Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

79. M and V - வான் தழுவிடிலோ வெண்ணிலவே

வான் தழுவிடிலோ வெண்ணிலவே 15 (02)

“பெல்லா, மாம் ஒரு லேடீஸ் பார்ட்டி வைத்திருக்காங்க. உன்னை இன்வைட் செய்வாங்க. இட்ஸ் நெக்ஸ்ட் சாட்டர்டே” என்று போன் செய்தான்.

அவன் போன் செய்த சிறிது நேரத்தில் ஒலிவியாவிடமிருந்து மெசேஜ் வந்தது. கண்டிப்பாக வருகிறேன் என்று பதில் அனுப்பினேன்.

இரண்டு வாரம் தானே இருக்கப் போகிறோம் என்று தான் நியூயார்க் கிளம்பி வந்தேன். இங்கேயே இன்னும் கொஞ்ச காலம் தங்க முடிவு செய்தததும் அம்மா அப்பா வரும் போது அவர்களிடத்தில் கொஞ்சம் ட்ரஸ் எல்லாம் கொடுத்துவிட சொன்னேன் சோனாவிடம்.

அதில் என்ன அனுப்பியிருந்தாள் என்று நான் பார்க்கக் கூட இல்லை.



Advertisement

சூட்கேஸ் திறந்து பார்க்க பார்மல்ஸ், கேசுவல் கூடவே நான்கைந்து பார்ட்டி உடைகளும் இருக்கவே நிம்மதியானது.

மன்ஹடனின் பாஷ் ஏரியாவில் டவுன்ஹவுஸ் என்று அழைக்கப்படும் அவரது பெரிய வீட்டில் பார்ட்டி கொடுத்தார் ஒலிவியா. அவர் பிரபலமான சிவில் லாயர் என்பதால் நியூயார்க்கின் ஹை சொசைட்டி குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பலரும் வந்திருந்தனர்.

சோனாவின் அம்மா மும்பையில் கொடுத்த கிட்டி பார்ட்டிகளுக்கு சோனாவுடன் ஒன்றிரண்டு முறை சென்றிருக்கிறேன். அதுவே ஏதோ ஃபேஷன் உலகத்தில் குதித்து போல இருக்கும். இங்கே வேற லெவலில் இருந்தது.

Advertisement

சோனா டிசைன் செய்த இன்டோ வெஸ்டர்ன் ஃப்யூஷன் ட்ரஸை அணிந்து சென்றிருந்தேன். ஒலிவியா என்னைப் பிரியமாக வரவேற்று எல்லோருக்கும் என்னை இன்ட்ரோ செய்தார்.

Advertisement

“ஜெசப் காம்படீஷன் வின் செய்த பெண். ப்ரில்லியன்ட் லாயர் ஃப்ரம் இந்தியா. ஆஸ்டரில் ப்ராஜ்க்ட் வொர்க் செய்ய  வந்திருக்கா” என்றார்.

“ஒஹ் கிரேட். உன் ட்ரஸ் மிக அழகாக இருக்கிறது. எங்கே வாங்கினாய், யார் டிசைனர்” என்று என்னை கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஒலிவியாவும் என் ட்ரஸ் மிக அழகாக இருக்கிறது, டிசைனர் கான்டேக்ட் டீடைல்ஸ் தர முடியுமா என்று கேட்க மிகுந்த சந்தோஷத்துடன் சோனாவின் டீடைல்ஸை கொடுத்தேன். அவள் ஃபேஸ்புக் பேஜ், வெப்ஸைட் இரண்டையும் காட்டவும் மற்றவர்களும் ஆர்வமாக குறித்துக் கொண்டார்கள்.

Advertisement

பார்ட்டி அது பாட்டுக்குப் போய் கொண்டிருக்க நான் சற்றே ஒதுங்கி patio எனப்படும் பால்கனி போன்ற பகுதியில் நின்று காபி குடித்துக் கொண்டே அழகிய தோட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது டிரைவ்வேயில் கார் ஒன்று வந்து நிற்க அதிலிருந்து ஒரு பெண் இறங்கி நடந்து வந்தார்.

காபி நிறத்தில் பிங்க் பார்டர் வைத்த புடவையில் இந்த பார்ட்டிக்கு வரும் பெண் யார் என்று எனக்கு மிகுந்த ஆச்சரியம். அவர் நடையிலே ஒரு கான்ஃபிடன்ஸ் இருந்தது. கூடவே கிரேஸ்ஃபுல்லாக இருந்தார். ஒலிவியா வாசலுக்கே சென்று அவரை வரவேற்று அழைத்து வந்தார்.

