Post Views: 4,522
உனக்கென இருப்பேன் 3
நிஷா உன் தம்பி போய் சேர்ந்த வேதனை துளி கூட இல்லாம உன் தம்பி பொண்டாட்டி ஒரு மாப்பிள்ளையை தேடிக்கிட்டா பாரு அதுவும் உங்க பெரியப்பா பையனை ….. பிரகாஷ் தன் மனைவியை ஏற்றி விட்டான் .
அந்த கேடு கெட்டவளை பத்தி இப்போ எதுக்கு பேச்சு ? நீங்க சாப்பிடுங்க…கணவனுக்கு ஆறாவது தோசையை வைத்து சாம்பார் ஊற்றினாள் நிஷா .
வக்கிரம் கொண்ட பிரகாஷூக்கு மனம் பதக் பதக் என்று அடித்துக் கொண்டது.மாமனார் சொத்து மைத்துனன் மறைவிற்கு பிறகு பேரனுக்கு போய் விடுமோ என்ற கவலை அவனுக்கு .
Advertisement
கிருஷ்ணன் வாத்தியாருக்கு நிஷா,வினோத்,சௌந்தர்யா என்று மூன்று வாரிசுகள் .
வினோத் என்ற ஒற்றை ஆண்வாரிசு இறந்து போகவே நிஷாவின் கணவன் பிரகாஷூம் சௌந்தர்யாவின் கணவன் பிரபாகரனும் மாமனார் சொத்தை குறிவைத்து வல்லூறு போல வட்டமடிக்க ஆரம்பித்து விட்டனர் .
“……………………”
Advertisement
கீர்த்தி இறங்கும்மா என்றான் அஸ்வின். சுற்றும் முற்றும் பார்த்தவள் இறங்கினாள் . வீட்டை விழி உயர்த்தி பார்த்தாள் ‘
Advertisement
ஹே என்ன பார்க்கிற ? நம்ம வீடு தான் , நான் இந்த வீட்டில் தான் இருக்கேன். இங்கே பக்கத்துல மஞ்சக்குப்பம் தான் எனக்கு ஆபிஸ் . நமக்கு ரொம்ப பழக்கப்பட்டவங்க தான் பயப்படாம வா !
குழந்தையை அணைத்து பிடித்துகொண்டாள் பதற்றத்தை தணிக்க …..
உள்ளே வா என்றவன் பைகளை கையில் தூக்கிக் கொண்டு முன்னே நடந்தான் .
Advertisement
சார் ஒரு நிமிஷம் ! சரவணன் தன் தாயுடன் வந்து நின்றான் .
சரவணன் அஸ்வினுடன் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவன் . நல்ல புரிதல் கொண்ட நண்பன் . சரவணன் வீட்டின் ஒரு போர்ஷனில் தான் அஸ்வின் தங்கி இருக்கிறான் .
அம்மா சீக்கிரம் ஆரத்தி எடுங்க! தாயை விரைவு படுத்தினான் .
முகம் கொள்ளா புன்னகையுடன் ஆரத்தி எடுத்து திலகமிட்டார் சரவணனின் தாய் மஞ்சுளா
கையில் குழந்தையுடன் நடுங்கி நின்றவளை ஆதுரமாய் கரம் பற்றி உள்ளே அழைத்து சென்றார் மஞ்சுளா .
குழந்தையை ஆசையாய் வாங்கி கன்னம் கிள்ளி முத்தமிட்ட்டார் .
வா என்பதாய் கண்களால் அழைத்தபடி உள்ளே சென்றுவிட்டான் அஸ்வின் .
வாம்ம்மா ….என்ன தயக்கம் ?நம்ம வீடு தானே ….உள்ளே அழைத்து சென்றார் மஞ்சுளா .
தம்பி டிபன் செய்து கொண்டு வரவா ? என்றார் மஞ்சுளா .
இல்லம்ம்மா ஹோட்டலில் சாப்பிட்டு தான் வந்தோம் என்றான் நன்றி நவிலும் பார்வையுடன் .
வேறேதும் வேணுமா சார் ? சரவணன் கேட்டான் .
குழந்தைக்கு பால் மட்டும் கொண்டுவந்து கொடுங்கம்மா என்றான்
ஆண்களுக்கு அதிகம் பொறுப்பு இருக்காது என்று நினைப்பது தவறு போலும் ….தனக்கு தானே நினைத்துக் கொண்டாள் கீர்த்தி .
சரி தம்பி நீங்க ரெஸ்ட் எடுங்க நாங்க வரோம் என்று நாசூக்காய் கிளம்பிவிட்டனர் அம்மாவும் மகனும் .
