Skip to content
Post Views: 2,013
15(1)
“அக்கா” சுப்ரியா அழைக்க, “கதவை தாழிட்டு வா” என்று வெறுமையுடன் அக்சரா சொல்ல, கதவை தாழிட்டு அவளருகே வந்து அமர்ந்தாள்.
Advertisement
“சுபா” அக்சரா கண்ணீர் பொலபொலவென வந்தது.
என்ன? எழுந்து அவளை நெருங்கினாள் சுப்ரியா..
Advertisement
Advertisement
கையை வேகமாக அக்சரா இழுக்க, அக்கா கையை அசைக்காத.. வலிக்கும்..டாக்டர் சொன்னாங்க..
சுப்ரியா இடையில் அணைத்து, சுபா மாமாவும் என்னை ரிஜெக்ட் செய்துட்டார்.
Advertisement
“நான் அழகா இல்லையா? நான் நல்லவள் இல்லையா? எனக்கு செழியன் மாமாவை பிடிச்சி போச்சு. சுதர், ஜான்..ஜஸ்ட் தான். ஆனால் மாமாவை என்னால மறக்க முடியாது. நான் இப்ப என்ன செய்றது? மத்தவங்க ரிஜெக்ட் செய்யும் போது கஷ்டமாக மட்டும் தான் இருக்கும். மாமா என்னோட கையை எடுத்து விட்டு போகும் போது என்னை விட்டு எல்லாமே போனது போல் இருக்கு” அழுதாள்.
சுப்ரியா பெருமூச்சுடன், “அக்கா இப்ப எதுக்கு லவ்வ சொன்ன?”
“எனக்கு அவர் பக்கத்துல இருக்கணும் போல இருந்தது. அதான் சொல்லீட்டேன். ஆனால் அவர் போயிட்டார்” மேலும் அழுதாள்.
அக்கா, மாமா உன் கையை மட்டும் தான் விட்டார். எதுக்கு நீ கிவ் அப் பண்ற? அதே போல நீ தான எல்லார் பின்னாடியும் போற. மாமாவை உன் பின்னே வர வைக்க பாரு..
அதெப்படி முடியும்?
ஹம்..அதான் வைசு அக்கா, தீரன் மாமாவை சேர்த்து வைக்கும் முயற்சிக்கு உதவி கேள்..
நீயும் வருவேல்ல?
நான் தனியா ட்ரை பண்றேன்..
தனியாவா?
பாரு..என்னோட ப்ளே வேற மாதிரி இருக்கும். நீ முதல்ல படுத்துக்கோ. மாமா, அக்கா, அத்தை எல்லாரும் வெளிய இருக்காங்க. தெரிந்தால் மாமாவை தான் திட்டுவாங்க. உனக்கு ஓ.கே வா?
நோ…நோ..அப்படியே தீரன் மாமாவிடம் ,செழியன் மாமாவுக்கு முதுகுல அடிபட்டிருக்குன்னு சொல்லிடு. மாமா மருந்து போடாம வாஷ் மட்டும் பண்ணீட்டு வந்திருக்காங்க.
“ஹம்ம்..நடத்து நடத்து…நான் சொல்றேன்” சுப்ரியா வெளியே வந்தாள்.
மாறன் அவளை பார்க்க, “மாமா..செழியன் மாமாவுக்கு முதுகுல அடிபட்டிருக்காம். அவர் யாரிடமும் சொல்லலையாம். மருந்து போடலையாம். அவ வேற எழுந்திருக்க முடியாமல் இருக்காலாம். அதனால நீங்க பார்ப்பீங்களாம்” சொல்லி விட்டு நல்ல பிள்ளை போல் அமர்ந்தாள் சுப்ரியா.
குரு வாயை பிளந்து சுப்ரியாவை பார்த்து, “செழியனுக்கு உன்னோட அக்கா மருந்து போடப் போறாளா?” குரு வாயில் கை வைக்க, “ஆமா..இப்ப அதனால என்ன? உனக்கு எங்க அடிப்பட்டிருக்கு சொல்லு” நான் போட்டு விடவா?” சுப்ரியா கேட்க, “அடிப்பட்ட தையே சொல்லலை இவன்” இளந்திரையன் சீற்றமுடன் எழுந்தான்.
