Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uyir Niraigiraen Azhaga

உயிர் நிறைகிறேன் அழகா-30

அத்தியாயம்-30

வளைகாப்பு முடிந்து ஒரு வாரம் கடந்திருந்தது..அன்று கிளம்பி போன சேகரிடம் இருந்து, அதன் பிறகு எந்த தகவலும் இல்லை..

தானே தொடர்பு கொண்டு கேட்கலாம், என்று யோசித்துக் கொண்டிருந்தான் ராஜா..

“என்ன வரு யோசனை??”

“ஹ்ம்ம்..இல்ல..மாமா மும்பை போனும், நீயும் வான்னு கூப்பிட்டாங்க..ஒரு வாரம் ஆச்சு..எந்த தகவலும் இல்லை..”



Advertisement

“ஓ…மது எப்படி இருக்காளோ?? தெரியல..”

“ஹ்ம்ம்…”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, இவர்கள் அறை கதவை தட்டினாள் பேச்சி..

Advertisement

கதவை திறந்த ராஜாவிடம்,
“சின்னையா, உங்கள பார்க்க பட்டிணத்தில் இருந்து ஒருத்தர் வந்திருக்கார்..உங்க மாமா அனுப்பிச்சதா..அம்மா உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க..”

Advertisement

யோசனையுடன் கீழே சென்றான்..
அவன் பின்னே மதியும் சென்றாள்..
அங்கு சேகரின் பிஏ அமர்ந்திருந்தார்..
அவனை கண்டதும் எழுந்து நின்றார்..

அவன் பின்னால் வந்த மதியை கண்டதும், அவர் கண்களில் ஆச்சர்யம்..

பிறகு இவனிடம் திரும்பி,
“வணக்கம் சார்..என் பேரு ஷியாம்.. சேகர் சார் பிஏ..”

Advertisement

“ஓ..சொல்லுங்க..”

“சார், உங்க கிட்ட இதை கொடுக்க சொன்னார்..”

தன் கையில் இருந்த கவரை, அவனிடம் நீட்டினார்..

புருவம் சுருக்கி அதை பார்த்தவன்..அதை பிரித்தான்.அதில் ஒரு கடிதம் இருந்தது..

‘எதுக்கு லெட்டர் கொடுத்து இருக்காங்க மாமா..போன் பேசாம..’

யோசனையோடு பிரித்தவனுக்கு விடை கிடைத்தது..

அந்த கடிதத்தில் சேகர்,தான் அமித்லால் மூலம் தீவிரமாய் கண்காணிக்க படுவதால், இந்த கடிதத்தை அனுப்பி இருப்பதாக தெரிவித்தார்..

தன் நடவடிக்கைகள்,போன் கால்கள், அனைத்தும் அவன் மூலம் கவனிக்க படுவதாகவும்,அதனால், தான் இப்பொழுது மும்பை கிளம்பினால், அவனுக்கு உடனடியாக தகவல் சென்று விடும். எனவே, ராஜாவை மட்டும், நம்பிக்கையான ஆள் துணையோடு சென்று வர சொன்னார்..

அங்கு, அந்த மந்திரியின் ஆட்கள் மூலம் அவனுக்கு வேண்டிய உதவி கிடைக்கும் என்று கூறினார்..

அமித்லால் வீட்டுக்குள் நுழைவதில் இருந்து, மதுவை காப்பாற்றி வெளியே அழைத்து வருவது வரை..

அனைத்திற்கும், அவர் ஆட்கள் உதவி செய்வார்கள் என்று எழுதி இருந்தார்..
இன்னும் இரண்டு நாட்களில் கிளம்ப சொல்லி இருந்தார்..

அவன் படித்து முடித்து நிமிர்ந்ததும்,
“சார், உங்களுக்கு மும்பைக்கு பிளைட் டிக்கெட் போட சொன்னார்..எப்போ, என்னன்னு சொன்னிங்கன்னா போட்டுடுவேன் சார்..”

