Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

29. ஷேஹா ஸகி - விழி கொல்லும் விஷமா நீ

விழி கொல்லும் விஷமா நீ EPI 06

விழி கொல்லும் விஷமா நீ.. 

EPISODE 06

 



Advertisement

 

“ஹேய் வெயிட்!”

என்ற ஆணின் குரலில் சட்டென நின்ற நிஹாரிகா உடனே நிமிர்ந்துப் பார்க்க, அவள் முன்னே ஒற்றைப் புருவத்தை தூக்கிய தோரணையில் சிறு முறைப்போடு நின்றுக்கொண்டிருந்தான் யாதவ் அர்ஜூனா.

Advertisement

பெண்ணவளின் விழிகள் சுருங்கி அவனை மேலிருந்து கீழ் அளவிட்டன.

Advertisement

ஜெர்சி டீஷர்ட் மற்றும் பேன்ட்டில் கலைந்த தலைமுடி காதில் கடுக்கன் என கையில் ஒரு பெரிய கிரிக்கெட் பேட்டோடு நின்றிருந்தவன் ஏகத்துக்கும் அவளை முறைத்துத் தள்ள, அதற்கான காரணம்தான் அவளுக்கு சுத்தமாகப் புரியவில்லை.

சுற்றி முற்றிப் பார்த்துவிட்டு அவள் அவனைக் கடந்து செல்லப் போக, “ரொம்பதான் திமிரு! உன் முன்னாடிதானே நிக்கிறேன் கண்டுக்காம போற. வாட் டு யூ திங் ஆஃப் யூவர் செல்ஃப் ஆங்?” என்ற யாதவ்வின் கடுமையான குரலில் விதிர்த்துப் போய்விட்டாள் அவள்.

“என்.. என்கிட்டயா பேசுறீங்க? நா.. நான் என்ன பண்ணேன்?”

Advertisement

அவளுடைய வார்த்தைகள் தந்தியடித்தன. விழிகள் பதற்றத்தில் அலைபாய, அவளை கழுகுப் பார்வைப் பார்த்துக்கொண்டே ஒரு அடி முன்னே வைத்தான் யாதவ்.

“ஹவ் க்ருவல் யூ ஆர்! காதலிச்சு ஏமாத்தியிருக்க. உண்மையா காதலிக்க முடியலன்னா எதுக்கு லவ் பண்ற? என்ட், ஒருத்தன் உனக்காக உயிர விட போறான்னா அவன் எந்தளவுக்கு உன்ன காதலிச்சிருப்பான். உன்னையெல்லா… என் ஃப்ரென்டுக்கு மட்டும் ஏதாச்சும் ஆகட்டும். உன்னை தூக்குல போடாம விட மாட்டேன்”

பேச்சில் ஒருசில கெட்ட வார்த்தைகளை சேர்க்க அவன் தவறவில்லை. ஆனால் இப்படியான வார்த்தைகளை பெண்ணவள் எதிர்பார்க்காதது அவளுடைய அதிர்ந்த முகமே அப்பட்டமாகக் காட்டியது.

‘என்ன உளறுகிறான் இவன்?’ உள்ளுக்குள் நினைத்துக்கொண்டவள், “நீங்க யாரோ நினைச்சு என்கிட்ட பேசுறீங்க, வார்த்தைய அளந்து பேசுங்க” என்று காட்டமாக சொல்லிவிட்டு நகரப் போக, அவள் கரத்தை இறுகப் பற்றினான் யாதவ்.

“எங்க தப்பிச்சு போக பார்க்குற, போலீஸ் வந்துட்டு இருக்காங்க. இங்கேயே நில்லுடீ! அவன் உன்னால ஹார்பிக்க குடிச்சிருக்கான். உள்ள ஏதாச்சும் டேமேஜ் ஆச்சுன்னா உன் ஆர்கன்ஸ்ஸதான் கொடுக்கணும்” அவன் தீவிர முகபாவனையோடு பேச, இவளுக்கு மயக்கம் வராத குறைதான்.

“நீங்க என்ன பேசு…” அவள் பேசி முடிக்கவில்லை, அதற்குள் வேகமாக யாதவ்வின் அருகே ஓடி வந்து மூச்சு வாங்க நின்றிருந்த அவனின் தோழன் யுகனோ யாதவ் பற்றயிருந்த கரத்திற்கு சொந்தமானவளை குழப்பமாகப் பார்த்தான்.

