Skip to content
Post Views: 7,898
Born with a Silver Spoon என்பதால், ரகு, எதற்கும் எப்போதும் கஷ்டப்பட வேண்டியிருக்க வில்லை! அவனுக்கெல்லாமே கேட்கும் முன்னரே கிடைத்தது தான்!
ஆனால் அவனுக்குள்ளும் ஒரு குறை உண்டு, ஏக்கமும் உண்டு!
அது அவனுக்கான தனித்த அடையாளம்!
எங்கு சென்றாலும், அவன் டாக்டர் ராமநாதனின் சின்ன மகன் என்றோ, டாக்டர் ரெங்கநாதனின் தம்பி மகன் என்றோ, ராகினியின் தம்பி, அல்லது ராகவனின் தம்பி என்றே அறிமுகம்!
Advertisement
இவ்வளவு ஏன்?
காலேஜில் கூட, ஆல் ரவுண்டர், பாப்புலர் ஸ்டுடென்ட் வைஷுவின் பெஸ்ட் பிரன்ட் என்றே அடையாளம்!
இவன் கஷ்டப்பட்டு படித்து டிஸ்டிங்ஷன் வாங்கினால் கூட, டாக்டர் வீட்டுப் பையன் மார்க் வாங்கியது பெரிய அதிசயமா? ரொம்ப ஈசியாக சொல்லிவிடுவார்கள்!
Advertisement
ரொம்ப சமர்த்துப் பையனாக நடந்து கொள்வதைப் பார்த்து, எல்லாம் விஜி வளர்ப்பு அப்படி! என்று அந்த கிரெடிட் அவன் அம்மாவுக்கு!
Advertisement
அது இன்றுவரைக்கும் கூட தொடர தான் செய்கிறது!
இன்னும் தன்வி குட்டியின் சித்தா என்ற அடையாளம் தான் பாக்கி!
இதனால் தான் அவனுக்கு, ரகுவின் அப்பா இவர், ரகுவின் பெரியப்பா இவர், அண்ணன், அக்கா இவர்கள் என்று அவர்களுக்கெல்லாம், அவன் ஒரு ரெபரென்ஸ் ஆக இருக்க பெருமளவு ஆசைப்பட்டான் சின்ன வயதில்!
Advertisement
அதனால் தான் ஒரு கிரிக்கெட்டர் ஆக வேண்டும், ரொம்ப பாப்புலர் ஆக வேண்டும் என்றும் ஆசை!
அதை அறிந்து கொண்ட பார்த்தி, அவனுக்கு தூபம் போட்டு போட்டு, அவன் தேவைகளை பார்த்துக் கொண்டான்!
ரகு ஆசைப்பட்டாலும், படிப்பு வந்த அளவு, அவனுக்கு கிரிக்கெட் விளையாட வர வில்லை!
பின், அடுத்து கொஞ்ச காலம் அவனுக்கு மீடியாவின் மேல் ஆசை வந்தது!
“நீ பார்க்க அப்படியே ஹீரோ மாதிரி இருக்கடா! நீயெல்லாம் ஒரு ஹீரோ மெடீரியல்! நீ பேசாம மீடியாவுக்கு போடா! நீ மட்டும் போய்ட்ட, அப்புறம் உன் பாமிலிக்கு பேர் ரெங்கநாதன் டாக்டர் பாமிலி இல்ல, உன்னை வச்சு தான் அதுக்கே அடையாளம்! அப்புறம் இது ஸ்டார் ரகுவின் பாமிலி!
ஸ்.. ஸ்.. ப்பா, நினைச்சுப் பார்க்கவே புல்லரிக்குதுடா!
அப்புறம் டிவி சேனல், நியூஸ் பேப்பர்கள் எல்லாம் ஆக்டர் ரகுவின் நட்பு பற்றி சொல்லுங்கன்னு என்னையும் பேட்டி எடுப்பாங்க!”
பார்த்தி இப்படி ஆசைக்காட்டி, ஆடிசன், போட்டோ ஷூட் என்று அவனைக் அழைத்துக்கொண்டு சுற்றி அதிலும் கொஞ்சம் காசுப் பார்த்தான்!