“மாமா சொன்ன மாதிரியே, ரெண்டு நாள் கழிச்சு போடுங்க..ரெண்டு டிக்கெட் போடுங்க..பாண்டிங்குற பேர்ல ஒன்னு..”

“சரி சார்.. போட்டுட்டு, உங்களுக்கு அனுப்பி விடுறேன்..”

கிளம்ப போனவரை, மரகதம் உபசரித்து, உணவு உண்ண சொல்லி, அனுப்பி வைத்தார்..

அவர் சென்றதும்,
“என்ன விஷயம் வ…மாமா..??”

மாமியாரை ஒரு பார்வை பார்த்துக் கொண்டு, பேர் சொல்ல வந்தவள், மாமா என்று அழைத்தாள்..

“மாமாவால, இப்போ வர முடியாதாம்..அதான், என்னை மட்டும் மும்பை போக சொன்னார்..”

“ஏன் லே..வர முடியாது??அண்ணனுக்கு இதை விட, பெரிய வேலை இருக்கோ??”

“இல்ல ம்மா.. அவரை, அந்த அமித்லால் தீவிரமா கண்காணிக்கிறானாம்..
அவர் அங்க வாரது தெரிஞ்சா, உஷார் ஆகிடுவான்.. அதான்..”

“அவ்ளோ மோசமான  ஆளா, அந்த படுபாவி..??”

“ஹ்ம்ம்..அப்படி தான் போல..மாமா இங்க பேசும் போது கூட, சாதாரணமா நினைச்சேன்..ரொம்ப ஆபத்தானவனா இருப்பான் போல..”
யோசித்தப்படி பேசினான்..

அவன் கைகளை இறுக பற்றினாள் மதி..
அப்பொழுது தான் அவளை கவனித்தான்..

அவள் முகம் எல்லாம் வேர்த்து, அவனை பிடித்த கைகள் கூட, வேர்வையில் குளித்திருந்தது..
கண்களில் பயம் தெரிந்தது..

 

[the_ad id=”6605″]

 

 

“மாமா..நீங்க மட்டும் எப்படி போவீங்க..??எனக்கு பயமா இருக்கு..”

“ஒன்னும் ஆகாது மதி..அங்க ஒரு மந்திரியை வச்சு, எல்லா ஏற்பாடும் செய்திருக்கார் மாமா..
கூட்டிட்டு மட்டும் வர வேண்டியது தான், என் வேலை..”

“நானும் வரேன்  மாமா..”

“ச்சு.. விளையாடுறியா மதி..??இந்த நிலையில..ஒழுங்கா இங்க இரு..நான் சீக்கிரம் வந்துடுவேன்..பாண்டியும் கூட்டிட்டு தான் போறேன்..ஒரு நாள், இல்ல ரெண்டு நாள் தான் ஆகும்..போய்ட்டு,  மதுவை கூட்டிட்டு கிளம்பி வர போறேன்..உடனே வந்துடுவேன்..”

“ஆமாம், அவன் சொல்லுறதும் சரி தான். நீ என்ன சின்ன புள்ளையாட்டம், நானும் வரேன்னு நிக்குற..கொஞ்சமாவது, பிள்ளைத்தாச்சின்னு நியாபகம் இருக்கா??”

“இல்ல அத்தை..அவர்..”
என்ன சொல்லுவது என்று தெரியாமல் மௌனித்தாள்..

“அவன் போறது ஆபத்தான வேலைன்னு தெரியுது..அதுக்காக, என்ன பண்ண முடியும்??அந்த பிள்ளையை அப்படியே விட முடியாதில்லை..

அவன் அதெல்லாம் சுதானமா இருந்துக்குவான்.. நீ கவலைப்பட்டு, உடம்பை கெடுத்துக்காத..
ரெண்டு பேரும் சாப்பிட வாங்க..”

அவர் கூறிவிட்டு உள்ளே சென்றதும்..

அவன் புறம் திரும்பி, கைகளை பிடித்தவள்,
“வரு,நீங்க அவசியம் போனுமா??”

