தூங்கிட்டு இருக்கிற உன்னை டிஸ்டர்ப் செய்ய வேணாம்னு பார்த்தால், நீ என்கிட்ட இப்படி கத்துற?”
“சாரிப்பா..” என்றவாறு அவள் திரும்பவும் சரி செய்ய முயல,
“முடியாது..” என்று அவள் கையைப் பிடித்து தடுத்தான்.
அவளோ அவனிடமிருந்து வலுக்கட்டாயமாக கையை உருவிக் கொள்ள முயன்றாள்.
“ஏய்.. என்கிட்டேயே போர்சை.. போடுற? நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன் இப்படி பண்ணாதேன்னு!
பண்ணுனா, அதன் பின் விளைவுகள் என்னன்னு உனக்கே தெரியும்!” அவள் குறும்பாய் சிரித்துக் கொண்டே அவள் கையை இன்னும் இறுகப் பற்றிக்கொண்டு பேசினான்!
“ஏன்டி அப்படி நினச்சே என்னை?”
“ம்ம். அது வந்து.. நீங்க தான் என் கனவுல வந்து இது மாதிரி தான் செஞ்சீங்க நேத்து! நான் கட்டில்ல இருந்து கீழே விழுந்துட்டேன் தெரியுமா!” அவள் சிணுங்கினாள்!
“ஓ.. அப்படியா…. இன்னும் என்னவெல்லாம் செய்தேன் இந்த மாமா உன் கனவுல?”
“ம்ம். அவ்வளவு தான் அதான் நான் கீழே விழுந்து முழிச்சிட்டேனே!”
“நீ என் கனவுல வந்து என்னவெல்லாம் பண்ணுற தெரியுமா?”
“நான் எல்லாம் ரொம்ப டீசண்டா தான் வந்துருப்பேன்! நானெல்லாம் குட் கேர்ள்! உங்கள மாதிரி பேட் பாய் இல்ல!”
“அது சரி. ரொம்ப குட் கேர்ள் தான்! இதுக்கே இப்படி பண்றீயே, இன்னும் ரெண்டு நாள் கழிச்சு.. ம்ம்.? கண்ணடித்தான்.
“அப்ப இந்த மாதிரியெல்லாம் பண்ணின, அப்புறம் பொண்டாட்டின்னு கூட பார்க்க மாட்டேன்! நிஜ வில்லனாவே மாறிடுவேன்!
இப்ப பொழச்சுப் போ! அவளை விட்டான்!
அவள் “ஸ். ப்பா” என்று ரிலாக்ஸ் ஆகையில், சட்டென அவளை இறுக அணைத்து அவள் இதழ்களில் ஒரு வன் முத்தம்!
“இது நான் உன் லவ்வரா இருந்து கொடுக்கிற கடைசி முத்தம்! இனி உன் புருஷனா கொடுப்பேன்!”
அவளை வெட்கமுற வைத்து விட்டு, அவன் கிளம்பி வெளியே வந்தான்!
அங்கே ஹாலில் ராஜு, மானு, மாது மூவரும் கேரம் விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.
“ஏண்டா, மதுவுக்கு பீவர் சரியாகிடுச்சுன்னு என் கிட்ட யாருமே சொல்லல? சொன்னா நான் இங்க வந்திருக்க மாட்டேன்ல?
நான் வேற வேஸ்டா இங்க அலைஞ்சுட்டு இருக்கேன்!” மாதுவைப் பார்த்துக் கேட்டான்.
உனக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டு உடனே உன்னை பார்க்க வந்துட்டேன். வாயேன் சும்மா ஒரு டிரைவ் போயிட்டு வரலாம் என் டூ வீலர்ல!”
“ம்ம். வா.” ரகுவும் அவனும் பைக்கில் வெளியே போனார்கள்!
“ரகு, கல்யாண வேலையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு!
நான் இருந்து ஓடியாடி உன் கல்யாண வேலைப் பார்த்துருக்கணும், நான் இல்லாம போயிட்டேன். இன்னும் எதாச்சும் வேலை பாக்கி இருந்தா சொல்லுடா, நானும் சேர்ந்து பாக்குறேன்!”
“அதெல்லாம் வைஷு ஆள் அரேஞ்ச் பண்ணிட்டாடா!” சொன்னவன் பார்த்தி ஹெல்மெட்டை போடாமல் சும்மா பெட்ரோல் டாங்கின் மீது வைத்திருப்பதை பார்த்து சொன்னான் “டேய் நீ ஹெல்மெட்ட போடு”
“நீ வேறடா, இரு.. ட்ராபிக் பி சி யாராவது வந்தா போடலாம்”.
சொன்ன நேரம் இரு ட்ராபிக் போலீஸ்காரர்கள் வழி மறித்து வண்டியை நிறுத்த சொன்னார்கள்.
“ஏன் சார். அதான் ஹெல்மெட் போட்டுட்டு தானே வந்தேன்” பார்த்தி கோபமாய் சொல்ல,
“ஓ அப்படியா .. அப்ப வண்டி பேப்பர்ஸ் எடுங்க”
எடுத்தான்.
