Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவேUncategorized

சின்னஞ் சிறு பூவே

பூவே14

 

 

 



Advertisement

‘நா பெத்ததுக்கு கொஞ்சம் கூட பொறுமை இல்லை, இவங்களுக்கு நடுவுல மாட்டிக்கிட்டு நான் தான் அவதி படுறேன்னு’ மனதில் புலம்பிய படி,

 

இராட்டின‌ கிணற்றருகே! இருந்த தெரு விளக்கு வெளிச்சத்தில் வந்தவர் மகள் வீட்டை நோக்கி வந்தார்..

Advertisement

 

Advertisement

 

எதிர் வீட்டிலிருந்து வெளியே வந்த பெண் “என்னத்தை மீன் குழம்பு வாசம் ஆளை இங்கவரை தூக்குதே!”..

 

Advertisement

தெருவில் நின்றவர் “ஆமாண்டி, என் தூக்கு சட்டி வாசம் தான். ஆளை தூக்குதோ! நீ வச்ச குழம்பு வாசம் புடிச்சு தாண்டி நானே வரேன்” என்ற காளியம்மாவை பார்த்தவளே,

 

“போகும் போது குரல் கொடு அத்தை, மாமனுக்கும் என் கை ருசி எப்படின்னு தெரியட்டும்” என்றாள்.

 

“ஏண்டியம்மா, எந்த மாமனை சொல்லுற நீ?” என்று இடுப்பில் கை வைத்தார் காளியம்மா.

 

“வேற யாரு! எல்லாம் பெரிய மாமனைத்தான் சொல்லுறேன்த்தை” என்று கிளுக்கி சிரித்தாள்.

 

வாசல் முன் கிடந்த விறகுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கொண்டிருந்தவள், சிரிப்பை அடக்க முடியாமல் மீண்டும் குனிந்து விறகை எடுத்தாள்.

 

“எடு அந்த வெலக்கமாத்து! எனக்கு மருமகளா வருவன்னு பாத்தா, சக்களத்தியா வர ஆசையாடி உனக்கு?” என்றார் அவளை முறைத்து.

 

“போ அத்தை! மாமன் தான் சமத்து. உம் புள்ளைக்கு போட்டிக்கு தான். அக்கா மகளுக்கு வரிசைகட்டி நிக்குறாங்களே! பாவம் மாமா, உங்க முகத்தையே எத்தனை நாளைக்கு பாக்குறது?” என்று சொல்லிக்கொண்டே கையில் இருந்த விறகுக் கட்டையை சுவரோரமாக அடுக்கி வைத்தாள்.

 

“புரிஞ்சிடிச்சிடி, உங்கத்தா அப்பங்கிட்ட சொல்லி சீக்கிரமே மாப்பிள்ளை பாக்க சொல்லுறேன்…

உன் ஊர் வாய்க்கு எம்புருஷன் பாவம் . அவரை இந்த ஜென்மத்துல எனக்கு புருஷனா இருக்கட்டும்‌.. அடுத்த ஜென்மத்துக்கு நீயே அவரை கட்டிக்கோடி” என்று தலையில் செல்லமாக தட்டி , பக்கத்தில் இருந்த மகள் வீட்டிற்குள் நுழைந்தார்..

 

உள்ளே வந்த அன்னையை கண்டதும் கையிலிருந்த பாத்திரத்தை , ‘டொம்” என்று கீழே போட்டாள்..

 

“அடியே! அது  எங்கப்பா எனக்கு கொடுத்த சீதனம்டி” என்று கீழே குனிந்து அந்த சிறு குண்டு கிண்ணத்தை தடவி கொடுத்தார்..

 

“ஆமா, பொல்லாத சீதனம் தான்.. என் தாத்தா கொடுத்ததை உடைக்க எனக்கு உரிமை இல்லையா?” என்றாள். முந்தானையை இழுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு, பின் பக்கம் வந்தாள்..

 

“எதுக்குடி, இப்படி கோவப்படுற, கொஞ்சம் கூட உனக்கு முன்யோசனையே! வராதாடி” என்று மகள் அருகே வந்து நின்றார்..

 

“எதுக்கும்மா யோசனை வரணும்.. என் பொறந்த வூட்டுல எனக்கு உரிமை இல்லையா? நேத்து பொறந்தவளுக்கு சொத்து கொடுக்க போறாதா, அந்த கெழவி சொல்லுது.. நீயும் கேட்டுட்டு மரம் மாதிரி நிக்குற” என்று முகத்தை திருப்பினாள்..

 

திரும்பி நின்றவளை, தன்னை பார்க்கும்படி நிற்க வைத்து.. “ஏண்டி, உனக்கு இவ்ளோ கோவம் வருது.. உங்க பாட்டி ஒத்தை கால்ல நின்று சொத்தை பிரிக்குறேன்னு.. நின்னாங்கன்னா, உம் தம்பி சரின்னு நிக்குறவன்னு நெனைச்சியா? மொத்த சொத்தையும் அவளுக்கே கொடுக்க சொல்லுவாண்டி” என்றார்..

