Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

விழாக் காணுமே வானம்

விழாக் காணுமே வானம் 17(01)

விழாக் காணுமே வானம் 17 (01)

வத்சலா ராகவன் – மது ஹனி

அடைபட்ட உள்ளங்கள் உடைபட்ட தருணம்; அன்பெனும் பிரவாகம்!



Advertisement

அர்ஜுன் அப்படி கிளம்பிப் போவது விக்ரமுக்குமே மிகப் பெரிய வேதனை. ஆனாலும் மற்றவர்கள் முன்னால் அவன் அர்ஜுனிடம் கெஞ்சினால் அவன் விக்ரம் இல்லையே! அவன் செல்லும் திசையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் விக்ரம்.

“ஸ்வாதி அப்படித் தான் பட்டுன்னு பேசிடும். நீங்க எதையும் மனசில வச்சுக்காதீங்க” ரங்கநாதன் சொல்லவும் ருக்மணிக்கும் பார்த்தசாரதிக்கும் மிகுந்த வருத்தமாக இருந்தது.

ஸ்வாதி காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டதால் ரங்கநாதன் டேக்ஸியை  வரவழைத்தார். மெயின் ரோடில் டேக்ஸி ஏறப் போன போது ஸ்ரீதேவி டிரைவரிடம் நிறுத்தச் சொன்னார்.

Advertisement

“அர்ஜூன்” என்று அழைத்ததும் இருட்டில் கால் போன போக்கில் சென்று கொண்டிருந்தவன் சட்டென நின்றான்.

Advertisement

“வண்டியில ஏறு அர்ஜூன். அத்தை சொல்றேன்” ஸ்ரீதேவி ஆணையாக சொல்லவும் அவன் ஏறினான்.

அர்ஜூனோடு பெற்றோர் வீட்டிற்குள் நுழைவதை கண்ட ஸ்வாதி போர்டிகொவிலேயே அவர்களை தடுத்து நிறுத்தினாள்.

“அம்மா யார் யாரையோ வீட்டுக்குள்ள ஏன் கூட்டிட்டு வரீங்க” கோபத்தில் சீறினாள்.

Advertisement

“ஸ்வாதி, போதும். ரொம்ப பேசிட்டே போற. நீ செய்தது கொஞ்சம் கூட சரியில்லை” ஸ்ரீதேவி மகளை கண்டித்தார்.

“நான் செய்தது சரியில்லை. அப்போ மத்தவங்க செய்தது எல்லாம் சரியா” எப்போதும் அன்னை சொன்னால் கேட்டுக் கொள்பவள் அன்று பிடிவாதமாக இருந்தாள்.

விக்ரம் இன்னும் அதிகமாகவே பேசியிருந்தாலும் அவள் அதை சட்டை செய்திருக்க மாட்டாள். ஆனால் அர்ஜூன் அவளுக்காக ஒரு வார்த்தை கூட பேசவில்லையே.

அவனைத் தானே அவள் அம்மா அப்பாவை விட முன்வைத்திருந்தாள்.

ஜஸ்ட் எ பிரண்ட் என்றானே!

எத்தனையோ பேர் நீங்கள் ட்வின்ஸா லவர்ஸா என்று கேட்கும் போது எத்தனை பெருமையாக நாங்க பிரண்ட்ஸ் என்றிருப்பாள்.

ஜஸ்ட் எ சிஸ்டர் என்பதையோ, ஜஸ்ட் எ லவர் என்பதையோ அவ்வளவு ஏன் ஜஸ்ட் எ டாட்டர் என்பதைக் கூட தாங்கியிருந்திருப்பாள். ஜஸ்ட் எ பிரண்ட் அதுவும் அர்ஜூனுக்கு ஜஸ்ட் எ பிரண்ட் என்பதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

ஸ்ரீதேவி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவளால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

“இது எங்க வீடு. இங்க தான் அர்ஜூன் இருப்பான்” ஸ்ரீதேவி முடிவாக சொல்ல ஸ்வாதி வெடித்தாள்.

