Skip to content
Post Views: 6,801
“இப்ப சொல்லு மது, ரகுவ கல்யாணம் பண்ணிப்ப தானே! நல்லா யோசிச்சு இருப்பன்னு நினைக்கிறேன்!
உனக்கும் ரகு மேல இஷ்டம் உண்டுன்னு எனக்கு தெரியும்! எப்படின்னு கேட்காதே!
அதனால நான் சுத்தி வளைக்காம, போட்டு வாங்காம, எமோசனல் ப்ளாக்மெயில் எல்லாம் பண்ணாம டைரக்ட்டா, உன் கிட்ட கேக்குறேன்!
Advertisement
உனக்கு ஓகே தானே!” தன் ஒய்வறைக்கு மதுவை வரவழைத்து கேட்டாள் வைஷு!
வெறும் தன்வி குட்டிப் பார்த்ததை வைத்து எல்லாம் அவள் ஒரு முடிவுக்கு வந்து விட விரும்பவில்லை அவள்!
மதுவின் வாயால், நேரிடையாக சம்மதம் பெற விரும்பினாள் அவள்.
Advertisement
மது, எப்படி இவரிடம் சொல்வது என்று கொஞ்சம் திணறினாள்!
Advertisement
“டாக்டர்.. அது வந்து.. வந்து..”
“உனக்கு சொல்ல கஷ்டமா இருந்தா, நானே ரகுகிட்ட பேசிடறேன்! அவன் ரொம்ப சந்தோசப் படுவான்!”
“உங்க ரெண்டு பேருக்கும் ஓகே என்றால், நான் உன் பாட்டியிடம் வந்து பேசுவேன், பெரியவங்களோட !”
Advertisement
“சொல்லு மது.. “
இந்த “சொல்லு மது” என்ன இவங்க பாமிலி டயலாக்கா? மது உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு,
“இல்ல டாக்டர், அவரே என்கிட்ட நேரா வந்து ப்ரபோஸ் பண்ணிட்டார். நானும்..நானும்.. அவருக்கு ..” மது கொஞ்சம் வெட்கத்துடன் எதுவும் சொல்லாமல் தலை குனிந்து கொண்டாள்!
“அடப்பாவி, இது எப்போ?”
“ரெண்டு நாள் முன்னாடி”
“என்ன சொல்லி, ப்ரபோஸ் பண்ணினான், சொல்லு.. சொல்லு.. “ வைஷுவிடம் சிறு பிள்ளைத் தனமான ஆவல்!
“அது வந்து.. முதலில் சாரி தான் கேட்டார்! அப்புறம்…” நடந்ததை கொஞ்சம் சென்சார் பண்ணி சொன்னாள் மது!
“மை காட்! இவனுக்கு இப்படியெல்லாம் கூட டயலாக் அடிக்க தெரியுமா?
இது தெரியாம, நான், அவன் பாவம் அவனுக்குப் பேச தெரியாதுன்னு சொல்லிட்டு இருக்கேன் பாரேன்!” அதிசயித்தாள் வைஷு!
காதல் வந்துட்டா, இந்த பசங்க எல்லாம் கவிஞர், பேச்சாளர் ஆகிடுவாங்க போல!
“இரு.. இரு அவன.. “, போனில் அவனை அழைக்க முனைய, அப்போது சரியாக மதுவின் போன் அடித்தது!
ரகு தான்!
“ஸ்பீக்கர்ல போடு”
“ஏய்! மது, இன்னும் அங்க என்ன அந்த லூசு கிட்ட வெட்டிப் பேச்சு?”
“ஜூஸ் , சுண்டல் கொடுக்க போனோமா, வந்தோமான்னு இல்லாம! மாமா இங்க உனக்காக வெயிட்டிங் டார்லிங்!”
அவன் CCTVயில் மது வைஷு ரூமிற்குப் போவதைப் பார்த்து விட்டு தான் போனில் அவளை அழைத்தான்!
“டேய். நான் உனக்கு லூசாடா! மது எல்லாத்தையும் சொல்லிட்டா! மரியாதையா இப்பவே வாடா என் ரூமுக்கு!” என்று சொல்லி போனைக் கட் செய்தாள் வைஷு!