“என்ன மதி??நான் போகாம, யார் போவா??”

“அதான், ஏதோ மந்திரி ஆளு ஏற்பாடு செஞ்சுருக்கார்ன்னு அப்பா சொன்னாரே..அவங்களே போய் கூட்டிட்டு வரட்டும் வரு..நீங்க போக வேண்டாம்..”

“என்ன பேசுற மதி??நீயா பேசுறது??நாம போய் கூட்டிட்டு வரதும்..யாரோ ஒருத்தங்க கூட்டிட்டு வரதும், ஒண்ணா சொல்லு..
யாரோ ஒருத்தர் கிட்ட பொறுப்பை ஒப்படச்சுட்டு,நிம்மதியா இருக்க முடியுமா??
அன்னைக்கு மாமா, யார் மேலேயும் நம்பிக்கை இல்லை..
உன்னை தான் நம்பி இருக்கேன்னு சொன்னார்..
அவர் சொல்லுக்காக தான், போறேன் மதி..”

“எனக்கு புரியுது வரு..ஆனா நீங்களா??இல்ல வேற யாருமான்னு வரும் போது..நீங்க தான் எனக்கு முக்கியம் வரு..”

அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு, அவனை அணைத்துக் கொண்டாள்….அவள் இதய துடிப்பை, அவனால் உணர முடிந்தது..
அவள் எண்ணங்களின் தாக்கம், குழந்தையிடமும் தெரிந்தது..
அசைவு அதிகமாய் இருந்தது..

“ஒன்னும் ஆகாது மதி..நான் பத்திரமா திரும்பி வருவேன், மதுவோட.. நீ பயப்படாத..நீ பயந்தா, பாப்பாவும் பயன்படும்..பாரு..”

அவள் வயிற்றில் கை வைத்து கூறினான்..
அவளுக்கும் புரிந்தது..
ஆனாலும், எண்ண போக்கை கட்டுப்படுத்த முடியவில்லை..மனம் அலைபாய்ந்தது..

அவளை உணவு உண்ண வைத்து, அழைத்து சென்றான்..
இரவும், அவள் சரியாக உறங்கவில்லை..

அவனை நெருங்கி, அணைத்துக் கொண்டாள்..
அவள் மனம் புரிந்து, அவளை வருடிக் கொடுத்தான்…

“தூங்கு மதி..எனக்கு ஒன்னும் ஆகாது..”

அவள் காதோரம் கூறினான்..
சற்று மனம் அமைதி அடைய, கண் அயர்ந்தாள்..

அவன் கிளம்பும் நாளும் வந்தது..

பாண்டியும் அவனும் ஓட்டுநர் உதவியுடன், காரில் விமான நிலையம் வரை சென்று, அதன் பிறகு, விமானம் மூலம் மும்பை செல்வதாய் ஏற்பாடு..

கலங்கிய கண்களை கட்டுப்படுத்திய படி,அவனுக்கு விடை கொடுத்தாள் மதி..

“ஒழுங்கா சாப்பிடு..பயப்படாம இரு..”

அனைத்திற்கும் தலை அசைத்தாள்..

அவள் நெற்றியில் முத்தமிட்டவன்,கீழே சென்றான்..

அவன் பின்னே வந்தவளை பார்த்துக் கொண்டே,மரகதத்திடம்,
“அம்மா கிளம்புறேன்..இவளை பார்த்துக்கோங்க..குழம்பி போய் இருக்கா”

“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் லே..நீ, சுதானமா போய்ட்டு வா..
போய்ட்டு போன் பண்ணு.. அந்த பிள்ளையோட கிளம்பி வா.. கிளம்பும் முன்னவும்  போன் பண்ணு..”

“சரி ம்மா..”

“ஏலே பாண்டி.. உன்ற சேட்டை எல்லாம் விட்டுட்டு, பொறுப்பா போய்ட்டு, பிள்ளையை கூட்டிட்டு வாங்க..”

