Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தவணைமுறையில் நெஞ்சம் கொள்ளுதே

TNK-4-2

“என்ன ஜூனியர் சொல்லுறீங்க நான் எப்ப கட்சி மாறுனேன் இப்பவும் பாருங்க நான் பிரியாணி திங்கல. சும்மா யூடியூப்ல வீடியோ போட்டு இருக்க வேண்டி நடிச்சிட்டு இருக்கேன் ஜூனியர் என்ன போய் நீங்க இப்படி தப்பா நினைக்கலாமா” என்று தனது நடிப்பாற்றலை தனது பேரனிடம் காட்டினார்.

“ஓ நீங்க சாப்பிடல சும்மா நடிச்சிட்டு தான் இருந்தீங்க அப்படித்தானே சீனியர்” என்று முறைப்புடன் அவரின் முன்னே வைத்திருந்த இலையில் இருந்த பாதி பிரியாணி மற்றும் கோழிக்கால் எலும்புகளை பார்த்து கேட்டான்.

“ஆமா ஜூனியர் பாருங்க நான் சாப்பிடவே இல்லை இது நான் சாப்பிடுற அளவா கொஞ்சம் சும்மா வீடியோ எடுக்க வேண்டி மட்டும் சாப்பிட்டேன் ஜூனியர் மிச்சபடி ஒன்னுமில்ல இது சும்மா டுப்பு”

“ஓ அப்படியா நம்பிவிட்டேன்” என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கும்போது சமையலறையிலிருந்து வெளியே வந்த அவன் தாய், “மாமா இந்தாங்க நீங்க கேட்ட சூப்” என்று ஆவி பறக்க மட்டன் சூப்பை தனது மாமாவுக்கு ஒரு கப்பில் கொடுத்தாள்.



Advertisement

அதனைப் பார்த்து அவரை மேலும் முறைக்க தனது பேரனை பார்த்து மாட்டிக்கொண்ட பாவனையுடன் அசடு வழியே சிரித்தார் வேதாச்சலம்.

அவரை சரணிடம் இருந்து காப்பாற்றுவது போல அங்கே வந்த திரு, “ டேய் என்னடா சாப்பிடாம தாத்தா கிட்ட வம்பு பண்ணிக்கிட்டு இருக்க அம்மா நீங்க எல்லாத்துக்கும் இலைய போட்டு சாப்பாடு வைங்க என்று சொல்லி அனைவரையும் உட்கார சொல்லி இலையில் அவருடன் சேர்ந்து பரிமாறத் தொடங்கினான் திரு.

“அம்மா நீங்க சாப்டிங்க தானே” என்று அவரிடம் கேட்டுக் கொண்டு தனது இலையில் இருந்தவற்றை சாப்பிட தொடங்கினான்.

Advertisement

“நான் அப்பவே சாப்பிட்டேன் டா நீங்க சாப்டுங்க” என்று அனைவருக்கும் தேவையானதை கேட்டு பரிமாறினார் புஷ்பராணி.

Advertisement

“அம்மா பிரியாணி செம டேஸ்ட் மா நீங்க சூப்பரா பண்ணி இருக்கீங்க மா” என்று அவரை பாராட்டி விட்டு தனது இலையில் இருந்தவற்றை சாப்பிட தொடங்கினான் பாலா.

“ஆமா ம்மா இன்னைக்கு பிரியாணி சூப்பர்” என்று அவரைப் பாராட்டி விட்டு கார்த்திக்கும் சுரேஷும் சாப்பிட்டார்கள்.

 மூவரின் பாராட்டை கேட்டு புன்னகைத்த புஷ்பா, “ சரிடா நீங்க அவசரப்படாம மெதுவா நல்லா திருப்தியா சாப்பிட்டீங்க சரியா” என்று இன்னும் கொஞ்சம் அள்ளி வைத்தார்.

