Skip to content
Post Views: 1,152
விக்ரம் பார்த்தசாரதி 09
திங்கட்கிழமை காலை.
‘ரூபா க்ரூப்ஸ்’ என மின்னிக் கொண்டிருக்கும் தங்க எழுத்துக்கள் எனது வெற்றிகளை பறைசாற்றிக் கொண்டு நின்றிருந்த, எனது மும்பை அலுவலகத்தின் முன்பு எனது கார் வந்து நிற்க, கம்பீரமாக இறங்கி நின்றேன் நான். மெலிதான மழைத் தூறல்கள் என்னை வரவேற்றன.
ஒன்றிரண்டு மழைத் தூறல்களை எனது முகத்தில் வாங்கிக் கொண்டேன் .
Advertisement
அங்கே அந்த குட்டி ஆராதனாவை பரிசு மழையில் நனைய வைத்து விட்டுத்தான் வந்திருந்தேன். இந்த இரண்டு நாட்களில் ஒரு அழகான புத்துணர்ச்சி எனக்குள்ளே.
எனது அலுவலகத்தினுள் நான் நுழைய மெலிதான குழலோசை என்னை வரவேற்றது. இது அம்மா செய்த ஏற்பாடு. ஆயிரம் மனக் குழப்பங்கள் இருந்தாலும் இது ஒரு வித அமைதியை கொடுக்கும் என்பது அவரது எண்ணம்.
எனது அறையில் வந்து எனது சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டேன். சில நிமிடங்களில் ஷேர்னி வந்து விடுவாள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
Advertisement
மற்ற வேலைகளில் எனது கவனம் இருந்தாலும் கண்காணிப்பு காமெராக்கள் காட்டும் காட்சிகள் அவ்வப்போது எனது கண்களை தொட்டுக் கொண்டுதான் இருந்தன.
Advertisement
கொஞ்ச நேரம் கடக்க எங்கள் அலுவலகதிற்கு வந்து நின்றாள் அவள். அந்த ஷேர்னி. அவளைப் பார்த்ததும் இன்னமுமாக நிமிர்ந்து அமர்ந்து கொண்டேன்.
லாபியில் வந்து அமர்ந்து கொண்டாள் அவள். நடையிலும், உடல் மொழியிலும் ஒரு சிறு நிமிர்வும் நிறைய தன்னபிக்கையும். அங்கே அமர்ந்தவளின் இதழ்கள் புன்னகைத்ததை கூட கவனித்தேன் நான்.
“பட் ஆரா…” இரண்டு நாட்களுக்கு முன்னால் ஷர்மா சொன்னதின் அர்த்தம் என்ன?
Advertisement
நேற்றே அந்தக் கேள்விக்கான பதிலை நான் அறிய முற்பட, அது ஒன்றும் அத்தனை கடினமாக இருக்கவில்லை. அவள் வேலையை ராஜினாமா செய்து விட்டாள் எனும் செய்தி லால் மூலம் அடுத்த சில நிமிடங்களில் என்னை வந்து அடைந்து இருந்தது.
இப்போது இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டேன்.
‘வேலையை ராஜினாமா செய்து இருக்கிறாள். எனக்காக வேலை செய்ய முடியாது என்பதற்காகவே வேலையை ராஜினாமா செய்து இருக்கிறாள் அவள்’
மூடிய கண்களுக்குள் குட்டி ஆராதனா வந்து சிரித்து விட்டுப் போக சட்டென கண்களை திறந்தேன் நான். எனது உள்ளுணர்வு என்ன சொல்லியது என்பதை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.
இப்போது எனது பார்வை மறுபடியும் கண்காணிப்பு கேமரா காட்சிகளுக்கு செல்ல இப்போது ஷ்யாம் வந்து சேர்ந்து இருந்தான் அங்கே . சிறிது நேரத்தில் ஷர்மா, லால் இருவரும் வந்து விட மூவரும் கான்ஃபரன்ஸ் ஹாலை நோக்கி நடந்தார்கள்.
அங்கே எனது குழுவினர் இவர்களுக்காக காத்திருக்கிறார்கள். நான் இங்கே நாற்காலியில் ஆயாசமாக சாய்ந்து கொண்டு என்னை தயார் செய்து கொண்டேன்.
