Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தவணைமுறையில் நெஞ்சம் கொள்ளுதே

TNK-2-1

“தாயென்ற ஒரு தெய்வம்

வீட்டோட இருக்கு

 

நீ தனித்தனியா

கோவில் குளம்

அலைவது எதுக்கு

 

அம்மாவின் பாதத்தில்

கற்பூரம் கொளுத்து

 

ஆனந்த கண்ணீரில்

அபிஷேகம் நடத்து”

 



Advertisement

          என சத்தமாக ஒலித்த பாடல் வரிகளில் அந்த மொட்டை மாடியில் சுள்ளேன்று அடித்த வெயிலையும் பொருட்படுத்தாது போர்வையால் தங்களின் முகத்தை மூடி படுத்து இருந்த நால்வரில் ஒருவன் மட்டும் திறக்க மாட்டேன் என்று அடம்பிடித்த தனது இமைகளை கஷ்டப்பட்டு திறந்து பார்த்தான். அவனை தொடர்ந்து அந்த சத்தத்தில் அவனுக்கு எதிரில் படுத்திருந்த இருவரும் தங்கள் தலையை தூங்கி பார்த்தனர்.

அந்த மொபைலையும் தனக்கு எதிரே இருந்தவர்களை பார்த்து விட்டு, அவனின் கால் பக்கத்தில் பத்து பீர் அடித்தது போல் அசையாமல் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தவனின் இடுப்பில் ஒரு மிதியை போட்டு, “ஏன் டா நாயே நேத்து ஆறு பீர் அடிச்ச நாங்களே உன் ரிங்க்டோன் சவுண்ட் கேட்டு முழிச்சிருக்கோம் சும்மா வேடிக்கை பார்த்த உனக்கு இன்னும் என்ன தூக்கம் கேட்குது. ஏன் டா சுரேசு இந்த நாயே ஃபார்ட்டி ஸ்டார்ட் பண்ணும் போது மொபைல சைலன்ட் மோட்ல போட சொல்லயாடா நீ” என்றான் கார்த்திக் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு நண்பனை பார்த்து

“சொன்னேன்டா இந்த நாய் இப்படி பண்ணும்னு தான் இவனை உள்ள விடாதீங்கன்னு சொன்னேன் இந்த எருமை மாடு கேட்டுச்சா” என்றான் தன் பக்கத்தில் படுத்திருந்த பாலாவை பார்த்து

Advertisement

“டேய் என்ன ஏன் டா திட்டுற அவன் தான் சைடிஷ்க்கு ஏதாவது வாங்கிட்டு வருவான் அதனால அவனை சேர்த்துக்கலாம் சொன்னான்” என்று பாலா கார்த்திக்கை கை காட்டினான்.

Advertisement

“என்னை ஏன்டா முறைக்கிற மாசக் கடைசி கைல காசு இல்ல வேற என்ன பண்ண” என்றான் தன்னை முறைத்த சுரேசை பார்த்து கார்த்திக்

 இவர்கள் மூவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது நின்ற அந்த ரிங்டோன் மறுபடியும் அடிக்க அதை கேட்டு கடுப்பான கார்த்திக்,“டேய் நாயே நாங்க இவ்ளோ பேசிட்டு இருக்கோம் இன்னும் அந்த போன எடுக்காம என்னடா பண்ற. பாட்ட பாரு காலையிலேயே கடுப்பேத்திட்டு இருக்கேன்”

 

Advertisement

இப்படி மூவரும் கத்திக் கொண்டு இருக்க அவர்களால் நாய் என்று அழைக்கப்பட்டவனோ மெதுவாக எழுந்து தனது லுங்கியை கட்டிவிட்டு மூவரையும் திரும்பி ஒரு லுக் விட்டுவிட்டு நிதானமாக நடந்து வந்து தனது மொபைலை ஆன் செய்து காதில் வைத்து, “வணக்கம் நான் உங்களை எஸ்கே பேசுறேன். சொல்லுங்க உங்களுக்கு என்ன பண்ணனும்” என்றான் கூலாக.

