விழி கொல்லும் விஷமா நீ EPI 04

“வாட்! நிஜமாதான் சொல்றியா? சத்தியமா நான் இதை எதிர்பார்க்கல நீஹா”
ஆதிராவின் குரல் ஆச்சரியத்தில் வெளிவர, தலையை மேலும் கீழும் ஆட்டி வைத்தாள் நிஹாரிகா.
Advertisement
“எனக்.. எனக்கு பயமா இருக்கு ஆதி, அவன் முன்னாடி நிக்கும் போது மூச்சு விடக் கூட முடியல. அது.. அது என்ன ஃபீல்னு கூட என்னால சொல்ல முடியல. அவன சந்திக்க மாட்டோமான்னு ஒவ்வொரு நிமிஷமும் ஏங்கிட்டு இருந்தேன். ஆனா இன்னைக்கு எங்கேயாச்சும் போய் ஓடி ஒளிஞ்சிருவோமான்னு தோனுச்சு”
Advertisement
என்று நிஹாரிகா சொல்லி முடிக்க, தோழியை பரிதாபமாகப் பார்த்தாள் மற்றவள்.
Advertisement
“பண்ண தப்புக்கான தண்டனைய விட அதிகமாவே நீ அனுபவிச்சிட்ட. இனிமே நீ ஓடி ஒளியணும்னு எந்த அவசியமும் இல்ல. என் ஆஃபீஸ் மேட்டுக்கு ஜகன் சார் ரொம்ப பழக்கம், அவ கூட இதுதான் வேலைன்னு என்கிட்ட சொல்லல. எனிவேய், ஐ அம் சோ ஹேப்பீ”
Advertisement
அவள் தோழியை அணைத்துக்கொள்ள, உள்ளுக்குள் பயபந்து உருண்டாலும் வராத புன்னகையை வரவழைத்து சிரித்தாள் நிஹாரிகா.
“ஆமா… நீ கூட ஏதோ புது மாடலிங் கம்பனிக்கு ஆடிஷனுக்காக போறேன்னு சொன்னல்ல. அது என்னாச்சு? வேலை கிடைச்சிருச்சா?”
அவள் விழிகளில் ஆர்வத்தோடு கேட்க, மற்றவளின் முகத்தில் கோபத்தால் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“எல்லாமே அவனாலதான் ச்சீ… அவன் எல்லா மனுஷனா சரியான சைக்கோ! நல்லா போயிக்கிட்டு இருந்துச்சு எல்லாத்தையும் கெடுத்துட்டான்” என்று ஆதிரா படபடவென பொரிந்துக்கொண்டே போக, நிஹாரிகாவின் புருவங்கள் யாரை கூறுகிறாள் என்ற கேள்வியோடு முடிச்சிட்டன.
அவளின் பார்வையிலிருந்த கேள்வியை உணர்ந்தவள், “யூ நோ ஹிம் நீஹா, டாப் மாடல் சித்தார்த் மஹரந்தன். பார்க்க நல்லா இருக்கான்னு எத்தனை முறை அவன பேன்னர்ஸ்ல பார்த்து சைட் அடிச்சிருப்பேன். அழகை பார்க்காதே அதில் ஆபத்து இருக்கும்னு பெரியவங்க சும்மாவா சொல்லியிருக்காங்க” என்று காலையில் நடந்தது மொத்தத்தையும் மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள்.
அதைக் கேட்ட நிஹாரிகாவுக்குமே சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
“இப்போ ஃபைனல்லா உனக்கு வேலை கிடைச்சதா இல்லயா?” அவள் புரியாமல் கேட்க, “தெரியல நீஹா, அவன் அந்த கம்பனில டாப் மாடல். கண்டிப்பா கூப்பிட மாட்டாங்கன்னு நினைக்கிறேன்”
அவளின் குரலில் இந்த வாய்ப்பும் கைவிட்டு போய்விடுமோ என்ற வலி அப்பட்டமாகத் தெரிந்தது.
அன்றைய இரவை இரு பெண்களும் தாங்கள் சந்தித்த ஆண்களை நினைத்து ஒவ்வொரு விதமான மனநிலையில் கழிக்க, அடுத்தநாளும் விடிந்தது.
காலையில் சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே ஜகனின் முன்னே நின்றிருந்தாள் நிஹாரிகா.
