Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

79. M and V - வான் தழுவிடிலோ வெண்ணிலவே

வான் தழுவிடிலோ வெண்ணிலவே நிறைவுப் பகுதி 01

விக்ரம் பார்த்தசாரதி

இன்று மாலை ஜேடன் அழைப்பு விடுத்த கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு செல்ல வேண்டும். எந்த உடை அணியலாம் என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போதே, எப்போதும் போல எனக்கு உதவ வந்து நின்றான் அர்ஜுன். அவனது கையில் எனக்கான  உடை.

நகரமெங்கும் பச்சை, சிகப்பு தங்க நிறம்  என மின்னிக் கிடந்த கிறிஸ்துமஸ் அலங்காரங்களை கடந்து அந்த கிறிஸ்துமஸ் பார்ட்டி நடக்கும்  ஜே எம்  கம்யூனிட்டி சென்ட்டரை அடைந்து இருந்தோம்  நான் அர்ஜுன் ஸ்வாதி மூவரும்.

அந்த அரங்கத்தின் உயர்ந்த கூரைகளிலிருந்து தொங்கிய கிரிஸ்டல் விளக்குகள், ஆயிரம் நட்சத்திரங்கள் ஒன்றாகச் சேர்ந்தது போல மின்னின.



Advertisement

நடுவில் உயரமாக நின்ற கிறிஸ்துமஸ் மரத்தையும் அதன் அலங்காரங்களையும் சில நொடிகள் பார்த்துக் கொண்டு நின்று விட்டேன் நான்.

பால் கவுனில் வலம் வரும் மங்கையர், டிசைனர் சூட்களில் நிற்கும் ஆடவர்கள்  என, கொண்டாட்டம் மட்டுமே தங்கள் இலக்கு என இருந்த அந்த மனிதர்களுடன் அந்த அரங்கமே மிளிர்ந்து கொண்டிருந்தது.

ஷாம்பெயின் நிரம்பிய கண்ணாடிக் கிண்ணங்கள் மோதிக்கொள்ளும் ஒலியோடு கிறிஸ்துமஸ்  வாழ்த்துக்களும் கலந்து பரிமளித்துக் கொண்டிருந்தது அங்கே.

Advertisement

மேடையின் மீது இருந்த இசைக்குழுவின் ஜாஸ் இசை குளிர்கால நியூயார்க் இரவின் பனியைப் போலவே, எனது உள்ளத்தை மெதுவாகத் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது.

Advertisement

நியூயார்க்கின் மேயர் மற்றும் சிலரோடு பேசிக் கொண்டிருந்தார் ஜேடன். எங்களைப் பார்த்தவர் உடனேயே எதிர்கொண்டு ‘வெல்கம்’ என்று வரவேற்றார்.

“யூ மஸ்ட் பி ஸ்வாதி. மாயா உங்களைச் சந்திக்க மிகுந்த ஆவலாக இருக்கிறாள்” ஜேடன் சொல்லவும் ஸ்வாதிக்கு ஒரே சந்தோஷம்.

“நியூ ஜெர்சி டெம்பிளில் மார்கழி பெஸ்டிவல். இன்று உங்களுடைய க்ரேட் போயட் பாரதியார்  ஸ்பெஷல். மாயா இஸ் பர்ஃபார்மிங். சீக்கிரம் வந்துவிடுவாள்” ஸ்வாதியிடம் உற்சாகமாக சொல்லிக் கொண்டிருந்தார் ஜேடன்.

Advertisement

ஜேடன் ழகரத்தை சரியாக உச்சரித்தது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமே. மொழி தெரிந்தவர்களுக்கே சரியாக வருவதில்லை.

“ஒஹ் தட்ஸ் நைஸ்” ஸ்வாதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளையும் அர்ஜூனையும் கவனித்த சிலர் அவர்களை அடையாளம் கண்டு கொண்டு சூழ்ந்து கொண்டனர்.

அந்த வருடம் நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் கலப்பு இரட்டையர் சாம்பியனை வென்றிருந்தனர் அர்ஜூனும் ஸ்வாதியும்.

