Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ … 32

நிலவு 32

“அண்ணா.. சந்தீப் ண்ணா என்னமோ சொல்றாங்க.. உண்மையா..?” என, 



Advertisement

சந்தோஷ ஆர்ப்பரிப்போடு உள்ளே வந்தனர் வெங்கடேஷ் சம்யுக்தா ஜோடி.

“இவன..” என நெற்றியை நீவி விட்டபடி, தனது லேப்டாபை திருப்பி அவர்கள் புறம் காட்ட, படித்து பார்த்தவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. 

Advertisement

Advertisement

“வாவ்.. சூப்பர் ண்ணா.. எவ்வளவு பெரிய ஆஃபர். 

இந்த ப்ராஜெக்ட் மட்டும் சக்சஸ் ஃபுல்லா முடுச்சா.. நம்ம கம்பெனி பெரிய லெவல்ல ரீச் ஆகிடும்..” என சந்தோஷமாக வெங்கடேஷ் சொல்ல,

Advertisement

“மாமா.. இந்த ப்ராஜெக்ட் முடிக்க, நம்ம சார்பா யாராவது ஒருத்தர் அங்கேயே ஸ்டே பண்ணற மாதிரி போட்டிருக்கே..! 

அப்படி போறதுன்னா..?” என யோசனை மிகுந்த குரலில் சம்யுக்தா கேட்க,

“யூ ஆர் ஸ்மார்ட் பேபி..” என்ற ரியான், 

“இது தான் இப்போ பிரச்சினை. 

இந்த ப்ராஜெக்ட் முடிக்கனுமுன்னா.. நா இல்ல வெங்கி ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் தான்‌ நம்ம கம்பெனி சார்பா போக முடியும்.

பிக்காஷ் சந்தீப்புக்கு இது சம்மந்தப்பட்ட நாலேஜ் கிடையாது. 

இப்போ கல்யாணத்துக்கு டேட் பிக்ஸ் பண்ணற நேரத்துல இது வேற..” என சொன்னவனை குழப்பத்தோடு பார்த்த இளையவர்கள்,

திருப்பி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர் யோசனையோடு.

‘ரியான்‌..’ என்ற ஒருவன் இல்லாமல்.. இருவருக்கும் திருமணம்‌ என்ற ஒன்றை நினைத்துப்பார்க்க கூட முடியாது. 

அதே நேரம் இன்னும் திருமண நாள் தள்ளி போவதா..? என்ற காதல் மனதின் ஏக்கமும் வாட்ட, என்ன சொல்வது.. என்பது புரியவில்லை அவர்களுக்கும்.

அப்போது அங்கு வந்த சந்தீப், “என்ன டிசைட் பண்ணியிருக்கீங்க..?” என்றிட,

ஒரு பெருமூச்சை இழுத்து விட்ட ரியான், “இந்த ஆஃபரை கேன்சல் பண்ணிடலாம். 

நெக்ஸ்ட் டைம் பார்த்துக்கலாம்..” என்றதும்,

சின்னவர்கள் இருவருக்கும் மிகுந்த அதிர்ச்சி. 

நிச்சயமாக இது அவர்களுக்காக மட்டுமே எடுக்கப்பட்ட முடிவு.. என்பது அவர்களுக்கு புரியாதா என்ன..?

அதனால், “அண்ணா.. வேண்டாம். அவசரப்பட்டு இப்படி ஒரு டெசிஷன் எடுத்துட்டு, நம்ம கம்பெனியோட வளர்ச்சிக்கு கிடச்சிருக்கற இந்த ஆஃபரை விட வேண்டாம்.

எங்க எங்கேஜ்மெண்ட் முடிவு செஞ்ச தேதில நடக்கட்டும். 

வெட்டிங் டேட் நீங்க வந்த அப்புறம் நம்ம டிசைட் பண்ணிக்கலாம்..” என்றான் வெங்கடேஷ் அவசரமாக.

சம்யுக்தாவும் அதையே சொல்ல, “பேபி, புரியாம பேசக்கூடாது. 

கம்பெனிக்கு இது போனா இன்னும் கூட வேற கிடைக்கலாம். 

பட், நம்ம லைஃப் சம்மந்தப்பட்ட விசயம் தான் பஸ்ட்..” என்றதும்,

“அதுக்காக இப்படி‌ ஒன்னை விட்டா, அது எங்களுக்கு கில்ட்டி ஃபீல் கொடுக்காதா..?” என வெங்கடேஷ் கேட்க,

“அதுக்கு தான் உங்களுக்கு விசயத்தை சொல்லாம.. இதை கேன்சல் பண்ண நினைச்சேன். 

