Skip to content
Post Views: 3,591
இதோ.. இதோ.. என் பல்லவி
Advertisement
அத்தியாயம் – 8
Advertisement
Advertisement
விக்ரம் தனது போனை கட் பண்ணியதை, நம்ப முடியவில்லை பல்லவியால்,.
Advertisement
என் மீது ரொம்ப கோபமா இருப்பாரோ என்று மறுபடியும் போனில் அழைக்க ரிங் போயிக்கோண்டே இருந்தது, விக்ரம் போனை அட்டன் பண்ணவே இல்லை..
என் போனை எடுக்க மாட்டீங்களா, நேருல வர்றேன் என்றவள்,. போரது தான் போறோம், விக்ரமுக்கு புடிச்சத சமைச்சு எடுத்துட்டு போலாம் என்று, அவனுக்கு பிடித்த மட்டன் பிரியாணியை சமைக்க ஆரம்பித்தாள், சமைத்து முடித்தவள், போன் போட்டால் எடுக்க மாட்டார், என்ன பண்ண என்று யோசித்தவள், திடிர் என்று ஞாபகம் வர,, எப்பொழுதும் தன்னை தொடர்ந்து வந்து விக்ரமுக்கு தகவல் சொல்லுபவன் ஒருவன் இங்கே தானே இருக்கான்,, அவன் கிட்ட போய் விக்ரம் எங்கே இருக்காருன்னு கேட்டா சொல்ல போறான்.. அவ்வளவு தான்,, என்று மனதை தேற்றியவள், வீட்டை பூட்டி விட்டு வெளியில் வந்து. அந்த தகவல் சொல்பவனை தேட..
சற்று தூரத்தில் இருந்து இவளை பார்த்துக்கொண்டு இருந்தவனை பார்த்தவள், “வா”என்று அவனை அருகில் அழைக்க..
அவன் தன்னையா என்ற கேட்க,.
“உன்னை தான் வா” என்று அழைத்தாள்..
அவன் வந்தது ஆங்கிலத்தில் “விக்ரம் சார் எங்கே இருப்பாருன்னு தெரியுமா உனக்கு”? என்றாள்..
அவனோ “தெரியும்” என்று தலையாட்ட…
பல்லவி தன்னை விக்ரம் இருக்கும் இடத்துக்கு அழைத்து செல்லுமாறு கேட்க…
“சரிங்க மேம்” ஏன்றவன்,, அவனது காரில் பல்லவியை அழைத்து கொண்டு விக்ரம் இருக்கும் இடத்துக்கு வந்து இறக்கி விட்டான்..
அந்த தகவல் சொல்பவனிடம் நன்றி சொன்னவள், இங்கேயா விக்ரம் சார் இருக்காரு? என்றாள் பல்லவி..
“எஸ் மேம்” என்றவன், வாச்மேனிடம் விக்ரம் சாரோட மேடம், கதவை திறந்து விடு என்று கூற..
அந்த வாச்மேன், பல்லவிக்கு ஓர் சல்யூட் டை வைத்து கேட்டை திறந்து விட்டான்..
வாச்மேனுக்கு நன்றி சொன்னவள் கேட்டை தாண்டி உள்ளே வர,, அது பூங்கா போல் இருந்தது,. விக்ரமோட வீடா இது, ஆனா வீடு மாதிரி தெரியலையே..
அவள் பூங்காவை பார்த்துக்கொண்டே விக்ரமனை தேட,, இரண்டு பக்கமும் பூ செடிகள், பெரிய மரங்கள் என்று பூங்கா முழுவதும் இருக்க, நடுவில் நடப்பதற்காக பாதையில் கற்கள் பதிக்க பட்டு இருந்தது,, அந்த நடைபாதையில் பல்லவி நடந்து கொண்டே வர,,..
தொலைவில் ஒரு மேடைபோல் தூண் வைத்த கட்டிடம் போல் தெரிய பல்லவி அதை நோக்கி சென்றாள்..
விக்ரம் அந்த தூணில் மேல் தலைசாய்ந்து அமர்ந்திருப்பதை பார்த்த பல்லவி விக்ரமனின் அருகில் வந்தாள்.
இவள் வந்ததை உணர்ந்த விக்ரம் கண்திறந்து பார்க்க வில்லை..
