Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தவணைமுறையில் நெஞ்சம் கொள்ளுதே

TNK-2-2

“ஐயோ சார் நீங்க வேற உங்கள பாத்து பயந்து போய் தூங்குற மாதிரி நடிச்சிட்டு இருக்காங்க ரெண்டு பேரும்” என்று அவர்கள் இருவரின் பக்கத்தில் சென்று அவர்களின் போர்வையை உறுவி அவர்களை அவனிடம் காட்டி கொடுத்தான் கார்த்திக்.

 இருவரும் எழுந்து அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டு “துரோகி” என்று சொல்லி, “குட் மார்னிங் சார்” என்று கோரசாக இன்ஸ்பெக்டருக்கு காலை வணக்கம் வைத்தனர்.

“என்னடா நைட் அடிச்சது இன்னும் தெரியலையா நல்ல கண்ண தொறந்து பாருங்கடா மதியம் 12 மணி ஆகுது இப்ப வந்து குட் மார்னிங் சொல்றீங்க” என்றான் அதட்டலாக

 அதில் பயந்து போனவர்கள் “அண்ணா ப்ளீஸ்னா விட்டுங்கனா ஏதோ தெரியாம நைட்டு ஆளுக்கு ரெண்டு பீர் அடிச்சிட்டோம் அதுக்கான்டி எங்களை ரொம்ப மிரட்டுரீங்க நீ” என்றான் ஆதங்கமாக சுரேஷ்.



Advertisement

 அவன் சொன்னதை கேட்டு சிரித்தவன், “சரிடா உங்கள ஒன்னும் சொல்லல ஆனா ஆளுக்கு ரெண்டு பீர்லாம் ஓவர் டா ஒன்னு எடுத்துக்குங்க. அதுவே கொஞ்சம் டூ மச் தான் இருந்தாலும் மாசத்துக்கு ஒரு தடவை மட்டும் நீங்க அடிக்கிறதுனால சின்ன பசங்க பொழச்சுக்போங்கனு விடுறேன்” என்றான் கண்டிப்பாக திருப்பூர் குமரன் என்று எஸ்கேவால் அழைக்கப்படும் திருகுமரன். சொந்த ஊரில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவன். ஆறடி உயரத்தில் கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் மாநிறத்தில் அந்த குமரனை போன்று பெண்களை தனது அழகால் கவர்ந்திருப்பவன். 30 வயது ஆகியும் இதுவரை எந்த பெண்ணின் காதல் வலையிலும் விழாத அக்மார்க் 90s ஹிட்ஸ் ஹீரோ மெட்டீரியல்.

“என்னனா இப்படி சொல்றீங்க. எங்கள பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையா. நாள் முழுக்க பைக்ல அலையுறோம் கை கால் எல்லாம் வலிக்குது. அதனால கொஞ்சமா பீர் அதுவும் மாசத்துல ஒரு நாள் தான் இதுக்கே நீங்க இப்படி சொல்றீங்க. அவன் அவன் மொடாக்குடிகாரனா இருக்கான் அவனை என்ன சொல்லுவீங்க”என்றான் பாலா.

“டேய் எவன் எப்படி இருந்தா நமக்கு என்ன நம்ம ஒழுங்கா இருந்தா போதாதா. இத குடிக்கிறதுனால நம்ம உடம்புக்கு தான் கேடு. ரொம்ப வருஷம் வாழனும் ஆசை இருந்தா இத தொடாதீங்க.சரி அத விடுங்க டா என்ன நீங்களே பேசிட்டு இருக்கீங்க. உங்க எஸ்.கே பேச மாட்டாரா” என்றான் முறுக்கிக் கொண்டு நிற்கும் தனது தம்பி பார்த்து

Advertisement

 “பேச மாட்டாராம் அண்ணா உங்களுக்கும் அவங்களுக்கும் வார் நடக்குதாம். அதனால அவங்களோட உரிமையும் உடமையும் நீங்க கொடுக்கிற வரைக்கும் உங்க கூட பேச மாட்டாங்களாம் னா” என்றான் கார்த்திக்.

