Skip to content
Post Views: 5,742
நிறம் பாராத காதல்
அத்தியாயம். 5
“என்ன சொல்ற நம்ம வீட்டுக்குப் போலீஸா? என்ற மாறன் இருக்கையிலிருந்து எழுந்து வாசலை நோக்கிச் சென்றான் .
“போலீஸ் இல்ல, நான் உங்க மச்சான்.”என்று சொல்லிக்கொண்டே இன்ஸ்பெக்டர் விக்ரம் உள்ளே நுழைந்தான் .
Advertisement
விக்ரமை பார்த்த வேதநாயகி ,”டேய் விக்ரா..எப்படி டா இருக்க ?” என்று நலம் விசாரித்தவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான் விக்ரம் .
காவல்துறை உடுப்பில் விக்ரமை பார்த்த வைதேகி உடல் நடுங்கி அங்கிருந்த தூணின் பின்னே சென்று ஒளிந்துக் கொண்டவளை சந்தேகமாகப் பார்த்தான் ரணதீரன் .
“டேய் மச்சான் விக்ரா எப்படி டா இருக்க ?” என்ற மாறனும் இன்ஸ்பெக்டர் விக்ரமை கட்டி அணைத்தவன் அவனின் கைப் பிடித்து உள்ளே அழைத்து வந்தான் .
Advertisement
“என்னடா விக்ரா எப்படி இருக்க? இந்த அக்காவை மறந்துட்டியா?” என்ற மாயாவை விக்ரா அன்போடு கட்டிக்கொண்டவன் ,”நல்லா இருக்கேன் அக்கா நீங்க எப்படி இருக்கீங்க?” என்ற விக்ரமை கண்டுக்கொள்ளாமல் அமர்ந்து இருந்தான் ரணதீரன் .
Advertisement
“நாங்க எல்லோரும் நலமா இருக்கோம். நீ வந்து இப்படி உக்காரு. ஆமா எங்க வைதேகி?” என்ற வேதநாயகியின் அழைப்பில் அச்சதுடன் தூணின் பின்னே இருந்து வந்து நின்ற வைதேகியின் அழகில் ஒரு கணம் விக்ரம் கண்கள் இமைக்க மறந்தவன், “யாரு இந்தத் தேவதை?” என்று மனதில் எண்ணிக் கொண்டான்.
“விக்ரா..இவ தான் உன் அண்ணி. பெயர் வைதேகி” என்று வேதநாயகி சொன்னதும் விக்ரமனின் முகம் மாறியது.
“என்ன அண்ணியா? என்ன பெரியம்மா சொல்லுறீங்க?” என விக்ரம் சந்தேகத்துடன் கேக்க, “ஆமா விக்ரா, உன் அண்ணன் ரணதீரனுக்கு வைதேகியை தான் கல்யாணம் பண்ணி வைக்கப் போறோம். அம்மாடி வைதேகி இங்கே வா மா.” என்று தன் அருகில் அழைத்த வேதநாயகியின் பக்கம் வந்து நின்ற வைதேகியன் முகத்தில் முத்து முத்தாக வியர்வை துளிகள் படர ஆரம்பித்தது.
Advertisement
“வைதேகி இவன் தான் விக்ரம்.
என் தங்கச்சி பையன்.
நமக்குத் தூரத்து சொந்தம்.
நல்ல பையன்.” என்று வேதநாயகி விக்ரமை அறிமுகப்படுத்தி வைத்ததும், “வணக்கம்.” என்ற வைதேகியின் கண்கள் மாறனை காண, மாறனோ கண்களால் அவளைப் பயம் கொள்ள வேண்டாம் என்று சமாதானம் செய்ய, இந்தக் காட்சிகளை எல்லாம் இருக்கையில் அமர்ந்தப்படி சாப்பிட்டுக் கொண்டே கவனித்து இருந்தான் ரணதீரன்.
“அப்புறம் விக்ரா.. வீட்டுல சித்தி சித்தப்பா எப்படி இருக்காங்க? ஆமா நீ என்னடா வீட்டுக்குப் போலீஸ் ட்ரேஸ்ல வந்து இருக்க?” என்று மாயா கேட்டதும்,
“நான் பக்கத்து ஊர்ல தான் அக்கா இன்ஸ்பெக்டரா சார்ஜ் எடுத்து இருக்கேன்.” என்ற விக்ரமின் பார்வை வைதேகி மீது இருந்து அகலவே இல்லை.