ஆனால் விஜிம்மா, “நந்து கண்ணா, நீ இவ்வளவு ஆசைப்படுறியேன்னு அம்மா உன் ஜாதகத்தை எடுத்துட்டுப் போய் ஜோசியரிடம் பார்த்து வந்தேன், அப்படி உனக்கு ஸ்டார் ஆகுற யோகம் இருக்கான்னு பார்க்க!”
“அவர் என்னம்மா சொன்னார்?”
“நீ மீடியாவுக்கு போய் விட்டால், ஸ்டார் ஆவ , ஆனா என் உயிருக்கு ஆபத்து, கண்டம் இருக்குன்னு ஏதோ சொல்றாருப்பா! பரிகாரம் இருக்கான்னு கேட்டதுக்கு, உங்க பையன் எடுக்கிற முடிவு தான் அதுக்கு பரிகாரம், வேற ஒண்ணும் கிடையாதுன்னு சொல்லிட்டார்!”
நீ MBBS படிக்கிறியா, இல்ல உன் ஆசைப்படி மீடியாவுக்கு ட்ரை பண்றியா?
உன்னை பிலிம் இன்ஸ்டிடியூட் சேர்த்து படிக்க வைக்க சொன்னாலும் சரி தான்ப்பா! எதுன்னாலும் நான் உன் அப்பாகிட்ட பேசுறேன்ப்பா! எனக்கு உன் ஆசைதான் முக்கியம்!
“நோ அம்மா, உன் உயிரை வைத்து நான் சான்ஸ் எடுக்க மாட்டேன் வேண்டாம்” என்று விட்டு விட்டான்!
ரகு இப்படி சிறு வயதில் இப்படி பார்த்தி பேச்சைக்கேட்டு சுற்றினாலும், ஒரு கட்டத்தில் அவனுக்கும் பார்த்தியின் கலர் தெரிந்துதான் விட்டது!
அவன் தன்னை ஏமாற்றுகிறான், நிறைய பொய் சொல்லுகிறான் என்று!
அதை தானே அவன் அம்மா அப்பா உட்பட குடும்பத்தினர் அனைவரும் ஏன் வைஷுவும் கூட ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி கொண்டு இருக்கிறார்கள்!
இப்போது அவனே பார்த்தியின் குணம் கண்டு அவன் நட்பை விட்டு விட்டால் கூட, அந்த கிரெடிட்டும் அவர்களுக்கு தான் போகும்!
ரகுவிற்கு ஒன்றும் தெரியாது, நாங்க தான் கஷ்டப்பட்டு பார்த்தியோட இருக்கும் அவன் ப்ரன்ஷிப்பை கட் பண்ணி விட்டோம் என்று!
அவனது ஈகோ குணம் இதிலும், தப்பாக யோசிக்க வைத்தது!
அதனால், பார்த்தியைப் பற்றி எல்லாம் தெரிந்தும் கூட, அவன் பார்த்தியின் நட்பை கட் செய்யவே இல்லை!
நீங்க சொல்லி நான் கேட்கனும்மா! ஏன் எனக்குன்னு புத்தியில்ல! நான் அப்படி தான் அவன்கிட்ட பேசுவேன்! என்ற ஈகோ!
“நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு”
( ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அதிலிருந்து விடுபட முடியாத அளவுக்கு தீய விளைவுகளை உண்டாக்கும் )
என்ற திருக்குறளுக்கு சரியான உதாரணம் தான் ரகு!
அவனால், இந்த பார்த்தியின் நட்பை விடவே முடியவில்லை!
ஆனால் இதை “முதல்” ஆக்கிக் கொண்டு பார்த்தி காரியம் சாதித்துக் கொள்வான்!
ஆனால் எப்பவும், எல்லா நேரமும் அது முடியாது!
சில விசயங்களில் ரகு, பார்த்தியிடமும் ஈகோ பார்ப்பான்! நீ என்ன எனக்கு டிக்டேட் பண்ணுவது! நான் என் இஷ்டப்படி தான் நடப்பேன்! எனக்கு எது சரின்னு படுதோ அதைதான் செய்வேன்!
