Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ … 32.1

நிச்சயதார்த்த விழாவும் மிகச்சிறப்பாக ஆரம்பித்து நடந்து கொண்டிருக்க, 

ரியான், சந்தீப் இருவரும் மும்முரமாக மற்ற வேலைகளை பார்க்க, 



Advertisement

வெங்கடேஷின் உடன் பிறப்புக்களோடு ஐக்கியமாகிய இனியாள்.. சம்யுக்தாவின் அக்காவாக எல்லாவற்றையும் நிறைவாக செய்தாள்.

லக்ன பத்திரிக்கை வாசிக்கப்பட்டு, மோதிரம் மாற்றப்பட்டதும், இருவரையும் அமர வைத்து நலங்கிட அத்தனை நிறைவு பார்த்திருந்தவர்களுக்கு.

Advertisement

Advertisement

திருமணத்தேதி தள்ளி போனது குறித்த எந்த பேச்சும் இல்லாது.. சூழலை அப்படியே ஏற்று கொண்ட உறவுகள் எத்தனை பேருக்கு வாய்க்கும்..?! 

இதோ, அன்று தனக்கென யாரும் இல்லையா..? என மறுகி, தந்தையின் போட்டோவை கண்டு யாசித்தவனுக்காக.. இத்தனை முக்கியத்துவம் கொடுக்கும் சொந்தங்கள்.. எல்லாம் யாரால்..? 

Advertisement

‘சம்யுக்தா..’ என்ற பெண்ணை அவன் கண்ட நாள் முதல்.. அவன் காணும் அதிசயத்தில் இதுவும் ஒன்று தானே..!!! 

இப்போது அவளின் ஒரு விழா.. அத்தனை ஆனந்தம் அவனுக்கு.

அந்த ஆனந்த தருணத்தை ரசித்து பார்த்திருந்தவனின் அருகே பாந்தமாய் அவன் மனையாள்.

உலகத்தில் மகிழ்ச்சியான மனிதனாய் தன்னை உணர்ந்து புன்னகையோடு நின்றிருந்தவன்.. தன் மேல் சாய்ந்து சரிந்தவளை அவசரமாய் தாங்கிக்கொண்டான் தன்னிச்சையாக.

அதன் பிறகே அது தன் உயிரானவள் என உணர்ந்து, “அம்மூ..! என்னடா..? என்னாச்சு..?” என அவன் பதற,

அவர்களுக்கு அருகே இருந்த மலர்விழி அவசரமாய் தண்ணீரை எடுத்து இனியாளின் முகத்தில் அடிக்க, லேசான முனங்கலோடு விழி திறந்தாள் அமிழ்தினியாள்.

அப்போது தான் போன உயிரே திரும்பி வந்தது போலானது ரியானுக்கு. 

“அம்மு.. ஆர் யூ ஓகே.?. ஏன் திடீர்ன்னு..” என கேட்டபடி, 

அவளை கை தாங்கலாக அழைத்து வந்து அங்கிருந்த சேரில் அமர வைக்க, 

“ஒண்ணுமில்லைங்க. சடனா என்னன்னு தெரியல.. கண்ணு ப்ளாக்கவுண்ட் ஆகிடுச்சு..” என்று சொல்ல,

“எதுக்கும் நம்ம ஹாஸ்பிடல் போகலாம் வா..” என ரியான் படபடக்க,

“அச்சோ.. நா இப்ப ஓகே தான். 

சாப்பிடாம இருந்ததால கூட இப்படி இருக்கும்..” என்றதும்,

“அப்போ வா.. சாப்பிட போலாம்..” என அவளின் கையை பிடிக்க,

“பங்ஷன் ஆரம்பிச்சு.. இப்ப தான் எல்லாரும் நலங்கு வைக்கறாங்க. 

பொண்ணு வீட்டுக்காரங்க நம்ம முன்னாடி போய் சாப்பிட உட்கார்ந்தா நல்லாவா இருக்கும். 

அதும் இல்லாம அங்கே பாருங்க.. சித்தா கூட இருக்கேன்னு உங்க வாண்டுங்க ரெண்டும் ஸ்டேஜ்ல போய் இருக்கு. 

அவங்க சாப்பிட வேணாமா..?” என காரணங்களை இனியாள் அடுக்க,

“அவங்க யாரும் சாப்பிடாம மயங்கல.. சரியா..?” என்று கோபமாக ரியான் சொல்லும் போதே,

“சின்னத்தான் அந்த பக்கம் இருக்கற ரூம்ல சாப்பாடு எடுத்து கொண்டு போய் வச்சிட்டேன். 

நீங்க இனியாவ கூட்டிட்டு போய் சாப்பிட வைங்க..” என மலர் வந்து சொல்ல,

விழியால் நன்றி உரைத்தவன், “சாக்கு சொல்லாம எழுந்து வா..” என மிரட்டி, அங்கிருந்து அழைத்து சென்றான் மலர் சொன்ன அறைக்கு.

இந்த விசயம் எல்லாம் வந்தவர்களை வரவேற்க என நின்றிருந்த இடத்தில் நடக்க யாரின் கருத்திலும் படாமல் போனது.