இந்த திடீர் திருமணம் குறித்து சரவணனிடம் முன்கூட்டியே சொல்லியிருப்பான் போலும் …அது தான் அவன் தாயுடன் ஆரத்தி எடுத்து வரவேற்க தயாராய் நின்றிருக்கிறான் .
“…………………”
அப்பா இப்போ என்ன நடந்து போச்சு ? புருஷனும் பொண்டாட்டியும் மொட்டு மொட்டுன்னு மோட்டு வலையை பார்த்துட்டு உட்கார்ந்துட்டீங்க .
அண்ணன் என்ன தப்பு பண்ணிடுச்சு ? கள்ளத்தனமா எவன் பொண்டாட்டியையோ இழுத்துட்டு ஓடிப்போச்சா ?பெற்றவர்களை கரைக்க முயன்றாள் அக்ஷயா
அதை தானேடி உங்கண்ணன் பண்ணிட்டு போயிருக்கான் ….சரோஜினி மீண்டும் ராமாயணத்தை ஆரம்பித்தார் .
ம்ம்மா அசிங்கமா பேசாதே சொல்லிட்டேன் …. அண்ணன் எவ்வளவு பெரிய
புண்ணிய காரியம் பண்ணியிருக்கு தெரியுமா ? அண்ணனுக்காய் வாதிட்டாள் அன்புத்தங்கை .
கீர்த்தி பாவம்மா …..வினோத்தை காதலித்த ஒரே காரணத்துக்காக சொந்த பந்தத்தை விட்டுட்டு வந்து இப்போ அநாதரவா நின்னுட்டாங்க.
என்னம்மா அவங்களுக்கு வயசு ? என்னை விட ரெண்டு வயசு பெரியவங்க அவ்வளவு தான் . புருஷன் செத்துட்டான் வாழ்க்கை முடிஞ்சுபோச்சுன்னு விதி மேல பழியை போட்டுட்டு தனி மரமா வாழணுமா ?
ஏய் என்னடி உன் அண்ணங்காரன் உன்னை பேசி கரைச்சுட்டானா ? பெத்தவளா என் இடத்துல இருந்து பாருடி அப்போ தான் என் வலி புரியும் ! விசும்பினார் கேவினார் இன்னும் ஆற்றாமை அடங்கவில்லை அவருக்கு .
ம்ம்மா இந்த உலகம் ரொம்ப மாறிப்போச்சு ! இன்னும் பழைய பஞ்சாங்கமா இருக்காதம்ம்மா ….நீயும் பெண்ணை பெத்தவ தானே ….அதை மறந்துடாதே …
மகளின் பேச்சில் சற்று தெளிந்தார் பொன்னுசாமி .
எந்த குடும்பம் நமக்கு ஆகாதோ அந்த குடும்பத்து மேல இவனுக்கு என்னடி அக்கறை வேண்டி கிடக்கு ? ஏகத்துக்கும் எகிறி குதித்தார் சரோஜினி .
“………………..”
ராகவபிள்ளை சொத்து பிரிக்கும் போது பூர்வீக வீட்டை கிருஷ்ணசாமிக்கு எழுதி வைத்துவிட்டார் .
கிராமத்தில் வழி வழியாய் மூத்த மகனுக்கு தான் பூர்வீக வீடு வந்து சேரும் . மரபை உடைத்து விட்டார் ராகவப்பிள்ளை தங்கை மகளான மருமகள் பத்மினி போட்ட தூபம் அப்படி .
தன் மனைவியின் நகைகளை பாதிக்கு மேல் பத்மினிக்கு கொடுத்துவிட்டார் . பதமினிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று காரணம் கூறி வாயடைத்து விட்டார் .
பொன்னுசாமிக்கும் இளையவர் முத்துசாமிக்கும் அதில் மிகுந்த மனவருத்தம் .
ராகவபிள்ளை மறைவுக்குப்பிறகு கிருஷ்ணன் குடும்பத்தோடு ஒட்டு உறவு
இல்லாமல் போய்விட்டது .
இளையவர் முத்துசாமி திருச்சியில் செட்டில் ஆகிவிட்டார் . அவருக்கு ஒரே மகன் அரவிந்தன். மூத்தவர் பொன்னுசாமியோடு உறவில் இருந்தார் முத்துசாமி
குடும்ப பகை, பெரியவர்கள் பிரச்சனை எதையும் கருத்தில் கொள்ளாமல் சித்தப்பா மகன் வினோத்துடன் நெருக்கமாகவே இருப்பான் அஸ்வின் .
“………………….”
கீர்த்தி நான் கொஞ்சம் வெளியில் போயிட்டு வரேன் . ஒன்னும் பயம் இல்லை . சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் பழக்கப்பட்ட மனுஷங்க தான் .
