Skip to content
Post Views: 650
“என்னங்க இங்க வாங்க. அத்தை, மாமா, அப்பா, அம்மா எல்லாரும் இங்க வாங்க” என கத்தினாள் சிவகாமி. அந்த சத்தத்தில் சமையலறையை விட்டு வெளியே வந்த வள்ளியம்மை தன் எதிரே வந்த மகனைப் பார்த்து “ஏன்டா செந்தில் உன் பொண்டாட்டி ஏன் காலையிலேயே இப்படி கத்திட்டு இருக்கா”
“தெரியல மா வாங்க போய் பாப்போம்”என்று சொல்லி தனது அன்னையை அழைத்து கொண்டு வீட்டின் நுழைவாசலுக்கு வந்தார் செந்தில் முருகன்.
அங்கே எதையோ பார்த்து அதிர்ச்சியுடன் அசையாமல் நின்ற தனது மனைவியை பார்த்து, “ஏண்டி காலையிலேயே அந்த கத்து கத்துற. என்னவோ ஏதோ வந்து பார்த்தா இங்கே அசையமா நின்னுட்டு இருக்க உனக்கு என்னடி ஆச்சு” என்று அவளை அசைத்தார் செந்தில் முருகன்.
“வரவர உன் பொண்டாட்டிக்கு குசும்பு ஜாஸ்தி ஆயிடும்னு நினைக்கிறேன். எப்படி கத்திட்டு இப்போ ஒண்ணுமே தெரியாத பாப்பா மாதிரி இருக்கா பாருடா” என்றார் கோபமாக வள்ளியம்மை.
Advertisement
“ஐயோ அத்தை என்ன திட்டுறத விட்டுட்டு அங்க பாருங்க” என்றாள் அதிர்ச்சியுடன் சிவகாமி.
“என்னத்த பாக்க சொல்ற” என்று அங்கே திரும்பி பார்க்க அங்கு நின்று மாறனை பார்த்து, “ ஏண்டி லூசு உன் தம்பி தான நிக்கிறான் அதுக்கு ஏன் இந்த கத்து கத்துற வரவர மெண்டல் ஆயிட்டியா என்ன”
“அத்தை நான் ஒன்னும் மெண்டல் ஆகல உங்களுக்கு தான் கண்ணு பீஸ் போய்ட்டு நினைக்கேன் அந்த பக்கம் பாருங்க யாருன்னு இருக்கானு” என்றாள் கடுப்புடன்
Advertisement
அதற்குள் வீட்டிலிருந்த அனைவரும் வெளியே வந்து விட அங்கே நின்றவளை அதிர்ச்சியுடன் பார்த்தனர். ஆனால் ஒருத்தி மட்டும் வெளியே வராமல் தன் கைபேசியில் யாரையோ அழைத்துக் கொண்டு இருந்தாள்.
Advertisement
“ எனக்காக கண்ணு தெரியலன்னு சொல்ற உன்னை அப்புறமா வைச்சிக்கிறேன்” என்றவர் திரும்பி அங்கே பார்த்து, “டேய் மாறா யாருடா இது நம்ம அமிழ்தினி மாதிரியே இருக்கா” என்றார் அவளை வியந்து பார்த்தபடி வள்ளியம்மை.
“ஆமா அத்தை பாருங்களேன் அப்படியே நம்ம அமிழ் குட்டி மாதிரியே இருக்கா. செல்லம் உன் பேர் என்ன. டேய் மாறா இவள எங்கடா பார்த்த. இவ ஊர் எங்கடா இருக்கு. இவளுக்கு யாரும் இல்லையா எப்படி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்த. என்னடா நான் கேட்டுட்டே இருக்கேன் பதில் சொல்லாமல் அப்படியே நிற்க” என்று பதில் சொல்ல விடாமல் பேசிக்கொண்டு இருந்த தனது அக்காவை பார்த்து பல்லை கடித்து, “நீ கேக்குற எல்லா கேள்விக்கும் இங்கேயே நின்னு பதில் சொல்லுமா என்ன” என்றான் கடுப்புடன் மாறன்.
