Skip to content
Post Views: 4,855
தூங்கி எழுந்தவுடன் நேராக கிச்சனுக்கு சென்றான் ஜீவா.
வித்யா காபி கலக்கிக் கொண்டு இருக்க, அருகில் கிச்சன் ஸ்லாபில் சாய்ந்து கொண்டு அவளிடம் பேசியபடி நின்று இருந்தாள் வெண்ணிலா.
“குட் மார்னிங் மயூ டார்லிங்!” என்று சொன்னபடி அவன் அம்மாவை பின்னால் இருந்து கட்டிக் கொண்டான் ஜீவா!
Advertisement
“டேய்.. தூங்கி எழுந்ததும் ப்ரஷ் பண்ணி ரெப்ரெஷ் ஆகாம இப்படி கிச்சனுக்குள்ள வரக் கூடாதுன்னு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்.
சரியான அழுக்கு மூட்டை! போடா போய் பல் தேய்ச்சுட்டு வா, காபி தரேன்!” என்றாள் வித்யா கலந்த காபியை வெண்ணிலாவிடம் கொடுத்தபடி.
“மயூ.. நீ என் நிலா முன்னாடி என்னை ரொம்ப தான் டாமேஜ் பண்ற!” செல்லம் கொஞ்சினான் ஜீவா!
Advertisement
அவன் அப்படி தான்!
Advertisement
என்ன தான் அவன் வேகமாக வளர்ந்து வரும் கார்பரேட் கம்பெனியின் சிஇஓ ஆக இருந்தாலும், பிசினெஸில் கலக்கிக் கொண்டிருக்கும் சிறந்த ஆண்மகனாக, நிறைய இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தாலும், வெண்ணிலா போன்றவர்களுக்கு நல்ல மென்டார் ஆக இருந்தாலும் அவன் மயூவிடம் மட்டும் அதே செல்ல மித்து தான்!
இன்னமும் அவளிடம் செல்லம், சலுகை, அடம், பிடிவாதம் எல்லாம் உண்டு!
“என்னது என் நிலாவா?”, வித்யா கொஞ்சம் திகைத்தாள்.
Advertisement
வெண்ணிலா இதை கவனித்திருக்க வில்லை, அவள் சாதாரணமாகவே நின்று கொண்டிருந்தாள்.
திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள் வித்யா மயூ!
டேய்.. திருடா.. என்னமோ சொல்ல வர நீ.. எனக்கும் புரியுது..
ஆனா நீ முழுசா சொல்லாம நானா வாயை திறக்க மாட்டேன்!
இப்ப என்னடா சொன்ன, என் நிலா முன்னாடியா? இத மட்டும் நான் துருவிக் கேட்டேன், அப்படியே பய புள்ள பேச்சை மாத்திடும்!
மயூ.. நான், ஏன் நிலா முன்னாடி என்னை டாமேஜ் பண்றன்னு தானே கேட்டேன் என்று மாத்தி சொல்லுவான்! மனதுள் நினைத்துக் கொண்டவள் சிரித்தபடி, “போடா போய் பல் தேய்ச்சுட்டு வா” மறுபடியும் சொன்னாள் வித்யா.
இவர்கள் பேசட்டும், அம்மாவுக்கும் பிள்ளைக்கும் நடுவில் நிற்க வேண்டாம் என்று நினைத்து அவர்களுக்கு ஸ்பேஸ் கொடுத்து அங்கிருந்த மெல்ல நகர்ந்த வெண்ணிலாவை, ஒரு கை மயூவைக் கட்டிக் கொண்டிருக்க, இன்னொரு கையால் அவளின் கையை இறுகப் பற்றி இணைத்துக்கொண்டு, “நில்லு எங்க போற, இந்த பஞ்சாயத்து அடிக்கடி நடக்கிறது தான்” என்று சொன்னவன் அவள் கையை அவ்வளவு சீக்கிரம் விட வில்லை.
“அவ கையை விடுடா, அவ காபியை குடிக்கட்டும்” என்றாள் வித்யா!
அவள் அப்படி சொன்னதுக்கு அப்புறம் தான் வெண்ணிலாவின் கையை விட்டான் ஜீவா!
