Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

79. M and V - வான் தழுவிடிலோ வெண்ணிலவே

வான் தழுவிடிலோ வெண்ணிலவே 13

ஆராதனா 09

“திஸ் இஸ் ஃபைனல் போர்டிங் கால் பார் ஃப்ளைட் டு நியூயார்க்”

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த நியூயார்க் விமானத்தின் பிஸ்னஸ் க்ளாஸில் அமர்ந்திருந்தேன்.

ஷ்யாம் என்னிடம் கேட்காமலே பிஸ்னஸ் க்ளாஸ் புக் செய்திருந்தான்.



Advertisement

பக்கத்துக்கு சீட் எல்லாம் காலியாகவே இருந்தன. ஷ்யாமிற்கு நன்றி சொல்லிக் கொண்டேன். எனக்கு கொஞ்சம் தனிமை தேவை இப்போது.

விக்ரமை சென்னை ஏர்போர்டில் பார்ப்பேன் என்று நான் நினைத்துப் பார்க்கவே இல்லை.

விக்ரமைப் பார்த்ததும் ஒரு நிமிடம் என்னவெல்லாம் நினைத்து விட்டேன் நான்.

Advertisement

ஷ்யாமிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு  சர்ப்ரைஸாக காத்துக் கொண்டிருக்கிறானோ என்று நினைத்தேன்.

Advertisement

‘நானும் உன்னுடன் யூஎஸ் வருகிறேன் ஆரா’ என்று சொல்வானோ என்ற எதிர்பார்ப்பை ஒரே நொடியில் தகர்த்து விட்டானே.

“ஷி இஸ் மை லீகல் அட்வைசர்” என்றான் அந்த லாயரிடம்.

நான் வெறும் லீகல் அட்வைசர் மட்டும் தானா?

Advertisement

அவன் அணிவித்த மோதிரம் இன்னும் என் விரலில் மின்னிக் கொண்டிருக்கிறது.

மூன்று வருடங்களுக்கு முன் இதே போல நியூயார்க் செல்லும் ப்ளைட்டில் நான் ஒருவேளை சென்றிருந்தால் ….

இவ்வளவும் நடந்திருக்காது தானே.

எட்வர்ட் அப்போது எனக்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டிருந்த போது வாக்கிங் சென்ற அப்பாவை பைக் ஒன்று மோதிவிட அவர் தடுக்கி விழுந்து கால் எலும்பு ப்ராக்ச்சர் ஆகிவிட்டிருந்தது.

சிக்ஸ் வீக்ஸ் பெட் ரெஸ்ட் என்றுவிட்டார் டாக்டர்.

அப்பாவை அம்மாவை தனியாக விட்டுச் செல்ல என்னால் முடியவில்லை.

எப்படியும் ஒரு நாள் சென்னையில் தான் செட்டில் ஆக நினைத்திருந்தேன். என் ப்ரீலான்ஸ் ஜர்னியை ஸ்டார்ட் செய்தேன்.

ஃபேமிலி கேஸ், டாகுமன்ட் வெரிஃபிகேஷன்  என்று சின்ன சின்ன கேசஸ்.

மூன்று மாதங்கள் கடந்திருந்தன.

டீல்ஸ், மெர்ஜர்ஸ் என்று பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்த நான் மிகவும் சோர்ந்து போன போது அடுத்தடுத்து ஒரு மெர்ஜர், ஒரு டை அப். சிறிய அளவில் என்றாலும் வொர்க் கிடைத்த போது மிகவும் சந்தோஷமானது.

அது விக்ரமின் வேலை என்று எனக்குத் தற்செயலாக  தெரிந்த போது அவனை நேராக எதிர்கொள்ள முடிவு செய்து  அவனது சென்னை ஆபீசிற்கு முதன்முதலாக சென்றேன்.

“மேம் அப்பாயின்ட்மன்ட் இருக்கா” ரிசப்ஷனில் இருந்த பெண் கேட்டாள்.