சில நிமிடங்கள் கழித்து கான்ஃபரன்ஸ் அறையை அடைந்தேன். நான் அறையின் கதவை திறக்க அங்கிருந்த அனைவரும் எனக்காக எழுந்து நிற்க, அவள் மட்டும் அமர்ந்தே இருந்தாள்.
சின்ன சைகையால் அனைவரையும் அமர செய்து விட்டு உள்ளே நுழைந்தேன்.
நான் அவளை கடந்து நடந்த போது கூட, என்னுடைய இருப்பை அவள் உணர்ந்த போது கூட எனது பக்கம் திரும்பவில்லை அவள்.
வேண்டுமென்றே மடிக்கணினியினுள் தலையை புதைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் என்றொரு எண்ணம் எனக்கு. .
பொதுவாக பெண்களின் உடைகளை நான் கவனிப்பதில்லை. ஆனால் இன்று கவனிக்க வைத்தது அவளது நட்சத்திரங்கள் ஆகாங்கே தெளித்த அடர் நீல புடவை.
ஏதோ இரவு நேர வானத்தை புடவையாக மாற்றி அணிந்ததைப் போல இருந்தது. இரவு நேரத்து வானம் ஒரு வகையில் எனது நண்பன்தான். அதனாலேயே என்னிடம் சிறிதானதொரு புன்னகை.
இப்போது அவளை ஆழமாக ஒரு முறை பார்த்தேன். பின்னர் சுற்றி உள்ளவர்களை பார்த்து விட்டு அவளை இன்னொரு முறை பார்த்தேன்.
கிட்டத் தட்ட அன்று அர்ஜுனன் குருஷேத்திரத்தில் நின்றதைப் போலவே அமர்ந்து இருக்கிறாள் என்று தோன்றியது எனக்கு.
தன்னவர்களையே எதிர்த்துக் கொண்டு அவள் அமர்ந்து இருப்பதற்கு காரணம் என்ன? தன்மானமா? நட்பா? வீண் பிடிவாதமா? பதில் கிடைக்கவில்லை எனக்கு.
எனது இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டு மிஸ்டர் ஷர்மா” என்று நான் துவங்க, ஷர்மா டீல் பற்றிய அறிமுகத்தை விளக்கினார்.
ஷர்மா நான் எனது ஷரத்துகளை மாற்றிக் கொள்ள முடியாது என்று உறுதியாக சொல்ல,
“எனக்கு ஓகே ஷர்மா சர்” என்றாள் பளிச்சென. ஒரு முறை எனது புருவங்கள் ஏறி இறங்கின. எனது மனதிற்குள் முன்பு எப்போதும் இல்லாத ஒரு அமைதி இன்று குடியிருந்தது.
“உங்க எல்லா கண்டிஷன்ஸும் எங்களுக்கு ஒகே, எங்களோட ரெண்டு கண்டிஷன்ஸ்க்கு நீங்க ஓகே சொன்னா….” ஒரு தொடர் புள்ளியுடன் அவள் நிறுத்த, கூடிய புருவங்களுடன் அவளைப் பார்த்தேன்.
‘புதிதாக எதுவும் சொல்லப் போகிறாளா என்ன?’
“என்ன கண்டிஷன்ஸ்?” கேட்டும் விட்டேன் நான்.
“ரெண்டு வருஷம் விக்ரம் சைலென்ட் இன்வெஸ்டரா இருக்கணும். ஷ்யாம் ரெண்டு வருஷத்திலே பிசினஸை லாபகரமா நடத்திட்டா தொழிலை விரிவாக்கம் செய்ய விக்ரம் கேபிடல் கொடுக்கணும். அப்படி கொடுக்க முடியாத பட்சத்திலே வேறே இன்வெஸ்டரஸ் உள்ளே கொண்டு வர ஷ்யாமுக்கு உரிமை கொடுக்கணும்” அவள் மடமடவென முடிக்க,
“ஒரு வேளை ஷ்யாம் லாபம் காட்டலைன்னா?” மெலிதான புன்னகை என்னிடம்.
