Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

61 SK_UPEMM 61.2

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 61.2

போட்டிருந்த கடல் நீல கோட்டை கழட்டி ஓரம் வைத்தவன், “வெள்ள பேன்ட், ஷர்ட் போட்டிருக்கேன். ஆனா என்னால வானத்துல எல்லாம் பறக்க முடியாது பேபி” என்றான்.

அவன் பக்கமாக யசோ திரும்பினாள். ரசனையாகக் கௌதமனின் பார்வை மாறியது. முத்துகளால் அலங்கரைபட்டிருந்த கூந்தல் அவனுக்கும் பழைய கனவுகளைக் கிளறிவிட்டிருக்க, “என் வனதேவத டி நீ” என்றான். யசோவின் கண்கள் ஏகத்திற்கும் விரிந்தன.

“உன்ன திருச்சில பார்த்து பழகறதுக்கு முன்னமே… எனக்குள்ள உன்ன நான் உணர்ந்திருக்கேன்னு சொன்னா நீ நம்புவியா பேபி?” எனக் கேட்டவனை விக்கித்து பார்த்தாள்.



Advertisement

“நித்தம் கனவுல வருவ. வனதேவதை மாதிரி சுருள் சுருளா முடி தொங்கும், அதுல நட்சத்திரமா மரமல்லி இருக்கும். வனம், நீ நான் மட்டும் தான் யசோ. உன்ன ஆத்மார்த்தமா எனக்குள்ள உணர்ந்திருக்கேன் யசோ. அப்போ அது வெறும் கனவுன்னு நினைச்சேன். என் கனவு காதலி நீ தான்னு திருச்சிக்கு வந்த சில மாசத்துல தெரிஞ்சுகிட்டேன் யசோ. அப்பவும் ஏன் நீ… எப்படி நீ எனக்குள்ள வந்தன்னு நான் யோசிக்கவே இல்ல. இப்போ ஏன்னு எனக்கு தெரியுது. மூளைக்கு உன்ன யார்ன்னு தெரியலனாலும், இந்த உடம்புல இருக்க ஒவ்வொரு அணுவும், என் இதயமும் உன்ன மறக்கவே இல்ல யசோ. உனக்கு இன்னுமா என்னை தெரியல?”

யசோவின் கண்களில் பல வருடங்களுக்குப் பின் நீர் திரையிட்டன.

“தீண்டாமை பாவச் செயல் பேபி… இன்னும் எத்தன நாளுக்குப் பாவம் செய்ய வைப்ப?” அவன் கேட்க, யசோவின் கண்களில் நீர் நிரம்பின.

Advertisement

யசோவின் முன் மண்டியிட்டவன், “ஐ லவ் யூ பேபி. கல்யாணம் பண்ணிக்கலாமா? இன்னும் பல பல நினைவுகள சேர்ந்தே உருவாக்குவோம். கௌதமனா நீ என்னை காதலிச்சாலும் சரி, உன் லகுவா நீ என்னைப் பார்த்தாலும் சரி… எனக்குச் சம்மதம் பேபி. எவ்வளவுக்கு எவ்வளவு நான் கௌதமனோ அதே அளவு நான் ரகு. ஒருதனோட பாதியும், ஒருத்தனோட மீதியுமா நிக்கிற ஒட்டுமொத்த நான் உன்ன மனசார காதலிக்கிறேன். முட்டியில மண்ணு குத்தி வலிக்குது… சொல்லு பேபி…” என மோதிரத்தை இவன் நீட்ட,

Advertisement

“அப்பா… என்ன பண்ணுலீங்க?” என ஓடிவந்த வாண்டு முட்டியின் மீது அமர்ந்தாள்.

“யசோ… என் முட்டி பாவம்” என அவன் முகத்தைப் பாவமாக வைக்க, “அம்மாக்கும் லிங்கா?” எனத் தகப்பன் முத்தை பார்த்தான். “ஆமா அம்மாவ இந்த ரிங்கோட சேர்த்து உன்னையும் என்னையும் கூடவே கூட்டிட்டு போக கேட்டுட்டு இருக்கேன்.” என்றான்.

“ஐய்… நானுக்கு நானுக்கு” என குழந்தை அப்பாவின் முட்டி மீது நின்று குதிக்க, கௌதமனின், “பேபி”யின் இரண்டு பேபிக்களும் அவனைப் பார்த்தனர்.