“நல்ல விஷயம் விக்ரா. பரவாயில்ல!! நீ ஆசைப்பட்டது போலவே போலீஸ் ஆகிட்ட, ரொம்ப சந்தோசம்.” என்ற வேதநாயகி இருக்கையில் அமர்ந்தவர், “அம்மாடி வைதேகி வா சாப்பிடலாம். விக்ரா நீயும் வந்து உட்காரு.” என்றதும் விக்ராவும் வைதேகியும் எதிர் எதிரே அமர்ந்துக் கொண்டார்கள்.
“டேய் ராணா.. உன் தம்பி வந்து இருக்கான் அவன் கிட்ட பேசாம நீ என்னடா சாப்பிட்டுக்கிட்டே இருக்க? விக்ரா கிட்ட பேசு.” என்று வேதநாயகி சொன்னதும்,
“நான் பேசுறதுக்கு என்ன இருக்கு. ” என்ற ரணதீரனின் வார்த்தையில் விக்ராவின் முகம் மாறிப்போனது.
“இன்னுமா உங்க ரெண்டு பேருக்கும் சண்டை முடியல? ” என்ற வேதநாயகி விக்ரமுக்கு சாப்பாட்டை பரிமாற,
“பெரியம்மா..நான் வேலை விஷயமா வந்து இருக்கேன். எனக்குச் சாப்பாடு வேணாம்? ” என்ற விக்ரம் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு பெண்ணின் புகைப்படத்தை எடுத்தான்.
“வேலை விஷயமா வந்து இருக்கியா? ஏன் உன்னைப் போலீஸ் வேலையில இருந்து துரத்தி விட்டுட்டாங்களா? உனக்கு இந்த எஸ்டேட்ல வேற வேலை வேணுமா? ” என்ற கீதாவின் கேள்வியில் ரணதீரன் சத்தமாகச் சிரித்ததும் விக்ரம் அவனை ஏகத்துக்கும் முறைத்தான்.
“ஐயோ அம்மா சும்மா இருங்க, விக்ரா என்ன விஷயமா?” என்று மாறன் கேக்க,
“இந்தப் பொண்ணை காணோம்ன்னு கம்பளைண்ட் வந்து இருக்கு, அதான் இந்தப் பொண்ணை பற்றி உங்ககிட்ட விசாரிச்சிட்டு போகலாம்னு வந்தேன்.” என்றான் விக்ரம்.
“எங்க போட்டோவைக் கொடு பாப்போம்.” என்ற மாயா புகைப்படத்தை வாங்கி பார்க்க, “மாமா..இந்தப் பொண்ணு, இந்தப் பொண்ணு நம்ம கம்பெனில வேலை பார்த்த மாதிரி இருக்கே, இங்க பாருங்க போட்டோவை.” என்று மாறனிடம் புகைப்படத்தை நீட்டினாள் மாயா.
புகைப்படத்தை உற்று பார்த்த மாறன், “ஆமா விக்ரா இந்தப் பொண்ணு நம்ம கம்பெனில தான் வேலை பார்த்தாங்க, ஆனா போன மாசமே இவங்களுக்கு கல்யாணம் முடிவானதால கம்பெனிக்கு வரது
இல்ல.” என்றான் மாறன்.
“நீங்கச் சொல்றது சரிதான் மாமா. போன வாரம் இவங்களுக்கு கல்யாணம் நடக்கறதா இருந்துச்சு. ஆனா அந்தக் கல்யாணம் நடக்கல.” என்று விக்ரம் சொன்னான்.
“அப்படியா!! ஆனா அந்த விஷயம் எங்களுக்குத் தெரியாது. ஏன் கல்யாணம் நடக்கல? இப்போ இந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு? நீயேன் இந்தப் பொண்ணோட போட்டோவை வச்சிருக்க?” என்று மாயா தன் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, “போன வாரம் இந்தப் பொண்ணுக்கு நடக்க இருந்த கல்யாணம் நின்னுடுச்சு, ஆனா மறுநாளிலிருந்து இந்தப் பொண்ணை காணோம்.” என்றான் விக்ரம்.
