Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காற்றின் அலைவரிசை கேட்கிறதா

KAK-20

‍“மாப்ள என் பொண்ணு எங்க அவளுக்கு என்ன ஆச்சி சொல்லுங்க மாப்ள”என்றார் பதட்டமாக பாண்டியன்.

 அந்த ஐசியூ அறையின் வெளியே உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தவனின் கையை பிடித்துக் கேட்டவருக்கு எந்த பதிலும் சொல்லாமல் எதிரே இருந்த அறையின் மூடப்பட்ட கதவினை வெறித்துக் கொண்டு இருந்தான் கவின்.

“மாப்பிள்ளை உங்களை தான் கேட்டேன் என் பொண்ணு எங்க இருக்கா சொல்லுங்க” என்று அவனை பிடித்து குலுக்கி அழ தொடங்கினார்.

“மாமா ப்ளீஸ் அவன விடுங்க நீங்க கொஞ்சம் கண்ட்ரோலா இருங்க. இப்பதான் உள்ள சேர்த்து இருக்கோம் டாக்டர் வந்து சொல்லுவாங்க அது வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று பாண்டியனை பிடித்து கொண்டான் இன்பா.



Advertisement

 அவன் சொன்னதும் கொஞ்சம் கண்ட்ரோலுக்கு வந்த பாண்டியனை செந்தில் முருகன் வந்து தாங்கி, “பாண்டியன் நீங்க பாருங்க உங்க பொண்ணுக்கு எதுவும் ஆகாது நீ இப்படி அழுது உனக்கு ஏதாவது ஆகிறாம கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க” என்று அவரை இருக்கையில் அமர செய்து ஆறுதல் சொன்னார்.

 அதற்குள் கதவை திறந்து வெளியே வந்த மருத்துவரைப் பார்த்து அனைவரும் அவரிடம் சென்று, “ டாக்டர் இப்ப என் ஒய்ஃப் எப்படி இருக்கு. அவ நல்லா இருக்கா தானே” என்றான் தவிப்புடன் கவின்.

“டாக்டர் என் பொண்ணுக்கு ஒன்னும் இல்லல அவ நல்லா தானே இருக்கா சொல்லுங்க டாக்டர் ப்ளீஸ்” என்று அவர் கையைப் பிடித்து கெஞ்ச தொடங்கினார் பாண்டியன்.

Advertisement

“சார் கொஞ்சம் அமைதியா நில்லுங்க நான் சொல்றேன். உங்க பொண்ணுக்கு இப்போ ஒன்னும் இல்ல அவங்க நல்லா தான் இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்க போய் பார்க்கலாம் அதுவரைக்கும் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க இல்லனா உங்க பொண்ணுக்கு பதிலா உங்களை தான் பெட்ல சேர்க்க வேண்டியதா இருக்கும்” என்று அவரை சிரித்தபடி சமாதானம் செய்து,“மிஸ்டர் கவின் கொஞ்ச நேரம் கழிச்சு என்னோட ரூம்க்கு நீங்க மட்டும் வந்து பாருங்க. அவங்க இப்போ நல்லா தான் இருக்காங்க இன்னும் கொஞ்ச நேரத்துல முழிச்சிடுவாங்க” என்று சொல்லி தனது அறைக்கு சென்றார் டாக்டர்.

Advertisement

“மாமா கொஞ்ச நேரம் அமைதியா இங்க உட்கார்ந்து இருங்க நான் போய் டாக்டர் கிட்ட என்னன்னு கேட்டு வரேன்” என்று சொல்லி டாக்டர் அறைக்கு சென்றான் கவின்.

“டேய் நின்னு நானும் வரேன் உன் கூட” என்று சொல்லி அவனின் பின்னால் சென்றான் இன்பா.

