Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

29. ஷேஹா ஸகி - விழி கொல்லும் விஷமா நீ

விழி கொல்லும் விஷமா நீ EPI 05

விழி கொல்லும் விஷமா நீ..

EPISODE 05

 



Advertisement

 

சித்தார்த்தின் வார்த்தைகளால் ஆதிராவின் முகம் அவமானத்தில் கறுத்துவிட்டது.

அவனை கோபத்தோடு அவள் பார்க்க, அவளுடைய முகபாவனையை பார்த்துக்கொண்டு நின்றிருந்தவனுக்கு அத்தனை திருப்தி.

Advertisement

வருணோ சித்தார்த் வந்திருப்பதை கவனித்துவிட்டு அவனுடைய அருகில் வர, “ஹேய் வருண், இந்த முறை பாரிஸ்ல நடக்க போற ஃபேஷன் ஷோக்கு நம்ம கம்பனி மாடல்ஸ்ஸ கொஞ்சம் ட்ரெயின் பண்ணணும். என்ட், நானும் போகலாம்னு இருக்கேன். வாட் டூ யூ திங்?” என்று கேட்டான் மற்றவன்.

Advertisement

சில கணங்கள் யோசித்த வருணோ, “அது.. சாரி சித்து, இந்த முறை ரோஹன்தான் போக போறான். என்ட் அவனும் இதை பத்தி டூ டேய்ஸ் முன்னாடியே என்கிட்ட பேசிட்டான். அதான்…” என்று தயக்கமாக இழுக்க, “இட்ஸ் ஓகே” என்றவனுக்கு உள்ளுக்குள் சற்று கடுப்புதான்.

ஆனால் வெளியில் காட்டாது வராத புன்னகையை வரவழைத்து புன்னகைத்தவன் அந்த இடத்தைவிட்டு நகரப் போக, “சித்தார்த்…” என்று அழைத்து நிறுத்தினான் மற்றவன்.

அவனோ திரும்பி என்னவென்று பார்க்க, “ஆதிராவுக்கு இது ஃபர்ஸ்ட் டைம், ரொம்பவே நெர்வஸ் ஆகுறாங்க. கம்பனில இருக்குற நிறைய மாடல்ஸுக்கு நீ  ட்ரெயின் பண்ணியிருக்க, ஆதிராவுக்கும் கத்து கொடுத்தேன்னா இட்ஸ் வெர்ரி ஈஸி ஃபார் ஹெர்” என்றான் வருண் சாதாரணமாக.

Advertisement

இத்தனை நேரம் சோர்ந்துப் போய் தரையை வெறித்தவாறு நின்றிருந்தவள், “வாட்?” என்று பெருங்குரலெடுத்து கத்திக்கொண்டு நிமிர்ந்துப் பார்க்க, சித்தார்த்திற்கும் அதே அதிர்ச்சி தான்.

ஆனால் சில கணங்களில் முகபாவனையை சாதாரணமாக மாற்றிக்கொண்டவன், “இட்ஸ் நொட் அ பிக் டீல், பட்  ஐ ஹேவ் நோ டைம் டு டூ தட். நான் இதை பத்தி ரிஷிக்கிட்ட சொல்றேன்” என்று விட்டு செல்லப் போக, அவனை குறுக்கிட்டான் வருண்.

“நோ சித்தார்த், ஆதிராவோட நெர்வஸ அவனால ஹேன்டில் பண்ண முடியாது. ஐ திங் யூ கென் டூ தட். இன்னும் டூ வீக்ஸ்ல ஒரு ஆட் ஷூட் இருக்கு. அதுக்குள்ள அவள பர்ஃபெக்ட்டா ரெடி பண்ணு”

அவன் சொல்லிவிட்டு தன் வேலை முடிந்ததென சென்றுவிட, எரிச்சலோடு நெற்றியை நீவி விட்டுக்கொண்டவன் பக்கவாட்டாகத் திரும்பி அவளைப் பார்த்தான்.

ஆதிராவின் முகம் பயம் பதற்றம் எரிச்சல் என பல உணர்ச்சிகளை தாங்கி நிற்க, விழிகளை உருட்டினான் சித்தார்த்.

