Skip to content
Post Views: 1,285
எபிலாக் 2
“நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்” உற்சாகமாகப் பாடிக் கொண்டே டையை கையில் வைத்துக் கொண்டு கண்ணாடி முன் நின்று ஆலோசித்துக் கொண்டிருந்தான் விக்ரம்.
“ம்ம்ச். தள்ளுங்க” என்றபடியே டிரஸிங் டேபிள் ட்ராயரில் இருந்து தலை வாரும் பிரஷை எடுத்து விக்ரமிற்கும் கண்ணாடிக்கும் நடுவில் வந்து நின்றாள் ஆராதனா.
“நான் கிளம்ப வேண்டாமா” அவளை லேசாகத் தள்ளி விட முயன்றான் விக்ரம்.
Advertisement
“ஒரு மணி நேரமா கிளம்பிக் கொண்டு தானே இருக்கீங்க” அவனைக் கடிந்து கொண்டே க்ளிப்பை எடுத்து மாட்டினாள்.
அன்று வெஸ்டர்ன் ஃபார்மல் உடை அணிந்திருந்தாள்.
“இன்றும் வெஸ்டர்ன் தான் போட்டுக் கொண்டிருக்கா” விக்ரம் மெல்லச் சொன்னான்.
Advertisement
“என்ன முணுமுணுப்பு. சத்தமாக சொல்ல வேண்டியது தானே” ஒப்பனை செய்து முடித்து விக்ரமை நோக்கித் திரும்பினாள்.
Advertisement
“குரோசிங் டைகர்ன்னு தான் பேர். ஒரு டை கட்டத் தெரியுதா” சொல்லிக்கொண்டே டையை அவன் கழுத்தில் மாலையாக்கி முடிச்சிட்டுக் கொண்டிருந்தாள்.
இது இப்போதெல்லாம் தினசரி விளையாட்டு இருவருக்கும்.
அவள் டையில் கவனமாக இருக்க அவனோ க்ளிப்பில் இருந்து விடுதலை பெற்ற ஒற்றை முடிக்கற்றை அவள் காதோரம் மெல்ல ஒதுக்கி விட்டுக் கொண்டிருந்தான். அவனது ஒற்றை விரல் அவள் கன்னம் நோக்கி நகர
Advertisement
“விக்ரம். நோ! ஸ்டே தேர். வி வில் பி லேட்” மிரட்டினாள் அவனை.
‘விக்ரமிடம் நோ சொல்லாதே ஆராதனா’ அன்றே அவனது மிரட்டலை சட்டை செய்யவில்லை அவள், இன்றா செய்யப் போகிறாள்.
“சொன்னா என்ன செய்வீங்க” சவால் விட்டாள்.
ஒரு கரம் கொண்டு அவள் இடையை வளைத்து தன் புறம் இழுத்தான் விக்ரம்.
“நீ நோ சொன்னா அதை எஸ் என்று எடுத்துக் கொள்வேன்” மெல்ல அவள் முகம் நோக்கி குனிந்த போது அவனது மொபைல் ஒலித்தது.
‘குட்டி ஆரா’ டிஸ்ப்ளேவில் ஒளிர இருவரும் சிறிது நேரம் அவளிடம் பேசினார்கள்.
அவளை தத்தெடுத்துக் கொள்ள விக்ரம் விருப்பம் தெரிவிக்க ஆராதனாவும் அவன் விருப்பதிற்குச் சம்மதம் தெரிவித்தாள்.
அன்று ஒரு நாள்
“பாப்பா இனிமே நீ எங்க கூடவே இருக்கியா பாப்பா?” விக்ரம் கேள்வி கேட்க குழந்தையின் முகத்தில் பல வித மாற்றங்கள்.
“நான் இங்கேயே ஸ்கூல் படிக்கணுமா?” விழிகளை உருட்டிக் கேட்டாள் குழந்தை
“ஆமாம். இங்கே நிறைய பிக் ஸ்கூல் எல்லாம் இருக்கு” இது பெரிய ஆராதனா.
