Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vannam Theda Vaarayo

தேடல் 30

மயங்கி சரிந்த சுமியை பிடித்த உதய் உள்ளே அழைத்துச் சென்று படுக்க வைத்து விட்டு அடுத்த வேலைகளை பார்க்க சென்றுவிட்டான்.

வெங்கட் அமைதியாக தன் அன்னையையே பார்த்துக் கொண்டு பித்து பிடித்தவன் போல் இருக்க அதை கண்ட உதய் ” வெங்கி நீ இப்படி இருந்தா அங்கில்க்கும் சுமிக்கும் யாரு டா ஆறுதல் சொல்றது சொல்லு ” என்க

அவனை ஒரு பார்வை பார்த்தவன் அமைதியாக தன் அன்னையின் முகத்தை பார்த்த படியே ” ஏன் டா எனக்குலாம் மனசு இல்லல நான் எல்லாம் ஃபீல் பண்ண தகுதி இல்லல அப்பாவுக்கும் சுமிக்கும் தான் அந்த தகுதி இருக்கா டா. பசங்களா பொறந்தா நமக்குள்ள இருக்கிற கஷ்டத்தை எல்லாம் வெளிப்படுத்த கூடாதுல ” என்று கேட்டு அவனை பார்க்க..

உதய் அமைதியாக நின்றிருந்தான் பதில் சொல்ல தெரியாமல் அவனை பார்த்தவன் ” உங்க அப்பா இறந்தப்போ உன் தம்பி ஹரிக்காவும் அம்மாக்காவும் உன் கஷ்டத்த எல்லார் கிட்ட இருந்து மறச்சி வாழ்ந்து நீ எவ்வளவு கஷ்ட பட்டனன்னு எனக்கு தெரியும் டா .அதே மாதிரி என் ஃபீலிங்ச மறச்சி கஷ்ட பட சொல்றீயா சொல்லு ” என்க



Advertisement

“மச்சி ” என்றவாறு உதய் வெங்கியை அனைத்துக் கொள்ள அவனும் அணைத்துக் கொண்டு அழுது தீர்த்தான்..

அதற்குள் கூட்டத்தினுள் இருந்த பெரியவர் ஒருவர் ” பாடி தாங்காது பா ஏற்கெனவே ஹாஸ்பிடல இருந்த உடம்பு இனியும் தாங்காது ” என்று கூற

அவரின் உடலை அடக்கம் பண்ணுவதற்கான அனைத்து வேலைகளும் நடக்கவே சிவசங்கரன் குடும்பம் வந்து சேர்ந்தது. அதேநேரத்தில் ராஜிவ்வும் வந்திருந்தான் யாரும் அறியாமல்…

Advertisement

வெங்கி அமைதியாக பனிமலரின் உடலிற்கு பக்கத்தில் அமர்ந்திருக்க உதயே அனைத்து வேலைகளையும் பார்க்க தொடங்கினான்..

Advertisement

பெரியவர்கள் சொல்கின்ற வேலையை செய்து கொண்டிருந்தவனின் கண்ணில் பட்டது அழுது வீங்கி இருந்த நந்தினியே..

சுமியின் பிரச்சனையில் நந்தினியை காணாது விட்டு விட்டான் என்று சொல்வதை விட மறந்து போனான். அதுவே நந்தினி அவளது கிருஷை வெறுக்க காரணமாக போனது என்று அறியாமல் போனான் உதய்..

அவளின் நிலையை‌ கண்ட உதயின் மனம் பத பதைக்க அவளின் அருகில் சென்று நின்றான்.

Advertisement

[the_ad id=”6605″]

அவளுக்கு இவன் யார் என்று தெரியாத காரணத்தால் அவனை திரும்பி கூட பாராமல் முகத்தை தொங்க போட்டு அமர்ந்திருக்க அவளது இதழ்கள் தீடிரென்று கிருஷ் என்று கூறி கண்களை சுழல விட இதை கண்ட அவனின் மனதில் சொல்ல இயலா உணர்வு ஏற்பட்டது…

அடுத்த நொடியே அதை கலைக்கும் விதமாக அவளது முணுமுணுப்பு இருந்தது .

” இனி என்னோட வாழ்க்கைல கிருஷ்ன்னு ஒருத்தன் இருக்கவே மாட்டேன். என் வாழ்க்கைல கிருஷ்ன்னு ஒருத்தன் இருந்த சாப்டரே மறந்து போகனும் ” என்று அவளது மனதிற்கு கட்டளையிட்டாள்.