“அப்போ நான் போறேன். இந்த வீட்டை விட்டு நான் போறேன்” ஸ்வாதி சொல்லவும் எதற்கும் கலங்காத ரங்கநாதன் அதிர்ந்து போனார்.

“கண்ணா, என்ன வார்த்தை சொல்கிறாய்” மகளை கடிந்து கொண்டார்.

“அப்போ அவன் இந்த வீட்டுக்குள்ள வரக் கூடாது”

“அவன் வரக் கூடாதுன்னா உன் அம்மாவும் வர மாட்டா” பெற்ற மகளே என்றாலும் அவள் செய்யும் தவறுக்கு துணை போக மாட்டார் ஸ்ரீதேவி.

அர்ஜூன் மீது அதிகமான உரிமையுணர்வு வருங்காலத்தில் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தலாம் என அஞ்சினார்,

ஸ்வாதி அர்ஜூன் வேறு துணைகளை தேடிக் கொண்டாலும் இந்த சிக்கல் பெரிதாகும். இவர்களே ஒன்றிணைந்தாலும் அர்ஜூனின் குடும்பத்தை அன்னியமாக பாவிக்கும் மனப்பான்மை வாழ்க்கை முழுவதும் பிரச்னையாக போகும்.

அவன் அவனது பெற்றோருக்கு மகன், அண்ணனுக்கு தம்பி என்ற கடமைகள் இருக்கின்றன. அவர்களுக்கு அவன் மீது உரிமை இருக்கிறது என்பதை ஸ்வாதி புரிந்து கொள்ள வேண்டும் என விரும்பினார்.

“நானா அவனான்னு முடிவு செய்துக்கோ” செக்கை தனது அம்மாவிடம் வைத்தாள் ஸ்வாதி..

“அர்ஜூன் பக்கம் இருக்கும் நியாயத்தை, அவனோட சூழ்நிலையை நீ புரிஞ்சுக்கணும் குட்டிமா. அவனுக்கும் கடமைகள் இருக்கு. அவன் மேல் உரிமைபட்டவங்க இருக்காங்க. விக்ரம் செய்தது சரின்னு நான் சொல்லவே இல்ல. ஆனா அர்ஜூன் செய்தது தப்பில்ல. நீ எப்போ அர்ஜூன் கூட பழைய மாதிரி பேசுறியோ அவனை ஏற்றுக் கொள்கிறாயோ அப்போ நான் உனக்கு அம்மாவா இருக்கேன். அது வரை அர்ஜூனுக்கு அத்தையா இருக்கேன்” ஸ்ரீதேவி சொல்ல விருட்டென அங்கிருந்து வீட்டிற்குள் சென்று தனது அறைக்குள் புகுந்து கொண்டாள்.

பாட்டியும் ரங்கநாதனும் ஸ்ரீதேவியின் முடிவிற்கு முழுமையான ஆதரவு தெரிவிக்க அர்ஜூனை அழைத்து கொண்டு இரண்டு தெரு தள்ளியிருக்கும் தனது பிறந்த வீட்டிற்கு சென்றார்.

ஒரு வருடம் ஆகியும் ஸ்வாதி தனது பிடிவாதத்தை கைவிடவில்லை.

அர்ஜூனும் அவனது பெற்றோரிடம், விக்ரமிடம் எந்த பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ளவில்லை.

வீடு அகடமி என்று தன்னை சுருக்கிக் கொண்டாள் ஸ்வாதி. பாட்டியோடு அவ்வப்போது சண்டை மட்டும் போடுவாள்.

“நான் போய் மன்னிப்பு கேட்டா அவ என்னை ஏற்றுக் கொள்வா” என்று அர்ஜூன் எவ்வளவோ கெஞ்சியும் ஸ்ரீதேவி ஒத்துக் கொள்ளவில்லை.

அன்றைய நாளுக்குப் பிறகு இன்று தான் இந்த பிரஸ் மீட் காரணமாக தான் ஸ்ரீதேவி இந்த பீச் ஹவுசிற்கு வருகிறார்..