 

அன்னை சொன்னதை கேட்டு ” என்னம்மா சொல்லுற நீ” என்று சொல்லவே நாக்கு வரவில்லை அவளுக்கு..

 

“நா, வார்த்தையா சொல்லுறதையே! உன்னால் தாங்க முடியல, அவன்கிட்ட மட்டும்.. உம்பாட்டி சொத்தை பத்தி பேசினாங்க, நீ சீர்னு அள்ளிட்டு போக முடியாது.. மொத்த சொத்தையும் அவ பேர்ல மாத்திட்டு தான். உன் தம்பி அடுத்த வேலையை தான் பார்ப்பான். கொஞ்சமாவது புரிஞ்சி நடந்துக்கடி” என்றவர். தாழ்வாரத்தின் கீழே அமர்ந்து விட்டார்…

 

அன்னையின் அருகே ஓடி வந்தவள். “அது எப்படி முடியும்.. எனக்கும் அதுல உரிமை இருக்குல்ல” என்றாள்..

 

“நம்ம பக்கம் பொண்ணுங்களுக்கு சொத்து தரமாட்டாங்க, சீர் செய்யுறதோட முடிஞ்சிடும்னு” சொன்னவர் , கையிலிருந்த தூக்கு சட்டியை‌ அவள் கையில் கொடுத்து..

 

“எங்கடி, பேத்திங்க ஆளை காணோம்” என்றார்..

 

“அவளுங்க, சின்னாத்தா வூட்டுக்கு டிவி பாக்க போயிருக்காளுங்க” என்று தூக்கு சட்டியை திறந்து மோப்பம் பிடித்தவளுக்கு, சொத்து பின்னுக்கு போய் மீன் குழம்பு முன்னே நின்றது..

 

“ம்மா, நீ  வைக்குற மாறி எனக்கு ஏன் மீன் குழம்பு வரமாட்டுது” என்றாள். ஒர் மீனை எடுத்து வாயில் போட்டுக்கொண்டே!

 

“ஏட்டி கை வைக்காதடி குழம்பு கெட்டு போகும்.. காலைக்கும் சேர்த்து கொண்டு வந்தேன்டி” என்றார்..

 

“போம்மா இது எனக்கே பத்தாது.. இதுல காலையில் வேறையாம்” என்று மீண்டும் மீனை சாப்பிட தொடங்கினாள்..

 

தலையில் கை வைத்தார். மகளின் செயலை கண்டு “ஆமா , மாப்பிள்ளை எப்ப வராங்கடி”..

 

“இராத்திரி வண்டிக்கு வராரும்மா”என்று தூக்கு சட்டியை மூடி வைத்தவள்..

 

“அப்பா , மொளகா வாங்கிட்டு வந்தாரு போல ம்மா” என்று அன்னையை பார்த்து கேட்க,

 

“ஆமா, உனக்கு எப்டி தெரியும்” மகளை திரும்பி பார்த்தார்..

 

“எனக்கு கூட மொளகாத்தூள் காலியாகிடிச்சு, அப்படியே! எனக்கும் சேர்த்து அரைச்சிடுமா” என்றாள்.

 

“ஏட்டி, கட்டிக்கொடுத்த இத்தனை வருஷத்துல ஒரு தடவையாவது. நீ! மொளகாதூள் அரைச்சி இருக்கியாடி” என்றார்..

 

“அதுக்கு என்னை நீ , வெளியூர்ல கட்டுகொடுத்து இருக்கணும் உள்ளூரிலே கட்டிக்கொடுத்தல்ல அப்ப நீ தான் எனக்கு எல்லாம் செய்யனும்..

நீ என்ன பத்து பொண்ணா பெத்துவச்சிருக்க.. எனக்கு முன்ன பிறந்தவ இந்த ஊரை எட்டி பார்த்தே! வருஷம் போச்சு” என்று உள்ளே சென்றாள்..

 

காளியம்மாவுக்கு கண்கள் கலங்கியது..‌ ‘ இத்தனை வருடங்கள் கடந்து இவர் தான் மகளை போய் பார்ப்பாரே தவிர, வேலுவின் அம்மா தேவகியின் பிரச்சினைக்கு அப்புறம் அவள் இந்த ஊர் பக்கமே எட்டி பார்த்ததில்லை..

இவர் போய் வந்தும் மாதங்கள் கடந்திருந்தது’ எண்ணங்கள் பல மனதில் ஊலா வர தொடங்கினாலும். தலையை ஒரு குலுக்கு குலுக்கி எழுந்த வீட்டிற்குள் வரவும்..

 

பேத்திகள் இருவரும்  முகத்தை தூக்கிக்கொண்டு வந்தனர்..

 

சாப்பிட தேவையான பாத்திரங்களை எடுத்து வந்த சரசு மகள்கள் முகத்தை கடுகடுன்னு வைத்துக்கொண்டு வருவதை கண்டு.