ஐந்து நிமிடத்தில் அங்கே வந்து விட்டான் ரகு!
வந்தவன் வைஷுவை பார்க்காமல், மதுவைப் பார்த்து, “ஏய் மது, எதுக்கு தேவையில்லாம தேர்ட் பெர்சன் கிட்ட நம்ம விசயத்தை எல்லாம் சொல்லிட்டு இருக்க? கமான் . வா, என் கேபினுக்கு போகலாம்” என்று அவளை கரம் பிடித்து இழுத்தான்.
“எதே.. நான் உனக்கு தேர்ட் பெர்சனா, மவனே, அப்படியே விட்டுருக்கனும்! தனியே உக்காந்து தாடி வளர்த்துட்டு அலைடா ன்னு!”
“நான் உனக்காக போய் மது கிட்ட உன் லவ்வ எடுத்து சொல்லி, நீ பேசினதுக்கு சாரி கேட்டு, எல்லாம் பண்ணின நான் உனக்கு தேர்ட் பெர்சனா! மவனே உன்ன..”
“அதெல்லாம் ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்! நானே என் மது டார்லிங் கிட்ட நேரே பேசிட்டேன், சாரி கேட்டுட்டேன்! இல்ல மது?”
“நீ மன்னிச்சுட்ட தானே! இவ முன்னாடி சொல்லு!”
“என்னை மன்னிச்சுட்ட தானே! சொல்லு மது! சொல்லு மது” என்று சொல்லியபடி மதுவின் அருகில் வந்தான் குறும்பாக கண்ணடித்த படியே!
இவர்கள் செல்ல சண்டையை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த மது,
“சொல்லு மது. சொல்லு மது” என்று கண்ணடித்த படியே அவன் கிட்டே வரவும்,
அவளுக்கு அவன் இதற்கு முன் “சொல்லு மது! சொல்லு மது” என்று சொல்லிக் கொண்டே அவன் செய்த காரியம் நினைவுக்கு வந்து, சட்டென முகம் சிவந்தாள்!
தடுமாறியபடியே.. “ம்ம் மன்னிச்சுட்டேன் .. ஆமா மன்னிச்சுட்டேன் வைஷு டாக்டர்!”
“ம்ம். பார்த்த இல்ல? போ. போ நீயும் உன் எடுபுடியும் .. அதான் உன் புருஷனும் அடுத்து ஆக வேண்டிய வேலைய பாருங்க, இங்க உக்காந்து என் டார்லிங் கோட டயத்த வேஸ்ட் பண்ணாதே! நீ வா டார்லிங்”, என்று மதுவின் இடையில் கை வைத்து அழைத்து போனான் கதவு வரை!
“டேய் உன்னை..” கையில் அகப்பட்ட, மஞ்சள் நிற ஸ்மைலி பாலை எடுத்து அவன் மேல் விட்டெறிந்தாள் வைஷு!
அதை லாவகமாக கேட்ச் பண்ணி, “ஏய்… போடி” என்றவாறு அவள் மீதே திருப்பி எறிந்தான் ரகு!
கதவு வரை அவன் கூட போன மது, பின் அவனிடம் இருந்து விலகி, “நீங்க முதல்ல போங்க, நான் பின்னாடி வரேன்” என்று நின்று விட்டாள்!
“அதுவும் சரிதான். பட் , லேட் பண்ணாம சீக்கிரம் வந்துடு” என்றபடி அங்கிருந்து சென்றான் ரகு!
அவன் சென்றபின்,
“மதூ.. “ என்ற படி ஓடி வந்து, அவளைக் கட்டிக் கொண்டாள் வைஷு!
“சூப்பர் மது! இவன் இவ்வளவு தூரம் இறங்கி வருவான்னு நான் கூட நினைக்கல தெரியுமா?
அவன் உன்னை ரொம்ப லவ் பண்றான்! நீயும் அப்படி தானே! அப்பா நான் உன் வீட்டுல நாளைக்கே வந்து பேசுறேன் உன் பாட்டிக்கிட்ட!”
“டாக்டர்.. அது வந்து.. நான்.. இன்னும்.. நாங்க இன்னும்.. “
மதுவைப் பேசவே விடவில்லை வைஷு!