கார் பீச் ஹவுசை அடைய வீட்டின் வாயிலிலேயே நின்றிருந்தான் அவன். இது எல்லாவற்றுக்கும் ஒரு வகையில் காரணமான விக்ரம். ஊன்று கோலை பற்றியபடியே ஸ்வாதியை ஏற இறங்க பார்த்தான்.

அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் உள்ளே சென்று விட்டிருந்தாள் ஸ்வாதி.

ஸ்ரீதேவிக்கோ அவனை பார்க்கும் போது கொஞ்சம் கதிகலங்கியது. இந்த இரண்டும் பத்திரிக்கையாளர்கள் முன் மோதிக் கொள்ளப் போகிறதா என்ன?

பீச் ஹவுசின் லானில் வரிசையாக போடப்பட்டிருந்த நாற்காலிகளில் நிருபர்கள் அமர்ந்திருக்க கேமராமேன் மற்றும் வீடியோகிராபர்கள்  தங்களது கருவிகளை  லைட்டிங்க்கு ஏற்ப பொசிஷன் செய்து கொண்டிருந்தார்கள்.

“இவ்வளவு பேர் வருவாங்கன்னு எதிர்ப்பார்க்கவில்லையே” கணவனின் காதில் மெல்ல கிசுகிசுத்தாள் வைஷாலி.

கேட்டரிங் ஆட்கள்  ஓர் ஓரத்தில் டேபிளை செட் செய்து கொண்டிருந்தார்கள்.

“நான் லஞ்சுக்கு எல்லாம் சொல்லலையே. இவ்வளவு அழகா யார் யோசிச்சு ஏற்பாடு செய்திருப்பாங்க. ஸ்வாதியா?” வைஷாலி  அரவிந்தைப் பார்த்து வினவினாள்.

“ஸ்வாதியா, அந்த ஆங்க்ரி பர்ட்க்கு டென்னிஸ் தவிர வேறேதும் தெரியாது. இதெல்லாம் அவ யோசித்திருக்க சான்சே இல்லை” உறுதியாக அரவிந்த் சொல்லிக் கொண்டிருக்க பீச் வீட்டின் ஒரு அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள் ஸ்வாதி.

“எதற்காம் அர்ஜுனை பார்ப்பதை தவிர்ப்பதற்காகவா?” யாருக்குமே புரியவில்லை.

“கண்ணா கொஞ்சம் நிதானமா ஹேண்டில் பண்ணுடா ப்ரெஸ்சை” இரண்டு நாடகளாக நூறு முறை சொல்லிவிட்டார் தந்தை. அவளிடமிருந்து எந்த எதிர் வினையும் இல்லை.

இந்த சந்திப்பு வேண்டாம் என பல முறை சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லை அவள்.

அவள் குணம்தான் எல்லாருக்கும் தெரியுமே.

நடப்பது நடக்கட்டும் என்று இறைவனிடம் தஞ்சம் புகுந்திருந்தனர் அனைவரும்

இன்னும் பத்து நிமிடங்களே இருக்க அர்ஜுன் இன்னும் வந்த பாடில்லை. அவன் வருவது நல்லதா வராமல் இருப்பது நல்லதா என யாருக்குமே புரியவில்லை.

சரியாக ஒரு நிமிடம் மீதமிருந்த நிலையில் வந்து இறங்கினான் அர்ஜுன். அவன் முக பாவத்தில் இருந்து அவன் என்ன நினைக்கிறான் என்பதை யாராலும் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

அவன் நேராக சென்று பத்திரிக்கையாளர்கள் முன் அமர அங்கே கேமரா வெளிச்சங்கள் பளிச்சிட அடுத்தாக விக்ரம் நடந்து வந்து அவன் அருகில் அமர்ந்தான். இவன் என்ன செய்து வைக்கப் போகிறான் என்று யாருக்கும் புரியவில்லை.

