அ22_1 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்..
கொல்லை துளசி எல்லை கடந்தால் 22_1
“சாஞ்சாடம்மா சாஞ்சாடு
சாயக்கிளியே சாஞ்சாடு
Advertisement
குத்து விளக்கே சாஞ்சாடு
கோயில் புறாவே சாஞ்சாடு
மானே மயிலே சாஞ்சாடு
Advertisement
மரகதக் கிளியே சாஞ்சாடு
Advertisement
கண்ணே மணியே சாஞ்சாடு..”
பாட்டி முதுகில் குழந்தை சாய்ந்து ஆடிக்கொண்டே, இப்படி பாட்டை கேட்க மழலைக்கு என்ன ஆனந்தம் கிடைக்குமோ தெரியாது.. ஆனால் பாட்டிமார்களுக்கு அது தரும் இன்பமே அலாதி.
Advertisement
ஒரு வயதை தொட சில நாட்களே இருக்க.. சங்கு பாப்பா நான்கு பற்களும் தெரிய பாட்டி கழுத்தைக் கட்டிக் கொண்டு, “பாபி.. பாபி”, என்று செல்ல மிழற்றல்.
“கட்டிக் கரும்பே சாஞ்சாடு
மயிலே குயிலே சாஞ்சாடு
மடியில் வந்து சாஞ்சாடு”
பிள்ளையை இழுத்து மடியில் போட்டுக் கொள்ள.. அப்படி ஒரு சிரிப்பு அவளிடம். குட்டி பேத்தி வயிற்றில் மாவு பிசைந்து கொண்டிருந்த சௌந்தர்யா முகத்தில் கொள்ளை பிரியமும்… அகமகிழ்ந்த சிரிப்பும்.
“என்னா பாட்டு அத்த… என்க்கும் சொல்லி குடுங்க..”, அருகே வந்தமர்ந்தாள் அபி.
மீண்டும் சௌந்தர்யா பாட்டுப் படிக்க அம்மாவும் மகளும் தமிழைக் கொலை செய்து கொண்டே பாட்டை பாட.. “அம்மா தாய்ங்களா.. புண்ணியமா போகும்.. பாட்ட உயிரோட விட்டுடுங்க..”, கூறிக் கொண்டே சித்தியின் அருகில் வந்து மாதவன் அமரவும், “டா டா..”, சங்கு குட்டி அப்பா மேல் பாய்ந்தாள்.
“நீ போடா… அப்பன பாத்தா இவளுக்கு யாரும் கண்ணுக்குத் தெரிய மாட்டாங்க!”. அவர் ஆதங்கப்படுவதில் தவறில்லை. ஒரு வாரமாக மாதவன் குடும்பம் கடலூரில் இருக்க, குட்டி சங்கமித்ரா அனைவரிடமும் ஒன்றிப் போயிருந்தாலும், சின்ன பாட்டி தான் அவளுக்கு அனைத்திற்கும் வேண்டும்! எல்லாம் அவள் அப்பாவைப் பார்க்கும் வரை தான். மாதவன் குரல் கேட்டாலே.. முட்டி தெய்ந்துவிடும், அவள் தவழும் வேகத்திற்கு.
வைத்தியநாதனுக்கும், பாக்கியாவிற்கும் மருமகளையும் ஏற்க முடியவில்லை. அவள் பெற்ற பிள்ளையையும் ஏற்க முடியவில்லை. பத்து நாட்கள் முன் மாதவன் வெளியே சென்றிருந்த வேளை சங்கமித்ரா அழுது தீர்க்க.. அவளை அமர்த்த வழி தெரியாமல் அபி மகளைத் தூக்கிக் கொண்டு வாசலில் அங்குமிங்கும் நடக்க..
சத்தம் பொறுக்க முடியாதவராய் வைத்தி, “பாக்கியா.. அது வயில எதையாவது அடைச்சு வாய மூட சொல்லு! இல்ல அது கழுத்த திருகி போடு! மனுஷன் நிம்மதிய எடுக்க எங்க இருந்து வந்து தொலைஞ்சுதுங்களோ ரெண்டும்..” என்றதோடு நிற்காமல் இருவரும் ஏகத்திற்கும் வசை பாட.. வசுவிடம் அவள் கேட்டிருந்த பொருளைக் கொடுக்க வந்த மாதவன் காதில் அனைத்தும் விழுந்தது. இதற்கு மேல் இந்த வீட்டில் அவன் மகளோ மனைவியோ இருக்கக் கூடாதென்ற முடிவுக்கு வந்தவன், மகளின் பிறந்த நாளை குடும்பமாய் கொண்டாட சித்தப்பா வீட்டிற்கு வந்துவிட்டான். ஒரு சில மாதங்களில் ஆஸ்திரேலியாவிற்குப் பயணப்படும் வரை மனைவியும் பிள்ளையும் இங்கு தான் இருக்க ஏற்பாடு செய்துள்ளான்.
