Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

43. தனுஜா செந்தில்குமார் - மண் கொடுத்த மாணிக்கம்

மண் கொடுத்த மாணிக்கம் – 8

அத்தியாயம் – 8

இந்த இரு தினங்களும் முகத்தை தூக்கி வைத்து கொண்டே திரிந்தான் லட்சுமணன்.தாயின் மன காயம் உணராமல் இருந்த தன்னையே வெறுத்தான், அதனால் தான் மீனாளை நேர் கொண்டு காண முடியவில்லை.தாயின் முகம் பாராமல் சுற்றி வந்தவனை கலவையாக பார்த்து வைத்தாள் சாலா.லட்சுமணன் குணம் இப்போது தான் கொஞ்சமாக பிடிபட தொடங்கியது போலும் அரிவைக்கு.



Advertisement

இன்று மாலை கிளம்பியவனைத் தடுத்து இன்னும் ஒரு நாள் என்று தங்க வைத்து விட்டார் வள்ளியப்பன்.மாமன் சொல்லுக்கு மருமகன் மறுமொழி சொல்வானா என்ன? மறுத்துப் பேசாமல் சரியென்று தங்கி விட்டான் லட்சுமணன்.

இரவு உணவாக இட்டிலியும், கார சட்னியும் சுட, சுட பரிமாறப் பட அத்தனை ஆனந்தமாக உண்டான் லட்சுமணன்.அவனுக்குப் பிடித்த உணவு இது, அதுவும் கண்ணாத்தாள் கை பக்குவத்தில் கேட்கவா வேண்டும் கணக்கில்லாமல் உள்ளே சென்றது.அளவுக்கு மீறி உண்டவன் கொஞ்சமாக நடந்து கொடுக்க, இந்த தனிமைக்காகவே காத்திருந்தது போல அவனை தேடி வந்தாள் சாலா.

Advertisement

Advertisement

அவனுக்குப் பின் இருந்து அவனை எப்படி அழைக்க என்று தடுமாறி நின்றவளை, நிழல் கொண்டு கண்டு கொண்டவன்,”சாலா ஆச்சி பின்னுக்கு இருந்து என்ன பண்ண போறீக?” என்றதும் தடுமாறி.

“அது! ஒன்னுமில்லை கொஞ்சமா பேச வந்தேன்”

Advertisement

“கூப்பிட வேண்டியது தானே? அது என்ன கொஞ்சமா பேச? நீக நிறையவே பேசலாம் சாலா ஆச்சி “அவனது குறும்பை கண்டு கொள்ளாதவள் போலவே காட்டி கொண்டவள்.

” எனக்கு தெரியல” மொட்டையாக பேசினால் அவனுக்கு என்ன புரியும் பாவம். அதுவரை திரும்பியே பேசி கொண்டிருந்தவன் அவள் புறம் திரும்பி,

“என்ன தெரியல?”

“உங்கள எப்படிக் கூப்பிடுறதுனு தான் தெரியல”

“என்ன இப்படி சொல்லிப்புட்டிக யாரும் இல்லத்தாப்போ லட்சு சொல்லுக, ஆள் இருந்தா அயித்தான் சொல்லுக, அதுவும் இல்லையா என்னக செல்லம் சொல்லுக”

“ஹான்! செல்லமா முனகியவள் அப்படியெல்லாம் பட்டுனு வராது பழக்கம் கொடுக்கனும்”என்றதும் சாலாவை நெருங்கியவன்.

“பழக்கம் தானே? நான் எதுக்கு இருக்கேன் பழக்கம் கொடுக்குறேன், அதை விட எனக்கு என்ன சோலி சாலா ஆச்சி” மீண்டும் குறும்பு கொப்பளிக்கச் சொன்னவனை நேருக்கு நேர் பார்த்தவள்.