“ ஏன்டி நீ கேப் விட்டா தான அவன் பதில் சொல்லுவான். சரி நீ நகரு அவன் உள்ள வரட்டும் ஏம்மா நீயும் உள்ள வாமா. என்ன எல்லாரும் பாத்துட்டு இருக்கீங்க போங்க உள்ள. அவங்க உள்ள வந்து பதில் சொல்லுவாங்க. என்ன உனக்கு மட்டும் தனியா சொல்லுமா பிரபாவதி நீ உள்ள போ எல்லா கேள்விக்கும் பதில் மாறன் சொல்லுவான்” என்று சொல்லி எல்லோரையும் உள்ளே அழைத்துக் கொண்டு சென்றார் வள்ளியம்மை.
Advertisement
@@@@@@@@@@@@@@
“இந்த அம்மாவுக்கு என்ன தான் ஆச்சி போன் பண்ணா எடுக்க மாட்டேங்குறாங்க. நான் இங்க வந்தத சொல்லலாம் நெனைச்சா போன் எடுக்காம என்னதான் பண்ணுதோ. எத்தனை டைம் தான் பண்ணுறதோ” என சொல்லிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவள். அங்கே அனைவரும் அமர்ந்திருப்பதை பார்த்து, “என்ன எல்லோரும் ஒன்னா கூடி இருக்காங்க. ஆனா நம்ம ஆள காணலையே” என்று ஒவ்வொருவராக பார்த்துக் கொண்டு வந்தவள் அங்கே அமர்ந்திருந்தவளை பார்த்து அப்படியே அதிர்ந்து நின்றாள்.
அவள் வந்ததை பார்த்த வள்ளியம்மை பாட்டி, “என்னம்மா அப்படியே நிக்க இங்க வா இந்த பொண்ண பாரு அப்படியே உன்ன மாதிரி இருக்கு. நம்ம மாறன் தான் இவள கூட்டிட்டு வந்து இருக்கான். அதான் யாரு என்னன்னு விசாரிச்சிக்கிட்டு இருக்கோம்”என்று தன் அருகில் அழைத்து அவர் அமர்ந்து இருந்த இருக்கையில் பக்கத்தில் உக்கார வைத்தார்.
“மாறா எல்லாரும் வந்தாச்சி. இப்ப நீ சொல்லு இது யாரு இவங்க ஏன் நம்ம அமிழ்தினி மாதிரியே இருக்காங்க. இவங்கள நீ எங்க பார்த்த எல்லாத்தையும் ஒன் பை ஒன்னா கரெக்டா சொல்லு” என்றார் செந்தில் முருகன்.
எல்லோரும் ஆவலாக அவன் சொல்லும் வார்த்தைக்காக மாறன் முகத்தையே பார்த்திருக்க ஆனால் பிரபாவதி மட்டும் அவன் அருகில் அமர்ந்திருந்தவளை விடாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
மாறனும் அங்கே அமர்ந்திருந்த தனது தாய்மாமா மயில்வாகனார் முகத்தைப் பார்த்துவிட்டு குரலை செருமிக் கொண்டு, “மாமா நான் எல்லாத்தையும் சொல்றத விட முக்கியமான ஒருத்தர கூப்பிட கவின் போயிருக்கான் . அவர கூட்டிட்டு வந்த பிறகு எல்லாத்தையும் உங்களோட மருமகன் கவின் சொல்லுவான். ஏன்னா அவன் தான் இந்த பிரச்சனையோட ஆரம்ப புள்ளியை கண்டுபிடிச்சி எல்லாத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது. அதனால அவன் வர்ற வரைக்கும் கொஞ்ச நேரம் எல்லாரும் வெயிட் பண்ணுவோம்” என்றான் மாறன்.
“யாருப்பா அந்த முக்கியமான ஒருத்தர் அவரை கூப்பிட ஏன் சின்ன மாப்பிள்ளை போகணும். பெரிய மாப்பிள்ளை உங்களுக்கு ஏதாவது தெரியுமா”என்றார் பழனி முருகன்.