“ஆராதனா வாசுதேவன்” என் பெயரைச் சொல்லி விக்ரமை கான்டேக்ட் செய்யச் சொன்னேன்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் பாலா என்னைத் தேடி ரிசப்ஷனுக்கு வந்தார்.

என்னை அவரே விக்ரமின் அறைக்கு அழைத்துச் சென்றார்.

நான் உள்ளே சென்ற போது கண்ணாடி ஜன்னல் வழியே மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

“விக்ரம்” அவனை அழைக்க மெல்லத் திரும்பியவன் முகத்தில் சிறு கர்வம்.

‘உன்னை வரவழைத்து விட்டேன் பார் என்ற கர்வமா’ என்று எனக்குத்  தெரியவில்லை.

சேரைக் காட்டி ‘உட்கார்’ என்பதாக சைகை செய்தான்.

“தாங்க்ஸ் விக்ரம்” என்றேன்.

என்னை சற்று ஆச்சரியமாகப் பார்த்தான்.

“எதற்கு தாங்க்ஸ்” அவன் கேட்க லேசாகப் புன்னகைத்தேன்.

“என்னை ரிகமன்ட் செய்ததற்கு”

ஆச்சரியம் இன்னும் அதிகமாக விரிந்தது அவன் முகத்தில்.

‘உன் சிபாரிசு ஒன்றும் எனக்குத் தேவையில்லை’ என்று சண்டை போட வந்திருப்பேன் என்று நினைத்தானா.

“யூ ஸீ உங்கள் எதிராளியாக இருந்த போதும் என்னை ரிகமன்ட் செய்ததற்கு தாங்க்ஸ்” நான் சொல்லவும் மெதுவாக வந்து அவன் சேரில் அமர்ந்தான்.

“பட் நீ எனக்கு சாதகமாக முடித்துக் கொடுத்தாய்” சிறு புன்னகை அவனிடத்தில்.

“இருவருக்கும் சாதகமாக இருக்கும் படி பார்த்துக் கொண்டேன்”

“என் சாம்ராஜ்யத்தில் இப்போவும் உனக்கு இடம் உண்டு” சற்று சாய்ந்து கொண்டு சொன்னான்.

“ஐ ஹாவ் மை சேர்ஸ். இப்போ நீங்க ரிகம்ன்ட் செய்திருப்பதால் இன்னும் உறுதியாக இருக்கிறது”  மெல்லச்  சிரித்தேன்.

அவன் முகத்தில் யோசனை.  எதுவும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்தான்.

“ப்ரீலான்ஸ் செய்கிறேன். ஏதேனும் டீல் முடித்துக் கொடுக்க வேண்டுமென்றால்  சொல்லுங்க. வில் டூ” என்றேன்.

என்னைப் பார்த்து புருவங்களை உயர்த்தியவன் புரிந்து கொண்டது போலப்  புன்னகைத்தான்.

“வெல்” என்று அவன் நிமிரவும் அவனிடமிருந்து விடைபெற்றேன்.

பே ரோலில் அவன் நிறுவனத்தில் வேலை செய்யும் எம்ப்ளாயியாக இல்லாமல் ப்ரீலான்ஸ் லீகல் அட்வைசர் என்று பெயரளவில் தான் இருந்தேன்.

அனைத்து டீலிங்க்கையும் என்னையே செய்ய வைத்தான். கிட்டதட்ட முழு நேர வேலையாகவே ஆகிப் போனது.

மூன்று வருடங்களாக  அவனது லீகல் அட்வைசராக  இருந்தேன். அது ப்ரோஃபஷனல் ரிலேஷன்ஷிப்பாக இருந்த போதும் அவனிடம் ஒரு ஈர்ப்பு  ஓர்  மூலையில் இருந்ததென்னவோ  உண்மை.