அவனையும் சேர்த்து கேமெராக்கள் பதித்துக் கொள்ள அப்போது வெளியே வந்தாள் ஸ்வாதி. அர்ஜுனும் விக்ரமும் அருகருகே அமர்ந்திருக்க அவர்களையே பார்த்தபடி நின்றாள் பெண்.

அன்றைக்கு விக்ரமின் தோள்களை அர்ஜுன் அணைத்துக்  கொண்ட போது நடந்த பிரளயம் ஸ்ரீதேவியின் கண் முன்னே வந்து வந்து போனது. உயிர் நடுங்கியது அவருக்கு.

இறைவா துணைக்கு வா. இந்த பிள்ளைகளின் இத்தனை வருட நட்பை காப்பாற்றி மீட்டுக் கொடு.

வா ஸ்வாதி” அழைத்தது வேறு யாருமில்லை. விக்ரமே தான்.

“என்ன நடக்கிறது இங்கே” என்று ஸ்ரீதேவியும் ரங்கநாதனும் பார்த்துக் கொண்டிருக்கும் போது ருக்மணியும் பார்த்தசாரதியும் அங்கே வந்தனர். ஆராதனா தான் அவர்களை அழைத்து வந்து ஸ்வாதியின் பெற்றோரின் அருகே அமர வைத்தாள்.

விக்ரமின் குரல் அழைக்கவும் அவனருகே சென்ற ஸ்வாதியை தன்னருகில் அமரும்படி சொன்னான். அவளும் மறுப்பேதும் சொல்லாமல் அமர்ந்தது பெற்றோருக்கு சற்றே அதிர்ச்சி தான். எனினும் அவர்கள் மனம் குளிர்ந்து போனது.

விக்ரமும் அர்ஜுனும் அருகருகே அமர்ந்திருந்த காட்சியைக் கண்டு பூரித்துப் போனார் ருக்மணி.

குறையுள்ள பிள்ளையைப் பெற்று விட்டோம் என்ற குற்றவுணர்வில், மற்றவர் கேலி செய்யும் போது எழுந்த பாதுகாப்புணர்வில் விக்ரமிற்கு அதிகப்படியான சலுகைகளை அவர் கொடுத்தது மட்டுமில்லாமல் அர்ஜூனையும் அவனுக்கு விட்டுக் கொடுக்கச் சொன்னது அர்ஜூனுக்கு செய்த அநியாயமோ என்று கடந்த ஒரு வருடமாக அவர் வேதனையில் உழன்று கொண்டிருந்தார்.

ஸ்ரீதேவியும் ரங்கநாதனும் அர்ஜூனின் பொறுப்பேற்றுக் கொண்ட போதும் மகனைப் பற்றி ஒரு பொழுதும் அவர் கேட்டறியாமல் இருந்ததில்லையே. அவன் நல்முறையில் வளர்ந்து சிறந்த டென்னிஸ் ப்ளேயராக பேரும் புகழும் பெற்றது அந்த தாயுள்ளத்திற்கு எத்தனை பேரானந்தத்தை தந்தது என்று அவர் மட்டும் தானே அறிவார்.

ஸ்ரீதேவி அவரின் மனவோட்டதை அறிந்து கொண்டது போல மெல்ல அவரின் கரத்தைப் பற்றி தட்டிக் கொடுத்தார்.

விக்ரமின் இருபுறமும் ஸ்வாதியும் அர்ஜூனும் அமர்ந்திருக்க கேமராக்கள் அதை பதிவு செய்து கொண்டிருந்தன.

மெல்ல எழுந்து நின்றான் விக்ரம். “என்னை அறிமுகப் படுதிக்க அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன்” என்றான் கம்பீர குரலில். அங்கே இருந்த எல்லாரிடத்திலும் அப்படி ஒரு அசாத்திய மௌனம்.

அடுத்து என்ன சூறாவளி வருமோ என்ற பயம் அனைவர் இடத்திலும்.