 

Advertisement

 இருவரும் டாக்டர் அறைக் கதவை தட்டிக்கொண்டு உள்ளே செல்ல, “வாங்க ப்ளீஸ் சீட். மிஸ்ஸஸ் கவியாழினி உங்க வைப் தானே”

“ஆமா டாக்டர் அவளுக்கு என்ன ஆச்சி” என்றான் தவிப்புடன்

“இது” என இன்பாவை கை காட்ட

“என்னோட பிரதர் தான் நீங்க சொல்லுங்க டாக்டர் அவளுக்கு என்ன ஆச்சி”

“மிஸ்டர் கவின் ஆல்ரெடி அவங்களுக்கு இப்படி வந்து இருக்கா”

“அம்மா டாக்டர் ஒரு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி இப்படி வந்து நாங்க ஹாஸ்பிடல்ல சேர்த்திருந்தோம் இப்ப என்ன ஆச்சு அவளுக்கு”

“ஆல்ரெடி டாக்டர் சொல்லி இருப்பாங்களே அவங்க அதிகளவு மன அழுத்தத்துல இருக்காங்க. அதனால அவங்கள அமைதியான மனநிலையில வைச்சி இருக்க சொல்லி இருப்பாங்களே”

“ஆமா டாக்டர் சொன்னாங்க ஆனா வீட்ல கொஞ்சம் ப்ராப்ளம்” என்றான் திணறலாக

“என்ன சார் நீங்க இப்படி சொல்றீங்க உங்களுடைய பேபி உங்களுக்கு ஆரோக்கியமா வேண்டாமா. உங்க வைஃப் மேலயும் உங்க பேபி மேலயும் உங்களுக்கு அக்கறை இல்லைன்னு தெரியுது இதுலயிருந்து” என்றார் டாக்டர் கோவமாக

 டாக்டருக்கு பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து இருந்த தனது தம்பியை காணப்பிடிக்காமல், “சார் ப்ளீஸ் இது அவனோட மிஸ்டேக் இல்ல. நடந்தது நடந்து போச்சு இனி என்ன பண்ணனும் அத மட்டும் சொல்லுங்க டாக்டர்” என்றான் சிறிது கோபமாக இன்பா.

“ஹலோ சார் எங்க மேல கோபப்பட்டு ஒன்னும் நடக்க போறது கிடையாது. ஒவ்வொரு டாக்டருக்கும் அவங்க பேஷண்ட் மேல அக்கறை இருக்கும் அதனால தான் நாங்க சொன்னத நீங்க கேக்கலனா எங்களுக்கு கோபம் வருது ஓகேவா சார். சரி ஓகே எனக்கு என்ன உங்க வைஃப் உங்க குழந்தை உங்களுக்கே அக்கறை இல்லாதபோது நான் என்ன பண்ண முடியும்” என்றார் கடுப்புடன் டாக்டர்

“ டாக்டர் ப்ளீஸ் கொஞ்சம் கோபப்படாதீங்க அவன் என் மேல உள்ள பாசத்துல உங்கள கோவமா பேசிட்டான் தப்பா எடுத்துக்காதீங்க டாக்டர் சாரி” என்று தணிவாக டாக்டரிடம் சொல்லிவிட்டு, “இருக்கிற பிரச்சினைல நீ வேற ஏண்டா இப்படி பண்ற அவர்க் கிட்ட சாரி சொல்லு டா” என்றான் கடுப்புடன் இன்பாவை பார்த்து கவின்.

“சாரி டாக்டர் எதுவும் பண்ணாத அவன் மேல நீங்க கோபப்பட்டதுல கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன் சாரி டாக்டர்” என்றான் தணிவாக

“இட்ஸ் ஓகே. நொவ் இப்ப பேஷண்டோட கண்டிஷன் கொஞ்சம் நார்மல் தான் . ஆனா இதுக்கு மேலயும் அவங்க மனசு அமைதியா வச்சிருக்காம இருந்தா என்ன வேணாலும் நடக்கலாம் சோ நீங்க தான் உங்க மனைவியும் குழந்தையும் நல்லா பாத்துக்கணும். இன்னொரு தடவ அவங்களுக்கு இப்படி மயக்கம் வந்ததுன்னா எது வேணாலும் நடக்கலாம் அம்மா குழந்தை ரெண்டு பேருல ஏதாவது ஒருத்தவங்களை மட்டும் தான் நீங்க உயிரோட பார்க்க முடியும் அத மனசுல வச்சுட்டு இனிமே அவங்கள அமைதியான மனநிலையோட வச்சிக்க பாருங்க. சரி ஓகே நீங்க இப்ப கிளம்பலாம் ” என்று தனது தினசரி வேலையை பார்க்க தொடங்கினார்.