“சரி அத்தை. முடிஞ்சா,அங்க ஒரு வடக்கு பொண்ணையும், கட்டி கூட்டிட்டு வரேன்..”

“உன்ற அம்மா கிட்ட விளக்குமாறு அடி வாங்க ஆசை இருந்தா..அதையும் செய்..”

“ச்சே.. ச்சே.. ஒரு பேச்சுக்காவது, மஹராசனா கூட்டிட்டு வா.. நாங்க ஏத்துக்குறோம்ன்னு சொல்லுறியா??”

“நான் என்ன லே சொல்லுறது??எதுக்கும், உன்ற ஆத்தாவை கேட்டுக்கோ..”

“க்கும்..”

நொடித்துக் கொண்டு, காரில் ஏறினான்..
ராஜாவும் சென்று ஏறினான்..

கார் கிளம்பியது..
பாண்டியின் நினைவு, மீனாவிடம் சென்றது..
அவள் ஊருக்கு சென்றதும், இவனுக்கு போன் செய்ய மாட்டாள் என்று தெரியும்..

இருந்தும், சொல்லி அனுப்பினான்..
பிறகு இரண்டு நாட்கள் கழித்து, அவளுக்கு இவன் தொடர்பு கொண்டான்..

புது எண்ணை பார்த்ததும், யோசனையோடு பார்த்த மீனா,அதை இயக்கினாள்..

“ஹலோ..”

“ஹலோ..நல்ல இருக்கீங்களா??”

அவன் குரலில், அவன் பாண்டி தான் என்று அறிந்து கொண்டாள்..

‘இவனுக்கு எப்படி, என் நம்பர் கிடைச்சது..மித்து கொடுத்திருக்க மாட்டா..’

 

[the_ad id=”6605″]

 

 

சற்று யோசித்தவளுக்கு,
அன்று காரில், இவளை வழி அனுப்ப வரும் போது, போனை கொடுத்த பாண்டியின் ஞாபகம் வந்தது..

‘கேடி. கோபமாய் இருக்க மாதிரி சீன் போட்டுட்டு..நம்பர் எடுத்துருக்கு..’

அதற்குள், அவன் அங்கு பல ஹலோக்கள் சொல்லி விட்டான்..

“ஹலோ..எதுக்கு கால் பண்ணிங்க??”

“எதுக்குங்க கால் பண்ணுவாங்க..பேசலாம்ன்னு தான்.. நல்ல வேளை, கட் பண்ணிட்டீங்களோன்னு நினைச்சேன்..”

“என்ன பேசணும்??”

“எதுக்குங்க, மிளகாயை கடிச்ச மாதிரியே பேசுறீங்க??”

“வேண்டுதல்..சொல்லுங்க..என்ன விஷயம்..??”

“உங்களை, போய்ட்டு கால் பண்ண சொன்னேன்..ஏங்க பேசல..”

“நான் எதுக்கு பேசணும்??உங்க கிட்ட..”

“என்னங்க. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க..என் சின்ன மனஸு, உடைஞ்சு போச்சுங்க..”

“அப்போ, போய் ஒட்டுங்க..”

“செம்ம காமெடிங்க..ஞாபக படுத்துங்க, நாளைக்கு சிரிக்கிறேன்..”

‘இவனை..’
பல்லை கடித்தாள்..

அதன் பிறகு அவன் பேசியதை, கடுப்போடு கேட்டு விட்டு வைத்தாள்..

தினமும், ஒரு தடவையாவது பேசி விடுவான்..

“எதுக்குங்க, அடிக்கடி போன் பண்ணுறீங்க??”

“பேசத் தாங்க”

“ச்சு.. எதுக்கு பேசணும்..??”

“நம்பிக்கை வளரனும் இல்ல..நீங்க தானே, நம்பிக்கை வந்தா தான், கல்யாணம் பண்ணிக்குவேணு சொன்னிங்க..அதுக்கு தான்..”