“என் சங்கு பாப்புவுக்கு பாட்டி வேண்டாமா?”, பாட்டி கேட்க,
ஈஈஈஈ என நான்கு பற்களும் தெரியச் சிரித்து.. அப்பா கழுத்தை கட்டிக்கொள்ள.. “நீ உன் அப்பாட்ட போ. உன் அம்மா எனக்கு”, என்று அபியை அவர் அணைத்துக் கொள்ள.. குட்டி சண்டி ராணி சண்டைக்குத் தயாரானாள்.
அம்மாவும், குட்டி பாப்புவும் செய்யும் அட்டகாசங்களை அருகே இருந்து நகு பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்க.. அந்த அழகிய தருணத்தை சிறிய கைப்பேசிக்குள் அடக்கிக் கொண்டிருந்தாள், அலர்விழி.
அலர்விழிக்கு மூன்றாம் வருடமும் முடிந்துவிட, கணினி மையம் மூலம் கிடைத்த வேலையில் அமருமுன் எஸ்தர், “வேலைல ஜாயின் பண்ணின பின்னாடி உன்னால இஷ்டத்துக்கு லீவ் போட முடியாது. ரெண்டு மாசம் நிம்மதியா அம்மா அப்பா கூட இரு”, என்று அனுப்பிவைத்தார்.
ஜெர்சி சிட்டியில் தலைமை அலுவலகம் கொண்ட பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்திருந்தது. அதன் சென்னை கிளையில், கல்லூரி தேர்வில் மதிப்பெண் குறைந்து போகாமல் இருந்தால், அவர்கள் கூறிய தேதியில் சேர்ந்துகொள்ளலாம்.
“மாதவா பாப்பாக்கு மொட்டை அடிச்சு காது குத்த கம்மல் வாங்கணுமே டா.. எப்போ போறது?”
“பர்த்டே முடியட்டும் சித்தி. அடுத்த மாசம் தானே காது குத்து.. பொறுமையா பாத்துக்கலாம்”
“பாப்பா அந்த ஃபோன கீழ வச்சுட்டு பாட்டி சாப்பிடுறாங்களான்னு கேட்டுட்டு, சங்கு குட்டிக்கு பருப்பு சாதம் பிசஞ்சு எடுத்துட்டு வா. நீ என்ன வாய் பார்த்துட்டு இருக்க.. போய் பாட்டிக்கு அப்பளம் போடு, பாப்பு சாப்பிட்டதும் நாமளும் உக்காருவோம்”, அலர்விழியையும் நகுவையும் ஏவிக் கொண்டிருந்தார் சௌந்தர்யா.
“பேத்தி வந்ததும் வந்தா.. இந்த அம்மா சீன பாத்தியா டி..”, அக்கா கூற,
“அது, அண்ணாவ மாதிரியே அம்மாவையும் அப்பிடி மயக்கி வச்சிருக்கு.. என்ன பண்ண?”, தங்கையும் ‘ஆமாம் சாமி’ போட்டுக் கொண்டே சென்றாள் அடுக்களைக்குள்.
அன்று எஸ்தர் வீட்டிலிருந்து பிரவீன், அவன் அத்தை மாமாவை அழைத்துச் சென்றபின் சௌந்தர்யாவிடம் ஏகப்பட்ட மாற்றங்கள். காலம் ஒரு பாடப் புத்தகம். கிடைப்பதற்கரிய பொக்கிஷங்களைக் கொண்ட புத்தகம். சௌந்தர்யாவிற்கு வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுத்திருந்தது.
கடலூர் வந்த கையோடு வேலையை விட்டார். பள்ளிக்கு ஓடி, கல்லூரிக்கு ஓடி, வேலை என்று ஓடி, கணவன்.. பிள்ளைகள் என்பவர்களுக்காய் ஓடி.. கடைசியில் அவர்களோடு இருக்கவில்லையோ என்று தோன்றவும் இளைப்பாற முடிவெடுத்தார். வாழப்போகும் கொஞ்சக் காலமும் வாழ்ந்து பார்க்கும் எண்ணம் முளைத்ததின் காரணம்!
