விழி கொல்லும் விஷமா நீ EPI 12

விழி கொல்லும் விஷமா நீ..
EPISODE 12
Advertisement
சோஃபாவில் அமர்ந்திருந்த நிஹாரிகாவின் வயிறு பசியில் கூவிக்கொண்டிருந்தது.
Advertisement
கொஞ்சமும் தன்னை கண்டுகொள்ளாமல் அவளைப் பார்க்க வைத்து சாப்பிடுபவனைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு கொலைவெறியே வந்தது.
Advertisement
‘ச்சே! கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாதவன், ஒரு பேச்சுக்காவது என்னை சாப்பிட கூப்பிடுறானா? கல்நெஞ்சக்காரன்’ உள்ளுக்குள் புலம்பியவள் அவனை பாவமாக பார்ப்பதும் அவன் பார்க்கும் போது திரும்பிக் கொள்வதுமாக தடுமாறிக்கொண்டிருக்க, அதை யாதவ் அறியாமலில்லை.
Advertisement
“ஹ்ர்ம் ஹ்ர்ம்.. மிஸ் நிஹாரிகா, சும்மா இங்க இருக்குறதுக்கு என் லேப் அங்க இருக்கு. நம்ம ஹோட்டலோட இன்வெஸ்டெர் ஒருத்தருக்கு இம்பார்டன்ட் ஈமெயில் சென்ட் பண்ணணும். நான் சொல்ற மாதிரி பண்ணுங்க”
யாதவ் சொல்ல, இவளுக்கு உள்ளுக்குள் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
‘இவன்லாம் மனுஷனே இல்ல’ என்று தனக்குள் பொறுமியவாறு எழுந்தவள் வேண்டா வெறுப்பாக அவன் லேப்டாப்பை வைத்திருக்கும் மேசையை நோக்கிச் செல்ல, மீண்டும் அவளை நிறுத்தியது அவனுடைய குரல்.
“இட்ஸ் ஓகே, சாப்பிட்டு வேலைய பாரு” அவன் சொன்னதுதான் தாமதம், வேண்டாம் என்ற வார்த்தையே வரவில்லை அவளிடம்.
மின்னல் வேகத்தில் அவனருகே இருந்த இருக்கையில் வந்தமர்ந்தவள், அவன் வாங்கி வைத்திருந்த பீட்சா பெட்டியிலிருந்து இரண்டு பீஸ்களை எடுத்து தட்டில் வைத்தாள்.
கறியோடு சேர்ந்த சீஸ் வழிந்துச் செல்ல, இருக்கும் பசியில் இரண்டு பீட்சா துண்டுகளையும் வேகவேகமாக சாப்பிடத் தொடங்கினாள் நிஹாரிகா.
யாதவ்வோ தன் பீஸை ஒரு வாய் கடிக்கச் சென்றவன் பின் அவளின் செயலை அதிர்ந்து பார்த்துக்கொண்டிருக்க, பெண்ணவளோ அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.
“பீட்சால கறி ரொம்ப கம்மியா இருக்கு சார்” என்று குறை வேறு அவள் சொல்ல, ஒற்றைப் புருவத்தை தூக்கி அவளை முறைத்துப் பார்த்தான் யாதவ்.
“ஹிஹிஹி… சாரி சார்! உங்க மேட்ச் எல்லா எப்படி போகுது? அதுக்கப்பறம் மிஸ்டர் மஹாதேவன் கூட சேர்ந்து நிவ் ஹோட்டல் கட்டுற ப்ளான் என்னாச்சு?” என்று சமாளிக்கும் பொருட்டு அவள் பேச்சை மாற்ற, “இன்னும் வன் மன்த்ல ஐபீஎல் முடிஞ்சிரும். அதுக்கப்பறம் நிவ் ஹோட்டல் சம்பந்தப்பட்ட வேலையில நான் முழுசா இறங்கிருவேன். என்ட் டூ யூ வாட்ச் கிரிக்கெட்?” என்று கேட்டான் அவன்.
நிஹாரிகா ஒருசில கணங்கள் திருதிருவென விழித்தாள்.
“அது.. பார்ப்பேன், எனக்கு நெருக்கமான ஒருத்தங்கள பார்க்குறதுக்காக மட்டும்” என்று அவள் தன்னவனையே பார்த்தபடி சொல்ல, அவள் பார்வை தன்மீது இருப்பது தெரிந்தும் அவள்புறம் பார்வையை திருப்பவே இல்லை யாதவ்.