Advertisement

“மோதிரம் இருக்கட்டும்… முட்டிய காப்பாத்து” எனவும், குனிந்தவள் குழந்தையைத் தூக்கச் சென்றாள். எங்கிருந்தானோ தெரியாது, ஆத்விக் ஓடிவந்தான். “அத்தமா நானு” எனக் கரங்களைத் தூக்கிக் கொண்டு.

“பர்ஃபார்மன்ஸ் போதாது மச்சான். எங்க யசோக்கு டிமேன்ட் ஜாஸ்தி பார்த்த இல்ல?” என்ற ராஜீவன் ஆத்விக்கை தூக்கிக் கொண்டான்.

வான வேடிக்கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்ட கூட்டத்தின் பார்வை இவர்கள் மீது விழுந்தது.

ஒற்றை முட்டியில் மண்டியிட்டிருந்தவன் தொடையில் குழந்தை நின்று கொண்டிருக்க, அவன் நீட்டியிருந்த கரத்தில் ஒற்றை கல் மோதிரம் மினுமினுத்துக் கொண்டிருந்தது.

“தி கிரேட் கௌதமனையே முட்டி போட வச்சுட்டியே யசோ மா” என விக்ரம் சிரித்தான்.

ஏன் என்றே தெரியாது குழந்தையும் சிரித்தாள். அப்பா மகளின் சிரிப்பு யசோவை ஒட்டிக் கொண்டது.

“ஹேய்ய்ய்ய்” எனக் கூட்டம் குதூகலித்து கரகோஷம் எழுப்பியது.

யசோவின் கரம் பற்றி எழுந்தான். கௌதமனின் ஒற்றை கரத்தில் குழந்தை இருக்க, மற்றது யசோவின் விரல்களோடு பின்னிக் கொண்டிருந்தது.

கடல் அலைகள் இருவரின் பாதங்களையும் தழுவி சென்றன. கூட்டம் மீண்டுமாக ஆட்டம் பாட்டம் அரட்டை என இறங்கிவிட்டனர். இவர்களைப் பார்த்து நின்றிருந்த அரவிந்தன் அருகில் வாசுதேவன் வந்து நின்றார். அமைதியாக இருவரும் தம் மக்களை வாஞ்சையோடு பார்த்து நின்றிருந்தனர்.

“கண்ணை விட்டுப் போனாலும்

கருத்தை விட்டுப் போகவில்லை

மண்ணை விட்டுப் போனாலும்

உன்னை விட்டுப் போகவில்லை

இன்னொருத்தன் உடலென

இருப்பவனும் நானல்லவா

கண்ணெடுத்தும் பாராமல்

கலங்குவதும் வீணல்லவா…”

அவன் பாடிக் கொண்டே போக… யசோவின் கண்ணீர் அதன் அணையை உடைத்துக் கொண்டு வழிந்தது. கௌதமன் கரத்தை அழுந்த பிடித்தாள்.

“அன்ட்டில் த சைலன்ஸ், பேபி” என்றான்.

“டேய்… அப்பறம் ரொமான்ஸ் லுக் விடுவீங்களாம். இப்போ இங்க வாங்க டா… வானம் இந்த கலர்ல்ல இருக்கும் போதே குரூப் போட்டோ எடுத்துக்கலாம்” எனச் சத்தம் கொடுத்தான் விக்ரம்.

ஒவ்வொரு புகைப்படத்திற்கும் கைகள் மாறிக் கொண்டே இருந்தாள் யாழி.

“அடுத்த கல்யாண ஜோடி ஒண்ணா நில்லுங்க” என கேமிராவை கையில் எடுத்தான் ராஜீவன்.

“நானுக்கும்” என ஒடிவந்த குழந்தையை அள்ளி வாரிக் கொண்டாள் யசோ. இருவருக்கும் இடையே இருந்த குழந்தையை இருவருமே கொஞ்சி தீர்த்தனர்.

“அப்பா” என தன் குட்டி கையை விரிக்க, அதிலிருந்த மோதிரத்தை யசோ பார்த்தாள். கௌதமன் யசோவை பார்க்க, யசோவின் ஒற்றை கரத்தில் குழந்தை இருக்க, மற்றதை நீட்டினாள். யசோவின் கரம் பற்றி மோதிரத்தை அணிவித்தவன், “லவ் யூ பேபி” என்றான்.

