Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

35. Dayani Shalokshan - ஹார்ட் பீட் திருடன்

ஹார்ட் பீட் திருடன் – 06

 

ஹார்ட் பீட் திருடன் – 06

அடுத்த நாள் மெல்லப் புலர கரனும் மகிஷாவும்  கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு புறப்பட்டனர்.ஜுவல் எக்ஸுபிஷன் என்பதால் உள்நுழைவுக் கட்டணமே ஆயிரங்களில் இருந்தது.இருவரும்உள்நுழைய  இருவரையும் செக் பண்ணியே அனுப்பினர். ஏசீபீ சத்யன்  தலைமையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.  மகிஷா ஒருபுறம் பார்வையை சுழல விட்டபடி வந்தாள். எதிர்பார்த்த நகையோ முன்னனி நடிகை ரோகியின் கழுத்தில் அழகாக வீற்றிருந்து.

மகிஷாவும் தனது கையில் கட்டியிருந்த     கடிகாரத்தில் இருந்த ரகசிய ஸ்பை கேமரா மூலம் அனைத்தையும் படமெடுத்துக் கொண்டாள்.



Advertisement

அதே வேளை ஜோகித்தும்  அர்ஜுனனும் அங்கு வந்தனர்.  ஜோகித்தும் அனைத்தையும் தனது கூரிய விழிகளால் அலைசியபடி வநத்வன் பார்வை நிலைத்தென்னவோ மகிஷாவிடம் தான் “அர்ஜுன் ” அவனும் “ஓகே” என்றவன் கரனிடம்  பேச்சுக் கொடுத்தபடி  அவனை அழைத்துச் செல்ல மகிஷாவின் அருகில் வந்த ஜோகித் ” ஹாய் மகிஷா” என்றான். அவன் குரலில் தன்னுனர்விற்கு வந்தவள்  அவன் புறம் பார்வையைத் திருப்ப  ஆண்மைக்கே இலக்கணமாய் இருந்தான் அவன் .

அவன் பார்வையில் தடுமாறியவள் ஹார்ட் பீட்டோ தாறுமாறாக வேலை செய்தது அதை மறைத்தவள் “என்ன” எனும் விதமாக புருவத்தை உயர்த்த அவளது மேனரிசத்தில் சொக்கித் தான் போனான்.

“வெளிய போய் பேசலாமா?” என் அவன் மென்மையாய் வினவ அவளும் அவனிடம் பேச வேண்டிய தேவை இருப்பதால் கரனை சுற்றும் முற்றும் தேட அவனோ யாரோடோ பேசிக் கொண்டிருப்பதைக் கண்டவள்  “கரன் நான் கிளம்புறன் ஈவினிங்  சந்திப்போம்” என அவனுக்கு  குறுஞ்செய்தி அனுப்பியவள் ” காஃபி ஷாப் போகலாம்” என்றாள்.அவனும் முன்னே செல்லுமாறு கை காட்ட அவளும் முன்னே சென்றாள்.

Advertisement

இதோ இருவரும் காஃபி ஷாப்பில் எதிர் எதிரே அமர்ந்தனர்.” என்ன சாப்பிடுற” என ஜோகித் கேட்க.அவளோ “நான் ஒன்னும் உட்காந்து சாப்பிட வரல” என்றான். ” ஓகே வெல்” என்றவன் வெயிட்டரை அழைத்து “இரண்டு காஃபி” என்றான்.  அவளோ அதற்கும் அவனையே முறைக்க “நீ மொறச்சாலும் அழகாத் தான் இருக்க” என்றான். “யூ இடியட்,படிச்சாள் போல இருக்கீங்க, ஆனா இப்படி பிகேவ்  பண்றீங்க” என அவள் கேட்க அவனோ சாவகாசமாக  எட்டி அவள்  கையைப் பற்றியவன்  “இப்படி கையைப் பிடிச்சு இழுத்தேனா?, என இழுக்க அவளும் அவன் இழுவையில் முன்னோக்கி வர  அவள் இதழை பிடித்து இப்படி எனத் தொடங்க அவளுக்கோ உச்சகட்ட  அதிர்ச்சியில் அவன் மார்பில் கைவைத்து  தள்ளியவள் பதட்டத்தில் தன் முன் இருந்த காஃபியை அருந்த  அதுவோ சூடாக இருந்திருக்க வேண்டும்  அவளது மென் இதழ்களை பதம் பார்த்துவிட்டது.

