Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vannam Theda Vaarayo

தேடல் 27

அடுத்தநாளிலிருந்து இருவரும் அவர் அவர்கள் வேலையையே கண்ணும் கருத்துமாக இருந்தனர்..

சுமி சைந்து மற்றும் மெர்லின் என மூவரும் அவர்களுக்காக கொடுக்க பட்ட இடத்தில் இருந்து அவர்களது டிசைனிங்கை திறம்பட செய்து கொண்டிருந்தனர்…

சாப்பிடும் போது மட்டும் பெண்கள் அனைவரும் சேர்ந்து உணவை பகிர்ந்து கொண்டு உன்ன நினைத்தாலும் அது எல்லாம் ஒரே சாப்பாடு என மூவரும் அவர் அவர்களுக்காக எடுத்து வர பட்ட உணவை உண்டனர்…

அதே நேரம் சூர்யா விக்ராந்தை அழைத்துக்கொண்டு சாப்பிட வர அங்கே சைந்தவி அவளது நண்பர்களுடன் இருப்பதை கண்டு சூர்யாவை இழுத்துக் கொண்டு அவர்களிடம் சென்றான்..



Advertisement

” ஹாய் கேர்ள்ஸ்..!!!! “என்று சொல்லி சைந்தவி பக்கத்தில் விக்ராந்த் அமர அவனை பார்த்து முகத்தை திருப்பிக் கொண்ட சைந்து சூர்யாவை கண்டு “ஹாய் ப்ரோ ..!!ஏன் அங்கேயே நின்னுட்டு இருக்கீங்க இங்க வந்து உக்காருங்க ” என்று சுமியின் பக்கத்தில் இருந்த இடத்தை சுட்டிக் காட்டி சொல்ல..

சைந்துவிற்கு சின்ன தலை அசைத்தலோடு சுமி பக்கத்தில் அமர்ந்தவன் யாரும் அறியாதவாறு ” ஹாய் ” என்றான் சுமியை பார்த்து அவளும் பதிலுக்கு ஹாய் சொல்லி அமைதியாக சாப்பிட மெர்லின்க்கு புதிதாக வந்தது யார் என்று தெரியாததால் விக்கியின் சட்டையை இழுத்து அவன் காதில் ” விக்கி ப்ரோ இது யாருன்னு நீங்க சொல்லவே இல்லையே அதுவும் இப்படி உராங்குறான் மாதிரி மூஞ்ச உம்முன்னு வச்சிருக்காங்க ” என்று அவன் காதை கடிக்க விக்கியோ அதை கேட்டு சிரிக்க தொடங்கினான்..

இவன் சிரிப்பதை கண்ட மூவரும் பூதத்தை பார்ப்பது போல் பார்க்க மெர்லின் அவனை பார்த்து முறைத்து வைத்து விட்டு ” ஒன்னு நான் கேட்ட கேள்விக்கு பதில சொல்லு இல்லன்னா சொல்ல முடியாதுன்னு சொல்லு இப்படி கேவலமா சிரிக்காத சரியா பாக்க சகிக்கல ப்ரோ இதெல்லாம் சைந்துக்காக மட்டும் தான் பொறுத்துக்கிறேன் ” என்றாள்

Advertisement

[the_ad id=”6605″]

Advertisement

“இப்போ எதுக்கு இப்படி சிரிக்கிற ” என்று சைந்தவி கேட்டு வைக்க சுமியும் அதேபோல் பார்வை பார்க்க ” அதுவா மெர்லின் கேட்டதுக்கு தான் சிரிப்பு வந்துருச்சு ” என்று கூறி ” இது என்னோட ஃபிரண்ட் சூர்யா சென்னைல இருக்கான். நாங்க ரெண்டு பேரும் காலேஜ் ஃபிரண்ட்ஸ். ஒரே இடத்துல தான் வேலைக்கு சேர்ந்தோம் . எனக்கு இந்த ஆஃபர் கிடைக்கவும் வந்துட்டேன் சார் அவுங்க அத்த பொண்ணுக்காக அங்கேயே வேல பாக்குறான் ” என்று அவனோட தகவல்களை சொன்னான்..

