Skip to content
Post Views: 12,374
“வினய்!! உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.. ஃப்ரீயா??” என அவனிற்கு காலை காஃபி கொண்டு வந்த அகிலா கேட்க,
Advertisement
பாதி தூக்கத்தில் இருந்த வினய்யோ, தன் அன்னையின் கைபிடித்து தன்னருகே அமர்த்திக் கொண்டவன், மெத்தையில் விட்ட தூக்கத்தை தன் அன்னையின் மடியில் தொடர்ந்து கொண்டே, “என்ன மாம்.. பில்டப் எல்லாம் பலமா இருக்கு.. அப்போ கண்டிப்பா எனக்கு ஏதோ ஆப்பு ரெடி பண்ணிட்டிங்க போலயே” என்று தாயுடன் கேலி பேசினான்.
சரியாய் அதேநேரம் அங்கு ஆஜரான கணேசன், “கரெக்டா கண்டுபிடிச்சுட்ட டா மகனே!! நான் எப்படி கல்யாணம் என்னும் வாழ்நாள் சிறையில அடைபட்டு கஷ்டப்படுறேனோ உன்னையும் அதே மாதிரி ஒரு சிறைக்குள்ள தள்ள அரெஸ்ட் வாரண்ட் வாங்கி வச்சிருக்கா உங்க அம்மா” என அவர் தன் பாணியில் விஷயத்தைப் போட்டுடைத்தார்.
Advertisement
Advertisement
தன் கணவனை நன்றாகவே முறைத்த அகிலா, “உங்களை அப்பறம் பேசிக்கிறேன்” என்று மிரட்டிவிட்டு தன் மகனின் புறம் திரும்பியவர், “டேய் கண்ணா!! உனக்கும் வயசாகிட்டே போகுது.. நாங்களும் நீயா ஏதாவது பொண்ணை பார்த்து கூட்டிட்டு வருவன்னு இவ்ளோ நாள் வெய்ட் பண்ணோம்.. ஆனால் அது நடக்குற மாதிரி எனக்குத் தெரியலை.. அதான் நானே ஒரு பொண்ணைப் பார்த்துட்டேன் டா..ரொம்ப நல்ல பொண்ணு… உனக்கு கண்டிப்பா பிடிக்கும்.. நீ என்ன சொல்ற??” என அவனுடைய பதிலிற்காக ஆவலாய் அவனின் முகத்தையே நோக்கினார்.
இப்போது நன்றாகவே விழித்துவிட்ட வினய், “என்ன மாம்!! எனக்கு ஏதோ ஃபார்ட்டி பிளஸ் ஆன மாதிரி பில்டப் கொடுக்குறீங்க.. ஐ அம் ஜஸ்ட் 28” என்று அவன் சிரித்துக் கொண்டே சொல்ல,
Advertisement
அகிலாவின் முகம் சட்டென்று வாடிவிட்டது.
அவரின் சின்ன வாட்டத்தையும் பொறுக்காமல், “ஓகே ஃபைன் மாம்.. நான் நீங்க பார்த்திருக்க பொண்ணுகூட பேசிப்பார்த்துட்டு தான் என் முடிவை சொல்லுவேன்” என வினய் இறங்கி வர,
அடுத்த நொடியே அகிலாவின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்ப் போல் பிரகாசமாகிவிட்டது.
“தாராளமா பேசிப்பாரு வினய்.. கண்டிப்பா உனக்குப் பிடிக்கும்.. இன்னைக்கே உங்க மீட்டிங்க்கு ஏற்பாடு பண்றேன்” என்று அவர் துள்ளாத குறையாய்க் கூற,
அவரின் சந்தோஷம் கணேசனுக்கும் வினய்க்கும் பயத்தையே தந்தது.