அதுக்குள்ள இந்த சந்தீப் சொல்லிட்டான்..” என்று கடுப்பாக சந்தீப்பை ரியான் முறைக்க,

“மாமா, நா ஒண்ணு சொல்லவா..?” என்றாள் சம்யுக்தா தீர்மானித்துவிட்ட குரலில்.

‘என்ன..?’ என கேள்வியாய் பார்த்தவனிடம், 

“நீங்க இந்த ஆஃபரை ஏத்துக்கிட்டு.. நெக்ஸ்ட் என்னன்னு பாருங்க. 

எங்க வெட்டிங் இந்த ப்ராஜெக்ட் முடுஞ்சதும் வச்சுக்கலாம்.

வெங்கியும் நானும் வெயிட் பண்ண தயாரா இருக்கோம்..” என்று சொன்னவள் வெங்கடேஷை ஒரு பார்வை பார்க்க,

மெல்லிய புன்னகையோடு.. அவளுக்கு, ‘ஆம்..’ என தலையசைத்தவன்,

“சதா முடிவு தான் என்னோடதும். 

நீங்க மேற்கொண்டு ஆக வேண்டியதை பாருங்க..” என்று உறுதியாய் சொல்ல,

“இது நீங்க மட்டும் டிசைட் பண்ணற விசயமில்லை. 

உங்க வீட்டுல இருக்கறவங்க என்ன நினைப்பாங்க..?” என ரியான் கேட்க,

“அண்ணா.. எங்க ரெண்டு வீட்டுக்கும் நீங்க ரொம்ப முக்கியம். 

உங்கள விட்டு ஒரு பங்ஷன்னா.. அதுல யாருக்குமே விருப்பம் இருக்காது. 

அதனால அவங்களும் இதை தான் சொல்வாங்க..” என்ற வெங்கடேஷின் வார்த்தையை தான், அப்படியே உரைத்தனர் தனமும், மரகதமும்.

இதில் உண்மையான கவலை இனியாளுக்கே.. 

ரியானிடமிருந்து ஒரு பிரிவை அவளால் கற்பனையாய் கூட நினைத்து பார்க்க முடியவில்லை.

அந்த அளவுக்கு அவனை தேட வைத்திருந்தான் ரியான் இந்த இடைப்பட்ட மாதங்களில். 

உடல் அளவு தேடலாக இருந்தால் கூட சமாளிக்கலாம். 

ஆனால், ‘உள்ளத்தால் எங்கும்.. எதிலும்.. உன் துணை நான்.. என அவளுக்குள் நீக்கமற நிறைந்து நிற்பவனை எப்படி விட்டு இருப்பது..?’ என்ற எண்ணம் அவளை கலங்க வைத்தது.

அதை கண்ட சம்யுக்தா, “மாமா, நீங்க போயிட்டு வர்ற வரைக்கும் அக்கா, பசங்க எங்க கூட இருக்கட்டும்..” என்றாள் விசமம் வழியும் குரலில்.

“என்னது.. அம்முவ விட்டுட்டு போறதா..? 

நோ ச்சான்ஸ் பேபி. நாங்க ஹோல் ஃபேமிலியா தான் போறதுன்னா போவோம்..” என்று அவசரமாக சொன்னவனின் பாவனையில், 

இனியாள் இனிதாய் அதிர்ந்தாள் எனில் சம்யுக்தா வாய்விட்டு சிரித்துவிட்டாள்.

“என்ன அக்கா.. உன் கவலை போச்சா..? 

மாமாவ பத்தி இன்னுமா உனக்கு புரியல..?” என்றிட,

‘விட்டுட்டு போவேன்னா நினைச்சே..?’ என கண்டிப்பான பார்வை ரியான் பார்க்க,

‘அச்சோ.. சாரி..‌’ என இறைஞ்சுதல் பார்வை பார்த்தாள் அவன் மனையாள்.

‘இருக்கட்டும்.. உனக்கு இதுக்கு பனிஷ்மெண்ட் உண்டு..’ என பதிலுக்கு கண்ணால் உரைத்தவன், 

அதன்படி அழகான தண்டனையை அன்றைய தினமே அவளுக்கு கொடுத்துவிட்டே விலகினான்.

ஒருபுறம் நிச்சயதார்த்த வேலை, மற்றைய புறம் வேலை விசயம்.. என ரியான் பரபரப்பாக இருந்த போதும், 

அவனின் இளைப்பாறும் இடமாய் அவனின் அம்மு இருக்க, எங்கும் எதிலும் தோய்வு இன்றி நாட்கள் கடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!