“எனக்கு எதுவும் தெரியாது மாமா நானே இவங்க ரெண்டு பேரையும் பார்த்து குழம்பி போய் இருக்கீங்க எப்படி ஒரே மாதிரி ரெண்டு பேரு இருக்க முடியும். ஒரு பிரசவத்துல பிறந்த நானும் கவினுமே வேற வேற மாதிரி இருக்கோம் ஆனா இவங்க மட்டும் எப்படி ஒண்ணா இருக்காங்கனு யோசிச்சிகிட்டு இருக்கேன்” என்றான் குழப்பமாக இன்பா.
“ டேய் மாப்ள உனக்கு இது கூட தெரியலையா அது தான் உலகத்துல ஒரே மாதிரி ஏழு பேரு இருக்காங்கன்னு சொல்றாங்கல்ல அதுல ஒருத்தங்க இவங்களா இருப்பாங்களா இருக்கும். எங்க உங்களை மாதிரி இன்னும் எத்தனை பேர் இருக்காங்க. அவங்களாம் எங்க இருப்பாங்கன்னு உங்களுக்கு தெரியுமா ஏன் சொல்றேன்னா மொத்தமா எல்லாத்தையும் பாத்துட்டா உங்கள வச்சு ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சு சம்பாதிக்கலாம்ல அதான் சொல்றேன்” என்றான் தீபக்.
“டேய் கொஞ்ச நேரம் அமைதியா இருடா. இங்கே எவ்வளவு பெரிய பிரச்சனை போயிட்டு இருக்கு இப்போ வந்து காமெடி பண்ணிட்டு இருக்க கொஞ்ச நேரம் உன் வாய் வச்சுட்டு சும்மா இரு” என்றான் கோவமாக மாறன்.
“ஏன் மாப்பிள்ளை இந்த மாறன் அண்ணா ஏன் இவ்ளோ கோபப்படுது.
சும்மா வீட்ல இருந்து சம்பாதிக்க ஒரு வழி சொன்னா ரொம்ப தான் கோபப்படுது சரியில்லையே. உன் தம்பி வேற இங்க வந்ததிலிருந்து ஒரு மாதிரி மந்திரிச்சி விட்ட மாதிரியே திரிஞ்சான் என்னடா பிரச்சனை பெரிசா இருக்குமோ” என்று சந்தேகமாக இன்பா காதில் சொன்னான் தீபக்.
“எனக்கும் அப்படிதான்டா தோணுது. வெயிட் பண்ணி பார்ப்போம் என்ன தான் நடக்குதுன்னு. அதுவரை நீ கொஞ்சம் வாயை மூடிட்டு இருடா மாப்ள ”
“நீ சொல்லிட்ட இல்ல இனி எக்காரணம் கொண்டும் நான் என் வாயை திறக்க மாட்டேன் மாப்ள”
“சரிடா நீ அவன் வந்த பிறகு எல்லாத்துக்கும் பதில் சொல்லு. நான் இப்ப இந்த பொண்ணு கிட்ட பேசுறேன் யம்மா பெண்ணே உன் பேர் என்ன” என்றார் பார்வதி
அதற்கு பதில் சொல்லாமல் தன் அருகில் இருந்தவனை முறைத்துப் பார்த்தாள் அவள்.
“என்ன என்னமா பாக்குற அவங்க தான் கேட்கிறாங்கள உன் பேர சொல்லு” என்றான் நக்கலாக மாறன்.
அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டே, “ஆனந்த அமிழ்தினி” என்றாள் அவள். அந்தப் பேரை கேட்டவுடன், “அட பாருங்களேன் அண்ணி இவ பேர் கூட நம்ம அமிழ்தினி கூட ஒத்துப் போகுது” என்றார் ஆச்சரியமாக.