மூன்று வருடங்களில் விக்ரமின் ஒவ்வொரு பிஸ்னஸ் அசைவுகளும்  எனக்கு  அத்துபடி.  மற்றவர்களிடம் அவன் க்ரோசிங்  டைகராக இருந்தான். ஆனால் என்னிடம்  ஹி வாஸ் எ ஜென்டில்மேன்.

வைஷாலியோடு அவனது ஹிஸ்டரி எனக்கு அரவிந்தை சந்திக்கும் வரை தெரியாது.

 என்னுடைய காலேஜ் மேட் கேட்டுக் கொண்டதால் தான் அரவிந்தின் டிவோர்ஸ் கேஸை எடுத்துக் கொள்ள ஒத்துக் கொண்டேன்.

திருமணமான ஒரே வாரத்தில் இன்னொருவரைத் தான் பிடிக்கும் என பொது இடத்தில்  வைத்து அவர் மனைவி சொல்லியதையும் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் பிரிந்து இருப்பதாகவும் சொன்னார்.

அப்போது கூட ‘யார் அந்த வில்லன்’ என்று தான் நினைத்தேன். அது விக்ரமாக இருக்கக் கூடும் என்று நான் நினைத்துப் பார்க்கவும் இல்லை.

அரவிந்தையும் அவர் மனைவியும் நான் ஹோட்டலில் சந்திக்கச் சென்ற போது “எனக்கு அரவிந்தை தான் பிடிக்கும்” என்று வைஷாலி, அரவிந்தின் மனைவி  விக்ரமிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அப்போது தான் இவர்கள் கதையில் வில்லன் விக்ரம்  என்று எனக்குத் தெரிய வந்தது.

ஆனால் அந்த சமயத்தில் விக்ரம் மிகவும் சந்தோஷமாக அவர்களை விஷ் செய்தான்.

ஸ்வாதி விஷயத்தில் கூட “அவளோட அண்ணனா அவளுக்கு ஏதாவது செய்யணும் ஆரா. அர்ஜூன் வேற அவ வேற இல்லைன்னு சொல்ற மாதிரி” என்றானே.

இதெல்லாம் தானே அவனிடம் என்னை ஈர்த்தது.

அம்மாவும் , அப்பாவும்  பல வரன்களை காட்டிய போதும் எனக்கு மேரேஜில்  இண்டரஸ்ட் இல்லாமல் இருந்தது. ஆனால்  பார்த்தசாரதி அங்கிள்  திடீரென  விக்ரமை மேரேஜ் செய்து கொள்ள விருப்பமா என என்னைக் கேட்டதும் விக்ரம் என்ன சொல்ல போகிறான் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்குள் எழுந்தது எனக்கே வியப்பு தான்.

விக்ரம் சரி  என்று சொல்லிவிட  ஓர் சிலிர்ப்பு என்னுள் ஓடிய அந்தக் கணம் இப்போதும் அதே சிலிர்ப்பைத்  தருகிறது.

அங்கிளும் அப்பாவும் பிரண்ட்ஸ் என்பதால் அப்பாவிடம் பேசச் சொன்னேன். மெதுவாக பேசுவார்கள் என்று நினைத்தால் இரண்டே வாரங்களில் நிச்சயதார்த்தம் என்று விட்டார்கள்.

உண்மையில் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான். இவ்வளவு சீக்கிரம் என்கேஜ்மன்ட்.

‘கோர்ட்ஷிப் பீரியட் . தட்ஸ் மோஸ்ட் பியூட்டிஃபுல் பீரியட் ஆரா’  சோனாவிடம் சொன்ன போது எனக்கு அட்வைஸ் செய்தாள்.

ஷ்யாம் சோனாவிடம் ப்ரொபோஸ் செய்து மூன்று வருடங்கள் இருக்குமா.