“யார்ரா இந்த பொண்ணு, இவ கைய ஏன்டா பிடிச்சிருக்க?” என்று அவன் பதற்றமாகக் கேட்க, இப்போது அதிர்வது யாதவ்வின் முறையாயிற்று.

“அடிங்க! இவதானேடா நம்ம சித்துவ ஏமாத்தின அந்த ப்ளே கேர்ள். இப்போ யாருன்னு கேக்குற?” என்று இவன் பதிலுக்கு கேட்க, தலையிலடித்துக்கொண்ட யுகனோ நண்பனை முறைத்துப் பார்த்தான்.

“அந்த பொண்ணு அங்க இருக்குடா மடையா! அவள போலீஸ்ல பிடிச்சு கொடுக்கன்னு வந்தா இவன் லாக்கப்ல போய் உக்கார்ந்துருவான் போல இடியட்! சீக்கிரம் வாடா, போய் பேசலாம்”

யுகன் கத்திவிட்டு அந்த பெண்ணை நோக்கி ஓட, குறையாத அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தவன் “ஹிஹிஹி…” என அசடுவழிய சிரித்து வைத்தவாறு நண்பனின் பின்னால் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான்.

ஒருசில கணங்கல் நடந்து முடிந்த சம்பவத்தில் நிஹாரிகாவுக்கு தலை வலியே வந்துவிட்டது.

“ச்சே!” என்று எரிச்சலாக நெற்றியை நீவி விட்டவாறு திரும்பியவளின் முகம் அவளுக்கெதிரே காரில் ஒற்றைக் காலை மடக்கி சாய்ந்து நின்றிருந்த ஆரவ்வைப் பார்த்ததும் வெளுத்துப் போய்விட்டது.

அவனோ போகும் யாதவ்வையும் அவளையும் மாறி மாறி தீப்பார்வைப் பார்க்க, எச்சிலை விழுங்கிக்கொண்டவாறு அவனை நோக்கி வேகமாக சென்றாள் அவள்.

அவள் நெருங்குவதற்குள் காரினுள் ஏறி அமர்ந்தவன், தன் பக்கத்து சீட்டில் அமர்ந்தவளின் புறம் திரும்பாமல் இறுகிய முகமாக தரையை வெறித்திருக்க, நிஹாரிகாவுக்கு புரிந்து போனது.

‘போச்சு போச்சு! இப்போ என்ன சொல்வானோ தெரியல. எதுவுமே நடக்கலன்னாலே நாலு பக்கத்துக்கு பேசுவான், இது வேற…’ உள்ளுக்குள் தன்னைத்தானே நொந்துக்கொண்டவள், “ஆரவ், இன்னைக்கு வர்றதா சொல்லவே இல்லயே! சர்ப்ரைஸ்ஸா?” என்று எதுவுமே தெரியாதது போல கேட்டாள்.

ஆனால், பக்கவாட்டாகத் திரும்பி அவன் பார்த்த பார்வையில் அவளுக்கு அடி வயிறு கலங்கியது.

“அது… அவங்க யாருன்னே எனக்கு தெரியாது. யாரோன்னு நினைச்சு என்கிட்ட வந்து பேசினாங்க, அதுக்கப்பறம் நான் இல்லன்னு தெரிஞ்சதும் போயிட்டாங்க. அவ்வளவுதான். நீ கோபப்படுற அளவுக்கு எதுவுமே நடக்கல ஆரவ், ப்ளீஸ்!”

நிஹாரிகா சொல்லிக்கொண்டே அவன் கரத்தைப் பற்ற, அவள் சற்றும் எதிர்பார்க்காதவாறு கரத்தை முறுக்கினான் அவன்.

“அவனே வந்து பேசினாலும் நீ பேசியிருக்க கூடாது நீஹா, ஏன்டீ நான் சொல்றத கேக்க மாட்டேங்குற? இதெல்லாமே உன் நல்லதுக்காக தான்னு உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது?” அவன் பற்களைக் கடித்துக்கொண்டு பேச, கரத்தை முறுக்குவதில் உண்டான வலியில் துடித்தாள் அவள்.

“ஆர.. ஆரவ் வலிக்குது ப்ளீஸ்! என் கைய விடு, ரொம்ப வலிக்குது ஆஆ…” என்று அழும் குரலில் சொன்னவளின் விழிகளிலிருந்து வலியினால் கண்ணீர் கசிய, அப்போதே தான் செய்யும் காரியத்தை உணர்ந்தவனாய் அவள் கரத்தை விட்டான் ஆரவ்.