ஜேடன் என்னை நியூயார்க்கின் உயர்மட்ட அதிகாரிகள், அந்தஸ்து மிகுந்த தொழிலதிபர்கள் என பலரிடமும் அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருந்தார்.

அவர்களின் வாழ்த்துக்களுக்கு சம்பிரதாயமாக நன்றி சொல்லிக் கொண்டிருந்தேன் நான்.

மற்ற விஷயங்களை பேசிக் கொண்டே மெல்ல மெல்ல அவரது டீல் பற்றிய விஷயங்களை அவர் தொட்டிருந்தார்.

ஆனால் அவர் பேச்சில் என் கவனம் இல்லை. எத்தனை முறை நான் தடுத்தும் கேளாமல் எனது பார்வை ஆராதனாவையே தேடிக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் எனக்கு தரிசனம் கொடுத்ததும் விட்டாள் அவள்.

எனது கண்களுக்கு மட்டுமே எட்டும் தூரத்தில், அழகான பால் கவுனில் எட்வர்டின் தோளோடு தோள் உரச நின்று கொண்டிருந்தாள்.

கூட்டத்தில் அவள் பார்வை துழாவியதைக் கவனித்தேன். என்னைத் தான் தேடுகிறாளா!

இப்போது மெல்ல நான் இருக்கும் திசை நோக்கி திரும்பினாள் ஆராதனா.

எட்வர்ட் அங்கே சுவாரஸ்யமாக யாருடனோ பேசிக் கொண்டிருக்க,  அங்கிருந்து விலகி எங்களை நோக்கி நடக்கலானாள். ஊன்றுகோலை அழுந்த பற்றிக் கொண்டு நின்றேன் நான்.

நடையில் கூடிய வேகத்துடன் எங்களின் அருகில் வந்தவளை பார்த்தவுடன் மலர்ந்து புன்னகைத்தார் ஜேடன்.

“ஆஹ் ஆரா. வெல்கம் டியர்” என்றவர்  “இப்போது தான் விக்ரமிடம் டீல் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். நவ் தட் யூ ஆர் ஹியர். எப்படியும் இன்று நம்ம டீலை பேசி முடித்து விடலாம்” ஜேடன் அவளிடம் பேசிக் கொண்டிருக்க அவள் பார்வையோ என் மேல் தீர்க்கமாக படிந்தது. அவள் கண்களில் கொஞ்சம் கோபம் இருந்தது போலத்  தோன்றியது எனக்கு.

“எக்ஸ்கியூஸ் அஸ் ஜேடன் சர். இவரோடு எனக்கு வேற டீல் ஒன்று பேச வேண்டியிருக்கு. ஐ வில் டீல் யுவர்ஸ் ஆஃப்டர் தட்” என்றவள் அவரது பதிலுக்குக்  கூட காத்திராமல் எனது கையைப் பற்றி  கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு போனாள்.

அங்கிருந்த சிலர் எங்களைப் பார்க்க அதை எல்லாம் கண்டு கொள்வதாக இல்லை அவள்.

பார்ட்டி ஹாலில் இருந்து சற்று தூரத்தில் ஒரு அழகான பால்கனியில்  என்னை நிறுத்தினாள்.

பால்கனியின் கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே இருந்த மரங்களோடு பனி மழை விளையாடிக் கொண்டிருந்தது.

நான் எனது பார்வையை வெளியே பதித்து இருக்க அந்த நொடியில் எனது கோட்டை கொத்தாக பிடித்து  அவளை நோக்கி என்னைத் திருப்பினாள்  ஆராதனா.

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க விக்ரம் நீங்க?”

அதட்டலாக ஒலித்தது அவள் குரல். பதில் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்.

“உங்களைத்தான் கேட்கிறேன். என்ன தான் நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க?”

“அதான் உன் கேள்வியிலேயே பதில் இருக்கே” நான் சொல்ல எனது வார்த்தை விளையாட்டை புரிந்துக் கொள்ளத் தெரியவில்லை அவளுக்கு.

“வாட்?” என்றாள்.