மலர் சொன்ன அறைக்கு வந்து, அவளை அமர வைத்தவன், கை கழுவி வந்து தானே உணவை ஊட்ட வர, 

“நானே சாப்பிடறேன். யாராவது வந்து பார்த்தா..” என சங்கடத்தோடு இனியாள் சொல்ல, 

“என் பொண்டாட்டி.. நான் ஊட்டறேன்னு சொல்லிக்கறேன். 

மரியாதையா வாய திற. ஒரு வாரம் வேலைன்னு நீ சாப்பிடறத நா கவனிக்கல. 

என்ன பண்ணி வச்சிருக்க உடம்பை..?” என திட்டிக்கொண்டே உணவை தர,

நான்கு வாய் உண்டவள் அவசரமாக வாயை பொத்திக்கொண்டு.. அங்கிருந்த பாத்ரூமுக்கு சென்று.. உண்ட உணவோடு, குடலும் வெளிவரும் வண்ணம் வாந்தி எடுக்க, பதறி போய் அவளை தாங்கிக்கொண்டவனுக்கு மேனியெல்லாம் நடுக்கம் கொண்டது.

“ஏய்..! என்னடீ பண்ணுது..? 

வா நம்ம ஹாஸ்பிடல் போயிடலாம். எனக்கு பயமா இருக்கு..” என அவள் வாந்தி எடுக்கும் போதே பதட்டத்தோடு சொன்னவன்,

அவள் முடித்ததும் முகத்தை கழுவி அறைக்கு அழைத்து வந்து அமர்த்திவிட்டு,

“நீ இப்படியே இரு. நா போய் பசங்கள கூட்டிட்டு வந்திடுறேன். 

ஹாஸ்பிடல் போயிடலாம்..” என அவன் வெளியேற போக தனத்தோடு உள்ளே வந்தாள் மலர்விழி.

அங்கு வாடிய மலராய் இருந்த இனியாளை கண்டு, இருவரும் பதட்டத்தோடு, ‘என்ன நடந்தது..?’ என கேட்க, 

விசயத்தை ரியான் சொன்னதும் கண்களில் மின்னல் பரவ இனியாளிடம் சென்றவர்கள்,

“இனியா.. டேட் தள்ளி போயிருக்கா..?” என ஆவலாக விசாரிக்க,

அதுவரை அது பற்றிய சிந்தனையே இல்லாது இருந்த இனியாளுக்குள்ளும்.. இனிதான பரபரப்பு தொற்றிக்கொள்ள, கணக்கிட்டு பார்த்தவள், சந்தோஷத்தோடு, ‘ஆம்..’ என கண்ணில் நீரோடு தலையசைத்தாள்.

நடப்பது எதுவும் புரியாமல் குழப்பத்தோடு பார்த்திருந்த ரியான், 

“அவளை ஹாஸ்டல் கூட்டிட்டு போலாமுன்னா.. நீங்க என்ன வெட்டியா.. நாள், தேதின்னு பேசிட்டு இருக்கீங்க..?” என கடுப்போடு பேச,

“சின்னத்தான்.. உங்க வீட்டுக்கு இன்னும் ஒரு ஆள் வர்றாங்களோன்னு.. டவுட்ல பேசிட்டு இருக்கோம்..” என மலர் சந்தோஷமாக சொல்ல,

“யார் வர்றதா இருந்தாலும்.. நாளைக்கு வரச்சொல்லும்மா.. இப்போ நாங்க கிளம்பறோம்..” என்றான் அப்போதும் விசயத்தை உணராதவனாய்.

இனியாளுக்கே ரியானின் பேச்சில் சிரிப்பு வந்திட சிரித்தவளை கண்டு கடுப்பானவன், 

“உடம்பை நல்லா கெடுத்து வச்சிட்டு, என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு..?” என அவன் எகிற,

நமுட்டு சிரிப்போடு தனமும் மலரும், “நீயே.. புரிய வை உன் புருஷனுக்கு..” என ஜாடை காட்டிவிட்டு வெளியேற,

இனியாளை நெருங்கி வந்தவனின் கை பற்றி தன் முன் நிறுத்தி அவன் விழி பார்த்தவள்,

“நா உடம்பை கெடுத்துக்கல.. நீங்க கெடுத்ததால.. வந்த வினை தான் இது..” என்ற இனியாளை முறைத்தவன்,

“நா.. எங்கே கெடுத்தே..‌” என ஆரம்பித்தவனுக்கு சட்டென மண்டையில் பல்ப் எரிய, 

“அது.. நீ சொல்ற அது.. அதா..?” என்றான் இன்னும் தெளிவாக்க வேண்டி.

“ம்ம்..” என முனங்கலாக அவள் சொல்லி தலையாட்ட, 

அவன் விழிகளில் லேசான கண்ணீர் படலம் உண்டாக அவள் முன் அப்படியே தளர்ந்து மண்டியிட்டவன்,

“அப்போ.. நம்ம மறுபடியும் பேரண்ட் ஆக போறோமா..?” என்றான் உணர்ச்சிவசத்தோடு.

அதற்கும், “ம்ம்..” என்ற முனங்கலே பதிலாக..