அப்படி தான் வைஷு கல்யாணத்தின் போது பார்த்தியின் ராஜ தந்திரங்கள் பயனற்றுப் போய்விட்டன!
ஒரு விஷயத்தில், அவன் இடம் போவானா அல்லது வலம் போவானா என்று இவ்வளவு காலம் அவனோடு பழகிய பார்த்தியாலும் சரியாக கணிக்க முடியவில்லை!
ஆனாலும் அவன் செய்கிற முயற்சியையும் கை விட்டதும் இல்லை!
ஒரு சமயம் அவன் தூபம் போட்டால், அதன் படியே நடந்து விடுகிறான்! சில சமயம் பெரிதாக நோ சொல்லவும் செய்தான்!
பார்த்திக்கு இப்படி அனுபவம் என்றால், இங்கே விஜிம்மாவுக்கும் வைஷுவுக்கும் வேற ஒரு மாதிரி தெரிந்தான்!
ஒரு நேரம் அவனிடம் நல்லதை எடுத்து சொன்னால், நீங்க என்ன சொல்வது, நான் என்ன கேட்பது என்று அப்படியே எதிராக செய்வான்!
ஒரு நேரம் பார்த்தால், சொன்னதை அப்படியே நல்ல பிள்ளையாக ஏற்றுக் கொள்ளவும் செய்வான்!
அவனிடம் ரொம்ப பார்த்து தான் பேச வேண்டும்!
ரகுவிற்கு, அவன் அம்மா தான் அவனுக்கு எல்லாமே! ஆனால் அவளையும் அவ்வபோது காயப்படுத்தவும் செய்து விடுவான், இந்த ஈகோ புத்தியால்!
வைஷுவிடமும் அப்படிதான்!
ஆனால் அவனிடம் இதிலிருந்து முரண்பாடாக இன்னொரு நல்ல குணமும் இருந்தது!
அவனுக்கு தான் செய்தது தப்பு என்று தெரிந்து விட்டால், அதை அவன், மனமார உணர்ந்து விட்டால், சாரி கேக்க மட்டும் தயங்கவே மாட்டான்!
அப்போது மட்டும் அவன் தன் ஈகோவை எல்லாம் விட்டுவிடுவான்! எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போய் சாரி கேட்டு விடுவான்!
இது அவன் அம்மாவிடமும், வைஷுவிடமும் பலமுறை நடந்து இருக்கிறது!
இத்தனை கல்யாண குணங்கள் இருந்தாலும், ரகு அன்பிற்கு கட்டுப் பட்டவன்! ஒருவர் மீது அன்பு வைத்து விட்டால், அவர்களுக்காக எந்த எல்லைக்கும் போவான்!
அவன் அம்மா “நந்து கண்ணா, இப்படி இருக்காதேடா! ஏதோ அம்மா என்பதால், நான் பொறுத்துப் போகிறேன், இந்த வைஷு, அவள் ரொம்ப நல்ல பொண்ணு, அவளும் விட்டு கொடுக்கிறா, எல்லாரும் அப்படி இருக்க மாட்டாங்கப்பா! நீ கொஞ்சம் மாறனும்! என்று அடிக்கடி சொல்லுவார்.
அவன் மாறவில்லை இன்னும்!
இன்னுமே கூட அவன் தவறு செய்து விட்டால், அவன் செய்தது தவறு என்றுணர்த்த, அதிலும் அவன் ஏற்றுக்கொள்ளும் விதமாக, மனப்பூர்வமாக உணரும் விதமாக எடுத்து சொல்ல ஒரு ஆள் தேவைப்படுகிறது தான்!
விஜிம்மா இருந்தவரை அவரும், இப்போது அவருக்கு பின் வைஷு தான் அந்த வேலையை செய்கிறாள்!
இப்போதும் செய்தாள்!
அவன், தான் மதுவிடம் அப்படி பேசியது எவ்வளவு தவறு என்று உணர்ந்தான்!