“தமிழும் புரியாது ஒரு மண்ணும் புரியாது. எப்போ பாரு இங்கிலீஷ்” நான் உதடுகளுக்குள் முணுமுணுத்ததை புரிந்து கொள்ளவில்லை அவள்.

“இப்போ என்ன? நீங்க என் மேலே கோபமா இருக்கீங்க அதானே? நான் அன்னைக்கு உங்களை ஐ மீன் வைஷாலியை இழுத்து வெச்சு பேசிட்டேன். என்னதான் புலியா இருந்தாலும் உங்களுக்கும் வலிக்கும் அதானே?” அவள் சொல்லிக் கொண்டே போக மெல்ல மெல்ல எனது விழிகள் விரிந்தன.

அர்ஜுன் நான் பேசிய எல்லாவற்றையும் இவளிடம் சொல்லி விட்டானா என்ன? அவன் எங்கே என எனது விழிகள் தேட, நான் அப்படியே  நகரப் போக எனது கோட்டை மறுபடியும் பிடித்துக் கொண்டாள்.

“அர்ஜுனை திட்டப் போகாதீங்க. அவன் பாவம். நான் சொல்றதை கேளுங்க முதலிலே” அவள் சொல்லவும் அவளை நோக்கி திரும்பி நின்றேன்.

‘கேட்கிறேன் சொல்’ என்பதாக என் பாவனை.

“அங்கே நிச்சயத்திலே என்ன நடந்தது, யார் உங்களை என்ன சொன்னாங்க அப்படின்னு சரியா தெரிஞ்சுக்காம, நான் அன்னைக்கு கோபத்திலே பேசிட்டேன் விக்ரம். ஐ ஆம் ரியலி ரியலி ஸாரி. ஐ ப்ராமிஸ். இனி எப்போவுமே அப்படி பேச மாட்டேன்” படபடத்தாள் அவள்.

நான் இமைக்காமல் அவளையே பார்த்திருந்தேன்.

“உங்க காதல்.  அன்னைக்கு  எனக்குப் புரியல விக்ரம். ஐ டிட்ன்ட் நோ. காதல்னா என்னனே  அப்போ எனக்குத் தெரியல. இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாம்னு நீங்க கேட்டீங்க. அது எப்படி இத்தனை சீக்கிரம், அதுவும் அம்மா அப்பா யாருக்குமே தெரியமா அப்படின்னு… ஐ தாட், நீங்க சந்தேகப்பட்டு பேசறீங்கன்னு நினைத்தேன். அது தான்  கோபத்தில் என்னென்னவோ பேசிட்டேன் உங்களை”  என்றவள்   “உங்களுக்கு நான் அவ்வளவு ப்ரியம்னா, உடனேயே கல்யாணம் பண்ணிக்கணும்னு விருப்பம்னா, இன்னொரு தடவை என்கிட்டே பேச வேண்டியது தானே? நான் என்ன நிலாவுக்கா போயிட்டேன்? யூ.எஸ்ல தானே. உங்களாலே கிளம்பி வந்திருக்கவே முடியாதா? அதுதான் அன்னைக்கு ஏர்போர்ட்லேயே முடித்து விட்டீங்களே ஷீ இஸ் மை லீகல் அட்வைசர் அப்படின்னு…” சீறினாள்.

“விக்ரம்கிட்ட நோ சொன்னா எப்போதுமே நோ தான். என்கிட்ட தோற்றுப் போவாராம். என்னை விட்டுக் கொடுப்பாராம். ஆனா இந்த ‘நோ’வை மட்டும்  பிடிச்சிட்டு இருப்பாராம்”

அவள் கோபமாக பேசிக் கொண்டே போக, பனிச் சாரல் பொழிந்தது போல குளிர்ந்து போனது என் மனம்.

ஆராதனாவா இப்படி எல்லாம் பேசுவது. கொஞ்சம் வியப்பாகவும் இருந்தது எனக்கு.

எந்த சூழ்நிலையிலும் நிதானமாக அமைதியாக அதே சமயம் அழுத்தமாக பேசும் ஆராவா, இப்படி படபடவென பொரிந்து தள்ளுகிறாள்.