அதுவரை அமைதியாக இருந்த பிரபாவதி, “உன்னோட அம்மா அப்பா பெயர் என்ன” என்றாள் சந்தேகமாக அவளைப் பார்த்துக் கொண்டு
இப்போது அவரை முறைத்துக் கொண்டு சத்தமாக, “ என்னோட பேர் ஆனந்த அமிழ்தினி, என்னோட அப்பா பேரு பழனி முருகன், அம்மா பேரு பிரபாவதி, தாத்தா பேரு மயில்வாகனார், பாட்டி பேர் வள்ளியம்மை, அத்தை பேரு பார்வதி, மாமா பேரு சிவசாமி, பெரியப்பா பேரு செந்தில் முருகன், பெரியம்மா பேரு சிவகாமி, தங்கச்சி பேரு இனிய அமிழ்தினி, தம்பி பேரு விசாகன், அப்புறம் கடைசியா என்னோட அத்தான் பேரு இளமாறன் போதுமா இல்லை இன்னும் என்னோட ஊரு பேரு வீட்டு அட்ரஸ் எல்லாத்தையும் சொல்லனுமா என்ன” என்று ஒவ்வொருவர் பெயர் சொல்லும் போதும் அவர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டு சொன்னவள் கடைசியாக மாறனை பார்த்து ஒருவித நக்கல் சிரிப்புடன், “எல்லாம் கரெக்டா சொன்னா அத்தான்”.
அவள் சொன்னதே கேட்டு அதிர்ச்சியுடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றவர்கள். அவள் சொன்னதை கேட்டு மாறன் முகத்தை பார்த்தனர்.
“கரெக்டா சொன்ன டி செல்லகுட்டி” என்று அவளின் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சியவன் அவளின் முறைப்பைப் பார்த்து, “அப்புறம்மா இதுதான் நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு” என்று ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்தவர்களுக்கு இன்னொரு குண்டை சத்தம் இல்லாமல் இறக்கினான்.
அதுவரை அவனை முறைத்துக் கொண்டு இருந்தவள் இப்போது இது சொல்வான் என்று தெரியாததால் கண்களை விரித்து அவனைப் பார்த்தாள். அதற்கு கூலாக பதில் பார்வை பார்த்து கண்களை சிமிட்டினான் மாறன்.
அதுவரை அமைதியாக தனது மருமகன் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்த மயில் வாகனார், “மச்சான் பாருங்க என் மாப்பிள்ளைய எவ்வளவு பெரிய விஷயத்தை சத்தம் இல்லாம சொல்லிட்டான் பாத்தீங்களா” என்று பெருமையாக தனது பக்கத்தில் அமர்ந்திருந்த சிவசாமியுடன் சொன்னார்.
“எல்லாம் நீங்க இருக்கிற தைரியம் தான் மாப்ள. நீங்க சொன்னா உங்க தங்கச்சி கேட்டுட்டு போவா தான் அவன் இப்படி பேசிகிட்டு இருக்கான்” என்று சத்தம் இல்லாமல் இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
“டேய் என்னடா சொல்ற முதல்ல அவ சொன்னதே எங்களால தாங்க முடியல அதுவே குழப்பமா இருக்கு. அதுக்குள்ள நீ வேற ஏண்டா ஒரு குண்டா தூக்கி போடுற. ஒழுங்கா என்ன நடந்துச்சுன்னு சொல்ல போறீங்களா இல்லையா” என்று மாறனை பார்த்து கத்த தொடங்கினார் செந்தில் முருகன்.
“மாமா எல்லாத்துக்கான பதில் நான் சொல்றேன்” என்றான் வெளி வாசலில் நின்று கவின்.
அப்படியே எல்லோரும் திரும்பி அவனை பார்க்க, “வாங்க மாமா ஏன் வெளியே நிக்கிறீங்க” என்று தனது பின்னாடி வந்தவரை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தான் கவின்.
அவன் பின்னால் வந்தவரை பார்த்து எல்லாரும் யார் என்று தெரியாததால் குழம்பி நிற்க ஆனால் இருவர் மட்டும் ஒன்றாக, “அப்பா”, “அத்தான்”என்று ஒருவர் அதிர்ச்சியோடும் மற்றொருவர் பாசத்துடனும் அழைத்தனர்.
error: Content is protected !!