Skip to content
Post Views: 2,080
“இன்னைக்கு டாக்டர் மேடமுக்கு என்னாச்சு., வந்ததுல இருந்தே ரொம்ப எஸ்சைட்மெண்டா இருக்காங்க.” அவள் அருகே சாய்ந்து படுத்தபடி முகம் நோக்க.
” அரு.., நீங்க என் கூட காலேஜ் வந்துருக்கலாம்., எத்தனை பேரு உங்களை பெருமையா பேசுனாங்க தெரியுமா.., ” சந்தோசத்தை கடந்து அவனில்லா வருத்தம் அவள் குரலில் விரவி இருக்க
Advertisement
” டாக்டர்.நந்திதா ஸ்ரீ ஆரவ் சீப் கெஸ்ட்டா மேலே உட்கார்ந்து இருந்தாங்க. இந்த காலேஜ்ல அவங்க படிச்சது ரொம்ப பெருமையாம் . அங்கேயே ப்ரொபஸரா வேலை பார்க்க வர சொன்னவங்ககிட்ட, என் ஹஸ்பேண்ட் கூட சேர்ந்து நிறைய நல்ல விஷயங்கள் பண்றேன். அதை விட்டுட்டு வர மாட்டேன்னு மேடையிலேயே சொன்ன என் நந்திதாவை எல்லாரும் கைதட்டி பாராட்டுனாங்க.
Advertisement
அதுக்கப்புறம் உங்க பிரின்ஸ் பாராட்டி சொன்னதை கேட்டு லைட்டா அழுகை வந்த மொமெண்ட்டா எல்லாம் நான் கீழே இருந்து பார்த்துட்டு தானே வந்தேன்., ” ஆம். நந்து நவி பிறந்த பின் PhD படித்து முனைவர் பட்டம் பெற்று விட்டாள். அதற்கான பாராட்டு விழா அவள் படித்த கல்லூரியில் இன்று நடைபெற்றது. சுகந்தியோடு அங்கே சென்றிருந்தவள் தன்னை கஷ்டப்பட்டு படிக்க வைக்க அத்தனை போராட்டங்களையும் இத்தனை வருடத்தில் கடந்து வந்தவனை எண்ணி, காணாமல் தவித்து தான் வீட்டுக்கு திரும்பி இருந்தாள்.
Advertisement
” நீங்க வந்திங்களா.., என்கிட்ட ஏன் சொல்லவே இல்லை.” ஏக்கமே உருவாய் கேட்க.
Advertisement
” எனக்கு கேஸ் இருந்தது. உன்கூட வந்தா ரொம்ப லேட்டாகிரும். சோ ஓரமா நின்னு ரசிச்சுட்டு டக்குனு நாங்க ஓடி வந்துட்டோம்., ” சொல்லாமல் அவன் வந்ததே மகிழ்ச்சியை தர அவன் தோளில் முகம் சாய்த்து இறுக்க அணைத்தாள்.
” நந்திதா!., என்னடா.., “
” தெரியல., உங்களை ரொம்ப தேடுது. சீக்கிரம் டெலிவரி ஆகிரனும்னு தோணுது. ” ஏக்கம் கலந்த குரலில் அவன் கரங்களையும் பற்றி கொள்ள.
“நெஸ்ட் வீக் வளைகாப்பு இருக்கு மேடம். அதுக்குள்ள என்ன அவசரம் .., “
“ஹ்ம்ம்., அன்னைக்கு உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. என்னனா ஜோனா .,” என ஆரம்பித்தவள் ” அச்சோ..,ஒண்ணுல்ல .., ” அவள் கன்னத்தில் அவளே தட்டுவதை பார்த்தவன் சிரித்து கொண்டே .
” என்னாச்சு .., ஜோனாவா.., அவ இங்க எங்கே இருக்கா.,?, இன்னும் நீ அவளை மறக்கலையா .., ” சொல்லும் போதே சிறு வலி அவன் கண்ணில் மின்னி மறைய.
அதை கண்டவள் உள்ளமோ வருந்தியது. நொடி நிமிட வேதனையில் அவன் கண்களில் தோன்றிய வலியை அந்த கணமே தகர்க்க எண்ணி ., ” நம்ம பத்து பசங்களும் இங்கேயே வர போறாங்க..,” என்றவளை அவன் புரியாமல் நோக்க.
