Skip to content
Post Views: 3,490
” இன்னும் ஒரு வருசம் கழிச்சு பண்ணிக்கலாம் விக்ரம்,,
“என்னால முடியாது பல்லவி இன்னும் ஒரு மாசம் இல்ல இரண்டு மாதம் தான் உனக்கு டைம் நீ என் கூட வந்தாலும் சரி,, இல்லனாலும் பரவால நானே இந்தியா போவேன், உங்க அம்மாவை பாப்பேன் என்று பேசிக்கொண்டு இருந்தவனின் பின்னால் ஏதோ கருப்பு கலர் பூச்சி போல தெரிய..
Advertisement
அதை பார்த்த பல்லவி, அந்த பூச்சி விக்ரமனை தீண்ட போக,, ஐயோ விக்ரம் பின்னாடி என்றவள் பூச்சியை தட்டி விட போக,, அந்த கருப்பு தேள் பல்லவியின் கைவிரலை கடித்து விட்டு உயிரை விட்டு இருந்தது.. இவள் அதை அடித்த வேகத்தில் இவளின் கையை கடித்து விட.. ஆ!.. என்று அலரியவளை,,
Advertisement
“என்னாச்சு பல்லவி ” என்றவன் அவனின் பின்னாடி பார்க்க..
Advertisement
பல்லவி கையை உதறி கொண்டு இருந்தாள்..
Advertisement
விக்ரம் பின்னாடி ஒரு கருப்பு தேள் இறந்து கிடக்க…
பல்லவி கையை உதரி கொண்டு வலியில் துடித்தவளை.
“என்னாச்சு பல்லவி”?..
” உங்களை தேள் கடிக்க வந்துச்சா, தட்டி விடலாமுன்னு போனேன், தேள் கடிச்சுருச்சு”..
” ரொம்ப வலிக்குது விக்ரம் என்று கண்கலங்க”..
” வா பல்லவி” என்று ஹாஸ்பெட்டல் அழைத்து சென்றான்…
காரில் வரும் வழியில், தேள் கடித்த வலியால் துடித்தவளை.. ” “ஏன்? பல்லவி என்கிட்ட சொல்லி இருக்கலாமே..
” ஆமாம் நான் சொல்லுறதற்குள்ள தேள் உங்களை கொட்டி இருக்கும்”..
” என்ன தேள் கொட்டியிருந்தா கூட பரவால, நீ வலியில துடிக்குறத பாக்கமுடியல பல்லவி” என்றான்..
“விக்ரம் காரை வேகமா ஓட்டுங்க எனக்கு வலிக்குது என்று அழுக.”…
” ஓகே, ஓகே கொஞ்சம் பொறுத்துக்கோ பல்லவி” என்று ஹாஸ்பெட்டல் வந்து சேர்த்தான்..
டாக்டர் பல்லவி பார்த்து விசம் பாதிக்காமல் இருக்க ஓரு ஊசியை போட்டவர், பிளட் டெஸ்ட் எடுத்து பார்த்தவர், இது ரொம்ப விசம் உள்ள தேள், மெடிசன் தர்றேன், ஆனா 24 ஹவர் தேள் கடிச்ச இடத்தில் பெயின் இருக்கும், இப்போ ஒரு பெயின் கில்லர் ஊசி போட்டு இருக்கேன் ஒரு டுஹவர்சுக்கு பெயின் இருக்காது, அப்பரமா பெயின் வரும், சிலருக்கு வாமிட் வரும், சிலருக்கு அரிப்பு, வயித்து போக்கு பீவர் அப்படியின்னு ஏதாவது தொந்தரவு வரலாம், டேப்லட் தர்றேன்,,
பல்லவி கை வலிக்குதுன்னு டாக்டரிடம் சொல்ல, மீண்டும் ஓரு ஊசியை போட்டவர், இதுக்கு மேல பெயின் கில்லர் தர முடியாது மா,இன்னும் பெயின் கில்லர் கொடுத்த கிட்னி பாதிக்கும்..
தேள் கடிச்சா வலிக்கதான் செய்யும்,, கொஞ்சம் பொறுத்துக்கோங்க , ஓரு 5 மினிட்ஸ் வலி குறைஞ்சுடும்.. வீட்டுக்கு போய் சாப்பிட்டு மாத்திரை போட்டு தூங்குங்க நாளைக்கு காலையில பாதி சரியாகிறும்”..