Advertisement

“அவங்களோட உரிமையை அதாவது நைட் தூங்காம உட்கார்ந்து கொரியன் ட்ராமா பாக்குறத நான் ஏன்னு கேட்க கூடாது அப்படித்தானே” என்றான் தம்பியை பார்த்து

 அவன் ஆமா என்பது போல் தலையை ஆட்ட அதனை கவனித்துக் கார்த்திக், “என்னது கொரியன் டிராமாவா ஏன் டா நீ என்ன லேடிஸா அவங்க தான் உட்கார்ந்து அந்த மைதா மாவ பார்த்துட்டு இருப்பாங்க உனக்கு என்னடா வந்துச்சு. நீ ஏன் டா அந்த சீரிஸ் பாக்குற. இதுக்கு ஒரு போராட்டம் வேற” என்றான் அவனை கேவலமாக பார்த்துக் கொண்டு கார்த்திக்

“டேய் உனக்கு என்னடா தெரியும் கொரியன் டிராமாவை பத்தி.அதுல வர்ற ரொமான்ஸ் எப்படி இருக்கும் தெரியுமா உனக்கு. ஹீரோயின்ஸ் எப்படி இருப்பாங்க தெரியுமா. உனக்கென்டா தெரியும் என் சீனியர் கிட்ட கேட்டு பாரு அப்படி சொல்லுவாரு. அந்த காதல் கதைய கேட்டா கண்ணுல கண்ணீர் வரும்டா. போடா உன்ன மாதிரி சின்ன பையனுக்கு எல்லாம் கே டிராமா பத்தி என்னடா தெரியும்”

Advertisement

“டேய் அவனா நீ”

“போடா லூசு பயலே உனக்கு என்னடா தெரியும் வாய மூடிட்டு சும்மா இரு’ என்று கார்த்திக்கை திட்டி விட்டு தனது அண்ணனின் பார்த்து,

‘மிஸ்டர் திருப்பூர் குமரன் உங்ககிட்ட நாங்க பேச முடியாது என்னோட உரிமையை பறிச்சிட்டிங்க அதோட எனக்கு ரொம்ப பிடிச்ச என் உடமையைப் புடிங்கிட்டிங்க அத என்னைக்கு மறக்க முடியாது மிஸ்டர் திருப்பூர் குமரன்” என்றான் தனது ஆள்காட்டி விரலை அவன் முகத்தின் முன்பு நீட்டி

“ஓ பேசமாட்ட சரி ஓகே டேய் இன்னைக்கு வீட்ல அம்மா பிரியாணி பண்றாங்க நீங்களும் வரீங்களாடா இல்ல உங்க எஸ்கே கூட சேர்ந்து நீங்களும் இங்கேயே இருக்க போறீங்களா” என்றான் மற்றவர்களை பார்த்து

“என்னன்ணா சொல்ற பிரியாணியா”

“ஆமாடா பிரியாணி தான் அம்மா இன்னைக்கு பிரியாணி பண்றாங்க என்ன போன் பண்ணி கூப்பிட்டாங்க நான் தான் சரி ஒத்தையா போய் திங்கிறதுக்கு பதிலா தம்பிகளையும் கூட்டிட்டு போலாமேன்னு வந்தேன் ஆனா நீங்க யாரும் வர்ற மாதிரி தெரியலையே”

“என்னன்னு சொல்ற நாங்க எப்ப வரலன்னு சொன்னோம் இத நீங்க வந்த உடனே சொல்ல வேண்டாமா வாங்க வாங்க நம்ம வீட்டுக்கு வீட்டுக்கு போவோம் எவன் எப்படி போனா நம்மளுக்கு என்ன வாண்ணா” என்றான் பாலா வேகமாக

“அதுவும் சரிதான் ஆனா உங்க எஸ்கேவ விட்டுட்டு என் கூட நீங்க வருவீங்களா”

“என்னண்ணா நீ அவன் என்ன எஸ்கே வா அவன் பேரு சரண்குமார் தான அதை எஸ் கே ன்னு சொல்லிட்டு ஊரை ஏமாத்திட்டு அலையுறான் அயோக்கிய ராஸ்கல். நமக்கென்ன நம்மளோட பேச்சு. நமக்கான்டி பிரியாணி வெயிட்டிங் வாண்ணா போலாம்” என்றான் அவனின் கையைப் பிடித்துக் கொண்டு சுரேஷ்.