அதற்குள் அவனை பெரியவர்கள் அழைக்க இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவன் அந்த விட்டு சென்றான் அவளை பார்த்த படி…

இறுதி சடங்குகளுக்கான அனைத்து வேலைகளும் முடிவடைய சுமி இன்னும் மயக்கத்திலே இருக்க அவளை எழுப்பி அனைத்து சம்பருதாயங்கள் செய்ய அழுகையுடன் அனைத்தும் செய்து முடித்தாள்..

மண்ணுலத்தை விட்டு அவரை விண்ணுலகத்திற்கு அனுப்பி வைத்தனர்..

அந்த நாளில் இருந்து வீடே அமைதியாக இருந்தது. எதிலும் எவருக்கும் எந்த விதமான நாட்டமும் இல்லாமல் பொம்மை போல் இருந்து வந்தனர்..

உதயின் குடும்பமும் சிவசங்கரனுமே அவர்களை பழைய படி வாழ்க்கைக்கு வர வைக்க முயன்றனர்…

பனிமலர் இறந்து பதினாறாம் காரியம் வைக்க  பட அனைத்து சொந்த பந்தங்களும் கூடியது.

அவருக்கு படையல் வைத்து சாமி கும்பிட்ட பிறகு அனைவருக்கும் சாப்பாடு வழங்க பட அப்போது தீடிரென்று சுமி மயக்கம் போட்டு விழ அவளை உதய் தாங்கி பிடித்தான் .

பனிமலரின் அடக்கத்திற்கு வந்த போதே உதய் பற்றிய பேச்சை எடுத்திருந்தனர். நான்கு பேர் நாலு விதமாக சொல்ல போய் அது நாலாயிரமாக வந்திருந்தது…

ஒருவருக்குள் ஏதேதோ பேசிக் கொள்ள அவளை அழைத்துக் கொண்டு அவளது அறைக்கு சென்று படுக்க வைக்க அங்கிருந்த பெண் மருத்துவர் ஒருவர் தானாக முன் வந்து அவளை செக் செய்ய வர அவரை அனுமதித்தவன் அவரின் பதிலுக்காக காத்திருக்க அவளின் நாடியை பிடித்து பார்த்த டாக்டர் உதயை பார்க்க அவனோ ” டாக்டர் சுமிக்கு ஒன்னும் இல்லையே ” என்று பரிதவிப்புடன் கேட்க..

அவர் அமைதியாக மீண்டும் அவளை செக் செய்து பார்க்க இப்போது வெங்கி முன் வந்து ” எதுவும் பிரச்சனேயா டாக்டர் ” என்று கேட்க..

“சிஸ் இஸ் பிரக்ணட் ” என்று பதில் கூற

அதில் மூவரும் அதிர்ந்து நின்றனர். அரசல் புரசலாக விஷயம் வெளியே இருந்த சொந்தங்கள் காதினுள் கேட்டுவிட அதை பற்றியே பேசத் தொடங்கினார்கள்..

சில மணி துளிகளில் சுமி கண் விழிக்க அறையில் யாரும் இல்லாமல் போக தலையை பிடித்த படி அமர்ந்திருக்க வெளியே சத்தமாக கேட்கவே அறையை விட்டு வெளியே வந்தாள்..

அங்கிருந்த அனைவரும் அவளை அருவெறுப்புடன் பார்க்க அவளோ உதய் வெங்கி இருந்த இடத்திற்கு வந்து ” என்ன ஆச்சி ஏன் இப்படி சத்தமா இருக்கு நான் எப்படி மயங்கி விழுந்தேன் ” என்று கேட்க

கூடத்தில் இருந்த ஒருத்தர் ” எல்லாம் முடிச்சிட்டு எப்படி எதுவும் தெரியாம வந்து நிக்கிறா பாரு. இதுலா பாக்க சகிக்காம தான் அந்த புன்னியவதி போய் சேந்துட்டா போல ” என்று சொல்ல

” நீங்க என்ன சொல்ல வரீங்க ஆண்டி என்ன எல்லாம் முடிஞ்சிடுச்சி எனக்கு ஒன்னும் புரியல ” என்று கேட்க

“நடிக்காத டி இதோ நிக்கிறானே உதய் இவன் கூட சேர்ந்துட்டு இப்படி வயித்துல புள்ளையோட வந்து நிக்கிற ” என்று அறுவருப்பாக சொல்ல..

அதை கேட்ட சுமி அதிர்ந்து நிற்க ” என்ன சொல்றீங்க ஆண்டி உதய் என்னோட ஃப்ரண்ட் அவன் கூட வச்சி என்னைய பேசுறீங்க ” என்று தாங்க முடியாமல் கேட்க..