இன்சூரன்ஸ் காலாவதியிருந்தது!
அவன் தாய்லாந்து டூர் சென்றுவிட்டதால் மறந்து போய் இருந்தான் அதை புதுப்பிக்க!
“வாங்க சார், வண்டிய இப்படி ஓரமா பார்க் பண்ணிட்டு பைன் கட்டிட்டு போங்க!”
“இல்ல சார்..அது வந்து நான் பாரின் டூர் போயிட்டேன்! நேத்து தான் வந்தேன். இன்சூரன்ஸ் போட தான் வண்டிய கொண்டுப் போய்க்கிட்டு இருக்கேன்!”
அவன் அவரிடம் வாதிட்டுக் கொண்டிருக்க, இன்னொரு பி சி ரகுவை அடையாளம் கண்டு கொண்டார்!
“சார் நீங்க டாக்டர் ரகுநந்தன் தானே ! யோவ் அவர் போகட்டும் விடுயா..
சார் நீங்க போங்க ! சீக்கிரம் உங்க பிரண்ட இன்சூரன்ஸ் போட சொல்லிருங்க!”
பைன் போடப் போன இன்னொரு பி சி யிடம் திரும்பி “யோவ், அவர் யாருன்னு தெரியுமா? ராஜுவோட மச்சான்! டாக்டர்!
அப்புறம் தேவா சார்க்கு தெரிஞ்சா, என் வீட்டு மாப்பிள்ளைன்னு தெரிஞ்சும் வண்டிய நிப்பாட்டினியான்னு நம்மள தான் திட்டுவாரு”
“ராஜுவுக்கு ஏதுயா சிஸ்டர்?”
“அது தான்யா. அவங்க வீட்டுக்கு வருமே ஒரு பாப்பா. மது பாப்பா. அந்த மதுவோட மாப்பிள்ளை தான் இவர்!” அவர்கள் பேசி கொண்டது ரகு, பார்த்தி காதிலும் விழுந்தது!
வழியில் ஒரு இளநீர் வண்டியின் முன் நிறுத்தி இளநீர் வாங்கினார்கள்.
அந்த இளநீர் விற்ற பெண்ணோ, இளநீர் கொடுத்து விட்டு காசு வாங்க மறுத்துவிட்டாள்!
கேட்டதற்கு, “நீங்க மது பாப்பாவ கல்யாணம் செய்யப் போற டாக்டர் அய்யா தானே! ரொம்ப சந்தோசம்!
உங்க ரெண்டு பேரின் நல்ல மனசுக்கு ரொம்ப நல்லா இருப்பீங்க டாக்டர்! யோவ், இங்க பாரு யாரு வந்துருக்கான்னு” அவள் கணவனை அழைத்தாள்.
அவன் தன் லுங்கியை இறக்கிவிட்டு பணிவாக ஒரு வணக்கம் வைத்தான் ரகுவிற்கு!
“எல்லோர் வயிறும் குளிர, நான் இளநீர் விக்கிறேன், ஆனா என் புருஷன் கண்டத குடிச்சு குடல் வெந்து போய், முடியாம இருந்தான்.
அப்ப மது பாப்பா தான் உங்க கிட்ட சொல்லி ப்ரீ ட்ரீட்மென்ட் கொடுத்துச்சு! ரொம்ப நன்றிங்க டாக்டர்!”
“மது சில பேருக்கு அவனிடம் சொல்லி இப்படி ப்ரீ ட்ரீட்மென்ட்க்கு ஏற்பாடு செய்துருக்கா அதுல ஒருத்தங்க போல இவங்க” என்றான் ரகு பார்த்தியிடம்!
“அவள் தனக்குன்னு எதையும் என்கிட்ட கேக்க மாட்டாடா!” பெருமையுடன் சொன்னான் அவன்!
பார்த்திக்கு உள்ளுக்குள் பற்றிக்கொண்டு வந்தது!
இந்த ஒன்னரை மாதத்தில் என்னெவெல்லாம் மாற்றம் இந்த ரகுவிடம்!
ரகுவைப் பார்த்த முதல் கணத்திலேயே அவனுள் ஒரு அதிர்ச்சி!
மீசை வைத்துக் கொண்டிருந்த ரகுவைப் பார்த்து அதிர்ந்தான்.
அது மட்டுமா, ஹேர் ஸ்டைல் கூட மாறிப் போய்! கேட்டால் மச்சான் சொல்லி மாற்றினானாம்!
நான் வெஜ் சாப்பிட கூப்பிட்டால் மறுத்தான்.
“ஓ.. கல்யாணம் பிக்ஸ் ஆனதால் சாப்பிட கூடாதா?”
“இல்லை நான் என் மதுவுக்காக நான் வெஜ் சாப்பிடுவதை விட்டுவிட்டேன்” என்கிறான்!
இப்படியாடா ஒரேடியா மாறுவான் ஒருத்தன்! அவ்வளவு பவரா இந்த லவ்வுக்கு?
ஏன் நானும் தான் ஒரு பொண்ண லவ் பண்றேன், நான் என்ன இப்படியா மாறிட்டேன்?