“அதெல்லாம் எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்குறேன், நீ எத பத்தியும் கவலைப் படாம உன் ரகு கூட டூயட் பாடிட்டு இரு!”
சொன்ன வைஷு அடுத்து பம்பரமாய் சுழன்று வேலைப் பார்த்தாள்!
இந்த பார்த்தி வெளிநாட்டு டூரில் இருக்கான், அவன் வந்து எதாச்சும் பண்றதுக்குள்ள நாம இவங்க கல்யாணத்தை, அட்லீஸ்ட் என்கேஜ்மென்ட்டையாவது முடித்து விட வேண்டும்என்ற நினைப்போடு!
அவள் ராகவனிடம் முதலில் விசயத்தை சொல்லி அவனிடம் அனுமதி பெற்றுவிட்டு, ராகினியிடம், ரகுவின் அப்பா, அத்தையிடம் கான் காலில் பேசினாள்.
ராகினி, “நாளை மதியமே வந்துடுறேன், ஈவ்னிங் நாம மது வீட்டுக்கு போய் அவ பாட்டிகிட்ட பேசுவோம்.
அவங்களுக்கு ஓகேன்னா, அடுத்து நாம அப்பாவோட போய் இன்னொரு வாட்டி பேசி கன்பார்ம் பண்ணிடலாம். என்கேஜ்மென்ட் கொஞ்சம் சிம்பிளா ஏதாவது ஒரு மினி ஹாலில் பண்ணிடுவோம்!”
மறுநாள்.
வைஷு, ராகவன், ராகினி அவள் கணவன் நால்வரும் மதுவைப் பெண் கேட்டு, பட்டு பாட்டியிடம் பேச சென்றார்கள்.
அங்கே மது ஏற்கனவே விஷயத்தை சொல்லியிருந்ததால், ராஜுவின் பெற்றோரும் வந்து இருந்தனர்!
வந்தவர்கள் விஷயத்தை சொன்ன பின், மது தயங்கி.. தயங்கி மெதுவாக சொன்னாள்.
“இப்ப என் பாமிலி இருக்கிற கண்டிசன்ல நான் கல்யாணம் செய்துகிட்டு அங்கே வந்துட்டா, கொஞ்சம் கஷ்டம். அதுனால என் தம்பி படிப்பு முடியற வரைக்குமாவது கொஞ்சம் டைம் வேணும்!”
“அதெல்லாம் நாங்க யோசிக்காம இருப்போமா மது?” வைஷு கேட்டாள்.
ராகவன் சொன்னான். “இப்போ இருக்கிற காண்டீன் காண்ட்ராக்ட அப்படியே உன் தம்பி பேருக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிடலாம்! நீ வழக்கம் போல மேனேஜ்மெண்ட் மட்டும் பண்ணு”
“ஆமாம்மா.. ராகவன் சொல்ற மாதிரி செய்துடலாம். மத்தபடி சீர் வரிசையெல்லாம் நாங்க எதுவும் எதிர்பார்க்க மாட்டோம்னு உனக்கே தெரியும்!” ராகினியும் சொன்னாள்.
“இத இப்பவே சொல்ல வேணாம்னு தான் நினைச்சேன். பட் சொல்றது நல்லதுன்னு இப்ப தோணுது.
மானுவுக்கு கூட ஒரு அலையன்ஸ் ரெடியா இருக்கு மது! என்னோட கசின்.. அத்தை பையன் திலீப்!
அவனும் டாக்டர் தான்! அவன் மானுவோட யோகா வீடியோவ பார்த்துட்டு, சோசியல் மீடியாவுல அவளை தீவிரமா போலோ செய்றான்!
அவளை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப் படுறான்.
மானுவுக்கு, உங்களுக்கு சம்மதம்னா, படிப்பு முடிக்க கூட வேண்டாம், கல்யாணம் பண்ணிட்டு எங்க வீட்டுல இருந்துட்டு படிக்கட்டும் னு கூட சொல்றான்!