Advertisement

 கார்த்திக், சுரேஷ், பாலா மூவருக்கும் பெற்றோர் உடன்பிறந்தவர்கள் யாரும் கிடையாது. இவர்கள் மூவரும் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள். சரண் கல்லூரி படிக்க சென்னை செல்ல அங்கே படித்து மூவரும் சரணுக்கு நண்பர்கள் ஆகினர். இவர்கள் மூவர் கதையை கேட்ட சரண் அவர்கள் மூவரையும் படிப்பு முடிந்தவுடன் தனது வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான். இவர்கள் மூவரும் வேதாச்சலத்தின் ஆலையில் தான் வேலை செய்கின்றனர். மூவருக்கும் வேலையும் கொடுத்து தனது வீட்டில் தங்கச் சொல்ல அவர்கள் மூவரும் வேலை ஏற்றுக்கொண்டு வெளியே வீடு எடுத்து தங்கி உள்ளனர்.

“டேய் எல்லாரும் சாப்பிட்டு அப்புறம் போய் உங்க டிரஸ் எடுத்துட்டு வந்துருங்க சரியா” என்றான் சாப்பிட்டுக்கொண்டு திரு.

“எதுக்குனா”

“டேய் மறந்துட்டீங்களா என்ன நாளைல இருந்து திருவிழா நம்ம ஊருல ஸ்டார்ட் ஆக போகுது. அதனால டிரஸ் எடுத்துட்டு இங்க வந்து ஸ்டே பண்ணிக்கோங்க சரியா” என்றான் திரு.

“ஆமாப்பா நேத்தே இந்த சரண உங்கள கூட்டிட்டு வரச் சொன்னேன் அவன் என்ன ஞாபகத்துல இருக்கான் எனக்கு தெரியவே இல்ல உங்கள கூட்டிட்டு வராம என்னதான் பண்றானோ” என்றார் தனது சின்ன மகனை திட்டினார் புஷ்பா.

“ஃப்ளவர் பியூட்டி என்ன திட்டாத எல்லாத்துக்கும் காரணம் உன்னோட பையன் தான் நைட் ஒழுங்கா என்கூட சண்டை போடாம இருந்தா நான் இவங்களுக்கு காலையில கூட்டிட்டு வந்து இருப்பேன் எல்லாத்துக்கும் காரணம் இவன்தான்” என அம்மாவிடம் திருவை கட்டி சிறு குழந்தை போல புகார் அளித்தான் சரண்.

“டேய் ரொம்ப ஓவரா பேசாத நைட் உங்க ரெண்டு பேரையும் ரொம்ப நேரம் முழிச்சி இருந்து கொரியன் சீரிஸ் பாக்காதீங்கன்னு சொல்லி திட்டினேன் அது ஒரு குத்தமா” என்றான் கடுப்பாக திரு.

“அது மட்டுமா பண்ணுன மிஸ்டர் திருப்பூர் குமரன் நானும் என் சீனியரும் ஆசையா வாங்கி வைச்ச ஐஸ்கிரீம் எடுத்து நீ திங்கள. என்ன சீனியர் பாத்துட்டு இருக்கீங்க சொல்லுங்க”

“ஆமாப்பா நீ எங்க ஐஸ்கிரீம் எடுத்து தின்னது ரொம்ப தப்பு”

“என்ன தப்பா அவன் நம்மளோட உடமையை பறிச்சு இருக்கான் சீனியர்”

“ஆமா ஆமா எங்களோட உடமையும், உரிமையையும் நீ பறிச்சது தப்புபா. நீ இப்படி பண்ணி இருக்க கூடாது”

“அப்படி கேளுங்க சீனியர்”

“என்ன தாத்தா நீங்களும் அவன் கூட சேர்ந்துட்டு பண்றீங்க. அதான் இன்னைக்கு உங்களுக்கு ஃபேமிலி பேக் ஐஸ்கிரீம் வாங்கி தந்து இருக்கேன் இல்ல”

“என்ன தாத்தா இது. ஐஸ்கிரீம் எங்கே” என்றான் டைனிங் டேபிளில் ஐஸ்கிரீம் இல்லாததை கண்டு சரண்

“டேய் அது நீ வர ரொம்ப நேரம் ஆச்சா அதான் உருகினா யாரும் திங்க முடியாதுன்னு சொல்லி நானே தின்னுட்டேன் ஜூனியர்” என்றார் திருடி தின்ற குழந்தை போல

“என்ன பேமிலி பேக் முழுசும் நீங்களே சாப்டீங்களா நம்ப முடியலையே உண்மையை சொல்லுங்க சீனியர்” என்றான் விசாரிக்கும் விதமாக.