விக்ரம் கண்களை மூடி அமர்ந்திருப்பதை பார்த்தவள்.
பல்லவி தான் கொண்டு வந்த பேகை அந்த கட்டிடத்தில் வைத்து விட்டு பார்க்க , மேடைபோல் அமைக்கப்பட்ட இடத்தில் ஒரு சமாதி கட்டப்பட்டு இருந்தது, அதில் மேலே பூக்கள் தூவி, மலர்கள் வைக்க பட்டு இருத்தன,. சமாதியின் மேல் சிவகாமி தோற்றம், மறைவு என்று தேதி எழுதி இருக்க. அந்த மறைவு தேதியை பார்த்தவள் அரண்டு போனாள்,.
அந்த மறைவு தேதி இன்று உள்ள நாள், என்பதை பார்த்தவள்.. விக்ரமனின் பிறந்த நாள் அன்றே, அவனின் அம்மா இறந்த நாளா..
அவனுக்கு எவ்வளவு பெரிய வலியை கொடுக்கும், இன்னும் நன்றாக பார்த்தாள் மறைந்த வருடம், தேதியை பார்க்க, சரியாக 15 வருடம் முன் இறந்து இருந்தார் விக்ரமனின் அம்மா சிவகாமி..
பல்லவி அந்த சமாதி முன் கையெடுத்து கும்பிட்டவள்,, விக்ரமனின் அருகில் சென்றாள்..
விக்ரம் அதே தூணில் சாய்ந்து கண்மூடி இருந்தான்,, பல்லவி விக்ரம் கையை தன்னோடு கோர்த்து வைத்து கொள்ள..
விக்ரம் அவனின் கையை பல்லவியிடம் இருந்து உருவிக்கொண்டான்..
பல்லவி மீண்டும் நெருங்கி அமர்ந்து அவனை தோள் அணைத்து கொள்ள..
“ஒன்னும் வேணாம் போடி” என்றவன், திரும்பி அமர்ந்து கொள்ள..
பல்லவி மறுபடியும் அவனிடம் நெருக்கி வந்தவள் சாரி விக்ரம், பெர்த்தடே பாய் இப்படி கோப படலாமா என்றவள்,, ஹாபி பெர்த்தடே என்று அவனுக்கு வாழ்த்து சொல்ல..
அவளை திரும்பி பார்த்தவன்,, “உனக்கு எப்படி தெரியும்?”, என்றான்..
” என் மாமானார் சொன்னார்.. “
“என் ஜித் கண்ணாவுக்கு நாளைக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி, இரண்டு பேரும் சேருங்கன்னு சொன்னாரு..
” ஓ அவர் சொல்லித்தான் இங்கே நீ வந்தீயா”?..
” ஆமாம்,, இல்லை என்று இருபக்கம் தலையாட்டியவளை..
” போடி ” என்றவன் மறுபடியும் கண் மூடி தூணில் சாய்ந்து கொண்டான்…
பல்லவிக்கு அவனின் கோபம் புரிய எப்படி சாரை கூல் பண்ணுறது என்று நினைத்தவள்..
தன்னிடம் விக்ரமனின் தந்தை சொல்லியது ஞாபகம் வந்தது, சுந்தர் விக்ரமனை “ஜித் கண்ணா” என்று அழைப்பாராம், விக்ரமின் தாய் சிவகாமி விக்ரமை, “விக்ரம் கண்ணா” என்று அழைப்பார் என்று சொல்லி இருக்க..
பல்லவி விக்ரமனின் அருகில் அமர்ந்து ” விக்ரம் கண்ணா ” என்று அழைக்க..
விக்ரம் பல்லவியை நிமிர்ந்து பார்க்க,, பல்லவி தன் கையை விரித்து “விக்ரம் கண்ணா” என்று மீண்டும் அழைக்க…
அவளை பார்த்து புன்னகை செய்தவன் பல்லவியை தன்னை நோக்கி இழுத்து அணைத்துக்கொண்டாண்..
பல்லவியோ மீண்டும் ஒருமுறை “விக்ரம் கண்ணா” என்று அழைத்தாள்,.
விக்ரம் அவளை தன்னோடு இன்னும் இறுக்கி அணைத்து வைத்து கொள்ள..