முதல்ல மது கல்யாணம் நல்லபடியா முடியட்டும் அப்புறம் உன் விசயத்த அவங்க வீட்டுல பேசுறேன்னு சொல்லி வச்சுருக்கேன் அவன்கிட்ட.”
“நீ எத பத்தியும். யாரை நினைச்சும் கவலைப் படாத மது! நீ ஆல் மோஸ்ட் செட்டில்டு தான்! அதுனால நீ இப்ப ஒகே மட்டும் சொல்லு போதும். மத்தத நாங்க உன் பாட்டிகிட்ட பேசிக்கிறோம்.” என்றாள் வைஷு
“என்ன பாட்டி, நீங்க உங்க இனத்துல தான் மதுவ கொடுக்கணும்னு இருக்கீங்களா என்ன?” ராகினியின் கணவன் கண்ணன் அவர் அமைதியாக இருப்பதைப் பார்த்து விட்டு கேட்டான்.
மாதவன் அதை சைகையில் அவருக்கு புரியிற மாதிரி சொன்னான்
“ச்சே அப்படியெல்லாம் இல்லீங்க! நானே அவ அம்மா லீலாவை ஜாதி பார்த்து கல்யாணம் செய்து வைக்கல!
மனுசங்கள பார்த்து தான் பண்ணி வச்சேன் அந்த காலத்துலேயே!
இங்க அவங்க அத்தையும் மாமாவுமே வேறே வேறே ஆட்கள் தான்! ஆனா ஒருத்தர் மேல ஒருத்தர் ரொம்ப பிரியமா இருந்தாங்க”
“அப்போ ஜாதகம் பார்ப்பீங்களோ!”
“இல்ல. நான் என் பையன், பொண்ணு ரெண்டு பேருக்குமே ஜாதகம் எல்லாம் பார்க்கவே இல்ல!”
“நீங்க பார்ப்பீங்களா! ஆனா மதுவோட மாமா அடிக்கடி சொல்வார், மதுவுக்கும் மானுவுக்கும் ஜாதகம் பார்க்க அவசியமே இல்லடா ரவி! அவங்க பிறந்த நட்சத்திரம் அப்படின்னு சொல்வார்!”
“மது அனுஷம் நட்சத்திரம்! நீங்க ஜாதகம் பார்க்கணும்னா, நான் அத தர்றேன்!”
“இல்ல..இல்ல எங்க குடும்பத்துலயும் அந்த பழக்கம் இல்ல. இதோ என் பெரிய தம்பிக்கு கூட நாங்க அதெல்லாம் பார்க்கல.
தேவதைகள் மாதிரி ரெண்டு பெண் குழந்தைகளோடு சவுக்கியமா தான் இருக்கான்” என்றாள் ராகினியும்!
“அப்ப என்ன பாட்டி. இன்னும் உனக்கு தயக்கம்! சரின்னு சொல்லு” ராஜு எடுத்து கொடுத்தான்.
ராஜுவின் அப்பா “ எங்களுக்கு பொம்பள குழந்தை இல்ல, இருந்ததும் இப்ப உயிரோட இல்ல. மதுவும் மானுவும் தான் எங்களுக்கும் பெண்கள்! அதனால சீர் செனத்தியெல்லாம் நாங்க எங்க பங்குக்கு செய்வோம், இங்க யாரும் தடுக்கக் கூடாது இப்பவே சொல்லிட்டேன்” என்றார்
“ரொம்ப சந்தோசம்ப்பா நீங்க எல்லாம் என் பேத்திக்கு துணையாக இருப்பதற்கு! அம்மாடி, நீயும் உன் புருஷனும் தான் மதுவுக்கு அம்மா அப்பா ஸ்தானத்தில் இருந்து சம்பந்தம் கலக்கணும்” பட்டு பாட்டி, ராஜுவின் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு உணர்ச்சிவசப்பட்டு சொன்னார்!
“அப்ப எல்லாம் சரி தானே ” ராகவன் எழுந்தான். “இன்னும் ரெண்டு நாளில் அப்பாவும் பெரியப்பாவும் முறைப்படி வந்து உங்கள பார்த்து பேச வருவாங்க. நாங்க முதல்ல உங்க சம்மதம் தெரிஞ்சுட்டு போகலாம்னு தான் வந்தோம்”
வீட்டில் போய், பெரியப்பாவிடம் விஷயத்தை சொல்லி அவர் முகம் பார்க்க, அவர் ஒண்ணுமே சொல்லவில்லை!
