Skip to content
Post Views: 2,084
கீதம் 💜 30
ஆறு வருடங்களுக்கு பின்
Advertisement
இப்போது எல்லாம் வேகமாய் மாடி ஏறி செல்ல முடியவில்லை நந்திதாவிற்கு. தடதடவென்று மேலேறி ஓடுபவள் நிறுத்தி நிதானமாக ஏறி கொண்டிருந்தாள். இன்று ஹாஸ்பிடல் வேலையும் அதிகம். வெளிவேலையாக காலேஜ் வேறு சென்று வந்திருக்க அலைச்சலில் உடல் வேறு அதிகமாக நமைச்சல் கொடுத்து கொண்டிருக்க, வேர்க்க, விறுவிறுக்க வந்தவள். உஷ் என்று பெருமூச்சு விட்டபடியே வந்து, சேலை முந்தானையால் முகத்தை துடைத்து கொண்டு, சற்று மூச்சு வாங்க நின்றவள், தான் கண்ட காட்சியில் மௌனமாய் அந்த இடத்தை விட்டு நகராமலே நின்று இருந்தாள்.
Advertisement
கண்ணை சுருக்கி, மூக்கு விடைக்க, பின் முகத்தை சுழித்து விட்டு தங்கள் அறைக்கு சென்று அவனை பார்த்து முறைக்க,
Advertisement
” போச்சு. இன்னைக்கு என்ன பஞ்சாயத்து பண்ண போறாளோ, ஹ்ம்ம், ஊருல அவனவன் ரெண்டு மூணு வச்சிட்டு திரியிறான், ஒரே ஒரு பொண்டாட்டியை வச்சிக்கிட்டு நான் பாடுற பாடு இருக்கே. கடவுளே! முடியல..,” புலம்பியப்படி உள்ளே வந்தவனை கட்டிலில் தள்ளி
Advertisement
” இங்கே பாருங்க, நீங்க பண்றது எல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன். அவளுக்கு மட்டும் ஊட்டி விட்டு, வாய தொடைச்சி, ட்ரஸ் மாட்டி விட தெரியுது. எனக்கு பண்றிங்களா?” மூச்சிறைக்க பேசியவள்
” என்னை திரும்பி கூட பார்க்குறது இல்லை. நானே.. குளிக்கணும், நானே.. டிரஸ் போடணும், நானே.. சாப்பிடணும். நானே.., வெளியே போகணும்., எல்லாமே நானா பண்ணனும்னா புருஷன்னு நீங்க எதுக்கு இருக்கிறீங்க. ஒழுங்கா பதிலை சொல்லிட்டு போங்க..” அவள் தன் போக்கில் பேசி கொண்டிருக்க இவனோ அமைதியாக பார்த்து கொண்டே இருந்தான்.
” டேய் வாயை தொறந்து ஏதாவது சொல்லுடா” என தோளில் அடித்தவளை பார்த்து ,
” எந்த ஊருலயும் இப்படி கோபப்பட மாட்டாங்க, நீ மட்டும் எப்படிடி இப்படி இருக்க..,” என தன் மடியில் அமர்ந்து, ஒரு கையால் கழுத்தை கட்டி கொண்டும், மறு கையால் தன் எட்டு மாத மகவை அணைத்த வண்ணம், முகத்தோடு இளைந்து முத்தம் கொடுத்து கொண்டே பேசி கொண்டு இருந்தவளை பார்த்து, பெரு மூச்சு விட்டப்படியே கேட்டான்.
அவள் வர லேட்டானதும் தங்களின் ஐந்து வயது செல்ல மகள் நிவேதிதாவிற்கு சாப்பாடு ஊட்டி விட்டு, முகம் துடைத்து, உடை மாற்றியவனை பார்த்து, சந்தோஷத்தில் ரசித்து கொண்டு நின்றவள், மகள் சாவித்ரி அறையில் சென்றதை கண்டே உள்ளே வந்து அவனை கொஞ்சி திட்டி கொண்டு இருக்கிறாள்.
” ஏன்னா நாங்க உங்க நந்திதா. அப்படி தான் இருப்பேன்.” அழிச்சாட்டியம் செய்தவள் அவன் முகத்தில் விரலால் கோலம் போட்டு கொண்டே
” சே., கட்டுன புருஷனை கூட இவளுக்கு பயந்துகிட்டு கத்திகிட்டே கொஞ்ச வேண்டிருக்கு. இல்லைனா பின்னாடியே வாலு வந்திரும்.”