தன் இரு கையால் காபி மக்கை பிடித்துக் கொண்டு காபியை ஒரு சிப் அருந்தினாள் வெண்ணிலா.
அதற்குள் அவளின் போன் அடிக்க, காபியை அப்படியே வைத்து விட்டு
போன் அட்டென்ட் பண்ண சென்றாள் வெண்ணிலா.
ஆபிஸ் கால். இரண்டே நிமிடத்தில் பேசி முடித்து விட்டு, திரும்ப வந்த வெண்ணிலா திகைத்தாள்.
அவள் குடித்து விட்டு வைத்திருந்த காபியை இப்போது ஜீவா கையில் வைத்துக் கொண்டு இருந்தான்!
“சார்..அது என் காபி” என்று அவள் சொன்னதை காதில் வாங்காத மாதிரி , கேசுவலாக செல்வது போல எடுத்து குடித்துக் கொண்டே அவன் ரூமிற்கு போய் விட்டான்.
இவள் குரல் கேட்டு திரும்பிய வித்யா , “என்ன உன் காப்பிய அவன் எடுத்துட்டு போயிட்டானா? சரி உனக்கு வேற தரேன்” என்றாள் காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்த வித்யா!
“இல்ல அத.. நான்.. கொஞ்சம்..” சொல்ல வந்ததை அப்படியே விழுங்கி விட்டாள் வெண்ணிலா திகைப்புடன்!
வித்யா ஒரு மாதிரி கேள்வியாக அவளைப் பார்த்து விட்டு,
பின் “உனக்கு உப்புமா ஓகே தானா நிலா, இன்னிக்கு டிபன் அது தான்! காலையில நல்லா தூங்கிட்டேன் நான்! லேட்டாகிடுச்சு!
இது தான சீக்கிரம் பண்ண முடியும்!
என்ன.. மித்துவுக்கு தான்.. அதான் உங்க ஜீவா சாருக்குதான் பிடிக்காது! ஏக ரகளை பண்ணப் போறான்!” என்றாள் சிரித்தபடி!
வெண்ணிலாவும் சிரித்து விட்டு குளித்து ரெடியாக அவள் அறைக்கு சென்றாள்.
வித்யா சொன்ன மாதிரியே அதான் ஆகிற்று!
டிபன் உப்புமா என்றவுடன், “எனக்கு ஆபிஸ்க்கு லேட்டாகிடுச்சு நான் வெளியே பார்த்துக்கிறேன்” என்று எஸ்கேப் ஆக பார்த்தான் ஜீவா!
“டேய்.. மித்து, உதை வாங்கப் போறே” என்ற சத்தம் போட ஆரம்பித்த வித்யாவுக்கு திடீரென்று ஒரு உடலில் ஒரு அசவுகர்யம்!
மின்னலென ஒரு வலி இடுப்பிலும் வயிற்றிலும்.
அவள் “அவனை விடாதே நிலா” என்று சொன்னபடி பாத்ரூமிற்குள் போய் விட்டாள்!
வித்யா பத்து நிமிடங்கள் கழித்து தான் திரும்பி வந்தாள்.
வந்தவள் ஜீவாவின் ரூமை எட்டிப் பார்த்தவள் அப்படியே திகைத்து தான் போய் விட்டாள்.
அங்கே ஜீவா தன் லாப்டாப்பில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்க, அவனுக்கு உப்புமாவை ஸ்பூனில் ஊட்டிக் கொண்டிருந்தாள் வெண்ணிலா!
வெண்ணிலாவுக்கு முதலில் ஜீவாவுக்கு இப்படி ஊட்டி விடும் எண்ணமெல்லாம் இல்லை தான்!
அவன் எங்கே சாப்பிடாமல் போய் விடப் போகிறானோ என்று நினைத்து உப்புமாவை ஒரு பவுலில் எடுத்துக் கொண்டு, அதில் இருந்த மிளகாய் துண்டுகளை அகற்றிவிட்டு, கொஞ்சம் நாட்டு சர்க்கரையை அதில் கலந்து ஒரு ஸ்பூனும் போட்டு எடுத்துக் கொண்டு போய் தான் அவனிடம் சாப்பிடக் கொடுத்தாள் வெண்ணிலா!