நியூயார்க் மல்டிகல்சுரல் நகரம். எங்கள் ஆஃபீசிலியே இந்தியர்கள், சீனர்கள் இன்னும் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் வொர்க் செய்கிறார்கள். எல்லோரும் வெஸ்டர்ன் ஃபார்மல்ஸ் அணிந்து வருவதை தான் பார்த்திருக்கிறேன். நானுமே அதைத் தான் ஃபாலோ செய்கிறேன்.

இந்தப் பார்ட்டிக்கும் பல்வேறு நாடுகளை பூர்வீகமாக கொண்ட பெண்கள் வெஸ்டர்ன் ஸ்டைல் ட்ரஸ் தான் அணிந்திருந்தனர். நான் உட்பட.

மிடுக்காக புடவை அணிந்து கொண்டு மிகவும் சிம்பிளாக அலங்கரித்துக் கொண்டு ஒலிவியாவின் பார்ட்டிக்கு வந்திருக்கும் பெண் என்னை மிகவும் கவர்ந்திருந்தார்.

சாந்தமான சிரித்த முகத்துடன் அழகாக இருந்தார். ஒரு சிலருக்கு ஹாய், ஹலோ சொன்னவர் ஒலிவியாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அவரை என்னிடம் அழைத்து வந்த ஒலிவியா என்னை அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

‘திஸ் இஸ் மாயா. என்னுடைய முக்கிய க்ளயன்ட்” என்றார் என்னிடம்.

“ஆராதனா!! வெரி நைஸ் நேம். உங்களைச்  சந்தித்ததில் சந்தோஷம்” என்னிடம் ஆங்கிலத்தில் பொதுவாக பேசிக் கொண்டிருந்த மாயா சிறிது நேரத்திலேயே கிளம்பியும் விட்டார்.

அன்றிரவு சோனாவிடம் அவள் டிசைன் செய்த ட்ரஸை எல்லோரும் பாராட்டியதைச் சொல்லவும் அவளுக்கு ஒரே சந்தோஷம். கூடவே மாயாவைப்  பற்றியும் சொன்னேன். மும்பையில் நடந்த பார்ட்டிகளுக்கு நான் புடவை அணிந்து செல்வதை கேலி செய்வாளே!

“ரியலி” என்றாள் ஆச்சரியமாக.

இரண்டு வாரங்களுக்குப் பின் ஒரு நாள் சோனா ஃபோன் செய்து ஒலிவியா கான்டாக்ட் செய்ததாகவும், ட்ரஸ் ஆர்டர் கொடுத்ததையும் சந்தோஷமாகச் சொன்னாள்.

“கூடிய சீக்கிரமே உன் டிசைன்ஸ் இங்கே ஹிட் ஆகப் போகிறது“ நான் சொல்லவும்.”தேங்க்ஸ் சோ மச் ஆரா” என துள்ளி குதித்தாள்.

ப்ராஜக்ட்ஸ், வெள்ளிக்கிழமை கேஸ் ரெவ்யூ என்று வழக்கம் போல சென்று கொண்டிருந்தது.

வேலையில் பிஸியாக இருப்பது நல்லது. இல்லையென்றால் மனம் விக்ரமைச் சுற்றியே வட்டமடித்துக் கொண்டிருந்தது.

எட்வர்ட் யாரிடமோ ஃபோனில் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தான்.

“வில் பி தேர் இன் டுவன்ட்டி டேவிட்” (இருபது நிமிடங்களில் அங்கிருப்போம்) என்றவன் “பெல்லா, கம் வித் மீ” என்று என்னை அழைத்தான்.

“எங்கே” என்று நான் கேட்க “ஜேஎம்” என்றான்.

ஜேஎம் க்ளோபல் என்டர்ப்ரைசஸின் சில டீல்களை இதற்கு முன் எட்வர்ட் ஹான்டில் செய்தது எனக்குத் தெரியும். நான் அதை ரெவ்யூ செய்திருக்கிறேன். ஆனால் அதைத் தவிர வேறு விவரங்கள் எனக்குத் தெரியாது.

என்னுடைய காபி ஷாப் இருக்கும் அதே அவன்யூவில் நான்கு ஸ்ட்ரீட் தள்ளி மிக உயரமான பில்டிங்கின் என்ட்ரன்ஸில் JM ENTERPRISES  என்று குறிப்பிட்டிருந்த பில்டிங்கில் நுழைந்தோம்,

தங்க நிறத்தில் J மற்றும் M என்ற எழுத்துக்களை கேலிகிராபி ஸ்டைலில் லோகோ அமைத்திருந்தார்கள். பார்க்க மிக அழகாக இருந்தது. ரிசப்ஷனிலும் அதே லோகோ பளிச்சிட்டது.

‘எக்ஸிக்யூடிவ் ஃப்ளோர்ஸ் ஒன்லி” என்று குறிப்பிட்டிருந்த லிஃப்ட்டில் நுழைந்து 79 என்ற எண்ணை அழுத்தினான் எட்வர்ட்.

