விழி கொல்லும் விஷமா நீ EPI 13

விழி கொல்லும் விஷமா நீ..
EPISODE 13
Advertisement
பால்கனியில் நின்று கையிலிருந்த பியர் போட்டலை வாயில் சரித்த வண்ணம் யோசனையில் ஆழ்ந்திருந்தான் ஆரவ்.
Advertisement
இன்று நிஹாரிகா பேசிய வார்த்தைகள்தான் அவனுக்குள் சுழன்றுக்கொண்டிருந்தன.
Advertisement
“யாதவ் நம்ம வாழ்க்கைக்குள்ள வரலன்னாலும் நாம பிரஞ்சிருப்போம் ஆரவ்”
Advertisement
அவளுடைய அந்த வார்த்தைகள் அவனை மேலும் மேலும் காயப்படுத்தின.
“டேய் நம்ம ஆள நம்ம கன்ட்ரோல்க்குள்ள வச்சிருக்கணும்டா, ஆரவ்வ பார்த்து கத்துக்கோங்க, அவன் ஆளு விட்டா வாஷ்ரூம் போறத கூட அவன்கிட்ட சொல்லிட்டுதான் போவான்னா பாருங்களேன்..”
அன்று அவனுடைய நண்பர்கள் உசுப்பேற்றியதிலும் தனக்குள் எழுந்த சந்தேகத்திலும் அவளை கூட்டுக்கிளி போல அடைத்து வார்த்தைகளால் பல தடவை காயப்படுத்தியதை அவனுடைய மனசாட்சி அவனுக்கு ஞாபகப்படுத்தியது.
அவன் உண்மையாகத்தான் காதலித்தான். அவளைத் தவிர வேறு எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்த்ததில்லை.
ஆனால் என்ன, சந்தேகத்தினால் காதலை பலவீனமாக்கிவிட்டான்.
யாதவ் வருவதற்கு முன்னரே ஆரவ் மீதிருந்த நிஹாரிகாவின் காதல் வெறுப்பாக உருவெடுத்ததோடு யாதவ் மீதும் ஒரு ஈர்ப்பை வரவழைத்து விட்டது.
அனைத்தையும் யோசித்த வண்ணம் நின்றிருந்த ஆரவ்வின் நினைவுகள் தன் காதலியுடனான நினைவலைகளை மீட்டிப் பார்க்க, ஜன்னல் வழியே வானத்தை வெறித்துக்கொண்டிருந்த நிஹாரிகாவின் நினைவுகளும் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தன.
யாதவ் தன் மனதிலிருந்ததை சொன்ன பிறகு அன்றிரவு,
“கால் பண்ணலாமா” என்று மனம் கேட்க,”இல்ல வேணாம்.. இது தப்பு நீஹா. ஆரவ்க்கு தெரிஞ்சா கொன்னுடுவான்” என்றது மூளை எச்சரிக்கும் தொனியில்.
“நாம ஃப்ரெண்டா பேசலாமே, அது தப்பில்லயே.. அப்பாவும் சரி ஆரவ்வும் சரி பொண்ணுங்கள மதிச்சதே இல்லை. முக்கியமான என்னை.. என்னோட விருப்பங்கள கண்டுக்கிட்டதே இல்ல. ஆனா இவன் பேசும் போது மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு” என்று மனம் நினைக்க, அவளுடைய விரல்கள் அலைப்பேசியில் அவனுடைய எண்ணை அழுத்தின.
காதில் அழைப்பை வைத்தவளுக்கு ரிங் செல்லும் சத்தத்தைக் கேட்கக் கேட்க இதயம் வேகமாக அடித்துக்கொண்டது.
திடீரென, “ஹெலோ…” என்ற கணீர் குரல்.
பயத்தில் உடல் வியர்க்கத் தொடங்க, ஏன் இந்த பயம் என்றே புரியவில்லை அவளுக்கு.
“அது.. அது நான்.. நான் நிஹாரிகா..” என்று முடிக்கவில்லை அவள், “யார் நிஹாரிகா?” என்று கேட்டான் சட்டென்று.
இவளுக்கு இதற்கு என்ன பதில் சொல்லதென்றே தெரியவில்லை. ஏற்கனவே பயத்தில் இருந்தவளுக்கு நா தந்தியடிக்க ஆரம்பித்துவிட்டது.
