Skip to content
Post Views: 1,322
ஆராதனா வாசுதேவன்
“அர்ஜுனை எதுவும் சொல்லாதீங்க” என விக்ரமை மிரட்டிக் கொண்டே நாங்கள் இருவரும் கை கோர்த்துக் கொண்டு அரங்கத்தின் உள்ளே நுழைந்தோம்.
எங்களது கண்ணில் முதலில் எதிர்பட்டது ஜேடனும் மாயாவும்.
மாயாவை பார்ட்டியில் இப்போது தான் பார்க்கிறேன். அவர் எப்போதும் போல அழகிய புடவை அணிந்திருந்தார். ஆனால் ஜிமிக்கி, மல்லிகை பூ என இன்று மிகவும் வித்தியாசமாக இருந்தார்.
Advertisement
“உன்னை விட ஜேடன் அழகா தமிழ் உச்சரிக்கிறார் ஆரா” என் காதின் அருகில் கிசுகிசுத்தான் விக்ரம்.
ஜேடன் ழகரத்தை அவ்வளவு அழகாக உச்சரித்தாராம். பாரதியார் பற்றி எல்லாம் பேசினாராம்.
மாயா கோயிலிருந்து நேராக இங்கே வந்திருக்க வேண்டும் என்றும் சொன்னான்.
Advertisement
“கண்ணம்மா யாருன்னு அவருக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். கேட்போமா” வேண்டுமென்றே சீண்டினான் என்னை.
Advertisement
எனக்குத் தமிழ் எழுதப் படிக்க ஓரளவு தெரியும். ஆனால் இலக்கணம், இலக்கியம் எல்லாம் தெரியாது.
“ஷ்ஷ் டோன்ட் டீஸ் மீ விக்ரம். ஜேடனுக்கு மாயா சொல்லிக் கொடுத்திருப்பாங்க. அதான் பாரதியார், கிருஷ்ணா, சாணக்யா என எல்லாம் பேசறார்” என்றேன் சிணுங்கலாக.
“உனக்கு சொல்லிக் கொடுக்க நான் ரெடி. ஆனால் நான் ஒரு வார்த்தை சொல்லிக் கொடுத்தா ஒரு பக்கத்திற்கு திரும்ப வாதம் செய்து க்ளாஸ் எடுப்பாய் நீ” அவன் சொல்லவும் செல்லமாக அவனது கரங்களில் அடித்தேன் .
Advertisement
“ஒஹ் வாட் அன் அமேசிங் சைட் (என்ன அற்புதமான காட்சி) சிங்கமும் புலியும் சந்தோஷமாக கை கோர்த்துக் கொண்டு வருகிறதே” ஜேடன் மந்தகாசப் புன்னகையுடன் ஆங்கிலத்தில் சொல்லவும் மாயா எங்களிருவரையும் பார்த்து புன்னகை செய்தார்.
இந்த ஜேடனுக்கு எங்களைப் பற்றி ஏற்கனவே தெரிந்திருக்குமோ என்று எனக்கு சந்தேகம் உண்டு. பக்கா பிஸ்னஸ்மேன் அவர். விக்ரமோடு கொலபரேஷன் எனும் போது அவன் ஹிஸ்டரி ஜியாகிரபி எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு தான் இருப்பார்.
“சிங்கமும் புலியும் வாழ்நாள் முழுவதற்குமான டீலை சீல் செய்துவிட்டன” அவர் பாணியிலேயே நான் ஆங்கிலத்திலே அழகாக அவரை மடக்கி பதில் சொல்ல
“என் டீலை டீலில் விட்டுவிடாதே டியர்” என வாய்விட்டுச் சிரித்தார் மனிதர்.
“யூ போத் மேக் எ லவ்லி பேர்” ( நீங்கள் இருவரும் அழகான ஜோடி) கங்கிராட்ஸ்” மாயா சொல்லவும் “லைக் அஸ்” என மாயாவைக் காதல் பார்வை பார்த்துக் கொண்டே ஜேடன் விக்ரமோடு கைகுலுக்கினார்.