நான் சீக்கிரம் வந்துடுவேன் . குழந்தை பத்திரம்! அஸ்வின் சரவணனோடு கிளம்பி விட்டான் .
வீடு சிறியதாய் இருந்தாலும் சுத்தமாய் வைத்திருந்தான் . பேச்சுலர் புழங்கிய வீடு போலவே இல்லை .
அவ்வப்போது சமைத்து சாப்பிடுவான் போல …கியாஸ் அடுப்பு மிக்ஸி எல்லாம் வைத்திருந்தான் .
மஞ்சுளா குழந்தைக்கு பாலோடு வந்தார் .
என்னமா கீர்த்தி வீடு பிடிச்சிருக்கா ? சிநேகமான சிரிப்புடன் கேட்டார் .
ம்ம்ம்ம்ம்ம் நல்லா இருக்குமா என்றாள் மென் குரலில் .
அஸ்வின் அருமையான புள்ளம்மா …… வினோத் அடிபட்டு சீரியஸா இருந்தப்போ தம்பிக்காக துடித்ததைவிட கையில் குழந்தையோட சின்ன பொண்ணு நீ நிராதரவா நிற்கிறியேன்னு சொல்லி சொல்லி அழுதுச்சு !
மஞ்சுளா கரகரத்த குரலில் பேசிக்கொண்டே போக கீர்த்திக்கு துக்கம் தொண்டையை இறுக்கியது .l
“……………”
அஸ்வின் கீர்த்தனா திருமண விபரம் திருச்சியில் இருக்கும் முத்துசாமிக்கு தெரியவர ….அவர் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை .
நல்லவேளை நாம கிராமத்தில் இல்லை . அங்கே இருந்திருந்தா நம்ம பையன் அரவிந்தன் இந்தமாதிரி ஏதாவது ஏடாகூடமா பண்ணியிருப்பான் என்றார் தேவகி .
ச்சீ வாயை மூடு ! என்ன பேச்சு இது ? எல்லா பொம்பிளைகளும் ஒன்னு போல தான் இருப்பீங்களா?
சும்மாவா சொன்னாங்க பொண்ணுக்கு பொண்ணு தான் எதிரின்னு . மனைவியை அதட்டி வைத்தார் முத்துசாமி .
வினோத்தின் இறப்பு மொத்த குடும்பத்தையும் ஆட்டி வைத்துவிட்டது .
பேச்சு வார்த்தை இல்லை என்றாலும் தன் அண்ணன் மகன் இழப்பு அவரை வெகுவாய் பாதித்து இருந்தது . தான் ஆடாவிட்டாலும் தன தசை ஆடும் அல்லவா ?
அஸ்வின் கீர்த்தியை மணந்தது குறித்து பெருத்த நிம்மதி அவருக்கு .
அஸ்வின் மீது எப்போதுமே அவருக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு .
இப்போது அது இன்னும் பன்மடங்காய் உயர்ந்திருந்தது .
“……………………”
ஹலோ சொல்லுங்க சித்தப்பா…. கடலூரில் தான் இருக்கோம் . கீர்த்தியும் குழந்தையும் நல்லா இருக்காங்க . நான் கொஞ்சம் வெளியில் வந்திருக்கேன் .
என்ன சித்தப்ப்பா நன்றி எல்லாம் சொல்லி என்னை அந்நியப்படுத்திக்கிட்டு … நான் உங்க மூத்த பிள்ளை இல்லையா ? உங்க இன்பம் துன்பம் எனக்கும் தான்.
அப்பா அம்மாவா ? அவங்க கொஞ்சம் கொஞ்சமா சமாதானம் ஆகிடுவாங்க ! நீங்க உடம்பை பார்த்துக்கோங்க, மறக்காம பிரஷர் மாத்திரை போடுங்க ! கிருஷ்ணசாமியிடம் பேசிவிட்டு போனை வைத்தான் .
சார் உண்மையிலே நீங்க கிரேட் ! எவ்வளவு பெரிய போஸ்டிங்கில் இருக்கீங்க எவ்வளவு பெரிய இடத்துல பொண்ணு பார்த்து ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணியிருக்கலாம் . உங்க மனசு யாருக்கும் வராது சார் . மனதிலிருந்து புகழ்ந்தான் சரவணன் .
என்ன சரவணா எல்லாம் தெரிந்த நீ இப்படி பேசலாமா ? கீர்த்தி நல்ல பொண்ணு இல்லையா ? என் குடும்பத்து கடமையை நான் செய்யாம …..
உலகில் காரணம் இல்லாம காரியம் இல்லைனு சொல்லுவாங்க …நடக்குற எல்லாம் ஏதாவது காரணத்துக்கு தான். சாதாரணமாய் பேசிவிட்டு வந்த வேலையில் கவனமானான் அஸ்வின். .