“விளையாட்டு பேச்சு பேச வரல. உங்க குசும்பையெல்லாம் செத்த தள்ளி வைக, முக்கியமா பேச வந்தேன்.நீக இப்படியே பேசி வச்சா எப்படி?” என்றதும் பல் தெரியாமல் சிரிக்க.சாலாவின் பார்வை அவனது பல் வரிசையில் பதிந்து சிறு மயக்கத்தைக் காட்டியது.வசீகரன் எதில் தான் மயக்கம் கொடுக்க வேண்டும் என்பதில் வரமுறையே இல்லை போலும்,மனம் தொடங்கி அகம் கொண்டு செயல் என அனைத்தும் ஈர்த்தது இவனிடம்,அதனாலே நொந்து கொண்டது கன்னியின் மனம்.

அன்று ஒரே நிமிடம் தான் சிந்தனை எண்ணி, கண்ணியம் என்னும் கயிறை கொண்டு தன்னுடன் இழுத்து கட்டி கொண்டான் லட்சுமணன். இந்த திருமணத்தை மறுக்க வாய்ப்பு தேடி அலைந்தவளை. நேர் குணம் கொண்டு ஈர்த்து, முற்றிலும் தன் வசம் இழுத்து கொண்டான் மாயாவி.

“சாலா ஆச்சி வாக அந்தாண்டா போவோம். அங்கன வச்சு இதே போல விடிய, விடிய பாருக. நான் வாக முகத்தை காட்டி நிக்கிறேன் ” என்றதும் முகத்தைச் சுருக்கி சிறு சிணுக்கம் காட்டினாள் சாலா.

“ரொம்பத்தேன் வம்பு செய்றீக நான் போறேன் போக” என்று திரும்பியவள் கையைப் பற்றித் தனது அருகில் நிறுத்தி கொண்டவன். கன்னியின் காது தீண்டிய சுருள் முடியை மென்மையாகக் காது மடலில் சொருகி விட.அந்த செயலுக்கே விழிகள் சொருகி கொண்டு வந்தது சாலாவுக்கு. அவளது நிலை இன்னும் லட்சுவை வம்பு செய்யத் தூண்டினாலும்.அதனை அடக்கி அவளுக்குச் செவி சாய்த்தவன்.

“குறும்பு செய்ய மாட்டேன் சொல்லுக”விடுபட முடியா போதை போலும் இந்த அன்பு இன்னும் தெளியா போதையில் நின்றாள் பேதை “ஹ்ம்ம்!” என்றாலே ஒழிய பேச்சு வரவில்லை.

“சாலா!” லட்சுமணன் உலுக்க கொஞ்சமாகத் தெளிந்தவள் தன்னை முயன்று சமாளித்துக் கொண்டு.

“ஏன் சோர்ந்து போயி கிடகீக? அயித்த கிட்ட சரியா  பேச கூட இல்லை? அவுக இன்னைக்கு முழுக்க உங்க முகம் பார்த்தே சுத்திகிட்டுக் கிடந்தாக, தவிக்க விடாதீக அவுக மேல அப்படி என்ன கோபம்?”

“அவுக மேல கோப பட என்ன இருக்கு? எம்மேல தேன் எனக்கு கோபம்,அவுகள இன்னும் நல்ல வச்சுக்கிடதேன் தவிக்கிறேன்” தாய்யை எண்ணி அதிக உணர்ச்சியில் இருந்தவன் கண்ணில் சட்டென கண்ணீர் வழிந்து விட.

பதறிய சாலா “என்னப்பா!” என்று அவனது கைகளை பற்றி கொண்டாள்.

