Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

29. ஷேஹா ஸகி - விழி கொல்லும் விஷமா நீ

விழி கொல்லும் விஷமா நீ EPI 03

விழி கொல்லும் விஷமா நீ..

 

EPISODE 03

 



Advertisement

 

நிஹாரிகாவின் விழிகள் புன்னகைத்து பின் அவளெதிரே நின்றிருந்தவனின் விழிகளில் தெரிந்த அந்நியத்தன்மையை கண்டுகொண்டதும் அப்பட்டமான வலியை பிரதிபலித்தன.

Advertisement

 

Advertisement

“ஓ.. நீங்க சொன்னது இந்த பொண்ணுதானா!”

 

யாதவின் கேள்வியில் தன்னை நோக்கிய ஒரு ஏளனம் புதைந்திருப்பது போல அவளுக்குத் தோன்றியது.

Advertisement

 

அவளுடைய முகம் வாட, அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அங்கு சிம்மாசனம் போலிருந்த தன் இருக்கையில் மிதப்பாக அமர்ந்துக்கொண்டான் அவன்.

 

அவனுடைய விழிகள் அவளை கூர்மையாக அளவிட்டன.

 

“எனக்கு எந்தவிதமான எக்ஸ்பெக்டேஷனும் கெடையாது. பட் வன்திங்  வேலையில நேர்மை இருக்கணும். இருக்கா இல்லன்னா…”

 

அவனின் கேள்வி அவளிதயத்தை குத்திக் கிழிக்க, அவமானத்தில் அவளுடைய முகம் கறுத்துவிட்டது.

 

ஆனால், பக்கத்திலிருந்த ஜகனுக்கு தன் முதலாளியின் வார்த்தைகளிலிருந்த குதர்க்கம் கொஞ்சமும் புரியவில்லை.

 

“அய்யோ சார், இவ எனக்கு தெரிஞ்ச பொண்ணுதான். ரொம்ப தங்கமான பொண்ணு. வேலையில கெட்டிக்காரின்னு சொன்னாங்க” என்று ஜகன் வாயிற்கு வந்ததை சொல்லி அவளுக்கு புகழ் பாட, யாதவின் இதழ்கள் ஏளனமாக வளைந்தன.

 

“இஸ் இட்!”

 

இரு புருவங்களை உயர்த்தி போலி ஆச்சரியத்தோடுக் கேட்டவன், அவளுடைய முகம் கன்றி சிவந்திருப்பதை திருப்தியோடு பார்த்தான்.

 

“ஜகன், வன் வீக்தான் ட்ரெயினிங். அதுக்குள்ள வேலைய கத்து கொடுத்துடுங்க கொட் இட்?” என்றுவிட்டு தன் முன்னே இருப்பவளை பொருட்டாகவே மதிக்காதவன் போல அந்த அறைக்குள் இருந்த மற்றொரு அறைக்குள் நுழைந்து கதவை அடித்துச் சாத்தினான்.

 

நிஹாரிகாவுக்கு அழுகை தொண்டையை அடைத்தது. அது இடது பக்க நெஞ்சை குத்திக் கிழிப்பது போலிருக்க, விழி நுனி வரை நின்ற கண்ணீரை இமை சிமிட்டி உள்ளிழுத்துக் கொண்டாள் பெண்ணவள்.

 

ஜகனுக்கு இவளுக்கு எப்படியாவது வேலையை கற்றுக் கொடுத்துவிட்டு வெளிநாட்டிலிருக்கும் தன் மகனருகே சென்றால் போதுமென்று இருந்தது.