“நாம… மீட் பண்ணோமே! அது எப்டி சொல்றது? நீங்க என்கிட்ட லவ்.. இன்னைக்கு பார்க்ல கூட…”
அவள் திக்கித்திணறி பேச, சட்டென மறுமுனையில் பலமான சிரிப்பு சத்தம்.
நிஹாரிகா விதிர்த்துப் போய் அப்படியே இருக்க, “ஹேய் நீஹா, ரிலாக்ஸ்…” என்றான் யாதவ் கூலாக.
பெண்ணவளுக்கு அப்போதுதான் ‘அப்பாடா!’ என்றிருந்தது.
“தெரிஞ்சுதான் இப்படி பண்ணீங்களா யாதவ், நான் வைக்கிறேன்” என்று கோபமாக அழைப்பைத் துண்டிக்க போனவளைப் பார்த்து பதறிவிட்டான் ஆடவன்.
“ஹேய் சாரி சாரி! நான் சும்மா விளையாடினேன். ப்ளீஸ் கோபப்படாத! என்ட்.. என்ன எனக்கு கால் பண்ணியிருக்க? அப்போ உனக்கும் என்மேல…” யாதவ் குறும்போடு தன் கேள்வியை இழுக்க, “ச்சே ச்சே! அப்படியெல்லா இல்ல. நீங்க நல்லா பேசினீங்க, அதான் உங்க கூட ஃப்ரென்ட் ஆகலாமேன்னு.. நாம வேணா நல்ல ஃப்ரென்ட்ஸா…” என்று பதிலுக்கு கேள்வியாக இழுத்தாள் நிஹாரிகா.
அவனோ கொடுப்புக்குள் சிரித்தவன், “அதெல்லா முடியாது, எனக்கு உன்மேல இன்ட்ரஸ்ட் இருக்கு, பிடிச்சிருக்கு. மனசுல வேற ஃபீலிங்க்ஸ்ஸ வச்சுக்கிட்டு ஃப்ரெண்டுன்னு எல்லா என்னால ஆக்ட் பண்ண முடியாது. திஸ் இஸ் யாதவ் அர்ஜூனா. மத்த பசங்க மாதிரி என்னால நடிக்க முடியாது. நாம பேசலாம், மீட் பண்ணலாம். உனக்கு எப்போ என்மேல பீலிங்க்ஸ் வருதோ அப்போ சொல்லு.. வெயிட் பண்ணிட்டே இருப்பேன்”
அவன் சொல்லி முடிக்க, நிஹாரிகாவுக்கு வியப்பாக இருந்தது.
கூடவே அவனின் வார்த்தைகளில் அவளிதழ் புன்னகையில் விரிய, “பார்க்கலாம்” என்றாள் குறும்பாக.
“ம்ம்.. பார்க்கலாம் பார்க்கலாம். சாப்பிட்டியா?” என்று அவன் கேட்டுக்கொண்டிருக்கும் போதே நிஹாரிகாவுக்கு இரண்டாவது அழைப்பாக ஆரவ்விடமிருந்து அழைப்பு வந்தது.
அதைப் பார்த்தவளுக்கு பயத்தில் உடல் உதற ஆரம்பிக்க, “அது யாதவ்.. நான் உங்க கூட அப்பறமா பேசுறேன்” என்றுவிட்டு அழைப்பைத் துண்டிக்க போக, “ஹேய் வெயிட் வெயிட், அவ்வளவுதானா! சரி உன் காலேஜ் பக்கத்துல இருக்குற காஃபி ஷாப்ல நான் வெயிட் பண்ணுவேன். காலேஜ் முடிஞ்சதும் அங்க வந்துரு” என்று வேகமாக சொன்னான் யாதவ்.
இவளுக்கு ஒவ்வொரு கணங்களும் தாமதமாக ஆரவ் பற்றிய பயம்தான் கூடிக்கொண்டே போனது.
“சரி நான் வர்றேன்” அப்போதிருந்த பதற்றத்தில் சொல்லிவிட்டு உடனே ஆரவ்வின் அழைப்பையேற்று, “ஹெலோ…” என்றாள் பதற்றமாக.
சில கணங்கள் மறுமுனையில் மயான அமைதி.
