Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி.

28.1. காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி..!

வீட்டில் இரவு உணவை மறுத்த வானதி எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டிருக்க அதை கண்ட ராசாத்திக்கு தான் கவலையாக இருந்தது. எவ்வளவு கேட்டும் அமைதியாகவே இருக்கும் மகளிடம் மேலும் கேட்டு கஷ்டப்படுத்த விரும்பாது அவரும் அமைதியாகவே இருக்க, ஆரதி தான் பல வார்த்தைகளால் அவளுக்கு நம்பிக்கை ஊட்டிக் கொண்டிருந்தாள்.  சித்துவும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தானே தவிர அவள் அருகில் செல்ல மனம் வராமல் இருந்து விட்டான். வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு.. கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தாலும், சூழ்நிலை கருதி பார்வையாளராக மாறியிருந்தனர். வீட்டின் நிலையும், வேலையின் நிலையும் ஆரதியை பெரிதும் யோசனைக்கு உள்ளாகியிருந்தது. வெளி வேலையில் கவனம் செலுத்த முடிந்த அவளால் இன்னும் தன் அத்தையிடம் பேச முடியவில்லை. இந்த உறவில் விரிசல் விழுந்து விடுமோ என்ற என்ன மட்டும் விடாமல் அவளை தாக்க, அதே எண்ணத்தில் சுழன்றாலும் தன் மருமகளுக்கு மறைமுகமாக அனைத்தையும் செய்து கொண்டிருந்தார் மஹாலட்சுமி.



Advertisement

சண்முகத்திற்கு ஊரில் விவசாயம் நடப்பதால் இங்கு இருக்க முடியாத சூழ்நிலை. மனைவியிடம் மகளை பார்த்துக்க சொல்லி விட்டு புறப்பட்டார் தன் பூர்வீகத்தை நோக்கி.

Advertisement

இரவும் அடங்கி… பகலை வெற்றியடையச் செய்து ஒளியை பரப்பி இருக்க, கண்ணன் வருவதை  அறிந்து கொண்ட இருவரும் கண்ணனிடம் செல்ல வேண்டி தயாராகினர். உடன் வருவதாக அடம்பிடித்த வானதியை தவிர்க்க முடியாது கூடவே அழைத்துச் சென்றனர்.

Advertisement

நண்பகலுக்கு அலுவலகத்தில் நுழைந்து இருந்த அதிகாரிகள் மைக்கேலை அதே மயக்கத்தில் நிறுத்தி இருக்க, நேற்றைய முந்தைய இரவில் இருந்து உணவையும் தவிர்த்து வேலை பார்த்துக்கொண்டிருந்த அதிகாரிகளுக்கு சிறு ஓய்வு கொடுத்திருந்தான் கண்ணன். அவனுக்கும் அவ்வோய்வு அதிகமாக தேவைப்பட,  அதில் சிறிது மட்டும் எடுக்கத் துவங்கி இருந்தான்.

Advertisement

கண்ணனின் நிலை அறிந்து ஆரதிக்கு வருத்தம் இருந்தாலும் இது கடமை என்று உணர்ந்து, தன் அத்தையின் கைப்பக்குவத்தில் உணவு கொண்டு வந்திருந்தாள்.

மூவரும் கண்ணனின் அலுவலக அறைக்குள் நுழைய, சோர்வையும் தாண்டிய ஒரு புத்துணர்ச்சி அவன் முகத்தில். இத்தனை நாள் இருந்த தலைவலி இன்று குறைந்ததன் அறிகுறியில்.

“ஆழி..!” ஆரதியின் அழைப்பில் முகத்தில் புன்னகை பரவ, உற்சாகத்தோடு அழைக்க வந்தவன் அமைதியானான் வானதியின் வருகையை அறிந்து.

“அத்தை சாப்பாடு கொடுத்து விட்டாங்க.”

மறுப்பேதும் பேசாமல் அமைதியாக உண்ண ஆரம்பித்தவன், அருகில் இன்னொரு தட்டை வைத்து அதை வானதி புறம் நகர்த்தினான். சோகமான முகத்தோடு கலக்கத்தில் இருப்பவளை பார்த்ததும் அறிந்து கொண்டான் சாப்பிடாமல் இருப்பதை. பார்வையாலேயே ஆரதியை குற்றம் சாட்டியவன்,

“நடந்த எதையும் மாற்ற முடியாது. நடக்கப்போறத மட்டும் யோசி. இன்னும் ரிசல்ட் வரல. அப்படியே வந்தாலும்.. இந்த மாதிரி இருந்தா சரியாகாது. உங்களுக்கான நியாயத்தை நாங்க மூணு பேரும் தருவோம். இப்போ சாப்பிடு”

கண்ணனின் வார்த்தை, வார்த்தைக்கு சரியாக இருக்கும் . தங்கையின் உணர்விற்கு பொருந்தாதே. ஆதரவின்றி நிற்பதாய் அவள் மனம் ஆணித்தரமாக நம்ப, கண்ணனின் வார்த்தைக்காக கூட உணவில் கை வைக்கவில்லை.