 

“மிஸ் நிஹாரிகா, இது ஒன்னும் அவ்வளவு கஷ்டம் கிடையாது. சாரோட பர்சனல் பீஏ அப்படிங்குறதால அவர் எப்போ என்ன பண்ணணும்னு செட்யூல் போடப் போறதே நீதான்.  கிரிக்கெட் மாதிரிதான் இந்த ஹோட்டலும். சோ… ரெண்டு விஷயத்த ஹேன்டில் பண்ண வேண்டியதா இருக்கும். நாளைக்கு இதே டைமுக்கு இங்க வந்துரு. ஐ வில் எக்ஸ்ப்ளைன் எவ்ரிதிங்”

 

அவர் பேசி முடித்ததும் விட்டால் போதுமென்று அந்த இடத்திலிருந்து ஒரே ஓட்டமாக ஒடி வெளியே வந்தாள் அவள்.

 

இத்தனை நேரம் மூச்சை இழுத்துப் பிடித்து வைத்திருந்தது போல வேக பெருமூச்சுக்களை விட்டவாறு திரும்பி யாதவ்வின் ஹோட்டலை ஒரு பார்வைப் பார்த்தாள்.

 

ஏதோ ஒரு கூரிய பார்வை உள்ளிருந்து அவளை துளைத்தெடுப்பது போல அவளுக்குத் தோன்ற, அதற்குமேல் அந்த இடத்தில் அவளால் நிற்கக் கூட முடியவில்லை.

 

வந்த ஆட்டோ ஒன்றைப் பிடித்து அவள் சென்றிருக்க, அதேநேரம், அட்வடைஸிங் ஃபேஷன் மாடலிங் கம்பனி ஒன்றிற்குள் சிறு பதற்றத்தோடு நுழைந்தாள் ஆதிரா.

 

“ஹெலோ எக்ஸ்கியூஸ் மீ! மிஸ்டர் வருண நான் பார்க்கணும். மாடலிங் சம்பந்தமா பேசுறதுக்காக அவர மீட் பண்ண அப்பாய்ன்மென்ட் கொடுத்திருந்தாரு. கென் ஐ…”

 

அங்கு ரிசெப்ஷனிலிருந்த பெண்ணிடம் கேட்டவள் அவள் விசாரித்து சொல்லும் வரை அந்த வரவேற்பரையில் காத்திருந்தாள்.

 

அந்த நகரத்திலேயே புகழ் பெற்ற மாடலிங் கம்பனி அது. பல முண்ணனி நடிகர் நடிகைகளின் ஃபோட்டோ ஷூட்கள், ஃபேஷன் ஷாக்களிலிருந்து பெரிய செலவிலான பல விளம்பரங்களும் தயாரிக்கப்பட, இங்கு வாய்ப்பு கிடைப்பதுதான் பெரும் பாடு.

 

ஆனால் எங்கிருந்து அதிர்ஷ்டம் கிடைத்ததோ!  இந்த மாடலிங் கம்பனியின் மேனேஜர் தன்னை சந்திக்க சொல்லி ஆதிராவை அழைத்திருக்க, சிட்டாய் பறந்து வந்துவிட்டாள் அவள்.

 

“மிஸ் ஆதிரா, உள்ள ஷூட்டிங் நடக்குது. சார் கொஞ்சம் பிஸியா இருக்காரு. பட் நோ ப்ராப்ளம் உங்கள அங்க வந்து மீட் பண்ண சொன்னாரு. ஸ்ட்ரைட்டா போனீங்கன்னா லிஃப்ட் இருக்கு, ஃபார்த் ஃப்ளோர்”

 

அந்த பெண் சொன்னதும் வேகமாக நான்காம் தளத்திற்கு சென்றாள் அவள்.

 

இது ஒன்றும் அவளுக்கு புதிதல்ல. பல ஆடிஷன்களில் இதற்கு முன் கலந்துக்கொண்டிருக்கிறாள் தான், ஆனால் வெற்றிதான் இதுவரை கிட்டியதில்லை.

 

லிஃப்டின் கதவு திறந்ததும் ஷூட் நடக்கும் இடத்தை நோக்கி சிறு பயத்தோடும் தயக்கத்தோடும் அவள் மெல்ல செல்ல, பின்னாலிருந்து ஓடி வந்த ஆடவனின் உடல் அவளுடலோடு தாராளமாக மோதியது.