டாக்டர் விக்ரமனை அழைத்து. “கவனமாக பாத்துக்கோங்க, என் போன் நம்பர் என்று , அவர் போன் நம்பரை கொடுத்தவர், சிலர் வலிதாங்க முடியாம அவங்களையே அடிச்சுபாங்க, இல்லனா அடி பட்ட இடத்தை காயபடுத்திக்குவாங்க கவனமா பாத்துக்கோங்க” என்றார்..
“சரி ” என்று விக்ரம் அவளை அழைத்து கொண்டு கார்பார்கில் வந்தவன். ” பெயின் இருக்கா பல்லவி “..
” இல்ல விக்ரம் ஊசி போட்டவுடனே வலி குறைஞ்சுருச்சு இப்போ பெயின் இல்ல”..
” சரி பல்லவி என் வீட்டுக்கு வா” என்று அழைக்க,,.
“வேண்டாம் விக்ரம் என் வீட்டுலே என்னைய விடுங்க நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிறும்,, நாமா இன்னொரு நாள் உங்க பெர்த்தடேவ கொண்டாடுவோம்”..
” என் வீட்டுக்கு வா பல்லவி, உன்ன தனியா விட முடியாது, டாக்டர் சொல்லி இருக்காரு, உன்ன கவனமா பாத்துக்குனும் வா” என்று அழைக்க..
” வேண்டாம் விக்ரம் மாமா தப்பா நினைக்க போறாங்க”..
” என் டாடியா? அவர் அப்படியெல்லாம் நினைக்க மாட்டாரு பல்லவி,, உன் வீட்டுக்கு என்னால அங்க வரமுடியாது.,, ஞானதுரை அங்கிள் இருப்பார்,, அதனால என் வீட்டுக்கு வா,, பெயின் கம்மியானவுடனே உன்ன, உன் வீட்டுல விடுறேன் போதுமா” என்று அவன் வீட்டுக்கு அழைத்து சென்றான்..
விக்ரம் இருக்கு வீட்டிற்கு வர..
” இது என்ன? இவ்வளவு பெரிய வீடா இருக்கு, இங்கே தான் இருக்கீங்களா என்று பேசிக்கொண்டே வந்தவளை.”
” வா” என்று அவளை லிப்டில் ஏறி அவன் அறைக்கு இருக்கும் தளத்திற்க்கு வந்தனர்..
” உங்க வீட்டுல யார், யார் இருக்கா?.
” அது நிறைய பேர் இருப்பாங்க, ஆனா பேசிக்க மாட்டோம்”..
” ஏன்? அப்படி”..
” அது அப்படித்தான் நீ வா,, அவங்க வேலை, அவங்க குடும்பம் இருப்பாங்க, அவங்கவங்களுக்கு ஆயிரம் வேலை, பிஸ்னஸ், இருக்கு, ஏதாவது தேவைனா, போன் பண்ணுவாங்க, நீ வா என்று அவன் இருக்கும் தளத்திற்கு வந்தான்..
“இந்த தளத்தில் யாரெல்லாம் இருங்கீங்க”?..
“நான் மட்டும் தான்”..
“என்னது நீங்க மட்டும் தானா”..
” ஆமா, எனக்கு தேவையான ரூம், ஹால், சிம், கெஸ்ட் ரூம், சும்மிங்பூல் எல்லாமே இங்கே இருக்கு,, இது என்னோட தளம், இங்கே யாரும் வரமாட்டாங்க, கிளின் பண்ண மட்டும் வருவாங்க, நான் இல்லாத நேரம்.. ” என்றான்..
” சூப்பரா இருக்கு உங்க ஔஸ்,”?..
” பல்லவி”!என்றான் அவளை முறைத்து..
” சாரி நம்ம ஔஸ்”..
” உம் இது ஓகே, இனிமே என்னோடது எல்லாம், உன்னோடது சரியா”,,. “ஓகே” என்றவள் “விக்ரம் ரெஸ்ட் ரூம் எங்கே”? என்று கேட்டு வேகமாக சென்றவளை பார்த்தவன்..
” என்னாச்சு பல்லவி என்றான்.. அவளோ ரெஸ்ட் ரூம் சென்று இன்று காலையில் இருந்து சாப்பிட்டதை எல்லாம் வாமிட் எடுக்க..
