Skip to content
Post Views: 6,781
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின்…. சுயம்வரமோ
Advertisement
கண்திறந்தால்…. சுகம் வருமோ
Advertisement
என்று எப்.எம் பாடிக்கொண்டிருக்க அதற்க்கு தக்க தானும் தாளமிட்டு பாடிக்கொண்டிருந்த தம்பியைப் பார்த்து “டேய் அதை ஆப் பன்னு” என்று இரைந்தான் யோககுமாரன்.
Advertisement
Advertisement
“ஏன்? ஏன்” என்று சண்டைக்கு நின்றான் ராஜகுமாரன்.
“உனக்கு இப்போ என்ன ஆனந்தம் பொங்குது” என்றான் கடுப்பாக அவன்.
“இப்போ எதுக்கு உனக்கு இவ்ளோ கோவம் நேத்து நான் கூடத்தான் என் சோக கதையைக் கேளு தாய்குலமேன்னு தனியா படுத்து உருண்டுகிட்டு இருந்தேன் யார்கிட்டயாவது கோபப்பட்டேனா இல்லன்னா சிடு சிடுன்னு விழுந்தேன்னா”.
“ஏன்… உனக்கு நான் நேத்து தனியா தூங்கினதாவது தெரியுமா நான் சொல்றவரைக்கும் உனக்குத் தெரியாதுதானே” என்றவன் அண்ணனின் அருகில் வந்து அமர்ந்து.
“இல்ல தெரியாமத்தான் கேக்குறேன் என்னைவிட மூத்தவன் தானே நீ கல்யாணவீடு… ஒண்ணுக்கு ரெண்டு கல்யாணம் நடந்த வீடு சொந்தபந்தம் சாப்பிட்டாங்களா எல்லாருக்கும் படுக்க இடம் இருக்கா ஏதாவது தேவை இருக்கா இப்படி ஏதாவது நீ பாத்தியா”.
“மத்த நாள்தான் அப்படின்னா அவ்ளோ சொந்தம் கூடி இருக்கு அப்போவும் அப்படியே நடந்துக்குற நீ மட்டும் சாப்பிட்டு ரூமுக்குள்ள போய்ட்டியே இங்க என்னல்லாம் நடந்துச்சுன்னு உனக்குத் தெரியுமா, காமாட்சி வீட்டில நான் படுக்கமாட்டேன்னு சின்ன அத்த பிரச்சனை, செல்வி வீட்டுக்கு நான் போகமாட்டேன்னு பெரியம்மா பிரச்சனை”.
“எல்லாரையும் அப்படி இப்படின்னு சொந்தகாரங்க வீட்டில படுக்க வெச்சுட்டு வந்தா நம்ம வீட்டு பெண்களுக்குச் சாப்பாடு இல்ல, செல்வம் அவங்க வீட்டில இருந்து மாவு எடுத்துட்டுவந்து தோசை ஊத்தி சாப்பிட்டாங்க”.
“அதோட முடிஞ்சுதா அக்கா மாமியார் என் ரூம்ல படுத்துகிட்டாங்க, இது எதுவுமே தெரியாம சுகவாசியா நீ இருந்துட்டு காலைலயும் பிரச்சனை பண்ற ஏன் டா இப்படி இருக்க, உன்னைப் பத்தி மட்டுமே எப்போவும் யோசிக்காத யோகன்”.
“உன்னைமாதிரியே சுத்தி இருக்கவங்களுக்கும் உணர்வுகள் இருக்கு, என்னை யாருமே புரிஞ்சுக்கல என் வலி யாருக்குமே புரியலன்னு சொல்றியே நீ மத்தவங்க வலியைப் புரிஞ்சுக்குறியா உன்னைச் சுத்தி இருக்குற சிலர் உனக்குக் குடுக்குற அதே வலியை எந்தத் தப்பும் செய்யாத சிலருக்கு நீ குடுக்குற யோசி” என்றவன் அமைதியாகப் படுத்துக்கொண்டான்.
இருவருக்குமே காலை வீட்டில் நடந்த வாக்குவாதம் மனதில் ஓடிக்கொண்டிருந்ததது.