அவன் ஸ்போர்ட்ஸ் சேனலை வெற்றிகரமாக நடத்தி விக்ரமிடமே பாராட்டும் பெற்று நான் தான் இருவர் சார்பிலும் புதிய டீல் முடித்துக் கொடுத்தேன்.

இப்போது சோனா அவள் பிஸ்னசில்  கவனம் செலுத்துவதால் இன்னும் மேரேஜ் பற்றி சிந்தனையே இல்லமால் இருக்கின்றனர்.

“எங்களைப் போல இவ்வளவு நாட்கள் எல்லாம் மேரேஜ்க்கு எடுத்துக் கொள்ளாதே ஆரா.  சிக்ஸ் மந்த்ஸ் போதும்” என்றாள் அவள்.

ஆறு மாதங்கள் போதுமா என்றிருந்தது எனக்கு. நிச்சயத்திற்கு  முன் ஸ்வாதி, அர்ஜூன் பிரன்ட்ஷிப் மாட்ச் போது  தான் விக்ரமை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அன்று மிகவும் வித்தியாசமான விக்ரமைப் பார்த்தேன் நான்.

அது போன்ற தருணங்களை இன்னும் நிறைய எதிர்பார்த்தேன். அன்று மொத்த ஃபேமிலியும் கூட இருந்தார்கள்.

பிஸ்னஸ் இல்லாமல் டீல்ஸ்  இல்லாமல் சோனா சொல்வாளே ‘ஸ்வீட் நத்திங்க்ஸ்’  அது என்னவென்று தெரிந்து கொள்ள எனக்குள்ளும் மெல்லிய ஆர்வம்.

எல்லாவற்றையும் தகர்த்து விட்டானே !

விக்ரமுடன் நடந்த வாக்குவாதத்தை மீண்டும் மீண்டும்  பல முறை அனலைஸ் செய்து பார்த்து விட்டேன்.

எனக்கு சத்தியமாகப் புரியவே இல்லை.

“உன் மீது காதல்” என்றான். உண்மையாக என் மீது காதல் என்றால் ‘யூஎஸ் போய் வா. வந்து மேரேஜ் டேட் ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம். உனக்கு ஹெல்ப் எதுவும் தேவையா’ என்று தானே சொல்லியிருக்க வேண்டும்.

எவ்வளவு கோபமாக உரத்த குரலில் சத்தம் போட்டு என்னிடம் கத்தினான்.

என்னிடம் யாருமே அப்படிப்  பேசியதில்லை.

“நீ ரொம்ப சாது பட்டு, உன் அப்பாவைக் கொண்டு இருக்க நீ ” அம்மா அடிக்கடி சொல்வார்.

“அம்மா நான் லாயர். ஷேர்னி என்று எனக்குப்  பேர் உண்டு. என்னைப் போய் சாது என்று சொல்றீங்களே” சிரிப்பேன் நான்.

“சாது என்று தான் சொன்னேன். வீக் என்று சொல்லவில்லை” என்பார்.

அம்மாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே விக்ரம் மேல் நல்ல எண்ணம் இல்லையோ என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது.

பார்த்தசாரதி அங்கிள் அப்பாவிடம் பேச, அப்பாவிற்கு ஒரே சந்தோஷம்.

“அதெப்படி  ஒன்றுமே விசாரிக்காம சரி சரி என்கிறீங்க” அம்மா சட்டென்று எல்லாம் ஒகே சொல்லிவிடவில்லை.

“பார்த்தி பசங்க ரெண்டு பேரையும் குணத்தில் குறை சொல்ல முடியாது சுமி” அப்பா அம்மாவிற்கு எடுத்துச் சொன்னார்.

“அதில்லை. ருக்மணி அந்தப் பையனுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து  பொத்தி பொத்தி வளர்த்தாளாம்” அம்மா இதை ஒரு  காரணமாகச்  சொல்லவும் எனக்குச் சிரிப்பு தான் வந்தது.