“இந்த கம்பனிக்கு வரதுக்கு முன்னாடியே உனக்கு வருண தெரியுமா?” அவன் ஒருவித கடினமான குரலில் கேட்க, “ம்ஹும்” தெரியாது எனும் விதமாக தலையாட்டினாள் அவள்.

‘இவன் எதுக்கு இப்படியெல்லா கேக்குறான்?’ அவள் உள்ளுள்குள் யோசிக்க, சித்தார்த்தின் புருவங்களும் யோசனையில் முடிச்சிட்டிருந்தன.

அவளும் அவனை சில கணங்கள் உற்றுப் பார்த்தவள், “அது சார்… எனக்கு ட்ரெயின் பண்ண உங்களுக்கு பிடிக்கலன்னு எனக்கு புரியுது. உங்களுக்கு பிடிக்கலன்னா நீங்க தாராளமா சொல்லலாம். நான் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டேன். என்ட் நான் வேணா வருண்கிட்ட…” என்று தயக்கத்தோடு இழுக்க, “பிடிக்கல” என்றான் அவன் பட்டென்று.

ஆதிராவுக்கு சப்பென்றானது.

முகத்தை பாவமாக வைத்தபடி நின்றுக்கொண்டவள், “வருண் சொல்லிட்டாரு, அதுக்குமேல என்னால என்னதான் பண்ண முடியும்? நீங்க வேணா அவர்கிட்ட பேசிக்கோங்க. எனக்கும் இதுக்கும் சம்மதம் இல்லப்பா. யாரு குருவா வந்தாலும் அவங்கள தெய்வமா மதிக்கிறவ நான்..” என்று தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லையென்பது போல பேச, கை முஷ்டியை இறுக்கிக்கொண்டான் அவன்.

ஆனால், இவளிம் பேசி பயனில்லை என்று மட்டும் புரிந்தது அவனுக்கு.

முயன்று கோபத்தை அடக்கிக்கொண்டு, “நாளைக்கு ஆரம்பிக்கலாம்” என்றுவிட்டு நகர்ந்தவன் தன் ஆஃபீஸ் அறைக்குள் புகுந்துக்கொள்ள, பெண்ணவளோ குத்தாட்டம் போடாத குறைதான்.

அதேநேரம் யாதவ்வின் ஹோட்டலில்,

இமை வெட்டாமல் தன் முன்னே அலைப்பேசியை நோண்டியவாறு அமர்ந்திருப்பவனை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் நிஹாரிகா.

யாதவ்வோ தன் முன்னே ஒருத்தி இருப்பதையே கண்டுகொள்ளாதவன் போல அலைப்பேசி திரையில் மூழ்கியிருக்க, அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை அவள்.

இத்தனை வருடங்கள் அவனுக்காக ஏங்கிக்கொண்டு இருந்தவளுக்கு ஏனோ இதுவே கடவுள் தரிசனமாகத்தான் தெரிகிறது!

அதற்கு மேல் பேராசைப்படாமல் அவள் அமைதியாக அவனை பார்த்துக்கொண்டிருக்க, விழிகளை மட்டும் நிமிர்த்தி அவளைப் பார்த்தான் யாதவ்.

அவளோ அவன் பார்வை பட்டதுமே அவனை பரவசத்தோடு பார்க்க, அவனோ அவள் முன்னே சில ஃபைல்களை தூக்கிப் போட்டான்.

அந்த தாள்களை கையிலெடுத்தவளோ அவனை புரியாமல் பார்த்தாள்.

“ஜகன் உன்கிட்ட என்ன சொன்னாருன்னு எல்லா எனக்கு தெரியாது. இந்த ஹோட்டல் பத்தின அத்தனை டீடெயில்ஸும் இதுல இருக்கு. சில விஷயங்கள் கான்ஃபிடென்ஷியலும் கூட… வெளியில எதுவும் போகக் கூடாது. என்ட், டே பை டே ஹோட்டல்ல நடக்குறது ஆல்சோ அக்கௌன்ட்ஸ் எல்லாமே எனக்கு அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கணும். கொட் இட்?” என்று படபடவென பேசி முடித்தான் யாதவ்.

நிஹாரிககாவிற்கு தலையே சுற்றிவிட்டது.

பாதி புரிந்தும் புரியாமலும் இருக்க வழமைப் போல் எல்லா பக்கமும் தலையாட்டி வைத்தவள் அடுத்து அவன் மேசையில் வைத்த ஒரு அலைப்பேசியை புரியாமல் பார்த்தாள்.