“மாம்!! நான் இன்னும் ஓகே சொல்லலை.. பேசிப் பார்த்து எனக்குப் பிடிச்சா.. நோட் தி பாய்ண்ட் எனக்குப் பிடிச்சா மட்டும் தான் அடுத்து ப்ரோசீட் பண்ணனும்.. அதுக்குள்ள தேவையில்லாத கனவெல்லாம் காணாதீங்க” என்று அவன் முன் அறிவிப்பாய் சொல்லிவிட,
தன் தேர்வு நிச்சயம் மகனுக்குப் பிடிக்கும் என்பதில் அவ்வளவு உறுதியாய் இருந்த அகிலாவோ, “சரி டா.. சரி டா.. கண்டிப்பா உனக்குப் பிடிச்சா தான் கல்யாணம்.. நிச்சயம் உனக்கு பிடிக்கும்” என்று அவர் உறுதியாய் சொல்ல,
தோள்களைக் குலுக்கிக் கொண்ட வினய், “எனக்கு மார்னிங்க் ஒரு வேலை இருக்கு.. சோ ஈவ்னிங்க் ஏதாவது கஃபேல மீட் பண்ண வர சொல்லுங்க.. அண்ட் அந்த பொண்ணோட நம்பர் எனக்கு வாட்சப் பண்ணிருங்க.. ஓகே நான் கிளம்புறேன் மாம்” என்று அவர் மடியில் இருந்து அவன் எழுந்து கொள்ள,
“என்னடா பொண்ணோட பேர், போட்டோ இப்படி எதுவுமே கேட்காம போற?” என்று சற்று உள்ளே போய் விட்ட குரலில் அகிலா வினவவும்,
“மாம் அதான் ஈவ்னிங்க் நேர்லயே பார்க்கப் போறேனே அப்பறம் எதுக்கு போட்டோ??” என்றவன் பின்,
“உங்க ஆசையை எதுக்கு கெடுக்க?? வேணும்னா நம்பரோட சேர்த்து அந்த பொண்ணோட டீடெய்ல்ஸ் அண்ட் போட்டோ அனுப்பி வைங்க.. ஓகே வா.. இப்போ தள்ளுங்க எனக்கு லேட்டாச்சு” என்று கூறியவன் குளியலறைக்குள் சென்று மறைந்தான்.
சென்ற அவனையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த அகிலா தன் கணவனிடம், “என்னங்க இவன் இப்படி இருக்கான்?? இவன் வயசுப் பசங்கெல்லாம் எப்படி இருக்காங்க.. இவன் என்னடான்னா அவனும் பொண்ணு பார்க்க மாட்டேங்குறான்.. நம்ம பார்த்தாலும் இப்படி இன்ட்ரெஸ்ட்டே இல்லாம பதில் சொல்றான்.. ” என புலம்ப,
அவரின் தோளை ஆதரவாய் பற்றிக் கொண்ட கணசனோ, “அகி!! நீ ரொம்ப யோசிக்கிற.. அவனோட எண்ணமெல்லாம் இப்போதைக்கு அவன் கெரியர்ல தான் இருக்கு.. அதான் அவன் இப்படி பேசுறான்… இதே அவனுக்கான பொண்ணு அவனைத் தேடி வரப்போ டீன் ஏஜ் பையனை விட உன் பையன் அலும்பு பண்ணப்போறான் பாரு.. அவனுக்கான பொண்ணு இன்னைக்கு அவன் பார்க்கப்போற பொண்ணாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.. சோ மனசைப் போட்டு ரொம்ப அலட்டிக்காத.. அவன் வாழ்க்கை இது.. அவன் பார்த்துப்பான்.. நீ ஃப்ரீயா விடு.. நீ இப்படி சோகமா இருந்தா அவனுக்கு பிடிக்கலைனாலும் உனக்காக யோசிப்பான்.. அப்படி ஒரு சூழ்நிலையை அவனுக்கு நம்ம என்னைக்கும் கொடுக்கக் கூடாது.. நம்ம விருப்பத்தை நம்ம பிள்ளைங்க மேல திணிக்க ட்ரை பண்ணாத.. அவன் லைஃப் அவன் இஷ்டம் போல அமைச்சுக்கட்டும்” என்று நீண்டதொரு விளக்கம் கொடுக்க,
கணவரின் கூற்றில் இருந்த உண்மையை உணர்ந்து கொண்ட அகிலாவும், ‘கூடிய சீக்கிரம் என் பையனுக்கான தேவதையை அவன் கண்ணுல காட்டுப்பா!! அது இன்னைக்கா இருந்தா ரொம்ப சந்தோஷம்’ என்று வேண்டிக்கொண்டவர், மகனுக்கான காலை உணவை எடுத்து வைக்க அங்கிருந்து நகர்ந்தார்.