“இதெல்லாம் யாராவது கேட்டாங்கலா டா ” என்பது போல் லுக்கு விட அதை கண்டுக் கொள்ளாதவன் இது மெர்லின் என்றும் இவள் சுமித்ரா என்றும் அறிமுக படுத்தினான்…

பின்னர் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க சாப்பிட முடியாமல் தவித்த சுமித்ரா டிஃபன் பாக்ஸை மூடி வைக்க போக அதை லாவாக தடுத்தவன் ” என்ன ஆச்சி மித்ரா ” என்று கேட்க ” பசிக்கல” என்றாள் சைகையில்..

Advertisement

அதை உணர்ந்த சூர்யா ” கொஞ்சமாச்சும் சாப்பிடு பா. பாரு உன் டிஃபன் பாக்ஸ் அப்படியே இருக்கு ” என்று கெஞ்ச அவள் “வேணாம் ” என்பது போல் தலையசைக்க

“அப்போ சரி இந்தா என்னோட டிஃபன் எடுத்துக்கோ இதுல கொஞ்சம் தான இருக்கு இத சாப்பிடு ” என்று கூறி அவளிடம் தனது டிஃபன் பாக்ஸை நகர்த்தியன் அவள் சாப்பிடாமல் வைத்திருந்த சாப்பாட்டை எடுத்து உண்ண ஆரம்பித்தான்..

இதை பார்த்த அனைவருக்கும் ஆச்சிரயமே . அது முகத்தில் நன்றாக தெரிந்தது இருப்பினும் அதை யாரும் கண்டு கொள்ள வில்லை…

சுமி அந்த சாப்பாட்டை ஏதோ அமிர்தம் கிடைத்தது போல் புருஷன் உண்ட இல்லையில் சாப்பிடும் பொன்ஜாதி போல் அதை ருசித்து சாப்பிட்டு முடித்தாள்..

பின்னர் அனைவரும் கிளம்பி அவர் அவர்களது வேலையை காணச் சென்றனர்…

“டேய் விக்ராந்த் இனி மித்ரா மெர்லின் அப்புறம் சைந்தவி மூணு பேருக்கும் நானே சமச்சி எடுத்துட்டு வரேன் டா ” என்று சொல்ல…

அவனை ஏதோ ஒரு வேற்று கிரக வாசி போல் பார்த்து வைக்க ” ஏன்டா இப்படி ஏலியன பாத்த மாதிரி பாக்குற..??” என்றே அவனை பார்க்க

“நீயா டா இப்படி பேசுற என்னால இத நம்பவே முடியல டா. எனக்கு சமச்சி தான்னு சொன்னா ஓவரா சீன் போடுவ இன்னைக்கு என்னென்னனா அவுங்களுக்கு சமச்சி கொண்டு வரேன்னு சொல்லுற ” என்றே கேட்க…

“இல்ல டா இன்னைக்கு மித்ராவோட சாப்பாடு சாப்பிட்டேன் ல அத சாப்பிட கூட முடியல டா அதுல உப்பு காரம்னு எதுவுமே இல்ல. அத எப்படி தான் சாப்பிடுறாங்கனே தெரியல .அதான் நான் சமச்சி தரலாம்னு இருக்கேன் ” என்று அவன் சொல்ல அவனின் பதிலை கண்டு தலையை மட்டும் அசைத்து வைத்தான்.

“நீ தான் டா அவுங்க கிட்ட சொல்லனும் ” என்று பணியிட “சரி டா நான் சைந்து கிட்ட சொல்றேன் ” என்றவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றான்..

அந்த நாள் பொழுது அவர்களுக்கு வேலை பலுதின் காரணமாக வேகமாகவே செல்ல அதேபோல் அடுத்தடுத்த நாட்களும் வேகமாக சென்றது. நாட்களின் ஓட்டத்தை போலவே சுமி சூர்யாவின் நட்பும் விரைந்து வளர்ந்தது. சூர்யா தினமும் விதவிதமாக நந்தினியின் உதவியால் சமைத்து எடுத்து வந்து கொடுத்து அவர்களுடன் சேர்ந்து உணவு அருந்தினான். இவனது சமையலுக்காகவே மூவரும் தவம் இருக்க தொடங்கினர்…

அந்த விடியல் ஏனோ சுமிக்கு புத்துணர்ச்சியாக இருந்தது..