வைஷு பயந்து தான் போய் விட்டாள்!
மதுவை அவருக்கு ரொம்ப பிடிக்கும், அவரிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வராதுன்னு நினைச்சு தானே, நாம் இவ்வளவு தூரம் இறங்கினோம்!
இவர் என்ன இப்படி மவுனமாக இருக்கார்! ஒரு வேளை நோ சொல்லி விடுவாரோ?
அப்படி சொல்லி விட்டால், ராமநாதனும் அவரை மீறி செய்ய மாட்டார்! அய்யோ இது என்ன புது குழப்பம்! வைஷு தவித்தாள்!
“சோ.. நீங்க எல்லாம் சேர்ந்து முடிவு பண்ணிட்டீங்க! நான் அதுக்கு இப்ப ஓகே சொல்லணும் அதான?”
.”.ஆமா பெரியப்பா.” ராகினியும் ராகவனும் கோரசாய் சொன்னார்கள்!
“ம்ம். ஓகே. பட் வித் ஒன் கண்டிசன்! “
“கண்டிசனா?”
“எஸ். என்கேஜ்மென்ட் முடிஞ்சவுடன், கல்யாணம் வரைக்கும் பொண்ண, மாப்பிள்ள வீட்டுக்கு அனுப்ப மாட்டோம்னு, சொல்லிட்டு மதுவ இங்க வர விடாம பண்ணக் கூடாது! அவ எப்போதும் போல இங்க வரணும். அதுக்கு ஒத்துகிட்டா ஓகே தான்!”
“ஸ் ஸ் அப்பா.. பெரியப்பா, இது தான் இவ்வளவு பில்டப்பா?”
நிம்மதியானார்கள் இளையவர்கள் அனைவரும்!
ராகவன் சொல்லியிருந்த படி, ராமநாதனும் ரெங்கநாதனும் ஒரு நாள் மதுவின் பாட்டியை சென்று சந்தித்தார்கள்.
அப்போது மதுவின் தாய் மாமாவையும் வரவழைத்து இருந்தார் பட்டு பாட்டி!
சேகரும் தன் மனைவி மாமியாரிடம் விஷயத்தை சொல்லாமல் அவர் மட்டும் வந்திருந்தார்!
அவருக்கும் ரொம்ப திருப்தி தான்!
உண்மையாகவே சந்தோசம் தான் பட்டார்.
தன் மருமகள் பெரிய இடத்தில் வாழ்க்கைப் பட போவதை எண்ணி!
ஆனால் இது கொஞ்சம் கூட தன் மனைவிக்கு தெரிந்து விடக் கூடாது. தெரிந்தால் எதையாவது சொல்லி மனசு வருத்தப் படும்படி செய்துடுவா மதுவ.. எல்லாம் முடிந்து கல்யாணத்திற்கு நேரே அழைத்து வந்தால் போதும் . இப்போ மூச்சுக் கூட விடக் கூடாது என்ற முடிவுக்கும் வந்திருந்தார்!
குறித்த நல்ல நாளில், ரகு நந்தன் – மதுமிதா திருமண நிச்சயதார்த்த விழா நடைப் பெற்றது!
ரகுவிற்கு ஒரு பக்கம் ஆனந்தம் என்றால், ஒரு பக்கம் அவன் அம்மா விஜி இல்லையே, இதைப் பார்க்க என்று அவன் மனம் ஏங்கியது!
அங்கே மதுவின் நிலையும் அது தான்!
அம்மா, அப்பா, மாமா, நீங்க எல்லாரும் இருந்து என் திருமண நிச்சயதார்த்தம் நடந்தால் எப்படி இருந்திருக்கும்!
மாமாவை கையில் பிடித்து இருக்க முடியாது! அப்பா.. சொல்ல முடியாத சந்தோஷ களிப்பில் இருந்துருப்பார்!
ம்ம் இப்ப நீங்க யாருமே இல்லையே அவள் மனம் அவர்களை எண்ணி ஏங்கியது! அழுகை வரும் போல இருந்ததை அடக்கிக் கொண்டு நின்று இருந்தாள் அவள்!