“விட மாட்டீங்களே ரெண்டு பேரும்” என்று சொன்னபடி முதலில் இரண்டு ஒரு வாய் சாப்பிட்டவன், பின் வேலை மும்முரத்தில் அதை அப்படியே வைத்து விட்டு தன் லாப்டாப்பில் ஒரு ஆன்லைன் ஆடியோ காலில் கலந்து கொண்டு விட்டான்!
சில நிமிடங்கள் கழித்து அங்கே திரும்பி வந்தவள், அவன் சாப்பிடாமல் வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு விட்டு, ஸ்பூனில் எடுத்து அவன் கையில் கொடுக்க போக அவன் மயூ நினைப்பில் வாயைக் காட்டினான் ஊட்டு என்பது போல!
அவன் கவனம் முழுவதும் அவன் வேலையில்!
கொஞ்சம் திகைத்தாலும் அவனுக்கு ஊட்டி விட்டாள் நிலா! எப்படியோ அவன் சாப்பிட்டால் சரி என்ற நினைப்பில்!
சரியாக அவள் இரண்டாவது ஸ்பூன் ஊட்டும் போது தான் அங்கு வந்த வித்யா இந்த காட்சியைக் கண்டாள்!
அவளுக்கு ஒரே ஆச்சர்யம்!
இந்த பெண்ணிடம் ஏதோ என்னோட ரிசம்லன்ஸ் மித்து பார்த்து இருக்கான். அது தான் அவனுக்கு இவளை ரொம்ப பிடிச்சுருக்கு போல!
அது தான் நான் அவனுக்கு செய்வது போல, யாருமே சொல்லாமலே அவன் விரும்பும் விதமாக செய்கிறாளே ஒவ்வொன்றும்!
அப்படியே தன்னை போலவே!
“டேய் மித்துக் கண்ணா, உன் ஆசை எனக்குப் புரியுதுடா செல்லம்!
அம்மா, அந்த வானத்து சந்திரனைக் கேட்டா கூட உனக்கு வாங்கித் தந்து விடுவாள் என்ற நினைப்பு இல்ல உனக்கு..?
ஆனா, நீ அடம் பிடித்தோ, செல்லம் கொஞ்சியோ, இல்லை சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பியே சின்ன பிள்ளையாக இருக்கும் போது, நீ ஆசைப் படறதை வாங்கித் தர சொல்லி!
அது போல இல்லடா கண்ணா, இது ஆசைப் பட்டவுடனே அம்மா வாங்கித் தர, இது ஒண்ணும் காஸ்ட்லி ஷூவோ, இல்லை டூ வீலரோ இல்லடா!
உயிரும் உணர்வும் உள்ள ஒரு பெண்!
அவளுக்கும் உன் மேல ஆசை விருப்பம் இருக்கணும்!
இப்ப அவளுக்கு உன் மேல இருக்கிறது, குரு பக்தியா, இல்லை நன்றி உணர்ச்சியா? இல்ல அவளுக்குமே உன் மேல் காதலா என்று எல்லாம் தெரிந்த பின் தான் நான் அடுத்தக் கட்டத்திற்கு போக முடியும்!
முதலில் நீயே அவளை நிஜமா தான் காதலிக்கிறியா? இல்லை சும்மா வெறும் ஈர்ப்பா? அத முதல கன்பர்ம் பண்ணனும்!
ஏன் எனக்கு இவ்வளவு யோசனை என்றால், உங்க ஜெனரேசன் அப்படி!
எங்க காலம் மாதிரி இல்ல, உங்க காலம்!
எங்க காலத்தில், ஒன்று நட்பு, இல்லை என்றால் காதல்!
ஆனால் இப்போது இந்த இரண்டிற்கும் இடையில் பல ரிலேஷன்ஷிப் ஸ்டேஜ்கள் உங்க தலைமுறை ஆட்கள் வச்சுருக்கீங்களே!
க்ரஷ், அப்புறம் சிச்சுவேசன்ஷிப் என்றெல்லாம் புரியாத பாஷைகள்!
அதனால மித்துக் கண்ணா, நான் உங்கள நல்லா புரிஞ்சதுக்கப்புறம் மத்த பேச்செல்லாம்!”
என்று மனதுள் நினைத்துக் கொண்டு அவள் அறைக்குள் சென்று விட்டாள் வித்யா!