“அய்யோ பேபி சாரிம்மா, எனக்கு கோபம் வந்துருச்சு அதான். ச்சே! ஐ அம் ரியலி சாரி! ரொம்ப வலிச்சதா?” என்று பதறியபடி கேட்டுக்கொண்டே அவள் கரத்தை தடவி விட்டவன் அவளை இழுத்து அணைத்துக்கொள்ள, நிஹாரிகாவுக்கு அழுகையில் உதடு துடித்தது.

“நான் உன்ன நிறைய லவ் பண்றேன் நீஹா, ஏனோ தெரியலடீ உன் மேல ரொம்ப ரொம்ப பொஸ்ஸெஸிவ்வா இருக்கேன். நான் என்ன சொன்னாலும் உன் நல்லதுக்குதான். அதை நீ மீறும் போது என்னால கோபத்த கன்ட்ரொல் பண்ண முடியல ஐ ஹோப் யூ அன்டர்ஸ்டேன்ட்”

காதலில் கட்டுப்பாட்டை விதித்து அவன் அவள்மேல் திணிக்க, எதுவும் பேச முடியாத கையாலாகாத தனத்தோடு அவனுடைய அணைப்புக்குள் இருந்தாள் நிஹாரிகா.

ஆரவ்வோ மெல்ல அவளை விட்டு விலகியவன் அவள் கன்னத்தை பெருவிரலால் தடவியவாறு அவளின் இதழை நோக்கி குனிய, ஏனோ நிஹாரிகாவின் மனம் எச்சரிப்பது போல ஒரு உணர்வு.

அவள் வெடுக்கென்று அவனிடமிருந்து விலகியமர்ந்து, “ஆரவ் ப்ளீஸ் வேணாமே!” என்று விழிகளால் கெஞ்சியபடி சொல்ல, உச்சகட்டத்தில்  கோபம் எகிறியது அவனுக்கு.

எதிர்பார்த்தது கிடைக்காத ஆத்திரத்தில் ஆரவ் ஸ்டீயரிங்கை ஓங்கிக் குத்த, கடந்த காலத்திலிருந்து விடுபட்டு விழிகளை பட்டென்று திறந்தாள் நிஹாரிகா.

அன்று அவள் பார்த்த யாதவ்வின் குறும்புப் புன்னகை இன்று இறுகிய இதழ்களுக்குள் புதைந்துப் போயிருக்கிறது.

அதை எப்படி மீட்பதென்று கண்ணீரோடு யோசித்தவளே அதற்கான மருந்தாகிப் போனதை எப்போது உணரப் போகிறாளோ!

குளித்து முடித்து தயாராகி பேரூந்தைப் பிடித்து ஹோட்டலுக்கு போய் சேர்வதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது நிஹாரிகாவுக்கு.

என்ன செய்து என்ன பயன்!

சொன்ன நேரத்தைத் தாண்டி தாமதமாகவே ஹோட்டலுக்கு சென்றவள், ஆஃபீஸ் அறைக் கதவைத் திறக்க, நடுநாயகமாக மேசையில் ஒற்றைக் காலை மடக்கி சாய்ந்து நின்றிருந்தான் யாதவ்.

“சாரி சார்! பஸ் வர லேட் ஆகிருச்சு. அதான்.. நான் இப்போவே வேலைய ஆரம்பிச்சிடுறேன் சார். இன்னைக்கு உங்களுக்கு…” அவள் பேசி முடிக்கவில்லை, குறுக்கிட்டான் அவன்.

“நோமோர் எக்ஸ்கியூஸஸ் மிஸ் நிஹாரிகா, ஒழுங்கா வேலை பார்க்க முடியும்னா மட்டும் வேலையில இருங்க. இல்லன்னா தாராளமா சொல்லிட்டு கெளம்பலாம்” அவன் கடுகடுக்க, பாவம் போல் தலைலை குனிந்துக்கொண்டவள் அங்கு ஓரமாக போடப்பட்டிருந்த அவளுடைய மேசையில் சென்றமர்ந்துக்கொண்டாள்.