****
“சரிண்ணே!! விசேஷம் நல்லபடியா முடிஞ்சுது.. அப்ப நாங்க கிளம்புறோம்.. அடுத்த வாரம் ஊர் திருவிழாக்கு எல்லாரும் கண்டிப்பா வந்திருங்க” என்று தன் அண்ணன் குடும்பத்திடம் விடைபெற்று நாட்டரசன் கிளம்ப எத்தனிக்க,
“ஹேய்!! என்ன அரசு ஒரு நாள் கூட தங்காம கிளம்புற.. ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு போப்பா” என அறிவழகன் அவரைத் தடுக்க,
“இல்லைண்ணே அது சரிவராது.. ஊர்ல போட்டது போட்டபடி இருக்கு.. திருவிழா வேற வருது.. நாளைக்கு காப்பு வேற கட்டிருவாங்க.. அதுக்குள்ள போகணும்.. நாங்க கிளம்புறோம்” என்று தன் பிடியில் அவர் உறுதியாய் இருக்க,
அவரின் பிடிவாத குணத்தை அறிந்த அறிவழகனும் வேறு வழியின்றி, “சரிப்பா அப்பறம் உன் இஷ்டம்.. ஆனா வந்தனாவை மட்டுமாச்சும் இங்க விட்டுட்டு போயேன்.. அவளுக்கும் செமஸ்டர் லீவ் தான.. நாங்க திருவிழாக்கு வரும்போது அவளைக் கூட்டிட்டு வரோம்” என்று கேட்க,
நாட்டரசனோ, ‘இதெல்லாம் உன் வேலையா?’ என்பது போல் மகளைத் திரும்பி முறைத்துப் பார்த்தார்.
அதில் பயந்து போய் தாயின் பின் ஒளிந்து கொண்ட வந்தனா, “இல்லை பெரியப்பா.. நானும் கிளம்புறேன்” என தன் தந்தையின் பார்வையின் பொருள் உணர்ந்து அதற்கேற்றார் போல் அவள் பேச,
வந்தனாவை நினைத்து வருந்திய அறிவழகன், “அட சங்கீக்கும் நீ இருந்தா கொஞ்சம் பொழுது போகும்.. அவளும் கல்யாணம் வரைக்கும் வீட்டுல சும்மா தான இருப்பா.. ஒரு வாரம் தானம்மா இருந்துட்டு போ..” எனக் கூற,
அவரைத் தொடர்ந்து சந்தோஷும் சங்கீதாவும் தன் சித்தப்பாவிடம், “ப்ளீஸ் சித்தப்பா.. அவ இருக்கட்டுமே” என்று கெஞ்சினர்.
வேறுவழியின்றி அரை மனதாய் சம்மதித்த நாட்டரசன், கிளம்பும் முன் மகளைத் தனியாய் அழைத்து, ” நான் இங்க இல்லைன்னு நினைச்சு வெளிய சுத்துறது, ஓவரா வாய் பேசுறது, ஆட்டம் போடுறது இதெல்லாம் பண்ணக்கூடாது!! ஒழுங்கா பொம்பளைப் பிள்ளையா அடக்கம் ஒடுக்கமா இருக்கணும்.. புரிஞ்சிதா??” என அவர் அழுத்தத்துடன் கேட்க,
வந்தனாவின் தலை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை விட வேகமாய் ஆடியது.
“சரி நாங்க கிளம்புறோம்.. ஜாக்கிரதை!!” என அதைக் கூட அதட்டலுடனே சொன்னவர் அங்கிருந்து கிளம்பி காருக்குள் சென்று அமர,
வந்தனாவிடம் வந்த இளவரசி, “அந்த மனுஷன் கெடக்குறாரு.. நீ நல்லா ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வா!! இப்போ ஊர் சுத்தாம கெழவி ஆன பின்னாடியா சுத்த முடியும்.. சரியான கூறுகெட்ட மனுஷன்!! பார்த்து பத்திரமா இரு.. பெரியம்மாக்கு தொந்தரவு இல்லாம கூட மாட கொஞ்சம் வேலையும் செய்யனும் சரியா.. அம்மா கிளம்புறேன்.. வீட்டுக்கு போய்ட்டு போன் போடுறேன்.. பார்த்து இருந்துக்கோ டி வாயாடி” என அவளின் கன்னம் பற்றி கொஞ்சினார்.