“எதாவது காதல் விவாகரமா இருக்கும். அதான் பொண்ணு எஸ்கேப் ஆகிருக்கும்.” என்று மாயா சொன்னதும்,
“மருமகளே..ஒரு பொண்ணை காணோம்னா அவங்க குடும்பத்துக்கு அது எவ்ளோ பெரிய துயரம் தெரியுமா? நம்ம அதை நினைத்துக் கவலைப்படலைனா கூடத் தெரியாம எதையாவது பேசிடக் கூடாது.” என்றார் மாறனின் அம்மா கீதா.
“ஆமா.. நீங்க சொல்லுறது உண்மை தான். இந்த பொண்ணோட பெயர் ரம்யா. நான் விசாரிச்ச வரைக்கும் இந்த பொண்ணுக்கு அந்த மாதிரி காதல் விவகாரம் எல்லாம் இல்லை.” என்ற விக்ரம் வேதநாயகி அருகே பதற்றமாக அமர்ந்து இருந்த வைதேகியை சந்தேகமாகவே பார்த்துக் கொண்டு இருந்தான்.
“சரி.. இப்போ இந்த பொண்ணு காணாமல் போனதுக்கு நாங்க என்ன பண்ண முடியும் இன்ஸ்பெக்டர் விக்ரம்?” என்ற ரணதீரனின் திடீர் கேள்வியில் விக்ரம் அவனை பார்த்து கிண்டலாக சிரித்தான்.
“சொல்லுங்க இன்ஸ்பெக்டர் விக்ரம். இந்தப் போட்டோவைத் தூக்கிட்டு இங்க ஏன் வந்திங்க?” என்று ரணதீரன் கேக்க,
“ராணா என்ன நீ? விக்ரா உனக்குத் தம்பி முறை தானே, ஏன் அவன்கிட்ட இப்படி கோவமாகப் பேசுற?” என்று கேட்டார் வேதநாயகி.
“அம்மா..அவரு தானே சொன்னாரு இங்க வேலை விஷயமா தான் வந்து இருக்கேன்னு, அப்புறம் என்ன? என்ன கேட்கணுமோ அதைக் கேட்டுட்டு சீக்கிரமா கிளம்ப சொல்லுங்க. நம்ம சாப்பிட வேணாமா?” என்ற ரணதீரன் அவன் தட்டில் இருந்த சாப்பாட்டை குழந்தை மயிழினிக்கு ஊட்டி விட்டான்.
வேதநாயகியின் சொந்தக்கார பையன் தான் விக்ரம். விக்ரம் பார்க்க அழகாகவும் நிறம் கூடுதலாகவும் இருப்பான்.
ரணதீரனும் விக்ரமும் ஒரே கல்லூரியில் தான் படித்தார்கள். கல்லூரியின் நாயகன் என்றால் அது விக்ரமன் தான்.
அவன்மீது அப்போதே சில பெண்களுக்கு ஈர்ப்பு இருக்க தான் செய்தது.
ஆனால் விக்ரம் அவர்களை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவான்.
ரணதீரனுக்கு விக்ரமை கண்டாலே ஆகாது. அதற்க்கு காரணம் ஒரு முறை கல்லூரி நாட்களில் விக்ரமனின் நண்பர்கள் சில பேர் ரணதீரனின் நிறத்தை வைத்து அவனைத் தலைகுறைவாகப் பேசும்பொழுது அவர்களைக் கண்டிக்காமல் விக்ரமும் சேர்ந்து சிரித்துக்கொண்டு இருந்ததை பார்த்த ரணதீரன் அன்றிலிருந்து விக்ரமை எதிரியாகப் பார்க்கத் தொடங்கினான்.
அந்தச் சம்பவத்திற்கு பிறகு கல்லூரி நாட்களைக் கடந்தும் பல முறை விக்ரம் தன் அண்ணன் முறையில் இருக்கும் ரணதீரனிடம் பேச முயற்சி செய்து தோற்று போனான்.
இன்று வரை இவர்களின் பணிப்போர் தொடர்ந்து இருக்க, ஒரு முறை ரணதீரனுக்கு பெண் பார்க்க விக்ரமனை இவர்கள் அழைத்துச் செல்ல அங்கிருந்த பொண்ணோ, “எனக்கு விக்ரமனை தான் பிடித்து இருக்கு.” என்று சபையில் சொன்னதும் ரணதீரனின் கோவம் மொத்தமும் விக்ரமன் மீது திரும்பியது.