[the_ad id=”6605″]

இன்னொருவரோ ” ஏன்டி மா இப்படி நடிக்கிற அதான் உங்க தில்லாலங்கடி வேலை எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துடுச்சே இதுக்கு மேல எதுக்கு நடிக்கிற இன்னும் படிச்சு யார ஏமாத்த போற வயித்துல உதயோட புள்ளைய தான சுமந்துட்டு இருக்க அத சொல்ல ஏன்டி மா இப்படி தயங்கி நிக்கிற ” என்று கடுமையாக பேச

“எல்லாம் அமைதியா இருக்கிங்களா ” என்று அந்த வீடே அதிரும் படி உதய் கத்த அனைவரும் அமைதியாகினர்..

“உங்களுக்கு இப்போ என்ன தெரியனும்னு நினைக்கிறீங்க எங்களோட குழந்தை தான்னு தெரிஞ்சுக்கணும் அவ்ளோ தான ஆமா அந்த குழந்தை எனக்கும் சுமிக்கும் பிறக்க போகுது தான் நான் தான் பையோலஜிக்கல் ஃபாத்தர் போதுமா .எங்களுக்கு புடிச்சிருந்துச்சி அதான் யாருக்கும் சொல்லாமல் நாங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோன் போதுமா இப்போ எல்லாரும் வெளிய போங்க ” என்று கத்த அனைவரும் வெளியேறினர்..

“டேய் என்னடா பேசிட்டு இருக்க உன்னோட வாழ்க்கைய பத்தி யோசிச்சியா நீ இவளோட இந்த நிலைமைக்கு காரணமானவன சும்மாவே விடக்கூடாது ” என்றவன் நண்பனின் வாழ்வில் அக்கறை கொண்டவனாக ஆரம்பித்து சுமியின் இந்த நிலைக்கு காரணமான அவனின் மேல் கோபத்தை வளர்த்துக் கொண்டான்..

“அவுங்க பேசனுது உன்னோட தங்சச்சியனா என்னோ பெஸ்ட் பிரண்ட டா நான் எப்படி அமைதியா இருக்க முடியும் சொல்லு ” என்க

“அதுக்கு எதுக்கு பா நீ இப்படி ஒரு பொய்ய சொன்ன ” என்று இப்போது மஹாலிங்கம் கேட்க

” எனக்கு சுமியோட வாழ்க்கை ரொம்ப முக்கியம் அங்கில் சுமியோட வாழ்க்கைய வச்சி விளையாட நான் விட மாட்டேன். நான் நல்லா யோசிச்சு தான் இப்படி ஒரு முடிவெடுத்தேன் .இனி சுமியோட குழந்தைக்கு நான் அப்பாவா இருக்க போறேன் ” என்று சொல்லிவிட்டு அதிர்ச்சியில் சிலை போல் உறைந்து நின்ற சுமியிடம் வந்தவன் அவளை சுயநினைவிற்கு கொண்டு வந்து அனைத்து உண்மைகளையும் சொல்லி முடிக்க அங்கேயே மயங்கி சரிந்தாள்.

உடனேயே அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை அழைத்து சென்றார்கள்..

மருத்துவர் சோதித்து விட்டு வெங்கி உதய் மஹாலிங்கத்தை அழைத்து ” அவுங்க வயித்துல பேபி ஃபார்ம் ஆயி இருபது நாள் தான் ஆகுது. அதுவும் இல்லாமல் அவுங்க கொஞ்சம் மைண்ட் டிஸ்டர்புடா இருக்காங்க சோ கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க ” என்று சில மருந்துகளை எழுதி கொடுத்து அவர்களை அனுப்பி வைத்தார்…

நாட்கள் விரைந்தோட சுமியின் வயிற்றில் வளரும் குழந்தையும் வளரத்தொடங்கியது . இப்போது மஹாலிங்கம் சுமியையும் உதயின் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு ஊட்டி வந்து தஞ்சமடைந்தார்.

நான்காவது மாதத்தில் சுமி அந்த கருவை கலைக்க முற்பட அதை கண்ட வெங்கி லாவாக தடுத்து நிறுத்தினான். அதன்பிறகு அவளிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டான்…

[the_ad id=”6605″]

பிரசவலி வரவே அவளை மருத்துவமனையில் சேர்த்துவிட சிறிது நேரத்தில் அழுகையுடன் குழந்தை பிறந்தது. அதன்பிறகு உதய் அந்த குழந்தைக்கு தாயாகவும் தந்தையாகவும் மாறிப் போய் ஜான்வி என்று பெயர் வைத்தான்..

அவளின் நிலை அறிந்த நாளில் இருந்து அனைவரிடமும் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். பொறுமையின் சிகரமாக இருந்து வந்தவள் கோபத்தை முகமூடியாக அணிந்துக் கொண்டு சமுதாயத்தில் நடமாட தொடங்கினாள்.

