Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vannam Theda Vaarayo

தேடல் 26

என்னை அறியாமல்
என் மனமோ
உன்னை
நாடுகிறது..
இது அறியா
பேதையாக
வலம் வருகிறேன்❤️❤️❤️….!!!!!

     சுமி எதிரிலே சூர்யா இருக்கவும் இன்றும் ஏதாவது தன்னை கேவலமாக திட்டிவிடுவானோ என்ற பயம் அவளுள் எழுந்தது..

ஆனால் அவனோ அவன் உண்டு அவன் வேலை உண்டு என இருந்தான்..

சுமி தான் அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக என்னென்னவோ செய்து கொண்டு இருந்தாள்…



Advertisement

பெண்கள் அனைவரும் சேர்ந்தால் போதும் அங்கு ஃபிஷ் மார்க்கெட் இருக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போகும் என்பது போல் அங்கே அவ்வளவு சத்தம் இருந்தது.

ஒருவரையொருவர் கலாய்த்து கொண்டு இருந்தனர். இதை கண்ட சூர்யா அவன் தலையில் அடித்துக் கொண்டு தனது டிசைனை பார்க்க வருவோரிடம் விவரித்து கொண்டு இருந்தான்..

அந்த நேரம் அவன் விழி எதார்த்தமாக எதிர் முனையில் இருந்த பெண்களிடம் செல்ல அதில் ஒருவள் மட்டும் அவளது முகத்தை ஷால்லை கொண்டு மூடி இருந்தாள். அத்தனை பெண்களிடம் இருந்தும் அவள் வித்தியாசமாக காணப் பட்டால்.

Advertisement

அவள் முகத்தை மூடிக் கொண்டு இருந்தாலும் அவளது விழிகள் அங்கும் இங்கும் அலைப்பாய்ந்த படி இருந்தது. அந்த விழிகளை பார்த்திருந்தவனை விக்ராந்தின் அழைப்பால் தடை செய்யப்பட்டது…

Advertisement

சூர்யாவிற்கு அந்த கண்களை எங்கோ பார்த்தது போல் இருந்தது. அது யாரோடையது என்ற ஆர்வத்தில் பார்த்துக் கொண்டிருந்த நேரம் தான் ” டேய் சூர்யா ” என்று விக்ராந்த் அழைத்தான்.

அதில் கடுப்பான சூர்யா ” என்னடா வேணும் உனக்கு ” என்றான் அந்த குரலில் சிறிது எரிச்சல் இருந்தது..

” இல்ல மச்சி ரொம்ப நேரமா உன் ஃபோன் அடிக்குது அதான் கூப்பிட்டேன் டா ” என்றவன் ” என்னடா நந்தினி சிஸ் கூட ட்ரீம்ஸ்ல இருந்தியா என்ன ரொம்ப நேரமா அடிக்கிற மொபைல் சௌண்ட் கூட கேக்காத அளவுக்கு சிலை போல அப்படியே இருக்க ” என்று கிண்டலடிக்க

Advertisement

அதில் மேலும் கோப முற்றவன் ” கொஞ்சம் மூடிக்கிட்டு இருக்கியா ” என்று சொல்லி மொபைலை எடுத்து பார்க்க அதில் நந்தினியின் பெயர் தெரியவும் இதுவரை இருந்த கோபமெல்லாம் எங்கோ பறந்து காற்றோடு காற்றாக கலந்து அவன் முகத்தில் புன்னகை மலர செய்தது…

” சரி நீ போய் ஃபோன் பேசு நான் போய் சைந்துவ கூட்டிட்டு வந்து உனக்கு இன்ட்டொரிடியூஸ் பண்ணி வைக்கிறேன் ” என்று சொல்லி விட்டு அவனது காதலியை தேடி சென்றான்..