“சார், இன்னைக்கு எல்லாருக்கும் சேலரி இஷ்ஷு பண்ணணும், என்ட் ஈவினிங் ஃபைவ்க்கு கிரிக்கெட் கம்மிடில ஒரு மீட்டிங் இருக்கு. நீங்க அதை அட்டென்ட் பண்ணணும். என்ட் நைட் டென்க்கு மும்பைக்கு ஃப்ளைட், டூ டேய்ஸ்ல நடக்க போற ஐபீஏல் ஃபர்ஸ்ட் மேட்ச் மும்பையிலதான். இன்னைக்கான ப்ராக்ராம்ஸ் அவ்வளவுதான் சார்”

அவள் கடகடவென ஒப்பித்து வைக்க, தீவிரமாக யோசித்தவன் ஒரு எண்ணிற்கு அழைத்தான்.

“பார்கவ், இன்னைக்கு சேலரிய கொடுத்துரு. என்ட் ஆல்சோ, அக்கௌன்ட்ஸ் பேலன்ஸ்ல எனக்கு டவுட் இருக்கு. லாஸ்ட் மன்த்தோட அக்கௌன்ட்ஸ் ரீசெக் பண்ணு!” என்று கட்டளையாக சொல்லிவிட்டு இருக்கையில் சென்றமர்ந்தவன், லாப்டாப்பில் எதையோ தீவிரமாக டைப் செய்துக்கொண்டிருந்தான்.

கையிலிருந்த ஃபைல்களை பார்வையிடுவது போல பாவனை செய்தவாறு ஓரக்கண்ணால் தன்னவனை ரசிக்க ஆரம்பித்தாள் நிஹாரிகா.

இத்தனை வருடங்கள் திரையில் பார்த்தவன் இன்று அருகில். இந்த நான்கு வருடங்களில் நன்றாக மாறிப் போயிருக்கிறான் என்று மட்டும் புரிந்தது அவளுக்கு.

தன்னை மறந்து அவனின் ஒவ்வொரு பாவனைகளையும் அவள் ரசித்துக்கொண்டிருக்க, அவள் பார்ப்பது தெரிந்தும் சில நிமிடங்கள் கண்டுகொள்ளாதது போல அமர்ந்திருந்த யாதவ்வுக்கு ஒருகட்டத்திற்கு மேல் எரிச்சலாக இருந்தது.

கை முஷ்டியை இறுக்கி பற்களைக் கடித்துக்கொண்டவன் விழிகளை மட்டும் நிமிர்த்திப் பார்க்க, அடுத்தகணம் அவளுடைய விழிகளில் தெரிந்த அளவுகடந்த காதலில் அதிர்ந்தவன் அடுத்தகணமே தன் உணர்ச்சிகளை உள்ளுக்குள் அடக்கிக்கொண்டான்.

அவனுடைய பார்வை தன்மேல் பதிந்ததுமே பதற்றமானவள், செய்வதறியாது தடுமாற, “மிஸ் நிஹாரிகா, லேப்ல ஹோட்டலோட ஸ்டாஃப் டீடெயில்ஸ் இருக்கு. அதை ப்ரின்ட் பண்ணி எடுத்து ஆல்ஃபபெடிக் ஆர்டர்ல அகைன் லேப்ல டைப் பண்ணுங்க” என்றான் யாதவ்.

புருவ முடிச்சுகளோடு யோசித்தவள், “இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாமே சார்” என்று தீவிர முகபாவனையோடுக் கேட்க, “கொடுக்குற சம்பளத்துக்கு வேலை வாங்கணுமே அதான்…” என்றான் அவன் பதிலுக்கு.

‘க்கும்!’ என உள்ளுக்குள் அவள் நொடிந்துக்கொள்ள, அதேநேரம் வளையாத இடுப்பை மேலும் வளைக்க முயற்சித்தவாறு தடுமாறிக்கொண்டிருந்தாள் ஆதிரா.

“அய்யோ என்னால முடியல இதுக்கு மேல எப்படி உடம்ப வளைக்க முடியும்?” என்று அவள் அழாத குறையாக சொல்ல, “உடம்ப ரொம்ப ஃப்ளெக்ஸிபளா வைச்சுக்க பழகு! கிடைக்கிறதெல்லா சாப்பிட்டா இப்படிதான். மாடலிங்க்கு வந்தா மட்டும் பத்தாது, அதுக்கு ஏத்த மாதிரி ஃபிகர் என்ட் ஃபேஸ் எக்ஸ்ப்ரெஷன் இருக்கணும்” என்றான் சித்தார்த் கடுப்பாக.

ஆரம்பத்திலிருந்தே தன்னை மட்டமாக பேசும் அவனின் பேச்சில் பொங்கியெழத்தான் தோன்றியது அவளுக்கு. ஆனால், கிடைத்த வாய்ப்பை இழக்க விரும்பாமல் பொறுமையை இழுத்துப் பிடித்து பேசினாள் அவள்.