“என்னமா இது. குழந்தையில் எல்லோரும் செல்லமாகத்  தான் வளர்ப்பாங்க”

“அதில்லை பட்டு. அன்று நானும் அப்பாவும் அவங்க வீட்டுக்குப்  போன போது கூட அந்தப் பையனை அப்படி விழுந்து விழுந்து கவனிச்சிட்டு இருந்தாங்க ருக்மணி. நாளைக்கு அதையே உன்கிட்ட எதிர்ப்பார்க்கக்  கூடாது இல்லையா”

“அம்மா  நானும் தான் உங்களிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்கிறேன். அப்பா இப்போதும் காலையில் என்னை எழுப்பி பெட் காபி கொடுக்கிறார் . நான் எவ்வளவு பெரிய லாயர் என்றாலும் உங்களுக்கு பட்டு தான்னு நீங்க தானே சொல்வீங்க” நான் சொல்லியும் அம்மாவின் முகத்தில் தெளிவு இல்லை.

“நான் விக்ரமின் லீகல் அட்வைசர். மூன்று வருடங்களாக சேர்ந்து வொர்க் பண்றோம். ஐ நோ ஹிம் மா.  ஐ கேன்  ஹாண்டில்” நான் நம்பிக்கையோடு சொல்லவும் கொஞ்சம் நிம்மதியானார்.

நான் தான் சரியாக ஹாண்டில் செய்யவில்லையோ!

ஒரு டீலில் கூட எதிர்தரப்பினருக்கும் நியாயம் செய்ய வேண்டும் என்று நினைப்பவள் நான்.

திஸ் இஸ் அவர் லைஃப். விக்ரம் பேசியதில் ஏதேனும் நியாயம் இருக்கக் கூடுமோ என்று யோசித்து யோசித்து ஓய்ந்து போய்விட்டேன்.

அவன் கோபமாக பேசியது, சத்தமாக கத்தியதைக் கூட ஒதுக்கி விடுவேன். பட் என் மேல் நம்பிக்கை இல்லாமல் யாருக்கும் தெரியாம மேரேஜ் ரிஜிஸ்டர் செய்து விட்டு போ என்று சொன்னது எந்த விதத்தில் சரி.

அவன் பிஸ்னசில் அடுத்து என்ன மூவ் எடுப்பான் என்று துல்லியமாக கணித்து விடக் கூடியவள் நான். ஆனால் இந்த விக்ரம் ஹி இஸ் நியூ டு மீ.

என்னை அறியாமல் கண்ணீர் வழிந்தது. துடைக்கக்  கூட மனமில்லாமல் அமர்ந்திருந்த போது என் போனில் மெசேஜ் நோடிஃபிகேஷன் ஒலிக்க யார் என்று பார்த்தேன்.

எட்வர்ட்!

எப்படித் தெரிந்தது அவனுக்கு. நான் இப்படி ஒரு தவிப்பில் இருக்கிறேன் என்று எப்படி உணர்ந்து கொண்டான்.

எப்போதுமே அவன் இப்படித் தான்.

சிக்கலான டீல் ஹான்டில் செய்யும் போது குழப்பமாக இருக்கும். அவனுக்கு கால் செய்வோமா என்று நினைப்பதற்குள் அவனே கால் செய்து விடுவான்.

‘டெலிபதி பெல்லா. லைக் ஏன்ஷியன்ட் டைம்ஸ்’ என்பான்.

சிறுவயதில் இருந்தே பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் என்று எனக்கு யாரும் அமையவில்லை. நிறைய ஊர் மாறியதாலும் இருக்கலாம்.

“உங்க பொண்ணு இந்த வயசிலே இவ்வளவு மெச்யூர்டா பேசறா” மற்ற குழந்தைகளின் பேரன்ட்ஸ் மற்றும்  என் டீச்சர்ஸ் அம்மாவிடம் சொன்னதுண்டு.