நான் இப்போதும் எதுவுமே பேசாமல் இருக்கவும் என் கோட்டைப் பற்றியிருந்த அவள் பிடி கொஞ்சம் தளர்ந்தது.

“நான் இங்கே வந்த நாளில் இருந்து, இந்த டென் மன்த்ஸ் ஒவ்வொரு நாளும் உங்ககிட்ட இருந்து ஒரு போன் கால், அட்லீஸ்ட் ஒரு மெசேஜ் வராதான்னு  எதிர்பார்த்துட்டு இருந்தேன். தினம் தினம் அழுதேன் தெரியுமா. ஆனா அப்போ கூட நான் உங்களை லவ் பண்றேன்னு ஆழமா உணரவே இல்லை. ஆனா நேற்று நீங்க என்னையும் எட்வர்டையும் சேர்த்து ஃபோட்டோ எடுத்தீங்களே..” சொல்லும் போதே அவளது  உடல் லேசாக நடுக்கம் கொண்டது.

“ஹவ் டேர் யூ விக்ரம்” மீண்டும் அவள் பிடி இறுகியது. “இட் ஹர்ட் மீ சோ மச். என்னை விட்டு நீங்க விலகிப் போறதை என்னால தாங்கிக்க்கவே முடியல. இப்படி எல்லாம் நான் முன்னாடி எப்பவுமே  பீல் செய்ததில்லை” என்றவள் உடைந்தாள்.

என் நெஞ்சின் மீது நெற்றியை லேசாகப் பதித்தவளின் கண்களில் நீர் வழிய  எனது விரல் கொண்டு மெல்லத் துடைத்தேன் நான்.

“ஆனா அந்த மொமன்ட்ல தான் நான் காதலை முழுசா உணர்ந்தேன்னு நினைக்கிறேன் விக்ரம்” என்றவளை என்னோடு அப்படியே சேர்த்து அணைத்துக் கொள்ளத் தோன்றியது எனக்கு.

“அதெப்படி உங்களால ஹாப்பியா என்னை விட்டு கொடுக்க முடிந்தது ? வொய் டிட் யூ டூ தட்?” என்னை உலுக்கினாள்.

நான் இன்னும் பேசாமலே நிற்க

“டெல் மீ விக்ரம்” கெஞ்சலாக ஒலித்தது அவள் குரல்.

ஓர் கரத்தால் அவள் முகத்தை மெல்லப் பற்றினேன் நான். எனது  முகம் பார்த்து நின்றாள் என் ஆரா.

“இந்த விக்ரம் ஒரு பைத்தியம் ஆராதனா. யார் என் மேலே கொஞ்சம் அன்பு வெச்சாலும் அடுத்த நொடி அவங்க மேலே அதை விட நாலு மடங்கு அன்பு வெச்சிடறேன். அது அர்ஜுன்லே ஆரம்பிச்சு இப்போ குட்டி  ஆரா வரைக்கும் வந்து நிக்குது. அவங்க எனக்கே எனக்கானவங்க  அப்படின்னு ஒரு கணக்கு போட்டுடறேன். அவங்க என் கூடவே இருக்கணும் அப்படின்னு வேறே ஒரு ஆசை. வெரி ஸாரி ஆராதனா. அன்னைக்கு அதனாலே தான் உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்னு உன்னை கேட்கவும் செய்தேன். தப்புதான். அவங்க அவங்களுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்கு இல்லையா. உன் விருப்பத்திற்கு நான் மதிப்பு கொடுத்திருக்கணும்”

ஆராதனா பேசாமல் என்னையே பார்த்திருக்க சில நொடிகள் பால்கனியின் வெளியே விழும் பனியை பார்த்து விட்டு பின்னர் அவளது பக்கம் திரும்பினேன்.

“அதுக்கு அப்புறம், உன்னை பிரிஞ்சதுக்கு அப்புறம் என்னுடைய மனசு கொஞ்சம் கொஞ்சமா மாறிச்சு. நான் அன்பு வைக்கிறவங்க எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும் அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சேன். இப்போவெல்லாம் என் அன்புக்கு நிபந்தனைகளே கிடையாது. நீ எட்வர்ட் கூட இருக்கும் போது சந்தோஷமா இருந்தே தானே?”