அதற்குள் நாட்டரசனுக்கு மூக்கு வேர்த்து விட, ” உனக்கு வர எண்ணம் இருக்கா இல்லையா??” என்று உறும,
“வந்துட்டேன் வந்துட்டேன்” என்று குரல் கொடுத்த இளவரசியும் அனைவரிடமும் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினார்.
கார் கண்ணிலிருந்து மறையும் வரை அதையே பார்த்திருந்த வந்தனா, பின் சங்கீதாவிடம் திரும்பி, “ஹோய்!! நேத்து போட்ட டீலிங்க் நியாபகம் இருக்குல.. நீ கேட்ட மாதிரி உன் போனை நான் எடுத்துட்டு வந்து கொடுத்துட்டேன்.. இப்போ நான் கேட்ட மாதிரி என்னை இப்போவே தல படத்துக்கு கூட்டிட்டு போகணும் நீ” என்று அவள் ஆரம்பிக்க,
“அடியேய்!! நேத்து தானடி ஃபங்க்ஷன் முடிஞ்சது.. கொஞ்சமாச்சும் ரெஸ்ட் எடுக்க விடுடி.. இன்னைக்கு நல்லா தூங்கி எழுந்துட்டு நாளைக்கு போகலாம்” என்று கொட்டாவி விட்டுக்கொண்டே சங்கீதா உள்ளே போக,
“ஏய் சங்கி மங்கி!! வார்த்தை மாறக்கூடாது.. மரியாதையா என்னை இன்னைக்கே நீ கூட்டிட்டு போய் தான் ஆகணும்” என அவள் பின்னே வந்தனாவும் ஓட,
இருவரையும் கண்டு புன்னகைத்துக் கொண்ட மற்றவர்கள் தத்தம் வேலையை கவனிக்கச் சென்று விட்டனர்.
அரைமணி நேர போராட்டத்திற்குப் பின் ஒரு வழியாய் வந்தனா தான் நினைத்ததைப் போல சங்கீதாவை அழைத்துக் கொண்டு தற்சமயம் வெளிவந்த ‘தல அஜித்’ படத்திற்கு மேட்னி ஷோவிற்கு கிளம்பியிருந்தாள்.
அவர்களின் துணைக்கு சந்தோஷும் கிளம்ப, கடைசி நொடியில் அவனுக்கு அலுவலகத்தில் ஒரு முக்கியமான வேலை வந்துவிட்டதால், பெண்கள் இருவர் மட்டும் அந்த பிரபலமான மாலில் அமைந்திருந்த திரையரங்கிற்குச் சென்றனர்.
மிகவும் ரசித்து, உற்சாகத்துடன் தன்னை மறந்து ஒவ்வொரு காட்சிக்கும் விசிலடித்து ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த வந்தனாவைக் கண்டு சங்கீதாவிற்கு சிரிப்பாய் வந்தது.
‘மவளே!! இதை மட்டும் சித்தப்பா பார்த்தாரு நீ மர்கயா தான் டி’ என நினைத்துக் கொண்டவள், தங்கையை வம்பிழுக்க அவள் செய்யும் சேஷ்டைகளை எல்லாம் தன் போனில் பதிவு செய்து கொண்டாள்.
ஒருவழியாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என எல்லாம் முடிய, நான்கு மணிக்கு தியேட்டரை விட்டு வெளியேறியவர்கள், சற்று நேரம் அந்த வளாகத்தைச் சுற்றி வந்தனர்.
சற்று நேரத்திலே அதுவும் சலிப்புத் தட்ட, வெளியே ஒரு நல்ல காஃபி அருந்தி விட்டு வீட்டிற்கு கிளம்பலாம் என்று முடிவெடுத்தவர்கள், அந்த வளாகத்தின் மாடியில் அமைந்திருந்த ரெயின்போ கஃபேயினுள் நுழைந்து தங்களுக்கு வேண்டியதை வாங்கி கொறித்துக் கொண்டு இருந்தனர்.