அவனின் முகத்தை பார்க்க முயற்சி பண்ணியவளை..
” ஏய் சும்மா அப்படியே இரு டி ஆடாத” என்றவன், அவளின் கழுத்து வளைவில் முகத்தை புதைத்து இருந்தான்…
சிறிது நேரம் கழித்து அணைப்பை விலக்கியவன், அவளை தன் மடியில் வைத்துக்கொண்டே “கோபம் போயிருச்சா”? என்றான், பல்லவியை பார்த்து..
” போயிருச்சு ” என்று தலையாட்டியவள்,, ” நீங்க சாப்டிங்களா என்று கேட்க., விக்ரம் இல்லை என்று தலையாட்ட.
” ஒரு நிமிசம்” என்றவள், அவள் கொண்டு வந்த உணவை எடுத்து விக்ரமுக்கு ஊட்டி விட..
அவள் கொடுப்பதை பசியில் உண்டவன்.. பல்லவிக்கு கண்களால் நன்றி சொல்ல,,
பல்லவி கண்களை சிமிட்டி, “பிரியாணி நல்ல இருக்கா” என்றாள்..
” உம்.. எந்த ஹோட்டல வாங்கின பிரியாணி சூப்பரா இருக்கு ” என்றான்..
” உம்,, என்று முறைத்தவள் நான் தான் செஞ்சேன்,”,..
” நீயா செஞ்ச”..
ஆமாம் என்று தலையாட்ட.
“லவ் யூ பொண்டாட்டி பிரியாணி சூப்பரா பண்ணி இருக்க,, உண்மையிலே ரொம்ப நல்லா இருக்கு, கல்யாணத்துக்கு அப்பறம் டெய்லி எனக்கு பண்ணி தரனும்”..
“உண்மையிலே உங்களுக்கு பிடிச்சு இருக்கா விக்ரம்”,,
” ஆமாம் டா ரொம்ப நல்லா இருக்கு, பேசாம நீ வேலைய விட்டுட்டு பெரிய 5 ஸ்டார் ஹோட்டல் செப்பா ஆகிறு” என்றான்..
“போங்க விக்ரம் கிண்டல் பண்ணிட்டு” என்றாள்..
” ஏய் உண்மையா சொன்னா, நான் உன்னை கிண்டல் பண்ணுறேன்னு சொல்லுற”..
விக்ரமுக்கு ஊட்டி முடித்தவள், அவனுக்கு தண்ணீர் கொடுத்து விட்டு, இவள் கைகழுவியவள்.. “உங்களுக்கு என்ன பெர்த்தடே கிப்ட் வேணும்,” என்றாள் விக்ரமிடம்..
” நீயே என் வாழ் நாள் கிப்ட் அதனால ஒன்னும் வேண்டாம்”..
” விக்ரம்.. என்றவள் .நீங்க என் பெர்த்தடேக்கு எப்படியெல்லாம் கிப்ட் குடுத்தீங்க, நான் உங்களுக்கு கிப்ட் குடுங்கலன்னா எப்படி, நான் வாங்கி தருவேன், நாமா நைட் டின்னர் போறோம் எல்லாம் நான் தான் செலவு பண்ணுவேன்” என்றவளை..
பார்த்து சிரித்தவன், ” உனக்கு லவ் பேசிக் ரூல்சே தெரியல பல்லவி”..?
” என்ன பேசிக் ரூல்சு சார் சொல்லுங்க”..?.
” பையங்க தான் லவ் பண்ணுற பொண்ணுக்கு செலவு பண்ணனும்,, பொண்ணுங்க செலவு பண்ண மாட்டாங்க”..
” ஆனா நான் செலவு பண்ணுவேன் என் விக்ரமுக்கு”. என்றவளை..
ஆசையாக பார்த்திருந்தவன்… அவளை “வா” என்று அழைத்து அருகில் அவளை அமர வைத்துக்கொண்டு , “என் மனசும், வயிறும் நிறைஞ்சு இருக்கு இதுக்கு மேல என்ன கிப்ட் வேணும் சொல்லு , நீ என் கூடவே இருந்தா போதும், என் கூடவே கடைசி வரைக்கு இருப்பீயா”..
