Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மாய பூ இவள் 3 (1)

இனியா அவளின் வேலையில் சேர்வதற்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது. அவள் சென்ற வாரமே சென்று அனைத்தையும் ஒழுங்கு படுத்த வேண்டும் என்று நினைத்து இருந்தாள்.ஆனால் அவள் தங்க போகும் வீடு இன்னும் காலி ஆகாததால் அவளின் பயணம் தாமதமாகி கொண்டே இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் அந்த வீட்டிற்கு சென்றாலும் கல்லூரி செல்லும் நாளில் அலைச்சல் உடனும் ஓய்வு இன்மையுடன் சென்று ஆக வேண்டிய சூழல் அவளிற்கு. கல்லூரியும் பிரதான சாலையில் இல்லாமல் சற்று உள் அடங்கி காட்டிற்குள் இருப்பது போல் இருக்கும். மூன்று மாதத்திற்கு முன்னரே ஒரு நாள் வந்து கல்லூரி வேலைகள் மற்றும் மற்ற ஏற்பாடுகளையும் செய்து விட்டு சென்று இருந்தாள். ஆனால் அப்போதே வீடு மட்டும் கிடைக்காததால் அவள் அப்பாவிடம் சொல்லி ஏற்பாடு செய்தாள்.ஆனால் அதுவும் இப்படி இழுபறியாக உள்ளது. அவளின் அம்மா அப்பாவிற்கு அவளை அனுப்ப மனமே இல்லையென்றாலும் ,எப்படியும் அவள் அவர்களின் பேச்சை கேட்டு கொள்ளமாட்டாள்என்று தெரிந்து சரி என்று விட்டார்கள். திங்கள் அன்று காலை ஏழு மணி போல் இனியா வீட்டிற்கு வந்துவிட்டாள் . சென்னையில் ஒரு மணிக்கு ஆரம்பித்த பயணம். இரவு நேரத்தில் யாருமற்ற சாலையில் இருளையும் பனியையும் அனுபவித்துக் கொண்டே ஒரு கார் பயணம் . இனியாவிற்கு மிக மிக பிடித்தமான ஒன்று. குழந்தைகளும் பார்வதி அம்மாளும் பின் சீட்டில் தூங்கி விட, இனியாவிற்கு இரவோடு ஒரு இனிமையான பயணம்.எங்கும் நிறுத்தவில்லை எந்த தடையும் இன்றி பூஞ்சோலை கிராமத்தை வந்து அடைந்தனர். ஆம் இனியா வேலை பார்க்கவிற்கும் கல்லூரிக்கு அருகில் இருக்கும் பெரிய ஊர் என்று பார்த்தால் அது பூஞ்சோலை கிராமம் தான். இனியா தான் இந்த ஊரில் வீடு பார்க்க சொன்னால் . ஏனென்றால் இங்கு தான் மருந்தகம் மற்றும் மளிகை கடைகள் இருந்தது. கார் ஊருக்குள் நுழையும் நேரத்தில் மக்கள் அனைவரும் தங்களின் வேலைகளுக்கு சென்று கொண்டு இருந்தனர். இனியாவுடன் வீட்டிற்கு தேவையான பொருட்களும் வந்து விட.சின்ன பொருட்களை தனியாக வைக்க சொல்லி விட்டு ,பெரிய பொருட்களை எல்லாம் அவர்களின் உதவியுடன் அதன் இடத்தில் வைத்து விட்டாள்.பிறகு அவர்களை அனுப்பி வைத்துவிட்டு ஒரு அறையை சுத்தம் செய்து அதில் குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு வருவதற்குள் பார்வதி இன்னொரு அறையை சுத்தம் செய்து இருந்தார். அவரை அந்த அறையில் ஓய்வு எடுக்க சொல்லி விட்டு. இவள் மதிய சமையலை முடித்தாள். மதிய உணவை முடித்து விட்டு பிறகு ஒரு குட்டி தூக்கம். இதே தான் அடுத்த நாளும் தொடர்ந்தது. புதன் காலையில் சற்று அலுப்பாக இருந்தாலும் முதல் நாள் வேலை என்ற உற்சாகத்துடனும் படபடப்புடனும் கிளம்பி கொண்டு இருந்தாள். அதனுடன் முதல் முறையாக குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு வேலைக்கு செல்கிறாள் என்பதால் தவிப்பாகவும் இருந்தால். அன்றைய நாளின் ஆரம்பமே அவளுக்கு கலவையான உணர்வுகளை அள்ளி தந்தது. அவள் நினைத்ததைவிட முதல் நாள் கல்லூரி மிகவும் நன்றாக சென்றது இனியாவிற்கு. கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் உள்ள சிவன் கோயில் செல்லலாம் என்று பிள்ளைகளை அழைத்து கொண்டு சென்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!