“உங்களுக்கு புரியலை.  என் சந்தோஷமே நீங்க தான் விக்ரம். பிகாஸ் யூ ஆர் மை லவ், மை எவ்ரிதிங், மை வோர்ல்ட்” நான் முடிப்பதற்கு முன்னால் முந்திக் கொண்டாள் அவள்.

“அது எனக்கு இப்போ ரொம்ப நல்லா தெரியும் ஆரா” நான் சொன்னதும் மெலிதான புன்னகை பிறந்தது அவளது இதழ்களில். ஆனால் உடனேயே அதை மறைத்தாள்.

“தெரிஞ்சுகிட்டே தான் ட்ரேடிஷன் முடிஞ்சதான்னு கேட்டீங்களா?” அவள் மிஸில்டோவை குறிப்பிட்டுச் சொல்கிறாள் என்று புரிந்தது எனக்கு.

அவள் அதிரடியாக கொடுத்த அச்சாரம் என் அதரங்களில் இன்னும் இனிக்கத் தான் செய்ததது.

ஆனாலும் மறுத்தேன்.

“‘ஐ லவ் ஹிம் பா. ஐ லவ் ஹிம் சோ மச். எப்படி பா சரி பண்ண போறேன்’  அப்படின்னு நேத்து நீ உங்க அப்பா கிட்டே அழுதியே அப்போ புரிஞ்சது எனக்கு”

“விக்ரம்..” ஆச்சரியத்தில் விரிந்தது அவள் விழிகள்.

“உனக்கு எல்லாமே உன் அப்பா அம்மாதான். அது  எனக்கு நல்லாவே தெரியும் . எனக்கு இப்போ விக்ரம் தான் முக்கியம். விக்ரமுடன் எல்லாம் சரியாகும் வரை என்கிட்டே யாரும் பேசாதீங்க. அப்படின்னு எனக்காக உன் அம்மாவோட சண்டை போட்டியே அப்போ புரிஞ்சது”

“நான் அம்மா கிட்ட பேசினது…..உங்களுக்கு எப்படி…நீங்க எப்போ  கேட்டீங்க விக்ரம்?” அவளது குரலில் வியப்பு ஓடியது.

“நேற்று அர்ஜுன் ஸ்வாதியைப்  பிக் பண்ண வரும் போது நீ பேசினது அத்தனையும் கேட்டேன்” நான் சொல்லவும் அவள் முகத்தில் ஓர் நிம்மதி பரவியது.

“கேட்டுட்டு அப்படியே போய்ட்டீங்க.  இப்போ நான் உங்களை இழுத்துட்டு வந்து கேள்வி கேட்கலைனா சொல்லியிருக்கவும் மாட்டீங்க அப்படித் தானே” என்னைச் சாடிய போதும் என் நெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டாள்.

அவள் தலையை வருடியது எனது கரம்.

“டோன்ட் எவர் லெட் கோ ஆஃப் மீ விக்ரம்” (என்னை எப்போதும் விட்டுக் கொடுக்காதே) என்றாள் மெதுவாக.

“நெவர்” அழுத்தமாகச் சொன்னேன்.

அந்த மோன நிலையில் கட்டுண்டு கிடந்தோம் இருவரும்.

“ஆரா” என்றழைத்தேன் மெதுவாக.

“ம்ம்ம்”

“லவ் யூ சொல்ல மாட்டியா?”

“அதான் நேத்தே சொல்லிட்டேனே..”

“அது எப்போ?”

“ம்ம்ம… மிஸில்டோ கீழே” சொன்னவளின் முகத்தில் லேசாக வெட்கம் எட்டிப் பார்த்ததோ.

“எப்படி எப்படி” என்று நான் அவளது முகத்தை நிமிர்த்த அப்போது தான் எனது பார்வையில் விழுந்தது அது. ஆராதனாவின் கழுத்தில் இருந்த சங்கிலி. அதைப் பார்த்ததும் எனது விழிகள் விரிந்தன. அதில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது நான் அணிவித்த மோதிரம்.