“சும்மா சும்மா இப்படி பேசாதீங்க மிஸ்டர் சித்தார்த், நானும் மாடலிங் பண்ணியிருக்கேன்தான். ஐ ஹேவ் மெனி இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ். ஸ்கூல்ல படிக்கும் போது ஒரு தடவை ஸ்கூல் ஃபேஷன் ஷோல கலந்து வின் பண்ணியிருக்கேன். என்ட் காலேஜ்ல கூட. அதுக்கப்பறம் ஒரு சாரி கம்பனில  அவங்க ப்ரொமோஷனுக்காக என்னை மாடலா கூட கூப்பிட்டாங்க தெரியுமா?”

விழிகளை உருட்டி உருட்டி ஆதிரா தன் சாதனைகளை சொல்ல, போலி ஆச்சரியத்தோடு புருவங்களை உயர்த்தினான் சித்தார்த்.

“ரியலி! அந்த கம்பனி பேர சொல்ல முடியுமா மிஸ் ஆதிரா?” என்று அவன் தீவிர முகபாவனையோடுக் கேட்க, “அது… அது வந்து… அந்த கம்பனிக்கு பேரெல்லா இல்ல. எங்க வீட்டு பக்கத்துல இருந்த சாரி கடை ஹிஹிஹி…” என்றாள் அவள் அசடுவழிந்தபடி.

ஆடவனுக்கு எங்கேயாவது சென்று முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.

“ஓ காட்! நீ சொல்ற அந்த சோ கோல்ட் கம்பனியும் இந்த கம்பனியும் ஒன்னு கிடையாது. புரிஞ்சதா?” என்று ஒவ்வொரு வார்த்தைகளாக அழுத்தி பற்களைக் கடித்துக்கொண்டு சொன்னவன் கேமராவுக்கு போஸ் கொடுப்பது போல நின்றான்.

பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை இட்டு தலையை சற்று நிமிர்த்தி சரித்த வண்ணம் இறுகிய இதழ்கள் கூரிய பார்வைக்கொண்டு அவன் நின்ற விதம் ஆதிராவை ரசிக்கத் தூண்ட, மனதை கடிவாளமிட்டு அடக்க முயற்சித்தாள் அவள்.

“மாடலிங்ல ரொம்ப முக்கியம் ஃபோகஸ். நீ நிக்கும் போது எல்லாரோட பார்வையும் உன் மேலதான் இருக்கும், எல்லா கேமராவும் உன்னை நோக்கிதான் இருக்கும். பட் கேமராவோட ஃப்ளேஷ் உன் மேல விழும் போதும் உன் கவனம் சிதற கூடாது. கண்ணை சிமிட்ட கூடாது. இன்னும் சொல்லணும்னா உன் வாழ்க்கையில நடந்த ரொம்ப மோசமான சம்பவத்த நினைச்சு பாரு, பேட் மெம்மரீஸ் கொடுக்குற கான்ஃபிடன்ட்ட எதுவுமே கொடுக்காது”

சித்தார்த் சொல்லி முடித்து அவள் முகத்தைப் பார்க்க, விழிகளில் சுவாரஸ்யத்தோடு அவனை பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

“வாட்?” அவன் ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேட்க, “அது… அது வந்து…  ஐ வில் ட்ரை மை பெஸ்ட் மிஸ்டர் சித்தார்த்” என்றவள் தன் உடலை வளைத்து அவன் காட்டியது போல நின்றுக்கொண்டாள்.

விழிகளை சுருக்கி அவளைப் பார்த்தவன் அவளருகில் நெருங்கி அவள் நாடியை சற்று உயர்த்தி இடையை பற்றினான்.

அவனின் தொடுகையை எதிர்பார்க்காதவளுக்கு முகம் குப்பென்று சிவந்துவிட, உடல் நெளிய ஆரம்பித்தாள்.

“எதுக்கு இப்போ நெளியுற, உன் ஹிப்ப கொஞ்சம் ஸ்டைல்லா வளைச்சுக்க, அப்போதான்…”

என்றுக்கொண்டே நிமிர்ந்த சித்தார்த்தின் விழிகள் அவளின் வெட்கத்தால் சிவந்த முகத்தில் நிலைக்குத்தி நிற்க, ஆதிராவும் சிலையாகிப் போனாள்.

-Sheha zaki

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!