கோவத்தை மீறி விக்ரமின் அழகும் வசீகர தோற்றமும் ரணதீரனின் மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியது.
ரணதீரன் தன்னை எதிரியாகப் பார்க்கின்றான் என்பதை அறிந்துக் கொண்ட விக்ரமனும் அடிக்கடி இவர்களைச் சந்திப்பதை தவிர்த்து வந்தவன் இன்று ரம்யா என்ற பெண்ணைக் காணவில்லை என்ற காரணத்தால் மீண்டும் இவர்களைச் சந்திக்க நேர்ந்தவனை பார்த்து வைதேகி ஏன் பயம் கொள்கிறாள் என்ற கேள்வி ரணதீரனுக்குள் எழுந்தது.
“அப்போ உங்களுக்கு ரம்யாவை பற்றி வேற எந்த விவரமும் தெரியாதா?” என்று விக்ரமன் கேட்டதும், “அதான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்டாங்களே. இன்னும் என்ன கேள்வி வேண்டி இருக்கு?” என்ற ரணதீரன் கையை அலம்பியப்படி வைதேகியை முறைத்துக்கொண்டே “அம்மா நான் கம்பெனிக்குக் கிளம்புறேன்.” என்றவன் வேகமாக வீட்டிலிருந்து வெளியேறியும் இருந்தான்.
“விக்ரா.. உனக்கு தான் ராணாவை பற்றி தெரியுமே நீ ஏதும் அவனை தவறா நினைக்காத. வேற எதாவது அந்த பொண்ணை பற்றிய விவரம் வேணுமா?” என்று மாறன் கேக்க, “கம்பெனில வேலை செய்த நாட்களில் இந்த பொண்ண பற்றி உங்களுக்கு வேற எதாவது விஷயம் தெரியுமா?” என்று உண்மையை அறிந்துக் கொள்ளும் விதமாக கேட்டான் விக்ரம்.
“இல்ல விக்ரா.. இந்த பொண்ணு ஒரு மாசம் கூட நம்ம கம்பெனில வேலை பார்த்த நினைவு எனக்கு இல்ல, எதுக்கும் உனக்கு முழு விவரம் வேணும்னா நம்ம கம்பெனில வேலை செய்யுற ஆளுங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ. ” என்றான் மாறன்.
“ம்.. சரி மாமா. மேற்கொண்டு விவரம் தேவைன்னா நான் கம்பெனில போய் விசாரிச்சுக்குறேன். ஏன் பெரியம்மா அப்போ ராணா அண்ணனை இவங்க தான் கல்யாணம் பண்ணிக்க போறாங்களா?” என்ற விக்ரம் வைதேகி முகத்தை உற்று பார்த்துக்கொண்டு இருந்தான்.
“ஆமா விக்ரா..நான் நிச்சியதுக்கு தேதி குறிச்சதும் உன் அம்மாவுக்குப் போன் பண்ணுறேன். நீங்கக் குடும்பத்தோட ஒரு மாசத்துக்கு முன்னாடியே வந்து இங்க தங்கி ராணா கல்யாணத்தை நல்ல படியா முடிச்சு கொடுக்கணும்.” என்ற வேதநாயகியின் முகத்தில் சந்தோஷம் நிறைந்து இருந்தது.
“கண்டிப்பா பெரியம்மா.. நாங்க இல்லாம எப்படி அண்ணன் கல்யாணம் நடந்துடுமா! கண்டிப்பா நாங்க வந்து கல்யாணத்தை நல்லபடியா முடிச்சு கொடுக்குறோம். ஆமா பொண்ணு எந்த ஊருன்னு சொன்னீங்க? நான் இவங்கள எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்கே!” என்ற விக்ராவின் வார்த்தையைக் கேட்டு வைதேகி மாறனை அச்சதுடன் பார்த்தாள்.
“என் சித்தி பொண்ணு தான் மச்சான். ஏதாவது கல்யாணம் காட்சில பார்த்திருப்ப.” என்று மாறன் சமாளிக்கும் விதமாகப் பேசுகிறான் என்பதை அறிந்துக் கொண்டான் விக்ரம்.