சரியாக அதே நேரம் வினய் தன் வேலையெல்லாம் முடித்துக் கொண்டு, தன் அன்னை தனக்காக பார்த்து வைத்த பெண்ணை சந்திப்பதற்காக அவள் வரச் சொன்ன அந்த கஃபேயினுள் நுழைந்தான்.
அவனுக்காக காத்திருந்த அந்தப்பெண்ணும் அவனை தேட வைக்காமல் அவளாகவே முன்வந்து, “ஹாய் வினய்!! திஸ் இஸ் பிரியங்கா!!” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
“ஹலோ பிரியங்கா!! க்ளாட் டூ மீட் யூ” என்று அவள் நீட்டிய கரத்தைப் பற்றி குலுக்கியவன்,
“வாங்க உட்கார்ந்துட்டே பேசலாம்” என்று அங்கு காலியாக இருந்த இருக்கை ஒன்றில் சென்று அமர்ந்தான்.
“ஹாய் பிரியங்கா!! ஓபன்னா சொல்லனும்னா அம்மா சொன்னாங்கன்னு தான் இங்க வந்தேன்.. இவ்ளோ நாள் வரைக்கும் மேரேஜ் பத்தி நினைச்சதே இல்லை.. சோ ஐ ஹாவ் நோ ஐடியா.. ரெண்டு பேருக்கும் செட்டான வீ வில் ப்ரோசீட்.. இல்லைனா வீ கேன் பீ குட் ஃப்ரென்ட்ஸ்.. ஓகே வா??” என்று அவன் ஆரம்பத்திலே தன் நிலைப்பாட்டை அவளிற்கு புரிய வைத்துவிடும் நோக்கில் பேச,
அதில் மலர்ந்து புன்னகைத்த பிரியங்கா, “ஷ்யூர்.. உங்களுக்கு பிடிக்கலைனா உங்களை கடத்திட்டு போய் கல்யாணம் பண்ற ஐடியால்லாம் எனக்கு சுத்தமா இல்லை.. சோ நீங்க பயப்படாம பேசலாம்” என்று அவளும் இலகுவாகவே பதிலளித்தாள்.
உண்மையில் அவளின் இந்தப் பேச்சு வினய்க்கு பிடித்திருந்தது.
‘பரவாயில்லை!! கொஞ்சம் ஜாலி டைப் தான் போல’ என்று நினைத்துக் கொண்டவன் அதே புன்னகையுடன் தன்னைப்பற்றி அவளிடம் கூறத்தொடங்கினான்.
“அட என்ன பாஸ் நீங்க… இந்தியாஸ் லீடிங்க் மேக்கப் ஆர்டிஸ்ட்டை தெரியாம இருக்குமா?? அதான் ரெண்டு நேஷனல் அவார்ட் வாங்கி எல்லாருக்கும் உங்க புகழை பரப்பிட்டிங்களே.. அப்பறம் எதுக்கு தனியா இன்ட்ரோ வேற” என்று அவள் கேலியாகக் கேட்க,
வினய்க்கு சட்டென்று நேற்று , “ஏதேய்!! ஆம்பளை மேக்கப் மேனா??” என வந்தனா அலறியது நினைவில் வந்து போக, அவன் இன்னும் நன்றாகவே சிரித்துக் கொண்டு, “அப்படி எல்லாம் இல்லைங்க.. நான் என்ன ஹீரோவா?? பட்டி தொட்டியெல்லாம் தெரிய?? ஜஸ்ட் அந்த ஹீரோ ஹீரோயினுக்கு மேக்கப் போடுறவன்.. நீங்க சொல்ற மாதிரி எல்லாருக்கும் என்னைத் தெரிஞ்சிருக்கும்னு அவசியம் இல்லை.. சோ என்னைப் பற்றி நானே சொல்லிக்கிறது பெட்டர் இல்லையா?” என்று கூறினான்.
“அது சரி!! ” என்றவள் தன்னைப்பற்றியும் அவனிடம் பகிர்ந்து கொண்டாள்.