“வீ ஆர் ப்ரக்ணட்..” என்றான் அவளின் நெற்றியோடு தன் நெற்றி முட்டி.

அதற்கும், “ம்ம்..” என்ற பதிலே.

ஆனால் இருவரின் விழியிலும் வழிந்த கண்ணீர் துளி.. ஒன்றாக கலந்து.. இருவரின் இணைந்திருந்த கையில் தெரிக்க, 

ஆனந்தத்தின் எல்லையில் இருந்த போதும்.. பழைய நினைவுகளும் வந்து தான் போனது அவர்களுக்குள்.

அந்த தனிமை நாட்களை எண்ணி இனியாள் தவிக்க, 

அப்படிபட்ட தருணத்தை உணரக்கூட இல்லை என்ற தவிப்பு ரியானுள்.

விசயத்தை கேள்விப்பட்ட சந்தீப் அவசரமாய் அங்கு வந்து சாத்தியிருந்த கதவை நாசுக்காய் தட்டினான்.

அதில் மோனநிலை கலைந்து இனியாளை விட்டு விலகி தன் கண்ணை துடைத்து கொண்டு.. கதவை திறந்தவனை அன்போடு அணைத்துக்கொண்டான் அந்த உடன் பிறவா சகோதரன்.

ரியான் எந்த அளவு அந்த விசயத்தில் உணர்ச்சி வசப்பட்டானோ.. அதற்கு சற்றும் குறைந்தது இல்லை சந்தீப்பின் நிலையும்..!

‘அனுபவித்து.. அறியாதவனை விட, அதை உணர்வு பூர்வமாக உணர்ந்தவனுக்கு.. மற்றவனின் தவிப்பு என்னவென்பதை சொல்லி தான் தெரிய வேண்டுமா..?’ 

அப்போது கிடைக்காத பாக்கியம், இப்போது தன் உடன்பிறவா சகோதரனுக்கு வாய்க்கும் போது, அவனுள் அந்த ஆர்ப்பரிப்பு எழாமல் போகுமா..!!!

“வாழ்த்துக்கள் இனியா..” என மனமார அமிழ்தினியாளிடமும் அவன் சொல்ல, 

“தேங்க்ஸ் பெரியத்தான்..” என்ற இனியாளிடமிருந்து விழியை திருப்ப முடியவில்லை ரியானுக்கு.

முகம் மொத்தமும் சோர்ந்து கிடந்த போதும் தாய்மை உணர்வு தந்த ஆனந்தம்.. அத்தனை அழகாய் மாற்றியிருந்தது அவளின் வதனத்தை.

அவர்களின் அந்நிலையை கலக்க விரும்பாது, “ரியான், நீ இனியா கூட இங்கே இரு..” என்று விட்டு சந்தீப் வெளியேற போக,

இன்றைய நாளின் முக்கியத்துவம் உணர்ந்தவனாய் தனத்தை அழைத்து இனியாளுக்கு துணையாய் இருக்க வைத்துவிட்டு, 

இன்னும் அதீத சந்தோஷத்தோடு விழாவில் அனைத்தையும் செய்யச்சென்றான்.

வேலையோடு வேலையாக.. மறுநாள் செல்வதற்காக நகரத்தின் மிகவும் பிரபலமான மகப்பேறு மருத்துவரிடம் அப்பாயிண்மெண்ட் பெறவும் தவறவில்லை. 

நிச்சயதார்த்த விழா முடிந்து அனைவரும் போட்டோ எடுக்கும் போது மட்டும் இனியாளை அழைத்து வந்து எடுத்து விட்டு, 

ரியான் மீண்டும் அறைக்கே அனுப்பி வைக்க.. கேள்வியாய் பார்த்த ஜோடிக்கு அப்புறம் சொல்வதாய் விழியால் பதில் சொல்லி சென்றுவிட்டான் வேகமாய்.

குழப்பத்தோடு பார்த்தாலும், ரியான் இனியாள் முகத்தில் இருந்த மலர்ச்சி.. தவறாக எதுவும் இல்லை என்பதை உணர்த்த, அவர்களுக்கான தருணத்தை ரசிக்க ஆரம்பித்தனர் இளம் ஜோடிகள்.

எல்லாம் முடிந்து வெளி ஆட்கள் அனைவரும் சென்ற பின்.. இரு வீட்டை சேர்ந்தவர்கள் மட்டும் மீதமிருக்க அந்த நேரத்தில் விசயம் சொல்லப்பட,

நிச்சயதார்த்த விழாவால் வந்த சந்தோஷத்தை தாண்டிய குதூகலம் அந்த இடத்தில்.

அத்தனை பேருக்கும் அவர்கள் கடந்து வந்த பாதை தெரியுமே..! 

இந்த தருணத்தை அவர்களை போல.. இங்கிருப்பவர்களும் எதிர்பார்த்து இருந்தது உண்மை தானே..?! 

அந்த மகிழ்ச்சிக்கும் ஆப்பு வைப்பது.. போலான விசயம்.. ஒன்று மறுநாள் மருத்தவமனையில் அவர்களுக்கு காத்திருந்ததே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!