கன்னத்தை வலிக்காமல் கிள்ளி இன்னுமொரு முத்தம் வைத்தவள் ” டேய் பசிக்குது. சாப்புட போலாமா ” என்க.
” நந்து, சாப்பாடு மேலே கொடுத்து விடுறேன். சீக்கிரம் சாப்புடுங்க. அது வர பாப்பா இங்க இருக்கட்டும்.” கீழ் இருந்து சாவித்ரி குரல் கொடுத்தார்.
” உன்னை கெடுக்க இவங்க ஒரு ஆளு போதும். வா சாப்பிடலாம், எந்திரிம்மா.. ” என்றவனிடம் தலையை மாட்டேன் என இடவலமாய் ஆட்டியவளை
” உன்னை தூக்கிட்டு எல்லாம் போக முடியாது. ஓவர் வெயிட் ஒழுங்கா எந்திரிச்சி நடந்து வா..”
“காலம் புல்லா முதுகுல தூக்கி சுமப்பேன்னு சொன்னது எல்லாம் பொய்யா கோபால்..,” என நக்கல் வேறு செய்ய
” சண்டிராணி..,குழந்தையை வயித்துல வச்சிட்டு விளையாடுற நேரமா? ரெண்டே மாசம் முடியட்டும். என்ன வேணா பண்றேன். இப்போ கிளம்புடி..,” அதட்டல் போட்டதும் தான் வேண்டா வெறுப்பாய் எழுந்து டைனிங் டேபிளில் சென்று அமர்ந்தாள்.
” அவ பண்றத எல்லாம் நீயும் பண்ணுவியா. உன்னை பார்த்து அவளும் அதே சேட்டை. இவ்ளோ நேரம் சாப்பிடாம அம்மாவை கத்த வச்சிட்டு இருந்தா. கெஞ்சி கெஞ்சி இப்போ தான் ஊட்டி விட்டேன். இப்போ நீயா? ஒழுங்கா சாப்பிட்டு முடிச்சி தூங்கி எந்திரிக்கணும். திருப்பி அவளோட உட்கார்ந்து விளையாடரதை பார்த்தேன். கொன்றுவேன்..,” சாப்பாடு ஊட்டியபடி தான் அவளையும் கண்டித்து கொண்டிருந்தான்.
ஆரவ், நந்திதா இருவரின் மொத்த சேட்டையையும் ஒன்றாய் பெற்று வந்தவள் நிவேதிதா ஸ்ரீ. கனடாவில் பிறந்த ஆரவ்வின் கங்காரு குட்டி. தாயை விட தந்தை வசம் தான் அதிகம் இருப்பாள். குட்டி ஆரவ் என்றே அவளை சொல்லலாம். தந்தையின் ஜாடையில் மட்டுமல்ல அவனை போலவே அனைத்தும் முன்னரே யோசித்து செய்யும் குறும்புக்காரி.
அவன் மகள் படுத்தும் பாடு சொல்லில் அடங்காது. ஸ்கூல் முடித்தவுடன் அவனோடு op ரூமில் அமர்ந்து விளையாட ஆரம்பித்து விடுவாள். அவனை போலவே கையில் சிறு ஸ்டெத் வைத்து கொண்டு பொம்மைக்கு செக் செய்வாள். கழுத்தில் மாலையாய் ஐவி செட் தொங்கி கொண்டிருக்கும். அவன் பேஷண்டிடம் பேசுவதை எல்லாம் உன்னிப்பாய் பார்த்து கொண்டு, அறையில் யாரும் இல்லாத போது அவன் தந்தையிடம் கேள்விகேட்பாள். அவன் பதில் சொல்லி கொண்டே இருக்க வேண்டும். அத்தனைக்கும் அப்பா தான் வேண்டும்.
அவர்கள் சாப்பிட்டு முடித்த நிமிடம் மெதுவே படியேறி வரும் கொலுசொலியோடு காலடி ஓசையும் கேட்டது. ” ப்பா., ஸ்ரீ.. ” என்ற மெல்லிய குரலும் காற்றில் மிதந்து வந்தது. ரெட்டை குடுமி அசைந்தாட, முட்டி வரை இருந்த பிங்க் கவுன் காற்றில் நாட்டியம் ஆட, பிஞ்சு கையில் எதையோ அழுத்தி பிடித்து கொண்டு, ஓவியம் ஒன்று நடந்து வந்தது.