லிஃப்ட்டில் 75 லிருந்து 81 வரை தான் பட்டன்கள் இருந்தன. 79 ப்ளோரில் ‘சீஃப் லீகல் அட்வைசர் ‘டேவிட் வுட்ஸ்’ என்பவரின் கேபினுக்குச் சென்றோம்.

எட்வர்ட் டேவிடிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தான். என்னைப் பற்றி அவன் ஏற்கனவே அவரிடம் சொல்லியிருக்க வேண்டும். அவர் புன்னகையுடன் என்னை வரவேற்ற போதும் முகத்தில் கலவரம் தெரிந்தது.

ஒரு இன்டர்நேஷனல் டீலில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் எப்படியாவது சால்வ் செய்து விட முடியுமா என்று முயற்சிப்பதாகவும் சொன்னவர் எட்வர்டின் உதவியை கேட்டிருக்கிறார்.

“எனக்கும் அவர் சொன்ன போது ஒன்றும் விளங்கவில்லை. டேவிட் இஸ் வெரி சீனியர், அவரிடம் நான் இன்டர்ன் செய்தேன்” என்றான் எட்வர்ட்.

இரண்டு வருடங்களுக்கு முன் இதே போல இவர்களின் ஒரு டீலில் சிக்கல் ஏற்பட எட்வர்ட் தான் அதை சால்வ் செய்து கொடுத்தானாம். அப்போது நான் தான் அதை சால்வ் செய்ய ஹெல்ப் செய்தேன் என்று நினைவுபடுத்தினான்.

“அந்த துபாய் டீல்” எனக்கு நியாபகம் இருந்தது.

“எஸ் அதுவே தான். இதுவும் துபாய் டீல் தான்” என்றார் டேவிட்.

இவர்களிடம் இவ்வளவு பக்கா லீகல் டீம் இருக்கும் போது எட்வர்ட் எப்படி இவர்களின் டீல்ஸ் ஹான்டில் செய்தான்.

என் சந்தேகத்தைக்  கேட்டேன்.

“ஒஹ், தோஸ் வேர் இம்பார்டன்ட். எதிர்தரப்பினர் எங்கள் டீமில் ஊடுருவ முயற்சி செய்தது எங்கள் செக்யூரிட்டி விங் மூலம் தெரியவும், எட்வர்ட்டிடம் parallel லாக டீல் செய்யச் சொன்னோம்” டேவிட் விளக்கம் சொன்னார்.

“என்ன ஒரு யுக்தி” நான் சொல்ல “எல்லாம் ஜேடனின் யுக்தி” என்ற டேவிட் “ஜேடன் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் அவர் திரும்பி வருவதற்குள் இதை எப்படியாவது சால்வ் செய்ய வேண்டும்” என்றார்.

“ஜேடன் மான்கொமரி” JADEN MONTGOMERY  JM Enterprises Chairman” என்று முந்தைய ஃபைல்களில் இருந்தது எனக்குத் தெரியும். மற்றபடி அவரைப் பற்றி வேறு எதுவும் எனக்குத் தெரியவில்லை.

“நம்மிடம் எவ்வளவு டைம் இருக்கு” நான் கேட்க “டென் டேஸ்” என்றார் டேவிட்.

எட்வர்ட் முகத்தில் கூட ஒரு பதட்டம் தெரிந்தது. இந்த ஜேடனும் ஒரு கிரௌசிங் டைகரா இருப்பாரோ! உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.

பத்து நாட்களில் சால்வ் செய்ய முடியவில்லை எனில்……

ஆனால் பத்து நாட்கள் நானும் எட்வர்டும் மற்ற வேலைகள் எல்லாவற்றையும் விடுத்து ஜேஎம்மில் டேவிட் மற்றும் அவர் டீமுடன் பலவாறு டிஸ்கஸ்  செய்தும் சிக்கலின் முனை பிடிபடவே இல்லை.

“வி வில் ஹாவ் டு ஃபேஸ் ஜேடன் டுமாரோ!”(ஜேடனை நாளை சந்திக்க வேண்டும் நாம்)  என்ற டேவிட் மீட்டிங்கிற்கு எட்வர்ட்டும் வர முடியுமா என்று கேட்டார்.

“ஜேடன் லைக்ஸ் திஸ் பாய். ஒலிவியாவின் பையன் என்ற சாஃப்ட் கார்னர் உண்டு அவருக்கு” என்றார் டேவிட்.

“அதெல்லாம் வொர்க்கிற்கு வெளியே டேவிட்.வேலை என்று வந்துவிட்டால் அவர் மிகவும் கண்டிப்பானவர். தனிப்பட்ட ரிலேஷன்சிப்பை அவர் வொர்க் கூட கலக்க மாட்டார் என்பது எல்லோருக்குமே தெரியும் தானே ”என்றான்.