 

“அவுச்..”

 

அவன் இடித்துச் சென்ற இடத்தை பரபரவென தேய்த்துவிட்டவள், “கண்ணு தெரியாத கம்முனாட்டி, எப்படி இடிச்சுட்டு போறான் பாரு” என்று திட்டிவிட்டாள் நிமிர்ந்தும் பார்க்காமல்.

 

ஆனால் அவளின் துரதிஷ்டமோ என்னவோ! அந்த வார்த்தைகள் முன்னே சென்றவனின் செவிகளில் சரியாக விழுந்து தொலைக்க, அவளை நோக்கி ஒரு அடி வைத்தவன் நேரத்தைப் பார்த்துவிட்டு ஷூட்டிங் நடக்கும் இடத்திற்குள் நுழைந்தான்.

 

அவன் சென்ற சில நிமிடங்கள் முயன்று தைரியத்த வரவழைத்தபடி ஆதிராவும் அந்த ஹாலுக்குள் நுழைய, உள்ளிருந்த ஆட்களோ பம்பரம் போல் ஓடிக்கொண்டிருந்தனர்.

 

ஸ்டூடியோ முழுக்க ஒளி வெள்ளம் பரவியிருந்தது. ஒருசிலர் கேமராக்களை தயார்படுத்தி நின்றுக்கொண்டிருக்க, மேக்கப் ஆர்டிஸ்ட் ஹெயார் ஸ்டைலிஸ்ட்டிலிருந்து தொழிநுட்ப இயக்குனர்கள் வரை வேலையில் மும்முரமாக இருந்தனர்.

 

ஆனால் அனைவரின் கவனமும் வெளிச்சங்களுக்கு நடுவே திரும்பி நின்றிருந்த அந்த ஒருவனின் மீதுதான் நிலைக்குத்தி நின்றிருந்தது.

 

விழிகளை சுருக்கி அந்த இடத்தை சுற்றிப் பார்த்த ஆதிராவுக்கு உலக புகழ்பெற்ற ஆடை கம்பனியின் ப்ரேன்டை விளம்பரப்படுத்தும் ஷூட் என்று மட்டும் புரிந்துக்கொள்ள முடிந்தது.

 

“இது ரொம்ப ஃபேமஸான ப்ரேன்டாச்சே! கண்டிப்பா இதை பண்ற மாடல் பெரிய ஆளாதான் இருக்கணும். யாரா இருக்கும்?”

 

உள்ளுக்குள் எழுந்த ஆர்வத்தோடு பார்க்க முயன்றாள். ஆனால் ஆட்கள் கூடியிருந்ததால் சரியாக தெரியவில்லை அவளுக்கு.

 

சலித்துக்கொண்டவள் சற்று தள்ளிச் சென்று அவன் நின்றிருந்த இடத்தை எட்டிப் பார்க்கவும், “இப்போ நான் சொன்னதும் நீங்க திரும்பணும் சார். ஓகே ரெடி ஷூட்!” என்று கேமராமேன் சொல்லவும் நேரம் சரியாக இருந்தது.

 

அவர் சொல்லி முடிக்க, ஸ்டைலாக திரும்பியவனை சுற்றி பல கேமராக்களின் வெளிச்சம் பட்டுத் தெறித்தது.

 

அதில் ஆதிராவுக்கே விழிகள் சற்று கூச, இருந்தும் அவனை விட்டு மூடிக்கொள்ள மறுத்தது அவளுடைய விழிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

 

“ஹீ இஸ் பர்ஃபெக்ட் ஆஸ் ஆல்வேய்ஸ்!”

 

கேமராமேனின் வார்த்தைகள் பெருமையாக வர, இன்னும் பல போஸ்களை கொடுத்தான் அவன்.