“லவ் யூ அப்பா” என்றாள் யாழி.

“ஓய்… அந்த லவ் யூ எனக்கு” என்றாள் யசோ.

“மாட்டுனான் டா சேக்கரு” என விக்ரமை பார்த்து சிரித்தான் ராஜீவன்.

நடப்பதைப் பார்த்திருந்த தாக்ஷாயினிக்கு கௌதமன் என்ன கூறக் போகிறான் எனக் காதை தீட்டினாள். இதோ… இது தானே அவளும் கௌதமனிடம் கூறினாள். தான் அவனுக்கு முதன்மையாக இருக்க வேண்டும் என. இன்று என்ன நடக்குமோ என தாக்ஷாயினி பார்த்து நின்றாள்.

“ரெண்டு பேருக்கும் லவ் யூ” என்றான் கௌதமன் சிரித்துக் கொண்டே.

“இல்ல.. இப்போவே சொல்லுங்க, உங்களுக்கு நானா? இல்ல நம்ம பொண்ணு முக்கியமா?” என்று யசோ உதட்டைக் கடித்துச் சிரித்தாள்.

“பாவி” என முணுமுணுத்தவனை பார்த்த குழந்தை அம்மாவிடமிருந்து அப்பாவின் கைக்குள் பாய்ந்தாள். ‘ஏன் டி?’ என யசோவை பார்த்து அவன் வாயசைக்க, “சொல்லுங்க… நானா? யாழியா?” என நமட்டுச் சிரிப்பு சிரித்தாள். அம்மாவை பார்த்து முறைத்தாள் குழந்தை.

“அப்பாவோல உயிலு நானு” என நினைவுபடுத்தினாள் குழந்தை.

“அத உங்க அப்பா சொல்லட்டும்” என மகளைச் சீண்டினாள் யசோ.

‘ஏன்?’ என்பது போல் அவன் பார்க்க, “சொல்லுங்க… நானா? இல்ல உங்க பொண்ணா? யாரு உங்களுக்கு செல்லம்?” சிரித்தாள் யசோ.

“தெரிஞ்சுட்டே கேக்கிற பாரேன்” என அவனும் சிரித்தான்.

“பல்ல காட்டமா சொல்லுங்க கௌதமன்”

“ஆமா ஷொல்லுங்க அப்பா”

“எப்பவுமே என் பேபி தான் எனக்கு. அவளுக்கு அப்பறம் தான் மத்த எல்லாருமே” என்றவன் பார்வை யசோவை விழுங்க… மெல்லச் சிரித்த யசோ, மகளின் கன்னத்தில் முத்தமிட்டு, “உனக்கு நானா அப்பாவா?” எனக் கேட்டாள்.

“என் பொண்ணுக்கு நான் தான்” என்றான் கௌதமன்.

“கஷக்காதீங்க டூ பேலும்” என நெளிந்து இறங்கிய யாழி, “தாத்தா… சல்வேஷ்ட்ட என் புது டெஷ்ஷ காட்டணும். போன் போலுங்க” என ஓட்டம் பிடித்தாள்.

“கிரேட் எஸ்கேப் டா மச்சான்” ராஜீவனை பார்த்துச் சிரித்தான் கௌதமன்.

“பேபி பேபின்னு சொல்லியே வேலய முடிச்சுடுற நீ.” ராஜீவன் சிரித்தான்.

“பெரிய ஆள் டா நம்ம கௌதமன்னு பார்த்தா… உன் பொண்ணு உனக்கும் மேல இருக்கா டா” என கௌதனம் தோள் பற்றி இழுத்துச் சென்றான் விக்ரம்.

தாக்ஷாயினிக்கு புரியவே இல்லை. மகள் தான் முக்கியம் என அவன் கூறுகிறான். இவள் சிரிக்கிறாள். குழப்பத்தோடு நின்றிருந்தவள் தோள் அணைத்தான் தமையன்.