 அறையை விட்டு வெளியே வந்து இருவரும் ஒருவர் முகத்தில் ஒருவர் பார்த்துவிட்டு, “இப்ப என்னடா பண்ண போற” என்றான் இன்பா.

“தெரியல. என் லைஃப்ல என்ன நடக்குது எதுவுமே எனக்கு தெரியல” என்றான் வெறுத்துப் போய் கவின்.

“ என்னடா இப்படி பேசுற நீ தான அவங்க ரெண்டு பேரையும் பார்த்துக்கனும். நீயே இப்படி பேசாதடா நம்பிக்கை தளர விடாத. வா போய் அவங்கள பாக்கலாம்” என்று சொல்லி அனைவரும் இருந்த அறைக்கு கூட்டி சென்றான்.

 

 

@@@@@@@@

 

 அந்த அறையில் கதையைத் திறந்து உள்ளே சென்றான் கவின். மருத்துவ உபகரணங்களுக்கு நடுவில் படுத்து அமைதியாக தூங்கிக் கொண்டிருக்கும் அவளின் முகத்தினை பார்த்துக்கொண்டு அருகில் சென்று அவளின் கையை பிடித்து, “ உனக்கு என்ன தாண்டி பிரச்சனை ஒவ்வொரு தடவையும் என்னை இப்படி பயம் காட்டுறதே பொழப்பா வச்சிருக்க. அப்படி என்னதான் வேணும் டி உனக்கு என்கிட்ட இருந்து. எங்கிருந்துதான் வந்த நீ உன்னை எப்ப பார்த்தானோ அப்ப இருந்து எனக்கு பிரச்சனை ஆரம்பிச்சது. ஆமாண்டி நானும் உன்ன லவ் பண்றேன் அதனால இப்ப என்ன. நீயும் தான் என்னை லவ் பண்ண ஆனா ஒவ்வொரு தடவ எனக்கு பிரச்சினை மட்டும் தான் கொடுக்க. இதோ இப்போ என்ன விட்டு முழுசா பிரிஞ்சு போக தாண்டி இங்க வந்து படுத்திருக்க மாதிரியே எனக்கு தோணுது” என்று அவளை திட்டிக் கொண்டிருந்தவன்.

 அவளின் வயிற்றில் கை வைத்து, “ பாப்பா நீ கூட அப்பாகிட்ட வராம போக போற இல்ல. உங்க அம்மா தான் கல் நெஞ்சக்கரி என்னைய ஒவ்வொரு டைமும் கலங்க வச்சுக்கிட்டே இருக்கா ஆனா நீ கூட இன்னும் கலங்க வைக்கிறியே ஏன் பாப்பா. ப்ளீஸ் பாப்பா உங்க அம்மாவ கஷ்டப்படுத்தாம நீயும் உங்க அம்மாவும் பத்திரமா என் கைக்கு வந்துருங்க சரியா. நீங்க வந்த பிறகு தான் என்ன உங்க அம்மா படுத்திய கஷ்டத்துக்கு மொத்தமா சேர்த்து வச்சு நீயும் நானும் சேர்ந்து உங்க அம்மாவ பழி வாங்குவோம் சரியா. எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நீயும் உங்க அம்மாவும் என்கிட்ட வருவீங்க தானே பாப்பா என்று அவளின் வயிற்றினை தடவிக் கொண்டு தனது குழந்தையிடம் கேட்டுக் கொண்டிருந்தான். அவனுக்குப் பதில் சொல்வது போல வயிற்றுக்குள்ளே இருந்து திசு அவன் கைகளில் எனது காலால் ஓங்கி மிதித்தது. தனது கையில் விழுந்த பரிசத்தில் உணர்ச்சிவசமான கவின், “ஏய் பாப்பா உங்களுக்கு நான் பேசுறது கேக்குதா” அதற்கு அவன் கைகளில் மிதித்து தனது இருப்பினை காட்டியது.