விக்ரமின் பார்வை கூட்டத்தில் ஸ்வாதி, அர்ஜூனைத் தேட அவர்கள் மாடியில் அறையில் இருக்கிறார்கள் என்றார் மாயா.
“ஜேடன் மாயாவை சேர்த்துப் பார்க்கும் போதெல்லாம் என்னையும் உங்களையும் மனசிலே கற்பனை செய்து பார்த்துக் கொள்வேன். தே ஆர் சோ லவ்லி” என்றேன்.
மாடிக்குச் செல்ல லிப்டில் நுழைந்தோம் இருவரும்.
ஒரு கையால் ஊன்றுகோலை பற்றியிருந்தவன் மறுகரத்தால் என்னை அவனோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
“மனைவியின் மனசில் என்ன இருக்குன்னு பார்வையிலேயே மைன்ட் ரீட் செய்வது எப்படி என்று அவரிடம் கற்றுக் கொள்ளணும். பிஸ்னஸ் டீல் கூட சேர்த்து இதற்கும் ஒரு டீல் போட்டுவிடலாம்” குறும்பும் குதூகலமும் கொட்டிக் கிடந்தது விக்ரம் குரலில்.
“ஹ்ம்ம் அப்படியா. என் மைன்டை ரீட் செய்துடுவீங்களா. அதையும் பார்க்கலாம்” சவால் விட்டேன் நான்.
அணைப்பை விலக்காமலே அர்ஜூன், ஸ்வாதி இருந்த அறையை நோக்கி என்னை நடத்திச் சென்றான்.
எங்கள் இருவரையும் பார்த்ததும் அர்ஜூனின் கண்கள் பளிச்சிட்டன. ஓடி வந்து விக்ரமை அணைத்துக் கொண்டான் அர்ஜூன்.
“தாங்க்ஸ் அர்ஜூன்” விக்ரம் சொல்ல
“எனக்குப் போய் தாங்க்ஸ் சொல்வாயா” என்று விக்ரமை கடிந்து கொண்டான் அர்ஜூன்.
“அண்ணி” என்றவனின் கரங்களைப் பற்றிக் கொண்டேன் நான்.
அர்ஜூன் பார்த்தசாரதி!
இவனுக்குத் தான் இந்தப் பெயர் எவ்வளவு பொருத்தம். போர்க்களத்தில் கலங்கி நின்ற பார்த்தனுக்கு சாரதியாகிய கிருஷ்ணர் கீதை உரைத்து வழி காட்டினார்.
இந்த அர்ஜூன் பார்த்தசாரதி, நான் கலங்கி நின்ற போது எனக்கு வழி காட்டியிருக்கிறான்.
“அண்ணி, அண்ணா” ஸ்வாதியின் குரல் கேட்கவும் அர்ஜூன் வழிவிட நான் முன்னே சென்றேன்.
அங்கிருந்த சோபா கம் பெட்டில் சுருண்டு படுத்திருந்தாள்.
“பீவர் விட்டு ஒரு நாள் கூட ஆகல. இருந்தும் சொல்ல சொல்ல கேட்காமல் டான்ஸ் ஆடி டயர்ட் ஆகிட்டா. மாயா தான் இங்கேயே டின்னர் எல்லாம் கொண்டு வந்து கொடுத்து ரெஸ்ட் எடுக்கச் சொன்னாங்க” அர்ஜூன் சொல்லவும் நான் ஸ்வாதியின் அருகில் சென்று அமர்ந்து அவர் நெற்றியில் கரம் பதித்துப் பார்த்தேன்.
“ஃபீவர் இல்ல அண்ணி” என்றவள் எழ முயற்சிக்க அவளை மெல்ல அணைத்து அமர வைத்தேன்.
