Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காற்றின் அலைவரிசை கேட்கிறதா

KAK-21

“நான் சைன் போட மாட்டேன். எனக்கு ரெண்டு பேரும் வேணும் அவங்க ரெண்டு பேரும் வர்றதா இருந்தா சொல்லுங்க நான் சைன் போட்டுறேன்” என்று யார் சொல்வதையும் கேட்காமல் கத்திக்கொண்டு இருந்தவனின் கன்னத்தில் டம் என்று ஒரு அரை விழ தனது கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அமைதியாக தன்னை அரைந்தவரை பார்த்து, “அம்மா ப்ளீஸ்மா அவங்கள என்கிட்ட வர சொல்லுமா. அவ உன் பேச்ச கேப்பமா வா வந்து சொல்லு அவளை என்கிட்ட வர சொல்லி. ப்ளீஸ்மா வா எனக்காக சொல்லுமா ” என்று சொல்லி கண்ணீருடன் அவரை அணைத்துக் கொண்டான் கவின்.

 திடீரென அவர் அணைப்பிலிருந்து விலகி, “அம்மா அவ என்ன விட்டு போயிருவளா என் பாப்பா என்கிட்ட வராதம்மா” என்றான் பாவமாக.

அவரின் கண்களுக்கு சிறு வயதில் அவன் வளர்த்த நாய்க்குட்டி இறந்த போது, “அம்மா இனி என்னோட ஜிம்மி என்கிட்ட வராதா” என கண் நிறைய கண்ணீருடன் பாவமாக கேட்டு சிறு வயது கவின் ஞாபகத்துக்கு வந்தான். அதற்குப் பிறகு எப்போதும் கலங்காத ஏன் தனது தந்தை இறந்தபோது கூட கலங்காமல் நின்ற தனது மகன் இப்போது தனது மனைவிக்காகவும் பிள்ளைக்காகவும் கலங்கி நிற்பதை பார்த்து அந்தத் தாயின் உள்ளத்தில் ரத்தம் வடித்து, “ கடவுளே ஏன் என் பிள்ளைய இவ்வளவு கஷ்டப்படுதுற உனக்கு யாரையாவது எடுத்துக்கனுனா என்னை எடுத்துக்கோ வாழ வேண்டிய அவங்களை விட்டுரு” என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டார் ஈஸ்வரி.

 தனது முன்னாள் பாவமாக கலங்கி நிற்கும் தனது மகனுக்காக கலங்கிய தனது உள்ளத்தை தேத்தி கொண்டு, “கவின் இங்கு பாருடா அம்மாவ பாரு. அம்மா சொல்றேன் அவங்க ரெண்டு பேரும் நல்லபடியா உன்கிட்ட வந்து சேருவாங்க என் மேல உனக்கு நம்பிக்கை இருக்குல்ல. அம்மா சொல்றேன் எதை நினைச்சியும் கலங்காம போய் சைன் பண்ணு. உன் பிள்ளையும், பொண்டாட்டியும் உன் கிட்ட வருவாங்க” என்றார் உறுதியுடன் ஈஸ்வரி.



Advertisement

 அவர் சொன்னதை ஏதோ தேவத்தூதர் வந்து சொன்னதை போல நினைத்துக் கொண்டு

தனது முகத்தை அழுத்தி துடைத்துக்கொண்டு அந்த பேப்பரை வாங்கி சைன் பண்ணினான் கவின்.

 அதில் சைன் பண்ணி விட்டு யாரிடமும் எதுவும் பேசாமல் அங்கே இருந்த இருக்கையில் போய் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டான். ஆனால் அவன் மனதிற்குள், “ கவி, பாப்பா ரெண்டு பேரும் என்கிட்ட வந்துருங்க பத்திரமா. ரொம்ப மிஸ் பண்றேன் ரெண்டு பேரும் என்கிட்ட வந்துருங்க”என்று தனது மனைவியுடனும், பிள்ளையுடனும் பேசிக்கொண்டு இருந்தான்.

Advertisement

 இவன் சைன் பண்ணியதும் அவளுக்கு ட்ரீட்மென்ட் விரைவாக தொடங்கியது.