“நாங்கள் கண்டிப்பாக மீட்டிங் வருகிறோம். நாங்களும் ட்ரை செய்தோம் என்று சொல்வோம். என்ன சொல்கிறாய் எட்வர்ட்” நான் கேட்கவும் எட்வர்ட் “ஏன் இப்படி சொல்லிவிட்டாய்” என்பது போலப் பார்த்தான்.

அப்படி என்ன ஜேடன் கடித்து தின்று விடவா போகிறார். இப்படி பயப்படுகிறார்கள்.

ஆனால் அடுத்த நாள் போர்ட் ரூமில் அவர் நுழைந்த போது எனக்குப் புரிந்தது.

அவரிடம் இருந்த commanding presence (ஆளுமை) இது அவரின் சாம்ராஜ்யம் அவர் தான் சக்ரவர்த்தி என்று சொல்லாமல் சொல்லியது.

சட்டென விக்ரமின் முகம் கண் முன் வந்து போனது. அவனிடமும் ஒரு தோரணையும் கம்பீரமும் இருக்கும். ஆனால் கொஞ்சம் கர்வம் கொஞ்சம் என்ன நிறையவே உண்டு அவனிடத்தில்.

ஆனால் இவர் மிகவும் அமைதியாக, அனுபவம் நிறைந்தவராக தெரிந்தார்.

வந்தவர் எட்வர்டை பார்த்து “எட், லாங் டைம்” எனவும் இவன் அவரோடு கை குலுக்கி “ஹலோ ஜேடன்” என்றான்.

அவர் என்னைப் பார்க்க எட்வர்ட், “ஷி இஸ் மிஸ் ஆராதனா வாசுதேவன்” என்றதும் என் முன் கை நீட்டியடியே “அண்ட்” என்றார்,

நான் அவரின் கைககளைப் பற்றி லேசாக குலுக்கி விட்டு “ஹலோ சர்” என்றதும் அவர் முகத்தில் ஒரு புன்னகை.

டேவிட் என்னைப் பற்றி அவரிடம் சுருக்கமாகச் சொன்னார்.

டேவிட் ஏற்கனவே ஜேடனுக்கு மெயில் செய்து ஒரு சின்ன ப்ராப்ளம் என்று தெரிவித்திருந்தார். ஆனால் சால்வ் செய்ய முடியாத பெரிய சிக்கல் என்று இப்போது தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

முகத்தில் எந்த வித சலனமும் இல்லாமல் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் ஜேடன்.

“நீங்கள் தான் லீகல் எக்ஸ்பர்ட்ஸ். நான் இதில் சொல்ல என்ன இருக்கிறது. ஆனால் ஒரு கதை சொல்கிறேன். கதை இல்லை ஹிஸ்டரி, இந்தியாவின்  பாப்புலர் ஹிஸ்டரி” என்றவரின் பார்வை ஒரு நொடி என் மேல் பதிந்தது.

சந்திர குப்த மவுரியாவும், சாணக்கியரும் மகத நாட்டிடம் தோற்றுப் போய் காட்டில் ஒளிந்து கொண்டிருந்த போது பாட்டி ஒருத்தி அவர்களுக்கு உணவளித்த கதை. சூடான உணவில் கைகளை சுட்டுக் கொண்ட சந்திர குப்தருக்கு,  ஓரப் பகுதிகளை மெல்ல ஊதி சாப்பிடுக் கொண்டு வா நடுவில் தானே ஆறிப் போய் சாப்பிட ஏதுவாக இருக்கும் என்று பாட்டி சொன்னதும் சாணக்கியருக்கு அதிலிருந்து பாடம் கிடைத்து மகத சாம்ராஜ்யத்தை வென்றதும்…. இந்தியாவின் முக்கியமான ஹிஸ்டரி.

எதற்கு இந்தக் கதையை சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பது போல எல்லோருடைய முக பாவனையும் இருக்க அவர் கதையை முடிக்கும் முன் சிக்கலின் முனையைக் கண்டு பிடித்துவிட்டிருந்தேன்.

இத்தனை நாட்கள் நாங்கள் ப்ராப்ளத்தில் மட்டுமே ஃபோகஸ் செய்து கொண்டிருந்தது புரிந்தது.

“ஐ காட் இட்’ என் லாப்டாப்பிலிருந்து பார்வையை எடுக்காமலே ப்ராப்ளம் என்னவென்று நான் கண்டுபிடித்தைச் சொல்லி அதன் சொல்யூஷனையும் சொல்ல “தட்ஸ் இட்” என்று டேவிட் உணர்ச்சிவசப்பட்டு கை தட்டினார்.

“இப்போ நான் ஸ்டோரியை முடிக்கட்டுமா” ஜேடன் சொல்லவும் தான், அவர் பேசிக் கொண்டிருந்த போது பாதிலேயே நான் இடைமறித்ததை உணர்ந்தேன்.