எனக்கு கிடைத்த முதல் பெஸ்ட் ஃப்ரண்ட் எட்வர்ட் தான். என்னுடைய analytical, intellectual mind ஐ புரிந்து கொண்டவன்.

நாங்கள் இருவருமே கார்பரேட் லாயர்ஸ் என்பதால் மட்டுமில்லை. எங்களுடைய தாட் ப்ராசஸ் ஒருமித்து இருந்தது.

நாங்களும் நிறைய விவாதித்து இருக்கிறோம். பட் தோஸ் ஆர் ஹெல்தி ஆர்கியூமன்ட்ஸ்.

நான் கொஞ்சம் சீரியஸ் டைப். என் ப்ரபஷனுக்கு அது தேவையும் கூட. ஆனால் எட்வர்ட் மிகவும் காஷுவலாக ஜாலியாக இருப்பான்.

நிமிட நேரத்தில் யாரையுமே சிரிக்க வைத்து விடுவான். என்கேஜ்மன்ட் போது ஒருத்தரை விடவில்லை.

ருக்மணி ஆன்டி கூட அவன் விட்ட கதைகளைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் வொர்க் என்று வரும் போது சீரியஸாகி விடுவான்.

எட்வர்ட்க்கு மட்டும் தான் தெரியும். விக்ரமும் நானும் என்கேஜ்மன்ட்டை முறித்துக் கொண்டோம் என்று.

நானா முறித்தேன். நோ என்றால் எப்போதும் நோ என்றது அவன் தானே!

ஆனால் அம்மா, அப்பா, சோனா யாரிடமும் சொல்லவில்லை நான்.

லண்டனில் ட்ரான்சிட்டில் எட்வர்ட் இருந்த போது  போன் செய்து என்னுடைய ப்ளான்ஸ் என்ன என்று கேட்டான்.

“இனி தான் புக் செய்ய வேண்டும். ஷ்யாம் வில் டூ”என்றேன்.

“ரிட்டர்ன் புக் செய்யாதே. ஸ்பென்ட் சம் டைம் ஹியர். விக்ரமையும் வரச் சொல்லேன். வில் பி எ ரொமண்டிக்  ட்ரிப் ஆல்சோ” அவன் சொல்லவும் உடைந்து போனேன் நான்.

“பெல்லா வாட் ஹாபன்ட்” பதறிவிட்டான். என்னால் எட்வர்டிடம் மறைக்க முடியவில்லை.

“வி கால்ட் ஆஃப்”  நிச்சயத்தை நானும் விக்ரமும் முறித்துக் கொண்டோம்  என்றேன்.

“வாட் கம் அகைன்” அவன் குரலில் திகைப்பு.

வீட்டில், வெளியில் யாருக்குமே தெரியாது என்றேன். என்ன சொல்வது, எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை என்று புலம்பினேன்.

“நீ யாரிடமும் ஒன்றும் சொல்ல வேண்டாம். கம் ஹியர், ஸ்டே ஹியர். லெட் ஹிம் டீல்” என்றான் கறாராக.

இரண்டு வாரங்களில் நான் திரும்பி வரும் போது எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்து விட்டிருக்கும்.

அதை எப்படி எதிர்கொள்ளப்  போகிறேன் என்று நினைக்கும்  போதே மலைப்பாக இருக்கிறது.

 ‘ஃப்ளைட் போர்ட் செய்து விட்டாயா. உனக்கு அவ்வளவு பிடிக்காது என்றாலும் காமெடி மூவீஸ் பார்’ இன்னொரு மெசேஜ் டிங் என பாப் செய்தது.

அவனுக்கு பதில் அனுப்பி விட்டு கண்மூடி இருக்கையில் சாய்ந்தேன்.

நோ! இனி நான் அழப் போவதில்லை. விக்ரமைப் பற்றி நினைக்கப் போவதில்லை. உறுதி கொண்டேன்.