“ஓகே மாமா.. நான் கிளம்புறேன். பெரியம்மா போயிட்டு வரேன். ஹாய் மயிலு பாப்பா வர அவசரத்தில் உனக்கு நான் சாக்லேட் கூட வாங்கிட்டு வரல அடுத்த முறை மாமா உனக்கு ஸ்வீட் வாங்கிட்டு வரேன்.” என்ற விக்ரம் வைதேகியை சந்தேக பார்வையிலேயே பார்த்தபடி நெல்சன் எஸ்டேட்டிலிருந்து வெளியேறினான்.
அதே எஸ்டேட்டின் வலது பக்கம் அமைந்திருக்கும் சின்னப் பங்களா மீது எதர்ச்சையாக விக்ரமின் பார்வை விழுந்தது.
அந்தப் பங்களாவின் வாசலில் மூன்று கருப்பு நிற வேட்டை நாய்கள் காவலுக்கு நின்று இருந்ததை பார்த்தபடி தன் ஜீப்பை ஸ்டேஷனை நோக்கி விரட்டினான் விக்ரம்.
போலீஸ் ஜீப் எஸ்டேட்டிலிருந்து வெளியேறியதற்கு பின்னர் தான் வைதேகியின் இதயம் இயல்பாக
துடித்து.
“என்ன மாமா அந்த ரம்யா பொண்ணுக்கு என்ன ஆகி இருக்கும்?” என்று மாயா மாறனை சந்தேகமாகக் கேட்க,
“அதைக் கண்டுபிடிப்பதற்கு தானே போலீஸ் இருக்காங்க, அவங்க பார்த்துப்பாங்க மருமகளே. நீ தட்டுல சாப்பாட்டை போடு நான் போய்ப் பிபி மாத்திரை போடணும்.” என்ற கீதாவுடன் சேர்ந்து அனைவரும் மதிய உணவை உண்டு முடித்தார்கள்.
எஸ்டேட்டிலிருந்து கம்பெனிக்கு வந்த ரணதீரனுக்கோ வைதேகியின் நினைவாகவே இருந்தது.
“அவள் யாராக இருக்கும்? எதற்காக மாமா அவளை நம் எஸ்டேட்டிற்கு அழைத்து வந்தார். இப்போ அம்மாவும் அவளை இந்த வீட்டுக்கு வரப்போற மருமகளா நினைக்கிறாங்க. ஆனா மாமா அந்தப் பொண்ணை ஒரு மாசத்துல எஸ்டேட்டிலிருந்து அனுப்பி வச்சிடுவேன்னு வாக்குறுதி கொடுக்கிறார், இது எதுவும் சரியா படலையே, அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்பது உண்மைதான், அதுக்காக இப்படி பொய் சொல்லி நாளைக்கு இது பொய்யின்னு தெரிஞ்சா அம்மாக்கு இன்னும் கவலை அதிகமாகுமே தவிர இதனால எந்தச் சந்தோஷமும் கிடைக்கப் போறது இல்லையே.” என்று யோசித்த ரணதீரன், “முதல்ல இந்தப் பொண்ணு யாருன்னு கண்டுபிடிக்கணும்.” என்று எண்ணியவன் தன் அன்றாட வேலைகள் மீது கவனத்தை செலுத்தினான்.
எஸ்டேட்டில் குழந்தை மயிழினி அறையில் இருக்கும் வைதேகிக்கோ தன் பிரச்சனையில் இருந்து தப்பித்த நிம்மதி ஏற்பட்டாலும், ரணதீரனுக்கு வைதேகியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணி பல கனவுகளை வளர்த்துக் கொண்டு இருக்கும் வேதநாயகியை ஏமாற்றுவதை நினைத்து கவலையாக இருந்தது.
பல யோசனைகளைச் சுமந்தபடி அறையிலேயே அடைப்பட்டு இருக்கும் வைதேகிக்கு பேச்சுத் துணைக்காகச் சிறுமி மயிழினி இருக்க, “அத்த அத்த எனக்குக் கதை சொல்லுங்க.” என்ற குழந்தை வாட்டமாக வைதேகியின் மடியில் ஏறி அமர்ந்துக்கொண்டாள்.