“ஐ ஆம் சாரி சர்” என்றேன் மெல்லிய குரலில்.

“இது நியூயார்க், நாட் மும்பை” என்றார் அவர்.

அவர் ஏன் அப்படி சொல்கிறார் என்று புரியாமல் பார்த்தேன். இங்கு இப்படி எல்லாம் பேசுவது முறையல்ல என்று சொல்கிறாரோ!

“இங்கே பேர் சொல்லி அழைப்பது தான் வழக்கம். கால் மீ ஜேடன்” லேசாக புன்னகைத்தார்.

“ஸோ, ஆல் இஸ் வெல் தென்” என்று அவர் எழுந்து கொள்ளவும் “எஸ், இங்கிருந்து நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் டேவிட்.

“எட், சே ஹாய் டு ஒலிவியா அண்ட் வில்லியம்” என்றவர் அங்கிருந்து சென்றுவிட நாங்கள் எல்லோரும் ஒரு நிம்மதியுடன் சேரில் அமர்ந்தோம்.

“நான் பயந்தே போய்விட்டேன். நீ பாட்டுக்கு எதைப் பற்றியும் யோசிக்காமல் ஜேடன் பேசிக் கொண்டிருக்கையில் குறுக்கே பேசிவிட்டாய்” என்றான் எட்வர்ட்.

“நீங்கள் எல்லோரும் அவரைப் பார்த்து ஏன் பயந்து போகிறீர்கள். ஹி இஸ் சோ ஸ்வீட்” நான் சொல்லவும், ”வாட்” என்று என்னை எல்லோரும் பார்த்த பார்வையில் நான் வேறொன்றும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.

எட்வர்ட் மட்டும் அவன் ஆஃபீசில் கண்டிப்பாக இருக்கவில்லையா.  இவ்வளவு பெரிய சமராஜ்யத்தை ஸ்க்ராட்ச்சில் இருந்து ஆரம்பித்ததாக டேவிட் சொன்னார்.

அவர் அப்படி toughஆக இல்லையெனில் எல்லோரும் ஏறி மிதித்துக் கொண்டு போயிருப்பார்கள்.

விக்ரமும் க்ரோசிங் டைகராக இருப்பதால் தானே அவனால் இவ்வளவு உயரங்களை அடைய முடிந்தது.

என்ன இது. கொஞ்ச நாள் இந்த சிக்கலை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்ததில் அவனை மறந்து போயிருந்தேன். இப்போது ஜேடனைப் பார்த்ததும் என் மனதில் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு இருக்கிறான்.

வேலையில் பிஸியாக இருக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை டேவிட் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.

இரண்டு முக்கிய டீல்களில் எங்களையும் இன்வால்வ் செய்தார் டேவிட். ‘குறிப்பாக உன்னை இன்வால்வ் செய்ய ஜேடனே சொன்னார் ஆரா’ என்றார்.

ஒரு நாள் டேவிட்டின் கேபினில் ஒரு டீல் பற்றி டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தோம்.

“இல்லை டேவிட். நாம் பின் வாங்கிக் கொள்ளலாம். நமக்கு ஒன்றும் நஷ்டம் இல்லையே” நான் சொல்லிக் கொண்டிருந்தேன்.

“இப்போது நாம் பேக் ஆஃப் செய்வது நாம் தோல்வியை ஒப்புக் கொள்வது போல ஆகாதா” டேவிட் கேட்க, “its strategy David.(இது யுக்தி)  ஒரு பெரிய கோல் அச்சீவ் செய்ய சின்னத் தோல்வியை ஒப்புக் கொள்வது ஒரு அருமையான யுக்தி” என்றேன்.

“இப்படி ஒரு யுக்தியை நான் கேள்விப்பட்டதில்லை. ஏதாவது உதாரணம் இருக்கிறதா” என்று கேட்டார்.

“இருக்கு. கிருஷ்ணர் ஒரு முறை அவர் மக்களைக்  காப்பாற்ற யுத்தபூமியில் இருந்து பின்வாங்கினார். யுத்த பூமியில் இருந்து தப்பி ஓடுவது மிகுந்த அவமானமாக கருதப்பட்ட காலம். ஆனால் தன்னுடைய தனிப்பட்ட மானஅவமானங்களை தள்ளி வைத்து மக்களின் நலனை முன்வைத்தார்” என்றேன்.

“Listen to her David. There is no greater strategist in this world than Krishna” (அவள் பேச்சைக் கேள். இந்த உலகத்தில் கிருஷ்ணரை மிஞ்சிய சூத்திரதாரி யாரும் கிடையாது)

என் பின்னாலிருந்து குரல் கேட்க திடுக்கிட்டுத் திரும்பினேன்.

ஜேடன் எப்போது இங்கே வந்தார். இந்தியாவைப் பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாரே!