“சீக்கிரம் சாப்பிட்டு வேலைய பாரு!” அவன் சொன்னதும் அவளுக்கு சப்பென்று இருக்க, உண்டு முடித்து அவனுடைய லேப்டாப்பிற்கு முன்னே அமர்ந்துக்கொண்டாள்.
“சார் லேப் ஆன் ஆக மாட்டேங்குது” என்று அவள் சொன்னதும் புருவ முடிச்சுகளோடு அவளருகே வந்தவன் சற்று குனிந்து லேப்டாப்பில் ஒரு பட்டனை மட்டும் அழுத்தி ஆன் செய்தான்.
“ஒரு லேப்ப ஆன் பண்ண தெரியல, நீ என் பர்சனல் செக்கரட்ரி” அவன் எரிச்சல் மண்டிய குரலில் சொல்ல, ‘ஹிஹிஹி…’ என்று அசடுவழிந்தவளின் முகம் அடுத்தகணம் திரையில் தெரிந்த படத்தைப் பார்த்ததும் அப்பட்டமான வேதனையோடு சுருங்கியது.
யாதவ்வின் முன்னால் காதலி மேக்னாவோடு அவன் நெருக்கமாக எடுத்த புகைப்படமே அவனின் திரையில் காட்சியளித்தது.
தன்னவன் இன்னொரு பெண்ணோடு நெருக்கமாக இருப்பதை எந்தப் பெண்ணால் தான் தாங்கிக்கொள்ள முடியும்!
கீழுதட்டைக் கடித்து உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டவள் நுனியில் நின்றுக்கொண்டிருந்த விழிநீரை இமை சிமிட்டி அடக்க முற்பட்டாள்.
இதை ஆடவனும் உணராமல் இல்லை. ஆனால், அதைத்தானே அவனும் எதிர்பார்த்து செய்தான்!
ஓரக்கண்ணால் அவளின் உணர்ச்சிப் போராட்டத்தை கவனித்தவனுக்கு அத்தனை திருப்தியாக இருந்தது.
“ஹோட்டலோட ப்ராஃபிட் என்ட் எக்ஸ்பென்ஸ் பத்தி சொன்னா போதும்” என்று மட்டும் சொல்லிவிட்டு அவளுக்கு எதிரே சென்று யாதவ் அமர்ந்துக்கொள்ள, மெல்ல விழியோரம் கசிந்த நீரை துடைத்தவள் எதுவும் பேசாமல் அவன் சொன்ன வேலையை செய்தாள்.
யாதவ்வோ அவளின் முகபாவனையை தான் உற்று கவனித்துக்கொண்டிருந்தான்.
அதில் வேதனையும் வலியும் போட்டி போட, அழுகையில் துடிக்கும் இதழை கட்டுப்படுத்த அவள் படாதபாடு பட்டுக்கொண்டிருப்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது.
ஆனால், ஒருசில கணங்கள்தான்.
“சார், செக் பண்ணுங்க” அவள் சொல்லிக்கொண்டே அதே வலி நிறைந்த விழிகளோடு அவனை ஒரு பார்வைப் பார்த்தாள்.
இத்தனை நேரம் அவள் வேதனையை திருப்தியோடு பார்த்துக்கொண்டிருந்தவனின் முகம் அவள் பார்த்த பார்வையில் சட்டென மாறியது.
அவளுடைய வேதனை நிறைந்த பார்வையைப் பார்த்ததும் அவனுக்குள் சுள்ளென்று இருக்க, மனதில் ஏனென்று தெரியாத பாரம் ஏறிய உணர்வு.
அவனுடைய விழிகள் தடுமாறின. அதற்குமேல் அவளெதிரே இருந்தால் தன்னிலை இழந்து விடுவான் என்று அவனுக்கு புரிந்தது போலும்!
இருக்கையை அடித்தெழுந்தவன் உடனே மாடியை நோக்கி விறுவிறுவென்று சென்றிருக்க, போகும் அவனை வெறித்துப் பார்த்திருந்தாள் நிஹாரிகா.
அதேநேரம் இங்கு ஆதிரா மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க பத்ரகாளி போல் நின்றுக்கொண்டிருக்க, அவள் அறைந்த கன்னத்தில் கை வைத்தபடி அதிர்ந்துப் போய் நின்றிருந்தான் சித்தார்த்.