தொடர்ந்து நான்கைந்து நாட்கள் அவர் அவளுக்கான வேலையை கற்றுக் கொடுக்க, நிஹாரிகாவுக்குதான் தலையே சுற்றிவிட்டது.
கிட்டத்தட்ட ஒரு வாரம் கழிந்த நிலையில்,
“சார் வன் வீக்தான் உனக்கு ட்ரெயின் பண்ண கொடுத்தாரு. அதுக்குள்ள என்னால முடிஞ்ச அளவுக்கு வேலை என்ன மாதிரின்னு கத்து கொடுத்திருக்கேன். மே பீ டூ ஆர் த்ரீ டேய்ஸ்ல சார் வெகேஷன்லயிருந்து திரும்பி வரலாம். அவரே உன்ன கான்டேக்ட் பண்ணுவாரு. அப்பறம் நீ வேலைய ஆரம்பிக்கலாம். என்ட் நான் வேற டூ டேய்ஸ்ல என் மகன்கிட்ட போயிடுவேன். ஏதாச்சும் சந்தேகம்னா யூ கென் கான்டேக்ட் மீ எனிடைம்”
அவர் சொல்ல, பூம்பூம் மாடு போல் எல்லா பக்கமும் தலையாட்டி வைத்தாள் அவள்.
இங்கு இவ்வாறு இருக்க, பாதி புரிந்தும் புரியாததுமாக இருந்த ஃபைலை தலையை சொரிந்த வண்ணம் பார்த்துக்கொண்டிருந்தாள் ஆதிரா.
“இதை பார்த்தா படிச்சதும் மறந்துரும் போலயே! அய்யோ அய்யோ அய்யோ” தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக அந்த ஃபைலை வெறித்துப் பார்த்தவள் ஒரு பெருமூச்சை விட்டு கீபோர்டில் கையை வைக்கப் போக, சரியாக ஒரு அழைப்பு.
திரையில் தெரிந்த எண்ணை விழி பிதுங்கப் பார்த்த ஆதிரா, உடனே அழைப்பையேற்று காதில் வைத்து “ஹெலோ சொல்லுங்க சார்” என்று பதற்றமாகச் சொல்ல, “மிஸ் ஆதிரா, இந்தளவுக்கு நீங்க இர்ரெஸ்பான்சிபிளா இருப்பீங்கன்னு நான் நினைச்சும் பார்க்கல”
மறுமுனையிலிருந்த வருணின் குரல் அதிருப்தியோடு வந்தது. ஆதிராவுக்கு ஒருகணம் எதுவுமே புரியவில்லை.
“வை சார், என்னாச்சு?” என்று அவள் புரியாமல் கேட்க, “இந்த கம்பனில அவ்வளவு ஈஸியா யாருக்கும் வாய்ப்பு கிடைச்சிராது. உங்களுக்கு ஆடிஷன் கூட வைக்காம வெறும் இன்டர்வியூ வச்சு வாய்ப்பு கொடுக்க நினைச்சேன். பட் ஒரு வாரமா நோ கால் நோ மெசேஜஸ். என்ட் கம்பனி பக்கம் கூட எட்டி பார்க்கல. வாட் ஹேப்பன்ட்?”
வருண் சொல்லி முடிக்க, வெளிப்படையாக தலையில் அடித்துக்கொண்டாள் பெண்ணவள்.
“இல்ல சார், அன்னைக்கு சித்தார்த் சார் சொன்னத கேட்டு நீங்க யோசிச்சப்போ வேலை கிடைக்காதோன்னு நான் நினைச்சு… சா.. சாரி சார்! நான் இதை பத்தி க்ளெரிஃபை பண்ணியிருக்கணும்”
வாய்ப்பு கிடைத்தும் பொடுபோக்காக இருந்துவிட்டோமோ என்று சிறு குற்றவுணர்ச்சி அவளுக்குள் தோன்ற, அந்த சங்கடத்தில் அவளுக்கு வார்த்தைகளே வரவில்லை.