“ஐ டோன்ட் நீட் யூவர் பர்சினல் திங்க்ஸ், இந்த ஃபோன் உன் கூடவே இருக்கணும். என்னோட செட்யூல் என்ட் என்னோட பிஸ்னஸ் மீட்டிங்க்ஸ் பத்தின டிஸ்கஷன் எல்லாமே இந்த நம்பர் மூலமாதான் இருக்கணும். எனி டவுட்ஸ்?” விழிகளை கூர்மையாக்கி அவன் கேட்டதும், அவளோ திருதிருவென விழித்தாள்.

“அது வந்து சார்… எனக்கு…” நிஹாரிகா ஏதோ சொல்ல வர, “டொக்யூமென்ட் ரூம்ல லாஸ்ட் த்ரீ மன்த்ஸ்ஸோட அக்கௌன்ட்ஸ் இருக்கு. அதை இம்மீடியட்டா கொண்டு வா! என்ட் இன்னும் வன் வீக்ல ஐபீஎல் ஸ்டார்ட் ஆக போகுது…” என்று யாதவ் பேசி முடிக்கவில்லை.

“வாவ்! கங்கிராட்ஸ் அர்ஜூ, எனக்கு கிரிக்கெட் பிடிக்காதுன்னாலும் உன்னோட மேட்ச்ச மிஸ் பண்ணவே மாட்டேன்” அவள் தன்னை மீறி அவனுடைய நீஹாவாக பேசிவிட, யாதவ்வின் முகம் பாறையாய் இறுகியது.

அவளுடைய ‘அர்ஜூ’ என்ற அழைப்பு அவனுக்குள் ஈட்டியாய் குத்த, முகம் சிவந்து நெற்றி நரம்புகள் புடைத்தன.

நிஹாரிகாவுக்கு புரிந்து போனது. தன்னைத்தானே நொந்துக்கொண்டாள் அவள்.

“சா.. சாரி சார், நான் ஏதோ தெரியாம… சாரி சார்! நீங்க நான் என்ன பண்ணணும்னு மட்டும் சொல்லுங்க. ஐ வில்…” அவள் சமாளிக்க முயற்சிக்க, ஒருசில கணங்களில் தன் முகபாவனையை மாற்றிக்கொண்டவனின் முகத்தில் இப்போது மீண்டும் அதே அந்நியத்தன்மை.

எது அவளை குத்திக் கிழிக்குமோ அதைக்கொண்டே அவளைத் தாக்கினான் யாதவ்.

அவன் எதிர்பார்த்தது போல அவனுடைய அந்நியப் பார்வையால் அவள் உள்ளுக்குள் வேதனையில் துடிக்க, திருப்தியாகப் பார்த்தான் அவன்.

“ஐபீஎல் முடியுற வரைக்கும் நான் பிஸியா இருப்பேன். அப்பப்போ ஹோட்டலுக்கு வருவேன், அப்டேட்ஸ் ரெடியா இருக்கணும். எனக்கு மிஸ்டேக் நடக்குறது பிடிக்காது, மோர்ஓவர் புது ப்ராஜெக்ட் போயிக்கிட்டு இருக்கு. என் கூட நீ சில இடங்களுக்கு வர வேண்டியிருக்கும். யூ ஹெவ் நோ சாய்ஸ், கொட் இட்?” அவன் பேசி முடிக்க, இவளுக்கு அய்யோ என்றிருந்தது.

அவளுடைய முகத்தில் அப்பட்டமாக பீதி தெரிய, மீண்டும் தலையை எல்லா பக்கமும் ஆட்டி வைத்தவள், “சார்… இப்போ நான் என்ன பண்ணணும்?” என்றொரு கேள்வியை கேட்டு வைக்க, அவளை முறைத்துப் பார்த்தான் யாதவ்.

நிஹாரிகா அசடுவழிந்தவாறு கைகளைப் பிசைந்துக்கொண்டு நிற்க, “இடியட் சொன்ன ஃபைல்ஸ்ஸ எடுத்துட்டு வா!” என்று அவன் கத்திய கத்தலில் ஒரே ஓட்டமாக அறையிலிருந்து வெளியில் வந்தாள் அவள்.