“ப்ச்!! இதுவே வீடா இருந்திருந்தா இந்நேரம் உனக்கு ஊட்டி விட்டிருப்பேன் வானதி. இது என்னோட வேலைக்கான இடம். இங்க அந்த மாதிரி எதையும் என்னால பண்ண முடியாது. அடம் பிடிக்காம சாப்பிடு.”என்றவன் ஒரு வாய் உணவை அவளருகில் எடுத்துச் செல்ல, புருவம் நெறிய தன்னை முறைத்துப் பார்க்கும் ஆரதி கண்டவன்,

“அங்க பாரு உன்ன அக்கா… என்னை இப்படி முறைக்கிறான்னு. அப்புறம் எனக்கு டைவர்ஸ் குடுத்துட்டு வா…மா வானதி. மாமா வாழ்க்கையை காப்பாற்றி விடுமா…”

கண்ணனின் பேச்சில் சிறு சிரிப்பு தோன்ற, உணவை உண்ண ஆரம்பித்தாள் வானதி.

வானதி உண்பதை பார்த்தவன் கண்ணடித்து என் கண்மணியை சமாதானம் செய்தவாறு உண்ண ஆரம்பித்தான். இதை பார்த்திருந்த சித்து தான் , ‘இந்த நிலைமையிலும் இதுங்க ரொமன்ஸ் ஓடுது பாரு. எப்படித்தான் இப்படி ரவுண்ட் கட்டி பர்ஃபாமென்ஸ் பண்றாங்களோ!.’ என்றவன் வெளியில்,

“வானு! நான் எவ்வளவு நேரமா சாப்பிட சொன்னேன்… அப்போலாம் கேட்காம இவன் சொன்னதும் சாப்பிடுற.. போ நான் கோவமா போற..” என்றவனின் கழுத்தை பிடித்து ஆரதி,

“அது என்னடா வானு பேனு னு…. வாய ஒடச்சிடுவேன். அவ சின்ன பொண்ணு. ஏதாச்சும் வேலை பார்க்கணும் னு நினைச்ச கண்ணன் கையால பலி கொடுத்திடுவேன்.”ரகசியமான குரலில் மிரட்ட,

‘இப்ப நம்ம என்ன தப்பு பண்ணோம்.’ என்ற ஆராய்ச்சியில் இறங்கி இருந்தான் சித்து.

“டாக்டர் கிட்ட பேசிட்டேன் ரதி. இன்னும் கொஞ்சம் லேட் ஆகும் போல. அதுவரைக்கும் வீட்ல இருங்க. நான் சொன்னதும் ஹாஸ்பிடலுக்கு வரலாம். “

“இல்ல சார்!! நான் இங்கயே இருக்கேன். ரிசல்ட் என்னன்னு தெரியல வரைக்கும் நிம்மதியா இருக்க முடியல.”

“வானதி! எனக்கு இங்க சின்னதா ஒரு விசாரணை இருக்கு. அதை முடிச்சுட்டு தான் வரமுடியும். அதுவரைக்கும் இங்க இருக்குறது சரி வராது. என்றவன் ஆரதியிடம் திரும்பி,

“வானதியோட சர்டிபிகேட் எல்லாம் வந்துடுச்சுன்னு சொன்ன ல அதை எடுத்துட்டு போய் காலேஜ்ல கொடுத்துடு வாங்க.”

‘சரி’ என்பது போல் இருவரும் தலையசைக்க,

“சார் இந்த நிலைமைல எப்படி முடியும். எதுவா இருந்தாலும் ரிசல்ட் வரட்டும்.”

“ரிசல்ட் வந்ததுக்கு அப்புறம்… எது வேணா நடக்கலாம். இருக்க நேரத்தை உனக்கான நேரமா யூஸ் பண்ணிக்க.”

அவர்களை அனுப்பி வைத்தவன் ஓய்வெடுக்க சென்றிருந்த அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விசாரணைக்கு வர சொல்லி இருந்தான்.

இதற்கிடையில் அன்று விசாரிக்க அனுப்பியிருந்த தினேஷ் போன் செய்து,

“மேடம் நீங்க சொன்ன ஏரியாவுல விசாரிச்சுட்டேன். அது சந்திரன் இருந்த ஏரியா இல்ல. அனிதா சந்திரன் கூட தங்கியிருந்ததா எழுதி இருந்தாலே அந்த வீடு இருக்க ஏரியா. அங்க விசாரிச்சு பார்த்ததுல நீங்க சொன்ன பேர்ல ஒருத்தன் அடிக்கடி நண்பர்கள் வீட்டுக்கு வருவான்னு தகவல் வந்திருக்கு. அந்த வீடு எங்க இருக்குன்னு விசாரிச்சு கண்டுபிடிச்சிட்டேன். பேச்சிலர் பசங்க மூன்று பேர் மட்டும் தான் தங்கி இருக்காங்க. இப்போ வேலைக்கு போய் இருக்காங்கலாம் . எட்டு மணி போல தன் தினமும் வீட்டுக்கு வருவான்னுங்கலாம்‌.”

“சரிங்க சார் அவங்க வந்ததும்  நேரடியா விசாரிக்க வேணாம். தகவல் மட்டும் சொல்லுங்க நானும் வந்துடுறேன். சேர்ந்து விசாரிக்கலாம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!