“அப்போ சாரா?” என்றபடியே அங்கே பக்கத்திலேயே நின்ற சாராவை பார்த்துக் கொண்டே அவள் கேட்க
“நோ” என்று முதலில் கத்தியது சாராதான். “ஆரா என் கூடத்தான் இருப்பா” குட்டி ஆராவை இழுத்து தனது அருகில் நிறுத்திக் கொண்டது அது. “ஆரா என்னை விட்டு போக மாட்டேதானே ?”
“இல்ல நான் போக மாட்டேன்” அடுத்த நொடி சொல்லி விட்டாள் குட்டி ஆரா. “அங்கிள் ப்ளீஸ் அங்கிள் நான் சாரா கூடவே இருக்கேனே”
குழந்தைகளின் இந்த விருப்பத்திற்கு அங்கே இருந்த கெளதம் விக்ரம் இருவராலும் தலையாட்ட மட்டுமே முடிந்தது. விக்ரம் அன்று சொன்னதுதான் அவனது அன்பு நிபந்தனைகளற்றது.
தனது அன்புக்குரியவர்கள் தனக்கு மட்டும் சொந்தம் என்று நினைக்கும் விக்ரம் இப்போது இல்லை. அதனால் குட்டி ஆராவை அவளது விருப்பத்திற்கே விட்டிருந்தான் அவன்.
ஆனால் அவளது பொறுப்பு அனைத்தும் என்று விக்ரம் சொல்லி விட கௌதமும் மறுப்பு சொல்லவில்லை.
“என்ன யோசனை? குட்டி ஆரா பற்றியா? ஒரு நாள் ரெண்டு பெறும் போய் பார்த்திட்டு வருவோம் .இப்போ வாங்க போகலாம். பாலா ரொம்ப நேரமா வெயிட் செய்கிறார்” ஆராதனா முன்னால் நடக்க விக்ரம் அவளைத் தடுத்தான்.
“ஹ்ம்ம் இங்கிருந்து நம்ம வழி தனித் தனி” வாசல் கதவை திறந்து கொண்டே சொன்னவன் “நீ எனக்கு ஆபோசிட் டீம்ல இருக்க” என்றான்.
.நியூயார்க்கில் இருந்து திரும்பி வந்து பதிவுத் திருமணம் செய்து கொண்ட அன்றே ஆராதனா விக்ரமிடம் தெளிவாகச் சொல்லிவிட்டாள்.
“உங்களுடைய லீகல் அட்வைசராக இனி நான் இருக்க முடியாது விக்ரம்”
“ஆரா” விக்ரம் கெஞ்சுதலாக பார்க்க ‘நோ’ என்று தலையசைத்தாள்.
“பட்டு” குழைந்தான் அவன்.
“டோன்ட் ட்ரை டு சார்ம் மீ விக்ரம்” என்றவள்
“வொர்க் அண்ட் பர்சனல் லைஃப் தனித் தனியாக இருந்தால் தான் சரி வரும். நிறைய அனுபவித்து விட்டோம் அல்ரெடி” தெளிவாகச் சொன்னாள்.
விக்ரமிற்கும் அவள் சொன்னது சரியாகப் பட்டது. அவளை இனி ஒரு முறை எந்த காரணத்திற்கும் இழக்க அவன் தயாராக இல்லை..
அவள் வேலை என்று வந்து விட்டால் எப்படி என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அவனுமே வொர்க்கில் காம்ப்ரமைஸ் செய்பவன் இல்லை.
கீழே எட்வர்ட் நின்று கொண்டிருக்க விக்ரம் அவனிடம் கைகுலுக்கி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்.
“எட்வர்ட் நீ எங்கே இங்கே” ஆராதனா கேட்கவும் “உன்னை அழைத்துக் கொண்டு போக வந்திருக்கார்” என்றது விக்ரம் தான்.
விக்ரம், எட்வர்ட் இருவரும் ரகசியமாக ஏதோ சைகை செய்து புன்னகைத்துக் கொள்ள ஆராதனா முறைத்தாள்.
“இதெல்லாம் சரியில்லை சொல்லிட்டேன்” எட்வர்டைப் பார்த்துச் சொன்னவள், “உங்களை அப்புறம் வச்சிக்கிறேன்” விக்ரமிடம் மிரட்டலாகச் சொல்லிவிட்டு சென்றாள் ஆராதனா. பாலா விக்ரமைப் பார்த்து புன்னகைக்கவும் “நீயுமா. கிளம்பு” என்றான் விக்ரம்.