Advertisement

சூடான  காஃபியை உள்ளே விழுங்கவும் முடியாது வெளியே துப்பவும் முடியாது  அதை விழுங்க அவளுக்கோ அதன் சூடு குடலெல்லாம் பரவ அவள் கண்களோ கலங்கி விட்டது. “ஆஆ..”.என்றபடி அவள் நாக்கை வெளியே நீட்டி ஊத  அதில் பதறிய ஜோகித் வெயிட்டரை அழைத்து ஐஸ் வாட்டர் கேட்டவன் ” என்ன அவசரம்” என அவளைக் கடிந்து கொள்ள வெயிட்டரும் ஐஸ் வாட்டருடன் வந்தார். அதனை வாங்கி அவளுக்கு கொடுக்க அவளும் அதை பருகியவளுக்கோ   நாக்கு எரிந்ததில் கண்கள் கலங்கியது. “இனி இப்படி ஸ்டுப்பிட்டா நடக்காத மகி” அவளோ அவனை முறைத்தவள் மனமோ ” உன்னால் தான்டா” என சாடியது.

” உன்ன பொள்ளாச்சில பார்த்தன் , பார்த்ததும் பிடிச்சிருந்துச்சி  பிறகு சென்னைல சிக்னல்ல பார்த்தன்  ஏனோ தெரியல இங்க வந்து உட்கார்ந்துட்ட “என தனது இடது மார்பை  தொட்டுக் காட்டியவன் ” எந்த வகையாவது  உன்ன நான் தொந்தரவு பண்ணேனா ? இப்படி ஒருத்தன் உன்ன லவ் பண்றானு தெரிய வேண்டாமா அதான் கிஃப்ட் பண்ணண்,.துரத்துல இருந்த்து பார்த்தன்”என்றவன். அவள் கண்களை ஆழ்த்து பார்த்து ” லவ் அயூ” பேபி என்றான்.

அவளுக்கும் நாக்கு எரிவு மட்டுப்படுத்தப்பட்டிருந்த்து. அவன் பார்வை அவளை உள்ளிழுத்துக் கொண்டது..அவன் பார்வையை தவிர்த்தபடி “இது சரிவராது அதோட நீங்க, யாருனே தெரியாது, முன்னப்பின்ன பழக்கமே கிடையாது   இதோட நிறுத்திக்கோங்க” என்றவள் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டாள்.

Advertisement

அவனும் அவளைத் தொடர்ந்து  எழுந்தவன்  ” ம்ம் அத பழகிப் பார்த்து  சொல்லு” உனக்காக வெயிட் பண்றேன்” என்றவன் தனது கூலரை ஸ்டைலாக அணிந்து கொண்டு வெளியேறினான்.அவளும் வெளியே வந்து கரனுக்கு அழைத்தவள் “எங்கிருக்கிறது ”  ” ஓகே ஓகே என்றவன் அதே காஃபி ஷாப்பின் முன் நிற்க கரனும் வர இருவரும் பேசியபடி அங்கிருந்து நகர்ந்தனர்.

“எல்லாம் ஓகே தானே, ம்ம். டூல்ஸ் எடுத்துக்க நாளைக்கு நான் நேரத்தோட ஆக்டர்ஸோட போயிருவன், நீ டைம்க்கு அந்த டீமோட வந்திடு” என்றாள்.”சரி மகி நீயும் கட்டர் எடுத்துக்க மறந்துடாத ” அவளோ சம்மதமாக தலையாட்டினாள்                 அவர்கள்  பேசியபடியே குவாட்டஸை அடைந்தனர்.தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு இரவுணவை தயாரித்தவள் அதை எடுத்துக் கொண்டு ஹாலிற்கு  வந்தாள்  அப்போது அவளது அலைபேசி தன் இருப்பைக் காட்ட அவளும் அழைப்பை ஏற்றகவும் மறுபுறம் தேவியம்மா தான் பேசினார். ” அம்மா…  ம்ம் எப்படி இருக்கீங்க,ம்ம்  நான் நல்லாயிருக்கும் சனிக்கிழமையும்  ஆபிஸ் காஃப்டே அதான்மா வரமுடியல  என அவருடன் சிறிது நேரத்தில்  அழைப்பை துண்டித்தாள்

அவள் படுக்கைக்கு வர “மகி  இப்போ நாக்கு  எப்படி”இருக்கு  என ஜோகித்திடமிருந்து  குறுஞ்செய்தி வந்திருநத்து.அவனின் அக்கறை பிடித்தாலும் அவனது காதலை ஏற்க அவள் மனம் இடம் கொடுக்கவில்லை ,ஒன்று அன்பு இல்லம்,மற்றையது அவனைப் பற்றி எதுவுமே தெரியாது பிறகெப்படி அவள் ஏற்றுக் கொள்வது. அப்படியே பல சிந்தைக்கு மத்தியில்  தூங்கிப் போனாள்.

அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்த ஜோகித்திற்கோ அவள் மெசேஜை பார்த்து விட்டாள் என இரு நீல நிறக் குறியீடு காட்டியது.

