய் மாறியிருந்தார்.
***
“வினய்!!! எப்போ மேன் மும்பை வர நீ?? ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணப் போறோம்!! கம் சூட்!! வி ஆர் ரன்னிங் அவுட் ஆஃப் டைம்.. நெக்ஸ்ட் இயர் படம் ரிலீஸ் பண்ணியே ஆகணும்” என படபடவென பொரிந்தார் தற்போதைய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் விஸ்வஜித்.
“சாரி ஃபார் தி டிலே பாஸ்!!! கொஞ்சம் பெர்சனல் வொர்க்.. வில் பீ தேர் இன் டூ டேய்ஸ்” என வினய் தவறு செய்துவிட்ட குரலில் கூற,
அவன் எப்போதும் இப்படி செய்ததில்லை என்பதால் அவரும், “நோ மோர் டிலேய்ஸ் யங் மேன்!! கம் சூன்!!!” எனக் கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தார்.
அவர் அழைப்பைத் துண்டித்ததும் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான் வினய்.
எப்பொழுதும் தன் வேலையில் பிறர் குறை கூறும்படி ஒருபோதும் வைத்துக் கொள்ளாதவனுக்கு, இந்த சிறு செயல் கூட ஏதோ பெரும் பிழையை இழைத்துவிட்ட தோற்றத்தைக் கொடுத்தது.
இவ்வளவு குறுகிய காலத்தில், இந்த உயரத்திற்கு வர அவன் போட்ட உழைப்பும், மெனக்கெடல்களும் அபரிமிதமானது. அப்படி கஷ்டப்பட்டு அடைந்த இந்த இடத்தை, அவனிடமிருந்து தட்டிப்பறிக்க பல பேர் நேரம் பார்த்து காத்துக்கிடக்க, அதற்கான வாய்ப்பை வினய்யே வழங்குவதாகிப் போகும் இதற்கு மேல் தாமதித்தால்.
எனவே, விரைவில் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என நினைத்த வினய், சதீஷிற்கு அழைக்க,
“சொல்லு சகலை!!” என ஆர்ப்பாட்டமாய் ஆரம்பித்தான் அவன்.
இப்போது ப்ரோ காணாமல் போய், சகலை என அழைக்கும் அளவிற்கு இருவரும் நெருங்கியிருந்தனர்.
“நான் நேர்லயே போய் பொண்ணு கேட்றவா?? என்னால இதுக்கு மேல இப்படியே இருக்க முடியாது.. ” என வினய் பொறுமையற்ற குரலில் பேச,
“நாசமாப் போச்சு!! நீ காரியத்தையே கெடுத்துடுவ போல!! பொறுமை சாமி பொறுமை!! நாங்க அதுக்குத் தான் ஒரு பிளான் போட்டுட்டு இருக்கோம்.. பொறு!!! அறிவு மாமா பிளான் அப்ரூவ் பண்ணதும் நான் உனக்கு லைன்ல வரேன்!!” என அவன் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்திருந்தான்.
“இவனோட!!!” என கடுப்பான வினய்,
அதன்பின் அவனாக அழைக்கட்டும் என்றுவிட்டு, தன்னுடைய அடுத்தடுத்த நாட்களின் திட்டங்களை ஸ்டெல்லாவிடம் கேட்டறிந்து, எப்போதும் செய்து வரும் மேக்கப் வெபினாரை என்று நடத்தலாம் என அவன் கலந்தாலோசித்துக் கொண்டு இருக்க,
அரை மணி நேரத்தில் மீண்டும் சதீஷே அழைத்தான்.
“சொல்லுடா!!”
“என்னத்தை சொல்ல!! நீ என்னைக்கு மும்பை கிளம்புற??” எனk கேட்டான் சதீஷ்.
“டூ டேய்ஸ்ல” என்றான் வினய்.
“ஓகே அப்போ மண்டே நம்ம எல்லாரும் சங்கீயோட குலதெய்வம் கோவிலுக்குப் போறோம்.. அங்க போய் நாட்டு மாமாவை கரெக்ட் பண்றோம்.. இன்னும் ரெண்டே மாசத்துல பொண்ணைத் தூக்குறோம்” என சதீஷ் அடுக்கிக் கொண்டே போக,
“டேய் அடங்கு!! உங்க குலதெய்வ கோவிலுக்கு என்னைய எதுக்கு கூட்டிட்டு வரன்னு அதுக்கும் அவர் அங்க வந்து என் சட்டையை பிடிக்கணுமா?? வேற ஏதாவது உருப்படியா ஐடியா கொடு.. இல்லைனா என்னைய விடு.. நானே நேரா போய் பேசிக்கிறேன்” என வினய் இதற்கு உடன்பட மறுக்க,
“அதெல்லாம் யோசிக்கமயா சொல்லுவோம்.. உங்க அப்பாகிட்ட நேத்தே அறிவு மாமா பேசிட்டாங்க.. கெட்டதுலயும் ஒரு நல்லதா உங்க அம்மாவும் நாட்டு மாமாவும் ஒரே ஆளுங்க போல.. ரெண்டு பேருக்கும் ஒரே குலதெய்வம் தானாம்.. அதான் வேண்டுதல் பண்ண வந்திருக்கோம்ன்னு நீயும் அப்பாவும் கிளம்பி வாங்க.. மத்ததை எல்லாம் அங்க பார்த்துக்கலாம்” என முன்பே எல்லாம் பேசி முடிவெடுத்து விட்டதைப் போல் அவன் கூறவும்,
தனக்காக இவ்வளவு மெனக்கெடும் அவர்களை மீற முடியாமல், “என்னமோ சொல்ற!!! பார்ப்போம்.. ஆமா வதனா பேசுனாளா?? எப்படி இருக்கா???” என ஆர்வமாக வினய் கேட்கவும்,
“அடடா!! ரெண்டு நாள் முன்னாடி எப்படி பார்த்தியோ அப்படியே தான் இருப்பா சகலை.. நீ ஓவரா உருகாத!! அப்பறம் அவங்க அக்கா மாதிரி அவளும் உன் தலையில ஏறி உட்கார்ந்துட்டு உன்னை ஆட்டிப் படைக்கப் போறா!!” என சதீஷ் நக்கலாகக் கூறவும்,
“உங்க தலை மேல ஏறி உட்கார்ந்து ஆட்டிப் படைக்கிறேனா நான்?? எங்க இங்க வாங்க!! நிஜமாவே உங்க தலை மேல உட்காருறேன்” என அருகில் சங்கீதா கோபத்துடன் கத்துவது கேட்க,
வினய்யின் புன்னகை பெரிதாக விரிந்தது.