Advertisement

 

 

சிறிது நேரம் ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்த நர்ஸ் கவினை பார்த்து, “சார் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கு”என்று சொல்லி மீண்டும் உள்ளே சென்றாள். அதனைக் கேட்டு அனைவரும் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டு இருக்க கவின் மட்டும் அவள் சொன்னதை கவனிக்காமல் எதையோ வெறித்து பார்த்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருந்தான். இன்பா அவனை நெருங்கி சென்று சொல்ல போக அவன் கையை பிடித்து தடுத்த ஈஸ்வரி, “ விடுடா அவங்க ரெண்டு பேரும் நல்லா இருக்காங்கன்னு சொல்ற வரைக்கும் அவன் இப்படித்தான் இருப்பான் அதனால நீ எதுவும் சொல்ல வேண்டாம். அவன் அப்படியே இருக்கட்டும்” என்றார் தன் மகனைப் புரிந்து கொண்டு

Advertisement

“சரிமா”என்று சொல்லி கவின் அருகே போய் அமைதியாக அமர்ந்து கொண்டான். அப்போது வெளிய வந்த மருத்துவரை பார்த்து தனது அருகில் அமர்ந்திருந்த கவினை அசைத்து அவரைக் காட்டினார்.

 அதில் உணர்வு வந்த கவின் விரைந்து அவரிடம் சென்று ஒரு எதிர்பார்ப்போடு அவரை பார்க்கத் தொடங்கினான். அவனைப் பார்த்து புன்னகைத்த டாக்டர், “உங்க வைஃப் அண்ட் டாட்டர் ரொம்ப நல்லா இருக்காங்க. இப்ப நர்ஸ் வந்து உங்க பேபியை காட்டுவாங்க. அவங்கள டச் பண்ணாம பாருங்க.உங்க பேபி ரொம்ப எர்லியா பிறந்தால இன்குபேட்டர்ல வைக்க போறோம். சோ உங்க பேபி உங்க கைக்கு வர இன்னும் கொஞ்ச நாள் ஆகும். உங்க வைஃப் ரொம்ப நல்லா இருக்காங்க இன்னும் கொஞ்ச நேரத்துல ரூமுக்கு ஷிப்ட் பண்ணிடுவோம் அப்புறமா போய் அவங்கள பாருங்க”

“ரொம்ப தேங்க்ஸ் டாக்டர் என்னோட உயிர் ரெண்டு பேர நீங்க திருப்பி தந்து இருக்கீங்க இந்த ஹெல்ப நான் என்னைக்குமே மறக்க மாட்டேன். தேங்க்யூ சோ மச் டாக்டர்” என்றான் நெகிழ்ச்சியுடன் கவின்.

“ஆமா டாக்டர் உங்கள நாங்க என்னைக்கு மறக்கவே மாட்டோம். எங்களோட பொக்கிஷத்தை எங்களிடம் திருப்பி கொடுத்துட்டீங்க டாக்டர். ரொம்ப நன்றி” என்றார் கையெடுத்து கும்பிட்டு ஈஸ்வரி.

“என்னம்மா நீங்க நான் என்னோட வேலைய தானே செஞ்சேன் அதுக்கு மேல கடவுளோடு ஆசீர்வாதம் தான். உங்களோட மருமகளுக்கும் பேத்திக்கும் ஆயுசு கெட்டி அதனாலதான் இவ்ளோ பெரிய கண்டத்தில் இருந்து தப்பிச்சிட்டாங்கன்னு நினைச்சுக்கோங்க சரி நான் வரேன்மா” என்று சொல்லி சென்றார் டாக்டர்.

அப்போது கையில் குழந்தையுடன் வந்த நர்ஸ், “சார் இந்தா இருக்காங்க பாருங்க உங்களோட பிரின்சஸ். உங்ககிட்ட நாங்க பத்திரமா கொண்டுவந்து கொடுத்துட்டோம் இப்ப சந்தோஷமா சார்” என்று கவினை பார்த்துக் கேட்டாள்.