சுமி சோம்பல் முடித்த படி எந்திரிக்க அவள் முன்பு அவளது குடும்பத்தார்கள் அனைவரும் கூடியிருந்தனர் அவளது நட்புக்களுடன்…

இதனை கண்ட சுமி தான் காண்பது கனவோ என்று எண்ணி கண்களை கசக்கிக் கொண்டு பார்க்க அப்பொழுதும் அவர்கள் தன் முன்பு இருப்பதை கண்டு ஆனந்த அதிர்ச்சியுற்றாள்…

“ஹே வாண்டு..!!!கண்ண போட்டு ரொம்ப தேய்க்காத அப்புறம் உன் பிறந்த நாள் அன்னைக்கு உனக்கு கண்ணாடி வாங்கி தர வைக்காதே ” என்று கூறி ” ஹேப்பி பிர்த்டே டூ மை லிட்டில் சிஸ்டர் ” என்றான் வெங்கட்.

வெங்கட்டை கண்ட சுமி கட்டிலில் இருந்து எழுந்து ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டு “தேங்க்ஸ் டா அண்ணா ” என்றாள்…

[the_ad id=”6605″]

அடுத்தது அவள் தந்தையிடம் சென்றவள் ” அப்பா ” என்று அணைத்துக் கொள்ள ” ஹாப்பி ப்ர்த்டே ஃபிரண்ட்சஸ் ” என்றார் மஹாலிங்கம்…

அடுத்ததாக அவள் அன்னை பனிமலரிடம் சென்றவள் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க ” எப்போதும் என் பொண்ணுக்கு எந்த ஒரு கஷ்டமும் வராம அவள நீ தான் விந்து பாத்துக்கணும் ” என்று ஆசிர்வாதம் பண்ணியவர் அவளின் நெற்றியில் இதழ் பதித்து ” பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா சுமி மா ” என்றார்.

“தேங்க்ஸ் அம்மா ” என்றவளின் கண்கள் யாரையோ தேட “என் தங்கச்சி யார தேடுறாங்க ” என்று நமட்டு சிரிப்புடன் வெங்கட் கேட்க…

“நான் யார தேடுறேன்னு உனக்கு தெரியாதா அண்ணா ” என்று பார்வையை சுழல விட ” தெரியும் தான் ஆனா நீ எதிர் பார்க்கிற ஆள் தான் வரலையே ” என்று சீரியசாக முகத்தை வைத்து சொல்ல…

“என்ன அண்ணா சொல்ற அவன் என்ன பாக்க வரலையா ” என்று சொல்லி உதட்டை பிதுக்கிக் கொண்டு அழுக தயாராகிக் கொண்டு இருக்க…

” இப்போ எதுக்கு அழுக ரெடியாகுறீங்க ” என்றவன் அவள் பக்கத்தில் சென்று போ போய் இந்த ட்ரெஸ் போட்டுட்டு வா என்று சொல்லி அவளிடம் ஒரு உடையை திணித்து விட்டு சென்றான்.

அதை வாங்கிக் கொண்டு சென்றவள் அவனை வசை பாடிய படியே அந்த ஆடையை அணிந்துக் கொண்டாள்.

அந்த உடை அவளுக்கு பிடித்தமான ப்ளு மற்றும் பிங்க் நிற கலரில் இருந்த லெஹங்காவை அணிந்திருந்தாள். அந்த உடை அவளுக்கு கச்சிதமாக இருந்தது. அவள் வெளியே வந்தவுடன் வெங்கட் அவன் பக்கத்தில் வந்து அவள் கண்களை இருக்க கட்டினான்..

“அண்ணா என்ன பண்ணுற “என்று அதை அவிழ்க்க முயல “கொஞ்சம் சும்மா இரு சுமி மா ” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்…

கார்டன் வரை அவளை அழைத்து வந்தவன் அவள் கண்களை திறந்து விட அவள் கண் எதிரே இருந்ததை கண்டு அதிசியத்து போனாள்…

அவளுக்கு பிடித்தமான மலர்களை கொண்டு ” ஹாப்பி பேர்த்டே சுமி ” என்று எழுதி இருந்தது.

அதன் பக்கத்தில் சென்றவள் அதை தொட்டு பார்க்க முயல அதற்குள் அவள் மேலே பூ மழை தூவ “ஹாப்பி பேர்த்டே சுமித்ரா ஆண்டி ” என்று சத்தம் வர

சத்தம் வந்த திசையை திரும்பி பார்த்தவள் அங்கே குழந்தைகளுக்கு குழந்தையாய் நடுவில் நின்ற உதய்யை கண்டு விழியின் ஓரத்தில் கண்ணீர் துளி தென்பட தொடங்கியது…

அனைத்து குழந்தைகளும் ஒவ்வொன்றாக வந்து அதன் வாழ்த்துக்களை தெரிவித்து செல்ல இறுதியில் உதய் வந்து அவனது வாழ்த்தை தெரிவித்தான்.