“யூ கேரி ஆன்” என்னைப் பார்த்து புன்னகைத்தார்.

மறுநாள் நான் மட்டும் தான் டேவிட்டிற்கு உதவி செய்வதற்காக ஜேஎம் வந்தேன்.

எனக்கு ஜேஎம்மில் என்ட்ரி செய்ய தனியாக ஐடி கொடுத்திருந்தார்கள். நான் உள்ளே நுழையும் சமயத்தில் தான் அந்தப் பெண்ணைப் பார்த்தேன்.

மாயா! ஒலிவியா வீட்டில் பார்த்த பெண்.

இன்றும் புடவை தான் அணிந்திருந்தார். லைட் ப்ளூ சாரி வித் டார்க் ப்ளூ பார்டர். சிம்பிளாக தோடு மெல்லிய செயின். கையில் ப்ரேஸ்லெட் மற்றும் வாட்ச் அணிந்திருந்தார்.

அங்கிருந்த விசிட்டர் டாப்பில் (tab)  என்ட்ரி செய்து கொண்டிருந்தார்.

நான் அவரைப் பார்த்து ஹாய் சொல்வதா என்று யோசித்துக் கொண்டிருக்கையில் டேவிட் கால் செய்யவும் லிப்ட் பக்கம் நகர்ந்தேன்.

அவரோ அங்கிருந்த ரிசப்ஷனில் போடப்பட்டிருந்த சோபாவில் சென்று அமர்ந்து கொண்டார்.

அன்று ஒலிவியா பெயரை மட்டும் தான் சொன்னார். வேறொன்றும் அவரைப் பற்றிச் சொல்லவில்லை.

ஏனோ மாயா என்னை மிகவும் ஈர்த்தார்.

போர்ட் ரூம் மீட்டிங்கில் எனக்கொன்றும் பெரிதாக வேலை இல்லை. இருந்தும் ஜேடன் நானும் இருக்க வேண்டும் என்று சொன்னதால் டேவிட் வரச் சொல்லியிருந்தார்.

மீட்டிங் முடிந்ததும் நான் கிளம்புவதாகச் சொல்லி விடைபெற டேவிட் அவரும் சீக்கிரம் செல்வதாக என்னுடன் லிப்டில் வந்தார்.

நாங்கள் ரிசப்ஷன் ஏரியாவிற்கு வரவும் தான் வெளியே நல்ல மழை பெய்து கொண்டிருந்ததை அறிந்தோம்.

“உன்னை எங்கேனும் டிராப் செய்ய வேண்டுமா” டேவிட் கேட்டார்.

அவர் எங்கோ அவசரமாக போக வேண்டும் என்று தான் சீக்கிரம் கிளம்பினார்,

“யூ கேரி ஆன். நான் எட்வர்டை வரச் சொல்கிறேன் ” என்றதும் சரி என்று விடைபெற்றார்.

அப்போது தான் கவனித்தேன், மாயா ஏதோ ஒரு புக்கை படித்துக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக அவர் இங்கேயே யாருக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

அது என்ன புக் என்று எனக்கு சரியாகத்  தெரியவில்லை. ஆனால் அதில் லயித்துப் போயிருந்தார்.

மீட்டிங்கில் காபி குடித்தேன் தான். ஆனால் இங்கே ரிசப்ஷனில் இருக்கும் கபேயில் காபி நன்றாக இருக்கும். அங்கே சென்று காபி ஆர்டர் செய்து அதைப் பெற்றுக் கொண்டு எட்வர்ட்க்கு மெசேஜ் செய்தேன். இருபது நிமிடங்கள் ஆகும் என்றான்.

காபியை கையில் எடுத்துக் கொண்டு எட்வர்ட் வரும் வரை ரிசப்ஷனில் இருக்கும் சோபாவில் அமரலாம் என்று நடந்தேன்.

அப்போது ஜேடன் லிப்டில் இருந்து யாருடனோ பேசிக் கொண்டே வந்தார். அவருடைய CFO என்று நினைக்கிறேன்.

அவருடன் வந்தவரின் தோளை லேசாக தட்டி கொடுத்தவர் நேராக சோபா பக்கம் செல்ல எனக்கு ஆச்சரியம்.

அங்கே மாயா மட்டும் தான் அமர்ந்து கொண்டிருந்தார்.

ஜேடன் “மாயா” என்றழைத்தது எனக்கும் கேட்டது. புத்தகதிலிருந்து பார்வையை உயர்த்திய மாயா, ஜேடனைப் பார்த்து புன்னகை செய்தபடியே புக்கை மூடி ஹான்ட் பேக்கில் வைத்துவிட்டு  எழுந்தார்.

அவர் புடவையை  லேசாக அட்ஜஸ்ட் செய்ய , ஜேடன் மாயாவின் ஹான்ட்பேகை கையில் எடுத்துக் கொண்டார்.