அதை எடுத்து தனியாக சென்றவன் நந்தினியின் நம்பருக்கு அழைப்பு விட்டான்…

சிறிது வினாடிளே அழைப்பை எடுத்த நந்தினி ” ஹலோ அத்தான் ” என்று மென்மையாக அழைக்க அந்த அழைப்பு அவனுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகளை மனதினுள் பறக்க விட்டது..

“சொல்லு நந்தினி ” என்றவனின் குரலில் கடுமை இருந்தது..

“அது வந்து அத்தான் இன்னைக்கு உங்களோட பிரசன்டேஷன் இருக்குன்னு காலைல அத்த சொன்னாங்க அதான் நாங்க எல்லாம் உங்களுக்கு விஷ் பண்ணலாம்னு கூப்பிட்டோம் ” என்றாள் வேகமாக…

“எல்லாரும்னா யாரெல்லாம் ” என்ற குரலில் கோபம் கொப்பளிக்க ” அது நாங்க தான் ” என்ற சத்தம் அவன் காதை கிழித்தது.

[the_ad id=”6605″]

இதை கேட்ட அவன் ஒரு நொடி கையில் இருந்த மொபைலை கீழே தவற விட அதை பத்திரமாக பிடித்தாள் அவள்..

” ஹலோ பார்த்து பேசுங்க சார் பேசுற அவசரத்துல ஃபோனலாம் கீழ போட்டுட்டு போகாதீங்க சார் ” என்று விட்டு அவன் கை பிடித்து அதை கொடுத்து விட்டு சென்றாள் அந்த முகமூடி அணிந்த பெண்.‌..

அதை கையில் வாங்கியன் அந்த பெண் சென்ற இடத்தையே வெறித்து பார்த்து கொண்டிருக்க மொபைலில் இருந்த ஜீவா சுஜி கவி மற்றும் நந்தினி அனைவரும் ஒருவர் பின் ஒருவராக கூப்பிட சுயநினைவிற்கு வந்தவன் அதை எடுத்து பேச ஆரம்பித்தான்..

“அத்தான் உங்களுக்கு என்ன ஆச்சி..?? ” என்று நந்தினி சிறு பயத்துடன் கேட்க..

“எனக்கு ஒன்னும் இப்படி எல்லாரும் சேர்ந்து ஒரே நேரத்துல கத்துன்னா அதான் மொபைல் கீழ விழுந்துருச்சி ” என்றான் கோபத்துடன்

“சாரி டா அண்ணா ” என ஜீவாவும்” சாரி அத்தான் ” என்று கவியும் சுஜியும் சொல்ல “எல்லாம் பண்றது அதுக்கப்புறம் சாரி சொன்னா நான் மன்னிக்கனும்மா . உங்க எல்லாருக்கும் ஊருக்கு வந்து இருக்கு ” என்று கூற

“சரி அண்ணா உனக்கு எங்க மேல இவ்வளோ பாசம் இருக்கும்னு தெரியாம போச்சி வாங்குறது தான் வாங்குற ஊருல இருந்து வரும்போது எங்களுக்கு பெருசா வாங்கிட்டு வா ” என்று ஜீவா நக்கலாக கூற

அதை உணர்ந்த சூர்யா பற்களை கடித்து கோவத்தை கட்டு படுத்த முயல அதே நேரத்தில் சுமி அந்த வழியாக சென்று கொண்டிருந்த நேரம் கால் தடுக்கி கீழே விழ போக அவன் அவளின் இடையோடு பிடித்து நிறுத்தினான். சுமி பயத்தில் கண்ணை இறுக்க முடிக்கொண்டாலும் அவளது இதயத்தின் துடிப்பு அதிகரித்தது. சூர்யாவின் கையிலிருந்து சில்க் ட்ரெஸ் அணிந்திருந்தாள் நலுவ பார்க்க அவளது இடையை மேலும் இறுக்க பற்றி அவளை நிமிர்த்தி நிறுத்தினான்.