“முடியல! என்னால முடியல! சத்தியமா முடியல! ஆத்தா பாவம், ரொம்பப் பாவம் சாலா, அவுக ரத்தத்தை உறிஞ்சு இத்தினி பெரிய ஆளா மாறி நிக்கிறேன் நான் என்ன செஞ்சேன் அவுகளுக்கு? “

“ப்ச்! அப்படியெல்லாம் இல்லை அவுகளுக்குப் பிடிப்பே நீகதேன்”

“என்ன சொல்லு!, அவுக இழந்த பருவமெல்லாம் இனி திரும்பக் கிடைக்காது தானே? பிள்ளைக்கு ஒசரமே பெத்தவுக வாழனுமா என்ன?” என்றவனிடன் எப்படிச் சொல்வது இங்குப் பல பெண்கள் வாழ்க்கையின் அமைப்பே இப்படித்தான் என்று, ஒரு பெண்ணின் தாயகத்தில் தான் அடுத்தத் தலைமுறையே விதை தூவி, வேர் விட்டு, வளர்ந்து நிற்கிறது என்று,

“வெசன படாதீக உங்களை மாதிரி பிள்ளை கிடைக்க அயித்த கொடுத்து வச்சிருக்கனும் நீக எந்த பாதகத்துக்கும் காரணமா இருக்க முடியாது.  அன்னைக்கே போற உசுரை எங்க ஐயா பிடிச்சு வைக்கல,நீகதேன் உங்க ஆத்தா மனசை மாத்தி விட்டுருக்கீக உங்களைக் கொண்டுதேன் அவுக யோசனை பண்ணிருக்காக.

உங்க முகத்தேன் உங்க ஆத்தா இறப்பை தடுத்திருக்கு.இதோ இப்போ உங்களைத் தனி மனிசியா ஆளாக்கி ஜெயிச்சு நிக்கிறாக.இதுக்கு மேல என்ன வேணும் சொல்லுக”

“ப்ச்! என்ன சொன்னாலும் இன்னும் அவுகள நல்லா பார்த்துக்கிடனும்” என்றவன் மனம் தாயின் நிலையை எண்ணி மருகி தான் நின்றது.

“கண்டிப்பா பார்த்துக்கிடலாம் அவுக கிட்ட பேசுக நீக முகம் திருப்பி வச்சாலே சோர்ந்து போயிடுறாக” என்றதும் ஒரு பெருமூச்சுடன்.

“ஹ்ம்ம்! நான் ஆத்தா கிட்ட பேசிக்கிறேன் உங்க கூடவும் நிறையா பேசனும் மனசுவிட்டு சிறு இடைவெளியில் தன்னை மீட்டு கொண்டு. சரி பார்த்துக்குவேன் சொன்னீகளே? பார்த்துக்குவீகளா? “சின்னக் குரலில் கேட்டவன் மீண்டும் நெருக்கம் காட்டி நின்று கொண்டான்.

அவனது செய்கையில் இயல்பாக பின்னே சென்றவளிடம்,”சாலா ஆச்சி அயித்தைய பார்த்துக்குவீக அது எனக்குத் தெரியும், ஆனா அயித்த பெத்த அயித்தானை எப்படிப் பார்த்துக்குவீக அதை சொல்லுக? என்றவன் அவளது கண்களை மெண்மையாகத் தொட கண்ணை இறுக்க மூடி கொண்டவள் கொஞ்சம் பதட்டமாக.

“என்ன செய்றீக?”

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுக.இந்தக் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்குவீகளா? அவள் பதில் சொல்லும் முன்,விரல்கள் மெல்ல நாசி தீண்டி இங்கன வச்சு, பின்பு இதழ் தீண்டி இங்கன வச்சு, பின்பு கழுத்தில் ஒரு நொடி நிலைத்து.

சாலா தப்பா எண்ணி வைக்காதீக, அம்மா கணக்கா எண்ணி வச்சுகோக, அடிச்சாலும் திட்டி வச்சாலும் வாங்கிக்கிடுறேன்” என்றவன் பேச்சுப் புரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் போதே அவளை பக்கவாட்டில் உள்ள சுவரில் சாய்த்து வைத்து அவள்  நெஞ்சில் தஞ்சம் கொண்டவனை அதிர்ந்து பின்பு தானும் மார்போடு இறுக்கி கொண்டாள்.