———
மதியம் போல வீட்டுக்கு வந்தான் ஜீவா.
மயூ வீட்டில் இருந்தால், அவன் லஞ்சுக்கு எப்பவும் வீட்டிற்கு வந்து விடுவான்!
இப்போது வந்தான்.
வந்தவன் ஹாலில் இருக்கும் சோபாவில் படுத்துக் கொண்டிருந்த வித்யாவையும், அருகில் அமர்ந்து அவளின் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்த வெண்ணிலாவையும்!
“ஹே! நிலா நீ ஆபிஸ் போகல?”
“இல்ல மயூம்மாவுக்கு உடம்பு கொஞ்சம் சரியில்ல, அது தான் நான் ஒர்க் ப்ரம் ஹோம் வாங்கிட்டேன்!” என்றாள் நிலா!
“என்ன ஆச்சு மயூ, மறுபடியும் அதே பிரச்சினையா? உன் டாக்டர் அன்னிக்கு சரியாய்டும் சொன்னாங்களே!” கவலையுடன் கேட்டான் ஜீவா.
“சரியாகிடும்! இது எல்லா பொம்பிளைங்களுக்கும் வர பிரச்சினை தான்!
சிலருக்கு ரொம்ப படுத்தாது, சிலருக்கு பாடாய் படுத்தி எடுத்து விடும்! நான் ரெண்டாம் ரகம் போல!” என்றாள் வித்யா வலியுடன் கூடிய புன்னகையுடன்!
வித்யாவிற்கு மெனோபாஸ் பிரச்சினைகள்!
அதிக ரத்தப்போக்கு என்று கொஞ்ச மாதங்களாக ரொம்பவே கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறாள் பாவம்!
இது வரை அனுபவித்தது பத்தாது என்று, இப்போது தான் சில வருடங்களாக அவள் கொஞ்சம் நிம்மதியாய் இருக்கும் அவளுக்கு,
இப்போது இந்த ஹெல்த் பிரச்சினை!
எல்லா பெண்களும் கஷ்டப்பட்டு தாண்டும் இந்த பருவம்!
பெண்கள் பூப்பு அடைவதில் தொடங்கி, அடுத்து பிரசவம் இறுதியாக இந்த மெனோபாஸ் வேறு! இயற்கையால் கொடுக்கப்பட்டது!
வித்யா பூப்படைந்த புதிதில் அவளுக்கு பயங்கர வயிற்று வலி வரும்! அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி விடுவாள்! பள்ளிக்கும் மட்டம் போட்டு விடுவாள்!
அவள் அம்மா இவள் கத்துவது பொறுக்க முடியாமல் ஒரு லேடி டாக்டரிடம் கூட்டிப் போக, “எல்லாம் சரியாகிடும்மா, கொஞ்ச நாளில்” என்று டாக்டர் சொல்ல,
“எத்தனை நாட்களில் சரியாகும்” என்று டாக்டரை குறுக்கு கேள்வி கேட்டாள் வித்யா!
இதைக் கண்ட லதா கடுப்பில் , “ம்ம் உனக்கு கல்யாணம் ஆனவுடனே சரியாகிடும்” என்று சொல்ல,
“அப்ப சீக்கிரம் கல்யாணம் பண்ணி வை” என்று ஒரே அழுகை, அடம்! அந்த பனிரெண்டு வயதில்!
முதலில் சிரித்து விட்ட லதா, வித்யா ரொம்பவும் கேட்டு அழ, ஓங்கி ஒன்று கொடுத்து தூங்க வைத்தார்!
அழுதுக் கொண்டே தூங்கும் வித்யாவைக் கண்டு அரசு லதா மீது கோபப்பட, காரணத்தை சொன்னவுடன் அவரும் விழுந்து விழுந்து சிரித்தார்!
இந்த நிகழ்வை இப்போது நினைத்தாலும் வித்யாவிற்கு சிரிப்பு வரும்!
இப்போதும் அதை நினைத்து சிரிக்க, அருகில் இருந்த வெண்ணிலா,” ஏன் மயூம்மா சிரிக்கிறீங்க?” என்று கேட்டாள்.
அவளிடம் தன்னுடைய சின்ன வயது கதையை சொன்னாள் வித்யா!