” யெஸ். அரவிந்த் அண்ணா அவங்க எல்லாரையும் இங்கே தத்தெடுத்து கூட்டிகிட்டு வராங்க. இனிமே அவங்க அன்பு இல்லத்துல இருப்பாங்க. கொஞ்ச நாள் கழிச்சி நம்ம வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்துரலாம்.அபி அண்ணி ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அங்க வந்தப்போவே ப்ரோசஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. எல்லாம் முடிஞ்சி இன்னைக்கு தான் டிக்கெட் கன்பார்ம் பண்ணாங்க.” என்றாள் மகிழ்ச்சியாய்.( அரவிந்த், அபி., என் முதல் கதையின் நாயகர்கள், மறந்துருக்க மாட்டிங்கனு நினைக்கிறேன்.)
மேலும் தொடர்ந்து ” நீங்க அங்க இருந்து வந்ததில் இருந்தே மிஸ் பண்ணிட்டு இருந்திங்களா. உங்களுக்கு தெரியாம பண்ணனும்னு சொல்லல. சாரி. வித் இன் டூ டேஸ் தே வில் கம். ” கண் சிமிட்டி கூறியவளை
பார்த்தவனுக்கோ சந்தோசத்தில் விழியோரம் கண்ணீர் துளி வடிந்தது. “அரு!” பதறி அவள் துடைக்க, கைகளை பற்றி கொண்டவன் அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு நெஞ்சில் தலை சாய்த்தான் மௌனமாய்.
பேசாத வார்த்தைகள் கூட அவன் மனதினை அவளிடம் கடத்துமே. சந்தோச கணங்கள் எல்லாம் மொழியின்றி, விழி மூடி, துடிக்கும் இதயம் வழி தன் இதயம் கடத்தியது. சற்றே நேரம் செல்ல,
“நீங்க ஆசைப்பட்டப்படி ஒரு டஜன் குழந்தைங்க நமக்கு இருக்கு. அடுத்து பிளான் பண்ண ரெடியாகுங்க சார். இப்படி தூங்கி வழிய எல்லாம் டைம் இல்லை..,” அவனை சகஜமாக்க கிண்டல் செய்ய.
அவளை நிமிர்ந்து பார்த்தவன் சற்றும் யோசிக்காமல் இறுக்கி இதழ் முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். நீண்ட நெடிய முத்தத்தில் இன்பத்தை கடத்தியவன் பின் தான் அவள் நிலை உணர்ந்து விடுவித்தான்.
*************
அடுத்து வந்த நாட்கள் எல்லாம் சந்தோஷத்தில் பறக்க அவர்கள் எதிர்பார்த்த அடுத்த வரவும் நானும் வந்துவிட்டேன் என ஓர் காலை பொழுதில் கவி படைத்தது. லேபர் ரூம் வாசலில் இன்று அனைவரும் புது வரவை பார்க்க ஆவலுடன் காத்து கொண்டு இருந்தனர். அவர்களையும் கொஞ்சம் எட்டி பார்க்கலாமே.
ரம்யா MBBS படித்து முடித்தவுடன், உள்ளூரிலேயே தெரிந்த நண்பரின் மகனுக்கே திருமணம் செய்து கொடுத்தனர். மாப்பிள்ளை ரமேஷ் கார்டியோலஜிஸ்ட் ஆக பணிபுரிகிறார். தற்போது ஒரு வயது ஆண் குழந்தை மட்டும் உள்ளது.
தர்ஷிக்கு இரண்டும் ஆணாக பிறந்ததில் மிகுந்த வருத்தம். சீராட்டி வளர்க்க மகள் இல்லாத குறைக்கு மருமகளை தான் தாங்கு தாங்கென்று தாங்கி கொண்டிருக்கிறாள். ராஜேஷ் கரங்களில் நிவி ஒய்யாரமாக வீற்றிருந்தாள்.
சுகந்தி, சாவித்ரி படபடவென கவலையுடன் பேசி கொண்டிருக்க, சற்றே பயத்துடன் வைபவ் நின்றிருந்தான். தர்ஷி தான் நந்துக்கு டெலிவரி செய்ய இருப்பதால் அவளோடு ஆரவ்வும் உள்ளிருந்தான். ரவி வார்டுக்கு வெளியே இருந்த அறையில் தன் வாரிசினை முதலில் செக் செய்து சொல்வதற்காக , மருத்துவராய் காத்து கொண்டிருந்தார்.
லேபர் ரூமில் இருந்து தன் கரங்களில் பேரனை பூத்துவாலையில் சுற்றி, இறுக்க அணைத்த வண்ணம் தூக்கி வந்தார் ரவி. நிவி கனடாவில் பிறந்ததால் இந்த சந்தோசத்தை எல்லாம் அவரால் கொண்டாட முடியவில்லை.