 

“என்னடி டிவி பாக்க போறேன்னு  சொல்லிட்டு போன வேகத்திலே திரும்பி வந்துட்டீங்க” என்றாள்

 

“இனிமே நா டிவி பாக்க போகல”என்றாள் அபிராமி கோவமாக ,

 

“என்னடி ஆச்சு அவளுக்கு எதுக்கு இப்படி பேசுறா” என்று பெரியவளை பார்த்து கேட்க,

 

“அது ஒன்னுமில்லம்மா ராஜன் மாமா , இவளை கிண்டல் பண்ணாங்க அது புடிக்கல அவளுக்கு. அதுதான் இப்டி சொல்லுறா” என்று தங்கையின் கையை பிடித்தவள் ‘வேண்டாம் என்று’ தலையாட்டினாள்..

 

பெரியவள் சொன்னதை கேட்டாலும் “என்னடி அக்கா சொல்லுறா, அவன் முறைபொண்ணுங்களை கிண்டல் பண்ணுறது தானேடி, இதுக்கு போய் கோவிச்சிக்கிட்டு வரீங்க போய் கை, காலை கழுவிட்டு வாங்க” என்றாள்..

 

“என்ன பாட்டி அதிசயமா எங்க வீட்டுக்கு வழி தெரிஞ்சிருக்கு” என்ற அபிராமி, அவர் தோளில் கை போட்டாள்..

 

“ஏட்டி, கை எடுடி கூசுது” என்று அவள் கைகளை எடுத்து விட்டவர்..

 

“சரி நா கிளம்புறேன்டி பாத்து ஜாக்கிரதையா இருங்க” என்று கிளம்ப பாக்க..

 

“ம்மா, சாப்பிட்டு போ”..

 

“ஆமா பாட்டி, நீங்க வர்றதே அதிசயம்.. எங்களோட சாப்பிட்டு போங்களேன்” என்றனர் பேத்திகள் இருவரும்..

 

“இல்லடி உங்கப்பா வந்திருப்பாரு , நா போய் அவரை பாக்குறேன்” என்றவர், பேத்திகளை திரும்பி பார்த்து..

 

“இனிமே டி வி பாக்க அங்கே போக வேணாம்.. உங்க மாமன் கிட்ட சொல்லி நம்ம வூட்டுக்கே டி வி வாங்க சொல்லுறேன்” என்று கிளம்பினார்..

 

“நீங்க ஏண்டி நிக்குறீங்க, போய் கையை அலம்பிட்டு வாங்க சாப்பிட வேணாமா” என்றதும்..

 

சகோதரிகள் இருவரும் பின் பக்கம் வந்தனர்..

 

“ஏன்க்கா உண்மையை சொல்லல” என்று கோவமாக கத்தினாள்..

 

அவளின் வாயை பொத்தி “எதுக்குடி இப்படி கத்துற பொறுமையா பேசுடி” என்றாள்..

 

அவள் கையை எடுத்து விட்டவள்.. “நீ எதுக்கு அம்மாகிட்ட உண்மையை சொல்லல, அந்த தெருபொறுக்கி ராஜன் உன் இடுப்பு புடிச்சான்னு” சற்று சத்தம் கூட்டி சொன்னாள்..

 

“கத்தாதடி,  அந்தாளு இப்படி பண்ணான்னு சொன்னா! எல்லாரும் நம்பிடுவாங்க பாரு.. அவன் வீட்டுக்கு டிவி பாக்க போனது நம்ம தப்பு இனி போக வேணாம்டி.. இது யாருக்கும் தெரிய வேணாம்” என்றாள் காவ்யா.

 

“உன்னால எப்படி அமைதியா இருக்க முடியுது.. அவன் மட்டும் என் கையில மாட்டட்டும் கல்லு கொண்டு அவன் மண்டையை உடைக்குறேன்” என்றாள் இளையவள்..

 

பெரியவளுக்கும் அழுகை தானா வந்தது.. அவன் கை பட்ட இடம் தீ பட்டது போல் இருக்க,

 

“அபி, எனக்கு மாத்துதுணி கொண்டு வாடி உடம்பெல்லாம் ஒருமாறி கம்புளி பூச்சு ஏற மாறி இருக்குடி”  என்று அருகிலிருந்த குளியலறைக்குள் நுழைந்தாள்..

 

வாயில் வந்த வார்த்தைகளால் , அந்த ராஜனை அர்ச்சனை செய்தபடி இவள் உள்ளே போனாள்..

 

‘இளம் மொட்டுக்களுக்கு தெரியவில்லை , பகலில் பக்கம் பார்த்து பேசு, இரவில் அதுவும் பே

சாதே!’ என்று

 

இவர்கள் இருவரும் பேசியதை வார்த்தை மாறாமல் பக்கத்து வீட்டின் பின்பக்கம் வந்த மாறன் காதில் விழுந்திருந்தது..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!