நான் அதை கவனித்து விட்டேன் என்று புரிந்து கொண்டவள் முகத்தை என் நெஞ்சில் மறைத்துக் கொண்டாள்.

“நான் மோதிரத்தைக் கழட்டலைனா எட்வர்ட் திரும்பத் திரும்பக் கேட்பான். அதனாலே அதை எடுத்து என் செயின்லே போட்டுகிட்டேன்” ரகசியமாகச் சொன்னாள்.

நான் பதில் பேசாமல் இருக்கவும் என்னை நோக்கி நிமிர்ந்தாள்.

“எட்வர்ட்  என்னோட  பெஸ்ட் ப்ரண்ட் விக்ரம். எனக்கு முதன் முதலா கிடச்ச ப்ரண்ட்.  ப்ரண்ட் மட்டுமில்ல  என்னோட கைட். லைக் மை ப்ரோ கிருஷ்ணா.  அவன்  ஜாலியா இருப்பான் ஆனா ரொம்ப சென்சிடிவ். நான் ஹாப்பியா இருக்கணும் அவனுக்கு. தட்ஸ் ஆல். நீங்க என்னை அழ வெச்சிட்டீங்க அப்படின்னு  தான் அவனுக்கு உங்க மேலே கோபம்.  நான் ஹர்ட் ஆக கூடாதுன்னு தான் என்னை ரொம்ப ப்ரொடெக்ட் பண்ணிட்டு இருந்தான்” என்றவள் “ஏன்னா ஹி நோஸ்…” என்று  ஏதோ சொல்ல வந்தவள்,
“நேத்து என்னை விட அவன் தான் பாவம் அதிர்ந்து போயிட்டான்” எனவும்

ஏன்” என்றேன்.

“ஏன்னு அவன்கிட்டேயே கேளுங்க. நானும் உங்களை ஒன்னு கேட்கணும். அது யாரு குட்டி ஆரா?” என்னிடம் கொக்கி போட்டாள் அவள்.

“ம்? என் பொண்ணு” அவளது தொனியிலேயே சொன்னேன் நான்.

“நான் இல்லாம உங்களுக்கு எங்கிருந்து வந்தா பொண்ணு?”

குட்டி ஆராவைப் பற்றி எல்லாம் தெரிந்து கொண்டு தான் கேட்கிறாள். அர்ஜூன் எல்லாவற்றையும் சொல்லிவிட்டானா!

“அவ நான் அடாப்ட் பண்ணிக்க போற பொண்ணு மேடம். அதுக்கு நீங்க தேவை இல்லை. வேணும்னா இன்னொரு பொண்ணு பெத்துக்க உன்னோட உதவி தேவை படலாம்..” எனது விரல்கள் அவளது இதழ்களை வருட கோபமாக எனது கையைத் தட்டி விட்டாள்.

 “அடாப்ஷன்  ரூல்ஸ் பத்தி ஏதாவது தெரியுமா இல்ல ஒன்னும் தெரியாதா. நான் தேவை இல்லையாம். போங்க. போய் ட்ரை பண்ணுங்க பார்ப்போம். நான் எப்படி தேவை இல்லாம போறேன்னு” என்னை விட்டு விலக முயன்றவளை இறுகப் பற்றினேன்.

“என் கண்ணம்மாவிற்கு இன்னிக்கு என்ன இவ்ளோ கோபம்” நான் சொல்லவும் முறைப்பாள் என்று நான் பார்த்திருக்க, சட்டென அவள் முகம் மலர்ந்து விரிந்தது.

“விக்ரம்… கண்ணம்மான்னா சொன்னீங்க” ஆர்வமாகக் கேட்டாள்.

அவள் ஆர்வம் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என் பாரதியின் புதுமைப் பெண் இவள். இருந்தாலும் எனக்கு  கண்ணம்மா அல்லவா.

“கண்ணம்மான்னா கிருஷ்ணாவோட சிஸ்டர்ன்னு அர்த்தமா விக்ரம்”  அவள் கேட்கவும் அடக்க முடியாமல் வாய்விட்டுச் சிரித்தேன் நான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!