நிவி வாய் பேச ஆரம்பித்தவுடன் முதலில் கூறிய வார்த்தையே அப்பா தான். தன்னை மகள் எப்படி கூப்பிட போகிறாள் என ஆசையாக நந்து காத்திருக்க, அம்மா என்று கூப்பிடாமல் அவளின் ” ஸ்ரீ ” என்ற அழைப்பில் அழுகை தான் வந்தது. தன் தந்தை கூப்பிட்டதை போல ” ஸ்ரீமா ” என அழுத்தி கூப்பிட்டால் போதும் மொத்தமாய் மகளிடம் சரண் அடைந்து விடுவாள்.
இவள் சாப்பிடுவதை போன்று பார்க்காமலே பாவ்லா காட்ட, “ஸ்ரீ” என தலையை மட்டும் உள்ளே நீட்டி சிரித்தாள். இவள் எட்டி பார்க்கவும், மகள் தன் அப்பாவின் பின்னே வந்து ஒளிந்து கொண்டாள். ” ஸ்ரீ ” என்றதில் ஆரவ் திரும்பி பார்க்க “ஸ்ரீமா.,” என மீண்டும் சிரித்தாள்.
” என் செல்ல குட்டி., அம்மாட்ட வாங்க.,” எட்டி அவளை தூக்கி டேபிளில் அமர வைக்க
” நான் பஸ்ட் சாப்பிட்டென். நீ தான் இனிக்கு லேட்..,” ஒரு விரலை மடக்கி தாயிடம் வம்பு செய்ய ஆரம்பிக்க.
” அம்மா இன்னைக்கு வெளியே போய்ட்டு வந்தேண்டா. பப்பு குட்டி தேடுனீங்களா ? “
” இல்லையே.., மீ குட் கேர்ள். அப்பாட்ட இந்தேன். “
” அதானே, சும்மா கூட என்னை தேட மாட்டியே..,” உதட்டை இடவலம்மாய் சுளித்து நந்து முகம் திருப்ப.
” ம்மா., சாக்கி.., இந்தா..,” என தான் சாப்பிட்ட சாக்லேட்டில் பாதியை பத்திரமாக கொண்டு வந்து, அவள் பங்குக்கு கொடுக்க. நந்துவும் ஆவென வாயை திறக்க, தந்தைக்கு அதை ஊட்டி விட்டாள் அந்த குறும்புக்காரி .
“எவ்ளோ கொழுப்பு.., போடி இன்னைக்கு உனக்கு தராம நான் மட்டும் ஐஸ்கிரீம் வாங்கி சாப்புடுறேன்.” அதற்குள் ஆரவ்க்கு கால் வர பால்கனிக்கு சென்று பேச ஆரம்பித்தான்.
“நோ., நோ., தம்பிக்கு இருக்கு, இந்தா.., ” என மற்றொன்றை அவளுக்கும் ஊட்டி விட்டாள்.
” சமத்து குட்டி, எது சாப்பிட்டாலும் தம்பிக்கும் ஷேர் கொடுத்துருவா., ” கொஞ்சி கொண்டே இருவரும் பேசி கொண்டிருந்ததில் நேரம் போய் கொண்டிருந்தது.
” நந்திதா ஈவினிங் கேஸ் இருக்கா., கொஞ்சம் வெளியே போகணும்., “
“இல்லங்க., பிரீ தான்., போவோம்.,” கேட்டவன் வேறு ஒன்றும் சொல்லாமல்
” நிவி .., லேட்டாச்சு., அம்மா ரெஸ்ட் எடுக்கட்டும். நம்ம கீழே போவோம்., வா., ” என தூக்கி கொண்டவனை பார்த்தவள்.
” உங்க பொண்ணை மட்டும் செல்லமா நிவினு கூப்பிட தெரியுது. என்னை மட்டும் நந்திதா நொந்திதானு நீட்டி முழக்கி கூப்பிடுங்க.” அவன் செல்வதில் சுணக்கம் கொண்டு கடுப்பாய் பேச .
” என் சந்தோசத்தை முழுசா தான் கூப்பிடுவேன். பாதி எல்லாம் எனக்கு வேண்டாம். ” என்றபடியே ” இவளை விட்டுட்டு வந்து பேசுறேன்.., ” ஜாடை செய்தான்.