இன்றோ புத்தம் புது மலராய் ரோஜா வர்ணத்தில், சுருள் சுருளாய் தலை முடிகள் அழகாய் காட்சி தர, நந்துவின் சாயலிலும், ஆரவ்வின் நிறத்தையும் கொண்டு, குட்டி கண்களை உருட்டி உருட்டி பார்த்து, ஆரஞ்சு சுளை போன்ற இதழில் ஒற்றை விரலை சப்பியபடி தன் உறவுகளை காண வந்தான் ஆரவ்வின் இளவரசன்.
அனைவரும் அவரை சுற்றி சூழ்ந்து நிற்க, வைபவ் என அழைத்தவுடன் நிமிர்ந்து பார்த்தவன் கரத்தில் அந்த குழந்தையை கொடுத்தவர், ” உங்க அப்பாவை நீ பார்க்கலன்னு சொல்லுவே இல்லை. இந்தா கணேஷ் திரும்பி வந்துட்டான்.”
கை நடுங்க பெற்று கொண்டவன் அந்த பிஞ்சு முகத்தில் தன் தந்தையை தேட, அவனுக்கோ அவன் ஸ்ரீகாவே கண்ணுக்கு தெரிந்தாள். குழப்பமாய் சுகந்தியை நோக்க கணேசனை போன்றே காதருகே சிறு மச்சத்தோடு பிறந்துள்ள பேரனை பார்த்த மாத்திரத்தில் சுகந்தி கண்கள் கலங்க அவனையே பார்த்து கொண்டிருந்தவர் மகனிடம் ஆமென தலையசைத்தார்.
” டென் மினிட்ஸ்ல நந்து வந்துருவா. ரூம்ல வெயிட் பண்ணுங்க ” என்றவாறாய் தன் கடமையை செய்ய அவர் விடைபெற,
ராஜேஷ் கரத்தில் இருந்து தாவி கொண்டு குதித்தாள் நிவி. பிஞ்சு கைகள் மற்றொரு பிஞ்சினை பற்றி முத்தம் வைத்து, தலை கோதி, தொட்டு தொட்டு பார்த்து ரசித்து, கொண்டாட்டமாய் ஆர்ப்பாட்டம் செய்த பொழுதில், நந்துவை ஸ்ட்ரக்ச்சரில் அழைத்து கொண்டு செவிலியரோட ஆரவ், தர்ஷி உள்ளே வர.
“ப்பா!.., ” என்று கத்தி கொண்டே குடுகுடுவென ஓடினாள்.
“வாண்டு ஒரு இடத்துல நிற்க்குதா பாரு., ” சாவித்ரி சுகமாய் சலிக்க.
“ஸ்ரீ மா!” என தாயின் துவண்டு போய் சோர்ந்திருந்த சோபை முகம் பார்த்து மெல்ல அழைக்க, மயக்க நிலையிலும் “ஹம்ம்.,” என்றாள்.
“நவி, டோன்ட் டிஸ்டர்ப் கம்..,” என தர்ஷி அழைத்த பொழுதிலும் கேட்காமல்
” ஸ்ரீமா., தம்பி கணேஷ் ஹி இஸ் கியூட், சோ சாப்ட்..,” மழலையின் சந்தோசம் குரலில் கலகலத்திட
பிறந்தவுடன் தன் கண்ணில் குழந்தையை காட்டும் போதே காதோர மச்சம் தந்தையை ஞாபகப்படுத்த, மகளும் தந்தை பெயரை தனயனுக்கு சொன்னதில், விழியோரம் நீர் கசிய “ம்ம்ம்ம் .,” என முனங்கினாள்.
” என் நவிக்குட்டி வச்ச பேரு சூப்பரா இருக்கே.,” அவளை கையில் தூக்கி கொண்டு ஆரவ்வும் கூறுவதை கேட்டு, யாரும் ஒன்றும் சொல்லாமலே புன்னகைத்தனர்.
“அம்மா ரெஸ்ட் எடுக்கணும்., எல்லாரரையும் கூட்டிட்டு பாப்பு குட்டி குட் கேர்ள்லா வீட்டுக்கு போவாங்கலாம்., நான் அம்மாவை பார்த்துட்டு , அப்பாக்கும் கொஞ்சம் ஒர்க் இருக்கு. முடிச்சிட்டு பாப்புவை கூட்டிட்டு வருவேன். ஓகே . என்றதும் சமத்தாய் மாமனோடு கிளம்பி விட்டாள்.
***
நாட்கள் கடந்த நிலையில் தன் அறையில் இரவில் தன் மகவுகளோடு பேசி சிரித்தபடி இருந்த மனைவியை கண்டவன் மனம் அமைதியுற உள்ளே சென்றான்.