“என்னை மட்டும் இங்கன வச்சு பார்த்துக்கிடுங்க சாலா ஆச்சி” என்றவன் முடியை உணர்வின் பிடியில் இழுத்து வைத்தாள் சாலா. எத்தனை நேரம் கால்கள் குறுக்கி அவளுள் புதைந்திருந்தானோ தெரியவில்லை கண்ணாத்தாளின் அழைப்பில் இருவரும் பதறி விலகினர்.எதிரில் நிற்கும் எதிர்காலத்தைப் பார்க்க சற்றும் துணிவின்றி ஓட்டம் பிடித்தவளை பார்த்து வாய் விட்டுச் சிரித்தான் லட்சுமணன்.மனம் இப்போது தான் லேசாக இருந்தது போலும்.

அதன் பின் திருமண நாளை குறித்து விட்டே லட்சுமணன் அங்கிருந்து கிளம்பி காரைக்குடிக்கு சென்றான்.சின்னப்பனுக்கு முறையாகச் செய்தியை மீனாள் சொல்ல.உண்மையில் அக மகிழ்ந்து போனார் சின்னப்ப செட்டியார்.அதன் பின் சில உரையாடலுக்கு பிறகு எளிமையாகக் குலசாமி கோவிலில் பூ முடித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டு,

அதனை முறையாக சின்னப்பன் வழியே வள்ளியப்பனுக்குச் செய்தி சொல்ல பட.அவரும் அடுத்த நிகழ்வுக்கு வேண்டிய காரியங்களைச் உடனே செய்யத் தொடங்கி விட்டார்.

இந்த சங்கதி காத்து வாக்கில் கலந்து அண்ணாமலை செவி தீண்டி வைக்கக் கொதித்துப் போனார் மனிதர்.ஊரில் பெரிய தலைக்கட்டு அவருடைய குலசாமி அல்லவா. அதனால் இன்னார் பேரன் என்று பூசாரிக்கு தெரிய வர,முதல் வேலையாக அவர் அண்ணாமலைக்கு தகவல் சொல்லி விட்டார்.

அண்ணாமலை செட்டியாருக்கு வள்ளியப்பன் தூரத்து முறையில் உறவு தான் என்றாலும் நெருங்கிய வட்டம் இல்லையே.அதுவும் இல்லாமல் லட்டு போல் உள்ள லட்சுவை தன் குடும்பம் இல்லாமல் மற்றவர்க்கு தாரை வார்க்க அவருக்கு மனமே இல்லை.பேரன் மேல் அத்தனை உரிமை கொண்டார் அண்ணாமலை செட்டியார்.அன்புக்கும்,உரிமைக்கு இருக்கும் நுணுக்கமான இடத்தை அவர் அறியவில்லை போலும்.

ஒரு வேளை அறிந்திருந்தால் பேரன் எங்கு இருந்தாலும் அவன் விருப்பம் கொண்டு வாழட்டும் என்று இருந்திருப்பார் அல்லவா.

வெளியில் இருந்து வீட்டுக்குள் அத்தனை கோபமாக நுழைந்தவர் மனைவியை பெருங்குரலெடுத்து அழைக்க.அடுக்கலைக்குள் வேலையாக இருந்தவள் அடித்து பிடித்து ஓடி வந்தாள்.

“என்னக?”

“உண்ணா உங்க மவனை வர சொல்லுக. நம்ப பேரனுக்கு பூ முடிக்க நம்பக் குலசாமி கோவிலுக்கு வாரங்களாம்.இத்தினி உறவு இருக்க போயி யாருகிட்டயும் கலக்காம அது என்ன தனுச்சு முடிவெடுக்குறது? யாரு வூட்டு புள்ளைய யாரு முடிக்க?” கணவனது கோபத்தில் பெரும் கலக்கம் கொண்டவள்.