காலை உணவெல்லாம் முடிந்ததும் பல உறவுகளும் சொல்லிக்கொண்டு புறப்பட்டுவிட்டனர், கறி விருந்து ஒரு வாரத்திற்கு பிறகு ஏதேனும் விடுமுறை நாளில் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்துகொண்டனர்.
அதே ஊரில் இருக்கும் நான்கைந்து பேர் மட்டும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க அப்பொழுதான் செல்லியம்மா அழைத்து மறு வீட்டு விருந்தைப் பற்றிப் பேசியிருந்தார்.
போனை வைத்த ராக்காயி மகன்களையும் கணவனையும் பார்த்து “சம்மந்தியம்மா விருந்துக்கு நாள் கேட்டாங்க அதான் திங்கக்கிழமை சொல்லியிருக்கேன் அன்னைக்கு ஒரு ராத்திரி மட்டும் தங்கிட்டு மறுநாள் வந்துடுங்க” என்றார்.
“என்ன ஒரு நாள் தானா” என்று செவ்வந்தியும் கனகமும் அதிர்ந்து பார்க்க “விருந்துக்கா அதெல்லாம் என்னால போக முடியாது” என்றான் யோகன் உடனே.
“போக முடியாதா? என்ன பேசுற பெரியவனே மறு வீடு விருந்துக்குப் பொண்ணும் மாப்பிள்ளையும் போகணும் அதுதான் முறை” என்றார் ராக்காயி.
“நான்தான் முடியாது சொல்றேன்ல நான் யார் வீட்டுலயும் போய்த் தங்கமாட்டேன்னு உங்களுக்குத் தெரியாதா அப்புறம் ஏன்” என்றான் இவன்.
‘என்ன இப்படி பேசுகிறான்’ என்று அவர் பார்த்திருக்க.
“என்ன பேசுற நீ அப்படி பாத்தா அவங்களுக்கும் இது எல்லாம் புதுசு தான நம்மள கல்யாணம் செஞ்சுக்கிட்டதால காலத்துக்கும் அவங்க நம்ம வீட்டில வந்த தங்கல ஒரு ரெண்டு நாள் உன்னால அங்க நிக்க முடியாதா” என்றான் ராஜா.
“என்ன ஏதோ இவங்க மட்டும்தான் இந்த உலகத்திலே இப்படி கல்யாணத்துக்கு அப்புறம் புருஷன் வீடு வந்திருக்க மாதிரி பேசுற, காலம் காலமா பொம்பளைங்க தாலி கட்டி புருஷன் வீடுதானே போறாங்க இது ஒன்னும் புதுசில்லையே அதோட உனக்குப் போகணும்னா போ என்னைக் கூப்பிடாத” என்றான்.
அவன் மண்டையில் நங்கு நங்கு என்று கொட்ட தோன்றியது கனகத்திற்கு.
“சரிப்பா… ஆனா இதையெல்லாம் நீ முன்னாடியே சொல்லியிருக்கணும்” என்றான் ராஜா அண்ணனிடம்.
“என்ன சொல்லணும் யார்கிட்ட சொல்லணும்” என்றான் அவன்.
“உனக்கும் எனக்கும் பொண்ணு குடுத்தாங்களே அவங்ககிட்ட, பொண்ணு பாக்க போனல்ல… உறுதி பண்னினதும் உன் கிட்ட சொல்லித்தானே செஞ்சாங்க”.
“அப்போவே இந்த மாதிரி சடங்கெல்லாம் எனக்குப் பிடிக்காது நான் விருந்துக்கெல்லாம் வரமாட்டேன் கல்யாணத்துக்கு அப்புறம் என்னய பாக்கணும்னா நீங்க என் வீட்டுக்குத்தான் வரணும்னு அப்போவே சொல்லியிருக்கலாம்ல அவங்களும் யோசிச்சிருப்பாங்க நம்ம வீட்டுக்குப் பொண்ணை குடுக்கறதா வேண்டாமான்னு” என்றான் கோபமாக.