பல்லவி என்றவன்,, மெதுவா என்றவன் தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க,
வாமிட் எடுத்து முடித்தவள், வயிறு வலிக்குது விக்ரம் என்று கொஞ்சம் தண்ணீரை குடித்து விட்டு அவனின் மேலே சாய..
” வா பல்லவி என்று அழைத்து வந்தவன், கொஞ்சம் நேரம் தூங்கு, நான் சூஸ் கொண்டு வர சொல்லுறேன் என்று சொல்ல”..
” வேண்டாம் விக்ரம் எனக்கு ரொம்ப அசதியா இருக்கு நான் கொஞ்சம் நேரம் படுத்துக்குறேன்” என்றாள்..
“சரி பல்லவி தூங்கு” என்று சொல்ல, கண்களை மூடிகொண்டவள் சிறிது நேரத்தில் தூங்கி விட்டாள்…
” விக்ரமுக்கு சில ஆபிஸ் வேலைகள் இருக்க, அவனின் ஆபிஸ் அறையில் இருந்து வேலைகள் பார்த்துக்கோண்டு இருந்தான்,, பல்லவியின் சத்தம் கேட்பது போல் தெரிய , பல்லவியை தேடி வந்தான்,
பல்லவி ” விக்ரம், விக்ரம் என்று அழைத்துக்கொண்டிருந்தவளிடம் வந்தவன்..
” என்ன பல்லவி” என்று அருகில் வர..
“கை வலிக்குது விக்ரம், ரொம்ப வலிக்குது ஏதாவது மாத்திரை கொடுங்க வலி குறைய”..
” பெயின் கில்லர் இல்ல பல்லவி கொஞ்சம் பொறுத்துக்கோ,”என்றவன், வா பல்லவி என்று பால்கனிக்கு அழைத்து வந்தவன், கொஞ்சம் உட்காரு சூடா காபி கொண்டு வர சொல்லுறேன், முதல் குடி, வேடிக்கை பார், டி,வி பாக்குறீயா.. என்றான்..
” எனக்கு ஒன்னும் வேண்டாம், முடியல விக்ரம் வலிக்குது, ஊசி வச்சு குத்துற மாதிரி வலிக்குது. என்றவள் பால்கனியில் இருந்து ஹால், வந்து சிறிது நேரம் கையை உதரிய வாறு நடந்தவள்.. பின்பு பெட்ரூம் சென்றவள், சன்னல் மீது தன் கையை வைத்து வேகமாக அடிக்க..
” ஏய் என்ன பண்ணுற”,, என்றான் விக்ரம்..
” முடியல விக்ரம் கை வலிக்குது” என்று அவளின் கையை அவளே அடித்துக்கொண்டு அழ.
விக்ரம் அவளின் அழுகையை காண முடியாதவன், பல்லவியின் கையை பிடித்து தன்னோடு வைத்துக்கொண்டு, கையை வருடிவிட கொஞ்சம் அழுகை குறைந்தது.
மெல்ல வலியில் முனங்க ஆரம்பித்தாள்,
“இப்போ பராவாயில்லையா”
என்றுகேட்க..
பல்லவி “உம் “என்று மட்டும் சொல்ல.
விக்ரமனின் ஒரு கை அடிப்பட்ட கையை வருடிவிட., இன்னோரு கையோ பல்லவியின் இடையின் உள்ளே சென்று வருடி விட,.
பல்லவிக்கு வலி மெல்ல குறைவது போல் தெரிய, ..
” விக்ரம் என்றவள் போதும் என்ன”.,
“சரி” என்றவன், தன் கையை அவளிடம் இருந்து உருவி கொள்ள..
விக்ரம் என்றவள் மறுபடியும் “வலிக்குது” என்று சொல்ல..
” வெளியே எங்கேயாவது போலாமா பல்லவி” என்றான்..
” வேண்டாம் விக்ரம் என்றவள் மீண்டும் வாமிட் வருது என்று ரெஸ்ட் ரூம் சென்று வந்தவள், மிகவும் சோர்ந்து இருக்க..
” என்ன பல்லவி என்ன பண்ணுது.”.
” தெரியலயே தண்ணி வேணும்” என்றாள்..
விக்ரம் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கி குடித்தவள்.. சோபாவில் சிறிது நேரம் படுத்தவள் விக்ரம், விக்ரம் என்று அனத்தியவளை..
“என்ன பல்லவி” என்று அருகில் வர,,.