எதே! இவன் பண்ணுவதற்கு பெயர் லவ்வா?
பார்த்தி ஒரு பெண்ணையும், பார்த்தியை ஒரு பெண்ணும் கல்யாணம் செய்ய விரும்பினார்கள்!
பார்த்தியோ, இருவரையுமே “பைப் லைனில்” வைத்து இருந்தான்!
அவன் விரும்புகிற பெண், நர்சிங் படித்து விட்டு, கவர்மென்ட் ஜாபில் இருக்கிறாள்.
இவன் பிசினெஸ் செய்வதாக எண்ணிக் கொண்டு அவர்கள் வீட்டிலும் ஒரு வாறு சம்மதம் சொல்லியிருக்கிறார்கள்.
அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால், காலத்துக்கும் அவளை ஹாஸ்பிட்டலில் பிக்கப் மற்றும் டிராப் செய்தே தன் காலத்தை அவள் சம்பளத்திலேயே ஓட்டி விடலாம்! செட்டில் ஆகி விடலாம்!
அவனை விரும்பும் பெண், அவனை விட மூன்று வயது மூத்தவள்!
படிக்கவில்லை என்றாலும் பார்த்தியைப் பார்த்தால் அப்படி தெரியாது! நன்றாக ட்ரெஸ் செய்து கொள்வான்!
பத்தாதிற்கு அவனிடமிருந்த அந்த நுனி நாக்கு ஆங்கிலம்!
அவளை அவன் பால் ஈர்த்தது! அவனுக்காக அவள் நிறைய செலவு செய்வாள்!
இப்போது கூட பார்த்தி தாய்லாந்து டூர் செல்ல அவள் தான் காசு கொடுத்தாள்.
தாய்லாந்தில் இருக்கும் போதே பார்த்தி ரகு மது நிச்சயதார்த்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் பார்த்து விட்டான்!
இந்தியா போனவுடன் ரகுவை சந்தித்து, ஏதாவது பண்ணி ஆட்டத்தை கலைக்க நினைத்தான்!
ஆனால் அந்த பெண் அவனை விட வில்லை, நேராக அவனை கோவா டூர் அழைத்துப் போய் விட்டாள்!
அங்கேயும் போய்விட்டு , இங்கே வந்தால், நிலைமை இவ்வளவு தூரம் கை மீறி போய்விட்டு இருக்கிறது!
எப்படியும் ரகு, கொஞ்ச நாளில் அந்த மதுவை விரட்டி விட்டு, தன்னிடமே அந்த காண்ட்ராக்டை கொடுப்பான், அதைக் காட்டி அந்த நர்ஸ் பொண்ணை கல்யாணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த பார்த்திக்கு, இந்த ரகு, அந்த மதுவை கல்யாணமே செய்துக்க போறான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
ஏதாவது பண்ணனும்! கல்யாணத்தை நிறுத்த முடியாது போல இனி! ஆனா அந்த மது சந்தோசமாவே இருக்கக் கூடாது!
என் வாழ்க்கையை கெடுத்து விட்டு அவள் சந்தோசமா வாழ இந்த பார்த்தி விட்டுடுவேனா?
இருடி, இந்த ரகுவிடம் ஏதாவது ட்ரை பண்ணி, அவன் மனசை கலைக்கிறேன் பார்! உள்ளுக்குள் முடிவெடுத்தான்!
சொல்லிவிட்டு, “ஆனா இது கூட நல்லாத்தான் இருக்கு! மதுவோட மாப்பிள்ளை! – மது மாப்பிள்ளை!
ஆக்டர் சூரிய ஒரு படத்துல எல்லோரும் அடையாளம் கண்டுக்குவாங்களே “புஷ்பா புருசன், புஷ்பா புருசன்ன்னு அது மாதிரி!
பெரிய ஜோக் சொல்லி விட்ட மாதிரி பார்த்தி சிரித்தான்!
ஆனால் ரகு சிரிக்க வில்லை! அவன் முகத்தில் ஒரு சின்ன எரிச்சல் , விருப்பமின்மை தெரிந்தது!
அதை கவனித்து விட்டான் பார்த்தியும்!
அவனுக்கு வேண்டியதும் அது தானே! ரகுவின் ஈகோவை தூண்டிவிட்டு காரியம் சாதிப்பது தானே அவன் எப்போதும் செய்வது!
“சரிடா ரகு, இங்க தான் நம்ம பிரண்ட் கிஷோர் இருக்கான்ல, அவன் புதுசா ஒரு ஜெம்ஸ் ஸ்டோன் கடை திறந்துருக்கான், வா நான் உனக்கு ஒரு ரிங் வாங்கித் தரேன் உன் கல்யாணப் பரிசா!”
“கிஷோர் இப்ப பெரிய ஜோசியகாரனா ஆகிட்டாண்டா! ஒரு யூட்யுப் சானல் கூட நடத்துறான். ஜாதகம் பரிகாரம்னு ஏதேதோ சொல்லி தாண்டா ஜெம்ஸ் ஸ்டோன் விக்குறான்!”