ஐய்யய்யோ மாமா! செழியன் மாமாவ அடிச்சிறாதீங்க. சரா வருத்தப்படுவாள்..
அம்மாடி, “நீ என்ன பேசுறன்னு புரிஞ்சு தான் பேசுறியா?” இளவேலன் கேட்டார்.
அங்கிள், அக்காவுக்கு மாமா மேல ஒரு கண்ணு. ஆனா மாமாவுக்கு..
அவனுக்கு..குரு கேட்க, வேலை வெட்டிய தவிர ஒன்னும் தெரியாது. அவர் “ப்யூஸ் லைட்” என்றாள். அனைவரும் புன்னகைத்தனர்.
“நல்ல வேலை இங்கே வைஷ்ணவி இருந்தால் சுப்ரியா காலி தான்” மாறன் மனதில் எண்ணிக் கொண்டான்.
மறுநாள் அக்சராவை காலையிலே வீட்டிற்கு அழைத்து வந்தனர். அவளுக்கு துணையாக வைஷ்ணவி பாப்பாவுடன் வீட்டில் இருக்க, அனைவர் முன்னும் கோவிலில் வைத்து இளவேலன் தன் ராதுவிற்கு மங்கலநாணை பூட்டி வீட்டிற்கு சத்யாவுடன் அழைத்து வந்தார்.
இளந்திரையன் வீட்டில் சத்யா இருப்பது அவனுக்கும் தீரனிடம் அடிக்கடி பேச ஏதுவாக அமைந்தது.
அன்றிரவு தன் அம்மாவுடன் சத்யா இளவேலன் அறைக்கு வந்தார். அவர் தன் குடும்ப நபர்களுடன் எடுத்த புகைப்படமும், அவரும் ராதிகாவும் முன் சேர்ந்து எடுத்த புகைப்படமும் இருந்தது. அவர் அறையை பார்த்து விட்டு அவன் வெளியேற, இளவேலன் வந்தார்.
ராதிகா எழுந்து நிற்க, கதவை அடைத்து விட்டு படாரென இளவேலன் ராதிகா காலில் விழுந்தார்.
ஐய்யோ! என்ன பண்றீங்க?
என்னை மன்னிச்சிரு ராது. நானும் கவனமா இருந்திருக்கணும்.
“எல்லாம் மறந்து நாம புது வாழ்க்கையை தொடங்கணும்” அவர் கூற, ராதிகாவை அமர வைத்து அவர் மடியில் தலை சாய்த்து படுத்தார் இளவேலன்.
“நீங்களும் ரொம்ப கஷ்டப்பட்டீங்கல்ல இளா?”
ம்ம்ம்! அவர் கண்ணை மூடிக் கொண்டார்.
இளந்திரையன் கூறியது போல ஊரை கண்காணிக்க எல்லா ஏற்பாடு செய்து பள்ளி, கல்லூரி தொடங்கியது. மாறனும் சுப்ரியாவும் பள்ளிக்கு சென்று வந்தனர்.
பிரச்சனையின் போது உதவ வராத தன் நண்பர்களை விட்டு விலகிக் கொண்டிருந்தான் மாறன். சுப்ரியா, வித்யாவின் தோழிகளுடன் சேர்ந்து கொண்டான் மகி. நன்றாக பேசினார்கள். பழகினார்கள். படித்தார்கள். தனியாகவே திரிந்த மாறன் மகியுடன் சுப்ரியாவை பார்க்கும் போதெல்லாம் சினம் கொண்டாளும் அவளின் புன்னகை அவன் கோபத்தை அகற்றியது.
அன்றொரு நாள் அதிகாலை வைசு அறையில் பாப்பா அழும் சத்தம் கேட்டு, ராதிகா வெளியே வந்தார். அவரிடம் வந்த சுப்ரியா, அத்தை நீங்க உங்க அறைக்கு போங்க. மாமா வரட்டும்..
அவர் புன்னகையுடன், “உன்னோட அக்கா தான் தீரனை முறைத்துக் கொண்டே திரியுறாளே! நீ கோர்த்து விட பாக்குறியா?”
“பாசிமணிகள் நூலில் மாட்டாமல் ஆட்டம் காட்ட தான் செய்யும். மாட்டினால் தான அணிய முடியும். அவள என்ன செய்றேன் பாருங்க” என்று இளந்திரையன் அறைக்கு வெளியேயிருந்து கதவை தட்டி விட்டு அறைக்குள் சென்று மறைந்து கொண்டாள் சுப்ரியா.