“ரொம்ப இன்னாசென்ட் ஆ இருந்து இருக்கீங்க மயூம்மா” என்றாள் வெண்ணிலா!
வார்த்தைக்கு வார்த்தை வெண்ணிலாவின் இந்த மயூம்மா, இது வித்யாவிற்கு ரொம்பவும் பிடித்துப் போய் விட்டது!
அவளுக்கும் ராகவிற்கும் மித்துவிற்கு பிறகு, இன்னொரு பெண் பிள்ளைப் பெற்றுக் கொள்ள ரொம்பவும் ஆசை!
“மகாலக்ஷ்மி வேண்டும் , மஹாலக்ஷ்மி வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே இருப்பான் ராகவ்!
ஆனால் கொடுத்து வைக்க வில்லை!
இப்போது இந்த வெண்ணிலா இப்படி மயூம்மா.. மயூம்மா என்று அழைக்கையில், அப்படி ஒரு சந்தோசம் வித்யாவுக்கு!
பின்னே! இது வெறும் வாய் வார்த்தை மட்டுமில்லை என்று தான் அவள் நிரூபித்து விட்டாளே சில மணி நேரம் முன்பு!
மதியம் பாத்ரூமுக்குள் சென்ற வித்யா ரொம்ப நேரம் ஆகியும் வெளியே வராததால், வெண்ணிலா வெளியே இருந்து குரல் கொடுத்தாள்!
“மயூம்மா, என்ன ஆச்சு, ஏன் இவ்வளவு நேரம் உள்ளேயே இருக்கீங்க?”
“ம்ம்.” மெல்ல முனகியப் படி பதில் சொன்னாள் வித்யா உள்ளே இருந்த படி!
“பேட் மாத்த தான் வந்தேன்மா, கொஞ்சம் கேரா இருக்கு, அது தான் அப்படியே சாய்ஞ்சு நின்னுகிட்டு இருக்கேன், வந்துடறேன் பயப்படாதே!”
“மாத்திட்டீங்களா?”
“ம்ம். ஆனா பழச இன்னும் டிஸ்போஸ் பண்ணல!”
“நீங்க வெளியே வாங்க முதல்ல” என்று சொன்ன வெண்ணிலா, அவளை வெளியே அழைத்து வந்து சோபாவில் படுக்க வைத்து விட்டு, அவள் போய் மிச்ச வேலைகளை செய்து விட்டு கை கழுவி விட்டு வந்தாள்!
“ஏன் மயூம்மா, என்னை கூப்பிட்டு இருக்கலாம் இல்ல! என் அம்மா வசந்தாவுக்கும் இப்படி தான் இருந்தது போன வருஷம் எல்லாம்! நான் தான் அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணுவேன்!”
“உன் அம்மா ரொம்ப கொடுத்து வச்சவங்க! உங்க அம்மா மட்டுமில்ல பெண் குழந்தைகளைப் பெத்த எல்லா அம்மாவுமே!
இது மாதிரி உடம்பு முடியாத சமயத்துல பெண் குழந்தைகள் தானே அம்மாவுக்கு துணை!” மெல்லியக் குரலில் சொன்னாள் வித்யா!
“ம்ம். அப்படி தான் சொன்னாங்க, எங்க அம்மாவுக்கு முடியாம ஹாஸ்பிட்டலில் சேர்த்தப்போ!
நாங்க சிஸ்டர்ஸ் மூணு பேரும் மாத்தி மாத்தி அம்மா கூடவே இருந்துப் பார்த்துப்போம் அப்ப!
அப்ப அந்த ஹாஸ்பிட்டலில் இருந்தா நர்ஸ்கள் முதல் ஆயாம்மா வரை இப்படி தான் சொன்னாங்க அம்மாவைப் பார்த்து!” என்றாள் வெண்ணிலா!
“இப்ப இங்க எனக்கு மகளாட்டம் சர்வீஸ் பண்ற இல்ல நிலா? ரொம்ப தேங்க்ஸ்” என்றாள் வித்யா!
“மகள் மாதிரின்னு சொல்லிட்டு அப்புறம் எதுக்கு மயூம்மா தாங்க்ஸ் எல்லாம்!”
“ம்ம். அதுவும் சரி.. .” அவளின் தலையை ஆதூரமாக தடவிக் கொடுத்தாள் வித்யா!