 அதில் சந்தோசமான கவின் கண்ணில் நீருடன், “ பாப்பா பத்திரமா அப்பாகிட்ட வந்துருங்க பாப்பா உங்களுக்கும் உங்க அம்மாவுக்கு எதுவும் ஆகக்கூடாது. சரியா வருவீங்க தானே அப்பா கிட்ட” என்று அவன் பேசிக் கொண்டு இருக்கும்போது அவளின் உடல் தூக்கி தூக்கி போட்டது. அதில் பயந்து போன கவின், “கவி…கவி… கண்ணு முழிச்சு என்னை பாரடி டாக்டர் நர்ஸ் கொஞ்சம் வாங்க இவங்களுக்கு ஏதோ பண்ணுது” என்று கத்தி கூப்பிட தொடங்கினான். அவனின் சத்தத்தில் உள்ளே வந்த நர்ஸ் அவளைப் பார்த்துவிட்டு, “டாக்டர் இவங்களுக்கு பிக்ஸ் வந்துட்டு சீக்கிரம் வாங்க” என்று கத்தி கொண்டு டாக்டர் அறைக்கு ஓடினாள்.

“என்ன பிக்ஸ் வந்து இருக்கா கவி கவி ப்ளீஸ் டி என்ன விட்டு போயிடாத பாப்பா என்ன விட்டுட்டு போயிடாதீங்க ரெண்டு பேரும் என்கிட்ட பத்திரமா வந்து சேருங்க” என்று அவள் உடம்பை பிடித்துக் கொண்டு அழ தொடங்கியவனை, “சார் ப்ளீஸ் வெளிய போங்க” என சொல்லிக்கொண்டு வந்த டாக்டர், “நர்ஸ் இவர கொஞ்சம் வெளியே கூட்டிட்டு போங்க” என்று சொல்லி அவளுக்கு ட்ரீட்மெண்ட் தொடங்கினார்.

வெளியே வந்தவனை பார்த்து,“மாப்பிள்ளை பாப்பாக்கு என்ன ஆச்சு ஏன் எல்லோரும் அவசரமா ஓடுறாங்க சொல்லுங்க மாப்பிள்ளை என்ன ஆச்சு” என்று கேட்டவருக்கு, “மா…மா….. மாமா உங்..க உங்க பொண்ணு மட்டும் என் பாப்பாவ தூக்கிட்டு போனா வச்சுக்கோங்க நான் அவள கொன்னுருவேன். சொல்லி வைங்க மாமா என்ன விட்டுட்டு எங்கே போகக்கூடாதுனு சொல்லி வைங்க மாமா” என்று சொல்லி அழ தொடங்கினான் கவின்.

 அவன் அழுவதை பார்த்து மிரண்டு போன அனைவரும் அவன் பக்கத்தில் வர, “ டேய் அவளை என்ன விட்டுட்டு எங்கேயோ போக கூடாதுன்னு சொல்லுடா என் பாப்பா எனக்கு வேணும் ரெண்டு பேரு எங்கேயும் போகக்கூடாதுனு சொல்லுடா சொல்லுடா” என்று தனது உடன்பிறந்தவனை கட்டிக்கொண்டு கத்தி அழ தொடங்கினான் கவின்.

“டேய் ஒன்னும் ஆகாதுடா அவங்க ரெண்டு பேரும் உங்க கிட்ட கண்டிப்பா வந்து சேர்ந்துருவாங்க நீ அழாத எனக்கு கஷ்டமா இருக்கு ப்ளீஸ் அழாத” என அவனை சமாதானப்படுத்த தொடங்கினான் இன்பா.