“நீங்களும் விக்ரம் அண்ணாவும் பிஸ்னஸ் பேசி முடிச்சிட்டீங்களா” அவள் கேட்கவும் அர்ஜூன் அவளிடம் பிஸ்னஸ் பேச சென்றிருக்கிறோம் என்று காரணம் சொல்லியிருப்பதைப் புரிந்து கொண்டேன்.
“நீ இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே ரெஸ்ட் எடு. போகும் போது நானும் உன் அண்ணாவும் உங்களை கூட்டிக் கொண்டு போறோம். எங்களுக்கு இன்னும் கொஞ்சம் பிஸ்னஸ் பேச வேண்டியிருக்கு” ஸ்வாதியிடம் நான் சொல்ல விக்ரம் என்னைக் கேள்வியாகப் பார்த்தான்.
நான் விக்ரமின் கரம் பற்றி அவனை அழைத்துச் சென்றேன்.
“என்ன பிஸ்னஸ் பேசணும் ஆரா. மிஸ்டர் ஜேடனோடு டீல் நீயே முடிவு செய்திடு” என்றான்.
“நீங்க பேசாம வாங்க என்னோடு” என் கண்கள் எட்வர்டை தேடின.
ஒலிவியா தென்படவும், “ஹாய் ஒலிவியா, வேர் இஸ் எட்வர்ட்” அவரிடம் கேட்டேன்.
இவ்வளவு நேரம் இங்கே தான் இருந்தான் என்று சொன்னவர் விக்ரமை கேள்வியாகப் பார்த்தார்.
“மை பியான்சே” விக்ரமை அறிமுகம் செய்து வைத்தேன்.
“ஒஹ் கிரேட். கங்கிராட்ஸ். நீங்கள் தானே பெஸ்ட் enterprenuer அவார்ட் வாங்கியது” என்றார் விக்ரமிடம்.
ஒலிவியா எட்வர்ட்டின் அம்மா என்று நான் விக்ரமிடம் சொல்லிக் கொண்டிருந்த போது,
“என்ன நடக்குது பெல்லா இங்கே? உனக்கென்ன பைத்தியமா?” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினேன்.
“எட்வர்ட்….” விக்ரமைப் பற்றியிருந்த கரத்தை விலக்காமல் எட்வர்ட் முகம் பார்த்து நான் நிற்க விக்ரம் என் கையை அழுத்திக் கொடுத்தான்.
“எட்வர்ட். உன்னைத் தான் தேடிக் கொண்டிருந்தேன்” என்று நான் சொல்லி முடிக்கும் முன் எதையும் காதில் வாங்காமல் பொரிந்து தள்ளினான்.
‘நீ மீண்டும் ஹர்ட் ஆகத் தான் போகிறாய். உன்னை அழ வைக்கப் போகிறான்’ என்று ஏதேதோ சொல்லிக் கொண்டே போனான்.
விக்ரம் எதுவும் சொல்லாமல் அமைதியாக நிற்க எட்வர்டுக்கு எப்படி புரிய வைப்பது என்று விழித்தேன் நான்.
“ஸ்டாப் இட் எட். ஜஸ்ட் லீவ் தெம் அலோன்”
(நிறுத்து எட். அவர்களை தனியாக விடு)
எங்கள் பின்னாலிருந்து குரல் ஒலிக்கவும் நொடிப் பொழுதில் அமைதியானான் எட்வர்ட்.
குரல் கேட்டு சந்தோஷமாகத் திரும்பினேன் நான்.
“க்ளாரா” ஒலிவியாவும் ஆச்சரியமாகப் பார்க்க என்னை நோக்கி வந்த க்ளாரா என்னை ஆரத் தழுவினாள்.
“ஐ ஆம் சோ சோ ஹாப்பி ஃபார் யூ ஆரா” என்றவளை விக்ரமிற்கு அறிமுகம் செய்து வைத்தேன்.