“பேசுனா வந்துடுமா??”

“அப்போ, நேர்ல வரவா??”

கிளம்பி வந்துவிடுவானோ என்னும் பயத்தில் அவசரமாய்,
“வேண்டாம்..வேண்டாம்..”

“சரி, நீங்க சொல்லும் போது வரேன்..”
புன்னகையோடு வைத்தான்..

முதலில் எரிச்சலோடு அவனிடம் பேசியவள்,இப்பொழுது அவன் அழைப்புகளை, எதிர் பார்க்க ஆரம்பித்தாள்..

இவள் கால் எடுக்கவில்லை என்றால்,செய்தியாவது அனுப்பி விடுவான்..

அவனோடு பேசும் போது, அவள், இவன் அழைப்பை எதிர்பார்த்ததை காட்டிக் கொள்ள மாட்டாள்..

கடனே என்று பேசுவது போல பேசுவாள்..
மறைமுகமாக, வேலை நேரம் சொல்லி,அப்பொழுது பேச வேண்டாம் என்று கூறி விடுவாள்..

தன் முயற்சியில் மனம் தளராத விக்ரமாதித்தன் போல,விடாமல் முயன்று கொண்டிருந்தான் பாண்டி..

இப்பொழுது அவளை, ஒருமையில் அழைக்கும் அளவு முன்னேறி இருந்தான்..

அவளின் இனிய நினைவுகளோடு பயணித்தான்..

‘நீ, அத்தை கிட்ட சொன்ன விஷயம் மட்டும் தெரிஞ்சுது..உன் மீனா, பத்திரகாளி ஆகிடுவா..’
மென்னகை தோன்றியது இதழில்..

‘ஏற்கனவே என் மேல நம்பிக்கை இல்ல..இதுல, இது தெரிஞ்சா, சுத்தம்..’
புன்னகை விரிந்தது..

ஏதோ யோசனையில் இருந்த ராஜா, இவன் முகம் பார்த்து,
“டேய்,பாண்டி..”

அவன் அழைப்பில் திரும்பவில்லை என்றதும்,அவன் கைகளில் பலமாய் அடித்தான்..

“ஆ…”
கத்திய படி பார்த்தவன்..

“ஏன்டா??ஏன்??உன் வாழ்க்கைல நான் தொந்தரவு பண்ணனா??நீ ஒரு பொண்ணை காதலிச்சு..உஷார் பண்ணி..கல்யாணம் பண்ணி,குழந்தையே பெத்துக்க போற..இடையில, நான் எங்கையாச்சும் வந்தனா..?? நீ மட்டும் ஏன்டா, குறுக்க குறுக்க வர..”

மேடையில் பேசும் பேச்சாளர் போல,அவன் பொங்கிய பொங்கலில்..
‘இவன் நல்லா தான் இருக்கானா??’
என்று, சந்தேகமாய் பார்க்க ஆரம்பித்தான் ராஜா..

“என்ன டா??ஒரு மார்க்கமா பார்க்குற??”

“நல்லா தானே இருக்க??”

“ஏன், லூசுன்னு எல்லார் கிட்டயும் சொல்லேன்..உள்ளதே, எவனும் பொண்ணு தர மாட்டான்..நீ போய் இப்படி சொல்லு..அப்புறம், ஒரு ஈ காக்கா வராது..”

“என்னாச்சு டா உனக்கு??”

“உனக்கு, என் மேல பாசமே  இல்லடா..நாம கல்யாணம் பண்ணிட்டோமே.. நம்ம நண்பன் இப்படி, தனி மரமா நிற்குறானே..ஒரு ஜோடி சேர்ப்போம்..அப்படி, ஏதாவது அக்கறை இருக்கா??”

“நான் வேணா, அத்தை கிட்ட பேசி,பொண்ணு பார்க்க சொல்லுறேன் டா.. ஏன் இவ்ளோ கோவப்படுற??”