“ஸ்ரீகா!” என்று அழைத்தப்படியே வந்த மாமனை பார்த்தவள் தந்தை மடியில் இருந்து இறங்கி, அவனிடம் ஓடினாள். “விபு..! ” தூக்கு என்பதாய் கையை நீட்டி நின்றவளை ஒரு நொடி பார்த்தவன், ஒன்றும் செய்யாமல் கையை கட்டி கொண்டு நிற்க, உதட்டை பிதுக்கி அடிக்கண்ணால் பார்த்து கொண்டே
” விபு மாமா! ம்ம்ம்.. ” என்றாள். ” வாலு பேரை சொல்லி கூப்பிடாதேனு எத்தனை தடவ சொல்றேன். கேக்குறியா. இனிமே சொன்னா தூக்கிட்டு போக மாட்டேன் ” மிரட்டி முறைத்தாலும் கரம் நீட்டியவன் கையில் ஏந்தி கொள்ள, முத்தம் வைத்து மாமனை சமாதானம் செய்தாள்.
” என்ன சார் இன்னைக்கு வர ரொம்ப லேட்டாகிருச்சு.. விடலையா… ” குறும்பாய் கேட்டவன் அருகில் வந்தவன்,
” மாம்ஸ் என்னை பார்த்தா உங்களுக்கு கேலியா இருக்கா. டெய்லி இம்சை பண்ணிட்டு இருக்கா ” சலிப்பாய் சொல்லிவிட்டு முகத்தை சுருக்க.
” டேய், பைனல் இயர் ஸ்டுடென்ட் நீ . கெத்தா அவளை மிரட்டணும். ஜூனியர்க்கு பயந்துட்டு ஓடி வர்ற..,”
“வேற ஏதாவதுன்னா திட்டிருவேன். ரெண்டு பேருல எவ என்னை லவ் பண்ணுறான்னு தெரியல. மாத்தி மாத்தி வர்றாங்க. ஆளை மாத்தி திட்ட கூடாதுன்னு தான் யோசிக்கிறேன் மாம்ஸ். ஏதாவது ஐடியா சொல்லுங்க.”
“சுத்தம்டா. உன் ஆளு எதுன்னு கண்டுபிடிக்க முடியலைன்னா அது லவ்வே இல்லை. நீ பேசாம ஒதுங்கியே இரு. என்னைக்கு அவள கண்டுபிடிக்கிறியோ அப்போ போய் லவ்க்கு ஓகே சொல்லு.” இவரு நம்மள கலாய்கிறாரா, ஐடியா சொல்றாரா புரியாமல் பார்த்தவன் தலையை மட்டும் ஆட்டினான்.
” நீ படிக்கிற வேலை மட்டும் பாரு வைபவ். அவாய்ட் பண்ணா அவங்களே ஒதுங்கி போயிருவாங்க. “மச்சினனுக்கு காதல் பாடம் கற்று கொடுத்தவன் அடுத்து பிற விஷயங்களை பேசி கொண்டிருந்தான்.
தினமும் காலேஜ் முடித்து வருபவன் அக்கா வீட்டுக்கு வந்து பேசிவிட்டு தான், தங்கள் வீட்டுக்கு நிவியையும் தூக்கி கொண்டு செல்வது வழக்கம். அன்பான மாமன் என்றாலும் அக்கா மகள் தப்பு செய்தால் கண்டிப்பதால் மாமனிடம் மட்டும் சற்று பயம் உண்டு நிவிக்கு. வைபவ் BTech படிக்கிறான். படிப்பில் புலியாய் இருப்பவன், மற்ற விஷயங்களில் பிறரிடம் இருந்து ஒதுங்கி வந்து விடுவான்.
நிவியை அனுப்பிவிட்டு யோசனையோடு உள்ளே வந்தவனை பார்த்தவள் மெதுவே எழுந்து அமர்ந்து ” என்னாச்சு” என்க.
“நாளைக்கு அன்பு இல்லத்துல செக் அப் பண்ண எக்ஸ்ட்ரா டாக்டர்ஸ் வேணும். என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன்..,”
” ரம்யா, மாப்பிள்ளையை வர சொல்வோம். தென் எக்ஸ்ட்ரா இன்னும் வேணும்னா குரூப்ல மெசேஜ் போடுறேன். பிரீயா இருக்குறவங்கள வர சொல்லுறேன்.” தோளை குலுக்கிய படி அசால்ட்டாய் சொன்னவளை பார்த்தவன் சிரித்து கொண்டே
” பரவாயில்லை, என் நந்திதா கூட டக்கு டக்குனு பிளான் பண்ண ஆரம்பிச்சிட்டாளே.” என்றான்.
“என் பிளான் எல்லாம் ஒழுங்கா தான் இருக்கு. அய்யா தான் ரொம்ப சொதப்புறாரு. இப்பொல்லாம் கண்டுக்கிறதே இல்லை.” இதழினை நொடித்தபடி சொன்னாள்.
error: Content is protected !!