என்ன படித்தாலும் தலையில் படிப்பு ஏறாத நகுநாவிடம் கூறிவிட்டார் படித்தே ஆகவேண்டும் என்று!
“வாழ்க்கை எப்போ எப்படி மாறும்ன்னு யாருக்கும் தெரியாது நகு. யாரையும் யாரும் நம்பி இருக்கக் கூடாது. நீ படிச்சு உன் சொந்த கால்ல நிக்க கத்துக்கோ.
ஒரு வேலை கையில இருக்கும் போது தனி தைரியம் இருக்கும். நாலு பேர் கூட பழகும் போது நமக்குத் தெரியாத பல விஷயம் கத்துக்கலாம். நாலு சுவருக்குள்ள உன்ன புதைச்சுக்க நினைக்காத. படி நகு”, என்று ஏகப்பட்ட அறிவுரைகள்.
அம்மா வேலையை விட்டது பெண்கள் இருவருக்கும் கொண்டாட்டமே. முன்போல் அம்மா சட்டென்று கோபப்படுவதில்லை. முன்பே பிள்ளைகளின் விருப்பங்களுக்கு தடை போடாதவர் இப்பொழுது கேட்கவே வேண்டாம். ஒரு வாழ்க்கை.. என்ன அவசரம்.. பிள்ளைகளும் வாழ்ந்து தான் பார்க்கட்டுமே என்று நினைத்தார் போலும்.
அம்பிகா அலர்விழி திருமணம் பற்றிக் கேட்டதிற்கு, “இப்போவே கல்யாணம் பண்ணி.. எது பின்னாடியோ ஓடி உழைச்சு.. வயசாகி கடமை முடிஞ்சுதுன்னு மூச்சு விடும் போது வாழ்க்கை முடிஞ்சு போயிருக்கும். என் பொண்ணுங்க நிம்மதியும் சந்தோஷமுமா என் முன்னாடி கொஞ்ச நாள் இருந்துட்டு போகட்டுமே. பெரியவளுக்கு வெளிநாடு போய் வேலை பாக்கணும்ன்னு ஆசை. கல்யாணம் பண்ணி வச்ச பின்னாடி அது எவ்வளவு சாத்தியம்ன்னு தெரியல. அவளுக்கும் இப்போதைக்கு கல்யாணம் எல்லாம் இஷ்ட படல அண்ணி. அத பத்தி வாய் திறக்கவே விட மாட்டேங்கறா! இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்ன்னு பாக்கறேன். பிரவீனும் படிக்க லண்டன் போயிட்டார் தான.. முடிச்சுட்டு வரட்டும். ரெண்டு பொண்ணுங்கதும் ஒன்னா முடிச்சுடுவோம்.”, என்றுவிட்டார்.
அம்மாவின் புது பரிமாணம் பெண்களுக்கு புரியவில்லை என்றாலும் பிடித்தது. அம்மாவிற்கு ‘மினி ஸ்ரோக்’(mini stroke) வந்தது பெண்களுக்கு தெரியாது. அது கணவன் மனைவிக்குள் புதைந்து போனது.
பிரவீன் அன்றே கண்டு கொண்டான். சில பல பரிசோதனைகளுக்குப் பின் ஊர்ஜிதமானது.
விடயம் கேள்விப் பட்டதும் ஆடித்தான் போனர் தியாகுவும், சௌந்தர்யாவும். இரண்டு பெண் பிள்ளைகளைக் கரை சேர்க்கும் முன் கைகால் இழுத்து கொண்டு படுப்பதெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இறப்பை விட கொடியதாகத் தோன்றியது பக்கவாதம்!
கண்கலங்கி நின்ற கணவனுக்கு என்ன ஆறுதல் கூறவென்று மனைவிக்குத் தெரியவில்லை. மனைவியாய், மருமகளாய், தாயாய் அந்த குடும்பத்தைத் தூக்கி சுமந்த தாரத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டேனோ.. உள்ளம் குமுறியது, கணவனுக்கு.
மனைவி இல்லாத வாழ்வை மனிதனால் நினைத்து பார்க்க முடியவில்லை. இத்தனை வருட வாழ்க்கையில் அவர் ஊனாய் உயிராய் போன மனைவி. மனைவி இல்லாத வாழ்வு சூனியம் என்றால்.. பம்பரமாய் சுற்றித் திரியும் அவரின் சரி பாதி, தன் முன் அசைவில்லாமல் உயிரற்ற கண்களோடு கை காய் இழுத்துக் கொண்டு கிடந்தால்..? கணவனாய் அப்படி ஒன்றை யோசிக்க முடியவில்லை.