“நல்லா இருக்குடா..நீ மட்டும், காதல் பண்ணி, கல்யாணம் பண்ணுவ..நான் மட்டும், என் அம்மா சொல்லுற பொண்ணை கட்டணுமா??நெவெர்..”

‘இவனுக்கு இப்போ என்ன வேணும்..??மண்டை காய வைக்குறான்..’

எரிச்சல் ஆனா ராஜா,
“நீ, கல்யாணம் பண்ணா பண்ணு, இல்ல, எக்கேடோ கெட்டு ஒழி..”

“என்ன மாப்பி, பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட .ஒரு சின்ன பையனை,வயசுக்கு வந்த பையனை,வாழ வேண்டிய பையனை பார்த்து, இப்படி சொல்லிட்ட..”

“வாயை மூடு. அறைஞ்சுடுவேன்..”

ஓட்டுநர் புறம் திரும்பி,
“அண்ணா.. கொஞ்சம் அந்த டீ கடை முன்ன நிறுத்துங்க..ஒரு காபி குடிச்சிட்டு வரேன்..இவனால, தலைவலி..”

“என்ன மாப்பு, நீயும் இப்படி சொல்லுற??”

“வேற யாரு சொன்னா??”
அவனை கூர்ந்தபடி கேட்டான்..

“அந்த மீனாவும், நான் பேசும்போதெல்லாம், இப்படி தான் சொல்லுறா??”

“அவ கூட, நீ எப்போ பேசுன??”
சந்தேகமாய் பார்த்தபடி கேட்டான்..

ஈ…என்று, அத்தனை பற்களையும் காட்டியவன்..

“சும்மா தான் மாப்பு..அப்போ, அப்போ, பேசுவேன்..”

அவனை முறைத்தவன்….

“டேய்,அந்த பொண்ணுக்கு தொந்தரவு எதுவும் கொடுத்த..அப்புறம், பிரெண்ட்ன்னு கூட பார்க்க மாட்டேன்.தொலைச்சுடுவேன்…”

“என்ன மாப்பி, நீயும் என்ன நம்ப மாட்டேங்குற..நான், அவளை விரும்புறேன் மாப்பு..கல்யாணம் பண்ணி வை மாப்பு..அப்புறம், உன் ஹாஸ்பிடல்க்கு,  முழுக்க முழுக்க சம்பளம் இல்லாம வேலைக்கு வர சொல்லுறேன்..”

“மூஞ்சியை பாரு..இப்படியா டா.. கேட்பாங்க..இந்த லட்சணத்துல, காதலிக்குறானாம்..”

“தெய்விக காதல் மாப்பு..”

“எவ்ளோ நாளா??”

“அவளை பார்த்ததுல இருந்து..அவ அப்பன் பிளேடு தான்.. ஆனா இவ, கோல்ட் மாப்பு..கோல்ட்..”

அண்ணாந்து பார்த்துக் கொண்டு, கனவில் பேசினான்..

“கல்யாணம் பண்ணுற முடிவுல இருக்கேன்னா, மதி மூலம் அவங்க வீட்டுல பேச சொல்லி,கல்யாணம் பண்ணி வைக்குறேன்..மும்பைல இருந்து வந்ததும்..
உண்மையா தானே காதலிக்குற??”

அவனை முறைத்தவன்,
“ரொம்ப பண்ணாத டா, உன்னை ஒரு பொண்ணு, தொரத்தி தொரத்தி காதலிச்சு, கட்டாய தாலி கட்டி,பின்னாடியே சுத்துரதாலை..
என்னை பார்த்தா, அப்படி தான் தெரியும்..
ஆணவம் பிடிச்சவனே..
என் கிரகம், நான் சுத்த வேண்டி இருக்கு..எவளும், என்னை சுத்த மாட்டேங்குற..”

“சரி, சரி, புலம்பாத.வந்ததும் பேசுறேன், அவங்க வீட்டுல..”

பேசிய படி, விமான நிலையத்தை அடைந்து, சரியான நேரத்தில் விமானத்தில் ஏறி,மும்பையை சென்றடைந்தார்கள்..