“நீங்க சொன்னது போலவே ஷ்யாமோட பங்குகள் உங்ககிட்டே வரும் மிஸ்டர் விக்ரம்” என்றாள் தெள்ளத் தெளிவாக
நான் அன்று நினைத்ததுதான். இரண்டு வருடங்களில் ஷ்யாம் தனது தொழிலில் ஜெயித்து விடுவான் என்பது ஷேர்னியின் நம்பிக்கை அவன் தோற்று விடுவான் என்பது எனது கணக்கு.
அவள் சொல்வதைக் கூட மாற்ற வேண்டும் என்று நான் நினைத்தால் ஏதாவது சொல்லி அவளை அலைகழிக்க முடியும். ஆனால் செய்யவில்லை நான்.
‘ஏன் அப்படி?’ எனக்கே புரியவில்லை.
அவள் வேலையை ராஜினாமா செய்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையா? அல்லது ‘இது உங்க சாக்லேட்தானே. அதனாலே உங்களுக்கு பெரிய பங்கு. ஹெல்ப் பண்ண எனக்கு சின்ன பங்கு’ என்று சொன்ன குட்டி ஆராதனாவின் வார்த்தைகளில் சற்று இளகி இருந்தேனா? எனக்கே தெரியவில்லை.
அந்த நிமிடத்தில் எழுந்த ஒரு வேகத்தில் அந்த விஷ்ணுப் பிரசாதை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கூட தூர வைத்திருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
“அக்ரீட். அவ்வளவுதானா இன்னும் வேறே ஏதாவது இருக்கா?” சட்டென சொல்லியும் விட்டேன் நான்.
“உங்கள் லீகல் அட்வைசரோட பேசிட்டு கூட உங்க முடிவை சொல்லலாம் விக்ரம் ” என்று அவள் சொல்ல சட்டென உயர்ந்தது எனது கரம்.
“விக்ரம் சொன்னால் சொன்னது தான்” என்றேன் ஒவ்வொரு வார்த்தையாக. “கெட் த டீல் ரெடி”
“ஆர் யூ ஷ்யூர் விக்ரம்?” என்றாள் என்னைப் பார்த்து.
“விக்ரம் சொன்னால் சொன்னது தான்” என்றேன் மறுபடியும் அழுத்தமாக.
“சர் நம் வேலை சுலபமாக முடிந்து விட்டது. இட்ஸ் எ ப்ளஷர்” இது அந்த ஷேர்னி.
ஒப்பந்தங்கள் அப்போதே கையெழுத்தாவதாக முடிவு செய்யப்பட ஷ்யாம் அவளது தலையசைப்பில் இயங்கிக் கொண்டிருந்தான்.
நான் அந்த ஷேர்னியை பார்வையால் ஊடுருவினேன்.
‘மிக அழகாக இருவருக்கும் சாதகமாக இந்த ஒப்பந்தத்தை முடித்து வைத்திருக்கிறாள். பாராட்டி விடவா அவளை?
சரி பாராட்டி விடுவோம். ஆனால் பாராட்டுவதில் கூட விக்ரமின் பாணி வித்தியாசமாகவே இருக்கும்!’
எல்லாருக்குமாக மதிய உணவு அங்கே தயாராக இருந்தது. கூட்டம் முடிந்த பிறகு அங்கே ஷர்மாவுடன் பேசிக் கொண்டிருந்த ஆராதனாவின் அருகில் சென்று நின்றேன் நான்.
“வாங்க ஷர்மா சர். சாப்பிடலாம்” என்றேன் நான் ஹிந்தியில். அவர் என்னுடன் வர எத்தினிக்க
“சரி நான் கிளம்பறேன்” என ஆராதனா நழுவப் பார்க்க
“நீங்களும் சாப்பிட்டுட்டுதான் போறீங்க” ஒரு ஆணையாக சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.
சில நிமிடங்கள் கடக்க, கையில் சாப்பாட்டு தட்டுடன் என்னுடன் பேசிக் கொண்டிருந்தான் ஷ்யாம். அவனுக்குள் அளவிட முடியாத சந்தோஷம். நானும் அவனிடம் பேசி சிரித்துக் கொண்டே திரும்ப, அங்கே சற்றே தூரத்தில், அங்கே இருந்த உணவுகளை ஒவ்வொன்றாக தட்டில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் ஆராதனா.