இருவருக்கும் இடையில் நூல் அளவு இடைவெளி மட்டுமே இருக்க சுமி கண்களை திறக்கும் நேரம் பார்த்து பலார் என்று அறைந்தான் சூர்யா. ஜீவாவிடம் இருந்த கோபத்தை அவள் மேல் காட்டினான்..இது அனைத்தும் நொடி பொழுதில் நடந்தது.

தன் கைகளை தாங்கி பிடித்தவாறு நின்றிருந்தாள். அப்போதே இருவரும் ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்ள “நீயா ” என்று சூர்யா அதிர்ச்சியாக சுமியும் அதேபோல் செய்கை செய்தாள். ஏதோ தெரியவில்லை அவளால் அவன் முன் பேச கூட முடியாமல் தவித்தாள்.

அவர்களது இரண்டாவது சந்திப்பும் முதல் சந்திப்பு போலவே நடக்க சுமி மன்னிக்கும் படி தன் இரு கால்களையும் பிடித்துக் கொண்டு மன்னிப்பு வேண்டினாள்..

இதனை கண்ட பிறகே அவனின் மூலைக்கு உறைத்தது இவள் வாய் பேச முடியாத பெண் என்று.. அதுவும் இல்லாமல் அவனது கை பதம் அவளது கண்ணத்தில் நன்கு பதிந்து இருந்தது..

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே நிற்க சூர்யாவே முதலில் ஆரம்பித்தான் .

” என்ன மன்னிச்சிடு நான் ஏதோ ஒரு கோபத்துல அடிச்சிட்டேன் அது தப்பு தான். அதே மாதிரி நேத்து உன்ன அவ்ளோ மோசமா திட்டிருக்க கூடாது அதுக்கும் சேர்த்து சாரி ” என்று அவன் செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டினான்…

சுமி அந்த கண்களையே மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்க அவன் கூறியது எதுவும் அவள் விழ வில்லை. இவனும் அவளது பதிலுக்காக காத்திருக்க சுமி அமைதியாக இருக்கவே அவளின் முன் சொடக்கிட்டான்.

அதில் விழித்தவள் என்னவென்று செய்கையில் கேட்க  அவன் தலையில் அடித்துக் கொண்டு மீண்டும் அவளிடம் மன்னிப்பு கூறினான்…

பரவாயில்லை என்பது சைகை செய்தவள் அவளும் தன் பங்கிற்கு மன்னிப்பு வேண்ட அங்கே இருவரது நட்பும் செடியிலிருந்து முட்டி பூப்பது போல் அவர்களது நட்பும் முட்டாக முலைத்தது..

ஒருவர் பேச ஒருவர் சைகையில் பேச என இருவரும் பேசிக்கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து விக்ராந்த் அவனது காதலி சைந்தவியுடன் வந்தான்…

அவர்கள் வர நேரம் பார்த்து சுமிக்கு வெங்கட்டிம் இருந்து அழைப்பு தனியே சென்று அழைப்பை ஏற்று பேசினால்…

“டேய் இங்க என்ன டா பண்ற உன்ன எங்க எல்லாம் தேடுறது ” என்று சலித்துக் கொள்ள

“எதுக்கு இப்போ என்ன தேடுன முதல அத சொல்லு ” என்றவனின் பார்வை அவன் பக்கத்தில் இருந்த சைந்தவி மேல் பதிந்தது..

சைந்தவியின் விரல்களில் தன் விரலை கோர்த்த விக்ராந்த் ” இது சைந்தவி டா நான் காதலிக்கிற பொண்ணு ” என்றான் காதலுடன் அவளை பார்த்து..

“ஹாய் ப்ரோ..!!!ஐம் சைந்தவி ” என்று கைக் கொடுக்க அவனும் அவளுக்கு கை குழுக்கி “ஐம் சூர்யா ” என்றான்…

இருவரும் பொதுவாக பேச விக்ராந்தின் காதுகளில் புகை வராதா குறையாக தான் இருந்தது..