இதற்கிடையில் தங்களுக்கான உணவை ஆர்டர் செய்து விட்டு, சில பொதுவான விஷயங்களோடு சேர்த்து தங்களின் விருப்பு வெறுப்புகள் பற்றி பகிர்ந்து கொண்டனர்.
இருவரின் ரசனைகளும், சிந்தனைகளும் கிட்டத்தட்ட ஒத்துப்போவதாகவே இருக்க, வினய்க்கு அவளை மறுப்பதற்கு பெரிதாய் காரணம் ஒன்றும் இருப்பதாக தோன்றவில்லை.
அவனின் மனதை படித்ததைப் போல், “என்ன பாஸ்.. ரிஜெக்ட் பண்ண ரீசன் இல்லைன்னு யோசிக்குறீங்களா??” என்று அவள் கிண்டல் போல் கேட்க,
“ஹாஹா.. சைக்காட்ரிஸ்ட் கிட்ட பொய் சொல்ல முடியுமா??” என்று அவள் கூற்றை ஒப்புக்கொள்வதைப் போல் அவன் பேச,
“உங்களுக்கு என்னைப் பார்த்தா என்ன தோணுது??” என்று சம்பந்தம் இல்லாமல் பிரியங்கா கேட்க,
“பர்டன்??” என வினய் புரியாமல் முழித்தான்.
“உங்களுக்கு என்னைப் பார்க்கும் போது என்ன மனசுல தோணுது.. ஒரு டூ மினிட்ஸ் பார்த்துட்டு சொல்லுங்க” என அவள் மீண்டும் கேட்க,
அவள் கேட்டதற்கிணங்க அவளை நன்றாக பார்த்தான்.
பார்த்ததும் மனதைக் கவரும் அழகான முகம், பெரிதான கண்கள், அளவான மூக்கு என அவன் நினைத்துக் கொண்டே வந்தவன்,
“உங்க பெரிய கண்ணுக்கு ஐலைனர் இன்னும் போல்டா போட்டா நல்லா இருக்கும்.. அண்ட் இந்த டிரெஸ்க்கு இந்த லிப் ஷேட் மேட்ச் ஆகலை.. பேபி பிங்க் வில் சூட்ஸ் யூ தி பெஸ்ட்” என அவனுக்குள் இருந்த ஒப்பனைக் கலைஞன் வெளியே வர,
“சோ உங்களுக்கு என்னைப் பார்த்தா இதான் தோணுது??” என அவள் அளவான புன்னகையுடன் கேட்க,
“யா.. உங்களைன்னு இல்லை எனக்கு எந்த பொண்ணைப் பார்த்தாலுமே இவங்க இப்படி மேக்கப் பண்ணா நல்லாருக்கும், இந்த ஹேர் ஸ்டைல்ல இன்னும் பெஸ்ட்டா இருக்கும் அப்படி தான் தோணும்.. இதுல என்ன தப்பு இருக்கு.. இதான என்னோட ப்ரோஃபஷன்” எனக் கேட்டவனுக்கு சத்தியமாய் அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்று புரியவில்லை.
“அப்போ இங்க இருக்க எந்த பொண்ணைப் பார்த்தாலும் உங்களுக்கு இதான் தோணும் இல்லையா??” என அவள் அங்கிருந்த பெண்களை சுட்டிக்காண்பித்துக் கேட்க,
“அஃப்கோர்ஸ்” என்று கூறியவனின் விழிகள் அங்கிருந்த ஒவ்வொரு பெண்ணின் மீதும் பட்டு மீண்டது.
ஒவ்வொரு பெண்ணை பார்க்கும் போதும், ‘காஜல் இப்படி இருக்கனும், லிப்ஸ்டிக் போல்டா இருக்கக் கூடாது’ இப்படி ஒவ்வொன்றாய் கூறிக் கொண்டு வந்தவனின் கண்கள் ஓரிடத்தில் நிலைகுத்தி நின்றது.