##பிளாஷ் பேக் ஓவர் ###

” இப்படி தான் எனக்கு சூர்யாவ தெரியும் . நான் சூர்யாவ ஏமாத்தனும்னு பேசாம இருக்கல ஏனோ அவன்கிட்ட பேசவே முடியல ஏதோ ஒன்னு என்ன பேச விடாம செஞ்சிடுச்சி ” என்று சுமி சொல்ல அங்கே மயானா அமைதி நிலவியது.

சுமியின் கையை நந்தினி ஆதரவாக பற்ற போக அதற்குள் உதய் பிடித்து விட அவனை பார்த்த படியே கையை எடுத்துக் கொண்டாள்…

“ஆமா சுமி நீ யாரையோ காதலிக்கிறேன்னு சொன்னியே அது யாரு ” என்று உதய் கேட்க

“இப்போ அது எதுக்கு டா உனக்கு என் லவ் தெரியுறதுக்கு முன்னாடியே எல்லாம் முடிஞ்சு போச்சி ” என்றாள் விரக்தியாக…

அந்த சூழ்நிலையை மாற்றுவதற்காக ஹரி ” ஏன் சுமி கா இந்த கதைய‌ கேக்க நான் விடிய விடிய முழிச்சு இருக்க வேண்டியதா போச்சி இப்படி இரத்துக்கு உப்பு போடாதாதத சொல்ற மாதிரி கதைய சொல்ற ஒரு கிக்கே இல்ல போ ” என்று சொல்ல..

“ஏன் டா என்னோட கதை உனக்கு உப்பு சப்பு இல்லாதததா சொல்லுவ டா சொல்லுவ எனக்காவது சொல்ல ஒரு கதை இருந்துச்சி உனக்கு அது கூட இல்ல டா தடியா ” என்று கோபத்துடன் சொல்ல…

அதற்குள் உதய்க்கு சரவணனிடமிருந்து அழைப்பு வர ” எக்ஸ் க்யூஸ் மீ ” என்றவன் வெளியே வந்து அழைப்பை ஏற்றான்..

“சொல்லு சரவணா எணி நீயூஸ் ஃப்ரம் பீஹார் ஸ்டேஷன் ” என்று கேட்க…

“வந்துச்சி உதய் ஆனா…” என்றவன் இழுக்க

“ஆனா என்ன சரவணா ஸ்ருத்திகா இருக்கிற இடம் தெரிஞ்சிருச்சா ” என்று கேட்க

“இல்ல உதய் அந்த மொபைல் ட்ராஸ்போர்ட் பண்ற லாரில ஒரு கவர் போட்டு வச்சிருக்காங்க .அதுவும் இல்லாம கரக்டா பீஹார் வந்தோன்ன கால் வர மாதிரி செட் பண்ணி இப்படி பண்ணிருக்காங்க உதய் ” என்றவனின் குரலில் வருத்தம் அப்பட்டமாக இருந்தது..

“ஃபீல் பண்ணாதீங்க சரவணா கண்டிப்பா ஸ்ருதி கிடைச்சிடுவா ” என்று ஆறுதல் கூற…

“அவள நான் கண்டு பிடிக்காம விட மாட்டேன் உதய் இதுக்கு காரணமானவங்களையும் சும்மா விட போறது இல்லை ” என்றான் கோபத்தில்…

“சரி சரவணா ஏதாவது க்ளு கிடைக்கிதான்னு பாரு. இப்போ பேர்ஸ்னல் ஒர்கா நான் சென்னை வந்துருக்கேன் என்னால இப்போதைக்கு உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியுமான்னு தெரியல பட் என்னால முடிஞ்ச இங்க இருந்து பண்றேன் ” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டான்…

உள்ளே வந்த உதய் சுமி ” ஒரு வேலையா நான் ஊட்டிக்கு போறேன் பாத்து பத்திரமா இரு டா ” என்றவன் நந்தினியை பார்த்து ” அவள கொஞ்சம் பாத்துக்கோங்க நி..தி… நந்தினி ” என்றுவிட்டு இறுதியாக அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு ” டேய் வெங்கி கல்யாண வேலைய பாரு டா சும்மா உருன்னு இருக்காத சரியா ” என்றவன் ஜீவாவை அழைத்துக் கொண்டு சென்றான்..

“ஏன் தான் இந்த அண்ணா அவன கூட்டிட்டு போகுதோ தெரியல ” என்று முணுங்க இதை கேட்ட அனைவரும் சிரித்தனர்…

~தேடல் தொடரும்

????????????????????

Stay tuned…✌️✌️✌️✌️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!