“டேய் நான் ஒருத்தன் இங்க இருக்கேன் டா என்னையும் கொஞ்சம் பாருங்க ” என்றிட இருவரும் சிரித்துக் கொண்டு ஹைஃபை அடித்துக் கொண்டனர்…

“எப்படி சிஸ் இவன் கிட்ட போய் மாட்டுனீங்க ” என்று ஏதோ அடுத்த இந்தியாவை எப்படி வல்லரசு ஆக்குவது என்கிற விடயத்தில் டௌட் வந்தது போல் சூர்யா கேட்க..

” டேய் உனக்கு இந்த கேள்வி தேவையா டா . நானே ரொம்ப கஷ்ட பட்டு தான் இவள சம்மதிக்க வச்சேன். எனக்கு என்ன உனக்கு இருக்கிற மாதிரி அத்த பொண்ணா இருக்காங்க இவ இல்லன்னா அவன்னு போகுறதுக்கு . இவள கரக்ட் பண்ணவே நான் ரொம்ப சிரம பட்டேன்” என்று அவன் சைந்தவியிடம் கேட்ட கேள்விக்கு விக்ராந்த் வேகமாக பதில் சொல்ல சூர்யா அவனை கண்டு நகைத்து வைத்தான்…

” இவனோட சிரிப்பே சரியில்லையே ” என்றவன் எதார்த்தமாக சைந்தவியை நோக்க அவள் பத்ரகாளியாக உருமாறி இருந்தாள்…

“டேய் எமன் வேற யாரும் இல்ல டா உன் வாயே போதும் ” என்று மனதில் நினைத்தவன் ” சைந்து குட்டி நான் சும்மா ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன் டா ” என்று பச்சிளங்குழந்தை போல் சொல்ல…

[the_ad id=”6605″]

“டேய்..!!! போடா போ உன் அத்த பொண்ணையே கட்டிக்கிட்டு அழுவு யாரு வேண்ணானு சொன்னா ” என்று பொறிய..

“யாரும் இருந்தா போக மாட்டேன்னா ” என்று முணுமுணுக்க அது சைந்தவி காதில் நன்றாக விழ பக்கத்தில் இருந்த மரத்தில் ஒரு குச்சியை உடைத்தவள் அவனை அடிக்க வர விக்ராந்த் அவளிடமிருந்து தப்பிக்க ஓடி விட்டான் சூர்யாவிற்கு சாபம் கொடுத்தவாறு

“நீ லவ் பண்ண பொண்ணு உனக்கு கிடைக்காம போ வா டா என் சாபம் உன்ன சும்மா விடாது டா ” என்று சாபம் விட்ட படி ஓட

“நீ பண்ணதுக்கு எதுக்கு டா என் ப்ரோக்கு சாபம் விடுற ” என்று அவனை பின்னால் துரத்திய படியே சென்றாள்…

அவர்களின் காதலை பார்த்து புன்னகைத்தவனின் மனதில் முகமூடி அணிந்திருந்த பெண்ணின் கண்கள் வந்துச் சென்றன…

சுமி வெங்கட்டிடமும் உதயிடமும் வீடியோ காலில் பேசியவள் சூர்யா அருகே வர அப்போதே அவன் பக்கத்தில் நின்றிருந்த விக்கியை கண்டவள் அங்கே செல்லாமல் அவர்கள் பக்கத்திலே மறைந்து நின்றுக் கொண்டாள்…

அவள் காதுகளில் விக்ராந்த் சொன்ன ” எனக்கு என்ன உனக்கு இருக்கிற மாதிரி அத்த பொண்ணா இருக்காங்க” என்ற வரிகளே அவள் காதில் ரிங்காரம் இட்டது. ஏனோ அவளுக்கு அது இதயத்தை கிழித்து எறிந்தது போல் வழியை ஏற்படுத்தியது.. இதை பற்றி யோசித்துக் கொண்டே உள்ளே சென்றாள்…

அந்த மாலையே அடுத்த லெவளுக்கு செல்லுபவர்களின் பெயர்களை வாசிக்க பட்டு அதற்காக அவர்களுக்கு சிறிய பரிசினை வழங்கியது. ஆர்கிடெக்டில் சூர்யா செலெக்ட் ஆக டிசைனிங் டீமில் சுமி செலக்ட் ஆனாள்.