 

ஆதிரா ஒன்றும் அவனை அறியாதவள் அல்ல. வீதிகளிலுள்ள பல பேனர்களிலும் டீவி விளம்பரங்களிலும் அவனை அடிக்கடி பார்த்ததுண்டு.

 

அப்போதே அவளை சற்று ரசிக்க வைப்பவன் இன்று நேரில் அவளை வியக்க வைத்துவிட்டான்.

 

வாயில் ஈ போகாத குறையாக அவனையே அவள் வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டு நிற்க, “ஹேய் கேர்ள் வூ ஆர் யூ?” என்றொரு குரல் பின்னாலிருந்து கேட்டது.

 

உடனே திரும்பிப் பார்த்து, “அது.. அது வந்து நான்..” என்று திணறியவளுக்கு வார்த்தைகள் தந்தியடித்தன.

 

ஆனால், அவளெதிரே நின்றிருந்தவனின் விழிகள் அவளை கூர்மையாகப் பார்க்க, “ஆதிரா ரைட்?” என்று கேட்டான் சந்தேகத்தோடு.

 

“யெஸ் சார், நான் மிஸ்டர் வருண மீட் பண்றதுக்காக வந்தேன். ரிசெப்ஷன்லதான் என்னை இங்க போக சொல்லி…”

 

அவள் கைகளைப் பிசைந்தபடி தயக்கத்தோடு இழுக்க, மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியவாறு அவளை மேலிருந் கீழ் அளவிடுவது போல் பார்த்தான் அவன்.

 

அந்த பார்வையில் நெளிந்தவள் சங்கடத்தோடு, “மிஸ்டர் வருண்…” என்று இழுத்தபடி திருவிழாவில் காணாமல் போன குழந்தைப் போல் சுற்றிமுற்றித் தேட, வாய்விட்டு சிரித்தான் அந்த ஆடவன்.

 

“சாரி ஃபார் தட். மாடலிங்க்கு பர்ஃபெக்ட்டான்னு பார்த்தேன். என்ட் ஐ அம் வருண், உக்கார்ந்து பேசலாமா?”

 

அவன் புன்னகையோடு கேட்டுக்கொண்டே முன்னே செல்ல, சில கணங்கள் சிலையாகி நின்றவள் பின் நடப்புக்கு வந்து அவன் பின்னே சென்றமர்ந்தாள்.

 

“சொல்லுங்க மிஸ் ஆதிரா, இதுக்கு முன்னாடி ஏதாச்சும் மாடலிங் கம்பனில வர்க் பண்ணியிருக்கீங்களா?”

 

விழிகளைக் கூர்மையாக்கி வருண் கேட்டதும், இல்லையென்பது போல வேகமாக தலையசைத்தாள் அவள்.

 

“ஓ…” நாடியை நீவி விட்டவாறு சில கணங்கள் யோசித்தான் அவன்.

 

“மிஸ் ஆதிரா, இந்த கம்பனிய பத்தி நான் உங்ககிட்ட சொல்ல தேவையில்ல. ஹை பட்ஜட் ஆட்ஸ்ல இருந்து பல செலப்ரிட்டீஸ்க்கான ஷூட்ஸ் வரைக்கும் நாங்கதான் பண்றோம். இங்க மட்டுமில்ல ஃபாரின்ல கூட பல ஃபேஷன் ஷோஸ் ஆர்கனைஸ் பண்ணியிருக்கோம். யூ நோ வன்திங், எங்ககிட்டதான் இந்தியாவோட டாப் மாடல்ஸ் இருக்காங்க. அப்படியிருக்குற ஒரு கம்பனில எந்தவொரு எக்ஸ்பீரியன்ஸும் இல்லாம ஜாய்ன் பண்ணுறது… தட்ஸ் நொட் அ ஈஸி டாஸ்க்”

 

அவன் நிறுவனத்தை பற்றிய புகழைப் பாடிவிட்டு இறுதியில் உடன்பாடு இல்லாதது போல பேச, ஆதிராவின் இதயமோ காதிற்கு கேட்கும் அளவிற்கு படபடவென அடித்துக்கொண்டது.