“கதையா!!?. ஐயோ எனக்கு எந்தக் கதையும் தெரியாதே.” என்று வைதேகி சொல்ல, “என்ன?..உங்களுக்குக் கதை தெரியாதா!!? ஏன் உங்க அம்மா உங்களுக்கு எந்தக் கதையும் சொல்லித் தரலையா?” என்று சிறுமி மழலை குரலில் கேட்டாள்.
“அம்மாவா!? எனக்குத் தான் அம்மாவே இல்லையே.” என்ற வைதேகியின் கண்கள் கலங்க,”என்ன உங்களுக்கு அம்மா இல்லையா? அவங்க சாமிகிட்ட போயிட்டாங்களா? சரி சரி
அழாதீங்க.” என்ற குழந்தை தன் பிஞ்சு கரங்களால் வைதேகியின் கண்ணீரை துடைத்து விட, குழந்தையைக் கட்டி அணைத்து அவள் நெற்றியில் இதழ் பதித்தாள் வைதேகி.
மழலைப் பேச்சில் சிறுமி மயிழினி அவளுக்குத் தெரிந்த கதைகளை வைதேகியிடம் சொல்லிக் கொண்டு இருக்க, குழந்தையின் அருகாமையில்
தன் கவலைகளை மறந்த வைதேகி அன்றைய பொழுதைச் சிறுமியின் துணையுடன் கடந்து இருந்தாள்.
மாலை நேரம் கீதாவும் வேதநாயகியும் கோவிலுக்குச் சென்று இருக்க, மாயாவும் மாறனும் தொழில் சம்பந்தமாக அவர்கள் அறையில் அமர்ந்தபடி சில ஆவணங்களைச் சரி பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
“வாங்க அத்த நம்ம கண்ணாமூச்சி விளையாடலாம்.” என்று சிறுமி மயிழினி வைதேகியை அழைத்ததும், அவளும் குழந்தையின் கண்களைத் துணியைக் கொண்டு கட்டி விட்டவள்,
“மயில் பாப்பா நான் எங்க இருக்கேன்னு கண்டுப்பிடி.” என்ற வைதேகி வேகமாக ஓடிச் சென்று தூணின் பின்னே ஒளிந்துக்கொண்டாள்.
“அத்த எங்க இருக்கீங்க நீங்க? நான் உங்கள கண்டுபிடிக்கப் போறேன்.” என்ற சிறுமி கண்களைக் கட்டிக்கொண்டே வைதேகியை தேடியவள், “அத்த எங்க இருக்கீங்க?” என்று மீண்டும் பாவமாகக் கேட்டதும் வைதேகியே முன் வந்து சிறுமியிடம் அகபட்டு கொண்டதும், “ஐ நான் அத்தையை கண்டுபிடிச்சிட்டேன்.” என்ற சிறுமியின் முகத்தில் கள்ளம் கபடம் இல்லாத புன்னகை மலர்ந்து இருந்தது.
“அத்த அத்த இப்போ நீங்கதான் கண்ணைக் கட்டிக்கணும்.” என்ற சிறுமி வைதேகியின் கண்களைத் துணியால் கட்டி விட்டவள் நேராகத் தன் அறைக்குள் புகுந்து மறைந்துக் கொண்டாள்.
கண்களைத் துணியால் கட்டியிருந்த வைதேகி குழந்தையைக் காணாமல்
“பாப்பா எங்க இருக்கீங்க?” என்றவள் குழந்தையைத் தேடி வாசலை நோக்கி நடந்து செல்ல, தன் எதிரே போனை பார்த்துக்கொண்டு வந்த ரணதீரனின் மேலே மோதிய வேகத்தில்
அவனின் செல் போன் கீழே விழுந்து உடைந்தது.
யாரையோ தவறுதலாக மோதி விட்டோம் என்று அறிந்த வைதேகியின் எதிரில் ரணக்கொடூரமாக அவளை முறைத்தபடி நின்றிருந்தான் ரணதீரன்.
இப்படி நடக்கும் என்று சற்றும் எதிர்பார்க்காத வைதேகிக்கு ரணதீரனின் அந்தப் பார்வை மேலும் பயத்தை கொடுக்க, “ஐயம் சாரி..”என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் ரணதீரன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.