‘ஊஃப்ப்… ஜகன் சார் என்னடான்னா செட்யூல் பண்ணணும் ஹோட்டல கவனிச்சிக்கணும்னு சொன்னாரே தவிர இப்படி எடுபிடி வேலை பார்க்கணும்னு சொல்லவே இல்லயே’ என்று ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டவளுக்கு ஏதோ சிங்கத்தின் குகையிலிருந்து வெளியில் வந்தது போலிருந்தது.

அன்றிரவு,

யாதவ்வின் கார் போர்டிகாவில் நிற்க, உள்ளே சோஃபாவில் அமர்ந்திருந்த பெரியவரின் பார்வை ஆர்வத்தோடு வாசலில் பதிந்தது.

“யாதவ் கண்ணா…” என்று உற்சாகமாக அழைத்த வண்ணம் வாசலை நோக்கி வந்தார் அவர்.

கண்டுகொள்ளாதவன் போல அவரை கடந்து சென்றவன் மாடிப்படிகளில் ஏறி தன்னறையை நோக்கிச் செல்லப் போக, முகம் வாடிப் போனார் வசுந்தரா.

“தம்பி…” என்று அவர் மீண்டும் அழைக்க, அவனுடைய கால்கள் சட்டென நின்றன. ஆனால், திரும்பிப் பார்க்கவில்லை அவன்.

“அது… உனக்காகதான் சமைச்சேன், எல்லாமே தயாரா இருக்கு, வந்து சாப்பிட்டு போப்பா, வீட்டுல சாப்பிடுறதே கிடையாது. எல்லாமே உனக்கு பிடிச்சதுதான்…”

அவர் தயங்கித் தயங்கிப் பேசினார். ஆனால் அவர் முன் நின்றிருந்தவனோ சில கணங்கள் எந்த பதிலும் பேசவில்லை.

“எனக்கு வேணாம்!” என்று அமைதியை விடுத்து முகத்திற்கடித்தாற் போல சொன்னவன் விறுவிறுவென்று மாடிப்படிகளில் ஏறி சென்றுவிட, விரக்திப் புன்னகையோடு அங்கிருந்து நகர்ந்தார் பெரியவர்.

இன்று நேற்றல்ல பல வருடங்களாக நடப்பது தானே!

அறைக்குள் சென்று கதவைச் சாற்றியவனுக்கு மனம் கனத்துப் போயிருந்தது.

வசுந்தரா யாதவ்வின் சித்தி. தந்தை பிரதாப்பின் இரண்டாவது மனைவி என்று சொல்லலாம். அவன் பள்ளிப் படிப்பை முடித்த சமயத்தில்தான் தாய் லலிதா இறந்திருக்க, முதல் மனைவி இறந்த இரண்டே மாதங்களில் வசுந்தராவை திருமணம் செய்து அழைத்து வந்திருந்தார் பிரதாப்.

அவரே யாதவ்வை தன் மகனாக ஏற்று அவனோடு பழக நினைக்க, ஆனால் அவனோ அவரை தன்னிடம் நெருங்கவே விடவில்லை. வருடங்களும் கடந்துவிட்டன.

பல சம்பவங்களை தனக்குள் உருட்டிய வண்ணமாய் யாதவ் பால்கனியில் நின்று வானத்தை வெறித்துக்கொண்டிருக்க, அதேநேரம் மதுபான குவளையை வாயில் சரித்த வண்ணம் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துக்கொண்டிருந்தான் ஆரவ்.

“நிஹாரிகா… ஏன்டீ? நான் அப்படி என்னடீ தப்பு பண்ணேன்? என்னை ஏன்டீ விட்டு போன? அதுவும் அவனுக்காக… ச்சே! என்னால இதை தாங்கிக்க முடியல. இப்போவும் உனக்காக மட்டும்தான் காத்திருக்கேன். உனக்காக மட்டும்தான்…”

நிஹாரிகாவை நினைத்து ஆக்ரோஷத்தில் கத்திக்கொண்டிருந்தான் அவன்.

அவளுடனான பிரிவை அவனால் கொஞ்சமும் ஏற்க முடியவில்லை. இத்தனை வருடங்கள் அவளுக்காக மட்டும் அவன் காத்திருக்க, விட்டத்தை வெறித்தவாறு கட்டிலில் படுத்திருந்த பெண்ணவளின் நினைவுகள் யாதவ்வைதான் சுற்றி வந்தன.