கனகத்திற்கு அப்படியொரு கோபம் எங்கள் வீட்டிற்கு வருவதற்கு இவரிடம் கெஞ்சவேண்டுமோ எல்லோரும் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் என்று யோகனை முறைத்து பார்த்து நின்றிருந்தாள்.
“அவனைப்பத்தி உனக்குத் தெரியாதா அவனுக்கு அதெல்லாம் பிடிக்காது போகமாட்டேன்னு சொல்றவனை என்ன செய்ய” என்றார் ராக்காயி.
“என்னம்மா புரியாம பேசுறீங்க, அப்போ அவங்கவீட்டில என்ன சொல்லப் போறீங்க” என்றான் ராஜா
ராக்காயி மூத்த மகனைப் பார்க்க “உனக்குப் போகணும்னா நீ போ அவளுக்கும் வேணும்னா போகட்டும்” என்றான் செவ்வந்தியை பார்த்து அவள் விழிகள் நிறைந்து வழிந்தது.
“இந்தாடி இப்போ எதுக்கு மறுபடியும் ஆரம்பிக்கிற” என்ற ராக்காயி “பெரியவனே உனக்குத் தங்க பிடிக்கலைன்னா விருந்துக்கு மட்டும் போயிட்டு ராத்தங்களுக்கு வீட்டுக்கு வந்திட்டு மறுநாள் போய் உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வந்துடு” என்றார்.
யோககுமாரன் முகம் யோசனையைத் தத்தெடுக்க “ஏன் அத்த அப்போ நாங்களும் அப்படியே தான் தங்கணுமா” என்றாள் கனகம்
“என்ன புரியல” என்றார் அவர்.
“இல்லத்த மாமாவை ராத்தங்களுக்கு இங்க வந்துட சொன்னீங்களே அப்போ இனிமே நாங்களும் காலைல இங்க வேலை பாத்துட்டு ராத்திரி எங்க அம்மா வீட்டுக்குப் போயிடணுமா அத்த” என்றாள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.
அனைவருமே அவளைப் புரியாமல் பார்த்தனர் இவள் தெரிந்து பேசுகிறாளா இல்லை குற்றம் சொல்கிறாளா என்று.
“ஏய் புள்ள கனகம்” என்று செவ்வந்தி அவள் கையைப் பிடித்து அழுத்தினாள் பயத்தோடு.
“யாருடி இவ கூறு கெட்டவளே கல்யாணம் செஞ்சுவெக்குறது வீட்டு வேலை மட்டும் செய்யவா ஆளுதான் வளந்திருக்கு” என்றார் அவர்.
ராஜா யோசனையோடு மனைவியைப் பார்த்தான் ‘இவ அவ்ளோ பாவம்லாம் இல்லையே’ என்று.
அவளோ யோகனை எரித்துவிடுவதை போல முறைத்திருக்க “இவளை” என்று கோபம்கொண்டவன் அவளையே அழுத்தமாகப் பார்க்க மெல்ல விழிகளைத் திருப்பிக் கணவனைப் பார்த்தாள் அவள்.
“கண்ணை நோண்டிடுவேன்” என்று சைகை செய்தவன் தாயை கண் காண்பித்தான், ராக்காயி மட்டும் அவள் பார்வையை கவனித்திருந்தால் அவளை உரலில் போட்டு இடித்துப் பொரியல் வைத்திருப்பார்.
அவனையும் முறைத்தவள் கழுத்தை தடவிக்கொண்டே “சங்கிலி திருடன்… சொல்லவா” என்றாள்.
இதழில் மலர்ந்த புன்னகையை கடினப்பட்டு அடக்கிக்கொண்டவன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு அவளைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே “சொல்லுடி” என்றான் மெலிதான இதழசைப்பில்.
அதற்குள் கனகசபையின் குரல் அனைவரின் கவனத்தையும் அவர் பக்கம் திருப்பியது “இங்க பாரு பெரியவனே சும்மா எனக்குப் பிடிக்கல செய்ய்யமாட்டேன் அப்படின்னு பிடிவாதம் பிடிக்கக் கூடாது சடங்கு சம்ப்ரதாயமெல்லாம் வேலை இல்லாமலா சொல்லிவெச்சுட்டு போயிருக்காங்க”.