“எவன் கூட டீ பேசிக்கிட்டு இருந்த?” என்று அவன் கடுங்கோபக் குரலில் கேட்க, இவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.
“ஏன்.. ஏன் இப்படி கேக்குற ஆரவ், ஆதிரா கூடதான் பேசிட்டு இருந்தேன். எனக்கு அவள விட்டா வேற யாரு இருக்கா?” என்று நிஹாரிகா சமாளிக்க, ஏற்கனவே சந்தேக புத்தி கொண்டவனுக்கு இன்னும் சந்தேகம்தான் கூடியது.
“அப்படியா.. இந்த பொண்ணுங்களயே நம்ப முடியாது, எந்த நேரத்துல காலை வாருவீங்கன்னு தெரியாது. மொதல்ல உன் வாட்சப்ப ஸ்கேன் பண்ணி என் ஃபோன்ல வச்சுக்கிட்டாதான் நல்லது. எல்லாமே உன் நல்லதுகாகத்தான் பேபி, நீ இதை பெருசா யோசிக்காத!”
என்று அவன் சொல்ல, நிஹாரிகாவின் முகம் வெறுப்பில் சுருங்கியது.
‘இவன்கிட்ட நம்ம மனசுல இருக்குறத சொல்லணும், ஆனா அதுக்கு தைரியம்தான் வர மாட்டேங்குது ச்சே!’ தனக்குள் புலம்பியவள், “சரி ஆரவ், அப்போ நான் வைக்கிறேன்” என்றுவிட்டு அழைப்பை துண்டிக்க போக, “எதுக்கு?” என்றான் ஆரவ் வேகமாக.
“இல்ல… ரொம்ப நேரம் அஸ்ஸைன்மென்ட் பண்ணேன். தூக்கம் வருது அதான்…” திக்கித்திணறி அவள் சொல்ல, “ஐ வோன்ட் டூ டெல் யூ வன்திங். டூ டேய்ஸ்ல என் கம்பனில ஒரு பார்ட்டீ இருக்கு. என்னோட முக்கியமான பிஸ்னஸ் பார்ட்னர்ஸ் எல்லாரும் வருவாங்க. நீயும் வரணும் புரியுதா?” என்று ஒரே முடிவாக சொன்னான் அவன்.
நிஹாரிகாவுக்கு இதில் கொஞ்சமும் உடன்பாடில்லை.
“என்ட் நீஹா, நீ காலேஜ் முடிச்சதுமே நாம கல்யாணம் பண்ணிடலாம். ஐ கான்ட் வெயிட், நானே வந்து உன் அம்மாகிட்ட பேசிடுறேன். என்ட் வேலைக்கு போகணும் சாதிக்கணும்னு ஏதாச்சும் ஐடியா இருக்கா என்ன! அப்படி ஏதாச்சும் இருந்தா நீயே அழிச்சிரு. ஐ அம் நொட் இன்ட்ரெஸ்டட் இன் தட். நீ வேலைக்கு போய் கஷ்டப்பட அவசியமே இல்ல பேபி, நான் இருக்கேன்”
அவன் வழக்கம் போல தன் கட்டுப்பாட்டை விதிக்க, எதிர்த்து பேச நா துடித்தாலும் எச்சிலை விழுங்கி உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டாள் நிஹாரிகா.
அவனிடம் நியாயம் பேசுவதற்கு அமைதியாக இருப்பது மேலென நினைத்தாளோ!
“ம்ம் சரி” என்று மட்டும் சொல்லிவிட்டு அவனே அழைப்பைத் துண்டிக்கும் வரை காத்திருந்து படுக்கையில் சாய்ந்தவளுக்கு விழிகள் குளம் கட்டின.
அவனுடனான அவள் காதல் ஒன்றும் தெய்வீகக் காதல் அல்ல. எங்கோ அவளை சந்தித்து பிடித்துப் போய் நேரடியாக வீட்டிற்கு வந்தே தன் விருப்பத்தை அவள் தாய் முன்னே அவளிடம் சொல்லிவிட்டான்.
அவனுடைய செயல் அவளை ஈர்த்தது என்னவோ உண்மைதான். ஆனால் அப்போது காதலா என்று கேட்டிருந்தால் அது கேள்விக்குறி தான்.