 

வேகமான இதயத் துடிப்பையும் நடுக்கத்தையும் மறைக்க அவள் பாடுபட, அடுத்து வருண் சொன்னதைக் கேட்டதும்தான் ‘அப்பாடா’ என்று நிம்மதி பெருமூச்சு வெளியானது அவளிடமிருந்து.

 

“நோ ப்ராப்ளம் ஆதிரா, டெம்பரரியா இங்க வர்க் பண்ண அசைன் பண்றேன். இப்போதைக்கு சின்ன சின்ன ஆட்ஸ்ல நடிக்கிறதுக்கு உங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாம்னு இருக்கேன். இஃப் யூ மேக் மீ செடிஸ்ஃபைட் வித் யூவர் வர்க், அப்பறம் யோசிக்கிறேன்”

 

அவன் சொல்லி முடிக்க, ஆதிரா உள்ளுக்குள் குத்தாட்டம் போடாத குறைதான்.

 

நன்றி சொல்வதற்கு கூட நா எழ மறுக்க, ஆனந்த அதிர்ச்சியில் திக்குமுக்காடி போயிருந்தாள் அவள்.

 

“தேங்க் யூ சோ மச் சார்.. தேங்க்…”

 

அவள் சொல்லி முடிக்கவில்லை, பின்னாலிருந்து கேட்ட குரலில் அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.

 

“என்ன மிஸ்டர் வருண், பர்ஃபெக்ட் மாடல கூட உங்களால செலக்ட் பண்ண முடியல. சோ சேட்! உடனே வாய்ப்பு கொடுத்து தப்பு பண்றீங்களோன்னு தோனுது”

 

அந்த ஆண்மை நிறைந்த குரலில் வருண் நிமிர்ந்துப் பார்க்க, திடுக்கிட்டுத் திரும்பினாள் ஆதிரா.

 

சற்று நேரத்திற்கு முன் கேமராவுக்கு நடுவே இருந்து உடலை முன்னும் பின்னுமாய் வளைத்து போஸ் கொடுத்துக்கொண்டிருந்தவன் இப்போது பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை இட்டவாறு ஸ்டைலாக அவளெதிரே நின்றிருந்தான்.

 

“என்ன மிஸ்டர் சித்தார்த், புது மாடல்ஸ்ஸ வெல்கம் பண்ண வேண்டிய நீங்களே இப்படி சொல்லலாமா? வாய்ப்பு கொடுத்தாதானே அவங்களும் அவங்களோட திறமைய காட்ட முடியும்”

 

வருண் சரியாகத்தான் சொன்னான், அந்த வார்த்தைகள் ஆதிராவின் மனதையும் குளிர வைத்தன.

 

ஆனால், இந்த பிடிவாதக்காரனுக்குதான் அதை ஏற்க முடியவில்லை.

 

“நோ நோ வருண், ஈஸியா எல்லாரையும் நம்பிர கூடாது. அதுவும் இந்த மாதிரி பொண்ணுங்கள, இன் மை ஓபீனியன், ஷீ இஸ் நொட் விட் ஃபார் திஸ் வர்க். யோசிச்சு முடிவு பண்ணுங்க”

 

அவன் தலையில் பெரிய குண்டாய் போட்டுவிட்டு அவன் பாட்டிற்கு நகர்ந்து விட, வருணோ அலட்சியமாகத் தோளைக் குலுக்கிவிட்டு சென்றான்.

 

ஆனால் நடுவில் நின்றிருந்த பேதைக்குதான் கோபம் சுர்ரென்று ஏறியது.

 

முதல் பார்வையிலிருந்து அவனை ரசித்தே பழகியவளுக்கு இப்போது, ‘எவ்வளவு திமிர்?’ என்றுதான் நினைக்கத் தோன்றியது.