“நீ போகாம உன் தம்பி மட்டும் போக முடியாது அதுவும் ஊர் வாயிக்கு அவலாயிடும், உன் பொண்டாட்டி வீட்டாளுங்க லோட உனக்கும் சுமூகமான உறவு இருக்கணும், அடிக்கடி போவணும்னு சொல்லல போக வேண்டிய நேரத்துல போகணும்”.
“இத்தன வருஷத்துக்குப்புறமும் நான் உன் அம்மாவோட பொறந்த வீட்டுக்குப் போய்ட்டுதானே இருக்கேன் எத விட்டுக் குடுத்தாலும் சொந்தத்தையும் உரிமையையும் விட்டுகுடுக்க கூடாது, படிச்சவன் பாத்து நடந்துக்கோ” என்றார் அவர்.
கனகசபை அதிகம் பேசமாட்டார் பேசும் சமயங்களில் அடுத்தவர் மறுக்க முடியாதபடி பேசிவிடுவார், யோகனுக்கு எரிச்சலும் கோபமும் ஒன்றும் பேசாமல் எழுந்து வெளியில் சென்றுவிட்டான்.
அதுவரை மும்முரமாக அவர்கள் வீட்டு பஞ்சாயத்தை பார்த்திருந்த உறவுகள் நான்கு பேரும் “அப்போ சரி ராக்காயி நாங்களும் கிளப்புறோம்” என்று எழுந்து சென்றனர், சூடான இந்தச் செய்தியை உடனே கடைபரப்ப வேண்டுமே ஊருக்குள்.
அவர்களும் சென்றுவிட கனகசபை மனைவியிடம் “ராக்காயி வா அண்ணாகிட்ட கறிவிருந்துக்கு எந்த நாள் தோத்து படும்னு கேட்டுட்டு வருவோம்” என்க.
மருமகள்களை பார்த்தவர் “நாங்க வரதுக்கு கொஞ்சம் நேரம் ஆகும் வீட்டைப் பாத்துக்கோங்க யாராவது வந்தா மரியாதையா பேசிக் குடிக்க குடுக்கணும்” என்றவர் “மதிய சாப்பாடு…” என்று தொடங்க.
“அதெல்லாம் சொல்லிட்டேன் பதினஞ்சு பேருக்கு ஹோட்டல்ல சாப்பாடு சொல்லியாச்சு சமைக்க வேண்டாம்” என்றான் ராஜா.
“ஹ்ம்ம்” என்றவர் “ராஜி” என்று மகளிடம் அவள் மாமியாரை கண் காண்பித்தார் பார்த்துக்கொள் என்று, ராஜியின் மாமியாருக்கு இதிலெல்லாம் கவனம் இல்லை என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் சீரியலில் மூழ்கி இருந்தார்.
அவளின் பிள்ளை மற்ற பிள்ளைகளோடு விளையாடிக்கொண்டிருக்க கணவனை அழைக்க அலைபேசியோடு திண்ணையில் அமர்ந்தாள் ராஜி, செவ்வந்தியும் கனகமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் என்ன செய்வதென்று.
“அண்ணி அந்த ரூம்ல கொஞ்சம் நேரம் படுத்து ரெஸ்ட் எடுங்க இப்போதைக்கு யாரும் வரமாட்டாங்க அப்படியே வந்தாலும் நான் சொல்றேன், இங்கதான் இருப்பேன்” என்றவன் மனைவிக்குக் கண் காண்பித்தான் அழைத்துசெல் என்று.
செவ்வந்தியை அவனுடைய அறைக்குள் அழைத்துசென்றவள், அறையில் பார்வையை ஓட்டினாள் அவளுமே இப்பொழுதுதான் உள்ளே வருகிறாள் “படுத்துக்கோக்கா” என்க.
“எப்படிடி இது உங்க கட்டில்…” என்று தயங்கி நின்றாள் அவள்.
“அட என்ன நீ லூசு மாதிரி பேசிகிட்டு படு, கிடைக்குற நேரம் கொஞ்சம் கட்டய சாச்சிக்கோ எல்லாரும் வந்துட்டா முடியாது” என்றாள், செவ்வந்தியின் உடலும் ஓய்வுக்கு கெஞ்சியதே படுத்த பத்தே நிமிடத்தில் ஆழ்ந்து உறங்கிவிட்டாள் செவ்வந்தி.