மதுவை பார்த்த நாள் முதல், தன் மனம் அவள் பின்னால் சென்றது, அவளைப் பார்ப்பதற்காகவே அவன் தினம் மாலையில் வீட்டிற்கு சென்றது, அது வெளியே தெரிந்து விடக்கூடாது என்று இந்த தன்விகுட்டிக்கெல்லாம் பயந்தது, எப்போதும் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க ஆசைப்பட்டு, அவள் போட்டோவிற்காக அலைந்தது, எல்லோரும் தன்னை வாட்ச் செய்கிறார்கள் என்று புரிந்தாலும் கூட, தன்னால் மதுவை ஆசையாக பார்ப்பதை கண்ட்ரோல் செய்ய முடியாமல் இருந்தது எல்லாம் ஏதோ மதுவின் தவறு போல நினைத்துக் கொண்டிருந்தான் அந்த அதிபுத்திசாலி டாக்டர்!
நான் எவ்வளவு பெரிய டாக்டர்! என்னை இந்த பெண் இப்படி படுத்துகிறாளே என்ற அநியாயமான கோபம் வேறு அவனுக்கு!
அதை இந்த பார்த்தி வேற ஊதி பெரிதாக்கி, வார்த்தைகளை எடுத்து வேறு கொடுக்க, கொஞ்சமும் யோசிக்காமல் மதுவை அப்படி பேசி விட்டான்!
எப்போதுமே அவன் மனசாட்சி போல செயல்படும் வைஷு எடுத்து சொன்ன பிறகே அவனுக்கு தான் மதுவை காதலிக்கிறோம் என்றே அவனுக்குப் புரிந்தது!
அவன் செய்து விட்ட தவறும் புரிந்தது! இப்போது மதுவிடம் சாரி கேட்க சரியான இடம், நேரம் தேடிக்கொண்டு இருக்கிறான்!
ரகுவிடம் பேசிய பிறகு, வைஷு, மதுவை தன் ஓய்வு அறைக்கு வரச்சொல்லி விட்டு காத்திருந்தாள்.
ரகு அவளிடம் அப்படி பேசியதற்கு மறுபடியும் அவனுக்காக சாரி கேட்டவள்,
“எல்லாம் அந்த பார்த்தியோட வேலைதான் மது! உன் மேல இருக்கிற அவன் கடுப்பை, வெளியே காட்டிக்க முடியாமல், ரகுவின் மூலம் இப்படி செய்து கொண்டிருக்கான்!
ரகுவும் ஒண்ணும் சின்ன பிள்ளை இல்ல தான், அவனுக்கும் பார்த்தி பத்தி நல்லா தெரியும் மது! தெரிஞ்சாலும் கூட, அதை ஜஸ்டிபை தான் பண்றான்!
நேர்மையா இருப்பது, பொய் பேசாம இருப்பது எல்லாம் இந்த காலத்துல ஒரு லக்சரியான விசயம் வைஷு, அது, உனக்கு, எனக்கு கட்டுப்படியாகும், பார்த்தி மாதிரி ஆளுங்களுக்கு முடியாது!
அப்படி இப்படி ஏதாவது பண்ணிதான் அவன் எல்லாம் சர்வைவ் ஆக முடியும்! சர்வைவல் ஆப் த பிட்டஸ்ட்!
இப்போ, நம்ம கிட்ட ஒரு சான்ஸ் கேட்டு வந்துருக்கான், கொடுப்போமே, அப்புறம் சரியில்லன்னா, நீயும் உன் புருஷனும் அவனை உண்டு இல்லன்னு பண்ணிற மாட்டீங்க! என்று அவன் சொன்னதால், நாங்க பார்த்திக்கு கான்ராக்ட் கொடுத்தோம்.
அது கை விட்டுப்போன கடுப்புல இருந்த அவன், ரகு உன்னை விரும்புறது தெரிஞ்சுட்டு, அவன் பண்ணி வச்ச வேலை மது இது!
நான் தான் சொன்னேனே, ரகுவுக்கு இப்படியெல்லாம் பேச தெரியாது!
அவன் உன்னை ரொம்ப விரும்புறான் மது! அதுதான் இங்க உண்மை!