“எங்கள் அழைப்பை ஏற்று இந்த பிரஸ்மீட்டிற்கு வருகை தந்திருக்கும் மீடியா நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. ஸ்வாதி அழைத்த பிரஸ் மீட்டில் விக்ரமிற்கு என்ன வேலை என்று உங்கள் அனைவரின் மனதிலும் கேள்வி இருக்கும். இல்லையா”” மைக்கில் கேட்டவன் ஒரு முறை ஸ்வாதியை திரும்பிப் பார்த்தான்.

அவளது  விழிகளில் சுவாரஸ்யம்

“ஸ்வாதியின் அண்ணனாக உங்கள் அனைவரின் முன்னிலையிலும் அவளுக்குப் பரிசு ஒன்றை கொடுக்க ஆசைப்படுகிறேன்” விக்ரம் கூறவும் ஸ்வாதி ஆச்சரியத்தில் திகைத்தாள்.

“விக்ரம் பிரஸ் மீட் அரேஞ் பண்றானாம். நம்மை பதினோரு மணிக்கு வந்தா போதும்னு சொன்னான். பிரஸ் மீட் முடியும் வரை வீட்ல எதுவும் சொல்லிக்க வேண்டம்ன்னு சொன்னான்” அர்ஜூன் ஸ்வாதியிடம் சொல்லியிருந்தான். அவளும் அவன் சொன்னதைக் கேட்டு அதன் படியே இங்கே வந்திருந்தாள்.

ஸ்வாதி அர்ஜுனைப் பார்க்க அவன் முகத்திலும் அதே அதிர்ச்சியைக் கண்டவள் அவனுக்கும் ஒன்றும் தெரிந்திருக்கவில்லை என்று அறிந்தாள்.

“நக்ஷத்ரா ட்ரஸ்ட். அது தான் நான் கொடுக்கும் பரிசு. ஸ்வாதி இதன் முக்கிய ட்ரஸ்ட்டீயாக இருப்பார். ருபா க்ரூப்ஸ் மெயின் ட்ரஸ்ட்டராக (நிதி வழங்குபவராக) செயல்படும். டென்னிஸ் மீது ஆர்வமும் அதில் திறமையும் இருக்கும் சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்குப் பயிற்சி அளித்து ஸ்வாதி அர்ஜுன் போல சர்வேதச சாம்பியன்களாக உருவாக்குவதே இந்த ட்ரஸ்ட்டின் நோக்கம்” விக்ரம் சொல்லச் சொல்ல ஸ்வாதியின் விழிகள் பனித்தன.

நிருபர்கள் அனைவரும் கைதட்டி வாழ்த்து தெரிவிக்க ஒரு கையை உயர்த்தி நன்றி சொல்லி தொடர்ந்தான்.

“ரங்கநாதன் அங்கிள்கிட்ட என்னோட ரிகுவஸ்ட். அவரின் அகடமியை நக்ஷத்ரா ட்ரஸ்ட் உடன் இணைக்க வேண்டுகிறேன்” என்று கூற அவரை நோக்கி கேமராக்கள் திரும்ப அவர் தனது தலையசைப்பிலேயே முழு சம்மதத்தை தெரிவித்தார்.

“இப்போது நீங்கள் உங்கள் கேள்விகளை கேட்கலாம்” என்று விக்ரம் சொல்லி அங்கிருந்து எழப் போக “விக்ரம் சார் உங்களிடம் ஒரு கேள்வி” என்று அவனை நிறுத்தினார் ஒரு நிருபர்.

“உங்களோட தம்பி அர்ஜூன் இருக்க ஸ்வாதியை ட்ரஸ்ட்டியாக அறிவித்திருப்பதன் காரணம் என்ன”

“எனக்கு அர்ஜூன் வேறு ஸ்வாதி வேறில்லை” புன்னகையுடன் சொல்ல அங்கே மீண்டும் கைதட்டல்கள்.

ஸ்வாதியும் அர்ஜுனும் அவனை நிறைவான புன்னகையோடு பார்த்திருந்தனர்.

“இது என்ன மாயம்?” மோதிக் கொண்டிருந்த மூவருக்கும் என்ன ஆனது புரியாமல் பார்த்திருந்தனர் அனைவரும் .நடந்தது இதுதான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!