ஷ்யாமிடம் இருந்து விடைப் பெற்றுக் கொண்டு, மெல்ல அவளருகில் வந்து நின்றேன் .நிமிர்ந்து என்னைப் பார்த்தாள் ஷேர்னி
“ஸோ மேடம் ரிசைன் பண்ணிட்டீங்க போலிருக்கு?” என்றேன் நிறுத்தி நிதானமாக.
எனது கண்களை நேருக்கு நேராக பார்த்தாள் அவள். “எஸ்” பட்டென வந்தது அவளது வார்த்தை.
“ஓ ரியலி…” என்றவன் சில நொடிகள் பேசவில்லை. பின்னர் அங்கே இருந்த இருக்கையை அவளுக்கு சுட்டினேன்.
“ப்ளீஸ் டேக் யுவர் சீட்” என்றபடியே அவளது எதிரில் அமர்ந்தேன். அவளும் மறுக்காமல் அமர்ந்தாள்.
“ஆர் யூ கம்ஃபர்டபிள்?” என்றேன் மெதுவாக
“எஸ் எஸ் வொய் நாட்?” என்றாள் அவள்.
“எஸ். வொய் நாட்? இது என்னோட ஏரியா. இங்கே என்னை சுற்றி இருக்கிறவங்க எப்பவுமே கம்ஃபர்டபிளா தான் உணருவாங்க” என்றேன் நிதானமாக. “திஸ் இஸ் விக்ரம்ஸ் கிங்டம்”
மெலிதான தலை அசைப்புடன் உணவை சுவைக்க ஆரம்பித்து இருந்தாள் அவள். நானும் சாப்பிட ஆரம்பித்தேன்.
எனது மனம் ஏதேதோ யோசனைகளில் சுழல, எனது உள்ளுணர்வு எதையோ சொல்ல விழைய, அதையும் மீறி நான் ஆராதனாவிடம் அதை கேட்கத் தான் செய்தேன்.
“மிஸ் ஆராதனா உங்களுக்கு நம்ம கிங்டம்லே ஒரு கம்ஃபர்டபிள் பிளேஸ் அர்ரேஞ் பண்ணிடுவோமா?” இதுதான் நான் அவளுக்கு கொடுக்கும் மிகப் பெரிய பாராட்டு என்று தோன்றியது எனக்கு.
அடுத்த நொடி படீரென வந்தது பதில்.
“ஐ ஹேவ் மை ஓன் சேர்ஸ் மிஸ்டர் விக்ரம். ஐ அம் ஆக்சுவலி நாட் இன் நீட் ஆஃப் யுவர் சீட்ஸ், ஆர் த்ரோன்ஸ் ராதர்”
‘நீ சிம்மாசனமே கொடுத்தாலும் எனக்கு தேவை இல்லை. என்னிடம் எனது நாற்காலிகள் இருக்கின்றன’ முடித்து விட்டு எழுந்தே சென்று விட்டாள் அவள்.
அவளுடைய எனக்கான பதில்கள் அன்று முதல் இன்று வரை எப்போதுமே “நோ” வாகவே இருந்திருக்கின்றனவோ?
‘இந்த விக்ரம் கிட்டே நோ சொன்னா எப்பவும் நோ தான்’ இது அடிக்கடி நான் சொல்வதுதான்.
ஆனால் அன்று முதல் இன்று வரை ஆராதனாவுக்கு முன்னால் மட்டும் எனது இது போன்ற சபதங்கள் எதுவுமே வென்றதே இல்லை.
என்னுடன் பணி புரிவதற்கு நோ சொன்னவள், பின்னாளில் எனது சட்ட ஆலோசகர் என்று ஆனவுடன் மொத்தமாக மகிழ்ந்து போனவனும் நான்தான், அதன் பிறகு இப்போது நிச்சியதார்த்தத்தில் எனது பழைய காதலை கீறிப் பார்த்து விளையாடியவளை, என்னை மறுத்து விட்டு சென்றவளை, மறுபடியும் விமான நிலையத்தில் சந்திக்க தேடிச் சென்றவனும் நான்தான்.
கீதையை வரிக்கு வரி புரிந்து கொள்ளும் அவளுக்கு எனது மனது புரியாதா என்பதுதான் இந்த விக்ரமின் ஆதங்கம்.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
எனக்குள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் எனது காதல் என்ற மெய்ப்பொருளை உணர்ந்து கொள்வாளா ஆராதனா ?
error: Content is protected !!