“மச்சி நயோமி  மேம் கிட்ட இருந்து மெசேஜ் வந்துச்சி” ஜோகித்தோ என்ன எனும் விதமாக  அவனை நோக்க ” லிடியாக்கு வெடிங் ஏற்பாடு பண்ணியிருக்காங்க  அதை ஒரு தகவலாகவே சொல்லப்பட்டது.” எப்போ அடுத்த மாதம்  என்றான்.” ம்ம்  போலாம் என்றதோடு அப்பேச்சை முடித்துக் கொண்டான்.

ஜோகித்திற்கு தான் வீட்டை விட்டு வந்த நாள் கண்முன் விரிந்து.  ஒரு வருடத்திற்கு  முன்….

உலகையே ஆளக்கூடியது தான் ஜோகித்தின் கிரேஸ் குடும்பம். தங்களது அடையாளத்தை மறைத்து  வாழ்கின்றனர். வெளிப் பார்வைக்கு பல கம்பெனிகளை நடத்தும் ஒரு செல்வந்த குடும்பம் ஆனால் அவர்களின் அதிகாரம் ஒரு நாட்டின் ஜனாதிபதியைக் கூட தேர்ந்தெடுக்க கூடியதாக இருக்கும்.

அந்த வகையில் எலிசபெத் மற்றும் ஜார்ஜ் உலகையே தங்கள் கட்டுப்பாட்டில்  வைத்திருந்தனர். அவர்கள் இருப்பது வீடு என்பதை விட மாளிகை என்றே சொல்லலாம் பல ஏக்கர் கொண்டது  அது . அந்த மாளிகையை சுற்றிப் பார்க்கவே ஒரு வாரம் தேவைப்படும்.

ஜார்ச் பதவியேற்றதும்  ஜார்ஜின் பெற்றோர்  அவர்களது வம்சத்தில் வந்த  எலிசபெத்தை திருமணம் செய்து வைத்தனர்.

ஜார்ச் எலிசபெத்திற்கு அன்ரூட்,மெட்ரிக், மர்தா என மூன்று பிள்ளைகள் அவர்களின் கலாசார மரபுப்படி அடுத்த அரியாசனம் அன்ரூட்டுவிற்கே, ஜார்ஜும் அன்ரூவிற்கு சிறு வயது முதலே அனைத்து கலைகளையும் கற்பித்தார் அவனும் கற்றுத் தேறினான். அரியாசனம் ஏற முன் அவனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த எலிசபெத் நாடு முழுவதும் பெண் தேடியும் அன்ரூட்டிற்கு இணையான பெண் கிடைக்கவில்லை எதிர்பாராத விதமாக இந்தியா வந்த எலிசபெத்திற்கு அங்கு சர்ச்சில் வைத்து  நயோமியை காணக் கிடைத்தது.அவளும்  அன்ரூட்டிற்கு பொருத்தமாக இருப்பாள் எனக் கருதினார்  சர்ச்சில் வைத்தே நயோமியின் பெற்றோரிடம் பேசியவர் திருமணத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.

நயோமியின் பெற்றோர் இப் பெரிய சம்மந்தத்தை விடுவார்களா என்ன  ..அன்ரூட் நயோமியின் திருமணத்தை மாளிகையில் சொந்த பந்தம் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது.இந்த கிரேஸ் குடும்பத்தை பற்றிய செய்திகள் எதுவுமே வெளியே வருவதில்லை அக் குடும்ப உறுப்பினர்களை யாருக்கும் தெரியாது .நயோமிக்கு கூட திருமணத்தின் பின் அதுவும் மாளிகைக்கு வந்த பின் தான்தெரிந்தது. அவளது பெற்றோருக்கு செல்வந்த குடும்பம் எனத் தான் அறிமுகம்.

அப்படியே நாட்கள் செல்ல நயோமியும் கருவுற்றாள் முதல் ஆண் குழந்தை பிறந்ததில் குடும்பத்திற்கே ஏக மகிழ்ச்சி.குழந்தைக்கு ஜோகித் என பெயர் சூட்டினர்.

அடுத்த அடுத்த வருடத்தில் பெற்றிக்கும் தனக்கு பிடித்தவற்றை திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கும் எல்சன்,எல்ஷா என இரு பிள்ளைகள்.

மர்தாவும் தனது கல்லூரிப் படிப்பை முடித்தவள் குடும்பத் தொழிலை பார்க்கத தொடங்கினாள்
அவளுக்கோ திருமணத்தில் நாட்டமில்லாது இருக்க ஜார்ச் எலிசபெத்தின் கட்டாயத்தில் ஈடன் என்பவரை திருமணம் செய்து கொண்டாள்.ஈடனின் அன்பும் அக்கறையும் காதலும் மர்தாவின் வாழ்வில் மகிழ்சியைத் தநத்து.ஈதே வேளை அன்ரூட்விற்கும் நயோமிக்கும் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது.. அவளுக்கு லிடியா எனப் பெயர் சூட்டினர். கடைக்குட்டியான லிடியாவின் எப்போதும் துரு துரு என இருப்பாள் அனைவருக்கும் அவள் மேல் பாசம் அதிகம் .