“ஒ காட்! அன்னைக்கு சார்கிட்ட நான் சொன்னத நீ கவனிக்கலன்னு நினைக்கிறேன்” என்ற வருண் ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு, “என்ட் சித்தார்த் இந்த கம்பனில மாடல் மட்டுமில்ல இந்த கம்பனியோட டூவென்டிஃபைவ் பர்சென்டேஜ் ஷெயார் அவரோடதுதான். அவருக்கும் இந்த கம்பனி மேல ஒரு அக்கறை இருக்கு. அதனாலதான் அப்படி பேசியிருப்பாரு. அதர்வைஸ் புது மாடல்ஸ்க்கு ரொம்ப சப்போர்ட் பண்ற பர்சன் அவரு. யூ டோன்ட் மைன்ட் தட். இப்போவும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு. நாளைக்கு காலையில ஒரு ஆட் ஷூட்டிங் பத்தி டிஸ்கஸ் பண்ணலாம். வெயிட்டிங் டூ சீ யூ”
வருண் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்திருக்க, ஆதிராவுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
இடம் பொருள் மறந்து கத்திக்கொண்டு எழுந்தவள் கைகளை விரித்து இடையை வளைத்து சந்தோஷத்தில் ஆட, சுற்றியிருந்தவர்களோ வாயை பிளந்து அவளைதான் பார்த்துக்கொண்டிருந்தனர்.
நிஹாரிகா மற்றும் ஆதிராவின் வாழ்க்கையில் புது அத்தியாயம் ஆரம்பிக்க, மாலைத்தீவில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகைத் தரும் பிரபலமான தீவின் அழகு மக்களின் கண்களை பறிக்க மட்டும் செய்யவில்லை, கூடவே ஸ்கூபா டைவிங், ஸ்மர்ஃபிங் போன்ற விளையாட்டுக்கள் மக்களின் ஆர்வத்தையும் தூண்டின.
அதே ஆர்வத்தோடு பாதுகாப்பான கருப்பு உடையில் பல விதமான மீன்களுக்கு நடுவே மீன் போல் நீந்திய வண்ணமாய் இருந்தான் யாதவ் அர்ஜூனா.
கடலுக்குள் மூழ்கியாவது மனதிலுள்ள ரணத்தை குறைக்க முயற்சிக்கிறான் போலும்!
ஆனால், அந்த காட்சி கூட அவனுக்கு சில நினைவலைகளைத் தூண்டி மேலும் காயப்படுத்தினால் ஆடவன் எதைத்தான் நாடுவான்!
அதற்குமேல் அங்கு இருக்க பிடிக்காமல் மேல் நோக்கி வந்தவன் படகில் ஏறிக்கொண்டு தரையை நோக்கி கிளம்பினான்.
இது வழக்கமாக நடப்பதுதான், காயத்திற்கான மருந்தைத்தேடி கடல் தாயிடம் செல்வதும் பின் மேலும் காயப்பட்டவனாய் தரைக்கே திரும்பி வருவதும்.
கோபத்தில் முகம் சிவந்திருக்க எரிச்சலோடு கரைக்கு வந்தவன் அங்கு உல்லாசமாய் படுத்திருந்தவனை நோக்கிச் செல்ல, செந்திற மணலில் கைக்கால்களை விரித்து படுத்திருந்தான் சித்தார்த்.
ஷாட்ஸ் மட்டும் அணிந்திருந்தவனின் வெற்றுடலை அங்கு சுற்றிருக்கும் சில வெளிநாட்டு பெண்கள் ரசித்துப் பார்க்க, சித்தார்த்தின் பார்வையும் அணிந்திருந்த கூலிங் க்ளாஸை தாண்டி தாராளமாக அவர்களுடைய உடலை மேய்ந்தது.
“ஹ்ர்ம் ஹ்ர்ம் கண்ணாலயே கற்பழிச்சிருவ போல! கன்ட்ரோல் யூவர் செல்ஃப் சித்து” யாதவ் கேலியாக சொன்னபடி அவன் பக்கத்தில் அமர, “லைஃப்னாலே ஃபன் பண்ணணும்டா, உன்ன மாதிரி ஒருத்திய புடிச்சு தொங்கிட்டு அப்பறம் அவ போனதும் ஒன்டிக்கட்டையா எல்லா இருக்க முடியாது” என்று பதிலுக்கு சொன்னபடி எழுந்தமர்ந்தான் சித்தார்த்.
அவனின் பதில் பேச்சையெல்லாம் மற்றவன் காதிலும் வாங்கவில்லை.