“விக்ரம். இவங்க கிளாரா. ஜேஎம் பவுன்டேஷனில் லாயர்” நான் சொல்ல
“அண்ட் இந்த இடியட்டின் லாங் டைம் கேர்ள் பிரண்ட். வெல் நடுவில் ப்ரேக் அப் ஆகி பேட்ச் அப் ஆனதெல்லாம் லாங் ஸ்டோரி” அவள் என்னைப் பார்த்து கண்சிமிட்டி சிரித்துக் கொண்டே எட்வர்ட்டின் அருகில் சென்று நிற்க எட்வர்ட் சுவாதீனமாக அவளை அணைத்துக் கொண்டு நின்றான்.
விக்ரம் அவர்களை ஆச்சரியமாகப் பார்க்க “கங்கிராட்ஸ் மிஸ்டர் விக்ரம்” என விக்ரமின் முன் கை நீட்டினாள்.
“தாங்க்ஸ்” என்று அவளோடு சந்தோஷமாக கை குலுக்கினான் விக்ரம்.
“எட்வர்ட் ஏன் நேற்று அவ்ளோ அதிர்ச்சி ஆனார்ன்னு இப்போ புரியுது” என் காதில் ரகசியமாக சொன்னான் விக்ரம்.
“க்ளாரா நீங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து விட்டீர்களா. ஐ ஆம் சோ ஹாப்பி” என்றார் ஒலிவியா.
“ஆரா தான் நாங்கள் மீண்டும் சேரக் காரணம்” என்றவள் எட்வர்ட் பக்கம் திரும்பினாள்.
“எட்வர்ட், என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய். அவர்களுக்கு வாழ்த்துச் சொல்” அவனை அதட்டினாள்.
க்ளாரா!
எட்வர்டை ஆட்டி வைத்தப் பெண். எட்வர்டின் அங்கிள் செய்த குளறுபடி காரணமாகத் தான் நான் அவசரமாக யூஎஸ் வரும் படி நேர்ந்தது. அந்த குளறுபடிக்குப் பிள்ளையார் சுழி போட்டவள் க்ளாரா தான்.
ஒலிவியாவை நான் முதன்முதலில் சந்தித்த போது ஆஸ்டர் லா நிறுவனத்திற்கு எதிராக கேஸ் ஃபைல் செய்திருக்கும் லாயர், எட்வர்டின் காலேஜ்மேட் க்ளாரா என்று தற்செயலாகச் சொன்னார் என்னிடம்.
எங்கேயோ கேட்டப் பெயர்! சட்டென நினைவு வர எனக்கு எல்லாம் தெளிவானது.
நான் க்ளாராவை நேரில் சந்திக்கச் சென்ற போது என்னை அடையாளம் கண்டு கொண்டு ஆசையாக வரவேற்றாள். ஜெசப் மூட் காம்படீஷனை நான் வின் செய்த அன்று எட்வர்ட்டின் போனில் எனக்கு விஷ் செய்தாளே. எட்வர்டின் ப்ரண்ட் என்று தான் அப்போது எனக்குத் தெரியும்.
ஆனால் அவளுக்கும் எட்வர்ட்க்கும் இடையில் அதற்கு மேலும் ஏதோ இருக்கிறது என்று புரிந்தது எனக்கு.
“இந்த கேஸில் எட்வர்ட்க்கு ஹெல்ப் செய்யத் தான் நான் இந்தியாவில் இருந்து இங்கே வந்திருக்கிறேன்” நான் சொல்லவும் சிந்தனையில் ஆழ்ந்தாள்.
‘கேஸ் விஷயமாக, அவனுடன் சமரசம் பேச நான் தயார் ஆரா. உனக்காக’ என அவள் சொல்லவும் அவளுக்கு நன்றி சொன்னேன்.
கேஸ் சால்வ் ஆனதும் க்ளாராவிற்கு நன்றி தெரிவிக்க நேரில் சென்றேன்.
“தாங்க்ஸ் நான் தான் சொல்லணும்” என்றவள் அவர்கள் காதல், ஊடல் எல்லாம் சொன்னாள் என்னிடம்.