“ஆமா அவ தப்பு பண்ணாதான், அந்த ஆரவ் இருக்கும் போதே உன் ஃப்ரென்ட்ட காதலிச்சா. அதை நான் இல்லன்னு சொல்லல. ஆனா… அவ வாழ்க்கையோட சந்தோஷமே யாதவ் மட்டும்தான். ஆரவ் மேல அவளுக்கு இருந்தது காதலா பயமா என்ன எழவுன்னு எனக்கு தெரியல, ஆனா யாதவ்வ உண்மையாதான் லவ் பண்ணா, இப்போ வரைக்கும் அவனுக்காக மட்டும்தான் இருக்கா.
உன் ஃப்ரென்டோட இடத்துல யார் இருந்திருந்தாலும் அக்செப்ட் பண்ணிக்க முடியாதுதான், புரியுது. ஆனா நீஹா பண்ண தப்பையும் தாண்டி நிறைய கஷ்டத்த அனுபவிச்சிட்டா சித்தார்த்”
என்ற ஆதிரா ஆரவ்வுடனான நிஹாரிகாவின் உறவிலிருந்து யாதவ் அவள் வாழ்க்கையிலிருந்து விலகியதும் நடந்தவை வரை அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
அத்தனையும் கேட்ட சித்தார்த்திற்கு அப்போதுதான் நிஹாரிகாவின் நிலை நன்றாகப் புரிந்தது.
அவனுடைய முகம் சிறு அதிர்ச்சியையும் கூடவே குற்றவுணர்ச்சியையும் வெளிப்படுத்த எதுவும் பேசாமல் ஆதிராவையே பார்த்தபடி அமைதியாக நின்றிருந்தான்.
சில கணங்கள் தான்.
அவனே மௌனத்தைக் கலைத்து, “நிஹாரிகா பண்ண காரியத்தால யாதவ் அவனையே இழந்துட்டு நிக்கிறான். அவன் இயல்பா சிரிச்சு பார்த்து நாலு வருஷமாகுது. என் ஃப்ரென்ட்ட அப்படி பார்க்கும் போது அவ மேல இருந்த கோபம்தான் கூடிச்சு. ஆனா… நா.. நான் நிஹாரிகா பக்கம் என்ன நடந்திருக்கும்னு யோசிச்சிருக்கணும்.
என்ட்… யாதவ் இதை ஏத்துப்பானா இல்லயான்னு எல்லா எனக்கு தெரியல. பட் ஐ அம் டேம்ன் ஷுவர், ஷீ இஸ் ஹிஸ் ஹேப்பினெஸ், ஷீ இஸ் ஹிஸ் லைஃப். ரெண்டு பேரும் சேர்ந்தாலே எல்லாமே பழைய மாதிரி ஆகிரும்” என்று விழிகள் மின்ன சொல்லி முடித்தான்.
ஆதிராவுக்கு ஆச்சரியமாக இருந்தது, ‘இவனிடம் இத்தனை தெளிவா?’ என்று..
“பரவாயில்லயே, இவனுக்கு இவ்வளவு நிதானமா எல்லா பேச தெரியுமா, ஒருவேள இது மாறுவேஷமோ?” என்று அவள் மைன்ட் வாய்ஸ் என நினைத்து வாய்விட்டு சொல்லிவிட, அவளை முறைத்துப் பார்த்தான் சித்தார்த்.
அவனோ அவள் அறைந்த கன்னத்தை தடவி விட்டபடி, ஒற்றைப் புருவத்தைத் தூக்கிப் பார்க்க, அப்போதுதான் தான் கோபத்தில் அறைந்ததே ஆதிராவுக்கு ஞாபகத்திற்கு வந்தது.
‘ஆத்தாடி ஆத்தா! என்ன இவன அறைஞ்சுட்டோம், போச்சு போச்சு இவன்கிட்ட நம்ம க்ரைம் ரேட் கூடிட்டே போகுதே.. உக்கிரமா வேற பார்க்குறானே, பதிலுக்கு அடிச்சிருவானோ?’ என்று உள்ளுக்குள் அலறியவள், “ஹிஹிஹி… பில்டிங் ஸ்ட்ரோங்கு பேஸ்மென்ட் வீக்கு சார். அடிச்சிடாதீங்க, பாடி தாங்காது” என்றாள் பாவமாக.