“பொறுமையெடுங்க நம்ப போயி மருமக பொண்ணுகிட்ட என்ன சங்கதினு பேசி பார்ப்போம். மீனாவும் நோவு கண்டு இருக்காகளாம் அதை கொண்டு கூட கல்யாணம் பேசி இருப்பாக”மீனாள் உடல் நிலை உறவினர்கள் மூலம் அறிந்து வருத்தம் கொண்டவள்.இந்த திருமணத்தின் நோக்கத்தை சரியாக நாடி பிடித்தாள்.

“என்னத்த இன்னும் பொறுமை? இது சரி வாராது, வர சொல்லுக உங்க மவனை பேசிப்புடுவோம். நான் எம்பேரணை விட்டு தர மாட்டேன்.தப்புப் பண்ணிப்புட்டேன்!.. தப்புப் பண்ணிப்புட்டேன்!.. அன்னைக்கே நம்ப சனத்தை கூட்டி பிள்ளையைப் புடிங்கிட்டு அவுகள அனுப்பி வச்சிருக்கனும்” என்றதும் உண்ணாமலை வாயில் கை வைத்து அதிர்ந்து நிற்க.

அதனையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் செட்டியார் இல்லை.சுயநலமும், கோபமும் கண்ணை மறைந்து நிற்க.நியாயம் மறந்து நியாயம் பேசி நின்றார் அண்ணாமலை செட்டியார்.

“அட சிவனே என்னக பேச்சு?”

“முடியாது உண்ணா பேச்சுக்கு வராதீக சொன்னதைச் செய்க” என்றவர் வெடுக்கென வெளியில் சென்றுவிட நிலை. குலைந்து போனால் உண்னா ஆச்சி. அவரும் பெண் தானே மீனாள் பட்ட துன்பம் தொடங்கி, அவள் முன்னேற்றம் வரை சுற்றி யாராவது அவருக்குத் தெரிவித்த வண்ணம் தான் இருந்தார்கள்.

அதனைக் கொண்டு மீனாளுக்கு நியாயம் செய்யவே அவள் தவித்தாள். லட்சுமணன் அவள் பிள்ளை,பிள்ளையைக் கொண்டு எல்லா முடிவுகளும் பெற்றவளுக்கே எடுக்கும் உரிமம் உள்ளது.அதுவும் தனித்து வளர்த்தவள் என்ற நிலையில் அவளுக்கே எல்லாம் என்று நியாயமாக யோசித்தார் உண்ணாமலை.

அவர் மட்டும் யோசித்தால் போதுமா என்ன? அண்ணாமலை செட்டியார் யோசிக்க வேண்டுமே.எந்த விதத்தில் இந்தத் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்பதை நன்கு அறிந்து கொண்டு அதன்படி செயல்படத் தொடங்கிவிட்டார் அண்ணாமலை செட்டியார்.

இங்கு லட்சுமணன் ஒவ்வொரு விஷியத்தையும் வெகு ஆர்வமாகச் செய்வதைக் கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள் மீனாள்.மகனின் இந்தப் பிடித்தம் தனக்கு எப்படித் தெரியாமல் போனது என்ற வருத்தம் ஓரத்தில் இருந்தாலும்.அவனது இந்த வெளிப்படையான உணர்வை ஒரு தாயாக ரசித்துத் தான் நின்றாள் மீனாள்.மனதுக்குள் இருந்த மெல்லிய கவலை களைவது போல் ஒரு தோற்றம் அவளுக்கு.

பெரும் பதட்டமான சூழல் வர போவதை அறியாமல்.பெரும் மகிழ்ச்சியில் பெரியவர்களும்,சிறியவர்களுக்குத் தங்களது சுபநிகழ்வை எப்படியெல்லாம் செய்யலாம் என்று திட்டமிட்டு கொண்டிருந்தனர்.

இதோ விரைவில் அண்ணாமலையான் ஆட்டம்!..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!