தெரியாமல் நடந்த விஷயத்திற்காக ரணதீரன் தன்னை அடித்ததை எண்ணி வைதேகி கண்கள் கலங்கியவள் அழுதுக் கொண்டே மயிழினியின் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
வைதேகியை ரணதீரன் அடித்ததை தன் அறையிலிருந்து பார்த்துக்கொண்டு இருந்த குழந்தைக்கே தன் கட்டிலில் கண்ணீருடன் அமர்ந்திருந்த வைதேகியை பார்த்துப் பாவமாக இருந்தது.
“என்ன ராணா.. கம்பெனியிலிருந்து சீக்கிரம் வந்துட்டியா?” என்று கேட்டுக் கொண்டே வேதநாயகி தன் கையில் இருந்த விபூதியை ரணதீரன் நெற்றியில் வைத்தார்.
“என்ன அத்த கோவிலுக்குப் போயிட்டு வந்தாச்சா? பிராத்தனை எல்லாம் நல்ல விதமா முடிச்சிட்டீங்களா?” என்று கேட்டுக் கொண்டே மாயாவுடன் மாறனும் தன் அறையிலிருந்து வெளியே வர,
கீதா தன் மகன் நெற்றியில் விபூதியை வைத்து, “இந்தக் குங்குமத்தை மாயா நெற்றியில் வைத்து விடு.” என்று தன் கையில் இருந்த செந்தூரத்தை மாறனிடம் கொடுத்தார்.
“வைதேகி இந்தாமா கோவில் பிரசாதம் வாங்கிக்கோ.” என்ற வேதநாயகியின் குரலைக் கேட்டுச் சிறுமி மயிழினியுடன் வைதேகியை தன் அறையிலிருந்து வெளியே அழைத்து வர, வைதேகியின் ஒரு பக்கக்கண்ணம் தக்காளி பழத்தைப் போலச் சிவந்து இருந்தது.
“என்னம்மா என்ன ஆச்சு? ஏன் கண்ணம் சிவப்பா இருக்கு?” என்று வேதநாயகி புரியாமல் கேட்க,
“இதோ மாமா தான் அத்தைய அடிச்சுட்டாரு” என்று மழலை குரலில் உண்மையைச் சபையில் போட்டு உடைத்தாள் சிறுமி மயிழினி.
“என்ன! அடிச்சானா? ராணா ஏன் வைதேகியை அடிச்ச?” என்ற வேதநாயகி சற்றும் தாமதிக்காமல் ரணதீரனின் கன்னத்தில் அறைய போனவளின் கையைப் பற்றிக்கொண்ட வைதேகி,
“தப்பு என் மேல தான் அவரை ஒன்னும் சொல்லாதீங்க.” என்றவளின் கன்னம் வீக்கமாக இருந்தது.
“என்ன மச்சான் நீங்க? உங்களுக்கு வைதேகியை பிடிக்கலைன்னா சொல்லிடுங்க நான் இப்போவே என் தங்கச்சியை ஹாஸ்டலுக்கு அழைச்சுட்டு போறேன். அதுக்காக இப்படியா ஒரு பொம்பள புள்ளையை நீங்கக் கை நீட்டி அடிப்பீங்க?” என்ற மாறன் மனதில் உண்மையில் வைதேகி தங்கச்சி என்ற ஸ்தானத்தை அடைந்து இருந்தாள்.
“சும்மா இருக்கிறவளை நான் தேடி போய் அடிக்கல. இவதான் என் மேல வந்து மோதுனா. அதனால தான் அடிச்சேன்.” என்ற ரணதீரனின் பதிலில் வேதநாயகி மேலும் கோபம் அடைந்தார்.
“நீ ஆயிரம் காரணம் சொன்னாலும் ஒரு பெண்ணை கைநீட்டி அடித்தது மிக மிக கேவலமான செயல். நீ செஞ்ச கேவலத்துக்கு உனக்கு தண்டனை கிடைத்தே ஆகணும்.” என்ற வேதநாயகி வைதேகியின் கையைப் பிடித்து ரணதீரன் அருகே நிறுத்தியவர்,
எப்படிப்பட்ட தண்டனையை ரணதீரனுக்கு கொடுக்கப் போகிறார் என்று அடுத்த அத்தியாயத்தில் படிப்போம்.
error: Content is protected !!