அவரின் மனைவி.. அவரின் சுவாசம்.. ‘சௌந்தர்யா..!’, தன் போல் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. மனைவியின் கையை இறுக்கிக் கொண்டார் தன் நடுங்கும் கைகளுக்குள். நரை விழுந்த பின் இதெல்லாம் என்ன கொடுமை!
“பயப்பட ஒன்னும் இல்ல மாமா. இப்போவே பார்த்துட்டோம். சோ.. ட்ரீட்மென்ட் குடுக்கிறேன். ஸ்ட்ரெஸ்.. டென்ஷன் ஆகாம பாத்துக்கணும். தேவ இல்லாத பிரஷர் தான் இதுக்கு முதல் எனிமி. சாப்பாட்டுல கவனம் காட்டணும்.. உடற்பயிற்சி… மருந்து எல்லாத்துலயும் கவனமா இருந்தா போதும். ஒன்னும் ஆகாது மாமா.. பாத்துக்கலாம்.”, உண்மையோ பொய்யோ அவருக்கு தெரியவில்லை. ஆனால் அந்த வார்த்தைகள் தெம்பூட்டியது நிஜம்!
எப்படி எல்லாம் இருக்கவேண்டும்.. என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று விளக்கினான்.
“ரெண்டு வயசு பொண்ணுங்கள கரை சேக்கலையே..”, அங்கலாய்த்தவரிடம், “இப்போ உங்க உடம்ப மட்டும் பாப்போம் அத்த. பொண்ணுங்க பத்தி கவலை பட வேண்டாம். நகுக்கும் வினோக்கும் பண்ணும் போது எங்களுக்கும் முடிச்சா போதும். நாங்க எல்லாரும் நல்லா இருப்போம் அத்த.. நீங்க யாரையும்.. எதையும் நினைச்சு கவல படாதீங்க.”, என்று நூறு யானை பலத்தைக் கொடுத்தான் மருத்துவன்.
ஊருக்குத் திரும்பிய அன்றே வேலைக்குப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்தார் சௌந்தர்யா. தன்னையும் கவனித்துக் கொண்டு பிள்ளைகளோடு நேரம் செலவிட்டார்.
“நீங்க ரெஸ்ட் எடுங்கம்மா… இப்போவே நல்ல சம்பாளம். கண்டிப்பா ஆன் சைட் அனுப்பிடுவாங்க. ரெண்டே வருஷம் நல்லா சம்பரிச்சுடலாம். உங்க ஆச படி, மாடியில ரெண்டு ரூம் போடலாம். நீங்க நினைக்கிற மாதிரி நகுக்கு நல்லா செய்யலாம்மா..”, கண்களில் கனவோடு பேசிய மகளை ஆசை தீர பார்த்தார்.
அவள் கனவைக் கலைக்க என்றுமே நினைத்ததில்லை அந்த தாய்… மகள் நிம்மதியோடு நன்றாயிருக்க வேண்டுமே என்ற வேண்டுதல் மட்டுமே. நிம்மதியோடு நிறைவும் மகிழ்ச்சியும் அவள் நினைத்ததைச் சாதித்தால் மட்டுமே கிடைக்கும் என்று தோன்றவே அவள் ஆசைகளுக்கு தடைகள் போடவில்லை தாய்.
கல்லூரி படிப்பு முடியும் முன்னமே கணினி மையத்திலிருந்து சில தரமான நிறுவனங்களிடமிருந்து நேர்காணல் வர ஆரம்பித்திருந்தது. அது வரும் முன்னமே எபி அவளை ஒரு வழியாக்கி இருந்தான்.
‘இத படி.. அத படி’ என்று படிக்கத் திணித்ததோடு நிற்காமல், தினமும் அவர்கள் பேசும் நேரம் முழுவதும் அவளை நேர்காணலுக்குத் தயார் படுத்துவதும்.. அவளுக்குத் தெரியாததைச் சொல்லிக் கொடுக்க பயன்படுத்த.. பெண்ணிற்குத் தான் போதும் போதும் என்றாகி விட்டது.