ஜேஎம் என்டர்ப்ரைசைஸ் 81 ஃப்ளோரில் போர்ட் ரூமில் அனைவரும் கூடியிருந்தனர்.
அன்று மிக முக்கிய டீல் சைனிங்.
ஜேஎம் என்டர்பிரைசஸ் மற்றும் ருபா க்ரூப் கொலபரேஷன். உலக அளவில் பெரிதாக பேசப் பட்டது இந்த கொலபரேஷன்.
ஜேஎம் ருபா கொலாபரேஷனுக்கு ஆரம்பத்தில் இருந்தே அனைத்தையும் ஆராதனா தான் ரெடி செய்திருந்தாள் ஜேஎம் சார்பாக.
“டீல் சைனிங் அன்று ஜேஎம் சார்பாக நீ வர வேண்டும்” என்று ஜேடன் ஆராதனாவைக் கேட்டுக் கொள்ள விக்ரமும் மறுப்பு சொல்லவில்லை.
விக்ரம் அவனது டீமோடு டிஸ்கஸ் செய்தபடியே போர்ட் ரூமில் நுழைந்தான்.
மாயாவும் ஜேடனும் விக்ரமை எதிர்கொண்டு வரவேற்றனர். இருவரும் விக்ரம் ஆராதனா திருமணத்திற்கு எட்வர்ட், க்ளாரா மற்றும் டேவிட் சகிதம் வருகை தந்திருந்தனர்
தொழில் முறை தாண்டி ஒரு பர்சனல் ரிலேஷன்ஷிப் உருவாகியிருந்தது அவர்களுக்குள்.
மாயா எப்போதும் போல புடவை அணிந்திருந்தார். விக்ரமை சந்தோஷமாக வரவற்றார்.
ஒரு பக்கம் ஜேஎம் டீம் அமர்ந்திருக்க எட்வர்ட் அருகில் அமர்ந்திருந்தாள் ஆராதனா.
விக்ரம் உள்ளே வரவும் அவனைப் பார்த்து லேசாக முறைத்தாள்.
விக்ரமுக்கோ மலரும் நினைவுகள்! முதல் சந்திப்பில் நீ யார் என்று விக்ரமையே கேட்டு வைத்தவள் தானே இவள்!
“சோ ஆல் இஸ் செட். எனி லாஸ்ட் மினிட் சேஞ்சஸ்” டேவிட் கேட்கவும் ஆராதனா முந்திக் கொண்டு ‘எஸ்’ என்றாள். புதிதாக இரண்டு ஷரத்துகளைச் சேர்த்திருந்தாள்
கடைசியாக அவள் சேர்த்த ஷரத்துகள் அப்படி ஒன்றும் முக்கியமானவை இல்லை. வருடா வருடம் நடக்கும் போர்ட் மீட்டிங் நியூயார்க்கில் தான் நடக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. அதற்கு இரண்டு நிறுவனங்களின் சார்பில் எம்டி தான் கலந்து கொள்ள வேண்டும் என்றும் சேர்த்திருந்தாள்.
“நியூயார்க் என் ஃபேவரைட் சிட்டி. நாம இயர்லி ஒன்ஸ் யூஎஸ் ஒபனுக்கு அப்புறம் கிறிஸ்மஸ் டைம்ல வெகேஷனுக்கு நியூயார்க் போகலாம் விக்ரம். அப்புறம் சம்மர் வெகேஷனுக்கு குட்டி ஆராவையும் கூட்டிட்டு வரலாம்” ஆராதனா கொஞ்சலாக விக்ரமிடம் சொன்ன போது “நியூயார்க்கா, நோ வே, உனக்கு போகணும் என்றால் போய்வா. நான் வரமாட்டேன்” என்றிருந்தான் விக்ரம்.
அதற்காகவே, அவனை நியூயார்க் வரவழைக்க வேண்டும் என்பதற்காக அவள் செய்த ட்ரிக்.