கதவை திறந்து வெளியே வந்த இளந்திரையன், “யாரது?” பார்க்க, நிகிதா சத்தம் கேட்டு, “சித்தி இன்னுமா எழவில்லை” கேட்டுக் கொண்டே வைஷ்ணவி அறைக்கு சென்று கதவை திறக்க, கதவும் திறக்கப்பட்டது.
இளந்திரையன் அறைக்குள் செல்ல, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாறன் அறைக்கதவை வெளியே இருந்து தாழிட்டான்.
“ஏய்..யாரு.. கதவை திறங்க” இளந்திரையன் சத்தம் கொடுக்க, மாறன் கையை இழுத்து சென்ற சுப்ரியா, “சோ ஸ்வீட். நான் செய்ய வேண்டியதை நீயே செஞ்சுட்ட” அவன் கன்னத்தை கிள்ளினாள். அவன் கண்ணிமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“மாறா” அவள் அவன் தோளில் கை வைக்க, மாறன் சுப்ரியாவை இழுத்து அணைத்துக் கொண்டான்.
அதிர்ந்து பின் அவனை நகர்த்தி பார்த்தாள்.
“ஐ அம் சாரி” சொல்லி விட்டு வேகமாக அறைக்கு ஓடினான். புன்னகையுடன் “மாறா மாமா, இப்ப நீ என்ன பண்ண?” அவளாக பேசிக் கொண்டே சிரித்தாள் சுப்ரியா.
அறைக்கதவை யாரும் திறக்காததால் இளந்திரையன் நிகிதா அழும் சத்தம் கேட்டவாறு வைஷ்ணவி அறைக்கு சென்று திகைத்து திரும்பிக் கொண்டான்.
பாப்பா அழுகிறால் என்பதால் அரை குறையான ப்ளவுஸ் பாவாடையுமாக பாப்பாவை தோளில் போட்டு சமாதானப்படுத்திக் கொண்டிருந்த வைஷ்ணவி இளந்திரையனை பார்த்து அதிர்ந்து பின் நகர்ந்தாள்.
“நீங்க…வெளிய போங்க” வைஷ்ணவி கூறிக் கொண்டே நிகிதாவை படுக்கையில் கிடத்தி குளியலறைக்குள் ஓடினாள்.
“என்னால வெளிய போக முடியாது. யாரோ கதவை பூட்டிட்டாங்க” என்று சொல்லிவாறு நிகிதாவிடம் வந்தான்.
வைஷ்ணவி அவளது புடவையை எடுக்க, அவள் மீது பல்லி விழுந்து விட்டது.
புடவையை கீழே போட்டு ஆஆஆஆஆ..கத்திக் கொண்டே வெளியே ஓடி வந்தாள். சத்தம் கேட்டு இளந்திரையனும் அவளை நோக்கி சென்றான்.
“சார்…பல்லி..பல்லி…மேல…விழுந்துருச்சு” குதித்துக் கொண்டே அவன் மீது தாவினாள்.
“சிட்டு ஒன்றுமில்லை” அவன் சொல்ல, பல்லி வெளியே வந்தது. அவ்வளவு தான் வைஷ்ணவி..மேலும் கத்தினாள் அவள் வாயை அடைத்தான். அவள் கண்கள் பல்லியை பார்க்க, அது தீரனை நோக்கி வந்தது.
தலையை ஆட்டிக் கொண்டே அவன் கையை தள்ளி விட்டு இறுக்கமாக கட்டிக் கொண்டாள். அவனுக்கு உள்ளம் துள்ளியது. தீரனின் இதயத்துடிப்பு அதிகமாக வைஷ்ணவிக்கு வெளியே கேட்க, அவனை பார்த்து தள்ளி விட்டு நகர, அவன் படுக்கையில் விழச் சென்றான். அவன் கையை பிடித்து அவனோட சேர்த்து கீழே விழுந்தாள் வைஷ்ணவி.
நிகிதா கிலுக்கியது.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, வைஷ்ணவி தலையில் கட்டியிருந்து துவாலை அவிழ்ந்தது. குப்பென சிகைக்காய் நறுமணம் வந்தது.