“எனக்குப் புரியவே இல்லண்ணா. இதே கேள்விய நான் கேட்டதுக்கு கோவிச்சுக்கிட்ட அதே கௌதமன் இன்னைக்கு சிரிக்கிறான்…”

“நீ அவன் அன்பு மேல சந்தேகப்பட்டுக் கேட்ட. அவளுக்குப் பதில் தெரிஞ்சும் கேட்டா. கௌதமனோட காதல் மேல அவளுக்குச் சந்தேகமும் இல்ல. அவ குழந்த மேல வச்சிருக்க அன்பு மேல அவனுக்கு சந்தேகம் இல்ல.” என்ற விளக்கம் தாக்ஷாவிற்கு புரிய நேரம் வரவில்லை போலும், தோள் குலுக்கி சென்றாள்.

மகள் பின்னல் ஓடிய யசோ, மகளை பின்னோடு தூக்கி கைகளில் பொதிந்துக் கொண்டாள்.

“சொல்லு… யாழி குட்டிக்கு அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா?” எனக் கன்னத்தில் மூக்கை உரசினாள்.

“அம்மா கூசுலீங்க அம்மா… ஆலிக்கு கூசுலுது” கெக்கபிக்க எனச் சிரிக்கும் மகளும், அவளைக் கொஞ்சிக் கொண்டே நடக்கும் யசோவையும் கௌதமன் பார்த்து நின்றான்.

“சொல்லு… அப்பா செல்லமா? அம்மா செல்லமா நீ?”

“பீஷ், அள நேணா அம்மா. ஆலி நாளைக்கு அப்பா ஷெல்லம். அப்பலம் டென் டைம்ஸ் தூணி எழுந்ததும் அம்மா செல்லம் செலியா?” என்றாள் பத்து விரல்களையும் விரித்து.

கேட்ட கௌதமன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான். “அவ என் இரத்தம் டி” என்றவன், ஒரு நாள் “யாழி, நம்ம ரத்தம்” என உண்மையைப் போட்டுடைத்தான். தன் மகள் எந்த சேதமும் இல்லாது கிடைத்தாளே என்ற மகிழ்ச்சியை தவிர வேறு எந்த மாறுபாட்டையும் மனைவியிடம் காணவில்லை கௌதமன். யாழி அன்றும் இன்றும் என்றும் யசோவின் அன்பு குழந்தை.

“சரி சரி, பத்து நாளுக்கு அப்பா செல்லமா இரு. பத்து நாள் முடிஞ்சதும் அம்மா செல்லம் தான?” யசோ கேட்க, “என் உயிரு” என மகளை தன் கைக்கு மாற்றியவன் மகளைத் தலை மீது தூக்கிச் சுற்றினான்.

“எஷ் அம்மா… நாளைக்கு அப்பா ஷெல்லம். அப்பலம் டென் டைம்ஸ் தூணி எழுந்ததும் அம்மா ஷெல்லம்” என்ற குழந்தையின் சத்தம் இடம் முழுவதிலும் எதிரொலித்தது.

பத்து வருடங்கள் சென்றபின்னும் யாழிடம் இன்னும் இதே கேள்வியை யோசோ கேட்கத்தான் செய்கிறாள். இன்னும் பதில் தான் மாறவில்லை.

தென்றல் வீசியது. மாடியில் பாய் விரித்துப் படுத்திருந்த கௌதமன் தலைக்கு யசோவின் மடி தலையணையாக இருந்தது. யசோவின் முதுகில் ஒய்யாரமாக ஒட்டிக் கொண்டு கழுத்தை சுற்றி கட்டிக் கொண்டு, ‘நான் அம்மா செல்லம்’ என நான்கு வயது வீரா நின்றிருந்தான்.

“ஆலி… பாது ஆலி. அம்மா பீ பீ ஊலுங்க” என்றவன் கரத்தில் குட்டி புல்லாங்குழல் இருந்தது.

அப்பாவின் வயிற்றில் தலை சாய்த்துப் படுத்திருந்த கௌதமனின் செல்லம் மகள், பாட்டியின் வசீகர குரலில் பாட ஆரம்பித்தாள். கண்களில் கண்ணீர் வழிய யசோ புல்லாங்குழல் வாசித்தாள்.

ஆசை முகம் மறந்து போச்சே -இதை

யாரிடம் சொல்வேனடி தோழி

நேசம் மறக்கவில்லை நெஞ்சம் – எனில்

நினைவு முகம் மறக்கலாமோ

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!