“எல்லாமே சரியாகி விட்டது என்று சொல்ல மாட்டேன். ஆனால் சரியாகி விடும் என்ற நம்பிக்கை வந்திருக்கு” என்றாள்.
எட்வர்ட் என்னிடம் க்ளாராவைப் பற்றி பின்னொரு நாள் சொன்னான். க்ளாரா சொன்ன அதே வார்த்தைகளை அவனும் சொன்னான்.
நான் ஆஸ்டரில் தொடர்ந்து வேலை செய்ய முடிவு செய்த போது என் என்கேஜ்மன்ட் பற்றிச் சுருக்கமாக க்ளாராவிடமும் சொல்லியிருந்தேன்.
க்ளாராவும் நானும் அடிக்கடி பார்த்துப் பேசிக் கொள்ள அவ்வளவு சந்தர்பம் அமையவில்லை. ஜேஎம்மில் ஓரிரு முறை பார்த்த போது பேசிக் கொண்டோம்.
விக்ரமை அவார்ட் பங்க்ஷனில் சந்தித்த மறுநாள் க்ளாராவிடம் ‘என் பெல்லாவை அழ வைக்கவே இந்தியாவில் இருந்து வந்திருக்கிறான்” என்று புலம்பினானாம்.
“யூ கேவ் ஹிம் எ டோடல் ஷாக் எஸ்டர்டே மிஸ்டர் விக்ரம். (நீங்கள் எட்வர்ட்க்கு நேற்று பெரிய அதிர்ச்சியை கொடுத்து விட்டீங்க). ஹி இஸ் ஓவர் ப்ரோடேக்டிவ் சம்டைம்ஸ். தட் மே மிஸ்லீட். அன்ட் இட்ஸ் நாட் தி பர்ஸ்ட் டைம். (சில நேரங்களில் அதீத அக்கறை கொண்டிருப்பான். சில நேரம் அது தவறாக நினைக்க வைக்கும். இது முதல் முறை அல்ல)” க்ளாரா விக்ரமிடம் சொல்லிக் கொண்டே எட்வர்டை பார்த்து அவனை தட்டிக் கொடுத்தாள்.
“லுக். ஆரா இஸ் சோ ஹாப்பி. தே ஆர் இன் லவ்” க்ளாரா சொல்லவும் எட்வர்ட் என்னைப் பார்த்தான்.
“எட்வர்ட் , க்ளாரா இஸ் ரைட். ஐ ஆம் இன் லவ் வித் விக்ரம்” என்றேன்.
மெல்ல விக்ரமின் பக்கம் திரும்பிய எட்வர்ட் “கங்கிராட்ஸ் மிஸ்டர் விக்ரம். இனி ஒரு போதும் என் பெல்லாவை அழ வைக்க மாட்டீர்கள் என ப்ராமிஸ் செய்யுங்கள்” என்று சொல்லவும் அவனது கரம் பற்றிக் குலுக்கினான் விக்ரம்.
“ஆரா என் உயிர். டோன்ட் வொரி மிஸ்டர் எட்வர்ட். யூ ஹாவ் மை வோர்ட். அண்ட் விக்ரம் சொன்னா சொன்னது தான்”
“அப்போ நோ மீன்ஸ் நோன்னு சொன்னது” நான் வேண்டுமென்றே கேட்க
“நோ என்றால் நோ தான்” என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டு.
“எட்வர்ட், உன் டாட் எங்கே. அவரிடம் சொல்லி எனக்கு பெயில் வாங்கச் சொல். இன்னிக்கு இவரை கொல்லாம விடப் போறதில்லை” அவனைப் பார்த்து நான் மிரட்டலாய் சொல்ல என் ஆராவிடம் நான் சரண்டர் என்பதாக ஓர் கரத்தை மேல் நோக்கி உயர்த்தினான் விக்ரம்.
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!
நிறைந்தது
error: Content is protected !!