இறுகிய முகமாக ஓடி வரும் கடலலைகளை அவன் வெறித்துக்கொண்டு அமர்ந்திருக்க, சித்தார்த்தோ பக்கத்திலிருந்த பியர் பாட்டலை அவனிடம் நீட்டினான்.
“ஒரு தடவ ட்ரை பண்ணு! யூ ஃபீல் பெட்டர். மேக்னாவ மறந்துடுவ, ட்ரஸ்ட் மீ!”
அவன் கையிலிருந்து மது போத்தலை வற்புறுத்தி திணிக்க முயற்சிக்க, அவனின் இதழ்கள் ஏளனமாக வளைந்தன.
“நோ நீட் சித்து, மேக்னாவ மறக்க நான் ரொம்ப கஷ்டப்படுற அளவுக்கு அது ஒன்னும் காவியக்காதல் இல்ல. ஜஸ்ட் லீவ் தட்! என்ட் யூ நோ வாட், ஜகன் வர்க் ரிசைன் பண்றாரு. புது பீஏ, ஆனா பழக்கப்பட்ட முகம்”
இறுதி வார்த்தைகளில் யாதவ்வின் குரல் இறுகியிருக்க, சித்தார்த்தின் புருவங்கள் குழப்பத்தில் முடிச்சிட்டன.
“வூ இஸ் தட்?” என்று அவன் யாரென்ற ஆர்வத்தோடு கேட்க, தோழனை திரும்பிப் பார்த்தவன், “நிஹாரிகா” என்றான் உணர்ச்சிகளற்ற குரலில்.
இதை சித்தார்த் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை என்பது அவனுடைய அதிர்ந்த முகமே அப்பட்டமாகக் காட்டியது.
“அவளா! அவள எதுக்கு நீ அக்செப்ட் பண்ண, ஹவ் க்ருவல் ஷீ இஸ். மொதல்ல அவ வேலைக்கே வேணாம்னு சொல்லு, வேற யாரையாச்சும் பார்த்துக்கலாம். அவ வேணாம் அவ்வளவுதான் யாதவ்”
அவளுடைய பெயரை சொன்னதுமே உண்டான கோபத்தில் அவன் பொரிந்துத் தள்ள, யாதவ்வின் முகத்தில் கேலி மட்டுமே…
“அப்படி பண்ணா அவ என்னை எஃபெக்ட் பண்றான்னு ஆகிறாதா, அவ எல்லா எனக்கு ஒன்னுமே இல்ல சித்து. யூ நோ வாட், என்னை பார்க்கும் போது அவ கண்ணுல தெரியுற அந்த கில்ட், பயம் எனக்கு… எனக்கு பிடிச்சிருக்கு. அதை நான் பார்க்கணும் தட்ஸ் ஆல். மத்தபடி அவ எனக்கு கொஞ்சமும் தகுதியே இல்லாதவ”
சாதாரணமாக ஆரம்பித்தவனின் குரலில் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ரோஷம் வெளிப்பட, நண்பனை கூர்ந்துப் பார்த்திருந்த சித்தார்த் அதற்குமேல் அவனுடைய முடிவை மறுக்கவில்லை.
“வாட்எவர்!” என்றுவிட்டு மீண்டும் மணலில் படுத்தவன், “நான் மட்டும் உன்னோட இடத்துல இருந்திருந்தா இதை வேற மாதிரி ஹேன்டில் பண்ணியிருப்பேன். இப்போ கூட ஒரு பட்சி என்கிட்ட சிக்கியிருக்கு. பேசின பேச்சுக்கு அவள ஏதாச்சும் பண்ணணும்” கடுப்போடு சொன்னான் அன்று ஆதிராவுடனான சந்திப்பை நினைத்து.
இப்போது புரியாமல் பார்ப்பது மற்றவனின் முறையாயிற்று.
நடந்தது மொத்தத்தையும் சொல்லி முடித்தவன், “ச்சே! பொண்ணா அவ, என்ன பேச்சு பேசுறா. என்ட் ஐ நோடிஸ் சம்திங் இதுக்கு முன்னாடி பல பொண்ணுங்க வந்தும் புதுசா யாரையும் அக்செப்ட் பண்ணாத வருண் அவளோட ஃபோட்டோவ பார்த்ததுமே ஓகே சொல்லியிருக்கான்னா சம்திங் ஃபிஷி” என்று இறுதியில் சந்தேகம் கலந்த கேள்வியோடு நிறுத்தினான்.