அங்கே, தன் பணியை முடித்துக் கொண்டு ஓய்வெடுக்கப் போகும் கதிரவனின் ரேகைகள் பெண்ணவளின் பட்டு மேனியில் பட்டுத் தெறித்து தங்கமாய் ஜொலிக்க, காற்றில் அலைபாயும் கார்கூந்தலைக் கண்டு இவன் உள்ளம் கற்றிலாடும் காற்றாடியாய் தள்ளாட, ஆளை மயக்கும் அந்த கன்னக் குழிச் சிரிப்புக்குள் இவன் மனம் விரும்பியே விழப் பார்க்க, படபடக்கும் இமைகள் இவன் நெஞ்சை தடதடக்க வைக்க, அந்தக் கருவிழிகளிரண்டும் காந்தமாய் இவனை அவள் பக்கம் ஈர்க்க, அனைத்துக்கும் உச்சம் வைத்தாற் போல் அந்த உதட்டோர மச்சம் இவனை கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் அவள் பக்கம் சாய்த்திருந்தது.
“மார்வலஸ்” என்று அவனின் அதரங்கள் அவனின் அனுமதி இல்லாமலே முணுமுணுக்க,
அவன் பார்வை சென்ற திக்கை நோக்கிய பிரியங்காவின் கண்களிலும் அந்தப்பெண் விழுந்தாள்.
வினய் இவ்வளவு நேரம் விமர்சித்து வந்த பெண்களைக் காட்டிலும் அவள் ஒன்றும் பேரழகியெல்லாம் இல்லாத போதும், வினயின் கண்களுக்கு அவள் மட்டுமே அழகாய்த் தெரிவதற்கான காரணத்தை கண நேரத்தில் கண்டுகொண்டாள் அந்த மனதைப் படிக்கும் மருத்துவர்.
“ஓருத்தரைக் கல்யாணம் பண்ண, ‘இவங்களை மறுக்க ஒரு ரீசன் கூட இல்லையே’ மட்டும் போதாது, ‘காரணமே இல்லாம ஒருத்தரைப் பிடிக்கணும்.. ஏன் இவங்களை நமக்கு இவ்ளோ பிடிக்குதுன்னு அதுக்கான காரணத்தை தேடுனா அது காதலா இருக்கணும்’ அதுதான் ஒரு கல்யாணத்துக்கு தேவை பாஸ்.. உங்களுக்கு என்னை பார்த்ததும் பிடிக்கணும்னுலாம் நான் நினைக்கலை.. ஆனா காலம் ஃபுல்லா பார்த்துக்கிட்டே இருந்தாலும் சலிப்படையாம இருக்கணும்னு தான் நினைச்சேன்.. நம்ம டேஸ்ட் வேணும்னா ஒத்துப்போகலாம் பட் நம்ம லைஃப் என்னைக்கும் ஒத்துவராது மிஸ்டர் வினய்” என்று பிரியங்கா இவ்வளவு நேரம் அவனை அவதானித்ததில் உண்டான தன் கருத்துக்களை தெரிவிக்க,
வினய்யிடம் அதற்கான எதிர்வினை எதுவும் இல்லை.
அவள் பேசுவதை செவிமடுத்தாலும், பார்வை என்னவோ இன்னும் அந்தப் பெண்ணின் மீது தான் இருந்தது.
அதைக் கண்டுகொண்ட பிரியங்கா ஒரு புன்னகையுடன், “உங்களுக்கான தேவதையை நீங்க கண்டுபிடிச்சுட்டீங்கன்னு நம்புறேன்.. இனி உங்களுக்குள்ள கரடியா நான் இருக்க விரும்பலை.. குட் பை மிஸ்டர் வினய்.. கல்யாணத்துக்கு மறக்காம கூப்பிடுங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து விடைபெற்றுக் கிளம்பியிருந்தாள்.
செல்லும் அவளை தடுத்து முறையாக பேசி வழியனுப்ப வேண்டும் என்று தோன்றினாலும் எங்கே பார்வையைத் திருப்பினால் அந்த கண நேரத்தில் அந்த தேவதைப்பெண் மறைந்து விடுவாளோ என்று அஞ்சிய அவன் மனம், அவளை விட்டு பார்வையை அகற்றவிடவில்லை.
முதன் முறையாக அவன் மனம் அங்கே தடுமாறி மொத்தமாய் தடம் புரண்ட தருணம் அது.