“அது நம்ம பக்கத்து தெரு காமு இருக்குல்ல”

“ஆமா நம்ம ஆலியா பட் பாட்டி காமு தான சீனியர்”

“அதே காமுதான்டா அவளோட பேத்தி இன்னைக்கு வீட்டுக்கு வந்து இருந்தா அவளுக்கு அந்த ஐஸ்கிரீம் எடுத்து கொடுத்துட்டேன்டா” என்றார் வழிந்து கொண்டு தாத்தா.

“என்ன தாத்தா சொல்றீங்க ஆலியா பட் இங்க வந்தாளா அவ வந்த உடனே எனக்கு போன் பண்ணி இருக்க வேண்டாம் நீங்க. என்ன சீனியர் இப்படி பண்ணிட்டீங்களே” என்றான் வருத்தமாக சரண்

“டேய் அவ அவளோட பாட்டி கூட்டிட்டு வரலையா அதனால நான் ரொம்ப சேட் ஆயிட்டேன். அதன் உனக்கு போன் பண்ண மறந்துட்டேன் சாரி ஜூனியர்” என்று இருவரும் வேறு கதை பேசிக்கொள்ள அவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் புரியாமல்

“டேய் யாருடா காமு,ஆலியா பட்” என்றான் குழப்பமாக கார்த்திக்

“என்ன கார்த்திக் சொல்ற உனக்கு தெரியாதா” என்றான் வியப்பாக திரு.

“இல்லன்னா எனக்கு தெரியாது”

“அது சரி அது வேற யாரும் இல்ல காமாட்சி பாட்டி அலெக்ஸ் காமு நம்ம தாத்தாவோட சைட், அப்புறம் அவந்திகா அலெக்ஸ் அலியா பட் அவ” என்று அவன் சொல்லும்போது, “நம்ம எஸ்கே வோட சைட் அதான அண்ணா” என்றான் சுரேஷ்.

“கரெக்டா சொல்லுடா தம்பி”

“எப்படின்னா இவங்க ரெண்டு பேரையும் வீட்ல வச்சு சமாளிக்கிறீங்க” என்றான் அவன் சொன்னதை கேட்டு கடுப்பாகிய கார்த்திக்.

“என்ன பண்ண வேற வழி இல்லாம தான்” என்றார் கடுப்புடன் புஷ்பா.

“ஆனா ஒன்னுடா நல்லா இருந்த என்னோட மாமனாரை கெடுத்ததெல்லாம் உங்களோட எஸ்கே தான்” என்று தனது இளைய மகனை திட்டினார்.

“பிளவர் குயின் ஓவரா என்னைய திட்டாத உன்னோட மாமனார் தான் என்னை கெடுத்தது தெரியுமா உனக்கு”

“ஐயோ இல்லம்மா எல்லாம் உன் பையன் தான்”

“அம்மா ரெண்டு பேரையும் நம்பாதீங்க இரண்டு கூட்டு களவாணிகள் இங்க இரண்டும் சேர்ந்து இந்த ஊரையே ஒன்னும் இல்லாம பண்ணிருவாங்க. பாருங்க எப்படி திருட்டு மூழி இரண்டு முழிக்குனு”என்று இருவரையும் பார்த்து திட்டினான் திரு.

 அவனை இருவரும் சேர்ந்து முறைத்துக் கொண்டு இருக்க, “அப்படி சொல்லுடா திரு ரெண்டும் சேர்ந்து தோட்டத்துல என்ன பண்ணி வச்சிருக்கு தெரியுமா” என்று சொல்லிக் கொண்டு உள்ளே வந்தார் எஸ்கே வின் தந்தையும் வேதாபாயின் மகனுமான விநாயகம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!