விமான நிலைய வாயிலிலேயே, அவர்களை அழைத்து செல்ல, அமைச்சரின் ஆள் ஒருவர் நின்றார்..

மெதுவாய் இவர்கள் அருகில் வந்து, யார் கருத்தையும் கவராது, பேசி அழைத்து சென்றார்..

அமைச்சருக்கு சொந்தமான விடுதி அறைக்கு கூட்டி சென்றார்..

“சார்,என்ன செய்யனும்..??எப்படி செய்யனும்??எல்லாம் இங்க பேசி முடிவு பண்ணிட்டு போக தான், இங்க கூட்டிட்டு வந்தேன்.நைட் தான், அங்க போக முடியும்..அதுவரை, இங்கயே இருங்க…”
திட்டங்களை சொல்ல ஆரம்பித்தார்..

“சார், அங்க ரொம்ப நாளா வேலை பார்க்குற லேடி  ஹெல்ப்ல தான், மூவ் பண்ண போறோம்..அவ பிள்ளைக்கு ஏதோ, மருத்துவ தேவை போல..அமித்லால் உதவலை..அந்த விஷயம் அமைச்சருக்கு தெரிஞ்சு,அவளை பிடிக்க சொன்னார்..முதல்ல தயங்குனா..
அப்புறம், பணம் கொடுத்து சம்மதிக்க வச்சோம்..”

 

[the_ad id=”6605″]

 

அவர் சொல்வதை கவனமாய் கேட்டுக் கொண்டார்கள் இருவரும்..

“அங்க சமைக்குறவ அவ..அந்த வீடு, ரொம்ப பாதுகாப்பு வசதியோட இருக்கும்..
சிசிடிவி கேமரா எல்லாம் இருக்கும்..

எதுலயும் மாட்டாம, போய்ட்டு வரணும்..
அந்த வீட்டுக்கு பின் பக்கம், ஒரு சின்ன கேட் இருக்கு.முன்னாடி, வேலைக்காரங்க வந்து போறதுக்கு வச்சது..இப்போ, உபயோகத்தில் இல்லையாம்..அதோட சாவி இருக்கும் இடம், அவளுக்கு தெரியும்..அவ திறந்து வைக்குறேன்னு சொன்னா..

அந்த கேட் கொஞ்சம், புதர் மண்டி, பராமரிப்பு இல்லாம இருக்குமாம்..
அங்க, பாதுகாப்பும் அதிகம் இல்லையாம்..

காவல் ஆளுங்க சுத்தி வர நேரம் பொறுத்து, அந்த லேடி நமக்கு சிக்னல் கொடுக்கும்..நேரம் பார்த்து,
அது வழியா உள்ள போய்டுங்க..

அப்புறம், டெக்னிக்கல் விஷயம் தெரிஞ்ச ஒரு ஆளும், உங்க கூட வரான்..

அவன், ஜாம்மெர் தருவான்..எப்படி யூஸ் பண்ணனும்ன்னு சொல்லி தருவான்..அதை கொண்டு போனா.. நீங்க வெளிய வர வரை, கேமரால பதிவாக மாட்டீங்க..

அங்க, அந்த பொண்ணு அறை எதுன்னு, அந்த வேலைக்கார லேடி சொல்லுவா..

அந்த பொண்ணை, பேசி கூட்டிட்டு வர வேண்டியது, உங்க பொறுப்பு..
அவங்க, இன்னைக்கு நைட் ஏதோ பார்ட்டிக்கு போறாங்களாம்..

வீட்டுல, ஆள் யாரும் இருக்க மாட்டாங்க..
வெளிய தான், காவல் ஜாஸ்தி இருக்கும்..
உள்ள போய்ட்டா, அந்த லேடி ஹெல்ப் பண்ணுவா..

உங்க பொண்ணு, உங்களை நம்பி வருமுல்ல.??.”