சூர்யா செலெக்ட் ஆன மகிழ்ச்சியில் விக்ராந்துடன் வீட்டிற்கு சென்றான். சுமியோ என்னென்று தெரியாத வலியை சுமந்து கொண்டு மெர்லின் சைந்தவியுடன் சென்றாள்…

வீட்டிற்கு வந்த சூர்யா அந்த மகிழ்வான விசியத்தை தன் யம்டியிடம் சொன்னவன் அதற்கு பின் தன் அன்னையிடம் கூறி சந்தோஷப்பட்டவன் விக்ராந்தை அழைத்துக்கொண்டு சாப்பிட வெளியே சென்றான்..

வீட்டிற்கு வந்த சுமி அமைதியாகவே இருந்து இரவு உணவை முடித்து விட்டு அறைக்குள் புகுந்து கொண்டாள்..

சைந்தவி விக்ராந்தை கண்ட மகிழ்ச்சியில் சுமியை கண்டு கொள்ள வில்லை. ஆனால் மெர்லின் அவளின் செய்கைகளை நன்கு கவனித்தாள்…

[the_ad id=”6605″]

ஆனால் அவள் அவளிடம் எதுவும் கேட்கவில்லை .அடுத்த நாள் கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்து விட்டு விட்டாள்.

அறைக்கு வந்த சுமிக்கு விக்கி கூறியதே மனதில் ஓட அவளை அறியாமலே அவள் விழியில் இருந்து கண்ணீர் துளிகள் வந்தது.

அவள் கண்ணீர் வருவது கூட தெரியாமல் மனதில் எழும்பிய கேள்விகளை நினைத்து கொண்டிருந்தாள்..

“ஏன் அவன் கிட்ட போனா கூட பேச்சு வர மாட்டேங்குது..??? பேச நினைச்சா கூட வெறும் காத்து தான் வருது..??விக்கி அண்ணா சொன்னது எதுக்கு என்ன இவ்வளவு பாதிக்கனும்‌..???அவன் கிட்ட போனாலே என்னோட இதயம் ஏன் இவ்வளவு வேகமா துடிக்கிது..???என்ன இதுவரைக்கும் யாரும் அடிச்சது இல்ல ஏன் என்ன திட்டுன்னா கூட அவுங்கள சும்மா விடாதா நான் இவன் கிட்ட அடிவாங்குன்னா மட்டும் சும்மா இருக்கேன். இதுல என்னோட ஈகோவ விட்டுட்டு அவன் கிட்ட சாரி லாம் வேற சொல்றேன். இதெல்லாம் எதுக்காக செய்யுறேன். ஏன் இதெல்லாம் எனக்கு நடக்குது ” என்ற கேள்விகள் அவள் மனதை ஆக்ரமிப்பு செய்ய அவளது எண்ண ஓட்டத்தை நிறுத்த நினைத்த நித்திரா தேவி அவளை உறங்க அழைத்து சென்று விட்டாள்…

வெளியே சாப்பிட்டு விட்டு வந்த சூர்யா சந்தோஷமாக உறங்கி போனான்…

அடுத்தநாளே அவர்கள் இருவரும் அவர் அவர்களது இடத்தில் அடுத்த லெவளுக்கான வேலையில் ஈடு பட தொடங்கினர்….

~தேடல் தொடரும்….???

Stay tuned…✌️✌️✌️✌️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!