அவனுக்கு தான் இப்படி உன்கிட்ட இப்படி சரண்டர் ஆகிட்டோமேன்னு ஒரு தேவையில்லாத ஈகோ, அத மறைக்க, உன்னை போய் காயப்படுத்தி இருக்கான்!
அவன் எப்போதுமே இப்படிதான், அவனுக்கு பிடிச்சவங்க கிட்ட தான் ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துப்பான்.
அவன் அம்மாகிட்ட, அப்புறம் என்கிட்ட, இப்ப உன்கிட்ட!
எனக்கு தெரிஞ்சு அவன் யார்கிட்டயும் இப்படி ஹார்சா எல்லாம் பேசினதே கிடையாது!
இந்த ஈகோ புத்தி ஒன்றை தவிர அவன்கிட்ட வேற எந்த கெட்ட புத்தியோ, பழக்கமோ கிடையாது மது!
பேசிக்கா அவன் ரொம்ப நல்லவன்!
அவன் அம்மா இறந்த பின்னே அன்புக்கு ரொம்ப ஏங்குறவன்!
அவன் உன் கிட்ட அவன் அம்மாவைப் பார்த்துதான் அப்படியே சரண்டர் ஆகிட்டான் மது!
ஏன் எங்க வீட்டுல எல்லோருமே கூட நீ விஜி அத்தையை ரிசம்ப்ல் பண்றதா பீல் பண்ணியிருக்கோம்!
உனக்கு அது தெரியாது மது, நீ நடந்துக்கிற விதம், எல்லாமே அப்படியே அவங்கள மாதிரி தான் இருக்கு!
அதுதான் உன்னிடம் ரகுவை ஈர்த்துருக்கு! அவன் உன்னை ரொம்ப லவ் பண்றான் மது! சொல்லதான் அவன் ஈகோ இடம் கொடுக்கல!
அவனுக்காக நான் உன்கிட்ட கேக்கறேன், நீ அவனைக் கல்யாணம் பண்ணிப்பியா மது!
உன்னால மட்டும் தான் அவனை அவன் குறைகளோட ஏத்துக்க முடியும்! உன் தாய்மை கலந்த அன்பு அவனை ரொம்ப நல்லா வைச்சுக்கும்!
நீங்க இவ்வளவு செல்பிசா டாக்டர்? அவன நல்லா வச்சுக்கும், நான் நல்லா இருப்பேனான்னு கேட்டுடாத மது! இப்பவும் சொல்றேன். அவன் ரொம்ப நல்லவன்! உன்னை நல்லா வச்சுப்பான்! உன் மேல அன்பை கொட்டுவான்!
ப்ளீஸ் நல்லா யோசி மது! வேணும்கிற டைம் எடுத்துக்க. நீ சரின்னு சொன்னா, நான் உன் பாட்டிகிட்ட வந்து மேற்கொண்டு மாமா, ராகினி அக்காவோட வந்து பேசுறேன்!
அங்கிருந்து வந்த பின்,
மது யோசனையில் ஆழ்ந்தாள்!
அவள் கல்யாணம் பற்றியெல்லாம் இதுவரை யோசித்ததே இல்லை!
யோசிக்க அவகாசமும் இல்லாமல் ஓட வேண்டியிருந்தது!
அவ்வபோது பட்டுபாட்டி தான் புலம்புவார்!
மதுவை பெண் கேட்டு, நிறைய வரன்கள் வந்து கொண்டுதான் இருந்தன!
பட்டு அம்மாவைத் தேடிக்கொண்டு மாமா வீட்டுக்கு மதுவின் ஜாதகம் கேட்டு செல்பவர்களை எல்லாம், அவள் அத்தை மகேஸ்வரி எங்க ஷாலுவுக்கு வரன் கொண்டு வரதுன்னா இங்க வாங்க, அத விட்டுட்டு மதுவுக்கு பாக்குறேன், மானுவுக்கு பாக்குறேன்னு சொல்லிட்டு எல்லாம் இங்க வராதீங்க என்று கடுப்பாக சொல்லி அனுப்பி விடுகிறாளாம்!
அங்கே சென்று விட்டு இங்கே வந்து பாட்டியிடம் புலம்பி விட்டு ஜாதகம் வாங்கி சென்று கொண்டுதான் இருக்கிறார்கள்!