ப்ளைட் நியூயார்க்கில் லான்ட் ஆகும் அனௌன்ஸ்மன்ட் வரவும் தான் கிட்டத்தட்ட பதினான்கு மணி நேரம் அயர்ந்து தூங்கயிருக்கிறேன்  என்று புரிந்தது.

ஃப்ளைட் லான்ட் ஆனதும் மொபைலை ஆன் செய்து விக்ரம் ஏதும் மெசேஜ் அனுப்பியிருக்கானா என்று ஆர்வமாகப் பார்த்தது என் மனது.

அதற்குள் என் உறுதி இப்படி பறந்து போகும் என்று என்னாலேயே  நம்ப முடியவில்லை.

எட்வர்ட் தான் ‘வெய்டிங் ஃபார் யூ’ என்று மெசேஜ் அனுப்பியிருந்தான்.

“வெல்கம் டு நியூயார்க் மை டியர் பெல்லா” அழகிய ரோஸ் போக்கேவுடன் என்னை வரவேற்றான்.

இன்னும் காற்றில் சில்னஸ் இருக்கவே ஷால் ஒன்றை போர்த்திக் கொண்டேன்.

பளிச்சென்று சூரியன் மின்ன அதன் கதிர்கள் என் விரலில் இருந்த வைரத்தில் பட்டுத் தெறிக்க எட்வர்ட் பார்த்து விட்டான்.

“என்ன இது பெல்லா” என்றான் கொஞ்சம் அழுத்தமாக.

“என்ன எட்வர்ட்”

“திஸ்… இன்னும் ஏன் நீ இதைப் போட்டுக் கொண்டிருக்கிறாய். கழற்றி விடு” அவன் சொல்லவும் என்னுள் சிறு அதிர்வு.

“அது வந்து எட்வர்ட்…” முதல் முறையாக எட்வர்டிடம் பதில் சொல்லத் தடுமாறினேன்.

“பெல்லா. உன்னை நீயே வருத்திக் கொள்ளாதே. ப்ளீஸ். ரிமூவ் இட்” கெஞ்சலாகச்  சொன்னான்.

அதில் என் மேல் அக்கறை கொட்டிக் கிடந்தது.

அவன் இருந்த இக்கட்டான சூழ்நிலையிலும் எனக்கு என்கேஜ்மன்ட் என்றதும் எதைப் பற்றியும் யோசிக்காமல் என் சந்தோஷத்தில் பங்கு கொள்ள பறந்து வந்தவன்.

இன்று நான் துவண்டு இருக்கும் நிலையில்  என்னைத் தாங்கி நிற்பவன்.

மெதுவாக என் விரலில் இருந்து மோதிரத்தைக் கழற்றினேன்.

“அண்ணா அவராகவே உங்களுக்கு செலக்ட் பண்ணார் அண்ணி. எங்க யார்கிட்டேயும் காட்டலை. நீங்க தான் பர்ஸ்ட்  பார்க்கணும்னு சொல்லிட்டார்” ஸ்வாதி சொன்னது என் நினைவில் வந்து போனது.

மோதிரத்தை எனது கைப்பையில் போட்டு விட்டு எட்வர்டை பார்த்து புன்னகைத்தேன் நான்.

“தயா தத்தம் இதம் புஷ்பம் ஹ்ருதி வின்யஸ்ய ஸாதரம்I

க்ருஷ்ணோ திஷ்டதி ராதாயா: ஸ்மரன்னேவ முஹூர் முஹூ :II”

( ராதை தனக்கு அளித்த அந்த ஒற்றை மலரை மிகுந்த காதலோடு தன் மார்போடு அணைத்துக் கொள்கிறான் கிருஷ்ணன். காலங்கள் கடந்தாலும் அந்த மலரின் வாசனையில் அவளது நினைவிலேயே திளைத்து மெய்மறந்த நிலையில் அவன் நிற்கிறான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!