ஏனோ அவளின் முகபாவனையில் அவனுக்கு சிரிப்பு வர, அவனுடைய இதழ்கள், சிரிப்பில் விரிந்துக்கொண்டதை கண்டுகொண்டாள் ஆதிரா.
“யாதவ்வோட ஃப்ரென்டா இருக்குறதால உங்களுக்கும் சிரிக்கவே தெரியாதுன்னு நினைச்சேன், பரவாயில்லயே, நல்லாதான் இருக்கு” என்று அவள் குறும்புப் புன்னகையோடு சொல்ல, போலி முறைப்போடு அவளைப் பார்த்தான் சித்தார்த்.
இங்கு இவர்களுக்கிடையில் இவ்வாறு இருக்க, யாதவ்வின் வீட்டிலோ வேலையை முடித்ததுமே நிஹாரிகா சோஃபாவில் சென்று விழிகளை மூடி அமர்ந்துக்கொண்டாள்.
யாதவ் மற்றும் மேக்னாவுக்கிடையில் தொடர்பு இருப்பதாக வலைத்தளங்களில் செய்திகள் பரவும் போதே மேக்னாவின் தனிப்பட்ட வலைத்தள பக்கத்தில் இந்த புகைப்படத்தை பார்த்திருக்கிறாள் அவள்.
தன்னவன் இன்னொரு பெண்ணோடு நெருக்கமாக இருப்பதைக் கண்டதும் சுக்கு நூறாக உடைந்துப் போனவள் அடுத்து எத்தனை நாட்கள் உறக்கமின்றி ஊனின்றி இருந்தாள் என்பதை அவள் பக்கத்திலிருந்த ஆதிரா அறிவாள்.
தோழியை தேற்றியெடுக்க அவள் பட்ட பாடு அவளுக்குதானே தெரியும்!
ஆனால் இருவரும் பிரிந்து விட்டாதாக தெரிந்த அத்தருணம் நிஹாரிகா அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
இப்போது மீண்டும் அதே புகைப்படம். அதுவும் அவனின் தனிப்பட்ட லேப்டாப்பில்.
ஏனோ அவளால் ஜீரணிக்க முடியவில்லை. இத்தனை வருடங்கள் தன்னைத்தானே சமாளித்து அவனின் நினைவில் வாழ்ந்தவளுக்கு இப்போது அந்த முயற்சியும் தோல்வியே..
உள்ளுக்குள் பலவிதமான உணர்ச்சிப் போராட்டத்தோடு அவள் அமர்ந்திருக்க, மாடியிலிருந்து அவளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் யாதவ்.
பெண்ணவளோ ஏற்கனவே இருந்த களைப்பில் அப்படியே உறங்கிப் போக, மாடியிலிருந்து இறங்கி அவளருகே வந்து நின்றான் யாதவ்.
ஒரு காலை மடக்கி அவளின் முகமருகே அமர்ந்துக்கொண்டவன், விழி மூடாமல் அவளையே பார்த்திருந்தான்.
காதல் வெறுப்பு இரண்டும் ஒருசேர அவனுக்குள் போட்டி போட, அந்த உணர்வுகளை தாங்க முடியாதவனாய் விழிகளை அழுந்த மூடித் திறந்தான்.
அப்போதுதான் அவள் முகத்தில் தவழ்ந்துக்கொண்டிருந்த சிறிய முடிக்கற்றை அவனின் விழிகளுக்குள் சிக்க, அவளை தொட்டும் தொடாமல் மெல்ல அதை காதோரமாய் ஒதுக்கி விட்டான் யாதவ்.
“நீஹா…” அவனுடைய இதழ்கள் மெல்ல அவள் பெயரை முணுமுணுத்தன.
அவன் அழைத்தது அவளுக்கு அந்த தூக்கத்திலும் கேட்டது போலும்!
“சாரி சார், நாளைக்கு சீக்கிரமா வந்துடுவேன்” அரைத் தூக்கத்தில் அவள் பிதற்ற, அவளின் செர்ரி பழ இதழ்கள் அவனை சற்று சீண்டிப் பார்த்தது என்னவோ உண்மைதான்.
ஆடவனாக உணர்ச்சிகளின் தாக்கத்தில் தன்னை மறந்து அவளின் இதழை நோக்கி நெருங்கினான் யாதவ்.