மது எதற்கும் சம்மதம் சொல்ல வில்லை!
“அம்மாச்சி நம்ம நிலைமை புரிஞ்சுதான் இருக்கியா! இன்னும் மாதுவுக்கே படிப்பு முடியல, இன்னும் மானு இருக்கா! அத எல்லாம் பாக்காம நான் பாட்டுக்கு கல்யாணம் செய்துட்டு போய்ட்டா போதுமா? அப்புறம் இவங்க என்ன பண்ணுவாங்க சொல்லு!”
மேலும் அவளிடம் அவள் வயதுக்கே உள்ளே எந்த கல்யாணக் கனவுகளும் இல்லவே இல்லை! கடமை உணர்ச்சி மட்டும் தான் இருந்தது!
அது… ரகுவைக் காணும் வரை..
அவனை முதன் முதலில் பார்த்த நாள், அவள் தூக்கம் இல்லாமல் தவித்த தவிப்பு, அவனை பார்த்தால், உள்ளுக்குள் எழுந்த ஒரு பரவசம்! அவளை அவன் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாலும் அதே பீல்! அவளுக்குள்ளும் கொஞ்சம் காதல் எட்டிப் பார்த்தது தான்! மறுப்பதற்கில்லை!
எல்லாம் ரகு அவளைக் கூப்பிட்டு அப்படி பேசும் வரை தான்!
பின் அவள் தன் மனக்கதவை சாத்திக்கொண்டு விட்டாள்!
ஒரு மாதிரி கூட்டுக்குள் அடைப்பது போல, தன் மனத்தை உள்ளே அடைத்து கட்டுப்படுத்திக் கொண்டாள்!
இப்போது, என்னவென்றால், இந்த வைஷு டாக்டர் இப்படி சொல்றாங்க!
மது தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்த போது, அவள் போன் அடித்தது!
நம்பரைப் பார்த்தவளுக்கு விழிகள் அகன்றன!
அது ரகுவின் நம்பர்!
அவனா மதுவை போனில் அழைக்கிறான்?
அவளால் நம்பவே முடியவில்லை!
எடுத்து பேசினாள்.
“ஹலோ சொல்லுங்க டாக்டர்”
“மது கொஞ்சம் எனக்கு ஒரு பிரெஷ் ஜுஸ் எடுத்துட்டு வர முடியுமா? ப்ளீஸ் யார்கிட்டயாவது கொடுத்து விட்டுறாதீங்க, நீங்களே கொண்டு வாங்க, உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்!”
“என்ன பேச போறான் ஒரு வேளை ப்ரபோஸ் பண்ணுவானா? பண்ணினால் நீ என்ன சொல்லப் போற மது”, அவள் மனம் அவளிடம் கேட்டது!
உள்ளே கூட்டுக்குள் அவள் அடைத்து வைத்திருந்த அவள் காதல் மனம் கொஞ்சம் வெளியே எட்டிப் பார்த்தது!
“ம்ஹும்! உள்ளே போ! தேவையில்லாம ஆசை வளர்த்துட்டு பின்னாடி அவஸ்தைப்படாதே, இருக்குற பிரச்சினைகளே இங்கே ஓவர் லோடட்! இதுல புதுசா நீ வேறே எதயாச்சும் கொண்டு வராதே” மனதை அடக்கி மீண்டும் கூட்டுக்குள் இட்டாள்!
பின் ஜூஸ் எடுத்துக் கொண்டு அவன் ஓய்வு எடுக்கும் அறைக்கு சென்றாள் மது.
உள்ளே சென்றதும்,
“சாரி மது, உங்கள நான் அப்படி பேசியிருக்க கூடாது! ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் ரியலி சாரி!”
“தட்ஸ் ஒகே சார்”, என்று மெதுவாக சொன்ன கசந்த குரலில் இருந்தது கூடவே இருந்தது என்ன .. ஏமாற்றமா?
அங்கிருந்து கிளம்ப முயன்ற அவளிடம்
“மது ஒன் மினிட்!” என்றவாறே அவள் அருகில் எழுந்து வந்தான் ரகு!