“இருப்பேன்” என்று பல்லவி தலையாட்ட…
” காலையில இருந்த என் அம்மா என் கூட இல்லன்னு ரொம்ப பீல் பண்ணிட்டு இருந்தேன், ஆனா நீ என் கூட இருக்குறப்போ அந்த பீல் வரல.. என் அம்மாவே என் கூட இருக்குறா மாதிரி ஒரு பீல் வருது, என்னை விட்டு போக மாட்டே தானே பல்லவி” என்றான்..
“மாட்டேன் விக்ரம் “என்றவள்.. அவனை தன் மார்போடு அணைத்து கொண்டாள்,, அவனின் உச்சந் தலைமீது முத்தம் வைத்தவள்..
அவனை மாற்றும் விதமாக.., “இந்த இடம் நல்லா இருக்கு சுத்தி பாக்கலாமா?.”. “பாரு” என்றான் விக்ரம்..
அந்த இடத்தை சுத்தி பார்த்தவளை,,. அப்பொழுதுதான் பார்த்தான் பல்லவி மஞ்சள் நிற காட்டன் புடவை கட்டி இருக்க, ” என்ன மேடம் இன்னைக்கு என்ன புடவையில் வந்து இருக்கீங்க மேடம்”? என்றான்..
” அது… எங்க சாருக்கு இன்னைக்கு பெர்த்தடே, அதனால காலையிலே குளிச்சு புடவை கட்டி கோவில் போயிட்டு , எங்க சாரு பேருல அர்ச்சனை பண்ணிட்டு வந்தேனா,, அதுதான் புடவை கட்டுனேன் நல்லா இருக்கா”…
“உம்.. என்றவன், சாரு பேரு என்ன மேடம்,”..?.
“இது தெரியாத அவர் பேரு, அவர் பேரு என்றவள் ஹஸ்பண்ட் பேரு வெளியில சொல்ல கூடாது ஜித் கண்ணா என்று சொல்ல”..
“அடிங்க உனக்கு நக்கல் கூடி போச்சு” என்று பல்லவியை துரத்த..
அவனிடம் சிக்காமல் ஓடியவளை பிடித்து இழுத்து வந்தவன், “ரொம்ப பேசுற, பேசுற வாய்க்கு பனிஸ்மென்ட் தரபோறேன்”,,.. என்று சொல்ல..
” விக்ரம், விக்ரம்,, பிலிஸ் விக்ரம் என்று கெஞ்சியவளை”..
“பொழச்சு போ என்று விட்டான் “.
பூங்காவில் நிறைய பூக்கள் பூத்து இருக்க. விக்ரமிடம் “நான் பூ பறிக்கவா விக்ரம்” என்றாள்..
” என் கிட்ட ஏன் கேட்குற இந்த பூங்காவே உன்னுடையது பல்லவி நீ என்ன வேண்னாலும் பண்ணிக்கோ” என்றான்..
பல்லவி அங்கே உள்ள பூக்களை பறித்தவள் சில பெரிய பூக்களை அவளின் தலையில் சூடிக்கொண்டவள் நிறைய பூக்களை பறித்து சிவகாமியில் சமாதி மேல் வைத்து கீழே விழுந்து வணங்கிவிட்டு வர.
இதை பார்த்து இருந்த விக்ரம் “அம்மா கிட்ட என்ன வேண்டின”..
எப்பையும் போலதான் விக்ரம், நான் எந்த கடவுள் கிட்டையும் எல்லாரும் நல்லா இருக்கனும் அவ்வளவு தான், இப்போ புதுச என் விக்ரமுக்கு எல்லாம் கிடைக்கனும் எப்போதும் என் விக்ரம் சந்தோசமா இருக்கனுமுன்னு தட்ஸ் சால்” என்றவளை…
“அருகில் வா என்று அழைக்க”,,.
“இல்ல நான் தள்ளியே இருக்கேன் அங்கேயே இருந்து சொல்லுங்க”…
” பக்கத்துல வர முடியுமா முடியாதா”?.. என்றவனிடம்..
” வர்றேன், வர்றேன்” என்றவள் விக்ரமனின் அருகில் வந்தவளிடம்,, ” நாம சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலாமா பல்லவி” என்றான்..
error: Content is protected !!