 குழந்தையை கையில் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் அவளைப் பார்த்து புன்னகைத்தான். பிறகு குழந்தையை பார்த்துக் கவின், “பாப்பா பைனலா அப்பா கிட்ட எந்த பிரச்சனையும் இல்லாம நீங்க வந்துட்டீங்க. அம்மா இவள பாரும்மா அப்படியே உங்களை மாதிரியே இருக்கா” என்றவன் தனது கை விரல்களை குழந்தையை நோக்கி நீண்டி அவளின் கன்னத்தை தொட முயற்சிக்க அந்த விரல்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள் குழந்தை.

 அதில் சந்தோஷம் கொண்டவன் இன்பாவை பார்த்து, “ டேய் இங்க பாருடா என் கைய புடிச்சிட்டு விடமாட்டக்கா என் பொண்ணு” என்று பெருமையாக மகளை பார்த்து பேச தொடங்கினேன்.

“போடா நீயே பார்த்தா போதுமா இங்க பாருங்க பேபி நான்தான் உங்களோட பெரியப்பா என்ன தெரியுதா” என்று பிறந்த குழந்தையிடம் பேசத் தொடங்கியவனை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட ஈஸ்வரி, “ டேய் உங்க ரெண்டு பேத்துக்கும் வேற வேலையே இல்லையா. கொண்டாங்கடா என் பேத்திய” என்று குழந்தையை வாங்கி கொஞ்ச தொடங்கினார் ஈஸ்வரி.

“அம்மா ரொம்ப நேரம் கையிலே வைத்திருக்க கூடாது குழந்தைய. தரவே கூடாது இருந்தாலும் இந்த சார் அழுகைய பார்த்து தான் அவர் கையில கொடுத்தேன். தப்பா எடுத்துக்காதீங்க டாக்டர் பாத்தா என்ன திட்டுவாங்க கொஞ்சம் குழந்தையை தரீங்களா”

“அதனால என்னம்மா என் பேத்தியோட நல்லதுக்கு தானே சொல்லுற இந்தா நீயே வச்சுக்கோ. ஆனா பத்திரமா எங்க கிட்ட திருப்பித் தந்துடனும் என்ன”

“ அய்யய்யோ உங்க பேத்திய நான் எடுத்துட்டு போக முடியும் மா. அதுவும் இந்த ரெண்டு சாரும் என்ன இங்கே இருந்து விட்டுட்டு தான் வேற வேலை பார்ப்பாங்க. பாருங்க இப்பவே என்னை எப்படி முறைச்சு பார்க்கிறாங்கனு. சார் உங்க பிரின்சஸ நான் ஒன்னும் தூக்கிட்டு போக மாட்டேன். அதுவும் உங்க கண்ணீரை பார்த்த பிறகு எப்படி எனக்கு தூக்கிட்டு போக மனசு வரும் இப்ப சந்தோசமா சார்”

“ரொம்ப ரொம்ப சந்தோஷம் சிஸ்டர் என்னோட பிரின்சஸ் காட்டிட்டுங்க. என் குயின் எப்போ என் கண்ணுல காட்டுவீங்க”

“ இன்னும் பத்து நிமிஷத்துல உங்க கண்ணுல காட்டிடுவாங்க சார்” என்று சொல்லி குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றாள்.

 

 

@@@@@@@@@@@@@

 

 மயக்கம் தெளிந்து கண்விழித்தவள் சுத்தி பார்த்துவிட்டு மெதுவாக படுக்கையில் இருந்து எழ முயற்சித்தாள் யாழினி. அதுவரை அவளின் அங்க அசைவுகளை பார்த்துக் கொண்டு இருந்தவன் வேகமாக அவள் அருகே வந்து அதில் கையைப் பிடித்துக் கொண்டு, “எங்கே எழும்புற அப்படி படு கொஞ்ச நேரம்” என்றான் பதட்டமாக கவின்.