இளந்திரையன் கட்டுப்படுத்த முடியாமல் அவளது சிகையை ஆழ்ந்து முகர்ந்தான். அவளுக்கு கூச்சமான பின் தான் அவர்கள் இருக்கும் நிலையை பார்த்து, அவனிடமிருந்து நகர முற்பட்டாள். அவன் கை அவளது இடையை சுற்றி வளைத்திருந்தது.
“நான் எழணும்” வைஷ்ணவி அவன் கண்ணை பார்த்துக் கொண்டே சொன்னாள். இருவரின் இதழ்களும் உரச வரும் நேரம் நிகிதா நகர்ந்து நகர்ந்து படுக்கை முனையில் கீழே விழ சென்றாள்.
“நிக்கிம்மா” வைஷ்ணவி அழைக்க, தீரன் கவனம் நிகிதாவிடம் சென்றது. அவளை ஒரு முறை புரட்டி வந்து பாப்பாவை கீழே விழாமல் பிடித்தான். நிகிதா சிரித்துக் கொண்டு அவன் தாடியை பிடித்து இழுத்தது.
வைஷ்ணவியின் மீது இளந்திரையன் இருக்க, அவள் மனம் படபடத்தது. அவளது அடிவயிற்றில் வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறந்தன. அவளை பார்த்துக் கொண்டே பாப்பாவுடன் எழுந்தான் இளந்திரையன்.
வைஷ்ணவி வேகமாக எழுந்து குளியலறைக்கு சென்று, நெஞ்சில் கை வைத்து அமர்ந்து, “அவர் முன்னாடி நான் இப்படியா நிற்கணும்?” என்று சற்று முன் நடந்ததையும் எண்ணியவளுக்கு புது உலகில் சென்றது போல இருந்தது.
புடவையை அணிந்து கொண்டு வெளியே வந்தாள். நிகிதாவை கொஞ்சியவாறு இளந்திரையன் பேசிக் கொண்டிருந்தான்.
“கதவை லாக் பண்ணிக்கோ. இனி கதவை தட்டி விட்டு வாரேன்” அவன் வெளியேறினான். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அக்சரா செழியனை விட்டு விலகியே இருந்தாள்.
(ஒரு வாரம் கழிந்தது)
சுப்ரியாவின் சேட்டையால் வைஷ்ணவிக்கு இளந்திரையன் மீது பிரிய முடியாத காதல் உண்டானது.
அன்றும் அப்படி தான்..
மாலையே வீட்டிற்கு வந்த தீரனுக்கு தேனீரை கொடுக்க வைஷ்ணவி வந்த போது, ஸ்கேட் ஷூவுடன் சுற்றிக் கொண்டிருந்த சுப்ரியா வேண்டுமென்றே வைஷ்ணவியை இடித்து தள்ளினாள். தேனீர் கோப்பை கீழே விழுந்தது.
நேராக இளந்திரையன் மடியில் பொத்தென விழுந்தாள் வைஷ்ணவி .
“வாவ்..வாவ்..என்னவொரு கண்கொள்ளா காட்சி!” சொல்லிக் கொண்டே குரு வந்தான். வைஷ்ணவி அவனை முறைத்து விட்டு வேகமாக அறைக்கு ஓடினாள். இளந்திரையன் அவனை முறைத்தான்.
“சாரிடா மச்சான், என்னால தான தங்கச்சிம்மா ஓடிட்டா இல்லை ஒரு கிஸ்ஸாவது உனக்கு கிடைத்திருக்கும்” குரு சொல்ல, சோபாவில் இருந்த தலையணையை அவன் மீது விட்டெறிந்து ஓரப்புன்னகை புரிந்தான் இளந்திரையன்.
“சரிடா மச்சீ வெட்கமெல்லாம் போதும்” என்று அவன் முன் ஒரு கவரை வைத்தான்.
மச்சீ..இவன் தான் நாம தேடிக் கொண்டிருப்பவன்.. மகாதேவ்…
மகாராஷ்டிராவின் பெரிய பிசினஸ் மேன். ஆட்களை சென்னையில் தான் ஏற்பாடு செய்து நம்ம ஊருக்கு இரவே அனுப்பி இருக்கான்.
என் கண்ணுல எப்படி மாட்டாம போனானுக?