“ரெஸ்ட் இன் பீஸ் சகலை!!! என்ஜாய்!!” எனக் கூறி அழைப்பைத் துண்டித்து விட்டான் வினய்.
அப்போது கணேசனும் வேலை முடித்து அவனைக் காண உள்ளே வர, மகனின் முகத்தில் இருந்த புன்னகை அவருக்கு நிம்மதியைக் கொடுத்தது.
“என்ன வினய்!!! ஆல் ஓகே??” என கேட்டுக்கொண்டே அவனின் அருகில் அமர,
“இப்போதைக்கு எல்லாம் ஓகே தான் டாட்.. இனி தான் என்ன நடக்கப் போகுதோ தெரியலை” என புன்னகையுடன் கூறியவன், சதீஷின் திட்டத்தை தந்தையுடன் பகிர்ந்து கொள்ள,
“ஆமா வினய்!! நேத்து நைட் அறிவழகன் கால் பண்ணி பேசுனாரு.. அப்போதான் தெரியும்.. அகிலாவுக்கும் அந்த ஊர் சைட் தானே.. காலேஜ் படிக்க இங்க வரப்போ தான் நாங்க மீட் பண்ணி லவ் பண்ணோம்.. அப்போ ஒருமுறை சொல்லிருக்கா அவங்க குலதெய்வ கோவில் மருதூர் பக்கம் இருக்குன்னு.. நேத்து அறிவழகன் பேச்சுவாக்குல அங்க போகணும்னு சொன்னப்போ தான் எனக்கும் இது ஸ்டைரைக் ஆச்சு.. ” என அவரும் விளக்க,
“பட் டாட் அம்மா வர மாட்டாங்களே!!” என அவன் தயங்க,
“அவ எதுக்கு?? அவ குலதெய்வ கோவிலுக்கு நம்ம போனா சாமி என்ன உள்ள வராதன்னா சொல்லிடும்” என அவர் கிண்டல் போல் கேட்கவும்,
“டாட்!! அது மாமை நாம அவாய்ட் பண்ற மாதிரி ஒரு ஃபீல் அவங்களுக்கு கொடுத்திடும்.. ” என வினய் தயங்க,
“வினய்!! நீ எல்லாரோட ஆசைக்கும் வாழ முடியாது.. மத்தவங்களை ஹர்ட் பண்ணிறக் கூடாதுன்னு நீ பார்த்துட்டு இருந்தா கடைசியில நீ தான் ஹர்ட் ஆகி நிப்ப.. எல்லாருக்கும் நல்லவனா இருக்கணும்னா நம்ம லைஃப்ல லூசரா தான் இருப்போம்.. ஐ டோண்ட் வான்ட் யூ டூ பீ அ லூசர்!! நீ ஹேப்பியா இருக்கணும்.. அவளை நான் பார்த்துக்கிறேன்.. நீ அகியை விட்டிடு.. எல்லாத்தையும் யோசிச்சு ஸ்ட்ரெஸ் எடுத்துக்காத!!” என அவர் அறிவுரை கூறவும்,
அவனுக்கு அவர் கூற்றில் பெரிதாய் உடன்பாடு இல்லையென்றாலும், நிச்சயம் இருக்கும் பிரச்சனையில், இதைச் சொன்னால் அகிலா புது பிரச்சனையை கிளப்பக் கூடும் என்பதால் அவனும் மௌனம் காத்துவிட்டான்.
நடுவில் இருந்த ஒரு நாளும் விரைவாகச் செல்ல, திங்கட்கிழமை அதிகாலையே சென்னையில் இருந்து அறிவழகன் குடும்பத்துடன் வினய்யும் அவனின் தந்தையும் வயலூரை நோக்கி பயணத்தைத் தொடங்கினார்.
அவளைத் தேடி அவளின் ராஜகுமாரன் வந்து கொண்டிருப்பதை அறியாத வந்தனாவும் இளவரசியுடன் சேர்ந்து கோவிலுக்குத் தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
அந்தப் பிரச்சனைக்குப் பின் இருவருக்குமான முதல் சந்திப்பு சர்க்கரையாக இனிக்குமா?? இல்லை நாட்டரசனால் சச்சரவு ஏற்படுமா??? பொறுத்திருந்து பார்ப்போம்..
error: Content is protected !!