“அத்த உன்ன மாமா கூப்பிடுறார்” என்றுவந்து நின்றான் ராஜியின் மகன் கார்த்தி, அக்காவை ஒருமுறை பார்த்துக்கொண்டவள் கதவைச் சாத்திவிட்டு அவனுடன் வெளியில் வந்தாள்.
“எங்கப்பா” என்க.
“ஒய்” என்ற சத்தம் பக்கத்து அறையிலிருந்து, கார்த்தி வாயிலே வண்டி ஓட்டிக்கொண்டு வெளியில் ஓடினான் அவள் பார்த்தபோது ராஜி அலைபேசியிலும் அவள் மாமியார் சீரியலிலும்.
பக்கத்துக்கு அறைக்குள் அவள் நுழையக் கதவை அடைத்தான் ராஜகுமாரன், அவள் பதறித் திரும்ப “என்னையவே மிரட்டுறியா” என்றான் அவளின் கைப்பிடித்து அருகில் இழுத்து வெற்றிடையில் அழுத்தமாகக் கைப்பதித்து.
ஒருநொடி சுவாசம் நின்று மீண்டது பெண்ணவளுக்கு “என்ன பண்றீங்க யாரவது வந்துடுவாங்க” என்றாள் மெல்லிய குரலில் நடுக்கத்தோடு.
“யாரும் வரலைன்னா பரவாயில்லையா” என்றான்.
அவள் அவனைத் தள்ளிவிடப் பார்க்க இபோழுது இரண்டு கைகளிலானும் அவளைச் சிறை பிடித்தவன் அவள் கழுத்தில் முகத்தை அழுத்தமாகப் புதைத்தான், கஸ்தூரி மஞ்சளின் வாசம் அவள் மேனியில் தலையில் சூடியிருந்த குண்டுமல்லி என்னையும் கொஞ்சம் சுவாசித்துக்கொள் என்றது.
“கனகாம்பரம்…” என்றான் காற்றான குரலில் பூனை முடிகள் சிலிர்த்துக்கொள்ள அவள் அறியாமலே அவன் சட்டையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள் கனகம்.
அபஸ்வரமாக ஒலி எழுப்பி அவளைப் பதறி விலக வைத்தது அவனின் அலைபேசி, அழைத்தது செல்வம்… தலையை அழுந்தக் கோதிக்கொண்டவன் அவளைப் பார்க்க அவசரமாக அங்கிருந்து ஓடி அடுத்த அறைக்குள் நுழைந்துகொண்டாள் அவள்.
அலைபேசியை எடுத்தவன் “என்னடா” என்றான் எரிச்சலாக.
“மாப்ள… சிவ பூஜைல கரடியாயிட்டேனா” என்றான் ராஜகுமாரனின் குரலை வைத்து.
“நீ கரடியில்லடா காட்டெருமை பரதேசி என்னடா வேணும்” என்றான் அவனிடம்.
“ரொம்ப சூடா இருக்க போல” என்றவன் “இல்ல மாப்ள நம்ம சேகர் கிட்ட மரவேலை செய்ற சாமான் ஏதோ வேணும்னு சொன்னியாம், அதோட ரெண்டு நாள் உன் வீட்டு ஆளுங்க கண்ணுல படக்கூடாதுன்னு சொன்னியாம் அதான் சாமானை என்கிட்டே குடுத்தான் இப்போ எடுத்துட்டு வரவா” என்க.
“ஹ்ம்ம்… எல்லார்கிட்டயும் உளறிகிட்டு இருக்காம பின்பக்கமா வா, என் கூடப் பொறந்தவ வாசல்லயே காவல் இருக்கிறா” என்றான்.
“சரி மாப்ள” என்றவன் அடுத்த ஐந்து நிமிடத்தில் வந்து சேர்ந்தான் பொருளை வாங்கிக்கொண்டு யோகனின் அறைக்குள் நுழையும் முன் “இங்கேயே நின்னு பாத்துக்கோ” என்றவன் உள்ளே சென்று பத்து நிமிடத்தில் வேலையை முடித்து வெளியில் வந்தான்.