இன்முகத்துடன் நன்றி கூறியவள் அவனை அணைத்துக் கொண்டு ” என்னோட பேர்த்டேவ மறந்து பொய்ட்டியோன்னு நினைச்சிட்டேன் டா ” என்று சொல்லி விலக..

“அட லூசு நான் எப்படி உன் பேர்த்டேவ மறப்பேன் அதுவும் என்னோட பெஸ்ட் பிரண்ட் அண்ட் ஏஞ்சல் பேர்த்டேவாச்சே என்னோட விஷ் இல்லாம நல்லா இருக்காதே ” என்று கூற “மறந்து பாரு அப்புறம் தெரியும் உனக்கு ” என்று மிரட்டியவள் குடும்பத்தாருடன் இணைந்துக் கொண்டாள்….

அந்த நாள் முழுவதும் குடும்பத்துடன் நேரத்தை செலவிட சூர்யாவின் நினைவை மறக்க அடித்தது..

இரவு உணவை லண்டனில் உள்ள பெரிய ரெஸ்டாரண்டிற்கு சாப்பிட சென்றனர்…

அங்கே வெங்கட் மற்றும் உதய் என இருவரும் சேர்ந்து சுமிக்கு வெட்ட கேக் எடுத்துட்டு வர அதனை கண்ட சுமி ஆச்சரியத்து போனாள். அது ஏன் என்றாள் அந்த கேக் அவள் முகத்தை பிரதிபலிப்பதாக இருந்தது…

இருவரையும் அணைத்து கொண்டவள் கேக் வெட்டிக் கொண்டாடினாள்.

[the_ad id=”6605″]

இதை எல்லாம் அந்த ரெஸ்டாரண்டிற்கு டின்னர் கம் மீட்டிங் என்று வந்த ஜோஸ்மான் கண்ணில் பட்டு தெரித்தது..

அவளது புன்னகை மற்றும் அந்த அளவு கடந்த அழகு அவனை இரசிக்க செய்தது. அவனால் அவளை விட்டு விழி அகற்றக் கூட இயலவில்லை.. அவளின் மேல் அப்படி ஒரு பித்தம் அவனுள் அந்த நிமிடமே உருவாயிற்று. அவளுக்கு தெரியாமல் அவளை அழகாக படம் பிடித்து மொபைலிலும் அவனது மனதிலும் சேகரித்துக் கொண்டான்..

இதை அறியாத அவள் மகிழ்ச்சியாக அவளது தந்தை தாய்க்கு கேக் ஊட்டி விட்டு மகிழ்ந்தாள். இரவு உணவை முடித்து விட்டு அனைவரும் வீடு கிளம்பி விட உதய்யும் வெங்கட்டும் அன்றிரவே சென்னை திரும்பினர்.

மஹாலிங்கமும் பனிமலரும் அவளுடன் அன்றிரவு தங்கிக் கொண்டனர்…

சூர்யாவின் நினைவுகள் ஆக்கிரமித்து கொள்ளாத படி அவளை நன்கு கவனித்துக் கொண்டனர் அவளது பெற்றோர்கள்…

தன் தந்தை தாயுடன் நேரத்தை செலவிட்டவள் சீக்கிரமாகவே உறங்கி போனாள்…

அந்த நாள் முழுவதும் மித்ராவை காணாததால் சிறிது பயந்து போன சூர்யா அவளுக்கு அழைத்து பார்க்க அது ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.. இதனால் மேலும் பயந்தவன் செய்வதறியாது இருந்தான் அவனது அறையில்…

ஜோஸ்மான் அவனது அறையில் அவளது புகை படத்தை பார்த்த படியே இருந்தான். அவனின் பார்வை அவளை இரசித்துக் கொண்டிருந்தது…

அந்த இரவு ஜோஸ்மானுக்கும் சூர்யாவுக்கும் உறங்க முடியா இரவா போக அதற்கு காரணமான சுமியோ நிம்மதியாக உறங்கி போனாள்…

இதுவே அவளது நிம்மதியான தூக்கம் என்று அறியாமல் உறங்கிக் கொண்டு இருப்பவளை கண்டு அந்த விதி கைக் கூப்பி சிரித்தது….

~தேடல் தொடரும்…..

?????????????????????

Stay tuned…✌️✌️✌️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!