பின் மகளுக்கு வரம் கிடைத்தது போல பூரித்த நிஹாரிகாவின் தாய் ராதாவுக்கு மகளை சம்மதிக்க வைப்பது ஒன்றும் அத்தனை சிரமமாக இருக்கவில்லை.
தாயின் வற்புறுத்தலையும் அவனின் அதிரடியான காதல் ப்ரோபஸையும் பார்த்துவிட்டு அவனின் விருப்பத்திற்கு தலையாட்டிய அன்றிலிருந்து கூண்டுக்கிளி போல்தான் அவள் வாழ்க்கை.
கண்ணீரைத் துடைத்துக்கொண்டவள் மனம் கேட்காமல் தாயின் அருகே சென்று படுத்துக்கொள்ள, அவளின் தலையை வாஞ்சையோடு வருடியவர், “என்னாச்சும்மா, ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்டார் தாய் அறியா சூலா என்ற கேள்வியோடு.
தாயின் முகத்தை கலக்கமாக பார்த்தவளுக்கு எப்படி ஆரம்பிப்பதென்றே தெரியவில்லை.
“அது வந்தும்மா.. ஆரவ்.. ஆரவ் எனக்கு பொருத்தமில்லையோன்னு தோனுது. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்த உறவு வேணாமோன்னு…”
அவள் தயங்கித் தயங்கி இழுக்க, பதறியடித்துக்கொண்டு எழுந்தமர்ந்தார் ராதா.
“என்ன பேசுற நீஹா, நாம இருக்குற நிலைமைக்கு உனக்கு இந்த மாதிரியான மாப்பிள்ளைய நினைச்சு பார்க்க முடியுமா சொல்லு! அதுவும் கொஞ்சநாளா என் உடம்பு வேற சரியில்ல, எனக்கப்பறம் அந்த பையன் உன்ன ரொம்ப நல்லா பார்த்துப்பான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.
பணக்கார வீட்டு பசங்க, அவங்க விருப்பப்படி இருக்கணும்னு நினைப்பாங்க. அதெல்லா கல்யாணத்துக்கப்பறம் சரியாயிடும். இதையெல்லா போட்டு யோசிச்சு மனச குழப்பிக்காத! படுத்து தூங்கு”
என்று மகளை தேற்றிவிட்டு அவர் திரும்பி படுத்துக்கொள்ள, நிஹாரிகாவுக்கு அன்றைய இரவு தூங்கா இரவாகித்தான் போனது.
அடுத்தநாள், நிஹாரிகா வருவாள் என எதிர்பார்த்து அந்த காஃபி ஷாப்பில் மதியத்திலிருந்தே காத்திருக்க ஆரம்பித்தான் யாதவ்.
வாசலை பார்ப்பதும் பின் நேரத்தைப் பார்ப்பதுமாக அவன் இருக்க, நேரம்தான் காலில் சக்கரத்தை கட்டியது போல ஓடியது.
அவளுக்கு அழைக்க, அழைப்பும் சென்றபாடில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் மாலை ஆறு மணி வரை அங்கேயே காத்திருந்தவனுக்கு முகம் இறுகிப் போயிருந்தது.
அதேநேரம் அப்போதுதான் தன் அம்மாவோடு வீட்டிற்குள் நுழைந்து பொத்தென்று தரையில் அமர்ந்தாள் நிஹாரிகா.
“எழவு வீட்டுலயிருந்து வந்திருக்கோம்டீ, போய் மொதல்ல குளி. வீட்டுக்கு ஆகாது” என்று ராதா கத்த, “இரும்மா… ரொம்ப டயர்டா இருக்கு, இவ்வளவு நேரம் பொறுமையா நான் அங்க இருந்தத நினைச்சு சந்தோஷப்படு. ஃபோன வேற மறந்து வச்சிட்டு போயிட்டேன், அந்த ஆரவ் என்னன்னா அங்க வச்சு உன் நம்பருக்கு கால் பண்ணியே என்னை சாகடிச்சிட்டான், ஒன்னுக்கு போறாதுன்னா கூட இந்த சைக்கோகிட்ட சொல்லிட்டு போக வேண்டியதா இருக்கு. ச்சே! இந்த நிலைமையில நேரங்கெட்ட நேரத்துலதான் எழவு வீடு அது இதுன்னு ஏதாச்சும் வரும்” என்றவளுக்கு அப்போதே தன் அலைப்பேசி ஞாபகத்திற்கு வர, வேகமாக அறைக்குள் ஓடினாள்.