இருவர் முகமும் சரியில்லாததைக் கண்டு ராஜு அவளிடம் “ ஏய் மது ஏன் இப்படி டல்லா இருக்க, ஏதோ பிடிக்காத கல்யாணம் செய்துக்கிற மாதிரி! நார்மலா இரு மது.. “ என்றான் மெதுவாக.
அங்கே வைஷுவும் அதையே தான் சொல்லிக் கொண்டிருந்தாள் ரகுவிடமும்!
கொஞ்ச நேரத்தில் நிச்சயதார்த்த சடங்குகள், மோதிரம் அணிவித்தல். மற்ற நலுங்கு வைத்தல் எல்லாம் முடிந்து, பெரும்பான்மையானவர்கள் சாப்பிட கலைந்து சென்றார்கள்.
இப்போது மதுவின் போனில் மெசேஜ்!
“ I badly need your hug now!” ரகு தான் அனுப்பியிருந்தான்!
“Me too” அவள் ரிப்ளை செய்தாள்!
“நீ முதல்ல உள்ளே போ!” அந்த மினி ஹாலில் இருந்த மணமகள் அறையைக் காட்டினான் அவன்!
அவள் சென்ற கொஞ்ச நேரத்தில் அவனும் காசுவலாக செல்வது போல் சென்றான்! யாரும் அவர்களை கவனிக்க வில்லை!
பெரும்பான்மையானவர்கள் சாப்பிட சென்று இருக்க, இருந்த கொஞ்ச பெரும் மொபைல் நோண்டி கொண்டிருந்தார்கள்! அல்லது அதில் பேசிக் கொண்டிருந்தார்கள்!
உள்ளே சென்ற அவன் கைகளை விரித்து அவளை நோக்கி சென்றான்!
வேகமாய் வந்து அவனைக் கட்டிக் கொண்டாள் மது!
அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழுது விட்டாள்! தேம்பி தேம்பி!
“ஏய் என்னடி! நீ என்னமோ அழவே மாட்டேன், அதுவும் அடுத்தவங்க முன்னாடி அழவே மாட்டேன்னு சொன்ன? இப்ப ஏன் இப்படி அழற? அழதே ப்ளீஸ், நீ அழுதா எனக்கு பார்க்க முடியல! நான் என் அம்மாவை இந்த இவண்டுல மிஸ் பண்றமேன்னு இருந்துச்சு. நீ என்னடான்னா எனக்கு மேல இப்படி இருக்க?”
“எனக்கும் அதே பீல் தான்! என் அப்பா அம்மாவை மிஸ் பண்றேன்! அதான் அழுகையா வருது! என் அப்பா அம்மாக்கு அப்புறம் உங்க முன்னாடி தான் நான் இப்படி அழறேன்!” மது அவனிடம் இன்னும் ஒடுங்கினாள்!
அவளை இன்னும் இறுக அணைத்துக் கொண்ட அவன், அவள் கைகளை தன் கைகளுக்குள் இறுக பிணைத்துக் கொண்டான்!
அது “ஏய் மது ,நான் இருக்கேண்டி உனக்கு! என்று சொல்லாமல் சொன்னது!
கொஞ்ச நேரத்தில் நார்மல் மோடுக்கு வந்தனர் இருவரும்.
“அய்யோ, வா மது வெளியே போய்டலாம். இல்லன்னா என் அண்ணன் பெத்து வச்சுருக்கற குட்டி சாத்தான் வந்து ஆயிரம் கேள்வி கேட்கும்! வா வா சீக்கிரம்!” வெளியே சென்றார்கள்.
இருவர் முகமும் இப்போது தெளிவாக சந்தோசமாக இருப்பதை பார்த்து சந்தோசப்பட்டாள் வைஷு!
ஆனால்..
இன்னொரு ஜென்மம் ஒன்று..
இவர்களின் இந்த நிச்சயதார்த்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் பார்த்து விட்டு காண்டாகி கொண்டிருந்தது!
அது..
வேற யார் பார்த்தி தான்!
error: Content is protected !!