தாங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் கூலாக பேசி கொண்டிருக்கும் அவனை பார்த்து முறைத்துவிட்டு விட்ட வேலையை பார்க்க அதாங்க முகத்தை மூடி தூங்க தொடங்கினர்.

 

“ஹலோ ஜூனியர் எங்க இருக்கீங்க” என்றார் அவன் தாத்தா வேதசலாம். இவர் எக்ஸ் மில்டரிமேன்.

“சீனியர் நீங்களா என்ன காலையிலே போன் பண்ணி இருக்கீங்க”

“ஜூனியர் எப்ப பேலஸ் வருவீங்க பிளவர் குயின் உங்களை தேடிட்டு இருக்காங்க” என்றார் தனது மருமகள் அவனைத் தேடுவதாக

“எதுக்கு சீனியர் காலையிலேயே ஃப்ளவர் குயின் என்ன தேடுறாங்க. மிஸ்டர். ஜாக்சன் இல்லையா” என்றான் அவன் தந்தை வீட்டில் இல்லையா என அறிய

“ஜூனியர் எப்படி கண்டுபிடிச்சீங்க மிஸ்டர். ஜாக்சன் வீட்ல இல்லைன்னு”

“பின்ன அவர் இல்லனா தான ஃப்ளவருக்கு நம்ம ஞாபகம் வரும்.ஆமா மிஸ்டர்.திருப்பூர் குமரன் இருக்காரா”என்று தனது அண்ணா பற்றி கேட்டான்.

“இல்ல ஜுனியர் அவர் காலையில கால் வந்ததுன்னு ஸ்டேஷன் கிளம்பி போய்ட்டார்”என்றார் தனது முத்த பேரனை நினைத்து பெருமையாக.

“என்ன சீனியர் ரொம்ப பெருமையா பேசுற மாதிரி இருக்கு”என்றான் சந்தேகமாக.

“நோ நோ ஜுனியர் அவன் நம்ம எதிரி அவன பத்தி நான் எப்படி பெருமையா பேசுவேன்”என்றார் சுதாரிப்பாக.

“ம் மறந்துராதீங்க சீனியர் அவனுக்கும் நமக்கும் வார் நடக்குது. அதுல வெல்ல போறது யார்? நம்மளா? இல்ல அவனா?” என்றான் வெறியேற்றும் விதமாக

“அவன் இல்ல ஜுனியர் நம்ம தான்”என்றார் வெறியுடன்

“நம்ம உரிமையை பறிக்க அவன் யார்? நம்ம உடமையை எடுக்க அவன் யார்?”என்றான் கத்தி உணர்ச்சிபெருக்கொடு

“ஆமா அவன் யார்” என்றார் அவரும் வெறியில்

“நம்ம உரிமையும், உடமையும் கிடைக்கும் வரை நம்மோட இந்த வார் முடியாது. பாக்கலாம் வெற்றி நமக்காக? இல்லை அவனுக்கானு? வெற்றி வேல் வீரவேல்”என்றான் சபத்தோடு

“ஆமா ஜுனியர் வெற்றி நமக்கு தான் வெற்றிவேல் வீரவேல்” என்றார் உணர்ச்சிப்பிழப்பாக.

“அத அப்படியே மெண்டைன் பண்ணுங்க சீனியர் நான் ஏதோ வந்துறேன்”

“சரி ஜுனியர் வாங்க”என்று சொல்லி கால் கட் பண்ணினார் வேதசலாம்.

 

இதுவரை அவன் பேசுவதை கேட்டு கொண்டு படுத்து இருந்த கார்த்திக் எழுந்து அமர்ந்து, “ஏன் டா காலையிலேயே இப்படி உருட்டுற. அந்த பல்லு போன தாத்தா உனக்கு சீனியரா”என்றான் தூங்க விடாமல் இவன் செய்யும் அலும்பு தாங்கமுடியாமல்

“டேய் அவர் என் தாத்தா தப்பா பேசாத. அதோட அவர் சீனியர் சிட்டிசன் தான. அதான் எனக்கு அவர் சீனியர் அவருக்கு நான் ஜுனியர்”என்றான் கூலாக.