பெண்களையே பார்க்காதவன் இல்லை அவன். தினமும் இவளைப் போல் பல நூறு அழகிகளை கடந்து வந்தாலும் யாரும் அவனை இந்த அளவு பாதித்ததில்லை.
துடைத்து வைத்ததைப் போல் துளியும் ஒப்பனை இல்லாமலே அவனின் கண்களின் வழி பார்க்கும் போது பேரழகியாய் தெரிந்தாள் அவள் – வந்தனா.
நேற்று அவளைப் பார்த்த போது கூட, நிச்சயம் அவனுக்குத் தெரியவில்லை, அவளிடம் இப்படி தலைகுப்பற விழப்போகிறோம் என்று.
நிச்சயம் நேற்றே அவள் தன் நெஞ்சில் சிறு சலனத்தை ஏற்படுத்திச் சென்றிருக்க வேண்டும் என்று அவன் ஸ்திரமாய் நம்பினான்.
பூக்கள் எப்போது எந்த நொடி மலரும் என்று கணிக்க முடியாததைப் போல், காதல் எப்போது யார் மீது வரும் என்பதையும் யாராலும் அறுதியிட்டு கூற முடியாது.
காதலை அனுபவிக்க மட்டும் தான் வேண்டும், ஆராயக்கூடாது என்று எவரோ சொன்னது வினய்யின் மூளைக்குள் ஓட, அவன் முழுமனதாய் அந்த நொடியை, தன் காதலை உணர்ந்து கொண்ட நொடியை ஆழ்ந்து அனுபவித்தான்.
மனதிற்குள் இதுபோல் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் அணிவகுத்தாலும், அவனின் கண்கள் என்னவோ இன்னும் அவளைத்தான் மொய்த்துக் கொண்டிருந்தது.
இவனின் பார்வை அம்புகள் வந்தனாவை ஊசியாய்த் தாக்க, அவளும் இவனைத் திரும்பி பார்த்திருந்தாள்.
வினய்யின் பார்வையின் அர்த்தத்தை அந்தப் பாவையால் உணர்ந்து கொள்ள முடியாமல் போனாலும், அந்தப் பார்வை அவளை ஏதோ செய்வதை மட்டும் உணர்ந்து கொண்டவளுக்கு அங்கு இருக்கவே அவஸ்தையாக இருந்தது.
“சங்கீ!! வா கிளம்பலாம்” என தன் தமக்கையின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் வந்தனா எழுந்து சென்று விட,
“எருமை பில் பே பண்ணாம எங்கடி கிளம்புற.. நில்லு!!” என்று சங்கீதா பதிலுக்கு கத்தியதை காதில் கூட வாங்காமல் வாசல் வரை சென்றவளின் மனம் அவளின் அனுமதி இன்றியே திரும்பிப் பார்க்க,
அவள் பார்வைக்காகவே காத்திருந்ததைப் போல் குறும்பாய் புன்னகைத்த வினய், அதோடு நில்லாமல் அவளைப் பார்த்து கண்ணடித்து வைக்க,
அதில் வந்தனாவின் இதயம் தாறுமாறாய் துடித்தது.
அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வேகமாய் வெளியில் சென்று விட்டவளுக்கு, இன்னும் அவனின் பார்வை அவளை பின்தொடர்வதைப் போலே இருக்க, பயத்தில் மூச்சு முட்டியது.
முயன்று சங்கீதாவிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்தவள், யாருடனும் பேசாமல் தன் அறைக்குள் முடங்கி விட்டாள்.
இங்கு வினய்யோ அவள் சென்றபின், “யாஹூ!!” என்று துள்ளிக் குதித்தவன், அங்கிருந்தவர்கள் தன்னை வித்தியாசமாகப் பார்ப்பதை பொருட்படுத்தாது, “ஐ அம் கமிங்க் ஃபார் யூ மை பிரின்செஸ்” என்று கூறி மந்தகாசப் புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பினான்.
இன்று வினய்க்கு மலர்ந்த காதல் என்று வந்தனாவின் வாழ்விலும் பூத்து வாசம் வீசுமோ??? பொறுத்திருந்து பார்ப்போம்..
error: Content is protected !!