 

தான் அணிந்திருந்த மேல் கோட்டை கழற்றிவிட்டு வெளியில் செல்ல எத்தனித்தவனின் எதிரே சென்று மூக்கு விடைக்க முறைத்தபடி நின்றாள் ஆதிரா.

 

“ஏன் இப்படி பண்ணீங்க, எங்களுக்கு எல்லா வாய்ப்பு கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்னு தெரியுமா, அதையெல்லா யோசிக்கவே மாட்டீங்களா?” என்று அவள் கத்திக்கொண்டே போக, சுற்றிமுற்றி பார்த்த சித்தார்த் அவளை  அலட்சிய புன்னகையோடு ஒரு பார்வைப் பார்த்தான்.

 

“வூ த ஹெல் ஆர் யூ திங் ஆஃப் யூவர் செல்ஃப், உன்னை பத்தி நான் எதுக்கு கவலைப்படணும்? ஜஸ்ட் கெட் அவுட் ஃப்ரொம் ஹியர்”

 

ஏதோ நாயை துரத்தி விடுவது போல அவன் பேசிய விதத்தில் ஆதிராவுக்கு கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது.

 

“ச்சீ நீயெல்லா மனுஷனா? கஷ்டப்பட்டு வாழ்க்கையில ஜெயிச்சிருந்தா புரிஞ்சிருக்கும். அப்பாவோட காசுல நினைச்சத அடையுற உன்ன மாதிரி நெப்போ கிட்ஸ்க்கு எங்க கஷ்டம் புரியவே புரியாது. உன்ன பார்க்கவே அருவருப்பா இருக்கு”

 

என்று ஆத்திரத்தில் கத்திவிட்டு நகரப் போனவளின் முழங்கையைப் பற்றி தன்னருகே இழுத்தான் சித்தார்த்.

 

அவனுடைய விழிகள் கோபக் கனலைக் கக்க, அந்த பார்வையில் உண்டான பயத்தில் பெண்ணவளுக்க உடல் வெளுத்துப் போனது.

 

அவனின் பிடியிலிருந்நு அவள் தன் கரத்தை விடுவிக்க போராட, அவளின் முயற்சி அவனின் பிடியை மேலும் உடும்புப் பிடியாக்கியது என்றுதான் சொல்ல வேண்டும்.

 

“ஹவ் டேர் யூ! என்னோட ஸ்டேட்டஸுக்கு  கொஞ்சம் கூட தகுதியே இல்லாத நீயெல்லா எந்த தைரியத்துலடீ என் முன்னாடி பேசுற! நான் நினைச்சா எந்த கம்பனிலயும் உனக்கு வாய்ப்பே கிடைக்காத மாதிரி பண்ண முடியும். பட் உனக்கு தைரியம் ஜாஸ்திதான்”

 

என்ற சித்தார்த்தின் பார்வை அவளை மேலிருந்து கீழ் ஏளனத்தோடு அளவிட்டது.

 

“கண்ணு தெரியாத கம்முனாட்டி அப்பன் காசு… இந்த பேச்சுக்கெல்லா கூடிய சீக்கிரம் விளைவ நீ அனுபவிப்ப ஜஸ்ட் வெயிட் என்ட் சீ!”

 

ஒவ்வொரு வார்த்தைகளையும் அழுத்தி அதே சமயம் கோபத்தை அடக்கிய குரலில் சொன்னவன் அவளை உதறிவிட்டு நகர்ந்திருக்க, அப்போதுதான் ஆதிராவுக்கு மூளைக்கு உரைத்தது.

 

இரு பெண்களின் வாழ்க்கையும் இரு ஆடவர்களால் தலை கீழாக சுழற்றியடிக்க காத்திருக்க, முடிவுதான் என்னவோ!

 

*************

 

கதை எப்படி போகுது மக்களே… வெயிட்டிங் ஃபார் யூவர் கமென்ட்ஸ்… 😍😍

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!