“டேய் துரோகிங்களா. போங்கடா பிரியாணி பார்த்த உடனே அப்படியே கட்சி மாறிங்கள போங்கடா எனக்கு என் சீனியர் இருக்கார். அவரு ஒன்னும் உங்கள மாதிரி இல்லடா. கடைசி வரைக்கும் என் கூட இந்த வார்ல அவர் இருப்பார் உங்கள மாதிரி பிரியாணிக்காக நண்பனை விட்டுக் கொடுக்க மாட்டாரு டா என் சீனியர்”

“ஓ அப்படியா உங்க சீரியரோட கடைசி இன்ஸ்டா ஸ்டேட்டஸ் பாருங்களேன்” என்றான் நக்கலாக திரு

 “எதுக்கு இவன் பாக்க சொல்ற” என்று தனது போனை எடுத்து இன்ஸ்டா ஓபன் செய்து அதில் “சலாம் வேதா பாய்” என்ற வேதாச்சலத்தின் அக்கௌன்ட் சென்று அவரின் ஸ்டேட்டஸ் பார்த்தான். அதில் “My struggle was over with ice cream and biryani.so sunday party arampikkalama   frds 😎🕺💃” என்று பிரியாணி மற்றும் ஐஸ்கிரீமை போட்டோ எடுத்து போட்டிருந்தார். அதை பார்த்து கடுப்பானவன், “சீனியர் எட்டப்பா வரேன் இப்ப வந்து உன்னை வச்சிக்கிறேன். ஐஸ்கிரீம பார்த்து உன் ஜூனியரை ஏமாத்திட்ட இல்ல.சீனியர் உன்னை என்ன பண்ண போறேன் மட்டும் பாரு” என்று தனது தாத்தாவை திட்டியவன், “இருந்தாலும் பிரியாணி இருக்குதே என்ன பண்ண பேசாம இவன் கூட போய்லாமா. இப்ப சொன்னா நம்மள வேற ஒரு மாதிரி பாப்பான் இப்ப என்ன பண்ணலாம்” என்றவன் யோசிப்பது போல தனது அண்ணனை பார்த்து

“மிஸ்டர். கொடிகாத்த குமரன் சிக்கன் பிரியாணியா மட்டன் பிரியாணி”

 அவனைப் பார்த்து நமட்டு சிரிப்புடன் “உன்ன பத்தி எனக்கு தெரியாதா தம்பி” என மனதில் நினைத்துக் கொண்டு, “மட்டன் பிரியாணி” என்றான் திரு.

“ அப்புறம் ஏன்டா இங்க நின்னு வேஸ்ட்டா பேசிட்டு இருக்கீங்க வாங்க போலாம் அப்புறம் ஐஸ்கிரீம் இருக்கு தான ஏன் கேக்குறேனா இந்த சீனியர் இருக்காரே அவர் எல்லாத்தையும் தின்றுவாரு அதனால வாங்க சீக்கிரமா போலாம்” என்று சொல்லி அனைவருக்கும் முன்பாக கீழே இறங்கிச் சென்றான் எஸ் கே என்ற சரண்குமார்.

 

@@@@@@@@@@

 

 “என்ன இந்திரா இந்த வெயில இங்க உக்காந்து இருக்க வா உள்ள போலாம்” என்று தனது வீட்டு திண்ணைப்படியில் அமர்ந்திருந்த இந்திராவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள் சுதா.

 “அது ஒன்னும் இல்லக்கா வசுக்கா காசு இல்லன்னு சொல்லிட்டா அதான் என்ன பண்ணனு தெரியாம இங்க உட்கார்ந்து இருக்கேன்”

“அது சரி உனக்கு இப்ப எவ்வளவு ரூபாய் வேணும்”

“ஒரு 2000 ரூபாய் இருந்தா மட்டும் போதும்”

“அது போதுமா கரெக்டா சொல்லு அவ்வளவு காசு இருந்தா போதுமா”

“போதும் அக்கா பெருசா கிராண்ட் எல்லாம் டிரஸ் வேண்டாம் ஏதோ புதுசா ஒன்னு எடுத்தா மட்டும் போதும்”

“அப்ப நான் சொல்லுற வேலை உனக்கு கரெக்டா இருக்கும். ஒரே ஒரு கையெழுத்து போட்டா மட்டும் போதும் 2000 ரூபாய் கிடைக்கும் உனக்கு ஓகே வா”

“என்னக்கா சொல்றீங்க ஒரு கையெழுத்துக்கு 2000 வா அப்படி என்ன வேலை” என்றாள் ஆச்சரியமாக இந்திரா. அதனால் தனது உயிர் ஊசலாட போகிறது என்று தெரியாமல்.

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!