“சரி அத விடு உங்க அம்மா பேரு புஷ்பராணி தான. ஏன் டா அவங்க பேர கொல்லுற”

“டேய் அதான் டா இங்கிலிஷ்ல சொன்னேன்”

“அத கூட விடு உங்க அப்பா விநாயகம் தானடா ஏன் அவர ஜாக்சன் சொல்லுற”

“டேய் அத பத்தி கேக்காத. அவரெல்லாம் ஹிட்லர் சொல்லணும். என்ன எவ்வளவு டார்சர் பண்றார் தெரியுமா. இருந்தாலும் என்னோட சீனியர் வருத்தப்படக் கூடாதுனு தான் அவர ஜாக்சன் சொல்லுறேன்”என்றான் தந்தை மீது உள்ள கடுப்பில்

“டேய் இந்த அரசூருல உங்க அப்பாவுக்கு இருக்குற பெயர் என்ன, சொத்து என்ன, மதிப்பு என்ன, இந்த ஊருல ஒருத்தன் அவர ஏத்து பேச முடியமா. அப்படிப்பட்டவர போய் இப்படி சொல்ல உனக்கு வெக்கமா இல்ல. ஊருக்குள்ள போய் அவர் பையன் நானு சொல்லிராத”

“எப்பா சாமி நிறுத்து டா. என்ன என்னனு நீ எண்ணெய் வித்தது போதும்.ஊருக்கு வேணா அவர் நல்லவரா இருக்கலாம் ஆனா எனக்கு அவர் மிஸ்டர். ஜாக்சன் துரை தான்.சின்ன வயசுல இருந்து இப்ப வர நான் பண்ற ஒரு விஷயத்துக்காது என்ன பாராட்டி இருப்பாரா”என்றான் ஆதங்கமாக

“அதுக்கு நீ உருப்படியா ஏதாவது ஒன்னும் பண்ணனும்”என்று சொல்லி அவர்களை நோக்கி வந்த இன்ஸ்பெட்டரை பார்த்து பயந்து போன கார்த்திக் தன் பக்கத்தில் நின்றவனை பார்த்து, “ஏன் டா நேத்து வீட்டுல என்ன பண்ணி வச்சிட்டு இங்க வந்த”என்றான் மெதுவாக.

அவர்களையே பார்த்து கொண்டு வந்தவன், “என்னடா அவன் காதுல ஒதுற” என்றான் அதட்டலாக

“இல்ல சார் எதுவும் சொல்லல. நீங்க என்ன சார் காலையில இந்த பக்கம்”

“ஏன் நான் வர கூடாதா என்ன” என்றான் சுற்றிலும் இருந்து பீர் பாட்டில்களையும் சிகரெட் துண்டுகளையும் பார்த்துக் கொண்டு

“ஐயோ சார் அது வெறும் பீர் தான் சார். அது இன்னைக்கு வீக்என்ட்ல அதான் சும்மா சின்னதா ஒரு பார்ட்டி சார்” என்றான் தலையை சொரிந்து கொண்டு

“ஓ சின்ன பார்ட்டி” என்று சுற்றி கிடந்த ஆறு பீர் பாட்டில்களை பார்த்துவிட்டு அவனை முறைக்க

“சார் சார் அப்படி பாக்கறீங்க சார்.அறியா சிறுவன் ஏதோ ஒரு நாள் என்ஜாய் பண்றான் அது உங்களுக்கு பொறுக்கலையா சார்”என்றவன் மெதுவாக “விடுங்க சும்மா டெரர் போலீஸ் மாதிரி எப்ப பார்த்தாலும் முறைச்சிகிட்டு” என்று தனக்குள் சொல்லி கொண்டான்.

 “அது சரி அவனுங்க என்னடா இன்னும் தூங்கிட்டு இருக்காங்க. நான் வந்து எவ்வளவு நேரம் ஆகுது இன்னும் எந்திரிக்காம என்னடா பண்றானுங்க”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!