” என்னால முடியல விக்ரம் ஏதாவது மெடிசன் தாங்க, என்னால வலி தாங்க முடியல என்றவளை..
தன்னோடு சேர்த்து அணைத்து இருந்தவன்,, அவனின் செயலுக்கு, பல்லவியும் இசைந்து கொடுக்க,, பல்லவியின் வலிக்கு விக்ரம் மருந்தாகி போனான் இரவு முழுவதும், அவளின் வலிக்கு இரவு முழுவதும் அவளின் உடலில் வீணை மீட்டியிருந்தான்.. இருவரும் விடியும் தருவாயில் தான் தூங்கியிருந்தனர்..
விடியற்காலையில் கண்விழித்த விக்ரம் தன் மேல் ஆடையில்லாமல் தூங்கும் பல்லவியின் கூந்தலை முகத்தில் இருந்து ஒதுக்கி விட்டவன், அவளின் தலையில் முத்தம் மிட..
அவனை இன்னும் நெருக்கி படுத்தவள், விக்ரம் என்று சினுங்க..
” வலி போயிருச்சா பல்லவி” என்றான்.. அவளின் தலை கோதி..
” உம்” என்றவள், தூக்கம் வருது பேசாதீங்க கண் மூடுங்க என்று அவனின் கண்ணைமூட..
” ஏய் எல்லாம் பார்த்தாச்சு , என் கண்ணை மூட மாட்டேன் என்று அவளை தன்னோடு சேர்த்து அணைத்து கொள்ள.
அவளின் சினுங்கலை ரசித்தவன், காலையிலும் அவளுக்கு வலியை குறைக்க பல வேலைகளை செய்ய, தொடங்க மீண்டும் அவளிடம் ஒரு கூடலை முடித்தே விட்டான்,,..
பல்லவி சிறிது நேரம் தூக்கம் களைந்து விக்ரமனின் முகத்தை பார்க்க..
” என்ன பல்லவி”?. என்றான்.
” நாம” என்று பல்லவி ஏதோ சொல்ல வர..
” நீ ஒன்னும் பேசாதே பல்லவி, நெக்ஸ்ட் வீக் நாம இந்தியா போறோம், உங்க அம்மா பைரவியை பாக்குறோம், கல்யாணத்த பத்தி பேசுறோம் சரியா, எழுந்து ரெடியாகு உன்ன வீட்டுல விட்டுட்டு நான் ஆபிஸ் போகனும்” என்றான்..
“என் கண்ணை பார்த்தே நான் என்ன நினைக்குறேன்னு உங்களுக்கு தெரிஞ்சது” என்றாள்,,.
” உன்ன எனக்கு தெரியாதா” என்றான்.
பல்லவி விக்ரமனின் முகத்தை பார்த்து முதல், முதலில் “ஐ, லவ் யூ விக்ரம்” என்றாள்.
விக்ரம் பல்லவி உதட்டின் மேல் மெல்ல முத்தம் வைத்து” மீ டூ லவ் யூ டா, ” என்று சொல்லி விட்டு இப்ப வாச்சும் சொன்னீயே என்றான்..
” அது சொல்லனுமுன்னு தோனுச்சு சொன்னேன்”..
” சரி வா என்று அவளை அழைத்துக்கொண்டு வீட்டில் விட்டவன், ஆபிஸ் போகாத லீவ் போடு, நான் வர்றேன் என்று பாய் சொல்லி காரில் கிளம்ப..
பல்லவி தன் கெஸ்ட் ஔஸ் நோக்கி சென்றாள்..
ஞானதுரையும் ரோசியும் விக்ரம் பல்லவியை காரில் வந்து இறக்கி விட்டதை அவர்கள் மாடியில் இருந்து பார்க்க..
ரோசி “என்ன நடக்குது இங்கே என்று ஞானதுரையிடம் கேட்க”..
ஞானதுரை ” சுந்தர் இந்த கல்யாணம் நடக்காது என்று சொல்லியதை சொல்ல..
ரோசி பல்லவி இங்கே வந்த பிறகுதான் இது எல்லாம் நடந்தது. தன் மகள் வாழ்க்கையை பறித்து விட்டாளே, என்று நினைத்தவள்..
ஞானதுரையிடம் “போன் போடுங்க உங்க அண்ணி பைரவிக்கு” என்றாள் கோப குரலில்….
error: Content is protected !!