“பின்ன உன்கிட்ட சொல்லிட்டா மண்டைய போடுவாங்க, நல்ல கதையால்ல இருக்கு” என்று அவர் பதிலுக்கு கடுப்படிக்க, அம்மாவின் கத்தலை காதிலும் வாங்கிக்கொள்ளவில்லை அவள்.
அணைந்திருந்த அலைப்பேசியை உயிர்ப்பித்தவளுக்கு விழிகள் பிதுங்கி விடுமளவிற்கு விரிந்துக்கொண்டன.
“யாதவ்…” அவனுடைய பெயரை முணுமுணுத்தவளுக்கு அப்போதுதான் நேற்று அவன் சொன்னதும் ஞாபகத்திற்கு வர மறுகணமே அவனுடைய எண்ணிற்கு அழைத்திருந்தாள்.
உடனே அழைப்பை ஏற்றவன், “சொல்லு நீஹா…” என்று ஒருமாதிரியான குரலில் சொல்ல, “என்னை.. என்னை மன்னிச்சிரு, நா.. நான் வேணும்னு வராம இருக்கல. அம்மா சைட்ல சாவு வீடு, காலையிலயே தகவல் வந்ததும் போயிட்டேன். இப்போதான் வீட்டுக்கே வர்றேன். ஃபோன வச்சிட்டு போனதால எனக்கு எதுவுமே நியாபத்துக்கு வரல. ஐ அம் சாரி! ப்ளீஸ் கோபப்படாத!” என்று மூச்சு விடாமல் படபடவென பேசிக்கொண்டே போனாள்.
“ஹேய் ஸ்டாப் ஸ்டாப்! இப்போ நான் ஏதாச்சும் உன்மேல கோபப்பட்டனா என்ன?” அவன் கேட்க, “அது.. இல்ல கோபப்படுவல்ல, யாரா இருந்தாலும் கோபப்பட்டிருப்பாங்க. உன்கிட்ட நான் கேட்டிருக்கணும், ஐ நோ யாதவ். அதான் நான்…” என்று தயக்கத்தோடு இழுத்தாள் நிஹாரிகா.
ஆனால் யாதவ்வின் இதழில் ஒரு மெல்லிய புன்னகை தவழ்ந்தது.
“ஓ காட்! நான் எதுக்கு கோபப்படணும்? உன்னோட லைஃப்ல நடக்குற இன்சிடன்ட்ஸ் எனக்கு ஃபேவரா இருக்கணும்னு நான் எப்படி எதிர்பார்க்க முடியும் நீஹா? வர மாட்டேன்னு ஒரு மெசேஜ் போட்டிருக்கலாம், நான் வெயிட் பண்ணியிருக்க தேவையில்ல அதுதான் எனக்கு கொஞ்சம் வருத்தமே தவிர, நீ போனதுக்கு கோபப்பட எனக்கு என்ன உரிமை இருக்கு? திஸ் இஸ் யூவர் லைஃப், என்கிட்ட கேட்டு பண்றதுக்கு நீ என்ன சின்ன குழந்தையா? இப்போ இதை விடு, இன்னைக்கு என்னாச்சு தெரியுமா…”
அவன் நடந்ததை மறந்து அவளிடம் சிரித்துப் பேசிக்கொண்டே போக, பெண்ணவளுக்கு ஆச்சரியம் தாளவில்லை.
ஆரவிடத்தில் மட்டும் இது நேர்ந்திருந்தால் அவள் இருக்கும் இடத்தை தேடி அவளெதிரே வந்து நின்றிருப்பான், ஆனால் இவன்!
‘நான் ஏன் ஆரவ்க்கு முன்னாடி இவன சந்திருச்சிக்க கூடாது?’
தனக்குள் அன்று கேட்டுக்கொண்டது போலவே இன்று அந்த நினைவலைகளிலிருந்து வெளியில் வந்து தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள் நிஹாரிகா.
***********
மறக்காம உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்க டியர்ஸ் 😍😍