மாமியாரும் மாமனாரும் வருவதற்குள் செவ்வந்தியும் உறங்கி எழுந்துவிட்டாள், அவர்கள் இருவரும் வெளியில் வர மதிய உணவும் வந்திருந்தது.
யோகனுக்காக அனைவரும் காத்திருந்தனர் இரண்டரைக்குத்தான் வந்தான் அவன், நேரே சென்று கைகால் கழுகி வந்தவன் சாப்பிட அமர்ந்தான் ஆண்கள் சாப்பிட்டு முடிக்க அடுத்து பெண்கள் அமர்ந்துகொண்டனர்.
“சாயந்திரம் சினிமாவுக்கு போகலாமா” என்றான் ராஜா.
“போகலாம்” என்றாள் ராஜி.
“நீங்க எல்லாரும் போய்ட்டுவாங்க” என்றார் கனகசபை.
“நான் வரல” என்றான் யோகன்.
ராஜாவிற்கு ஆயாசமாக இருந்தது விழிகளை மூடி ஆழ்ந்து மூச்செடுத்துக்கொண்டவன் “என்னடா பிரச்சனை உனக்கு” என்றான் அமைதியாக.
“நீங்கச் சொல்ற எல்லாத்தையும் நான் செய்யணுமா வர முடியாது” என்றவன் அவன் அறையின் கதவை வேகமாகத் தள்ளித் திறக்க மடார் என்ற சத்தம் அனைவரும் ஒருநொடி நெஞ்சில் கைவைத்துவிட்டனர் ஆடியோரு சத்தம் பயந்தே விட்டனர்.
“என்னாச்சு” என்று ஓடிச்சென்று பார்க்க இடதுபக்க கதவோடு தரையை முத்தமிட்டு கீழே விழுந்து கிடந்தான் யோகன், செல்வம் நண்பனைத் திரும்பிப் பார்த்து “அடப்பாவி” என்று வாயில் கைவைக்க.
இவன் சாவதானமாக எழுந்து “என்னாச்சு” என்று வந்தான், அதற்குள் ராக்காயும் செவ்வந்தியும் அவனைப் பிடித்து எழ வைத்திருந்தனர், அடி ஒன்றுமில்லை எங்கேயோ சிறிதாக வலி இருந்தது மெல்ல நடந்து வந்து முன்னறையில் அமர்ந்தான்.
“டேய் என்னடா பண்ண” என்றான் செல்வம்.
“கதவைக் கழட்டி வெச்சேன், பக்கவாட்டுல கொஞ்சம் செதுக்கி வெச்சேன் நம்மளால கதவை மாட்ட முடியாது ஆள் வரணும்” என்றவன் “அவன் எப்போவுமே கதவை அப்படித்தான் கோவத்துல தள்ளுவான் கதவு மட்டும்தான் வீழும்னு நினச்சேன் மச் அவனும் சேந்து விழுந்துட்டான்” என்றான் அலட்டிக்கொள்ளாமல்.
அவன் அருகில் நின்றிருந்த கனகம் வாயில் கை வைத்து அவனை விழி விரித்துப் பார்க்க அவளைப் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தவன் “என்னடி இதையும் சொல்லனுமா” என்றான்.
“ம்ஹும்” என்றவள் பார்வையை திருப்பிக்கொண்டாள்.
“ஏண்டா இப்படி பண்ற எப்போ பாத்தாலும் கோவம், எல்லா கோவத்தையும் அந்தக் கதவுலதான் காட்டறது அதுவும் எவ்ளோ நாள் தான் தாங்கும் இன்னைக்கு படுத்துடுச்சு” என்றார் ராக்காயி.
“அடிபட்டுருக்கா” என்றார் மகனிடம்.
“இல்ல” என்றான் எரிச்சலோடு.
“மச மசன்னு நிக்காம போய்த் தண்ணி கொண்டா எல்லாத்தயும் சொல்லணும்” என்று மூத்த மருமகளை சாடினார் அவள் வேகமாக அடுப்படி சென்றாள்.