அனைவரும்  மாளிகையிலேயே இருந்தனர். காலமும் அதன் போக்கில் செல்ல பிள்ளைகளும் மெல்ல மெல்ல வளரத் தொடங்கினர். ஜோகித்திற்கும் சிறுவயதில் இருந்தே வாள், துப்பாக்கி, காராத்தே,கும்பூ, குதிரையேற்றம், வளரி என  அனைத்திலும் சிறந்து விளங்கினான். தந்தையைப் பின்பற்றி ஜோகித்தும் அனைத்திலும் சிறந்து விளங்கியதோடு தந்தைக்கு சில விடயங்களில் ஆலோசனை வழங்கும் குருவாகவும் விளங்கினான். குறிப்பிட்ட வயதின் பின்  ஜோகித் வெளி உலகைக் கான முதல் அடி எடுத்து வைத்தான்.

குடும்ப வழக்கத்தின் படி  அறுபது வயதில் மாளிகையில்  கிரேஸ் பதவியை அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும். அப் பேச்சு வார்த்தை மாளிகையில் ஆலோசனை கூட்டத்தில் நடைபெற்றது. இதனிடையே நயோமியின் பெற்றோர் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில்  பலியாகினர்.

ஆம் இலங்கையில் ஒரே நாளில் பல சர்ச்களில் இடம்பெற்ற   குண்டுவெடிப்பில் அவர்களும் அந்தோணியர்  தேவாலயத்திற்கு சென்ற வேளை இச்  சம்பவத்தில் பலியாகினர்.

இதைக் கேள்வியுற்ற நயோமி மயங்கிச் சரிய அவரை அறைக்கு கொண்டு சென்று முதலுதவி வழங்கினர். தாய் வழித் தாத்தா பாட்டியின் இறப்பு அதிர்ச்சியே அவர்களின் உடல்கள் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

நாட்களும் அதன் போக்கில் செல்ல அன்று எல்சனும் ஜோகித்தும் பேட்மின்டன் விளையாடிக் கொண்டிருந்தனர்.அதுவோ மாளிகையின்  மேற் பகுதியில் இருந்தது. அதற்கு சற்றுத் தள்ளி ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதி இருந்து.

ஜோகித்திற்கும்  எல்சனுக்கும் ஒரு வயதே வித்தியாசம்  பேட்மின்டன் விளையாடியவர்கள் மூச்சிறைக்க அங்கிருந்த கதிரையில் அமர்ந்தனர். தண்ணீரைக் குடித்த ஜோகில் எல்சனிடம் அதனை நீண்ட அவனும் அதனைப் பெற்று பருகியவன்.

“அண்ணா இதக் கொஞ்சம் பாரன் என அலைபேசியை காட்ட அதிலோ சவுதியில் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த வாள்” ஜோகித் எல்சனை  பார்க்க “எப்படி இருக்கு  ஜோகித்தோ தாடையை தடவியபடி அதனை பற்றி முழுதாக தெரிந்து கொண்டவன் இரண்டு நாட்களில் அதனை எல்சனின் கையில் வைத்தான். எல்சனோ அதிர்ச்சியில் எப்படினா இது அந்த நாட்டுப்  பொக்கிஷம் தரமாட்டாங்களே என்றான்.” நீராட்டி எடுத்துக்க வேண்டியது தான் என்றான் கண்சிமிட்டி. ஜோகித் முதலாவதாக களவாடியது சவுதி மன்னனின் வாளையே அதனை அசால்டாக அடித்திருந்தான்.  அதனால் அத் திருடன் உலகம் பேசும் நாயகன் ஆனான். அவளோ பாதுகாப்பு மத்தியில் அதனை தூக்கியிருந்தான்.

அத் திருடனை இன்றும் சவுதி காவல்த்துறை தேடிக் கொண்டு தான் இருக்கிறது.

இதுவே அவனுக்கு த்ரிலிங்கை கொடுக்க அடிக்கடி பெறுமதியான பொருளை அடித்து மீடியாவை பரபரப்பாக்கிக் கொண்டிருந்தான். உலகமே அவனை இன்டர்நேஷனல் திருடனாக பச்சை குத்தியது. சேலேஞ்சிற்கா கூட திருடத்  தொடங்கினான். இதுவரை இத் திருடனை யாரும் கண்டதில்லை. அந்தளவிற்கு அவனின் கெட்அப்,பிளான் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!