“விக்ரம் டூ யூ அக்சப்ட்” ஜேடனும் சிரிப்பை அடக்கிக் கொண்டு விக்ரமைப் பார்த்துக் கேட்டார்.
“எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை. பட் என் எம்டிக்குப் ப்ராப்ளம் இருக்கலாம்” விக்ரமும் சிரிப்பை அடக்கிக் கொண்டு சொல்ல திகைத்தாள் ஆராதனா.
இவன் தானே எம்டி.. என்ன உளறுகிறான். அவள் விக்ரமைப் பார்த்து புருவங்களை உயர்த்த அலட்சியமாக தோள் குலுக்கினான் அவன்..
மெல்ல அவள் பக்கம் ஃபைலை அவன் நகர்த்த ஜேஎம் சார்பில் எம்டி என்று மாயாவின் பெயர் குறிப்பிட்டிருக்க, ருபா சார்பில் ஆராதனாவின் பெயர் இருந்தது.
விழி விரித்து மீண்டும் மீண்டும் பெயரைச் சரி பார்த்தாள்..
“சோ எம்டிக்கு ஓகேவா” ஜேடன் கேட்கவும் மாயா லேசாகச் சிரித்தார்.
ஆராதனா நிமிர்ந்து ஜேடனின் முகம் பார்க்க அவரோ விக்ரம் அருகில் இருந்த காலி இருக்கையைச் சுட்டிக் காட்டினார்,
“மேடம் எம்டி ப்ளீஸ் டேக் யுவர் ரைட்ஃபுல் ப்ளேஸ்” என்று டேவிட் சொல்லவும் அனைவரும் சந்தோஷமாக மேஜையைத் தட்டினர்.
“யூ டூ எட்வர்ட்” எட்வர்ட்டும் மேஜையைத் தட்ட அருகில் இருந்த எட்வர்டை முறைத்த படியே அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து விக்ரம் அருகில் சென்று அமர்ந்தாள் ஆராதனா.
மாயாவும் ஆராதனாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
“நியூயார்க் வராம இருக்க எஸ்கேப் ப்ளானா” அவன் காதைக் கடித்தாள்.
“ம்ம்ஹூம்ம். இயர்லி ஃபோர் டைம்ஸ் வர ப்ளான். எல்லா சீசனுக்கும்” அவன் அவள் பக்கம் மெல்ல சாய்ந்து காஷுவலாக சொன்னான்.
“விக்ரம்” என்றாள். சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனாள்.
அங்கே, அப்போதே அவனைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையை வெகு கடினப்பட்டு கட்டுப்படுத்தினாள்.
அன்றிரவு இந்திய ரெஸ்டாரன்ட்டில் சிறிய பார்ட்டி ஹாலில் ட்ரீட் கொடுத்தான் விக்ரம். எட்வர்ட் க்ளாராவுடன் வந்திருந்தான். டேவிட் அவர் மனைவி, விக்ரம் டீமைச் சேர்ந்த முக்கியமானவர்களும் வருகை தந்திருந்தனர்.
ஜேடன் மாயா இருவருக்கும் வேறு என்கேஜ்மன்ட் இருப்பதால் வர முடியவில்லை என்றும் மறுநாள் விக்ரமும் ஆராதனாவும் லஞ்சிற்கு வீட்டிற்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ள இவர்களும் ஒப்புக் கொண்டிருந்தனர்.
இதே ரெஸ்டாரன்ட்டில் முன்பு விக்ரம் ட்ரீட் கொடுத்த போது அணிந்து வந்த புடவையையே அணிந்திருந்தாள் ஆராதனா.
அன்று விக்ரமோடு சேர்ந்து நின்று போட்டோ எடுக்காமல் போனது அவள் மனதில் குறையாகவே இருந்ததை விக்ரம் அறிந்தே இருந்தான். அதனாலேயே இந்த ரெஸ்டாரண்டை அவன் தேர்வு செய்தான்.
விக்ரம் ஆராதனாவை லேசாக அணைத்தபடி நிற்க சந்தோஷமாக புன்னகைத்தாள் ஆராதனா.
அவர்களை க்ளிக் செய்தது கேமரா மட்டுமல்ல!
வான் தழுவிய வெண்ணிலவும்!
error: Content is protected !!