கதவைச் சென்று பார்த்து வந்த கனகசபை “ஏற்கனவே விரிசல் விட்டிருந்தது மொத்தமா போச்சு, சேகரத்தான் கூப்பிடனும்” என்றவர் அலைபேசியை எடுத்து அவனுக்கு அழைத்தார்.
“அவன் உங்ககிட்ட சிக்கி கையைப் பறிக்கொடுக்கவா இந்நேரம் எங்க ஒளிஞ்சிருக்கனோ” என்றான் செல்வம் முணுமுணுப்பாக.
அழைப்பை எடுத்த சேகரோ “சிநேகிதனுக்கு கல்யாணம் சித்தப்பா மதுரைக்கு போய்ட்டு இருக்கேன் ரெண்டு நாள்ல வந்துடுவேன்” என்றான்.
“அப்படியா” என்றவர் “சரி” என்று வைத்துவிட்டு விஷயத்தைச் சொல்ல “உசுரு முக்கியம்னு ஓடியே போய்ட்டான்” என்றான் செல்வம்.
“ஏன் வேற யாருமே இல்லையா வேற ஆள கூப்பிட்டு சரி பண்ண சொல்லுங்க” என்றான் யோகன்.
‘அடங்கமாட்டறானே’ என்று எண்ணிய ராஜகுமாரன் “இப்போ என்ன அவசரம் அவன்னா பாத்து நல்லா செய்வான் ரூம் கதவுதான வெளிவாசல் கதவில்லையே அவசரமா செய்ய ரெண்டுநாள் அவன் வந்துடுவான்” என்றான்.
“அதுவும் சரிதான் ரெண்டு நாள் பொறுத்துப்போ பெரியவனே” என்றார் ராக்காயி, யோகன் தனிமை விரும்பிப் பேசவும் மாட்டான் மற்றவர்கள் பேசுவதை கேட்க நிக்கவும் மாட்டான், அவன் இருந்தாலும் இல்லையென்றாலும் அவன் அறை கதவு எப்பொழுதும் அடைந்தே கிடக்கும்.
என்ன கோபமாக இருந்தாலும் அந்தக் கதவின் மீதே காட்டுவான் இப்பொழுது திறந்து கிடக்கும் அறைக்குள் எப்படி இருக்க என்ற யோசனையோடு அவன் விழிகள் ஒருமுறை செவ்வந்தியில் படிந்து மீண்டது.
இரவானதும் ராஜகுமாரன் அண்ணனிடம் “யோகா அண்ணியும் கனகமும் இந்த ரூம்ல படுத்துக்கட்டும் நீ வா நாம மொட்டை மாடில படுத்துக்கலாம் நல்லா சிலு சில்லுன்னு காத்து” என்றான்.
“நீயெல்லாம் நல்லா வருவடா” என்றான் செல்வம், அவன் அழகாய் சிரிக்க கணவனை முதல்முறை ரசனையாகப் பார்த்திருந்தாள் கனகாம்பரம்.
இன்று கணவனுடன் தங்க வேண்டாம் என்ற நினைப்பே செவ்வந்தியின் முகத்தில் நிம்மதியை நிறைத்திருக்க அக்காவைப் பார்த்தவள் கணவனின் செயலுக்கான அர்த்தத்தைப் புரிந்துகொண்டாள், இதுபோல் நியாயமான ஏதோ ஒரு காரணம் இருக்குமோ அவனின் நகை திருட்டுக்கு பின்னும் என்ற யோசனையோடு அவனைப் பார்த்திருந்தாள்.
சட்டென்று அவளைத் திரும்பிப் பார்த்தவன் மீசையை முறுக்கிப் புருவமுயர்த்த கனகாம்பரம் முதல் முதலாக வெட்கத்தில் முகம் சிவந்தாள், அவளை ரசனையாகப் பார்த்துக்கொண்டே அண்ணனோடு சென்றான் ராஜகுமாரன்.
பார்வையில் புதுப்புது
கவிதைகள் மலர்ந்திடும்
காண்பவை யாவுமே தேன்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
error: Content is protected !!