ஆனால் கணங்களில் அவன் மூளைக்கு தான் செய்யும் காரியம் உணர, உடனே பதறியபடி விலகி நின்றுக்கொண்டான்.
“ச்சே! மானங்கெட்டவன்” தலையை அழுந்தக் கோதி தன்னைத்தானே திட்டிக்கொண்டவன் வேகமாக மாடியிலிருந்த தனதறைக்குள் நுழைந்துக்கொண்டான்.
அடுத்தநாள் காலையில் நிஹாரிகா கண் விழிக்க, சுற்றி முற்றி எங்கும் அவனில்லை.
“சிஸ்டர், சார் உங்கள உங்க வீட்டுல ட்ரோப் பண்ண சொன்னாரு” என்ற யாதவ்வின் ஓட்டுனர் ஒருவரின் குரல் பின்னாலிருந்து கேட்க, ஏமாற்றமாய் உணர்ந்தாள் பெண்ணவள்.
மனமே இல்லாமல் தலையாட்டிவிட்டு அவரோடு சென்று வீட்டு பக்கத்தில் இறங்கிக்கொள்ள, அவளுக்காகவே காத்திருப்பவன் போல அவள் வீட்டு வாசலிலேயே தன் காரின் மேல் ஒற்றைக் காலை மடக்கி சாய்ந்து நின்றுக்கொண்டிருந்தான் ஆரவ்.
முன்னரே பார்த்திருந்தால் காரிலிருந்தே இறங்கி இருக்க மாட்டாளோ என்னவோ!
ஆனால் இப்போது..
வேறு வழியின்றி எங்கோ பார்த்த வண்ணம் அவள் அவனை கடந்து செல்லப் போக, “ஸ்வீட்ஹார்ட்…” என்றழைத்தான் ஆரவ் மென்மையாக.
சட்டென்று நின்றவள் ஒரூ பெருமூச்சைவிட்டு திரும்பிப் பார்த்து, “இப்போ எதுக்கு வந்திருக்க?” என்று கேட்டாள் காட்டமாக.
ஆரவ்வின் இதழ்கள் கேலியாக வளைய, “எதுக்குன்னு உனக்கு தெரியாதா நீஹா? ஐ லவ் யூ… அதான் உன்னை தேடி வந்திருக்கேன்” என்றவனின் வார்த்தைகளில் காதல் மிதக்க, விழிகளை அழுந்த மூடித் திறந்தாள் நிஹாரிகா.
“உன்கிட்ட பல தடவை சொல்லிட்டேன் ஆரவ், ஆனா நீ… ப்ளீஸ் புரிஞ்சுக்கோ!” என்று அவள் பேசி முடிக்கவில்லை, வேகமாக அவளை நெருங்கி அவள் கரத்தைப் பற்றிக்கொண்டான் அவன்.
“ஏன்டீ நீ என்னை புரிஞ்சுக்க மாட்டேங்குற? தினமும் உன்னை தேடி வர்றேன், ஆனா நீ உன்ன கொஞ்சமும் கண்டுக்காத அவன் பின்னாடி சுத்திட்டு இருக்க. போயும் போயும் அவன்கிட்ட வேலை பார்த்துக்கிட்டு ச்சே! ஐ கான்ட் டோலரேட் நீஹா, அவனுக்காக என்னை வேணாம்னு சொல்றேல்ல, அதான் மன்னிப்பு கேட்டுட்டேன்ல, இன்னும் என்னடி பண்ணணும்?”
அவன் மனதிலிருந்த ஆதங்கத்தை கொட்டி அவளை உறுத்து விழிக்க, உணர்ச்சிகளற்ற ஒரு பார்வைப் பார்த்தாள் நிஹாரிகா.
“நாம பிரிஞ்சதுக்கு யாதவ் காரணமில்ல
ஆரவ், அதுக்கு காரணம் நீ.. நீ மட்டும்தான். நம்ம வாழ்க்கையில யாதவ் வந்திருக்கலன்னாலும் நாம பிரிஞ்சிருப்போம்”
அவள் இறுகிய குரலில் சொல்ல, அந்த வார்த்தைகளில் விதிர்த்துப் போய் நின் றுவிட்டான் அவன்.
அவளைப் பற்றியிருந்த அவனின் கரம் தானாக தளர, அவன் விழிகளை நேருக்கு நேராகப் பார்த்தபடி நின்றிருந்தாள் நிஹாரிகா.
*********
-Sheha zaki