மழையைக் காட்டி மாயா ஏதோ சொல்ல ஜேடன் வாட்சை பார்த்து சரி என்பது போல தலையாட்டினார்.

நான் அதற்குள் அவர்கள் அருகே வந்துவிட்டிருந்தேன்.

என்னைப் பார்த்து விட்டார் ஜேடன்.

மாயாவிடம் அவர் பேகை கொடுத்துவிட்டு அவரை  லேசாக அணைத்தபடி என்னைப் பார்த்தவர்  அருகே அழைத்தார்.

“ஆரா, மீட் மை வைஃப் மாயா” என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

“நாங்கள் ஏற்கனவே மீட் செய்திருக்கிறோம் சர்” என்று ஒலிவியா பார்ட்டியில் சந்தித்ததை சொன்னேன்.

“ஆராதனா, யூ வொர்க் அட் ஆஸ்டர் ரைட்” என்றார் மாயா.

“ப்ரில்லியன்ட் கர்ல்” என்ற ஜேடன் அவர் மனைவியிடம் என் புகழ் பாடிக் கொண்டிருந்தார்.

சாணக்கியர், கிருஷ்ணரின் சாதுர்யம் எல்லாம் இவருக்கு எப்படி இவ்வளவு ஆழமாகத்  தெரியும் என்று இப்போது புரிந்தது.

மாயா அமைதியான ஒரு புன்னகையுடன் கேட்டுக் கொண்டு என்னைப் பார்த்துச்  சிரித்தார்.

பின் அவர் ஜேடனைப் பார்த்து ஏதோ ஜாடை செய்ய ஜேடன் என்னிடம்,

“எங்கே போக வேண்டும் ஆரா. ஷுட் வி டிராப் யூ சம்வேர்” என்று கேட்டார்.

“எட்வர்ட் வில் பிக் மீ. யூ ப்ளீஸ் கேரி ஆன்” நான் சொல்லவும் அன்றைக்கு போலவே “நைஸ் மீட்டிங் யூ” என்று சொல்லிவிட்டு இருவரும் சென்றனர்.

அவர்கள் கார் வரும் வரை வாசலில் நின்று கொண்டிருந்தனர் மாயாவும் ஜேடனும்.

அவர்கள் கார் வர மாயாவிற்கு கார் கதவை திறந்து விட்டு அவர் ஏறியதும் மறுபக்கம் சென்று ஏறினார் ஜேடன்.

நான் அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்.

சென்னையில் நானும் விக்ரமும் இதே போலத் தான் ஓர் மழை நாளில் காருக்காக வாசலில் காத்துக் கொண்டிருந்தோம்.

கார் வர லேட்டாக கடுப்பானான். நானோ மழையை ரசித்துக் கொண்டிருந்தேன். என் பக்கம் பார்த்தவனிடம் “மழை என்றால் எனக்கு லக்கி. இந்த டீல் நமக்கு லக்கியாக முடிந்தது பாருங்க” என்று சொல்லவும் அவன் முகத்தில் புன்னகை.

எப்போதும் காரில் முதலில் என்னை ஏறவிட்டு அதன் பிறகு பாலா கதவைத் திறக்க மறுபக்கம் வந்தமர்வான்.

சட்டென அந்த இரவும் அரவமற்ற பீச்சும் காரும் அதிலிருந்து அவன் கன் எடுத்து வைத்ததும் நினைவு வர சிலிர்த்துப் போனேன்.

“பெல்லா” எட்வர்ட் குரல் கேட்கவும் தான் அவன் கார் வந்து நின்றிருப்பதை கவனித்தேன்.

“ஜேடன் நேற்று என்னிடம் பேசினார். உன்னை ஹயர் செய்ய விரும்புகிறார் அவர். உனக்கு ஒகேவா என்று கேட்டார் என்னிடம்” எட்வர்ட் சொல்லவும் ஆச்சரியமாக அவனைப் பார்த்தேன்.

“அது எப்படி பாசிபிள் எட்வர்ட். நான் இங்கே பார் எக்ஸாம் பாஸ் செய்யவில்லை. பாராலீகல் போஸ்டை நீ க்ரியேட் செய்து சீனியர் லீகல் கன்சல்டன்ட்டாக என்னை வைத்திருகிறாய்” நான் சொல்லவும் சிரித்தான்.

“என்னால் செய்ய முடிந்ததை ஜேடன் செய்ய மாட்டாரா”

“நீ என்ன சொன்னாய் அவரிடம்” கேட்டேன் நான்.

“நோ, மை பெல்லா வில் வொர்க் வித் மீ ஒன்லி என்றேன்”

அவன் குரலில் எப்போதும் குறும்பும் கேலியும் கலந்திருக்கும். அதில்லாமல் சீரியசாக சொன்னான்,

“நிஜமாகவா” நான் கேட்க “பின்னே பொய்யா சொல்றேன்” என்றான்.