அறிவாளியைக் காதலித்தால் இப்படி தானோ என்று தோன்றுமளவு எண்ணம் சென்றுவிட, “மனோ போதும் மனோ.. நான் என்ன குட்டி பாப்பாவா பாத்துபேன் மனோ. வேற ஏதாவது பேசுவோமே.. யாரோ ப்ரொஃபசர் கிட்ட பேசற ஃபீல் குடுக்குறீங்க.”, என்று வாய் திறக்கும் அளவிற்குச் சென்றது.
“பேசுவோம்.. நல்ல வேலையில உக்காரு அப்புறம் மணிக் கணக்கா பேசுவோம். இப்போ கவனம் இதுல மட்டும் இருக்கட்டும்.” என்று வாயடைத்தான்.
அவளும் படிப்பாளி தான். ஆனால் கண்டிப்பாக அவன் போல் இல்லை. படிப்பு என்று வந்துவிட்டால் ஏன் அவனிடம் இத்தனை தீவிரம்? புரியவில்லை. அவன் ஆர்வம் அவளுக்கு மூச்சு முட்டியது.
“எனக்கு எல்லாம் தெரியும். போதும் மனோ. லவ்வர் மாதிரி கூட வேண்டாம் ஒரு ஃப்ரெண்டு மாதிரியாது பேசுங்க மனோ..”, என்றதிற்கும், “வேலை கிடைக்கிறவரைக்கும் போதாது. லவ் எல்லாம் உள்ள இருக்கு. அதனால தான் உன்ன மட்டும் நினைச்சு சுத்திட்டு இருக்கேன். இப்போ நான் கேக்கறதுக்கு முதல்ல பதில் சொல்லு.”, என்று அவளை விட்டானில்லை. விளைவு.. முதலில் வந்த நிறுவனத்திலேயே வேலை கிடைக்கவும் செய்தது.
அலர்விழியை கையில் பிடிக்கமுடியவில்லை. அவ்வளவு பெரிய நிறுவனத்தில் அதுவும் நான்கு சுற்று கேள்வி கனைகளையும் அவ்வளவு எளிதில் மேற்கொள்ளமுடியும் என்று நினைத்துப் பார்த்தாளில்லை. அவளாகவே முயன்றிருந்தாலும் கிடைத்திருக்கும் ஆனாலும் பாராட்டியிருப்பார்களா என்பது சந்தேகம் தான்.
அவள் துள்ளலோடு, “லவ் யூ மனோ… ல்வ் யூ சோ மச். கிடைச்சிடுச்சு!”, என்று துள்ளிக் குதிக்காத குறையாகக் கூற, அவனோ, “இந்த கம்பனி வேண்டாம். அடுத்த இன்டர்வியூ இன்னும் மூனு நாள்ல இருக்கும். அதுக்கு ரெஸ்யூமே-வ(resume) ரெடி பண்ணு விழி.”, என்றான்.
முகம் சட்டென்று மாறியது. எத்தனை பெரிய நிறுவனம்? வேண்டாம் என்றால்.. எதற்கு இத்தனை பாடு? ஒரு நாள் கூட இனிப்பான பேச்சில்லை வாயைத் திறந்தாலே கணினி சம்பந்தப் பட்ட பேச்சு தான்! எல்லாம் இதற்கு தானா?
“ஏன் மனோ..?”, குரல் விழுந்துவிட்டது.
“அது வேண்டாம். கொஞ்சம் பெரிய கம்பனி தான்.. ஆனா அங்க போனா உனக்கு வளர்ச்சி கம்மி விழி.”
“அது முதல்லையே உங்களுக்கு தெரியாதா? அப்புறம் எதுக்கு என் பிராணனை எடுத்தீங்க?”, கோபம் துளிக்கக் கத்தினாள்.
“ட்ரெயினிங்ன்னு வக்சுக்கோயேன்.”, என்றான் எந்த அலட்டலும் இல்லாமல்.
அந்த பதிலுக்குக் கோபம் அதிகமேயனது. அதே பதிலும் கோபமும் அடுத்த நிறுவனத்திற்கும் நீண்டது.
எஸ்தர் கேட்டே விட்டார், “ஏன் மா என்ன எதிர்பாக்குற? ரெண்டுமே நல்ல கம்பனி டா. வேற ஏதாவது மைண்டுல வச்சிருக்கியா?”, என்று.
நியாயமான கேள்வி தான். பதில் என்னவென்று கூறுவது?
“எதுனாலும் உங்க மகன்ட்ட கேளுங்க”, என்றா?