“கங்க்ராட்ஸ் மது! உங்களுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகியிருக்குன்னு சொன்னாங்க!” அவன் குரலில் இருந்தது அப்படி எல்லாம் இல்லைன்னு சொல்லு மது என்ற எதிர்பார்ப்பு! கண்களில் ஏகத்துக்கும் தவிப்பு! ஒரு மாதிரி கெஞ்சல்!
“நீ எனக்கு வேணும் மது! நான் உன்னை விட மாட்டேன், நீ எனக்கானவள் மது, என் அம்மாக்கு பின் , நீ தான்னு என் மனசு உன் பின்னாடியே அலையுது மது ! ப்ளீஸ் இல்லன்னு சொல்லிடு” அவன் மனம் தவியாய் தவித்தது!
“அய்யோ டாக்டர்! யாரோ உங்கள பிரான்க் பண்ணியிருக்காங்க! அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல!”
ஹா.. சட்டென அவனுள் நிம்மதி .. சந்தோசம் பீறிட்டது!
ஏய் வைஷு எல்லாம் உன் வேலையா? உள்ளுக்குள் அவளை ஒரு கணம் திட்டியவன், பின் மது எதிர்பாராத ஒன்றை செய்தான்!
அப்படியே மதுவின் முன் மண்டியிட்டு,
“சாரி மது.. சாரி மது, நாளைக்கே நம் குழந்தைகள் ஏதாவது தப்பு செஞ்சா அவங்கள மன்னிக்க மாட்டியா?”
“அது மாதிரி என்னையும் மன்னிச்சுடேன் ப்ளீஸ்!”
“மன்னிச்சுட்டேன்னு சொல்லு மது” அவள் இடுப்பைக் கட்டிக் கொண்டான்!
மது தன் வயிற்றில் கொஞ்சம் ஈரம் உணர்ந்தாள்!
அழுகிறானா? இவனா? இந்த ஈகோ பிடிச்ச டாக்டரா? வெளியே சொன்னால் யாராவது நம்புவார்களா?
இப்படி ஒரு லவ் ப்ரோப்போசலா! இவனுக்கு போய் பேச தெரியாதுன்னு இவன் அண்ணி சொல்றா!
இவனுக்கு என்ன பதில் சொல்வது!
எப்படி சொன்னாலும் – அது மன்னிப்பேன் என்றாலும் மாட்டேன் என்றாலும் கூட,அவன் முன்னாடி சொன்ன “அந்த நம் குழந்தைகள்” ஸ்டேட்மெண்டை ஒத்துக்கிட்ட மாதிரி தானே!
அதாவது அவன் லவ்வை ஏத்துகிட்ட மாதிரி தானே!
அடப்பாவி! எப்படி கொண்டு வந்து நிறுத்தியிருக்கான் அவளை!
ஆனால் அவளால் அவனைத் தள்ளி விடவோ கோபப்படவோ முடியவில்லை!
அவளுள் எப்போதும் இருக்கும் தாய்மை உணர்வு, அப்புறம் அவளுள்ளும் இருந்த அவள் காதல், அவன் தலையைக் கோதி விட தான் சொன்னது!
அவன் எழுந்து அவளை அப்படியே இறுக அணைத்துக் கொண்டு, அவள் கன்னங்களில், கண்களில், மோவாயில் என்று கண்டபடி முத்தமிட்டான்!
ப்ளீஸ் மது! என்னை மன்னிச்சுட்ட தானே! சொல்லு மது!
மது பதிலேதும் சொல்லவில்லை!
சொல்ல முடியவில்லை!
பதில் சொல்ல முடியாதபடி, அவள் இதழ்களை தன் இதழ்களால் அவன் சிறைப்படுத்தி வைத்திருந்தான் இப்போது!
எப்படி பதில் சொல்வாள் அவள்!
“பேசாதீங்க.. சொல்லுங்க.. “ காக்கி சட்டை பட ஜட்ஜ் காமெடி தான் அவள் நினைவுக்கு வந்தது! அவள் மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்!
error: Content is protected !!