நீ தங்கச்சிம்மா கூட கனவுல இருந்துப்ப? கிடைத்த கேப்பில் கிடா வெட்டினான்
இளந்திரையன் அவனை முறைத்தான்.
இவன் நம்ம வைசுவை சென்னையில் வைத்து பார்த்திருக்கான். அவனுக்கு வைஷூவை அடையணும். பெரியதாக நல்லவனெல்லாம் இல்லை.
கவரை பிரித்து பார்த்தான் இளந்திரையன். மகாதேவ் பற்றிய அனைத்து விவரங்களும் இருந்தது.
கண்களில் மை தீட்டிய கருமை. முப்பது வயதையொத்தவனாக, உடல் திடகாத்திரமானதாகவும் நல்ல கலராகவும் இருந்தான்.
மச்சீ..நிறைய பொண்ணுங்க வாழ்க்கையை பாழாக்கி இருக்கான் இந்த பரதேசி. ஆனால் நம்ம ஊருக்குள்ள எப்படி அவன் ஆட்கள் நுழைஞ்சாங்கன்னு தான் புரியல. நம்ம ஊர்ல யாரும் இவனுக்கு உதவி இருப்பாங்கன்னு தோணுதுடா..
ம்ம்..பார்க்கலாம்.
அவன் சென்னையில தான் இப்ப இருக்கான்.
நல்லதா போச்சு. அவனை நம்ம ஊருக்குள்ள வர வைக்கணும்.
“எனக்கு என்னமோ சரியா படலைடா” குரு கூற, “என்ன மாமா டிஸ்கர்சன் டீப்பா போகுது போல?” அக்சரா அவர்களிடம் வந்தாள். கையிலிருந்த புகைப்படத்தை மறைத்தான் இளந்திரையன்.
மாமா, அக்காவை கரெக்ட் பண்ண நான் செய்யும் எல்லாமே ப்ளாப்பா போச்சு..
“அதான் சுபா சூப்பரா செய்றாலே!” குரு இளந்திரையனை பார்த்து சிரித்தான்.
நீ ஏதோ வேலை இருக்குன்னு சொன்ன?
போகணும் மாமா. டேய் சும்மா இருந்தா என்னை டிராப் பண்ணலாம்ல்ல? அக்சரா கேட்க, பண்ணிடலாமே! எங்க? குரு கேட்டான்.
காலேஜ். எனக்கு வேலை இருக்கு பிராஜெக்ட் குடுத்திருக்காங்க. லேப் போயிட்டு அப்படியே நம்ம ஊர் குட்டிப்பசங்கள அனலைஸ் பண்ணனும்.
ஓ.கே..வா போகலாம் இருவரும் கிளம்பினார்கள்.
மாலை பள்ளியில் வெகுநேரமாகியும் சுப்ரியா வராமல் இருந்தாள்.
ரம்யாவை பார்த்த மாறன், “ப்ரியா எங்க?” கேட்டான்.
அவ, மகி, விது மூவரையும் வகுப்பு முடிந்ததிலிருந்தே காணோம். கால் மணி நேரமாக நானும் பள்ளியை சுத்தி சுத்தி பார்த்துட்டேன்.
“காணுமா? சிந்தனையுடன் எங்கெல்லாம் பார்த்த?”
அவளும் கூறினாள். ரெஸ்ட் ரூம்ல கூட அவங்க இல்லை.
மாறன் பசங்க ரெஸ்ட் ரூம் சென்ற போது மஃக் கீழே விழும் சத்தம் கேட்டிருக்கும். அப்பொழுது அவனுக்கு ஏதும் தோன்றவில்லை.
காலையில் கலையசரன் மாறனை அழைத்து பேசும் போது ராதிகா அவர்களை கடந்து சென்றார். அவரை பற்றி அவதூறாக பேசியதுமில்லாமல் அவளது முந்தானையை பிடித்து இழுத்து பிரச்சனை செய்ய, மாறனுக்கும் கலைக்கும் கைக்கலப்பு ஏற்பட்டு அடித்துக் கொண்டனர்.
பின் கலையை பிரின்சிபல், பிரச்சனை செய்தால் பள்ளியை விட்டு நீக்கி விடுவதாக கூறி இருந்தார். மாறன் அதை எண்ணிக் கொண்டே பசங்க ரெஸ்ட் ரூம் உள்ளே சென்று பார்த்து..