அவளின் தோளின் மேல் சாய்ந்து கொண்டாள் வெண்ணிலா!
இதை நினைத்துக் கொண்ட வித்யா, நிலா ரொம்ப நேரமாக கால் பிடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து,
“போதும் வெண்ணிலா” என்றபடி எழுந்து உட்கார்ந்தாள் வித்யா!
அதற்குள் ரெப்ரெஷ் ஆகி வந்தான் ஜீவா.
இவ தாண்டா என்னை அப்படி பார்த்துக்கிட்டா! வித்யா, வெண்ணிலாவைத் தோளோடு அணைத்துக் கொண்டு சொன்னாள்.
“மயூ திஸ் இஸ் டூ பேட்! நீ என்னை மட்டும் தான் இப்படி கொஞ்சனும்!” மயூவிடம் பொசசிவ் காட்டினான் ஜீவா!
“நீயும் வாடா! அவனை இன்னொரு பக்கம் அமர வைத்துக் கொண்டு அவனையும் அணைத்துக் கொண்டாள் வித்யா!
மயூவின் ஒரு பக்கம் ஜீவா, இன்னொரு பக்கம் நிலா!
அதை அப்படியே தன் மொபைலில் செல்பியாக எடுத்தான் ஜீவா!
——-
மாலை நேரம்.
வித்யா வீட்டுக்குத் தேவையான மாதாந்திர மளிகைப் பொருட்கள் வாங்கி வர சொல்லி ஜீவாவையும் வெண்ணிலாவையும் கடைக்கு அனுப்பி விட்டாள்.
அந்த சூப்பர் மார்க்கெட் கடையில் தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துப் போட்டுக் கொண்டு ட்ராலியை தள்ளியபடி இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டே வந்தார்கள்!
ஒரு நல்ல பொறுப்பான குடும்பத் தலைவியைப் போல இருந்தது அவளின் பர்ச்சேஸ்!
அதை ரசித்துக் கொண்டே, கூடவே அவளையும் ரசித்துக் கொண்டே வந்தான் ஜீவா.
ட்ராலியை தள்ளிக் கொண்டு வந்தவர்கள் எதிரே வந்த இன்னொருவரின் ட்ராலியில் இடித்து விட்டு சாரி சொல்லித் திருப்பி விட்டு நிமிர்ந்துப் பார்த்த வெண்ணிலா கொஞ்சம் அதிர்ந்து போனாள்.
அவள் இடித்தது அவள் ஊர் வில்லன் வினயின் ட்ராலியைத் தான்!
“என்ன வெண்ணிலா எப்படி இருக்க?” என்ற அவனின் கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து போய் விட்டாள் வெண்ணிலா!
வினயின் முகம் கோபத்தால் சுருங்கியது!
“ஏண்டி, இங்க இன்னமும் இவனோட கூத்து அடிச்சுட்டு தான் இருக்கியா?
இரு உன் ரோசக்கார அப்பனிடம் இதை போட்டு விட்டு உன்னை இங்கேர்ந்து தூக்கி வந்து, நானே உன்னைக் கல்யாணம் பண்ணி என் வீட்டுல போட்டு அடைச்சு வைக்கிறேன்!”
ஆளு முன்னமே ரொம்ப சூப்பரா இருப்பா, இப்ப இன்னும் மினு மினுன்னு இல்ல இருக்கா! ஏதோ இங்கயே பிறந்து வளர்ந்த மாதிரி!
நடையும் உடையும் உன் இங்கிலிஷ் பேச்சும்!
“எங்க ஊர்ல பால் வண்டி ஓட்டிட்டு இருந்த நீ இங்க கார் ஓட்டிட்டு வரியா?
இந்த டவுன் காரனை நல்லா வளைச்சுப் போட்டுகிட்ட போல? உள்ளூரக் காரன்னா மட்டும் உனக்கு கசக்குது!” என்று மனதில் கறுவியபடி, ஜோடியாக சிரித்துக் கொண்டே போகும் அவர்களை தன் செல்போனில் அவர்களுக்குத் தெரியாமல் வளைத்து வளைத்து போட்டோக்கள் எடுத்துக் கொண்டான் வினய்!
error: Content is protected !!