 அவன் முகத்தையே விடாமல் பார்த்துக் கொண்டு இருந்தவளை பார்த்து, “என்னம்மா ஏதாச்சும் உனக்கு வேணுமா” என்றான் மென்மையாக

“அது குழ…ந்..த பேபி எங்கே. அவளுக்கு ஒன்னும் ஆகல தானே” என்றாள் பயத்துடன்

 அவளின் பயம் தெளிவதற்காக மென்மையாக அணைத்துக் கொண்டவன் அவள் நெற்றியில் முத்தம் வைத்து, “பாப்பா நல்லா இருக்கா. இயர்லியா பிறந்ததுனால இன்குபேட்டர்ல இப்போ வைத்திருக்காங்க” அவளை அணைப்பில் வைத்துக் கொண்டு சொன்னான்.

 அவன் அணைப்பில் கூச்சமாகி நெளிந்தவள், “பாப்பாவ போய் இப்ப பாக்கலாமா” என்று கேட்டாள்.

“தெரியல டாக்டர் கிட்ட கேட்டு சொல்றேன்”

“இல்ல எனக்கு கண்டிப்பா பாப்பாவ பாக்கணும் கூட்டிட்டு போங்களேன் ப்ளீஸ்”

“சரி வா போய் பார்ப்போம்” என்று சொல்லி குழந்தையை வைத்து இருந்த அறைக்கு அவளை கூட்டி சென்றான். அங்கே இருந்த அறைக்குள் போய் குழந்தையை பார்த்துவிட்டு வந்தவள், “ பாப்பாவ எப்போ நம்ம கிட்ட தருவாங்க”

“இன்னும் கொஞ்ச நாள்ல நீ நான் பாப்பா எல்லாரும் சேர்ந்து சந்தோஷமா வாழப் போறோம் சரியா அதுவரைக்கும் நீ இப்ப கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்க” என்று அவளின் அறைக்கு கூட்டி சென்றான்.

 அறைக்கு உள்ளே இருந்த மொத்த குடும்பத்தையும் பார்த்து திகைத்தவள் திரும்பி கவினை பார்த்தாள். அவள் கண்களில் இருந்த பயத்தை புரிந்து கொண்ட கவின், “உன்னை யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க போய் நார்மலா அவங்க கிட்ட பேசு”

 உள்ளே சென்று அனைவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டு, “எல்லோரும் என்னை மன்னிச்சிருங்க. என்னோட முட்டாள் தனதால எல்லாத்துக்கும் ரொம்ப தொந்தரவு தந்து இருக்கேன். அத்த உங்களுக்கு தான் நான் ரொம்ப தொந்தரவு கொடுத்து இருக்கேன் என்ன மன்னிச்சிடுங்க” என்றாள் அழுகையுடன்.

“விடுமா அதான் எல்லாம் நடந்து முடிஞ்சிட்டே. இனி அந்த பத்தி நெனச்சு உடம்பை கெடுத்துக்காதே சரியா உனக்கு ஒரு அம்மா பெரியம்மா இருந்தத மறந்திரு. உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம் அத மட்டும் மைண்ட்ல வச்சுக்க. நீ என்கிட்ட மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அப்படி நீ மன்னிப்பு கேட்கணும்னு நினைச்சா என் பையனோட சேர்ந்து சந்தோஷமா வாழு அதுவே போதும்” என்றார் ஈஸ்வரி.

 அடுத்து பிரபாவதி பார்த்து, “அம்மா சாரிம்மா. உண்மையான அம்மா பாசமா என்னென்ன உங்ககிட்ட தான் உணர்ந்தேன். உங்கள போய் நான் தப்பா நினைச்சுட்டேன் சாரிமா ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுங்க”

“ என்னம்மா நீ. என் பொண்ணு மாதிரி தான் நீயும். அதனால இந்த மன்னிப்பு என்கிட்ட கேட்காத. என்னை உன்னோட அம்மாவ நெனச்சிருந்தா நீ என்கிட்ட மன்னிப்பு கேட்டு இருக்க மாட்ட எப்படி இப்ப மன்னிப்பு கேட்க போறியா இல்ல வாபஸ் வாங்கிக்கிறியா” என்றார் விளையாட்டாக பிரபாவதி.

“வாபஸ் வாங்கிக்கிறேன் மா” என்று சொல்லி அவரை அணைத்துக் கொண்டாள் கவியாழினி.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!