“டேய்ய்ய்ய்ய்ய்… நாயே!” சீற்றமுடன் கத்தினான். அவனுடன் வந்து வெளியே நின்று கொண்டிருந்த ரம்யாவும் உள்ளே வந்தாள்.
விது..ஐய்யோ! சுபா…பதறி அருகே இருந்த துடைப்பத்தை எடுத்துக் கொண்டு பெண்களிடம் ஓடினாள் ரம்யா.
இருவரிடமும் கலையரசனின் நண்பர்கள் தவறாக நடந்து கொள்ள முயன்றனர். மகிக்கு இரத்த ஆறு ஓட, கலையரசன் அவனை பக்கெட்டால் அடித்துக் கொண்டிருந்தான். மகி சுயநினைவிலே இல்லை..
மாறனின் சத்தம் கேட்டு அவர்கள் அவனை பார்க்க, பெண்களுக்கு உதவ கலையரசனின் நண்பர்களை துடைப்பத்தால் அடித்தாள் ரம்யா.
கலையரசனும் மாறனும் சண்டை போட்டுக் கொண்டிருக்க, எதேச்சையாக வந்த ராஜ் இவர்களை பார்த்து, “என்னடா பண்றீங்க?” வெளியே வந்து சத்தம் கொடுத்து விட்டு, அவர் பெண்களுக்கு உதவினாள்.
சோர்ந்து எழுந்த சுப்ரியா மாறனை பார்க்க, அவன் வெறியுடன் கலையரசனை தாக்கிக் கொண்டிருந்தான்.
“சார்..மாறா..வேண்டாம் சொல்லுங்க” என்று கூற, பள்ளி காவலுக்காக இருந்த தனம், ஆசிரியர்கள், பிரின்சிபில் வந்தனர்.
ராதிகாவும் ஆசிரியைகளும் பதறி பெண்களிடம் வந்தனர்.
“மாறா” தனம் சத்தமிட்டு அவனை திருப்பினான். மாறன் சுப்ரியாவின் கோலம் கண்டு அவளிடம் ஓடி வந்தான். தனம் மகியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.
“மாமா” மாறன் தோளில் சுப்ரியா சாய, வித்யாவோ ஆசிரியை ஒருவர் மீது மயங்கி சரிந்தாள். ராஜ் தான் அவளை தூக்கிக் கொண்டு ஓடினார்.
“ப்ரியா” கண்ணீருடன் மாறன் அவளது கன்னத்தை தட்டினான்.
மாறா..அக்கா..
மாறா, “அவளை வெளியே அழைச்சிட்டு வா” என்று ராதிகா சுப்ரியாவிற்கு தண்ணீரை கொடுத்து விட்டு ஆட்டோவில் அவர்கள் வீட்டிற்கு கிளம்பினர்.
அதே நேரம் அகிலரசனை சத்யா சிறையிலிருந்து விடுவித்து அக்சராவை அழைத்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். இருவரின் பின் செழியனும் முறைப்புடன் வந்து கொண்டிருந்தான்..
“மாமா” குரலில் இருவர் பைக்கும் நின்றது. தமிழரசன் அந்த பக்கம் ரோட்டில் இருந்து கையை ஆட்டினான்.
“தமிழ்” சத்யா பைக்கை நிறுத்தி கீழிறங்க, தமிழரசனும் ரோட்டை கடக்க வந்தான். திடீரென வந்த லாரி ஒன்று தமிழரசனை தூக்கி அடித்தது.
“தமிழ்” கத்திக் கொண்டே சத்யா அவனை நோக்கி ஓடி வர, செழியன் அதை பார்த்து லாரியை பின் தொடர்ந்தான்.
சத்யாவும் அக்சராவும் தமிழரசனை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆட்கள் சிலர் இதை பார்த்து ஊரெங்கும் பரப்ப, வீட்டிற்கு சென்று கொண்டிருந்த அகிலரசன் காதில் விழுந்தது. அவன் சினமுடன் இளந்திரையன் வீட்டிற்கு சென்றான்.
இளந்திரையன் வீட்டிற்கு ஆட்டோவில் வந்த தன் தங்கையை பார்த்து பதறி, “என்னடி ஆச்சு?” வைஷ்ணவி கத்த, மாலை வீட்டிற்கு வந்த இளவேலனும் இளந்திரையனும் வெளியே ஓடி வந்தனர்.