“அர்ஜூ…”

அவனை நோக்கிய அவளின் அழைப்பு அது. ஆனால் அந்த அழைப்பைக் கேட்டதுமே அவனுடைய முகத்தில் அவள் பார்த்த கோபத்தை நிஹாரிகா அத்தருணம் எதிர்பார்க்கவில்லை.

அவளுடைய நினைவுகள் அவனின் குறும்பு நிறைந்த விழிகளையும் புன்னகையையும் நினைத்துப் பார்க்க, அவனுடனான முதல் சந்திப்பு அவள் மனக்கண் முன் வந்து சென்றது.

நான்கு வருடங்களுக்கு முன்பு,

“ஹேய் நீஹா, ஆர் யூ ஓகே? என்னாச்சுடீ மறுபடியும் உன் ஆளு அந்த சைக்கோ ஆரவ் ஏதாச்சும் சொன்னானா?” என்று ஆதிரா ஹஸ்கி குரலில் தோழியின் காதில் கிசுகிசுக்க, விழியோரத்தில் கசிந்த கண்ணீரை மெல்ல துடைத்து விட்டாள் அவள்.

“இல்ல ஆதி, ஐ அம் ஓகே. அவன் என்னை கெயார் பண்ணதான் அதையெல்லா பண்ண கூடாதுன்னு சொல்றான் எல்லா நல்லதுக்குதானே! நீ எதையும் யோசிக்காம க்ளாஸ கவனி!”

என்றவள் சிந்தனையை கலைத்துவிட்டு பேராசிரியரின் மீது கவனத்தை வைக்க, ஆதிராவுக்கு கோபம் சுர்ரென்று எகிறியது.

அத்தருணம் பொறுமையை இழுத்துப் பிடித்து பாடம் முடியும் வரை காத்திருந்தவள் கல்லூரி முடிந்த மறுகணம் தோழியைப் பிடித்துக்கொண்டாள்.

“நீஹா, இது கொஞ்சமும் சரியில்ல. அந்த ஆரவ் உன்ன ரொம்ப கன்ட்ரோல் பண்றான். விட்டா பொண்ணுங்க கூடவே பேச வேணாம்னு சொல்வான் போல, ச்சே! ஹவ் கென் யூ டோலரேட் திஸ்? பேசாம அவன விட்டுரு!”

அவளுடைய வார்த்தைகள் காட்டமாக வர, மற்றவளின் இதழ்கள் விரக்திப் புன்னகையில் விரிந்தன.

“நோ ஆதி, கூடிய சீக்கிரம் சரியாகும்” அந்த வார்த்தைகளில் அவளுக்கே நம்பிக்கை இல்லை.

ஆதிராவால் அதற்குமேல் என்னதான் செய்ய முடியும்!

ஆரவ்வின் பார்வை நிஹாரிகா மீது விழுந்த தருணம் தோழிக்கு அமையப் போகும் வாழ்க்கையை நினைத்து பெருமைப்பட்டவள் இப்போது தலையிலடித்துக் கொள்ளாத குறையாக அல்லவா புலம்புகிறாள்!

பணம் இருந்தால் என்ன பண்பு இருக்க வேண்டுமே!

“ஹோஸ்டலுக்கான பஸ் வந்துருச்சு நீஹா, நான் கெளம்புறேன். நீ கவனமா வீட்டுக்கு போய் சேரு!”

தான் செல்ல வேண்டிய பேரூந்தைக் கண்டதும் ஆதிரா வேகமாக சொல்லிவிட்டு ஓடிவிட, பக்கத்திலிருக்கும் தன் வீட்டை நோக்கி நடக்கப் போனவளின் கால்கள் சட்டென நின்றன.

சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் அவளை மோதுவது போல் வந்து நின்றான் ஒருவன்.

நிஹாரிகா சிறு அதிர்ச்சியோடு அவனைப் பார்த்துவிட்டு பின் முகத்தில் சிறு சலிப்போடு நகரப் போக, “ஹேய் வெயிட்!” என்றவனின் கணீர் குரலில் மீண்டும் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள் அவள்.

********

மறக்காக உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்க டியர்ஸ்.. 😍😍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!