“ப்பா..,” சற்றே குரல் தேய்ந்து ஒலிக்க, அவன் பார்த்தவுடன்
உதட்டில் ஒற்றை விரலை வைத்து கொண்டு “உஷ்., தம்பி இருக்கான்.., மெதுவா பேசணும்., ஓகே., ” தந்தைக்கே கட்டளை போட்டவளை பார்த்து ., ” நீ மொத கத்தாம இருடி.., ” நந்து செல்லமாய் அதட்ட கேட்பாளா அவள்.
அவன் தோளில் ஏறி அமர்ந்து, தலையை களைத்து கொண்டே தம்பியை பற்றி கதையை எல்லாம் கூறி முடித்து, முத்தமிட்டு சேட்டை செய்திருக்க, எப்போதும் போலவே கேட்டு கொண்டே இருந்தான்.
குட்டி விழி உருட்டி, பார்ப்பதை போலவே அங்குமிங்கும் கண்கள் அலை பாய, கைகளை வீசி விளையாடி கொண்டிருந்த மழலையை மடியில் வைத்தபடி, தன் ஆசை எல்லாம் கண்முன் நடைபெற களிப்புடன் கண்டு கொண்டிருந்தாள் நந்திதா.
நேரம் செல்ல செல்ல நிவி உறங்கினால் தானே சின்னவனை தூங்க வைக்க முடியும் என்பதால் ” நேத்து தானே அப்பாட்ட திட்டு வாங்குன, பேசாம தூங்குடி.,” நந்து மீண்டும் அதட்ட,
அவன் மேலிருந்து இறங்கியவள், விழி உருட்டி கோபமாய் பார்த்து ” லெட்ஸ் கோ.., ” விடுவிடுவென ஆரவ் செல்வது போல நடந்தவள், கதவருகே சென்று அவன் போலவே திரும்பி நின்று முறைக்க.
பார்த்து கொண்டிருந்தவனோ ஒன்றுமே சொல்லாமலே அமைதியாய் இருக்க, ” கிளம்புடி காத்து வரட்டும்..,” நந்து கிண்டல் செய்ய.
அடுத்து நிவி கலகலவென சிரித்து, வாயினை ஈயென இளித்து காட்ட.
நந்திதா புரியாமல் ஆரவ் முகம் பார்க்க, ” இவ்ளோ நாள் உன்னை ஸ்ரீனு கூப்பிட்டா. இப்போ சிரிச்சு கூப்பிடுறா., நீயும் பின்னாடி கிளம்பி போ.,” என்றான் சிரிக்காமல்.
“கொழுப்பை பாரு., வர வர ஓவர் சேட்டை. வரேண்டி உன்னை அடிக்காம விடமாட்டேன்.” மடியில் இருந்த குழந்தையை கட்டிலில் படுக்க வைத்து, மகளை அடிக்க இறங்க முயல, அதற்குள் அவள் கீழே ஓடி விட்டாள்.
எத்தனை பணிகளுக்கு நடுவிலும் சிரித்து பேசி, விளையாடி குழந்தையாய் மனம் மகிழும் அவன் இதய கீதம் இன்னிசை படிக்க ஆரம்பிக்க, அவர்களுக்கு தனிமை கொடுத்து நாமும் விடை பெறுவோம். காதல் என்பது கண்கள் பார்த்து, உதடுகள் தீண்டி, உடல்கள் சேரும் நிலை அல்லவே. தனக்கென ஓர் வாழ்வை தேர்ந்தெடுத்தால், அவரின் அனைத்துமாய் நிறைந்து, இன்பம் துன்பம் இணைந்து, மனம் உணர்ந்து, கருத்தொத்து, ஆசைதனை தானாய் உணர்ந்து, உணர்த்தி புரிதலை கொள்ளும் அழகிய நிலை அல்லவா. ஒத்த லட்சியைத்தால் இணைந்து, சேவையை மட்டுமே பிரதானமாக கொண்டு ஓடி கொண்டிருக்கும் இவர்கள் வாழ்வில் பிரச்சனைக்கும் பஞ்சமில்லை. அன்புக்கும் பஞ்சமில்லை. அன்பான கூட்டில் அன்றில் பறவைகளாய் சிறக்கடித்து பறக்கும் இச்சிறு கூட்டில் இளைப்பாறி மனம் மகிழும் வழிப்போக்கர் ஏராளம். அவர்களின் பணியோடு வாழ்வும் சிறந்து விளங்க, வாழ்த்தி நாமும் விடை பெறுவோம்.
error: Content is protected !!