“ஆமாம் மாப்பிள்ளை என் பொண்ணுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் கண்டிப்பா உங்களை விட்டு எங்கே போக மாட்டா வந்துருவா பாருங்க நீங்க அழாதீங்க” என்றார் பாண்டியன்.

“அவ வந்துருவா தான மாமா என்ன விட்டுட்டு போக மாட்ட தான என்னோட பாப்பாவும் என்கிட்ட வந்துருவாங்க தான சொல்லுங்க மாமா டேய் நீ சொல்லு டா அவங்க ரெண்டு பேரும் என்கிட்ட வந்துருவாங்க தானே” என்று சொல்வதே திரும்பத் திரும்ப சொல்லி புலம்ப தொடங்கினான். அவன் அப்படி அழுவதை பார்த்து பெரியவர்கள் எல்லோரும் மௌனமாக அழத் தொடங்கினர்.

“ கண்ணா நீ அழாதடா உன் மனசுக்கு எல்லாம் நல்லத தான் நடக்கும். உன் பொண்டாட்டியும் பிள்ளையும் உன்கிட்ட வந்துருவாங்க பாரு நீ இப்படி அழாதடா உன்னை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு” என்று அவன் தலையைத் தடவி கொடுத்தார் வள்ளியம்மை பாட்டி.

“பாட்டி நீங்க சொல்லுங்க அவங்க ரெண்டு பேரு என்கிட்ட வந்துருவாங்க தான நீங்க தான பாட்டி சொன்னீங்க நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ரொம்ப வருஷம் நல்லா வாழ்வோம்னு அவளை வர சொல்லுங்க பாட்டி அவ கூட நான் வாழனும். என் பாப்பா அப்ப தான் என்னை விட்டு போக மாட்டா அப்படி தான பாட்டி என்கிட்ட வந்துருவாங்க தானே ரெண்டு பேரும். நீங்க சொல்லுங்க பாட்டி கண்டிப்பாக என் கிட்ட வந்துருவாங்க தானே” என்று பாட்டியிடம் கேட்டு அழ தொடங்கியவனை,“சார் இந்த பேப்பர்ஸ்ல கொஞ்சம் சைன் பண்ணுங்க. உங்க வைப் ஓட கண்டிஷன் கொஞ்சம் கிரிட்டிக்கலா இருக்கு அதனால இப்பவே ஆபரேஷன் பண்ணி உங்க குழந்தையை வெளியே எடுக்கணும் ப்ளீஸ் சார் இதுல கொஞ்சம் சைன் பண்ணுங்க”

“என்ன என் பேபிக்கு இப்ப தான் ஏழு மாசம் ஆகுது அதுக்குள்ள அவளை வெளியே எடுக்கணுமா” என்றான் பயத்துடன் கவின்.

“சார் ப்ளீஸ் இப்ப எந்த பிரச்சனையும் பண்ணாம நீங்க சைன் பண்ணுங்க. அப்பதான் ரெண்டு பேர்ல ஒருத்தராவது உயிரோட உங்களால் பார்க்க முடியும்” என்று அவசரப்படுத்தினாள் நர்ஸ்

“என்ன ரெண்டு பேர்ல ஒருத்தரா இல்லை எனக்கு ரெண்டு பேரும் வேணும் அவங்க ரெண்டு பேரையும் எனக்கு தரதா இருந்தால் சொல்லுங்கள் நான் சைன் பண்றேன். இல்லன்னா நான் சைன் பண்ண மாட்டேன் எனக்கு என் பாப்பா பொண்டாட்டி இரண்டு பேரும் வேணும்” என்று கத்த தொடங்கியவனை கண்ட்ரோல் செய்ய முடியாமல் அடுத்து என்ன செய்வது என தெரியாது முழித்துக் கொண்டு நின்றனர்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!