யாதவ் அவன் பேசுவதை அமைதியாக கேட்டிருந்தானே தவிர எதுவும் பேசவில்லை.
அவனுடைய முகபாவனையைக் கவனித்த சித்தார்த்திற்கு எரிச்சல்தான் வந்தது.
“கோபத்த தவிர வேற எந்த எக்ஸ்ப்ரஷனுமே காமிக்க மாட்டேங்குற, இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்குறதா உத்தேசம்? ஐ கான்ட் டோலரேட் திஸ் கொஞ்சமாச்சும் முகத்துல எதையாச்சும் காமிடா வெண்ண”
அவன் தன் கட்டுப்பாட்டை மீறி கத்திக்கொண்டே போக, அப்போதும் எந்த எதிர்வினையும் காட்டவில்லை யாதவ்.
“வெகேஷன் இஸ் ஓவர், நாளைக்கு கெளம்புறோம். ஐபீஎல் ஸ்டார்ட் ஆக போகுது, என்ட் ஹோட்டலையும் கவனிக்கணும். என்ட் வன்மோர்திங் மிஸ்டர் மஹாதேவன் கூட பார்ட்னர்ஷிப்ல புதுசா இன்னொரு ஹோட்டல் கட்ட போறேன். சோ…”
அவன் பாட்டிற்கு பேசிவிட்டு பக்கத்திலிருந்தவனின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் தாங்கள் தங்கியிருக்கும் ரிசோர்டை நோக்கி செல்ல, போகும் தன் நண்பனை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் எரிச்சலாக பார்த்துக்கொண்டிருந்தான் சித்தார்த்.
அடுத்த இரண்டு நாட்கள் கழிந்த நிலையில்,
“ஆதிரா, இன்னும் ஸ்டைலிஷ்ஷா ஃபேஸ்ல கொஞ்சம் எக்ஸ்ப்ரெஷனோட இருக்கணும். அகைன் ட்ரை பண்ணலாம்”
வருண் சொல்லச் சொல்ல, அவனுக்கு ஏற்றாற் போல தன் உடலை வளைத்து முகத்தில் உணர்ச்சிகளை பிரதிபலித்து நின்றுக்கொண்டாள் ஆதிரா.
உடனே அவனும், “ஓகே டேக் ஃபோட்டோஸ், ஆதிரா எக்ஸ்ப்ரெஷன சேஞ்ச் பண்ணிக்கிட்டே இரு பட் க்ளேஸியா இருக்கணும். த்ரீ.. டூ.. வன்..”
அவன் சொல்லி முடிக்க, சுற்றியிருந்த கேமராவின் வெளிச்சங்கள் அவள் மீது விழ, மீண்டும் தடுமாறிவிட்டாள் பெண்ணவள்.
“வாட் ஹேப்பன்ட்?” இப்போது அவனின் கேள்வி எரிச்சலோடு வர, அவளும் என்ன பதில்தான் சொல்வாள்!
“ஐ அம் சா.. சாரி வருண். கேமரா ஃப்ளேஷ் படும் போதும் ஆளுங்க பார்க்கும் போதும் ஒரு மாதிரி நெர்வஸ்ஸா இருக்கு. ஐ அம் ரியலி சாரி! நாம வேணா மறுபடியும்…”
அவள் ஏதோ சொல்ல வர, அவனோ கண்டுகொள்ளாதது போல் திரும்பிச் செல்ல, ஆதிராவுக்கு அவமானமாத்தில் முகம் கறுத்துவிட்டது.
விழிகள் கூட சற்று கலங்க, தரையை வெறித்தவாறு நின்றிருந்தவளின் காதில் விழுந்தது அந்த ஒருவனின் வன்மம் நிறைந்த கேலிக் குரல்.
“ஆசைப்படுறதுக்கு கூட இப்போ எல்லா தகுதின்னு ஒரு குவாலிஃபிகேஷன் தேவைப்படுது ஸ்வீஹார்ட்” என்று சித்தார்த் வேண்டுமென்று அவளை சீண்டுவது போல் பேச, அவனை கோபம் பொங்கப் பார்த்தாள் ஆதிரா.
*********
மறக்காக கதை எப்படி போகுதுன்னு உங்க கருத்த சொல்லுங்க டியர்ஸ்…