சுப்ரியா முகத்தில் அங்கங்கு காயத்தில் மருந்திட்டு, மாறனுக்கும் மருந்திட்டு ராதிகா அழைத்து வருவதை பார்த்த ஆண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
“அங்கிள் வித்யாவை ஹாஸ்பிட்டலுக்கு ராஜ் சார் தூக்கிட்டு போயிருக்கார்” மாறன் சுந்தரத்திடம் ஓடிச் சென்று கூறினார். அவர் கண்ணீருடன் வெளியே ஓடினார்.
நடந்ததை ராதிகா கூற, “மாமா” கண்ணீருடன் சுப்ரியா இளந்திரையனை அணைத்தாள்.
இரத்தம் கொதித்தது இளந்திரையனுக்கு…
அக்சரா அலைபேசியில் வரவும் அதை எடுத்த இளந்திரையன், “தமிழையா?” அதிர்ந்தான்.
அவ்வீட்டின் அரண்மனை கேட்டை சீற்றமுடன் தள்ளியவாறு அகிலரசன் வந்தான்.
தீரா…என்னலேய் நான் அமைதியா இருக்கேன்னு ரொம்ப ஆடுறியா? சீறினான்.
“யாரு ஆடுறது? பாரு. உன்னோட தம்பியின் கேவலமான வேலையை..” இளவேலன் சத்தமிட்டார்.
எதுவும் தெரியாத மாதிரி நடிக்காதய்யா..
இதுக்காக என்னோட தம்பிய லாரி அடிச்சி தூக்கிருக்கீங்க. என்னோட கலையை தீரன் வெட்டியதால் தான் அவன் இதை செய்திருப்பான்..
தீரன் வெட்டினானா? ராதிகா சினமுடன், “உன்னோட தம்பிய ஒழுங்கா வளக்க துப்பில்ல. நீ பேசுறியா? உன்னை கைது செய்ததால் உன்னோட அழகு தம்பி என்னை கொல்ல என் வீட்டிற்கு வந்து எங்க தீரனையே கொல்ல பார்த்தான்..பாரு” என்று இளந்திரையனின் சட்டையை கிழித்தார் ராதிகா..
சித்தி…
தமிழை காப்பாற்றியது இந்த வீட்டு பையன் சத்யா தான்…
“தேவையில்லாமல் பேசாதீங்க” அகிலரசன் ராதிகாவிடம் சத்தமிட்டான்.
“யாருடா தேவையில்லாமல் பேசுறது?” இளவேலன் சினமுடன் கேட்டார்.
“எல்லா பிரச்சனைக்கும் காரணம் இந்த தீரன் தான். இவன் தான் என் அப்பாவை கொன்றான். நான் என் கண்ணால பார்த்தேன்” அகிலரசன் கத்தினான்.
இளந்திரையன் அசையாது இருந்தான்.
தீரன் கொன்னான்? நீ பார்த்த. அவன் உங்க அப்பாவை காப்பாற்ற எண்ணினான். ஆனால் உன்னோட தாத்தன் தான் உன் அப்பனை கொன்றான்.
பைத்தியம் போல அகிலரசன் சிரிக்க, வைஷ்ணவி இளந்திரையனின் கையை பற்றினாள்.
வைஷ்ணவியை பார்த்து விட்டு, “இந்த ஊரு சுடுகாடாக காரணமே உன்னோட தாத்தா பேரரசன் தான். அதை விட உன்னோட அம்மா, பாட்டி, சித்தி, தங்கை எல்லாரையும் கொன்னதும் அதே ஆளும் அவர் மகன்களும் தான்” சீறினான் இளந்தியரையன்.
அனைவரும் அவனை அதிர்ந்து பார்த்தனர்.
“காளையா?” வீடே அதிரும் வண்ணம் இளந்திரையன் சீற்றமுடன் கத்தினான்.
இதெல்லாம் நம்ப நான் என்ன பொடிபயலா? சீறினான் அகிலரசன்.
கைத்தடி வீட்டினுள் சத்தம் கேட்க, எல்லாரும் உள்ளே பார்த்து திகைத்தனர்.
இளந்திரையனின் தாத்தா இளங்காளையன் வீட்டின் உள்ளிருந்து வந்து கொண்டிருந்தார்.
error: Content is protected !!