“ஜேடனிடம் பேசவே பயப்படுவாய்” எனக்கு இன்னும் அவன் உண்மையாக சொல்கிறானா இல்லை சீண்டுகிறானா என்று தெரியவில்லை.

“எஸ் பட் நீ என்று வரும் போது சொல்ல நினைத்ததை சொல்லிவிட்டேன், ஆனால்”

“ஆனால்”

“பெல்லாவிற்கு விருப்பம் என்றால் ஒகே என்றேன்” அவன் சொல்லவும் என் கண்கள் பனித்தன.

“பெல்லா வாட் ஹாபன்ட்” பதறிப் போனவன் காரை ஓரமாக பார்க் செய்தான்.

மழை முழுவதுமாக நின்று விட்டிருந்தது. சென்ட்ரல் பார்க் வந்துவிட்டிருந்தோம்.

காரிலிருந்து இறங்கி இருவரும் நடந்தோம். மாயா, ஜேடனை ஒரு சேர பார்த்ததும் என் மனம் நிலையில்லாமல் தவித்தது.

கூடவே என் விருப்பம் முக்கியம் என்று ஏன் விக்ரம் நினைக்கவில்லை என்ற ஆதங்கம் அழுத்த என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

எட்வர்ட் எதுவும் கேட்காமல் அமைதியாக நடந்து வந்தான்.

மழையில்  நனைத்திருந்த பெஞ்சை துடைத்துக் கொண்டிருந்தனர் பணியாளர்கள்.

ஒரு ஈரமில்லாத பெஞ்சில் சென்று அமர்ந்தோம்.

“பெல்லா” அந்த ஒற்றை வார்த்தையில் உடைந்தேன். நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால் முகத்தை கைகளால் மறைத்துக் கொண்டு குலுங்கி அழுதேன்.

என் தோளை லேசாக அணைத்து தட்டிக் கொடுத்தான்.

சிறிது நேரம் கழித்து என்னை கட்டுப்படுத்திக் கொண்டு முகத்தை துடைத்துக் கொண்டேன்.

“ஐ ஆம் சோ ஆங்க்ரி வித் ஹிம் பெல்லா. அழாதே. உன் கண்ணீருக்கு விக்ரம் தகுதியானவனில்லை” எட்வர்ட் சொல்லவும் அவனை நிமிர்ந்து பார்த்தேன்.

வாக்கிங் சென்று கொண்டிருந்த ஒருவரின் நாயைப்  பார்த்து எட்வர்ட் கையசைக்க அது இவனைப் பார்த்து குலைத்தது. நாயின் சொந்தக்காரர் எட்வர்டை பார்த்து முறைத்துக் கொண்டே சென்றார்.

அவனது இந்த செய்கையில் சிரித்தேன் நான்.

வேறேதோ கதைகள் பேசினோம். அவன் பல்ப் வாங்கிய தருணங்கள் ஒரு சிலவற்றை சொல்ல விழுந்து விழுந்து சிரித்தேன். நான் சமநிலைக்கு வந்ததும்,

“ஜேடன் இந்தியாவில் நல்ல நிறுவனங்களோடு கொலபரேஷன் செய்யும் ஐடியாவில் இருக்கார். இட் வில் பி எ மேஜர் கொலபரேஷன் இன் மாயாஸ் நேம். அதனால் அவரே பர்சனலாக எல்லாவற்றையும் கவனித்து செய்கிறார்”

அவன் சொல்லவும் கவனமாக கேட்டேன்.

மாயாவை பார்த்தேன் என்றேன்.

“ஒஹ் அன்று மாம் பார்ட்டியில் பார்த்திருப்பாய். மாயா இஸ் சோ ஸ்வீட். ஜெம் ஆப் எ பர்சன். உன்னைப் போலவே. எனக்கு அவளை ரொம்பப் பிடிக்கும்” என்றான்.

ஜேடன் கேட்டால் என்ன சொல்வது என்று சிறிது நேரம் விவாதித்தோம்.

“பெல்லா, நீ இங்கேயே பர்மனன்ட்டாக இருக்க விரும்பினால் ஐ வில் மேக் இட் பாசிபிள். பட் அங்கிள் ஆன்டி அங்கே இருக்காங்க. உனக்கு திரும்பவும் அங்கே போக ஜேஎம் இஸ் எ குட் சான்ஸ்” நானே இதை யோசிக்கவில்லை. எனக்காக இவ்வளவு யோசித்திருக்கிறான்.

“இப்போதைக்கு ஆஸ்டரில் இருந்து கொண்டே யூ கேன் ஹெல்ப் வித் த ப்ராஜக்ட். தென் வி வில் ஸீ” அவன் சொன்னது சரி என்று தோன்ற ஒகே என்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!