‘அந்த இம்சை வருமா??தெரிலியே..’
பாண்டியே தான்..

“அப்புறம், அந்த லேடிக்கு தமிழ் தெரியாது..ஹிந்தி மட்டும் தான் தெரியும்..”

‘சுத்தம்.. இதுவேறயா??’

“எனக்கு, ஹிந்தி தெரியும் சார்..”

“அப்போ, ஓகே சார்..”

அவர் சென்றதும், அவர்களுக்கு உணவு வந்தது..

சாப்பிட போனவனின் கையை பிடித்துக் கொண்ட பாண்டி,
“மாப்பு,என் வீட்டுக்கு நான் ஒரே பையன் டா..”

“நான் மட்டும் என்னவாம்.??.”

“உனக்கு, மச்சினிச்சி. எனக்கு என்ன டா..??  நான்,என் மீனாக்கு, ஒரே ஒரு காதலன் டா..”

“இது, எப்போல இருந்து??”

“அவளை பார்த்ததுல இருந்து..”

“இது, அவளுக்கு தெரியுமா??”

“இதுவரை தெரியாது..தெரிஞ்சா கொன்றுவா..”

“யாரை??”

“என்னை தான்..”

“ஆக மொத்தம், உன் உசுருக்கு உத்திரவாதம் இல்ல..அப்புறம் என்ன??”

“நீ, ஒரு முடிவோட தான் கூட்டிட்டு வந்துருக்க..என்னை போட்டு தள்ளாம போக மாட்ட..”

“இப்போ வரை அப்படி எண்ணம் இல்ல..”

“அப்போ, இனி வருமா??”

“வரலாம்.. வராமலும் போலாம்..போரில், உயிரை பத்தி கவலைப்பட கூடாது டா..”

“டேய்..”

“நொய் நொய்ங்காம இரு டா.. உனக்கு பயமா இருந்தா, நீ வராத..நான் மட்டும் போறேன்..”

“எதுக்கு, அத்தை என்னை விறகு கட்டை கொண்டு, மண்டையை பிளக்கவா??அவனை தனியா விட்டுட்டு, என்ன பண்ணன்னு..??”

“ஏன்டா, முன்னவும் போக விட மாட்டேங்குற..பின்னவும் போக விட மாட்டேங்குற..”

“என்னை கழுதைன்னு சொல்லுற..பரவால்ல மாப்பு..நீ தானே, சொல்லிக்கோ..ஆனா, என் உசுருக்கு நீ தான் பொறுப்பு மாப்பு..மீனவோட பூவையும் பொட்டையும், நீ தான் காப்பாத்தனும்..உன் உடன் பிறவா தங்கச்சி வாழ்க்கை, உன் கையில் தான் இருக்கு..”

“இப்போ, என் கை, உன் கையில இருக்கு..என்னை, சாப்பிட விட்டு தொலை டா..”

அவன் உணவு உண்ண போகும் போதெல்லாம், அவன் கையை பிடித்து தடுத்துக் கொண்டிருந்தவனிடம், எரிச்சலோடு சொன்னான்..

“சாப்பிடு மாப்பு..”
அசடு வழிய சொன்னான் பாண்டி..

வீட்டுக்கு  அலைபேசியில் அழைத்து, வந்த தகவலை சொன்னவன், இரவுக்கு காத்திருக்க ஆரம்பித்தான்…

இரவு நெருங்கியது, பாண்டிக்கு காய்ச்சல் வரும் போல இருந்தது..

அமைச்சரின் ஆள் வந்ததும், அவரோடு கிளம்பி, வேனில், அமித்லால் வீடு நோக்கி சென்றார்கள்..

வண்டியில், அந்த கணிப்பொறி அறிந்தவன்,இன்னும் ஒருவனும் இருந்தார்கள்..அவர்கள் இவர்களுக்கு, ஜாம்மெர் பற்றி விளக்க ஆரம்பித்தார்கள்..

ஒரு மணி நேர பயணத்தில், வீட்டை அடைந்தார்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!